அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
ஆப்பிள் போன் அதிர்ச்சி! அண்டன் பிரகாஷ் 'நியூட்டன்’... இந்தப் பெயரை வாசித்ததும் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன் மட்டுமே உங்கள் நினைவுக்கு வந்தால், 'ஆப்பிள்’ நிறுவனத்தின் மெகா தோல்வி பற்றி அறியாதவர் நீங்கள்! 90-களின் ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட மொபைல் சாதனம் 'நியூட்டன்’. அலைபேசி, டிஜிட்டல் இசைப் பேழை என்பது எல்லாம் என்னவென்றே அறியாத அந்த நாட்களில் Personal Digital Assistant, சுருக்கமாக 'PDA’ என்ற வகையறாவை அறிமுகப்படுத்தியதே ஆப்பிள்தான். 20 வருடங்களுக்கு முன் இருந்த கணினி தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது அற்புதமான சாதனம் நியூட்டன். பிரத்யேகத் தகவல்களைச் சேகரிக்கும் பேழையாக மட்டும் இல்லாமல், திரை மீது எழுதப்படும் கையெழுத்தைப் ப…
-
- 0 replies
- 2.2k views
-
-
நாம் தினம் ஒரு முறையாவது பயன்படுத்திவிடும் கூகுளில், எதைத் தேடினாலும் நொடி நேரத்தில் ஐந்தாறு இலக்கங்களில் தேடல் முடிவுகளை கொட்டிவிடும். இருந்தாலும் இரண்டு பக்கங்களுக்கு மேல் போகவே மாட்டோம். ஏனெனில் அந்த அளவுக்கு துல்லியமாக நமக்கு என்ன வேண்டுமோ அதை முதலில் தர வல்லது கூகுள் தேடல் பொறி. ஆனால் இந்த பதின்ம வயது சிறுவன், கூகுளுக்கே சவால் விடுகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய குடிமகனான அன்மோல் டக்ரெல் என்பவர், தான் கண்டுபிடித்துள்ள தேடல் பொறி, கூகுளைவிட 47% துல்லியமாகவும் சராசரியாக 21% அதிக துல்லியமாகவும் இருப்பதை நிரூபித்துள்ளார். இந்த தேடல் பொறி, கூகுள் நடத்திய ’Google Science fair’ எனும் ஆன்லைன் போட்டிக்காக அன்மோல் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அன்மோ…
-
- 0 replies
- 1.3k views
-
-
பின்னூட்டம் இடுதல் முடிவுக்கு வருவதன் ஆரம்பமா ? ஒருவர் கருத்துக்கு அல்லது பத்திரிகை செய்திக்கு வாசகர்கள் பின்னூட்டம் இடுவது. பொதுவாக வாசகர்கள் இதனையும் வாசித்து தமது மறு கருத்துகளையும் இடுவார்கள். இது தானே நாம் யாழில் செய்வது. ஆனால் இதுவே பெரிய தலைவலியாக, இந்த தளங்களை நடத்துபவர்களை பாதிக்கின்றன. யாழில் மட்டுறுத்தினர்கள் படும் பாடு அப்படி. சரி முடிந்தளவுக்கு நாம் பக்குவமாக எழுதுகின்றோம். ஆனால், மேற்குலகில் இது கத்துதல், திட்டுதல், பயமுறுத்துதல் என்பவைக்கு மேலாக இனவாதம், பெண்கள் மீதான ஆபாச பாலியல் வர்ணனை என நீண்டு கொண்டே போக The verge, The Daily Dot போன்ற தளங்கள் பின்னூட்டம் இடும் வசதிகளை நிறுத்தி உள்ளன. வாசகர்கள் இடும் பின்னூட்டங்களை மட்டுருத்துவதே முழு நேர வேலை ஆகின…
-
- 6 replies
- 1.2k views
-
-
நவீன தகவல் தொழில்நுட்பத்தில் வித்தகர்களாக விளங்கும் பல இளைஞர்களின் கனவான பேஸ்புக் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் (வேலை உறுதியாவதற்கு முன்பான நிலை) கிடைத்தும் கூட அது கையை விட்டுப் போகும் நிலையை சந்தித்துள்ளார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்க்லைக்கழகத்தில் ஒரு இந்திய வம்சாவளி மாணவர். அவர் செய்த ஒரு நல்லகாரியம்தான்(?) இந்த நிலைக்குக் காரணம்.. அந்த நல்ல காரியம்.. பேஸ்புக்கில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக் காட்டியதுதான். மரூடர்ஸ் மேப் ‘Marauder’s Map’ என்ற அப்ளிகேஷனை அரன் கண்ணா உருவாக்கினார். இதை பயன்படுத்தி பேஸ்புக் மெசஞ்சரில் இணையும்போது, நமக்கு மெசேஜ் அனுப்புவோர் எங்கிருந்து அனுப்புகிறார்கள் என்பதை அறிய முடியும். இது மிகப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அதாவது, …
-
- 0 replies
- 919 views
-
-
'போட்டோஷாப்' தமிழன் கல்யாணம் ,காது குத்து முதல் பேஸ்புக் வரை பல அளப்பறைகளையும், அட்ராசிட்டிகளையும் உண்டாக்க மிக முக்கிய காரணம் போட்டோஷாப். தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய சக்சசுக்கு காரணம் இந்த போட்டோ ஷாப் சாப்ட்வேர் தான். அப்துல் கலாமுடன், மகேந்திர சிங் தோனியுடன், நடிகர் ரஜினிகாந்துடன், கூகுள் 'சுந்தர் பிச்சை' உடன் என யாருடன் வேண்டுமானாம்லும் நாம் இணைந்து நிற்கும்படியான புகைப்படம் ரெடி பண்ண போட்டோஷாப் தான் உதவி புரியும். அடோப் நிறுவனத்தின் போடோஷாப் சாப்டவேர் தான் முதன் முதலில் வெகுஜன மக்கள் பயன்படுத்தும் விண்டோஸ் ஓ.எஸ்.-ல் வந்து இன்றளவும் டாப்பில் இருக்கிறது. ஒவ்வொரு முறை போடோஷாப் இயக்கும்போதும், சீதா ராமன் நாராயணன் என்ற பெயர் வரும் .யார் இந்த சீதாராமன் நாராயணன் எ…
-
- 0 replies
- 1.9k views
-
-
இடது கை பழக்கமுள்ளவர்கள் விவேக திறன்மிக்கவர்கள்: இன்று சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தினம் இடது கையால் எழுதும் மாணவி. பிறந்த குழந்தைகளில் சிலருக்கு வளர் இளம்பருவத்தின்போது இயற்கையாகவே இடது கை பழக்கம் இருக்கலாம். இந்த பழக்கம் உள்ளவர்களின் வளர்ச்சி பருவத்துக்கு ஏற்ப விவேகத் திறனுடையவர்களாக இருப்பார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலகளவில் பெரும்பாலோர் எல்லா பணிகளையும் வலது கையால் மேற்கொள் வதனால்தான், அனைத்து பொருட்களும் வலது கை பழக்கம் உடையவர்களை கவனத்தில் கொண்டே தயாராகிறது. வீடுகளில் கதவுகளைத் திறப்பது, தண்ணீர் குழாய்களைத் திறப்பது, தற்காலத்தில் கணினியின் மவுஸ் பிரயோகம் என அனைத்தும் வலது கை பாவனைக்கேற்ற முறையில்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பிறவிலேயே சி…
-
- 1 reply
- 581 views
-
-
கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி, சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை. கூகுள் க்ரோம், கூகுள் டிரைவ், ஜி-மெயில் ஆப்ஸ், கூகுள் மேப்ஸ் ஆகியவற்றின் தயாரிப்பில் முக்கியப் பங்குவகித்த சுந்தர் பிச்சை கூகுளின் தலைமைப் பீடத்தில் உட்கார்ந்ததன் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். “எப்போதுமே ஒரு தரப்பினருக்கு மட்டுமான தொழில்நுட்பத்தை உருவாக்குவதல்ல கூகுளின் வேலை. கடைக்கோடியில் வசிக்கும் கிராமத்துச் சிறுவனுக்கும் சரி, ஹார்வர்டு பேராசிரியருக்கும் சரி, ஒரே மாதிரிதான் கூகுள் தேடுபொறி வேலை செய்யும். இதைத்தான் கூகுள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். சமநிலையைச் சாத்தியப்படுத்தும் சக்தியாகவே கூகுளை நான் பார்க்கிறேன்” என்கிறார். ஒட்டுமொத்த உலக…
-
- 1 reply
- 481 views
-
-
மின்சாரம் மற்றும் பெட்ரோலில்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. பெட்ரோலுக்காக மூளும் யுத்தங்களும், உள்நாட்டுக் கலவரங்களும் மத்திய ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளை அச்சத்திலேயே வைத்திருக்கின்றன என்றால் மிகையில்லை. அதுபோல மின்சார உற்பத்திக்கான மாற்று வழிகளையும் உலகம் தேடிக் கொண்டிருக்கிறது. உலகை இயக்கும் இந்த இரண்டு சக்கரங்கள் குறித்தும் சில விவரங்கள். உலக அளவிலான மின்சார பயன்பாடு ஆண்டுவாரியாக கணக்கெடுக்கப்படுகிறது. மனித வளம் பொருளாதாரம் அரசியல் என எல்லாவற்றிலும் மின்சாரம் உற்பத்தி திறன் எதிரொலிக்கிறது. இண்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்சி, எனர்ஜி இன்பர்மேஷன் அட்மினிஸ்டிரேஷன், ஐரோப்பிய சுற்றுச்சூழல் ஏஜென்ஸி அமைப்புகள் மின்சார பயன்பாட்டு புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. 2012 கணக்குபடி உலக…
-
- 0 replies
- 511 views
-
-
வாஷிங்டன்: இதுவரை நாம் பார்க்க முடியாத நிலவின் கருமையான மறுபக்கத்தை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான - நாசா வெளியிட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பில் உள்ள, 'ஓசோன்' படலம், வளிமண்டலத்தில் காணப்படும் துாசு, தாவர உயிரிகள், மேகக் கூட்டங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக, 'டி.எஸ்.சி.ஒ.வி.ஆர்' என்ற செயற்கைக் கோளை, நாசா, விண்ணிற்கு அனுப்பியுள்ளது. பூமியில் இருந்து, 10 லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ள இந்த செயற்கை கோளில், 'எபிக்' என்ற கேமராவும், தொலைநோக்கியும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமரா, பூமிக்கும், செயற்கைக் கோளுக்கும் நடுவே உள்ள நிலவின் மறுபுறத்தை, படம் எடுத்து அனுப்பியுள்ளது. அந்த படத்தில், பூமிக்கும், செயற்கைக் கோளுக்கும் நடுவே உள்ள, நிலவின் பின்பக்கம், சூரிய ஒளியில் ஒளிர்கி…
-
- 0 replies
- 533 views
-
-
யாழ் களத்தில் உள்ள கல்வி கற்றுக்கொண்டு இருக்கிற உறுப்பினர்களின் நன்மை கருதி இந்த திரியை ஆரம்பிக்கின்றேன். விளக்கம் அல்லது பதில் தேவைப்படும் கேள்விகளை இங்கே பதிந்தால், யாழ் கள உறவுகள் பதில் அளிப்பதின் மூலம் பலரும் பயனடைய முடியும். நீங்கள் பதில் எழுதும்போது கேள்வியை "Quote" பண்ணி எழுதினால் பதிலை அடையாளம் காண இலகுவாகக இருக்கும். அத்துடன் உங்களது பதிலுடன் மேலதிக வாசிப்புக்கான இணைப்புகளையும் வழங்கினால் மிகவும் நன்றாக இருக்கும் (ஆனால் கட்டாயம் இல்லை). குறிப்பு: தயவு செய்து தேவையற்ற விடயங்களை இந்த திரியில் பதிவு செய்வதை தவிற்கவும் முதலாவதாக ஒரு கேள்வியை போட்டு இந்த திரியை தொடங்கிவைக்கிறன். கேள்வி - What are the advantages and disadvantages of Henry Fayol’s principles of …
-
- 0 replies
- 1.1k views
-
-
இரண்டாவது பூமி (பெர்த் 2.0) என்று வானவியலாளர்கள் அழைக்கும் கிரகத்தை நோக்கிய தேடல் வெகு காலமாக நடக்கிறது. அதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நாஸாவின் கெப்ளர் கிரக-வேட்டை விண்கலத்தைச் சேர்ந்த வானவியலாளர்கள், இதுவரை கண்டறியப்பட்டிருப்பவற்றிலேயே பூமியுடன் அதிக ஒற்றுமை கொண்டிருக்கும் கிரகம் ஒன்றை தாங்கள் கண்டறிந்திருப்பதாகக் கடந்த வாரம் அறிவித்தார்கள். அதுக்கும் இதுக்கும் இடையே பூமியின் விட்டத்தை விட ஒன்றரை மடங்குக்குச் சற்று அதிகமான விட்டம் கொண்டது அந்தக் கிரகம். அதன் பெயர் கெப்ளர் 452பி. அந்தக் கிரகம் நமது சூரியனைப் போன்ற ஒரு விண்மீனைச் சுற்றுகிறது. சுற்றுப்பாதையை ஒரு தடவை நிறைவு செய்ய 385 நாட்கள் ஆகின்றன. இதனால் மிதமான வெப்பநிலையும், மேற்பரப்பொன்று இருக்குமென்றா…
-
- 0 replies
- 358 views
-
-
கோழி முந்தியா? முட்டை முந்தியா? அறிவியல் சொன்ன பதில் கோழி முந்தியா? முட்டைமுந்தியா? இது, நீண்ட நெடுங்காலமாய் எழுப்பப்படும் கேள்வி. முட்டை முந்தியென்றால், கோழியில்லாமல் முட்டை எப்படி வந்தது? என்று மேலோட்டமாக ஆராய்ந்தால் இப்பிரச்சினை தீராது சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இப்பிரச்சினைக்கு விடை காண இயலும். இப்பிரச்சினைக்கு இரு வகைகளில் விடையளிக்க முடியும். (1) தர்க்க ரீதியாக விளக்கம் (2) அறிவியல் ரீதியான விளக்கம். 1. தர்க்க ரீதியான விளக்கம்: முட்டையென்று சொன்னால் அதை உருவாக்க ஒரு ஆண் கோழியும் ஒரு பெண் கோழியும் வேண்டும். ஆக, முட்டை தோன்ற வேண்டுமானால் இரண்டு கோழிகள் முதலில் வேண்டும். அதாவது கோழிகள் கலந்த பின்னே முட்டை தோன்றும். எனவே, இரண்டு கோழிகளின் சேர்க்கையால் தோன…
-
- 0 replies
- 686 views
-
-
உலகின் முதல் அதிசயமா..? தனக்குத் தானே ஆபரேஷன் செய்த டாக்டர். பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ். 29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல், என ஒன்றுபட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார். தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை. ரஷ்யாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் அங்கிருந்து ஆயிரத்து 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். ஆனால், கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய பருவநிலையோ.. விமான பய…
-
- 0 replies
- 1k views
-
-
ஜெர்மனிக்குப் பல முகங்கள் உண்டு - பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ மதத்துக்கு அடிகோலிய மார்ட்டின் லூதர், கம்யூனிசத் தந்தை கார்ல் மார்க்ஸ், தத்துவ மேதை நீட்ஸே, மாபெரும் தலைவர்கள் வில்லி பிராண்ட், கொன்ராட் அடினார்: இரண்டாம் உலகப் போரில் அகிலத்தையே மிரட்டிய ஹிட்லர், அறிவியல் ஆராய்ச்சியில் தனி முத்திரை பதித்த வானியல் மேதை கோபர்னிக்கஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் உட்பட்ட 104 நோபல் பரிசுக்காரர்கள்; மொசார்ட், பீத்தோவன் போன்ற அமர இசை அமைப்பாளர்கள், டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப், கார் ரேஸ் சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் , அடிடாஸ், ப்யூமா, மெர்சிடஸ் பென்ஸ், பாஷ், ஆடி, பேயர், மெர்க் போன்ற பாரம்பரியப் பன்னாட்டு நிறுவனங்கள் என பட்டியல் நீளும். இத்தனை பெருமைகள் கொண்ட ஜெர் மனிக்கு இந்திய அயல்நாட்ட…
-
- 12 replies
- 4.3k views
-
-
நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்துடன் இணைய ஜாம்பவான கூகுள், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அதி உயரத்தில் அமைக்கக்கூடிய 13 பலூன்களை கூகுள், இலங்கைக்கு வழங்கவுள்ளது. அதன்பின்னர், உலகிலகளாவிய ரீதியில் wifi இணைப்பைக் கொண்ட முதலாவது நாடாக இலங்கை மாறும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அவரது உத்தியோபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கதக்கது. http://www.jvpnews.com/srilanka/118392.html
-
- 0 replies
- 1.4k views
-
-
மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்! - 1சு.வெங்கடேசன்படங்கள்: ஸ்ரீராம் ஜனக், கே.ராஜசேகரன் ஒரு காட்சியை, கற்பனை செய்து பாருங்கள்... ஒரு வீட்டுக்குள் உட்கார்ந்து இரண்டு பெண்கள் தாயம் விளையாடுகிறார்கள். அவர்களில் ஒரு பெண், கழுத்தில் முத்துமணி மாலை அணிந்திருக்கிறாள். தூய வெண்ணிற முத்துக்களின் ஒளி, வீடு முழுவதும் சிதறியபடி இருக்கிறது. அது போதாது என, காதுகளில் பளிங்கால் ஆன பாம்படம் அணிந்திருக்கிறாள், அது முத்துமணி மாலையின் ஒளியையும் விஞ்சுகிறது. அவளோடு எதிரில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருப்பவளோ, தனது கழுத்தில் ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் மூலப்பொருளைக் கொண்டு செய்யப்படும் சூது பவளத்தால் ஆன (Carnelian) மணிமாலை அணிந்திருக்கிறாள். அதன் அழகு எல்லையற்றதாக இருக்கிறது. இருவ…
-
- 12 replies
- 13.5k views
-
-
பரபரப்பான நெடுஞ்சாலையில் நீங்கள் காரில் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது, திடீரென உங்கள் காரின் ரேடியோ சத்தமாக அலற ஆரம்பிக்கிறது. சரி, ஏதோ தொழில்நுட்பக் கோளாறு என்று நினைத்து சத்தத்தை குறைக்கிறீர்கள். உடனே, காரின் வைபர் காரணமே இல்லாமல் வேலை செய்ய தொடங்குகிறது. அதையும் போராடி நிறுத்துகிறீர்கள். ஐயோ.... ஏன்? இப்படி எல்லாம் நடக்கிறது என்று நீங்கள் உச்சகட்ட பதட்டத்தில் இருக்கும்போது, என்ஜின் செயலிழந்து கார், நடுரோட்டில் நின்றால் எப்படியிருக்கும்?இதெல்லாம் சாத்தியமா? என்று வியக்க வேண்டாம். சைபர்-செக்யூரிட்டி ஜாம்பவான்களான சார்லி மில்லரும், கிறிஸ் வலாசெக்கும் இது சாத்தியம்தான் என்று சொல்வது மட்டுமில்லாமல் அதை செய்தும் காட்டுகிறார்கள். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்தது ஃபியட் ந…
-
- 7 replies
- 845 views
-
-
அண்டவெளியில் அறிவுள்ள ஜீவராசிகள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக அடுத்த பத்தாண்டுகளில் 100 மில்லியன் டாலர்களை செலவழிக்கவுள்ளதாக பெருங்கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார். வேற்று கிரகப்பகுதியில் அறிவுள்ள ஜீவன்கள் உள்ளதா என கண்டுபிடிக்க முயற்சி முழு பால்வெளிக்கு அப்பாலிலுள்ள இதர பால்வெளி மண்டலங்களிலும் அறிவுள்ள ஜீவராசிகளைத் தேடும் முயற்சித் திட்டம் ரஷ்யக் பெருங்கோடீஸ்வரரான யூரி மில்நெரால் முன்னெடுக்கப்படவுள்ளது. வானொலி மற்றும் ஒளியியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்தக் கண்டுபிடிப்புக்கான முயற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான அறிமுக நிகழ்வு லண்டலிலுள்ள ராயல் சொசைட்டியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பங்குபெற்று உரையாற்றிய பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங், அண்டவெளியிலுள்ள வேற்ற…
-
- 0 replies
- 1.4k views
-
-
காரை வெயிலில் வைத்து சோப்பு போட்டு கழுவக் கூடாது. வெயிலால் சோப்பு உலர்ந்து கறையாகப் படிந்துவிடும். இதைப் போக்க காருக்கு வேக்ஸ் பாலிஷ் தர வேண்டியிருக்கும். கோடைக் காலத்தில் நீண்ட தூர பயணத்தின்போது கார் அதிக சூடேறிவிடும். இதனால் ரேடியேட்டர், கூலண்ட் ஆகியவற்றையும், அனைத்து ஹோஸ்களும் சரியாக செயல்படுகின்றனவா என சோதித்துக் கொள்ள வேண்டும். காரை வெயிலில் நிறுத்திவிட்டு பிறகு ஓட்டும் போது ஏசியை முழு வேகத்தில் செயல்படுத்துவதோடு, காரின் ஜன்னலை சிறிது நேரம் திறந்து வைக்க வேண்டும். அப்போதுதான் வெளி வெப்பமும், காரினுள் நிலவிய வெப்பமும் சீராகி, ஏசி குளிர்ச்சி விரைவில் கிடைக்கும். கோடைக் காலத்தில் கார் டயர்களின் காற்று விரைவில் வெளியாகும். இதனால் அடிக்கடி காற்றழுத்தத்தை சோதிக்க வேண்டு…
-
- 4 replies
- 4.6k views
-
-
விபத்தில் சிக்கியது கூகுளின் தானியங்கி கார்... முதல்முறையாக 3 பேருக்கு காயம்! நியூ யார்க்: ஆளில்லாமல் ஓடும் கூகுளின் தானியங்கி கார் அமெரிக்காவில் விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் காயமடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கார் ஆட்டோ மொபைல்தான் என்றாலும், அதனை இயக்க ஓட்டுநர் தேவை. ஆனால், கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காரை இயக்க ஓட்டுநர் தேவையில்லை. மின் சக்தியில் இயங்கும் இந்தக் கார் கூகுள் மேப் வழிகாட்டுதலின் படி பயணம் செய்கிறது. செல்லும் வழியில் எதன் மீதும் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க நவீன ரேடாரும், லேசர் சென்சாரும் இந்த காரில் உள்ளன. மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். சோதனை அடிப்படையில் 25 கார்கள் மட்டுமே தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 418 views
-
-
பருவநிலை மாற்றம் இன்னும் எத்தனை ஆண்டுகள்? மனிதன் வாழ முடியாத நிலையை நோக்கி நகரும் பூமி! தளவாய் சுந்தரம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை காலம். ஆனால், ஜூலை மாதம் ஆகியும் சென்னையில் வெயில் தகிக்கிறது. கோடை காலம் நீண்டுள்ளதுடன் வெப்பத்தின் அளவும் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலோ வழக்கத்துக்கு முன்பே தென்மேற்கு பருவமழைத் தொடங்கிவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் எப்போதையும்விட இந்த வருடம் அதிக மழை. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 700 கி.மீ.க்குள் எவ்வளவு வித்தியாசம்? தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுக்க இதுதான் நிலை. பருவநிலை தாறுமாறாகச் சீர்குலைந்து க…
-
- 0 replies
- 1.1k views
-
-
இறக்கைகள் கொண்டிருந்த மிகப்பெரிய டைனொசர் ஒன்றின் எஞ்சியுள்ள படிமங்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இறக்கைகளுடன் கூடிய டைனோசர் எப்படி இருந்திருக்கக்கூடும் என யூகித்து உருவாக்கப்பட்ட சித்திரம். கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் நீளத்துடன் ,மிக வேகமாக ஓடக்கூடிய திறனை கொண்டிருந்த இந்த வகை டைனொஸர்கள் விலங்குகளை உண்டு வாழ்ந்தவை. வடகிழக்குச் சீனாவில் எரிமலை ஒன்று திடீரென வெடித்ததன் காரணமாக, இந்த உயிரினம் அப்படியே புதையூண்டிருந்தது. வெலாசிரப்டர் இனத்திற்கு முன்னோடியாக இந்த டைனோசர் இருந்திருக்கலாம். இந்த டைனோசருக்கு ஜென்யுவான்லாங் என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். ஜின்ஜௌவிலிருந்த அருங்காட்சியகத்திற்கு இந்தப் படிமத்தை அளித்த நபரின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்…
-
- 0 replies
- 468 views
-
-
மதுரை: மதுரை அருகே உள்ள கீழடியில் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பழங்கால நகரத்தின் பகுதிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நகரம் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டதாகும். மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க... இது குறித்து தொல்லியல் துணை அகழ்வாராய்ச்சியாளர் வீரராகவன் கூறுகையில், “தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை நதி, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் வெள்ளிமலை அருகிலிருந்து உற்பத்தியாகி தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியே பாய்கிறது. தொல்லியல் வளமிக்க பகுதியாக விளங்கினாலும் கூட இதுகாறும் வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில் அகழாய்வு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. 2013-14ல் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் சுமார் 293 பல்வகை தொல்லியல…
-
- 0 replies
- 414 views
-
-
ஒரு ரூபாயில் செல்போன் சார்ஜ்: அறிவியல் கண்காட்சியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவர் விஜயராஜ்.! பொள்ளாச்சியை அடுத்துள்ள பொங்காளியூர் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் விஜயராஜ், ஒரு ரூபாய் நாணயம் செலுத்தி செல்போன் சார்ஜ் செய்யும் நவீன இயந்திரத்தை வடிவமைத்திருந்தார். ‘ஏற்கெனவே தான் தயாரித்த நீர் உந்து இயந்திரம் வேறொரு அறிவியல் கண்காட்சியில் ரொக்கப் பரிசு பெற்றதாகவும், அந்த பரிசுப் பணத்தைக் கொண்டு, செல்போன் சார்ஜ் செய்யும் இயந்திரத்தை வடிவமைத்ததாகவும், விரைவில் பெரிய அளவில் இந்த இயந்திரத்தை வடிவமைக்க உள்ளதாகவும் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மாணவனின் திறமையை மனதார வாழ்த்துங்கள்.
-
- 2 replies
- 522 views
-
-
பதிவு செய்த நாள் 28 ஜன 2015 00:00 காரைக்குடி:குறைந்த செலவில் உப்பு தண்ணீரை நன்னீராக மாற்றும் நீர்மேலாண்மை குறித்த வடிவமைப்பை காரைக்குடி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லுாரி மாணவிகள் உருவாக்கியுள்ளனர். இந்த வடிவமைப்பு மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. தற்போது அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைப்பது சூரிய ஒளி மட்டுமே. சூரிய ஒளி ஆற்றலை கொண்டு, நீரை ஆவியாதல் முறையில் நன்னீராக மாற்ற முடியும் என்பதை கண்டு பிடித்துள்ளனர், காரைக்குடி உமையாள் ராமனாதன் கல்லுாரி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவு மாணவி கள் கீர்த்திகா, கார்த்திகா, தேவிமுத்து. அவர்கள் கூறியதாவது:எங்களுடைய கண்டுபிடிப்புக்கு 'டிசாலினேஷன் ஆப் சாலிட் வாட்டர் டூ டிரிங்கிங் வாட்டர்' என பெயர். அதாவது உப்பு நீரை நன்…
-
- 0 replies
- 507 views
-