Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் Published By: Digital Desk 3 03 Mar, 2026 | 02:33 PM (அட்டன் கிளை) டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் உயிரிழந்த யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து அது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென செவ்வாய்க்கிழமை (03) வைத்தியசாலை முன்றலில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த 23 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட 23 வயது யுவதி ஒருவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மறுநாள் காலை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் சட்ட வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனைகள் செய்யப்பட்டு அன்றைய தினம் மாலை மேற்படி யுவதியின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் 23 ஆம் திகதி இரவு மேற்படி வைத்தியசாலை ஊழியர்கள் மூவர் பிரேத அறைக்குள் சென்று வந்தமை குறித்து ஏனைய ஊழியர்கள் வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். அதையடுத்து வைத்தியசாலை சி.சி.டி.வி காணொளியை பரிசோதித்த போது குறித்த ஊழியர்கள் மூவரும் பிரேத அறைக்குள் சென்று வந்தமை ஊரிஜிதமாகியுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் வராத காரணத்தினால் இது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென கூறப்படுகின்றது. மேலும் குறித்த ஊழியர்கள் மூவரும் மறுநாள் விடுமுறையில் சென்றுள்ளனர். இந்த விவகாரம் வைத்தியசாலை வட்டாரத்துக்கு வெளியேயும் கசிந்துள்ளது. இதையடுத்து இது குறித்து நீதியான விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும் என இன்றையதினம் காலை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். அவ்விடத்துக்கு வருகை தந்த வைத்தியசாலை பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இது குறித்த உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றார். இதன் போது அங்கு கருத்து வெளியிட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், ‘ எமக்கு வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லை, எனவே இந்த விடயத்தை பொலிஸாருக்கு ஒப்படைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும்’ என்று கோரிக்கை முன்வைத்தனர். பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?;
  3. இன்று பகுதி அளவு சந்திர கிரகணம்: இலங்கையர்களுக்குப் பார்ப்பதற்கான அரிய வாய்ப்பு! 03 Mar, 2026 | 10:33 AM 2026 ஆம் ஆண்டில் இலங்கைக்குத் தென்படும் ஒரேயொரு சந்திர கிரகணம் இன்று (03) நிகழவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று மாலை 6:21 மணி முதல் இலங்கையர்கள் இந்தச் சந்திர கிரகணத்தை அவதானிக்க முடியும். இது ஒரு முழு சந்திர கிரகணமாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், இலங்கையில் உள்ள அவதானிப்பாளர்களுக்கு இது ஒரு பகுதி அளவு சந்திர கிரகணமாகவே தென்படும். மாலை 6:21 மணிக்கு சந்திரன் கிழக்குத் திசையில் உதிக்கும் போது, அதன் ஒரு பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்படுவதை அவதானிக்க முடியும் என வானியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்று பகுதி அளவு சந்திர கிரகணம்: இலங்கையர்களுக்குப் பார்ப்பதற்கான அரிய வாய்ப்பு!
  4. கண்டியில் 183 மில்லியன் ரூபா செலவில் சிறுவர் பராமரிப்பு இல்லம்: ஆளுநர் அடிக்கல் நாட்டினார்! 03 Mar, 2026 | 09:35 AM கண்டி, பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் சிறுவர் பராமரிப்பு இல்லம் ஒன்றை 183 மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் அடிக்கல் நாட்டி வைத்தார். மத்திய மாகாண சமூக நலன்புரி, நன்னடத்தை, சிறுவர் பராமதரிப்பு திணைக்களத்தினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் மூடப்பட்ட ஒரு பாடசாலையே இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பெப்புல்வத்த என்ற இடத்தில் அமைந்துள்ளது. புதிதாக இருமாடிக்கட்டிடம் மற்றும் சுற்று மதில்கள் என்பன அமைப்பதற்கான அடிக்ல் நாட்டு விழாவில் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கண்டியில் 183 மில்லியன் ரூபா செலவில் சிறுவர் பராமரிப்பு இல்லம்: ஆளுநர் அடிக்கல் நாட்டினார்!
  5. ஏழில் 4 முறை ஆட்டநாயகன்: இந்தியாவுக்கு அரையிறுதியில் சவால் தர காத்திருக்கும் இங்கிலாந்தின் 'வில் ஜேக்ஸ்' பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் வித்யுத் சிவராமகிருஷ்ணன் சிஎஸ்கே முன்னாள் வீரர் 3 மார்ச் 2026, 04:58 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இந்தியா, இலங்கையில் விறுவிறுப்பாக நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மறுநாள் நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் ஆல்ரவுண்டராக ஜொலிக்கும் இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் அரையிறுதியில் இந்தியாவுக்கு சவாலாக இருப்பார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர். வில் ஜேக்ஸ் இந்தத் தொடரின் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் அவர்தான் சிறந்த வீரர் என்று கூட சொல்லலாம். நான் அவரது செயல்பாட்டை வெறுமனே எண்களால் பார்க்கவில்லை. இலங்கையில் உள்ள பெரிய, மெதுவான ஆடுகளங்களில் நிறைய போட்டிகளை விளையாடியிருக்கிறார்கள் எனும் போது அங்கு பெரிய எண்களைப் பார்க்க முடியாது. நெறுக்கடியான நேரத்தில் இங்கிலாந்தை எத்தனை போட்டிகளில் அவர் காப்பாற்றியிருக்கிறார் என்பதைப் பார்க்கிறேன். நெருக்கடியான நேரத்தில் இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறந்த செயல்பாட்டைக் கொடுத்தவர் ஜேக்ஸ் தான். இந்த உலகக் கோப்பையில் (இங்கிலாந்து vs நியூசிலாந்து போட்டி வரை) அவர் 191 ரன்கள் எடுத்திருக்கிறார். அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் அது 12-வது இடம். 7 விக்கெட் வீழ்த்தி அந்தப் பட்டியலில் 23-வது இடத்தில் இருக்கிறார். இதையெல்லாம் விட என்னை அதிகம் கவர்ந்திருக்கும் எண் - அவர் 7 ஆட்டங்களில் 4 முறை ஆட்ட நாயகன் விருது வென்றிருக்கிறார். வில் ஜேக்ஸின் பங்களிப்பு இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து விளையாடிய முதல் போட்டியில் இருந்தே தொடங்கிவிட்டது. நேபாளத்துக்கு எதிராக அவர் 18 பந்துகளில் அடித்த 39 ரன்கள் (ஆட்டமிழக்கவில்லை) தான் பெரிய வித்தியாசமாக இருந்தது. அது இல்லாவிட்டால் நிச்சயம் அந்தப் போட்டியில் இங்கிலாந்து தோற்றிருக்கும். அதேபோலத்தான் இத்தாலிக்கு எதிரான அரைசதம், இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக அவர் வீசிய 4 ஓவர் ஸ்பெல், நியூசிலாந்துக்கு எதிராக அவர் (ஆட்டமிழக்காமல்) அடித்த 32 ரன்கள் எல்லாமே. "பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆடுகிறார்" இந்த உலகக் கோப்பையில் பெரும்பாலான போட்டிகளில் ஜேக்ஸ் நெருக்கடியான நேரத்தில் தான் களமிறங்கியிருக்கிறார். அந்தப் போட்டிகளில் மிகச் சிறப்பாகவும் செயல்பட்டிருக்கிறார். சொல்லப்போனால், பெரும்பாலான இங்கிலாந்து பேட்டர்கள் இந்த உலகக் கோப்பையில் அவ்வளவு சிறப்பான ஃபார்மில் இல்லை. ஃபில் சால்ட், டாம் பேன்டன், சாம் கரண் என அனைவரின் சராசரியுமே 25க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. குறிப்பாக பட்லர் இரட்டை இலக்க ஸ்கோரை எடுக்கவே தடுமாறுகிறார். அதனால்தான், ஜேக்ஸின் பங்களிப்பு இன்னும் பெரிதாக இருக்கிறது. இங்கிலாந்து விரைவாக 4 அல்லது 5 விக்கெட்டுகளை இழந்த பிறகு தான் களமிறங்குகிறார். அங்கிருந்து அணியைக் கரை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இதுதான் ஒரு வீரரின் திறமையைக் காட்டும். நீங்கள் 140/4 என்ற நிலையில் களமிறங்கி கடைசியில் அதிரடியாக ஆடி 180 என்ற ஸ்கோருக்குக் கொண்டுவருவது அவ்வளவு கடினமான விஷயம் இல்லை. ஆனால், 40/5, 50/4 என்ற நிலையில் இறங்கி 170, 180 கொண்டுவருவது சாதாரண விஷயம் இல்லை. கடினமான சூழ்நிலைகளில் மற்ற வீரர்கள் சுழலுக்கு எதிராகத் தடுமாறும் போது இவர் சிறப்பாக ஆடியிருக்கிறார். ஸ்பின்னர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். அந்த இலங்கை ஆடுகளங்களில் பந்து சற்று நின்று மெதுவாக வரும். நன்கு திரும்பும். அதனாலேயே பேட்டர்கள் சிரமப்படுவார்கள். பொதுவாக முன்பே முடிவுசெய்து ஒரு பெரிய ஷாட் ஆடப் போகும்போது மாட்டிக்கொள்வார்கள். ஆனால், ஜேக்ஸ் தன் ஆட்டத்தை அதற்கு ஏற்றதுபோல் சற்று மாற்றியிருக்கிறார். அவர் நன்கு காத்திருந்து விளையாடுகிறார். பேக் ஃபூட்டில் காத்திருக்கும் அவர், பந்து தனக்கு வரும் வரை நிதானமாக இருக்கிறார். அதனால் பந்தை நன்கு கணித்து, அதற்கு ஏற்ப அவர் ஷாட்டை முடிவுசெய்கிறார். டி20 கிரிக்கெட்டில் இப்படி ஆடுவது எளிதான விஷயம் இல்லை. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த உலகக் கோப்பையில் வில் ஜேக்ஸின் பேட்டிங் சராசரி 63.66 அதுமட்டுமல்லாமல் இலங்கை ஆடுகளங்களில் சேஸ் செய்வது எளிதான விஷயம் இல்லை. அங்கு டாட் பால் சதவீதம் அதிகமாக இருக்கும். அது மேலும் நெருக்கடியை அதிகரிக்கும். ஜேக்ஸ் அந்த நெருக்கடியான நேரங்களில் பொறுப்பை தன் தோள்களில் ஏற்றுக்கொண்டு அதை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். பெரும்பாலான வீரர்கள் இதுபோன்ற நெருக்கடியான சூழலில் தடுமாறிவிடுவார்கள். ஆனால், ஜேக்ஸ் பொறுப்பை சிறப்பாக சுமந்திருக்கிறார். பெரிய ஷாட்கள் ஆடுவது, ஸ்டிரைக் ரொடேட் செய்வது என அனைத்தையும் சிறப்பாகச் செய்திருக்கிறார். 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் யுவ்ராஜ் சிங் இப்படியான ஒரு செயல்பாட்டைத் தான் கொடுத்தார். அதைத்தான் இந்தத் தொடரில் ஜேக்ஸ் செய்துகொண்டிருக்கிறார். 'கடினமான இடத்திலும் ஜொலிக்கிறார்' என்னைப் பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் செய்ய மிகவும் கடினமான இடம் என்றால் அது நம்பர் 6,7 தான். உங்களுக்கு அவகாசமே கிடைக்காது. அந்த இடத்தில் இருக்கும்போது முதல் பந்தில் இருந்தே அடிக்கவேண்டும் என்ற தேவை ஏற்படும். அது எளிதான காரியமில்லை. அதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் ஆடும் ஒவ்வொரு டாட் பாலுமே நெருக்கடியை அதிகரிக்கும். அதுவே ஓப்பனர்கள், நம்பர் 3 பேட்டர்கள் எனும்போது அந்த அவகாசம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், பவர்பிளேவில் நிறைய ஃபீல்டர்கள் வட்டத்துக்கு உள்ளேதான் இருப்பார்கள். அதனால், 2,3 டாட் பால்கள் ஆடினால் கூட உடனடியாக 2,3 பவுண்டரிகள் அடித்துவிட முடியும். அதிலும் இலங்கை ஆடுகளங்களில் பந்து நின்றுவரும்போது பவுண்டரிகள் அடிப்பது எளிதே இல்லை. இந்தியாவில் இருக்கும் 'flat' ஆடுகளங்களில் அப்படி முதல் பந்தில் இருந்தே அடிப்பது எளிதாக இருக்கலாம். ஆனால், இலங்கையில் அப்படி அடித்திட முடியாது. அப்படியொரு இடத்தில், அந்த பேட்டிங் பொசிஷனில் இறங்கி ஆடியதால் தான் வில் ஜேக்ஸ் தனித்துத் தெரிந்திருக்கிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நேபாளம், இத்தாலி, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஜேக்ஸ் ஆட்ட நாயகன் விருது வென்றிருக்கிறார். இப்படியான சூழ்நிலைகளில் ஒரு மிடில் ஆர்டர் பேட்டரால், ஒரு ஃபினிஷரால் அந்த பெரிய ஷாட்களை எளிதாக முடிவு செய்து அடித்துவிட முடியாது. நீங்கள் எந்த பௌலரை டார்கெட் செய்து ஆடப் போகிறீர்கள், எந்த பவுண்டரியை, எந்த ஏரியாவை டார்கெட் செய்யப்போகிறீர்கள், உங்களின் பிரதான ஷாட்டாக என்ன இருக்கப்போகிறது என்பது போன்ற பல விஷயங்களை நீங்கள் முடிவு செய்து அதற்கேற்பத்தான் ஆடவேண்டும். இதை மகேந்திர சிங் தோனி நிறைய செய்து பார்த்திருக்கிறோம். ஓரிரு டாட் பால்கள் ஆடினாலும் அவர் அதன்பிறகு பவுண்டரிகள் அடித்து சரிசெய்வார். அந்த அளவுக்கு துல்லியமாகக் கணக்கிடவேண்டும். இந்த இடத்தில் தான் ஜேக்ஸ் பற்றிய இன்னொரு விஷயம் என்னை மிகவும் கவர்கிறது - அவர் தற்போது தன் ரோல் மாறித்தான் இந்தக் கடினமான ஃபினிஷர் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். முன்பு டாப் ஆர்டர் பேட்டராக ஆடியவர் அவர். நீங்கள் ஒரு ஓப்பனராக, டாப் ஆர்டர் பேட்டராக ஆடிவிட்டு அதன்பிறகு வந்து மிடில் ஆர்டரில் ஆடுவது என்பது எளிதல்ல. டெஸ்ட் போட்டிகளில் கூட அது கடினம்தான். டி20 பற்றி சொல்லவே தேவையில்லை. ஓப்பனர்களுக்குக் கிடைக்கும் அவகாசம், ஃபீல்ட் செட் அப் எல்லாம் கடைசியில் வருபவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. முதல் பந்தில் இருந்தே அடிக்கவேண்டும், ஓடவேண்டும் என்ற நெருக்கடி இருந்துகொண்டே இருக்கும். அதனால்தான் தோனி, ஆந்த்ரே ரஸல் போன்றவர்களின் செயல்பாடுகள் கூடுதல் கவனம் பெறுகின்றன. அதனால் தான் அணிகள் அவர்கள் மீது கூடுதல் நம்பிக்கை வைத்திருக்கின்றன. அவர்கள் தங்கள் அணிகளுக்குச் செய்த வேலையைத்தான் ஜேக்ஸ் தற்போது இங்கிலாந்துக்கு செய்துகொண்டிருகிறார். பந்துவீச்சிலும் சிறப்பான செயல்பாடு பந்துவீச்சைப் பொருத்தவரை ஜேக்ஸ் அவ்வளவாக பந்தை தூக்கிப் போடவில்லை. மேலும், பந்தின் வேகத்தை நன்றாக மாற்றிக்கொண்டேயிருக்கிறார். இந்த வேகத்தில் தான் வரும் என்று பேட்டர்களால் கணிக்க முடியவில்லை. பெரும்பாலும் 'அரவுண்ட் தி ஸ்டம்ப்' வந்து பந்துவீசும் அவர், கோணங்களை (angle) மாற்றியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இலங்கையின் பெரிய மைதானங்களைக் கருத்தில் கொண்டு பந்துக்கு நிறைய சுழற்சியைக் கொடுத்திருக்கிறார். அதனால் அவ்வப்போது பந்து கூடுதலாக பவுன்ஸ் ஆகியிருக்கிறது. அங்குதான் அவர் விக்கெட்டுகள் வீழ்த்துகிறார். மிடில் ஓவர்கள் பந்துவீசுவது ஓரளவு எளிதுதான். ஆனால், பவர்பிளேவிலும் ஜேக்ஸ் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார். அங்குதான் இங்கிலாந்துக்கு பொட்டிகளையும் வென்று கொடுத்திருக்கிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த உலகக் கோப்பையில் சராசரியாக ஒவ்வொரு 14 பந்துக்கும் ஒரு விக்கெட் எடுக்கிறார் ஜேக்ஸ் பெரும் மாற்றம் ஒரு வீரராக, ஒரு ஆல்ரவுண்டராக அவர் நன்கு மெருகேறியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் தன் ஆட்டத்தை மாற்றியிருக்கும் விதம் அசாத்தியமானது. வில் ஜேக்ஸ் திறமை பற்றி அவர் கரியரின் ஆரம்பத்தில் இருந்தே நிறைய பேசப்பட்டது. இப்போது ஜேக்கப் பெத்தல் பற்றி எப்படிப் பேசுகிறார்களோ அதுபோல் தான் சில ஆண்டுகள் முன்பு ஜேக்ஸ் பற்றிப் பேசினார்கள். ஆனால், அது அவ்வளவாக வெளியே தெரியாமல் இருந்தது. 2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக ஒரு சதம் அடித்தார். ஆமதாபாத்தில் நடந்த அந்த ஆட்டத்தில் ரஷீத் கான் உள்பட அனைவரின் பந்துவீச்சையும் வெளுத்துக்கட்டி 41 பந்துகளில் சதமடித்தார். அப்போதுதான் அவரால் என்ன செய்ய முடியும் என்று நான் பார்த்தேன். அதேசமயம் அவரது பயணம் எளிதாகவும் இருக்கவில்லை. 2023-ல் அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தம் கிடைக்கவில்லை. ஆனால், அந்தக் காலகட்டம் அவர் கற்றுக்கொள்வதற்கு நல்லதாக அமைந்திருக்கவேண்டும். அவர் அதன்பிறகு தன் சிறப்பான ஆட்டத்தை அவ்வப்போது வெளிப்படுத்த, இங்கிலாந்து தேர்வாளர்கள் அவர்மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார்கள். அதற்கான பலனை அவர்கள் தற்போது அனுபவிக்கிறார்கள். சொல்லப்போனால் அவருக்கு ஆஷஸ் தொடரில் கூட சில வாய்ப்புகள் கொடுத்தார்கள். நெருக்கடியான நேரத்தில் அங்கும் சில செயல்பாடுகளைக் கொடுத்தார். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற சுபாவத்தைக் காட்டினார். அந்த ஆஷஸ் செயல்பாடு அவர் இப்படி உலகக் கோப்பையில் ஜொலிப்பதற்கான நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். கேப்டன் & நிர்வாகத்தின் பங்கு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நம்பிக்கையோடு வில் ஜேக்ஸை பவர்பிளேவிலும் பந்துவீச வைக்கிறார் கேப்டன் ஹேரி ப்ரூக். ப்ரூக்கின் இந்த செயல்பாட்டுக்கு இங்கிலாந்து நிர்வாகத்தையும் கேப்டன் ஹேரி ப்ரூக்கையும் பாராட்டவேண்டும். ப்ரூக் எந்த அளவுக்கு ஜேக்ஸ் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார், அதை எந்த அளவுக்குக் காட்டுகிறார் என்பதைப் பார்க்க முடிகிறது. சொல்லப்போனால் ஆஷஸ் தொடரில் இருந்தே நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை செலுத்திக்கொண்டிருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் கூட பட்லர் சொதப்புவதால், அவர் இடத்தில் ஜேக்ஸை ஓப்பனராக இறக்கலாமோ என்ற எண்ணம் தோன்றக்கூடும். ஆனால், அப்படிச் செய்யாமல் தொடர்ந்து ஜேக்ஸை அவருக்கு முன்பு கொடுத்த ஃபினிஷர் ரோலிலேயே பயன்படுத்துகிறார்கள். அணி நிர்வாகமும், கேப்டனும் ஒரு வீரர் மீது நம்பிக்கை வைக்கும்போது, அது அந்த வீரரின் செயல்பாட்டில் பெருமளவு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அது வில் ஜேக்ஸ் விஷயத்திலும் நடந்திருக்கிறது. இங்கிலாந்தின் துருப்புச்சீட்டு உலகக் கோப்பை போன்ற ஒரு தொடரை வெல்லவேண்டும் என்றால் எந்தவொரு அணிக்குமே இப்படியொரு வீரர் தேவை. இங்கு நீங்கள் அடிக்கும் சதங்களோ, அரைசதங்களோ, 5 விக்கெட் 'ஹால்'கள் இங்கு முக்கியமே இல்லை. ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய, ஆட்டத்தை மாற்றக்கூடிய அந்த 30 ரன்கள், 2 விக்கெட்டுகள், மிடில் ஓவர்களில் பந்துவீசி ஆட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவை மிக மிக முக்கியமானவை. இங்கிலாந்து அணிக்கு அப்படியொரு வீரர் ஜேக்ஸ் மூலமாகக் கிடைத்திருக்கிறார். இதுவரை அவரை அந்த அணி நன்கு பயன்படுத்தியதுபோல் இனியும் தொடர்ந்து பயன்படுத்தவேண்டும். கிரிக்கெட் ஒரு 'கான்ஃபிடன்ஸ் கேம்' என்று சொல்வார்கள். நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் சிறப்பாக ஜொலிக்க முடியும் என்பார்கள். ஜேக்ஸின் நம்பிக்கை தற்போது வானளவு இருக்கிறது. முக்கியமான நாக் அவுட் சுற்றில் இவர்தான் இங்கிலாந்தின் துருப்புச் சீட்டாக விளங்கப்போகிறார். (இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு ஏழில் 4 முறை ஆட்டநாயகன்: இந்தியாவுக்கு அரையிறுதியில் சவால் தர காத்திருக்கும் இங்கிலாந்தின் 'வில் ஜேக்ஸ்'
  6. இரான் தாக்கப்படும் நிலையில் அதன் நெருங்கிய நட்பு நாடான சீனா என்ன செய்கிறது? படக்குறிப்பு,இரானின் உச்ச தலைவர் மீதான இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல் மற்றும் அவரது படுகொலையை இரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பின் "கடுமையான மீறல்" என்று சீனா வர்ணித்துள்ளது. கட்டுரை தகவல் பிரேர்ணா பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன. இரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில், அதிகரித்து வரும் இந்த மோதல்கள் மீது மட்டும் உலக நாடுகள் கவனம் செலுத்தவில்லை. மாறாக, இந்த நெருக்கடியான நேரத்தில் எந்த நாடுகள் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் பகிரங்கமாக ஆதரவளிக்கின்றன, எந்த நாடுகள் இரானுடன் நிற்க முடிவு செய்துள்ளன என்பதையும் உலகம் உற்று நோக்குகிறது. இரானுடன் வலுவான உறவைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் சீனா போன்ற நாடுகளின் ஒவ்வோர் அறிக்கையும், ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையும், ஒவ்வொரு ராஜ்ஜீய சமிக்ஞையும் கவனமாக ஆராயப்படுகின்றன. இரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களை 'ஐநா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது' என்று சீனா விவரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், "இரானின் உயர்மட்டத் தலைவரின் மீதான தாக்குதல் மற்றும் படுகொலை இரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கடுமையாக மீறும் செயலாகும்" என்று கூறியுள்ளது. "இந்த நடவடிக்கை ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கும், சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிகளுக்கும் எதிரானது. சீனா இதனை வன்மையாக எதிர்ப்பதுடன் கண்டிக்கவும் செய்கிறது." அமைதியைப் பேணுமாறும் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. "ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், பதற்றமான சூழ்நிலையை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்றும், மத்திய கிழக்கு மற்றும் முழு உலகிலும் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுமாறும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று சீனா தெரிவித்துள்ளது. சீனா தனது எதிர்வினையில் இஸ்ரேல் அல்லது அமெரிக்காவிற்கு எதிராக எந்த இடத்திலும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. சீனாவின் இந்த நிலைப்பாட்டிற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? என்பது குறித்து, நிபுணர்களும் சர்வதேச விவகார வல்லுநர்களும் இதன் பின்னணியில் உள்ள காரணங்களை விளக்கி கட்டுரைகளை எழுதி வருகின்றனர். இந்தக் காரணங்களை விரிவாகப் புரிந்துகொள்வதற்கு முன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே இதேபோன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டபோது சீனா எப்படி, எந்த வார்த்தைகளில் எதிர்வினையாற்றியது என்பதைத் தெரிந்து கொள்வோம். முந்தைய மோதலில் சீனாவின் நிலைப்பாடு எப்படி இருந்தது? கடந்த ஆண்டு இரான் மீதான தாக்குதலுக்குப் பிறகு, சீனா தனது முதல் எதிர்வினையில் இஸ்ரேல் 'சிவப்புக்கோட்டைத் தாண்டிவிட்டது' என்று கூறியிருந்தது. ஒரு நாள் கழித்து, ஜூன் 14 அன்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) இரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதலைக் கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. ஜூன் 15 அன்று, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இரானிய வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்சியுடன் பேசினார். சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இது இரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் செயல் என்று குறிப்பிட்டதுடன், இரானிய அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களையும் பொதுமக்களின் மரணங்களையும் கடுமையாகக் கண்டித்தது. சீனா தனது அறிக்கையில், "இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகள் மற்றும் சர்வதேச உறவுகளின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானவை. குறிப்பாக, இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மிகவும் ஆபத்தானது மற்றும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது" என்று கூறியிருந்தது. அதாவது, கடந்த ஆண்டும் சீனாவின் எதிர்வினையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்பது நாம் கடந்த முறையைத் திரும்பிப் பார்க்கும்போது தெரியவருகிறது. இதனால் தான் கடந்த ஆண்டும் சீனா ஏன் இவ்வாறான பதிலை அளித்தது என்ற கேள்வி விவாதப் பொருளானது. அப்போது, புது டெல்லியைச் சேர்ந்த ஒரு சிந்தனைக் குழுவான 'அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின்' சிறப்பு ஆய்வாளர் மனோஜ் ஜோஷி ஒரு கட்டுரையில், இரானுடன் வலுவான உறவைக் கொண்டிருந்த போதிலும், சீனா எச்சரிக்கையான மற்றும் சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாக எழுதினார். சீனாவின் சமநிலையான எதிர்வினைக்கான காரணங்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபூ காங். தற்போது நடந்துள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான சிந்தனைக் குழுவான 'சாதம் ஹவுஸின்', மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா திட்டத்தின் இணை ஆய்வாளர் அகமது அபுது, சீனாவின் இந்த கட்டுப்படுத்தப்பட்ட எதிர்வினை குறித்து ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில், "இரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுத் தாக்குதலுக்கு சீனாவின் எதிர்வினை, சீனா இரானைக் கைவிட்டுவிட்டது அல்லது கடினமான காலங்களில் இரானுக்கு ஒரு நம்பகமான பங்காளியாக அது இல்லை என்று சிலரை நம்ப வைக்கக்கூடும்" என்றும், "ஆனால் வெனிசுவேலாவில், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மூலம் எண்ணெய் துறையைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, சீனாவின் நெருங்கிய கூட்டாளியான நிக்கோலஸ் மதுரோவைக் கடத்தியபோது கூட, சீனா எந்தவொரு உறுதியான பதிலையும் அளிக்கவில்லை. எனவே இது சீனாவிற்குப் புதியதல்ல" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரான் குறித்து அவர் எழுதுகையில், "இரானுக்கு நேரடி ராணுவ ஆதரவை வழங்குவதை சீனா எப்போதும் தவிர்த்தே வந்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் 12 நாள் போரின் போது கூட, சீனா இரானுக்கு எந்தவொரு உண்மையான ராணுவ அல்லது பெரிய பொருளாதார உதவிகளையும் வழங்கவில்லை" என்று கூறியுள்ளார். இதற்குப் பின்னால் உள்ள இரண்டு முக்கிய காரணங்களை அவர் குறிப்பிடுகிறார். இரான் அணுசக்தி நாடாக மாறுவதை விரும்பாத சீனா பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானும் சீனாவும் 25 ஆண்டுகால மூலோபாய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 2021 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். சீனாவும் இரானும் விரிவான மூலோபாய பங்காளிகள் என்றும் , இருப்பினும் 2015 இரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு (ஜேசிபிஓஏ) முன்னதாக இரான் மீதான ஐ.நா தலைமையிலான பொருளாதாரத் தடைகளை சீனா ஆதரித்தது என்றும் அகமது அபுது எழுதுகிறார். இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தான் எதிர்ப்பதாக சீனா பகிரங்கமாகத் தெரிவிக்கிறது. இரான் அணுசக்தி நாடாக மாறினால், மத்திய கிழக்கில் ஒரு பெரிய போர் வெடிக்கக்கூடும் என்று அது கவலைப்படுகிறது. இது நடந்தால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கியமான கடல் வழிகள் மூடப்படலாம், இது சீனாவின் எண்ணெய் இறக்குமதியை பாதிப்பது மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளில் அதன் பொருளாதார நலன்களையும் பாதிக்கும். இரான் அணுசக்தி நாடாக மாறினால், சீனாவின் மற்ற போட்டியாளர்களான ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அணு ஆயுதங்களை உருவாக்கப் போட்டியிடும், இது சீனாவிற்கு ஒரு புதிய பாதுகாப்பு சவாலை ஏற்படுத்தும். 'அமெரிக்காவுடன் சமநிலையான உறவுகளைப் பேண சீனா முயற்சிக்கிறது' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனாவுக்குப் பயணம் செய்யக்கூடும். இரண்டாவது காரணத்தை முன்னிலைப்படுத்தி அவர் எழுதுகையில், இரானில் உள்ள ஒரு பலவீனமான ஆட்சியை சீனா தனக்கான அச்சுறுத்தலாகவும் அதே சமயம் ஒரு வாய்ப்பாகவும் கருதுகிறது. மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான அரசாங்கம் இங்கு ஆட்சிக்கு வருவதை சீனா விரும்பவில்லை, ஆனால் தற்போதைய ஆட்சியின் பலவீனத்தைப் பயன்படுத்தி, இரானை தன்னை மேலும் சார்ந்திருக்கச் செய்ய முடியும் என்று அது கருதுகிறது. சீனா தனது நீண்டகால உத்தி சார்ந்த இலக்குகளை அடையவும் முயற்சிக்கிறது, ஆனால் அவ்வாறு செய்யும்போது, அது அமெரிக்காவை நேரடியாகப் பகைத்துக் கொள்வதில்லை. குறிப்பாக, ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சமநிலையையும் நிலைத்தன்மையையும் பேண சீனா விரும்புகிறது. பிப்ரவரி 4 அன்று, டிரம்ப் மற்றும் ஜின்பிங் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. அதில் இரான், தைவான் மற்றும் வர்த்தகம் போன்ற முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இரான் விவகாரத்தில் ஒப்பீட்டளவில் மென்மையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலம், தைவான் மற்றும் வர்த்தகம் போன்ற தனது முக்கிய நலன்களில் அமெரிக்காவிடமிருந்து சில சலுகைகளைப் பெறுவதற்கான உத்தியை சீனா பின்பற்றி வருவதை இது உணர்த்துகிறது. சீனாவின் சிக்கலான வெளியுறவுக் கொள்கை சீனா வெளியுறவுக் கொள்கை தொடர்பான முடிவுகளை எடுப்பது இப்போது மிகவும் கடினமாகியுள்ளது என்று கூறுகிறார் புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீன ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் அரவிந்த் எலாரி. இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரே கம்யூனிஸ்ட் கட்சியின் கைகளில் அதிகாரம் குவிந்துள்ள அமைப்பின் கீழ் சீனா இயங்குகிறது. இத்தகைய அமைப்பில் வெளியுறவுக் கொள்கை என்பது மிகவும் சிக்கலானது" என்கிறார். "இரான் மீதான சீனாவின் அணுகுமுறை கொள்கைகளின் அடிப்படையில் அமைந்திருப்பதாகத் தெரிகிறது. இது பேச்சுவார்த்தை, இறையாண்மை மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்துகிறது. ஆனால், கொள்கை ரீதியான வலியுறுத்தல் மட்டுமே பிராந்திய நெருக்கடிகளைத் தீர்த்துவிடுமா? என்பது தான் கேள்வி." "கடந்த 30–35 ஆண்டுகளாக, சீனா தன்னை ஒரு பன்முனை உலக ஒழுங்கின் ஆதரவாளராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தனக்கு வேறுபட்ட உலக ஒழுங்கு வேண்டும் என்று அது மீண்டும்மீண்டும் கூறி வருகிறது. ஆனால் இதுபோன்ற ஒரு சிக்கலான சூழ்நிலை ஏற்படும் போது, அதன் செயல்பாடு வரம்புக்குட்பட்டதாகவே தோன்றுகிறது." "இரான் விவகாரம் இந்த வரம்பை எடுத்துக் காட்டுகிறது, அங்கு சீனாவின் பொருளாதார நலன்கள் பெரியவை, ஆனால் அரசியல் செல்வாக்கு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது"என்றும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சமீபத்திய ஆண்டுகளில் இரான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் சீனா முயற்சித்துள்ளது (சீன அதிபர் ஜின்பிங்கின் கோப்புப் புகைப்படம்) தற்போது, சர்வதேசத் தடைகளால் தத்தளிக்கும் இரானிய பொருளாதாரத்திற்கு சீனா ஒரு பெரிய ஆதரவாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் இரானின் எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பகுதியை சீனா வாங்கியது. இருப்பினும், சீனாவுக்கு மலிவான விலையில் எண்ணெய் கிடைப்பதால், இதன் நன்மைகள் ஒருதலைப்பட்சமானவை அல்ல. ஆனால் பிரிக்ஸ் (BRICS) மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) இரான் உறுப்பினராவதை ஆதரித்ததன் மூலம் சர்வதேச அளவில் இரான் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் சமீபத்திய ஆண்டுகளில் சீனா முயன்றுள்ளது. கூடுதலாக, 2021இல் இரு நாடுகளுக்கும் இடையே 25 ஆண்டுகால மூலோபாய ஒப்பந்தம் கையெழுத்தானது. அரவிந்த் எலாரியின் கூற்றுப்படி, சீனா இரானுக்கு ஏவுகணை பாகங்கள் மற்றும் எரிபொருளை வழங்கி வருகிறது. பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்திலும் சீனா இரானுக்கு உதவியுள்ளது. அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டங்கள் அணு ஆயுதங்களை மட்டுமல்லாமல் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உள்ளடக்கியவை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இரான் நேரடி ராணுவ அழுத்தத்தையும் பிராந்திய பதற்றங்களையும் எதிர்கொள்ளும் சூழலில், சீனாவின் பங்கு ஒப்பீட்டளவில் வரம்புக்குட்பட்டதாகவும் எச்சரிக்கையுடனும் காணப்படுகிறது. சீனா தொடர்ந்து பொருளாதார மற்றும் ராஜ்ஜீய ஆதரவை வழங்குகிறது, ஆனால் வெளிப்படையான ராணுவ ஆதரவையோ அல்லது நேரடி மோதலையோ தவிர்க்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இரான் தாக்கப்படும் நிலையில் அதன் நெருங்கிய நட்பு நாடான சீனா என்ன செய்கிறது?
  7. உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை, மத்தியகிழக்கில் இருக்கும் வேற்றின முஸ்லீமிற்கும் எங்கோ ஒரு ஓரத்தில் வாழும் இலங்கை முஸ்லீம்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பென்ன? மத்திய கிழ‌க்கில் வாழும் அரபு முஸ்லீம்கள், மற்றைய முஸ்லீம்களை, குறிப்பாக ஆசிய முஸ்லீம்களை தமக்கு நிகராகக் கருதுவதில்லை. இரண்டாம் மூன்றாம் தர நிலை கூட அவர்களுக்குக் கொடுப்பதில்லை. ஆனால், இவர்களோ அவர்களைக் கடவுள்கள் போலக் கொண்டாடுகிறார்கள். சொந்த நாட்டில் வாழும் சகோதர இனத்திற்கெதிராக கொலைகளையும், இன்னொரு இனத்துடன் கூட்டுச் சேர்ந்து இனவழிப்பையும் மேற்கொள்வார்கள்.
  8. Today
  9. இத்தாக்குதலைப் பார்க்கும்போது செஞ்சோலைதான் மனதில் வருகிறது. இஸ்லாமியப் புரட்சிகர ராணுவ முகாமிற்கு அருகில் பாடசாலை இருந்தது, அதனாலேயே தவறுதலாக தாக்கப்பட்டிருக்கிறது என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் இஸ்ரேலின் அபிமானிகளோ ஈரானின் ஏவுகணையொன்று இலக்கை விட்டு விலகிச் சென்று சொந்த நிலப்பகுதியில் வீழ்ந்தபோதே இது நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இது இஸ்ரேலின் தாக்குதலலாகத்தான் இருக்கும் என்பதில் ஐய்யமில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.
  10. ஈரான் மீதான தாக்குதல்: 787 பேர் உயிரிழப்பு; 176 சிறுவர்கள் பலி! Mar 3, 2026 - 04:57 PM அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது. இந்த தாக்குதல்களால் 787 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சமீபத்திய தாக்குதல்களால் நாடு முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இலக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 504 என குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவான தாக்குதல்களின் எண்ணிக்கை 1,039 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், இடிபாடுகளை அகற்றுதல், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு மாற்றுதல் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்: 787 பேர் உயிரிழப்பு; 176 சிறுவர்கள் பலி!
  11. இரானின் பதிலடி தாக்குதல் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பின் திறன் பற்றி எழுப்பும் கேள்விகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படை தலைமையகத்தை குறிவைத்து இரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. கட்டுரை தகவல் ஜோனாதன் பீல் பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை இரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பது அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பில் உள்ள பலவீனங்களை அம்பலப்படுத்தியது. வெளிப்படையாக, இது அமெரிக்காவிற்கும் பிராந்தியத்தில் உள்ள அதன் கூட்டாளி நாடுகளுக்கும் கவலை அளிக்கும் செய்தியாக இருக்கும். பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை பிரிவின் தலைமையகத்தைச் சுற்றி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த செய்தி எழுதும் நேரம் வரை, இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க இராணுவத்திற்கு சில எச்சரிக்கைகள் கிடைத்திருக்கலாம். முன்னெச்சரிக்கையாக, இங்கிருந்து அதன் பணியாளர்களை வெளியேற்றியிருக்கலாம். ஒப்பீட்டளவில், பஹ்ரைனின் மோசமான வான் பாதுகாப்பு காரணமாக, இரான் அதை ஒரு முக்கிய இலக்காகக் கண்டிருக்கலாம் என்று பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் முன்னாள் தளபதி டாம் ஷார்ப் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவு தலைமையகம் மீதான இரானிய தாக்குதலுக்குப் பிறகு மேலெழும் புகை அமெரிக்க வான் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு மெதுவாக நகரும் இரானின் ஷாஹெட் ட்ரோன் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பை தாண்டிச் செல்வதை ஒரு காணொளி காட்டுகிறது. யுக்ரேனில், இதுபோன்ற டிரோன்களை சாதாரண இயந்திர துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முடியும். கடந்த சில வாரங்களாக, அமெரிக்கா இந்தப் பகுதிக்கு அதிகமான வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, இதில் நவீன THAAD மற்றும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளும் அடங்கும். இவற்றால் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியும், ஆனால் அவை மிகவும் அதிக மதிப்பு மிக்கவை. அவற்றின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. யுக்ரேனிடம் 10க்கும் குறைவான பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. யுக்ரேன் தலைநகர் கீவை பாதுகாக்க அவை இன்னும் போராடி வருகின்றன என்பதன் மூலமும் இதைப் புரிந்து கொள்ளலாம். மத்திய கிழக்கில் உள்ள அனைத்து ராணுவ தளங்களையும் பாதுகாக்க போதுமான அளவு அவற்றை வைத்திருப்பது அமெரிக்காவிற்கு இன்னும் எளிதானது அல்ல. அமெரிக்க கடற்படை வளைகுடா மற்றும் கிழக்கு மத்திய தரைக் கடலில் சுமார் ஒரு டஜன் ஆர்லீ பர்க் வகை போர்க் கப்பல்களை (Arleigh Burke-class destroyers) நிறுத்தியுள்ளது. அவற்றில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளால் டிரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்த முடியும். ஏமனில் இரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செங்கடலில் அவை ஏற்கனவே திறம்பட செயல்பட்டுள்ளன. 2024 மற்றும் 2026 க்கு இடையில், அமெரிக்கா சுமார் 400 ஹூதி டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்தது. இந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் விமானங்கள், டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டவை. அமெரிக்கா தற்போது இந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட போர் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது. ஆனால் இந்த பெரிய திறன்களால் கூட இரான் சில இலக்குகளை வெற்றிகரமாக தாக்குவதைத் தடுக்க முடியவில்லை. இந்தப் புதிய அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு முன்பு, இரான் சுமார் 2,000 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்ட ஆயுதக் களஞ்சியத்தைக் கொண்டிருந்திருக்கலாம். மேலும் பல ஒருவழி தாக்குதல் டிரோன்களையும் அது கொண்டுள்ளது. இரானின் ஷாஹெட் டிரோன் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு யுக்ரேன் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யா இப்போது ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான டிரோன்களை உற்பத்தி செய்து வருகிறது. இரானின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் ரஷ்யா உதவியிருக்கலாம். ஷாஹெட் டிரோனால் யுக்ரேனில் பேரழிவு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு, இரானின் ஷாஹெட்-136 ட்ரோன் குறைந்த உயரத்தில் பறக்கிறது மற்றும் இதனை ரேடார் மூலம் கண்டறிவது கடினம். இது அதிகபட்சமாக 2,500 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து செல்லும். பிரிட்டிஷ் ராயல் கடற்படையில் தான் பணியாற்றிய காலத்தில், மத்திய கிழக்கில் உள்ள ஒரு ராணுவத் தளத்தின் மீது இரானிய தாக்குதலை உருவகப்படுத்தி போர் பயிற்சிகளை நடத்தியதாக ஷார்ப் கூறுகிறார். இந்தக் காலகட்டத்தில் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட வான் பாதுகாப்புப் பகுதிகள் வழியாகச் சென்றன. ஆட்சி அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்து விரைவாகத் தாக்கினால், அமெரிக்கா இறுதியில் தாட் (THAAD) மற்றும் பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு அமைப்புகளை இழந்துவிடும் என்று அவர் கூறுகிறார். இரானின் டிரோன் மற்றும் ஏவுகணை திறன்கள் "மிகவும் விரிவானவை" என்றும் ஷார்ப் கூறினார். ஆனால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அறக்கட்டளை (Foundation for Defense of Democracies) மூத்த உறுப்பினரான எட்மண்ட் ஃபிட்டன்-பிரவுன், "இரான் பதிலடி கொடுக்க விரும்புகிறது என்பதற்கான சான்றுகள் இருக்கலாம், ஆனால் அதை ஒரு பெரிய மோதலாக விரிவாக்க விரும்பவில்லை" என்று கூறுகிறார். கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் இரானின் சில ராணுவத் திறன்களுக்கு எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார். "இரானின் பதிலடி மிகவும் லேசானதாக இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன. யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் திறனை அமெரிக்கா சேதப்படுத்தினாலும் அவற்றை முற்றிலுமாக அழிக்கவில்லை என்பதை நினைவில் கொள்வது உகந்தது" என்று அவர் மேலும் கூறுகிறார். அமெரிக்காவிலிருந்து வெகு தொலைவில் போர்க்களம் உள்ளது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானின் ஷாஹெட் டிரோன்கள் யுக்ரேன் முழுவதும் பேரழிவை ஏற்படுத்துகின்றன (கோப்புப் படம்) வான்வழியே மட்டுமே நடத்தப்படும் போர்கள் அரிதாகவே வெற்றியையோ அல்லது அரசாங்கத்தை மாற்றுவதற்கான வாய்ப்பையோ அளிக்கின்றன. 2011-இல் லிபியாவிற்கு எதிரான நேட்டோ தலைமையிலான தாக்குதல் நடவடிக்கை ஒரு பெரிய விதிவிலக்காக இருக்கலாம். இருப்பினும் அது கணிசமான குழப்பத்தை அது ஏற்படுத்தியது. இரானின் தாக்குதல் வரம்புக்குள் அமெரிக்க கடற்படை வந்தால் அதைத் தாக்கும் திறன் இரானுக்கு உள்ளது. அது கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளின் பெரிய தொகுப்பையும், சிறிய, வேகமான, ஆளில்லா தாக்குதல் படகுகளையும் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சீனா இரானுக்கு இராணுவ ஆதரவை வழங்கியிருக்குமா என்பது இன்னும் பதிலளிக்கப்படாத மற்றொரு கேள்வியாகும். "ஆரம்ப தாக்குதல்கள் இரானின் தலைமையையும் இராணுவ சொத்துகளையும் சேதப்படுத்தக் கூடும், ஆனால் அமெரிக்கா தனது நடவடிக்கையைத் தொடர போராட வேண்டியிருக்கும். அதே நேரத்தில் இரான் அரசு தனது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள தன் நிலையை வெறுமனே தக்கவைத்துக் கொள்வதே போதுமானது" என்று அமெரிக்காவின் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வு மையத்தின் டேனியல் பைமன் கூறினார். வான் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை யுக்ரேன் தெளிவாக நினைவூட்டுகிறது. அதிபர் ஸெலென்ஸ்கி தனது கூட்டாளிகளுக்கு விடுக்கும் மிக முக்கியமான கோரிக்கையாக இது இன்னும் உள்ளது. நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் டஜன்கணக்கான ஏவுகணைகளை உள்ளடக்கிய பல, சிக்கலான தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்வது எவ்வளவு கடினம் என்பதையும் யுக்ரேன் நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. அமெரிக்காவிடம் அதிக வலிமையும் வளங்களும் உள்ளன. அத்துடன் இஸ்ரேலுடன் இணைந்து இரானின் டிரோன் மற்றும் ஏவுகணை தொழிற்சாலைகளையும் ஏவுதளங்களையும் அமெரிக்கா குறிவைத்து தாக்கலாம். ஆனால் அந்த அச்சுறுத்தலை முற்றிலும் அகற்றுவது எளிதல்ல. நீடித்த போர் இரானுக்கு மட்டுமல்ல, அமெரிக்க ஆயுத இருப்பு மற்றும் சப்ளைக்கும் ஒரு சவாலாக இருக்கும். ஏனெனில் இது அமெரிக்காவிலிருந்து வெகு தொலைவில் நடத்தப்படும் ஒரு போர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இரானின் பதிலடி தாக்குதல் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பின் திறன் பற்றி எழுப்பும் கேள்விகள்
  12. மத்திய கிழக்கில் பயங்கர சண்டை நடந்து கொண்டிருக்கு. இவங்கள் வேறை... குறுக்க, மறுக்க ஓடிக் கொண்டு இருக்கிறாங்கள். குண்டு அடிபட்டு சாகப் போறீங்கள். போய்.. ஓரமா விளையாடுங்க(டா) 😂
  13. நான் இங்கே தொடர்ந்து சொல்வது தான். நாங்கள் இவரை தாரை வார்க்கும் வேலையை செய்யவே கூடாது. இவர் வெளியே போனால் இப்பொழுது இருப்பதைவிட மேலோங்கியே இருப்பார். அது எமக்கு இப்போது இருப்பதை விட அதிக இடைஞ்சல்களை தரும்.
  14. கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி Mar 3, 2026 - 04:00 PM கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 1,290.68 புள்ளிகள் அல்லது 5.44 சதவீதத்தால் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 22,443.38 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய மொத்தப் புரள்வு 9.56 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி
  15. இந்திய கடற்படையின் ஏற்பாட்டிலான சர்வதேச கடற்படை மதிப்பாய்வு மற்றும் MILAN - 26 பலதரப்பு கடற்படைப் பயிற்சி நிறைவடைந்து 'சாகர', 'நந்திமித்திர' கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன 03 Mar, 2026 | 07:19 PM இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை நடைபெற்ற MILAN - 26 பலதரப்பு கடற்படைப் பயிற்சி மற்றும் சர்வதேச போர்க்கப்பல்சள் கண்காணிப்பில் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை கடற்படைக் கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்திர ஆகிய கப்பல்கள், பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர், பெப்ரவரி 27ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் குறித்த இரண்டு கப்பல்களையும் கடற்படை மரபுப்படி கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர். பிராந்திய மற்றும் உலகளாவிய பங்குதாரர்கள் பங்குபற்றிய (United Through Oceans) என்ற கருப்பொருளின் கீழ் நடைப்பெற்ற சர்வதேச கடற்படை கண்காணிப்பிலும், (Camaraderie Cohesion Collaboration) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற MILAN-26 பலதரப்பு கடற்படைப் பயிற்சியிலும் இலங்கை கடற்படை பங்கேற்றதன் மூலம், பரஸ்பர புரிதல் மூலம் கடல்சார் பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், கூட்டு அணுகுமுறை மூலம் கடல்சார் அபிலாஷைகள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் பதிலளிப்பதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பு பிரதிபலித்தது. அதன்படி, துறைமுக அத்தியாயம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு துறைகளில் நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ளவும், சர்வதேச கடல்சார் மாநாட்டில் பங்கேற்கவும் தரப்பினருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. சாகர மற்றும் நந்திமித்திர கப்பல்களின் அங்கத்துவ குழுவினர்கள், கலாச்சார நடவடிக்கைகள், தொழில்முறை தொடர்புகள், போர்க்கப்பல்களின் செயல்பாட்டுத் தயார்நிலை குறித்த கண்காணிப்பு சுற்றுப்பயணங்கள், சர்வதேச நகர அணிவகுப்பு மற்றும் உணவு கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்தப் பயிற்சி, இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நட்பையும் மேலும் மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை கடற்படை இசைக்குழு மற்றும் நடனக் குழுவும் இந்த வண்ணமயமான நிகழ்விற்கு பங்களித்தன. MILAN-26 பலதரப்பு கடற்படைப் பயிற்சியின் சமுத்திரஅத்தியாயம், கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படைகளுக்கு இடையேயான இயங்குதன்மை மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், அறிவைப் பரிமாறிக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்ட சிக்கலான கடற்படைப் பயிற்சிகளைக் கொண்டிருந்ததுடன், நட்பு நாடுகளைச் சேர்ந்த 18 போர்க்கப்பல்கள் மற்றும் 29 விமானங்கள் உட்பட 42 நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்ற இந்தப் பயிற்சியில், போர் அமைப்புகளில் கப்பல்கள் நகருதல், துப்பாக்கிச் சூடு பயிற்சிகள், நீருக்கடியில் போர் பயிற்சிகள் மற்றும் கப்பல்களில் உலங்கு வானூர்திகளை தரையிறக்குதல் உள்ளிட்ட பல பயிற்சிகளும் இடம்பெற்றன. மேலும், பல பிராந்திய மற்றும் உலகளாவிய கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படையினர் பங்கேற்கும் இத்தகைய கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிராந்திய மற்றும் உலகளாவிய தரப்பினருடன் ஒரு கூட்டு அணுகுமுறையில் பணியாற்றுவதில் தேவையான பரஸ்பர ஒத்துழைப்பை வளர்ப்பது, கடல்சார் செயல்பாடுகள் தொடர்பான புதிய அறிவு, திறன்கள், சிறந்த நடைமுறைகள், மூலோபாய உத்திகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வது, புதிய சவால்களைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை கூட்டாகக் கண்டறிய முடிவது போன்ற பல நன்மைகள் உள்ளன. இந்திய கடற்படையின் ஏற்பாட்டிலான சர்வதேச கடற்படை மதிப்பாய்வு
  16. இலங்கையை விட்டு வெளியேறமுடியாமல் அகப்பட்டுள்ள வெளிநாட்டவர்களின் இலங்கை வீசா இலவசமாக இரண்டு கிழமைகளுக்கு நீடிக்கப்படுவதாக ஒரு தகவல் அறிந்தேன்.
  17. முன்பு போல்... பொறுமையாக இருந்து, கோர்வையாக எழுதுவதற்கு நேரம் கிடைத்தாலும்... ஏனோ தெரியவில்லை, மனம் ஒன்றிப் போக மறுக்கின்றது. கூடிய விரைவில்.... இரண்டாம் பாகத்தை எழுத முயற்சிக்கின்றேன். அதுவரை பொறுமை காக்கவும் நண்பர்களே... ❤️
  18. சுத்துமாத்து சுமந்திரனை இப்போது எவரும் கணக்கில் எடுப்பதில்லை. அந்தளவுக்கு மக்களின் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளார். சமூக ஊடகங்களில்... இவருக்கு விழும் பேச்சுக்களை காத்து கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு திட்டித் தீர்க்கிறார்கள். இவர்.... பல தோல்விகளை சந்தித்ததால், மனதளவில் மிகவும் பாதிக்கப் பட்டு, வைத்திய சிகிச்சை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளதாக பலரும் சொல்கிறார்கள்.
  19. சாதிய ஒடுக்குமுறையும் 1948 உடன் ஒப்பிடும் போது மிக, மிக, மிக முன்னேற்றமான நிலையில்தான் உள்ளது. இரெட்டை டம்ளர் முறை பரவலாக இருந்தது, பெயர்களுக்கு பின்னால் சாதி போடும் பழக்கம், ஆண்டுக்கொரு சாதிக்கலவரம் என இருந்த நிலை இப்போ இல்லை. இன்னமும் கனதூரம் இருக்கு, ஆனால் கடந்து வந்த தூரமும் கொஞ்சமல்ல. பொருளாதர, கல்வி, உள்கட்டுமான, சுகாதார வளர்ச்சி…சாதாரண வளர்ச்சி இல்லை. அசுர வளர்ச்சி. அதுவும் எம்முடன் ஒப்பிடும் போது.
  20. ஈரானை அண்மித்து 32 முஸ்லீம் நாடுகள். அதில் 20 நாடுகள் தங்களது விமான படைத் தளத்தையும், கப்பல் படைத் தளத்தையும்... ஈரானுக்கு அடிக்க, அமெரிக்காவுக்கு கொடுத்துள்ளார்கள். இது எல்லாம்... நம்ம ஊர் **** முஸ்லீம்களுக்கு தெரிந்தும், தெரியாத மாதிரி... நடிப்பார்கள். நம் ஊர் முஸ்லீம்கள்.... தமிழனை, சிங்களவன் அடித்தால்... வெடி கொளுத்தி கொண்டாடுவார்கள். இவ்வளவுக்கும் அவர்கள் பேசுவதும் தமிழ். ஆனால்... தமிழனை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சிங்களவனுடன் சேர்ந்து கொலை செய்து வந்தவர்கள். சக தமிழனின் இறப்பில் மகிழ்ச்சி அடைந்தவர்கள்.... எங்கோ பல ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும்... 80 வயது கிழவன் செத்ததுக்கு துக்கம் கொண்டாடுகின்றார்கள். இந்த முஸ்லீம்களால்... உலகமே நிம்மதி இன்றி தவிக்கின்றது. நேர்மையும், அறமும்... அறவே அற்ற இனம் இது.
  21. உக்ரெய்ன் ரஷ்ய போர் ஆரம்பித்தபின் மரபுவழிப் போரில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இராணுவ வீரர்கள் நேரடியாக மோதிக் கொள்வதில்லை. ட்றோன்கள்தான் இராணு வீரர்களின் எதிரி. ரஷ்யா இதுவரை ஸ்ரார்லிங்கை (அமெரிக்கத் தொழில்நுட்பம்) களமுனையில் அதிகம் நம்பியிருந்தத. ட்றோன்கள், கண்காணிப்பு, களமுனைத் தொடர்பாடல்கள் எல்லாவற்றிற்கும் இது அவசியமாக இருந்தது. கடந்த ஒரு மாதமாக ஸ்ரார்லிங்க் மட்டுப்படுத்தப்பட்டபோது களாமுனையில் மாற்றங்கள் தெரிகின்றன. ரஷ்யாவின் Yamal-602 அதிக பலன் தரவில்லை. இந்த ஒரு மாதத்தில் குண்டுவீச்சுக்களையே அதிகம் நம்பியுள்ளதால் போர் ஆரம்பித்ததிலிருந்து காணாத அளவு மிக மந்தமாக ரஷ்யா முன்னேறியுள்ளதது. ஈரானுக்கு இத்தகைய தொழில்நுட்பம் இல்லாவிட்டால் மரபுவழிப் போரை முன்னெடுக்க முடியாது. இக் கருத்து, அமெரிக்கா தரைவழித் தாக்குதலில் குதிக்கும் என்ற அர்த்தத்தில் எழுதவில்லை.
  22. பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (04 பெப்), நாளை மறுதினம் வியாழன் (05 பெப்) இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியை ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டியில் சரியாகக் கணித்திருந்தால் மூன்று புள்ளிகள் வழங்கப்படும். போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், தென்னாபிரிக்கா எதிர் நியூஸிலாந்து SA எதிர் NZ போட்டியாளர் பதில் செம்பாட்டான் AUS ஏராளன் IND வசீ AUS புலவர் AUS சுவைப்பிரியன் AUS அல்வாயன் AUS ஈழப்பிரியன் IND நியூ பலன்ஸ் IND வாத்தியார் AUS கறுப்பி AUS வாதவூரான் IND வீரப் பையன்26 PAK சுவி IND கிருபன் SA கோஷான் சே SA அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் AUS எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் AUS 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் இந்தியா ENG எதிர் IND போட்டியாளர் பதில் செம்பாட்டான் IND ஏராளன் AUS வசீ IND புலவர் IND சுவைப்பிரியன் ENG அல்வாயன் IND ஈழப்பிரியன் ENG நியூ பலன்ஸ் ENG வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் SL வீரப் பையன்26 IND சுவி ENG கிருபன் IND கோஷான் சே ENG அஹஸ்தியன் SA கந்தப்பு AUS நியாயம் IND எப்போதும் தமிழன் SA ரசோதரன் AUS பிரபா ENG நிலாமதி AUS நந்தன் IND இரு அரையிறுதிப் போட்டிகளிலும் உள்ள தெரிவுகளின்படி: தென்னாபிரிக்கா அணி வெல்லும் 04 பேர் கணித்துள்ளனர். நியூஸிலாந்து அணி வெல்லும் என எவரும் கணிக்கவில்லை. இங்கிலாந்து அணி வெல்லும் என 06 பேர் கணித்துள்ளனர். இந்திய அணி வெல்லும் என 21 பேர் கணித்துள்ளனர். இரு அரையிறுதிப் போட்டிகளிலும் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  23. சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு நான் வேலை செய்யும் உணவகத்தில் ஈரானியர்களால் நிரம்பி வழிந்தது.கிட்டத்தட்ட 50,60 பேர் வரும். சிலர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டார்கள். எல்லோரும் ஆட்டு இறைச்சி,கோழி,வாத்து இறைச்சியென ஒரு புடி புடித்தார்கள். சாப்பாட்டின் பின்னர் பழங்கள் கலந்த ஐஸ்,தனி ஐஸ் என ஒரே அமர்க்களப்படுத்தி விட்டார்கள். எங்களுக்கு அந்தமாதிரி வருமானம்.😂 இப்பிடி நாளுக்கொரு அயத்துல்லா போனால்........😎
  24. நீங்கள் சொல்வது போல் வளர்ச்சியடைந்து என்ன பிரயோசனம்? சாதி கொடுமைகளும் சாதி கொலைகளும் குறைந்தபாடில்லை.தமிழ் மக்களுக்குள் பல இனக்குழுக்கள்.சாதிக்கொரு கட்சி. இனக்குழுக்களுக்கென ஏராளமான கட்சிகள்.பிச்சைகாரர்களும் குறைந்தபாடில்லை. உலகில் ஓரளவிற்கு எல்லா இடங்களும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
  25. கண்ணிலே இருப்பதென்ன ........! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.