Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இத்தாலி அணியில் வெளி நாட்டு வீர‌ர்க‌ள் அதிக‌ம் த‌லைவ‌ரே இத்தாலி பெரிய‌ அணிக‌ளை வெல்ல‌வும் கூடும்..........................
  3. @goshan_che இப்படி ஆதாரம் கேட்டு ரோதனை பண்ணக் கூடாது. நான் பாடினால் அது கவிதை. நான் வரைந்தால் அது ஓவியம். அப்படி ஏற்று கொள்ளப் பழகவேணும். அதுவே நல்ல பிள்ளைக்கு அழகு. நாங்களும் அப்படி தான் வளர்ந்தனாங்கள். அது தான் எங்க மரபு, பாரம்பரியம், கலாசாரம்.
  4. Today
  5. இருப்பு 168,123.35 +10,680.27=178,803.62 தற்போதைய வங்கி மீதி. இன்று ரூபா 10,680.27 சதம் வங்கிக்கணக்கிற்கு நன்கொடை வந்துள்ளது. அனுப்பி வைத்த நன்கொடையாளரிற்கு உளப்பூர்வமான நன்றிகள்.
  6. இலங்கை கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறை Feb 3, 2026 - 04:49 PM இலங்கை கடற்பரப்பிற்கும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மீனவர்களுள் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (3) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதியும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான மீனவர்களுக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் டிசம்பர் 28 ஆம் திகதி கைதான மூவரில் இருவருக்கு 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கைதான 9 பேரில் 7 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவளை நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் ஜனவரி 20 ஆம் திகதி கைதான 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் ஜனவரி 2 ஆம் திகதி கைதான 11 இந்திய மீனவர்களையும் இம்மாதம் 13 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கவும் ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cml6iaezl04sbo29n9drcx5um
  7. பகிடியான சிகப்பு அட்டை தருணங்கள் .......! 😂
  8. கறுப்பு ஜூலையால் இல்லாமல்போன ஜப்பானின் பெரும் முதலீடு - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் #indrajithkumaraswamy #formergovernor #powermoves #NewsFirstTamil #lka #srilanka
  9. அமெரிக்காவில் கடும் பனிப்புயல்; 100க்கு மேற்பட்டோர் பலி! 03 Feb, 2026 | 04:51 PM அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் வீசும் கடும் பனிப்புயலால் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல மாநிலங்களில் வீசிவரும் அதிகப்படியான பனிப்புயல் காரணமாக விபத்துக்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதாகவும் பல இடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் கடுமையான குளர் நிலைமை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. வாகன விபத்துக்கள், பனிச்சரிவுகள், பனியை அள்ளி வீசுவதால் ஏற்படும் இதயம் தொடர்பான நோய்கள் முதலான காரணங்களால் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், நியூயோர்க் நகர அதிகாரிகள் 14 பேர் குளிரில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறபோதும், அவர்களது இறப்புக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய இந்த பனிப்புயல் காரணமாக வட, தென் கரோலினா மாகாணங்கள் மற்றும் ஜோர்ஜியா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிக் குவியல்களால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/237724
  10. பயிற்சியில் மட்டும்தான் கனடா தோற்கும் . ....... பரீட்சையில் ஆட்டமே வேற லெவல் .......!
  11. 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தாரா ட்ரம்ப்?! - எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான புதிய திடுக்கிடும் தகவல்கள்! 03 Feb, 2026 | 11:42 AM சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நியூஜெர்சியில் 13 வயது சிறுமியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவின் பிரபல தொழிலதிபராக வலம் வந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein), சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாகவும் பெண்கள், சிறுமியரை விநியோகித்து, மறைமுகமாக வியாபாரத் தொடர்பு பேணிவந்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின், நியூயோர்க்கில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், ஜெப்ரி எப்ஸ்டீன், மர்மமான முறையில் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். அதனையடுத்து, எப்ஸ்டீன் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்பான வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, “எப்ஸ்டீன் கோப்புகள்” என்ற பெயரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான பக்கங்களை கொண்ட இந்த “எப்ஸ்டீன் கோப்புகளில்” உலகளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் பல முக்கியஸ்தர்கள், அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான பக்கங்களை கொண்ட இந்த “எப்ஸ்டீன் கோப்புகளில்” உலகளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் பல முக்கியஸ்தர்கள், அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்ட் ட்ரம்ப் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளமை சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. அந்த ஆவணங்களில், ட்ரம்ப் 13 வயது சிறுமியை 35 ஆண்டுகளுக்கு முன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் அந்த சிறுமி, தன்னை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்தபோது ட்ரம்ப் அந்த சிறுமியை தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அந்த சிறுமியை ஜெப்ரி எப்ஸ்டீனும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குறித்த ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 1984இல் மிச்சிகனில் உள்ள மோனா ஏரியில் பிறந்த குழந்தையொன்று சிசுக்கொலை செய்யப்பட்டு, வீசப்பட்டதை ட்ரம்ப் அங்கிருந்து நேரில் பார்த்ததாகவும் எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட அந்த குழந்தை ட்ரம்ப்புக்கோ அல்லது வேறு எவருக்கோ பாலியல் உறவினால் பிறந்த குழந்தையாக இருக்கக்கூடும் என்றும் எப்ஸ்டீன் ஆவணத்தில் சந்தேகக் குறிப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. எப்ஸ்டீன் ஆவணங்களில் தனது பெயர் வெளியானது குறித்து கருத்து தெரிவித்து வரும் ட்ரம்ப், தனக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான தொடர்புகள், ஆவணத்தில் தன்னை தொடர்புபடுத்தி குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் மறுத்து வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/237685
  12. மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து நஷ்டஈடு அறவீடு Feb 3, 2026 - 12:42 PM இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈட்டை மீட்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில், 90,242,561.21 ரூபா மின்சார சபையின் நஷ்டஈடாகவும், 2,527,500.00 ரூபா நீதிமன்ற அபராதமாகவும் இவ்வாறு அறவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சார மீட்டர்களில் மாற்றங்களைச் செய்து மின்சாரத்தைப் பெற்ற 1,259 சம்பவங்களும், கொக்கிகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்ற 72 சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்களால் இலங்கை மின்சார சபைக்கு பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவின் முகாமையாளர் (விசாரணை) இந்திக பெர்னாண்டோ கூறுகையில், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சமூகத்தில் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை பல்வேறு அந்தஸ்துகளைக் கொண்ட நபர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவித்தார். மோசடியான மின்சாரப் பயன்பாடு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின், 011-2422259 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 1987 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கோ அழைத்து அறிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cml69hpxg04s1o29n5wx83rbk
  13. ராஜ் ராஜரட்ணம் அவர்களுக்கு ஓராண்டு ஆலோசகராகவும் இருந்ததாக குறிப்பிடுகிறார். ராஜ் ராஜரட்ணம் அவர்களால் முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு சதமும் மீளவழங்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
  14. இன்று இலங்கை அணியின் A அணியுடன் ஓமான் அணி T20 உலக கிண்ண பயிற்சி போட்டியில் ஓமான் அணி வெற்றி பெற்றது. இலங்கை A அணியில் விஜயகாந்த் விளையாடலாம் என நினைத்தேன் . ஆனால் இலங்கை A அணியில் இருந்த 15 பேரும் சிங்களவர்கள்
  15. கிவுல் ஓயா திட்டத்துக்கு முற்றுப்புள்ளியிடும் பொறுப்பு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் உண்டு - ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிப்பு 03 Feb, 2026 | 10:34 AM (நா.தனுஜா) புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் சகல நடவடிக்கைகளும் தமிழ்மக்களுக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் விரோதமானவையாகவே இருக்கின்றன. எனவே தமிழர்களுக்குத் தீங்காக அமையக்கூடிய கிவுல் ஓயா திட்டத்தை முழுமையாக முடிவுக்குக்கொண்டுவரவேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் உண்டு என்பதை சகலரும் மனதிலிருத்திச் செயற்படவேண்டும் என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் வலியுறுத்தினார். கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக திங்கட்கிழமை (02) நெடுங்கேணியில் நடைபெற்ற மாபெரும் எதிர்ப்புப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் சிங்களக்குடியேற்றங்கள் மிகத்துரிதமாக நிறுவப்பட்டு வந்திருக்கின்றன. இந்த சிங்களக்குடியேற்றங்கள் விவசாய அபிவிருத்தி, நீர்ப்பாசனம் எனும் பெயர்களில் இந்தக் குடியேற்றங்களை நிறுவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கிழக்கில் அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் சிங்களக்குடியேற்றங்கள் நிறைந்த பகுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. இப்போது மகாவலி எனும் பெயரில் மட்டக்களப்பிலும் இவ்வாறான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களில், அதாவது வடமாகாணத்தில் 25 வீதமான சிங்கள மக்களைக் குடியேற்றவேண்டும் என்ற கொள்கை யுத்தத்தின் பின்னர் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்களிடம் இருக்கிறது. அதன்மூலம் மாத்திரமே பிற்காலத்தில் தமிழ்மக்கள் தமிழீழ கோரிக்கையை முன்வைக்கமாட்டார்கள் என்ற எண்ணம் அவ்வரசாங்கங்களிடம் மேலோங்கியுள்ளது. மகாவலி எல் வலயத்தில் சிங்களவர்கள், அதிலும் சிறைச்சாலைகளில் இருந்தவர்கள் கொண்டுவந்து குடியேற்றப்பட்டார்கள். இன்று அவர்களுக்கு தண்ணீர் தேவை என்பதற்காக மிச்சம் சொச்சமாக இருக்கும் தமிழ்மக்களின் நிலங்களைக் கபளீகரம் செய்து, சுமார் பத்தாயிரம் ஏக்கர் காடுகளை அழித்து, அங்குள்ள சிறு குளங்களை அழித்து, தமிழ்மக்களை அந்த மண்ணிலிருந்து விரட்டி, அங்கு ஒரு புதிய நீர்ப்பாசனத்திட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் யோசிக்கிறது. இந்தக் குடியேற்றங்கள் இதனுடன் முடிந்துபோகாது. நெடுங்கேணி, மாங்குளம், வவுனிக்குளம் என சகல இடங்களிலும் இந்த மகாவலி திட்டத்தின் சிறகுகள் பரந்து விரிந்திருக்கிறது. எனவே அந்தக் குடியேற்றங்கள் வவுனியாவை சுற்றிவளைத்து இடம்பெறும் அதேவேளை, திருகோணமலையில் ஒரு சிங்களத்தொகுதி வந்ததைப்போன்று, வவுனியா மற்றும் முல்லைத்தீவை இணைந்து ஒரு சிங்களத்தொகுதி உருவாக்கப்படும். இப்புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் சகல நடவடிக்கைகளும் தமிழ்மக்களுக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் விரோதமானவையாகவே இருக்கின்றன. எனவே இதனைக் கட்டுப்படுத்தி, முடிவுக்குக்கொண்டுவரவேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் உண்டு என்றார். https://www.virakesari.lk/article/237672
  16. வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளா் : எ. ஆா். ரஹ்மான் பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங் சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப் பெண்ணே பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும் ஒலியெல்லாம் அட சாிகமபதனிசாி பெண் : கண்தூங்கும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில் கடிகாரச் சத்தம் சங்கீதம் கண்கானா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில் ரயில் போகும் ஓசை சங்கீதம் பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம் தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மாா்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம் பெண் : சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி சிறகுலா்த்தும் ஓசை சங்கீதம் கரைகொண்ட பாறைமேல் கடல் கொண்ட அலைவந்து கைதட்டும் ஓசை சங்கீதம் காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை சிருங்கார சங்கீதம் முத்தாடும் நீாின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும் தவளைகள் ஓசை சங்கீதம் .......! --- பூப்பூக்கும் ஓசை ---
  17. மண்ணை நம்பி மரம் இருக்கு ........! 😍
  18. சிங்களவர்களுக்கு நீர் வழங்க நிதி உள்ளது - தமிழர்களுக்கு நீர் வழங்க நிதி இல்லை ; சாணக்கியன் இராசமாணிக்கம் 03 Feb, 2026 | 01:18 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மணலாறு பிரதேசத்தில் சட்டவிரோதமான குடியேற்றப்பட்ட வெலிஓயா குடியேற்றவாசிகளுக்கு நீர் வழங்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பிரதேசங்களுக்கு நீர் விநியோக திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. சிங்களவர்களுக்கு நீர் வழங்க நிதி உள்ளது. தமிழர்களுக்கு நீர் வழங்க நிதி இல்லை. இது என்ன நியாயம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது கேள்வியெழுப்புகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு, வவுணதீவு, பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான், பன்சேனை, வாதக்கல்மடு,பாவற்கொடிசேனை, உன்னிச்சை மற்றும் நெடியமடு போன்ற பிரதேசங்களுக்கு இதுவைர குடிநீர் வசதிகள் வழங்கப்படவில்லை. உன்னிச்சையில் இருந்து பல்வேறு பிரதேசங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டப்போதிலும், உன்னிச்சை மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் இரண்டாவது வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. ஆனால் இந்த பிரதேசத்துக்கு நீர் விநியோகத் திட்டத்தை வழங்கும் முன்மொழிவுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. மணலாறு பிரதேசத்தில் சட்டவிரோதமான குடியேற்றப்பட்ட வெலிஓயா குடியேற்றவாசிகளுக்கு நீர் வழங்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பிரதேசங்களுக்கு நீர் விநியோக திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் கிவுல்ஓயா திட்டம் ஊடாக சிங்கள குடியேற்றங்களை முறையற்ற வகையில் உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றீர்கள் என்றார். https://www.virakesari.lk/article/237690
  19. நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கனடாவை இத்தாலி தோற்கடித்துள்ளது.
  20. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025–2030க்கு அமைச்சரவை அனுமதி Published By: Digital Desk 3 03 Feb, 2026 | 03:07 PM (சரண்யா பிரதாப் ) மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொடர்பான தேசியக் கொள்கைக்கு அமைய, 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த மின்சார தேவையின் 70 சதவீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களிலிருந்து பூர்த்தி செய்வதற்கும், 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை கணிசமாகக் குறைப்பதற்குமான இலக்கை அடைவதற்கும், ‘மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025–2030’அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டம், 2007 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை நிலைபேண்தகு வலுச்சக்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்கமைய, இலங்கை நிலைபேண்தகு வலுச்சக்தி அதிகாரசபையால் தொடர்புடைய அனைத்து பங்காளர்களுடனும் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுத்து, குறித்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2025–2030 காலப்பகுதிக்கான இந்த அபிவிருத்தித் திட்டம், குறிப்பாக பின்வரும் மூன்று முக்கிய துறைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது: 1. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு ஏற்ற காணிகளை அடையாளம் காணல் மற்றும் முன்னுரிமை வழங்கல் 2. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வரைபடம் (Renewable Energy Mapping) தயாரித்தல் 3. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பூங்காக்களை (Renewable Energy Parks) அபிவிருத்தி செய்வதற்கான நேரச் சட்டகத்தை உருவாக்கல் இதற்கு மேலாக, மிதக்கும் சூரிய மின்கல மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் (Floating Solar Power Projects) ஆகியனவும் இத்திட்டத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ‘மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025–2030’ ஐ வலுசக்தி அமைச்சர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்ததுடன், அதற்கான அனுமதியும் அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, இன்று செவ்வாய்க்கிழமை (03) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த அபிவிருத்தித் திட்டம், இலங்கையை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, நிலைபேண்தகு மற்றும் குறைந்த கார்பன் வெளியேற்றம் கொண்ட நாடாக மாற்றும் முயற்சியில் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுவதுடன், எதிர்கால ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. https://www.virakesari.lk/article/237707
  21. ''மத்தியவங்கியின் ஆளுநராக என்னை நியமித்தமை இன்னொருவர் கூறியே எனக்கு தெரியும்'' #indrajitcoomaraswamy #formergovernor #centralbank #powermoves #srilanka #lka
  22. நான் சம்பந்தர் சுயநலமி இல்லை என எங்கும் கூறவில்லையே புலவர். இதையும் யாரும் மறுக்கவில்லையே புலவர். ஆனந்த சங்கரி போல் புலிகள் மீது ஒவ்வாமை உடைய ஒருவர்தான் சம்பந்தர், புலிகள் பலமாக இருந்த போது பல்லை கடித்து கொண்டு அவர்களுக்கு கட்டுப்பட்டார். நாங்கள் அரசியலை பார்க்கிறோம், நீங்கள் நாம் சொல்வதை மட்டும் செய்யுங்கள் என அவமானப்படுத்தியதையும் பொறுத்து கொண்டார். இன ஒற்றுமையை பேணல் பதவியை தக்க வைத்தல் உயிரை தக்கவைத்தால் (ஹிண்ட், ஹிண்ட் - அமிர், யோகேஸ், நீலன், சரோஜினி…..) இதில் ஒன்றோ பலதோ அவர் அப்போ அப்படி நடக்க காரணமாகியது. ஆனால் நாம் விவாதிப்பது சம்பந்தர்-புலிகள் இடையான உறவின் தன்மையை பற்றி அல்ல. நாம் விவாதிப்பது புலிகளை அழித்தமைக்கு சம்பந்தர் மகிந்தவுக்கு நன்றி கூறினார். மேற்குநாடுகள் தன்னிடம் புலிகளை அழித்த பின் தீர்வு தருவோம் என உறுதி கூறினர், என சம்பந்தன் கூறினார். ஆதாரம் இருந்தால் போட்டு விடுங்கள்.
  23. அது சரி புலவர் யுத்தம் உச்சக்கட்டதில இருக்கேக்க ஏன் சம்பந்தருக்கு தொலை பேசி எடுத்தாங்க? பேச்சுவார்ததை உச்சக்கட்டதில இருகேக்க சம்பந்தரை தொடர்பு கொள்ள முயற்சித்து அவர் வராமல் இருந்திருந்தா அவரை கோவிக்கறதில ஒரு லொஜிக் இருக்கு. பேச்சுவார்ததை வேண்டாம் என்று யுத்தத்துக்கு போட்டு யுத்தம் உச்சக்கட்டத்தில இருக்கேக்க அந்தாள் வந்து என்ன என்ன செய்ய. அவர் யுத்த பயிற்சி எடுகேல்லயே!
  24. 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ! இன்று காலை 9.30 பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிரிருந்தார் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர் அங்கு இருந்து வெளியேறியுள்ளார் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் தம்மால் வருகை தர முடியாது எனவும், அதற்காக இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறும் ஷிரந்தி ராஜபக்ஷ சட்டத்தரணி ஊடாக பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர். மேலும் இன்று ராஜபக்ச ஆதரவாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பெருமளவானவர்கள் விசாரணைப் பிரிவிற்கு முன்னால் ஒன்று திரண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2026/1462927
  25. அடச்சே எனக்கு இவ்வளவுநாளும் இது தெரியாமல் போட்டுது IND மாத்திவிடுங்கோ
  26. “ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்! ஐக்கிய நாடுகள் சபை தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், நிதி ஆதாரம் இன்றி அந்த அமைப்பு ‘உடனடி நிதி சரிவை’ (mminent financial collapse) எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அதன் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த இக்கட்டான சூழலில்இ அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது வழக்கமான பாணியில், ஐநா சபையின் இந்த நிதிப் பிரச்சனைகளை தன்னால் மிக எளிதாகச் சரிசெய்ய முடியும் என்று கூறி உலக நாடுகளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியுள்ளார். அமெரிக்கா தான் ஐநா சபைக்கு அதிகப்படியான நிதியை வழங்கும் நாடாக இருந்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் வரிப்பணம் தேவையற்ற முறையில் உலக அமைப்புகளுக்கு வாரி வழங்கப்படுவதாக ட்ரம்ப் நீண்ட காலமாகவே அதிருப்தி தெரிவித்து வருகிறார். ஐநா-வின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறமை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அந்த அமைப்பு அமெரிக்காவிற்குத் தகுந்த மதிப்பையோ அல்லது பலனையோ தருவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். தன்னால் இந்தப் பிரச்சனையை எப்படிச் சரிசெய்ய முடியும் என்பது குறித்துப் பேசிய ட்ரம்ப், அமெரிக்கா வழங்கும் நிதியைக் குறைப்பதன் மூலமும், மற்ற நாடுகளை அதிகப் பங்களிக்க வைப்பதன் மூலமும் ஐநா சபையைச் சீர்திருத்த முடியும் என்று நம்புகிறார். ‘அமெரிக்கா இனி மற்ற நாடுகளின் செலவுகளைத் தன் தலையில் சுமக்காது’ என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஐநா சபை தனது செலவுகளைக் குறைத்துக்கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே தனது முந்தைய ஆட்சி காலத்தில்இ உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புகளுக்கான நிதியை ட்ரம்ப் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே போன்றதொரு கடுமையான போக்கை அவர் ஐநா சபையின் மீதும் பிரயோகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐநா சபையின் பல்வேறு உலகளாவிய நலத்திட்டங்கள் மற்றும் அமைதி காக்கும் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐநா பொதுச்செயலாளர் குட்டெரெஸ் விடுத்துள்ள எச்சரிக்கையில், உறுப்பு நாடுகள் தங்களின் நிலுவையில் உள்ள நிதியை வழங்காவிட்டால், பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்குவது கூடச் சிரமமாகிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், ட்ரம்பின் தற்போதைய கருத்துக்கள் ஐநா சபைக்குப் பணத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, அந்த அமைப்பையே முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் இருப்பதால் சர்வதேச தூதரக அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். ட்ரம்பின் இந்த ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ (America First) கொள்கை, சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. https://athavannews.com/2026/1462918

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.