அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
ஆமைகள் ஏன் நீண்டகாலம் வாழ்கின்றன? அகத்தியன் ஆமைகளுக்கும் தமிழருக்கும் பல்லாயிரமாண்டுகள் தொடர்புண்டு. கடலோடும் தமிழர் உருவத்தில் பெரிய ஆமைகளையே வழிகாட்டிகளாகப் பாவித்தார்களென சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. ஆமைகளின் நீண்ட கால வாழும் தன்மை அவர்களுக்கு உதவியது. ஆமைகளால் எப்படி நீண்டகாலம் உயிர்வாழ முடிகிறது எனத் தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆமைகளில் இரண்டு வகையுண்டு. ஒன்று கடலாமை ( sea turtle) மற்றது நில ஆமை (box turtle). கடலாமைகள் 50-100 வருடங்கள் வாழ்கின்றன. நில ஆமைகள் 100 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றனவென ஆமைகளைப் பற்றி ஆராயும், ஃபுளோறிடா தென் மேற்கு ஸ்டேட் கல்லூரி பேராசிரியரான ஜோர்டன் டொனினி கூறுகிறார். தென் அ…
-
- 0 replies
- 512 views
-
-
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனிதர்களின் காலடித் தடங்கள் 23 ஆயிரம் ஆண்டுகள் முதல் 21 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் முன்பு கருதப்பட்டதைவிட 7 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே மனிதர்கள் அமெரிக்க கண்டத்தில் கால்பதித்திருக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆசியாவில் இருந்து மனிதர்கள் எப்போது அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள் என்ற விவாதம் பல பத்தாண்டுகளாக முடிவில்லாமல் தொடர்கிறது. வட அமெரிக்காவின் உட்பகுதிகளில் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை பல ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். இப்போது நியூ மெக்சிகோவி…
-
- 0 replies
- 448 views
-
-
செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படங்களில் 'ஒளி கீற்று' போல தோன்றிய பூமி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைNASA/JPL-CALTECH/MSSS செவ்வாய் கிரகத்தில் பயணித்து வந்த நாசாவின் கியூரியாசிட்டி என்ற ரோவர் 2000 நாட்களை நிறைவு செய்துள்ளது. அந்த ரோவரின் சாதனைகளில் சிலவற்றை கியூரியாசிட்டி அறிவியல் குழு தேர்வு செய்து அனுப்பியுள்ளது. படத்தின் காப்புரிமைNASA/JPL-CAL…
-
- 0 replies
- 372 views
-
-
அணு ஆட்டம்! அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் - திருக்குறள். 'எந்த அளவுக்கு நன்மை பயக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகேஇ ஒரு செயலைத் தொடங்க வேண்டும்’ - நவீன இந்தியாவில் வளர்ச்சிக்கான மூல மந்திரம் இதுதான்! ஆனால்இ 'இன்றைய வளர்ச்சி’ என்ற சொல்லாடல்இ எந்த அளவுக்கு இந்தக் குறளுடன் பொருந்திப்போகிறது என்பதை சிந்தித்துப் பார்த்தது உண்டா? ஒரு முறை ஐன்ஸ்டீனிடம் கேட்டார்கள்: ''மூன்றாம் உலகப் போர் எப்படி இருக்கும்?'' ஐன்ஸ்டீன் சொன்னார்இ ''மூன்றாம் உலகப் போர் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால்இ நான்காம் உலகப் போரைப்பற்றி எனக்குத் தெரியும். அங்கு மக்கள் கல்இ வில்கொண்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
தலையில் சீப்பை வைத்து தேய்த்தால் மின்னேற்றம் ஏற்பட்டு, சிறு சிறு பேப்பர் துண்டுகளையும் தூசுகளையும் கவர்ந்து இழுக்கும் அல்லவா? அதுபோலத் தான் காற்று தூசு மற்றும் நீராவி நிரம்பிய கருமேகங்களில் தூசு மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் மின்சாரம் தோன்றும். அதை நிலைமின்னேற்றம் என்பார்கள். மழை தரும் கருமேகத்தில் உள்ள அமளி துமளியான நிலையில் மேலும் மேலும் கூடுதல் உராய்வு மூலகூறுகளிடையே ஏற்படுவதால் மின்னேற்றம் கூடுதல் ஆகும். கருமேகத்தில் திரளும் மின்சாரம் ஒரு அளவை தாண்டியதும் திடீரென படுவேகமாக, கண் இமைக்கும் நேரத்தில் நிலத்தை நோக்கிப் பாயும். ஈர்திங் எனப்படும் இந்த மின்னிறக்க நிகழ்வே மின்னல் என்று சொல்லப்படுகிறது. ஒரு மின்னலுக்குப் பிறகு கார் மேகங்களில் மின் சமநிலை ஏற்படுகிறத…
-
- 0 replies
- 535 views
-
-
இணைய உலகில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மோசடிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இலக்காக வேண்டியிருக்கும். வைரஸ் தாக்குதலும், தாக்காளர்கள் (hackers) கைவரிசையும், ஊடுருவு மென்பொருள் (malware) பாதிப்புகளும் மட்டுமல்ல, வைரலாகப் பரவும் பொய்யான தகவல்களும் கூட இணையவாசிகளை ஏமாற்றக் காத்திருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, ஃபேஸ்புக்கில் பயனாளிகளின் தனியுரிமையைப் பாதுகாப்பது தொடர்பாகப் பரவிய அறிவிப்பைச் சொல்லலாம். தகவல்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாக இந்த அறிவிப்பைப் பார்த்தவர்கள் திடுக்கிட்டுப் போயிருப்பார்கள். ஏனெனில், ஃபேஸ்புக்கில் பயனாளிகள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் மற்றும் ஒளிப்படங்கள் அனைத்தும் பொதுவெளியில் வர உள்…
-
- 0 replies
- 386 views
-
-
Jasenovac வதை முகாம் http://www.youtube.com/watch?v=_6BkCOtp8O0
-
- 0 replies
- 398 views
-
-
ஷென்சோ-12: சீனா முதல் குழுவினரை புதிய விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது! சீனா உருவாக்கியுள்ள தியான்ஹே என்ற விண்வெளி நிலையத்தில், கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்ப பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) லாங் மார்ச் 2எப் ரொக்கெட் மூலம் ஷென்சூ-12 என்ற விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களும் பயணித்தனர். கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து 09:22 பெய்ஜிங் நேரத்தில் விண்கலம் ஏவப்பட்டது. நீ ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹாங்க்போ ஆகிய மூன்று மனிதர்களும் பூமிக்கு மேலே 380 கி.மீ (236 மைல்) தொலைவில் உள்ள தியான்ஹே தொகுதியில் மூன்று மாதங்கள் செலவிட உள்ளனர். ரொக்கெட் புறப்பட்ட 10 நிமிட…
-
- 0 replies
- 343 views
-
-
அறிவியல் அதிசயம்: பால்வெளி மண்டலத்தின் நடுவில் பிரமாண்ட கருந்துளை – வியப்பூட்டும் உண்மைகள் 14 மே 2022 பட மூலாதாரம்,EHT COLLABORATION படக்குறிப்பு, பால்வெளி மண்டலத்தின் நடுவில் படம்பிடிக்கப்பட்ட பிரமாண்ட கருந்துளை மேலே இருக்கும் படத்தில் இருப்பது நமது நட்சத்திரக் கூட்டமான பால்வெளி மண்டலத்தின் மையத்திலுள்ள பிரமாண்டமான கருந்துளை. பால்வெளி மண்டலத்தின் மையத்தில் அமைந்திருக்கும் மாநிறை கருந்துளையின் (மிகவும் பிரமாண்டமான) ஒளிப்படம் முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாகிட்டாரியஸ் ஏ, என்றழைக்கப்படும் இந்த கருந்துளை, நம் சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரியது. அபரிமிதமான ஈர்ப்பு விச…
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
விண்வெளியில் கிரகங் களை ஆய்வு செய்வதற் காக அமெரிக்காவில் நாசா விஞ்ஞானிகள் கெப் லர்-10 என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்தியுள்ளனர். அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண் வெளியில் உள்ள கிரகங் களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. சமீபத்தில், கெப்லர்-10 செயற்கை கோள் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்து அனுப்பியுள்ளது. அது சூரிய கும்பத்தை விட்டு வெளியே உள்ளது. பூமியை போன்று தோற் றம் கொண்டது. இது முழு வதும் பாறைகளால் ஆனது. அது நட்சத்திர கூட்டங்களை சுற்றி வருகிறது. இந்த கிரகத் துக்கு கெப்லர்-10பி என்று பெயரிடப்பட்டுள்ளது. இங்கு கடுமையான வெப்பம் நிலவுகிறது. அதாவது 1371 டிகிரி சென்டி கிரேடுக்கு மேல் வெப்பம் உள்ளது. “எனவே, இங்கு மனிதர்கள் வாழ ம…
-
- 0 replies
- 1.5k views
-
-
50,000 ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்கும் பச்சை நிற வால் நட்சத்திரம் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜான்வி மூலே பதவி,பிபிசி மராத்தி 29 ஜனவரி 2023, 08:19 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DAN BARTLETT VIA NASA வானில் ஒரு புதிய விருந்தாளி பூமியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பச்சை நிற வால் நட்சத்திரம் என அழைக்கப்படும் இந்த வால் நட்சத்திரம், உலகம் முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏனெனில், இந்த வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்குகிறது. இதற்கு முன்பு இந்த வால் நட்சத்திரம் வருவதற்…
-
- 0 replies
- 846 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine கட்டுரை தகவல் ஜேமி டச்சார்ம் 20 அக்டோபர் 2025, 06:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித உடலில் உள்ளுறுப்புகளை அறிய மருத்துவர்களுக்கு உதவுவதற்காக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அல்ட்ராசவுண்ட், இப்போது அதிக அதிர்வெண் கொண்ட குவிக்கப்பட்ட ஒலி அலைகள் (focused high frequency sound waves) மூலம் புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் புதிய வழிகளை வழங்குகிறது. முனைவர் பட்ட மாணவராக இருந்தபோது ஜென் ஸு (Zhen Xu) தனது ஆய்வக நண்பர்களை எரிச்சலூட்டி இருக்காவிட்டால், கல்லீரல் புற்றுநோய்க்கான ஒரு அற்புதமான சிகிச்சையைக் கண்டுபிடித்திருக்க மாட்டார். 2000-களின் முற்பகுதியில் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
தோட்டத்தில் கீரை பறிக்கும் விவசாயி விஸ்வநாதன் அரைக் கீரை, முருங்கைக் கீரை, பாலக் கீரை, சிறு கீரை, மணத்தக்காளி கீரை, தண்டுக் கீரை, பருப்புக் கீரை, வெந்தயக் கீரை, முள்ளங்கிக் கீரை, பீட்ரூட் கீரை, முடக்கத்தான் கீரை, புளிச்ச கீரை, அகத்திக் கீரை இப்படிக் கீரையில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையையும் தன் தோட்டத்தில் பயிர் செய்திருக்கிறார் கோவை புட்டுவிக்கி சாலையில் வசிக்கும் விஸ்வநாதன். வாடிக்கையாளர்கள் வந்து கேட்ட பின்பு தோட்டத்தில் புத்தம் புதுசாகக் கீரையைப் பறித்துத் தருகிறார். ‘இந்தக் கீரையின் பெயரை நாங்க கேள்விப்பட்டதில்லையே? இதை எப்படிச் சமைக்கிறது?’ என்று வாங்குபவர்கள் கேட்டால், அந்தக் கீரையில் என்னவெல்லாம் சமைக்கலாம் என்பதைத் தெளிவாக விளக்கவும் செய்கிறா…
-
- 0 replies
- 294 views
-
-
அமேஸான் - புத்தக விற்பனையிலிருந்து பூதாகர வளர்ச்சி! எஸ்.எல்.வி. மூர்த்தி இ-காமர்ஸ், ஆன்லைன் மார்க்கெட்டிங் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இணையதள வியா பாரம் இந்தியாவில் சுமார் 75,000 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று கணக்கிடப் பட்டுள்ளது. பிளிப்கார்ட், ஜபாங், ஜங்லீ, மைந்த்ரா, ஸ்நாப்டீல் போன்ற இ காமர்ஸ் கம்பெனிகள் புத்தகங்கள், சமையல் சாதனங்கள், எலெக்ட்ரானிக் கருவிகள், செல்போன்கள், உடைகள், வாட்ச்கள், நகை கள் என நமக்குத் தேவைப்படும் அத்தனை பொருட்களையும், ஏகப்பட்ட பிராண்ட்களில் தருகிறார்கள். பெரும்பாலான இ-காமர்ஸ் கம்பெனிகளின் ஆண்டு விற்பனை பல்லாயிரம் கோடிகளுக்கும் அதிகம். பல லட்சம் பேருக்கு இந்தக் கம்பெனிகள் வேலை வாய்ப்புத் தருகின்றன. இது மட்டுமல்ல, குற…
-
- 0 replies
- 601 views
-
-
விண்கலத்தில் ஓட்டை.. ஆகாயத்தில் 6 மணி நேரம் மிதந்தபடி பஞ்சர் போடும் நாசா வீரர்கள்.. திக் நிமிடம்! சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட துளையை அடைப்பதற்காக நாசா மற்றும் ரஷ்யா விஞ்ஞானிகள் நாளை விண்வெளியில் 6 மணி நேரம் நடக்க இருக்கிறார்கள். நாசாவின் சோயுஸ் விண்கலம் ஒன்று தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் ஆகாயத்தில் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏற்பட்டு இருக்கும் சிறிய துளை காரணமாக இதை கடந்த 4 மாதங்களாக பயன்படுத்தாமல் வைத்து இருக்கிறார்கள். சோயுஸ் எம்எஸ்-09 என்று இந்த விண்கலத்தை சரி செய்ய ரஷ்ய விஞ்ஞானிகள் களமிறங்கி உள்ளனர். இந்த விண்கலனின் துளை இருப்பது கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய பென்சில் அளவில் இதில் துளை உள்ளது. சர்வதேச விண்வெள…
-
- 0 replies
- 410 views
-
-
காடுகளில் அலைந்து திரியும் சிம்பன்சிகள் தொடர்ச்சியாக கள் குடித்து வருவதற்கான முதல் ஆதாரங்களை விஞ்ஞானிகள் இப்போது பதிவு செய்துள்ளனர். கள்ளை விரும்பிக் குடிக்கும் சிம்பன்சிகள் பின்னர் போதையேறி தூங்குவது தெரியவந்துள்ளது மேற்கு ஆப்ரிக்க நாடான கினியில், சிம்பன்சிக்கள் பனையை ஒத்த மரங்கள் மீது ஏறி, அதன் வெட்டப்பட்ட குருத்து மற்றும் பாளைகளிலிருந்து வடிந்து நொதித்து இயற்கையாக உருவாகும் கள்ளை, அம்மரங்களின் இலையை பயன்படுத்தி அருந்தி வருவது படமாக்கப்பட்டுள்ளது. கினி நாட்டின் பொஸோப் பகுதியில் உள்ளூர் மக்கள் காட்டுப்பனை மரங்களில் குருத்தை வெட்டி அதிலிருந்து வடியும் கள்ளை சேகரிக்கும் வகையில் பிளாஸ்டிக்கிலான குடுவைகளை கட்டி வைத்திருந்தனர். இக்குரங்குள் அம்மரங்கள் மீதேறி அதிலிருந்த…
-
- 0 replies
- 458 views
-
-
-
அமெரிக்க ராணுவத்தின் Falcon (Force Application and Launch from Continental United States) HTV-2 ( Hypersonic Technology Vehicle 2) மிகையொலி (Hypersonic) வானூர்தி சாதாரண வர்த்தக வானூர்தியைக் விட 22 மடங்கு அதிவேகமாக சீறி செல்லக்கூடியதாகும். கலிபோர்னியாவில் வான்டென் பெர்க் விமானப்படை தளத்தில் உந்துகணை (Rocket) பின்புறத்தில் இணைக்கப்பட்ட இந்த வானூர்தி சீறிப் பாய்ந்து சென்றது. இந்த அதிவேக வானூர்தி புறப்பட்ட 9 நிமிடத்தில் தொடர்பை நிறுத்திக் கொண்டது. இந்த வானூர்தி பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த வானூர்தி 2000 சென்டிகிரேடு வெப்பநிலையை தாங்கக் கூடியதாகும். அதிவேக வானூர்தி ஏற்கனவே ஏவும் திட்டம் கைவிடப்பட்டு வடிவமைப்பு மாற்றப்பட்டது. வான…
-
- 0 replies
- 716 views
-
-
மொபைல் கேமராவிற்கு, 15 ஆண்டுகளுக்கு முன்பே, சாப்ட்வேர் கண்டு பிடித்து, நோக்கியா நிறுவனத்திற்கு தந்த தமிழன், சங்கர் நாராயணன்: அமெரிக்காவில் உள்ள, சிலிக்கான் வேலி என்ற பகுதி தான், உலக கம்ப்யூட்டர் தொழில்நுட்ப புரட்சியின் நடுமையம் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியர் களின் கனவு பிரதேசம். இது போன்ற பகுதியை, தங்கள் நாட்டிலும் அமைக்க பல நாடுகள் முயன்றன. ஆனால், இதுவரை யாராலும் நிறைவேற்ற முடியவில்லை.சிலிக்கான் வேலியின் பார்வை தான், அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். ஏனெனில், எந்த தொழில் என்றாலும், அதை ஏன் நாமே சொந்த மாக செய்யக் கூடாது என்பது தான், அங்கு நிகழ்ந்த மாற்றத்தின் முதல் படி.இந்த மாற்றம், நம் நாட்டில் நடக்க, முதலில் நம் கல்விமுறையும், சிந்தனை போக்கும் மாற வேண்டும். 'படித்து விட்…
-
- 0 replies
- 633 views
-
-
நவீன அறிவியல் உலகில் செயற்கை இதயம் எட்டா கனவாகவே இருப்பது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,சியன் இ ஹார்டிங் பதவி,பிபிசி ஃப்யூச்சர் 22 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES நகரங்களுக்கு அடியில் சுரங்கம் அமைப்பது முதல் நிலவுக்குப் பயணிப்பது வரை மானுட வளர்ச்சி அளப்பரிய சாதனைகளைக் கண்டுள்ளது. ஆனால், செயற்கை இதயத்தை உருவாக்குவது மட்டும் ஏன் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக சவால்களை கொண்டுள்ளது? செயற்கை இதயத்தைக் கண்டறிவதற்கான வரலாறு, புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு மற்றும் தொடர்ச்சியான மருத்துவ தோல்வி ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. நிலவுப் பயணமும் செயற்கை …
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
ஆய்வுக் கூடத்தில் வளர்கிறது சிறுநீரகம்! -ஆச்சர்ய மருத்துவம் சிறுநீரகக் கோளாறுகளில் தவிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. 'மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லை வைத்துஇ செயற்கை முறையில் சிறுநீரகத்தை வளர்த்தெடுக்க முடியும்’ என்று இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் கண்டறிந்து உள்ளனர். இப்போதுஇ தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு இருப்பதுபோன்று அரை செ.மீ. நீளத்துக்கு சிறுநீரகத்தை வளர்த்து உள்ளனர். இதை உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான அளவுக்கு வளர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 'இந்தியாவில் ஆண்டுதோறும் 90இ000 பேர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இதில் அதிகபட்ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகை பயமுறுத்தும் ?#8220;சோன் படலம் அவ்வப்போது விஞ்ஞானிகள் பயமுறுத்தும் விஷயங்களில் முக்கியமானது ?#8220;சோன் (Ozone) அபாயம். இது பாமர மக்களுக்குப் புரியாத பெயராக இருக்கலாம். ஆனால் இதுதான் விஞ்ஞானிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக ?#8220;சோனுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடையிலான நிழல் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றோ இது ஒரு அச்சுறுத்தக்கூடிய சிக்கலாக வளர்ந்து விட்டது. உண்மையில் ?#8220;சோன் என்பது மனித குலத்துக்கு தீங்கு விளைவிப்பது அன்று. மாறாக இயற்கை மனிதனுக்காக விண் மண்டலத்தின் அமைத்துக் கொடுத்திருக்கும் பாதுகாப்புப் படலம். புற-ஊதாக் கதிர் வீச்சு (Ultra violet rays) சூரிய ஒளி நமக்கு எத்…
-
- 0 replies
- 2.7k views
-
-
பூமியின் உள்மையப்பகுதியில் இன்னொரு ஆதாரப் பொருள் கண்டுபிடிப்பு பூமியின் உள்மையப்பகுதியில் இதுவரை "அறியப்படாத ஆதாரப் பொருள்" ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் உள்மையப்பகுதியில் என்ன உள்ளன என்பதை அறிவது, பூமி உருவானபோது இருந்த நிலைமைகளை மேலும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவும் இரும்பு மற்றும் நிக்கலுக்கு பிறகு, பூமியின் உள்மையப்பகுதியில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பதாக நம்பப்படும் இந்த ஆதாரப் பொருளை பல தசாப்தங்களாக அவர்கள் தேடி வந்துள்ளனர். பூமியின் உள்மையப்பகுதியில் நிலவுகின்ற உயர் தட்பவெப்ப நிலையையும், அழுத்தங்களையும் மீள் உருவாக்கி சோதனைகள் நடத்தியதன் மூலம் இந்த ஆதாரப் பொ…
-
- 0 replies
- 294 views
-
-
நாய்வாலாட்டுவது அதன் உணர்வுகளை காட்டும் செயல் நாய் வாலை ஆட்டுவது ஏன்? மனிதரைப் பார்த்து நாய் வாலை ஆட்டினால், அது நம்மை நட்புடன் எதிர்கொள்கிறது என்று அர்த்தம். ஆனால், நாய் வாலை ஆட்டுவது வெறுமனே நட்பைத் தெரிவிப்பதற்காக மாத்திரம் அல்லவாம். அது வாலை எப்படி ஆட்டுகிறது என்பதைப் பொறுத்தும் அதன் உணர்வுகள் வேறுபடுகின்றனவாம். குறிப்பாக இன்னுமொரு நாயைப் பார்த்து, ஒரு நாய் வாலை ஆட்டுவதன் மூலம் தனது உணர்வுகளை வெளிப்படுத்துமாம், அதாவது, வாலை வலது புறமாக ஆட்டினால், அது நட்பு என்றும் இன்னுமொரு நாயைப் பார்த்து அது இடது புறமாக ஆட்டினால், அது வெறுப்புடன் அதனை பார்க்கிறது என்றும் அர்த்தமாம். மனிதனின் மூளையை எடுத்துக்கொண்டால், அதன் வலது மற்றும் இடது பகுதிகள் வெவ்வேறான உணர்வுகளுக்கு ப…
-
- 0 replies
- 574 views
-
-
http://kurangumudi.blogspot.com/ இயற்கையின் வினோதங்கள் மிக மிக பயனுள்ள வலைப்பு
-
- 0 replies
- 1.3k views
-