Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. காரை வெயிலில் வைத்து சோப்பு போட்டு கழுவக் கூடாது. வெயிலால் சோப்பு உலர்ந்து கறையாகப் படிந்துவிடும். இதைப் போக்க காருக்கு வேக்ஸ் பாலிஷ் தர வேண்டியிருக்கும். கோடைக் காலத்தில் நீண்ட தூர பயணத்தின்போது கார் அதிக சூடேறிவிடும். இதனால் ரேடியேட்டர், கூலண்ட் ஆகியவற்றையும், அனைத்து ஹோஸ்களும் சரியாக செயல்படுகின்றனவா என சோதித்துக் கொள்ள வேண்டும். காரை வெயிலில் நிறுத்திவிட்டு பிறகு ஓட்டும் போது ஏசியை முழு வேகத்தில் செயல்படுத்துவதோடு, காரின் ஜன்னலை சிறிது நேரம் திறந்து வைக்க வேண்டும். அப்போதுதான் வெளி வெப்பமும், காரினுள் நிலவிய வெப்பமும் சீராகி, ஏசி குளிர்ச்சி விரைவில் கிடைக்கும். கோடைக் காலத்தில் கார் டயர்களின் காற்று விரைவில் வெளியாகும். இதனால் அடிக்கடி காற்றழுத்தத்தை சோதிக்க வேண்டு…

  2. விபத்தில் சிக்கியது கூகுளின் தானியங்கி கார்... முதல்முறையாக 3 பேருக்கு காயம்! நியூ யார்க்: ஆளில்லாமல் ஓடும் கூகுளின் தானியங்கி கார் அமெரிக்காவில் விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் காயமடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கார் ஆட்டோ மொபைல்தான் என்றாலும், அதனை இயக்க ஓட்டுநர் தேவை. ஆனால், கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காரை இயக்க ஓட்டுநர் தேவையில்லை. மின் சக்தியில் இயங்கும் இந்தக் கார் கூகுள் மேப் வழிகாட்டுதலின் படி பயணம் செய்கிறது. செல்லும் வழியில் எதன் மீதும் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க நவீன ரேடாரும், லேசர் சென்சாரும் இந்த காரில் உள்ளன. மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். சோதனை அடிப்படையில் 25 கார்கள் மட்டுமே தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன…

  3. பருவநிலை மாற்றம் இன்னும் எத்தனை ஆண்டுகள்? மனிதன் வாழ முடியாத நிலையை நோக்கி நகரும் பூமி! தளவாய் சுந்தரம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை காலம். ஆனால், ஜூலை மாதம் ஆகியும் சென்னையில் வெயில் தகிக்கிறது. கோடை காலம் நீண்டுள்ளதுடன் வெப்பத்தின் அளவும் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலோ வழக்கத்துக்கு முன்பே தென்மேற்கு பருவமழைத் தொடங்கிவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் எப்போதையும்விட இந்த வருடம் அதிக மழை. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 700 கி.மீ.க்குள் எவ்வளவு வித்தியாசம்? தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுக்க இதுதான் நிலை. பருவநிலை தாறுமாறாகச் சீர்குலைந்து க…

  4. இறக்கைகள் கொண்டிருந்த மிகப்பெரிய டைனொசர் ஒன்றின் எஞ்சியுள்ள படிமங்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இறக்கைகளுடன் கூடிய டைனோசர் எப்படி இருந்திருக்கக்கூடும் என யூகித்து உருவாக்கப்பட்ட சித்திரம். கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் நீளத்துடன் ,மிக வேகமாக ஓடக்கூடிய திறனை கொண்டிருந்த இந்த வகை டைனொஸர்கள் விலங்குகளை உண்டு வாழ்ந்தவை. வடகிழக்குச் சீனாவில் எரிமலை ஒன்று திடீரென வெடித்ததன் காரணமாக, இந்த உயிரினம் அப்படியே புதையூண்டிருந்தது. வெலாசிரப்டர் இனத்திற்கு முன்னோடியாக இந்த டைனோசர் இருந்திருக்கலாம். இந்த டைனோசருக்கு ஜென்யுவான்லாங் என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். ஜின்ஜௌவிலிருந்த அருங்காட்சியகத்திற்கு இந்தப் படிமத்தை அளித்த நபரின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்…

    • 0 replies
    • 472 views
  5. மதுரை: மதுரை அருகே உள்ள கீழடியில் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பழங்கால நகரத்தின் பகுதிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நகரம் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டதாகும். மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க... இது குறித்து தொல்லியல் துணை அகழ்வாராய்ச்சியாளர் வீரராகவன் கூறுகையில், “தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை நதி, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் வெள்ளிமலை அருகிலிருந்து உற்பத்தியாகி தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியே பாய்கிறது. தொல்லியல் வளமிக்க பகுதியாக விளங்கினாலும் கூட இதுகாறும் வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில் அகழாய்வு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. 2013-14ல் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் சுமார் 293 பல்வகை தொல்லியல…

  6. ஒரு ரூபாயில் செல்போன் சார்ஜ்: அறிவியல் கண்காட்சியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவர் விஜயராஜ்.!  பொள்ளாச்சியை அடுத்துள்ள பொங்காளியூர் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் விஜயராஜ், ஒரு ரூபாய் நாணயம் செலுத்தி செல்போன் சார்ஜ் செய்யும் நவீன இயந்திரத்தை வடிவமைத்திருந்தார். ‘ஏற்கெனவே தான் தயாரித்த நீர் உந்து இயந்திரம் வேறொரு அறிவியல் கண்காட்சியில் ரொக்கப் பரிசு பெற்றதாகவும், அந்த பரிசுப் பணத்தைக் கொண்டு, செல்போன் சார்ஜ் செய்யும் இயந்திரத்தை வடிவமைத்ததாகவும், விரைவில் பெரிய அளவில் இந்த இயந்திரத்தை வடிவமைக்க உள்ளதாகவும் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மாணவனின் திறமையை மனதார வாழ்த்துங்கள்.

    • 2 replies
    • 527 views
  7. பதிவு செய்த நாள் 28 ஜன 2015 00:00 காரைக்குடி:குறைந்த செலவில் உப்பு தண்ணீரை நன்னீராக மாற்றும் நீர்மேலாண்மை குறித்த வடிவமைப்பை காரைக்குடி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லுாரி மாணவிகள் உருவாக்கியுள்ளனர். இந்த வடிவமைப்பு மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. தற்போது அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைப்பது சூரிய ஒளி மட்டுமே. சூரிய ஒளி ஆற்றலை கொண்டு, நீரை ஆவியாதல் முறையில் நன்னீராக மாற்ற முடியும் என்பதை கண்டு பிடித்துள்ளனர், காரைக்குடி உமையாள் ராமனாதன் கல்லுாரி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவு மாணவி கள் கீர்த்திகா, கார்த்திகா, தேவிமுத்து. அவர்கள் கூறியதாவது:எங்களுடைய கண்டுபிடிப்புக்கு 'டிசாலினேஷன் ஆப் சாலிட் வாட்டர் டூ டிரிங்கிங் வாட்டர்' என பெயர். அதாவது உப்பு நீரை நன்…

    • 0 replies
    • 512 views
  8. பத்து ஆண்டுகளில் ஐநூறு கோடி கிலோமீட்டர்கள் பயணித்த நாஸா விண்கலம் புளூட்டோ குட்டிக் கிரகத்தை கிட்டத்தில் வைத்து படம்பிடித்துள்ளது. அந்தப் படங்கள் விரைவில் பூமியை வந்தடையும். http://www.bbc.com/tamil/science/2015/07/150714_plutovideo

    • 7 replies
    • 2.1k views
  9. 1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில் போக்குவரத்து சோதனை திட்டம் அமெரிக்காவில் ஆரம்பமாகி உள்ளது. புல்லட் ரெயில், மெட்ரோ ரெயில், மோனோ ரெயில் என்று சுரங்கப் பாதையிலும், ஆகாயத்திலுமாக உலக மக்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக ஜப்பானிலும், சீனாவிலும் சுமார் 500 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ரெயில்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் ராட்சத குழாய்களுக்குள் இப்போதுள்ளதைவிட பல மடங்கு வேகத்தில் ரெயில்கள் பயணிக்கும். ஏற்கனவே பல்வேறு அதிவேக பயணத் தொழில்நுட்பங்கள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. தற்போது ‘ஹைபர்லூப்’ எனும் நவீன போக்குவரத்து நுட்பம் சாத்தியம் என்று சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இது உருக்கு குழாய்களுக்குள், கூண்டுகளைக் கொண்டு ‘லிப்ட்’ போல வ…

    • 0 replies
    • 1k views
  10. மே 22, 1822-ம் ஆண்டு. ஜெர்மனி. குளிர்காலம் சென்று வசந்தம் பிறந்தது. மெக்லென்பேர்க் பிரதேசத்தில் இருக்கும் போத்மேர் எஸ்டேட் முதலாளி எப்போதும்போல பறவைகளைச் சுடும் விளையாட்டில் அன்றைய ஜமீன்தார்கள் போல ஈடுபட்டுவந்தார். அவரது தலைக்கு மேலே வசந்த காலத்தில் பறந்தது செங்கால் நாரை (White Stork). எடுத்தார் தனது துப்பாக்கியை, சரியாகக் குறிவைத்தார். டுமீல்... கீழே விழுந்தது நாரை. இரண்டாம் வேட்டை நாரையின் அருகே விரைந்தனர் அவரும் அவரது கூட்டாளிகளும். குண்டடி பட்டு இறக்கும் தறுவாயில் கிடந்த நாரையைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்தார்கள், திகைப்பில் ஒரு கணம் விறைத்துப்போனார்கள். ஏற்கெனவே அந்த நாரை வேட்டையாடப்பட்டிருந்தது. அதன் கழுத்தில் 80 சென்டிமீட்டர் நீளமுள்ள இரும்பு முனையுடன் ஈட்டி பா…

    • 0 replies
    • 772 views
  11. இன்னும் 15 ஆண்டுகளில் ‘சிறிய உறைபனி காலம் ’ - விஞ்ஞானிகள் கணிப்பு! 15 ஆண்டுகளில், அதாவது 2030-ம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும், குறிப்பாக வட துருவ நாடுகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சூரியனை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ‘Little Ice Age’ என அழைக்கப்படும் இந்த சூழலில் உலகின் பல ஏரிகளும், ஆறுகளும் ஐஸ்கட்டியாக உறைந்துவிடும் என சொல்கிறார்கள். சூரியனின் சுழற்சி, இயக்கம் போன்றவற்றை ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். 'Mini ice age' coming in next fifteen years, new model of the Sun's cycle shows There will be another Little Ice Age in 2030, according to solar scientists – the last one was 300 years ago …

  12. சிலர் மட்டும் என்றும் இளமையாக இருப்பது ஏன்? ஒரே ஆண்டில் பிறந்திருந்தாலும் ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு வேகத்தில் முதுமையடைகிறதுஒரே ஆண்டில் பிறந்தாலும், வயதாவதன் வேகம் நபருக்கு நபர் மாறுபடும் என்று Proceedings of the National Academy of Sciences, என்கிற மருத்துவ ஆய்வு சஞ்சிகையில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொருவரின் எடை, சிறுநீரக செயற்பாடு, ஈறுகளின் ஆரோக்கியம் ஆகியவை கண்காணிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன. 38 வயதேயான சிலர், உயிரியல் ரீதியாக கிட்டத்தட்ட 60 வயதினரைப் போல முதுமையடைந்திருந்தனர். வயது முதிர்வதன் வேகம் எப்படி அதிகரிக்கிறது என்பதைக் கண்டறிவதுதான் தமது அடுத்த கட்ட நடவடிக்கை என இந்த ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நியூஸிலாந…

  13. தெரிந்ததை எழுதுங்கள் ( அறிவியல் அறிமுக தொடர் ) / சீனிவாசன் ( லண்டன் ) மலைகள் இதழில் வெகு நாளாக ஒரு அறிவியல் தொடர் எழுத வேண்டும் என நண்பர் சீனிவாசனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இங்கே எளிமையாக தற்கால நடைமுறை அறிவியல் விஷயங்களை அனைவருக்கும் பயன்படுகிற வகையிலும் அறிவியல் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவும் இருக்கிறார் இவர் தனியாக கணிணி துறை சார்ந்த எளிமையான தமிழில் கற்றுக்கொள்கிற வகையில் சில கணிணி மொழிகளைப் பற்றிய பாடங்களை எழுதியிருக்கிறார் ( கணிணி பற்றி தமிழில் அறிய – http://kaniyam.com ) இன்னும் நிறைய அறிவியல் விஷயங்களுக்கு தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வமுடையவர் மலைகள் இதழில் ஒரு அறிவியல் தொடர் எழுத வேண்டும் அது தற்போதைய தொழில் நுட்பங்களைப் பற்றிய ஒரு அறிமு…

  14. சென்ற வாரம் நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் ஒரு கட்டுரை வந்திருந்தது. வேலை செய்யும் இடங்களில் நிலவும் பகை, எரிச்சல், கடுமை, மரியாதையின்மை, மன அழுத்தம் என்று பலவித எதிர்மறை மனோபாவங்கள் பற்றியும் அவை நம் உடல் நிலையை எப்படி பாதிக்கின்றன என்பது பற்றியும் அந்தக் கட்டுரை விரிவாக எழுதப்பட்டிருந்தது. கட்டுரை எழுதியவரின் அப்பா ஒரு ஆஸ்பத்திரியில் மூக்கிலும் வாயிலும் டியூப்கள் பொருத்தப்பட்டு படுக்கையில் இருந்ததைப் பார்த்து மனம் நொந்து அவர் எழுதுகிறார். “எப்படி கம்பீரமாக, சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த என் அப்பா இந்த நிலைக்கு தள்ளப்பட்டார்? நிச்சயமாக அலுவலகத்தில் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம்தான் காரணம் என்று எனக்குப் புரிகிறது. இப்போதெல்லாம் வேலை செய்யும் இடங்களில் நிலவும் போட்ட…

  15. எந்த வயது விந்தணுக்கள் குழந்தை பெற ஏற்றவை? 18 வயதில் விந்தணுக்கள் ஆரோக்கியமானவையாக இருப்பதால் அவற்றைச் சேமிக்க பரிந்துரைஆண்களின் இளம்பருவ விந்தணுக்களில் மரபுவழி நோய்க்கூறுகள் பெருமளவு இருக்காது என்பதால் ஆண்களின் இளவயது விந்தணுக்களை சேமித்து உறைநிலையில் பாதுகாத்து, அதைப் பயன்படுத்தி பிற்காலத்தில் ஆரோக்கியமான பிள்ளைகள் பெறலாம் என்கிற யோசனை ஒன்று பிரிட்டனில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் இருக்கும் 18 வயது ஆண்கள் அனைவரின் விந்தணுக்களும் உறைநிலையில் பாதுகாக்கப்பட்டு, அந்த விந்தணுக்கணைப்பயன்படுத்தி அவர்கள் பிற்காலத்தில் குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று டண்டீயில் அபெர்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கெவின் ஸ்மித் பரிந்துரை செய்திருக்கிறார். வயதான ஆண்களின்…

  16. உலக அளவில் நிலத்தடிநீர் வேகமாக வற்றிவருகிறது. வெவ்வேறு நாடுகளில் பரந்து விரிந்துள்ள பகுதிகளில் மிகப் பெரியவை என்று 37 நிலத்தடிநீர் இருப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மிகப் பெரிய கடல் என்று கற்பனை செய்யக்கூடிய அளவுக்கு நீர்வளம் பெற்றிருந்த இவற்றில் சரிபாதிக்கும் மேல் வேகமாக உறிஞ்சப்பட்டதால், மிக மோசமான அளவில் குறைந்துவிட்டன. மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களை இனி 100% கடைப்பிடித்தால்கூட இந்த நிலத்தடிநீர்த்தேக்கங்கள் இனி நிரம்புவது சந்தேகம்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கிரேஸ் என்ற செயற்கைக்கோள் கட்டமைப்பைப் பயன்படுத்தி, புவியைப் புகைப்படங்கள் எடுத்ததுடன் பல்வேறு நீர்ப்பயன்பாட்டுத் தரவுகளையும் பெற்று ஆராய்ந்து இந்தத் தகவல்களை வெளியி…

    • 0 replies
    • 538 views
  17. சென்னை: இந்தியாவில் சில நாட்களாக மேற்கு வானில், சூரியன் மறைந்ததும் இரண்டு நட்சத்திரங்கள் அருகருகே மின்னிக் கொண்டிருப்பதை காணலாம்.. உண்மையில் அவை நட்சத்திரங்கள் அல்ல. நம் சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் மற்றும் வெள்ளி கிரகங்கள் தான் அவை. இவை பத்து அல்லது 15 வருடங்களுக்கு ஒரு முறை நேர் கோட்டில் வரும்போது அருகருகே இருப்பது போல் தோன்றுகின்றன. பார்ப்பதற்கு அருகருகே இருப்பது போல் தோன்றினாலும், இவை இரண்டுக்கும் இடையே உள்ள தூரம் மிக அதிகம். சூரியனில் இருந்து வியாழன்( Jupiter) 80 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளி ( Venus) கிரகம் 11 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது, பூமி, வெள்ளி, வியாழன் (Jupiter and Venus ) இவை மூன்றும் கிட்டதட்ட நேர்கோட்டில் அமைவதால், வியாழனும…

    • 0 replies
    • 432 views
  18. ஒரே ஒரு உயிரினத்தால்தான், புவியில் வாழும் மற்றெல்லா உயிரினங்களும் அழிவை எதிர்நோக்கியிருக்கின்றன: மனித இனம்! 6.5 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களால் ஆறாவது பெரும் பேரழிவு விரைவில் நடக்க இருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். புவியில் உயிர் வாழ்க்கைக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. புவியின் உயிரியல் பொக்கிஷங்கள் எவ்வளவு சீக்கிரம் துடைத்தெறியப்படும், ஆறாவது உயிர்ப் பேரழிவு (Sixth mass extinction) எப்போது ஏற்படும் என்பதையெல்லாம் மெக்ஸிகோவின் ‘தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழக’த்தைச் சேர்ந்த ஜெரார்தோ கபாயோஸும் அவரது சகாக்களும் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆய்வுக்கட்டுரையில் கணக்கிட்டிருக்கிறார்கள். உலகில் கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன. எளிதில் பார்க்க முடி…

    • 0 replies
    • 403 views
  19. 'எதிர்கால செயலிகள் நம்மைத்தேடி வரும்..!' - செல்போன் பிதாமகரின் பேட்டி ஸ்மார்ட்போன்கள் என்னவெல்லாம் செய்கின்றன என்று வியப்பாக இருக்கிறதா? விரல் நுனியில் இணையம், ஒவ்வொரு தேவைக்கும் நூற்றுக்கணக்கில் செயலிகள் என அவரவர் உள்ளங்கைகளில் உலகை கொண்டு வந்திருக்கின்றனதான். ஆனால் இவை எல்லாம் ஒன்றுமே இல்லை, ஸ்மார்ட்போன்கள் இனி மேல்தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கின்றன என்று சொன்னால் எப்படி இருக்கும்? மார்டின் கூப்பர் அப்படிதான் நினைக்கிறார். ஸ்மார்ட்போன்களின் முழுமையான ஆற்றலை நாம் உணர இன்னும் இரண்டு தலைமுறை ஆகும் என்றும் சொல்லி அசர வைக்கிறார் கூப்பர். என்ன நம்ப முடியாமல் இருக்கிறதா? கூப்பர் சொல்வதை பார்ப்பதற்கு முன்னர் அவர் யார் என்று தெரிந்து கொண்டு விடலாம். கூப்பர் வேறு யாருமில்லை, ம…

  20. சூரியனுக்கு அருகில் நெருங்கிய நாசா: மக்களை பிரமிப்பில் ஆழ்த்தும் புகைப்படங்கள் (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 06:34.19 மு.ப GMT ] சூரியனை மிக அருகில் படம்பிடித்து அதன் புகைப்படங்களை நாசா ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு, அட்லஸ் 5 ராக்கெட் மூலம் சோலார் டைனமிக்ஸ்(Solar Dynamics) தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த தொலைநோக்கி அதிநவீன கமெராக்கள் மூலம் பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. இந்நிலையில் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, சூரியனை பல்வேறு கோணத்தில் படம்பிடித்து அனுப்பியுள்ளன. சூரியனில் நடைபெறும் நிகழ்வுகள், கொந்தளிப்புகள் போன்றவற்றை இந்த புகைப்படங்கள் மக்களுக்கு எடுத்துரைக்கின்றன. மேலும், இந்த தொலைநோக்கி,…

    • 0 replies
    • 499 views
  21. செவ்வாய் கிரகத்தில் பிரமிடு: வீடியோ வெளியிட்ட நாசா (வீடியோ இணைப்பு)[ புதன்கிழமை, 24 யூன் 2015, 02:37.52 பி.ப GMT ] செவ்வாய் கிரகத்தில் பிரமிடு இருப்பது போன்ற புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீற்றர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் 7ஆம் திகதி, கியூரியாசிட்டி அனுப்பிய புகைப்படம் ஒன்றில் பாறைகளுக்கு இடையே எகிப்தில் இருப்பதை போன்ற பிரமிடு போன்ற தோற்றமுடைய ஒரு அமைப்பு இருந்துள்ளது. இது குறித்து வேற்று கிரக உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்துவரு…

    • 0 replies
    • 330 views
  22. பிரபஞ்சம் குறித்து மனிதனுக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. பிரபஞ்ச ரகசியங்கள் குறித்து தெரிந்து கொள்வதில் மனிதன் எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறான்.100 வருடங்களில் மனிதன் பிரபஞ்சம் குறித்து எவ்வளவோ தெரிந்து வைத்து உள்ளான் .அதற்கு தகுந்தாற்போல் நவீன கருவிகளும் கண்டுபிடிக்கபட்டு மேலும் பிரபஞ்சம் குறித்தும் அதில் நிகழும் மாறுதல் குறித்தும் பூமி மற்றும் கிரகங்கள் குறித்து மனிதன் அறிந்து வருகிறான். இருந்தாலும் இன்னும் பிரபஞ்சம் குறித்து முற்றிலுமாக மனிதன் அறிந்து கொள்ளவில்லை. இன்னும் நமது விண்வெளியில் ஏகபட்ட மர்மங்கள் உள்ளன.நாசா அதி நவீன கருவிகளை கொண்டு பூமி மற்றும் மற்ற கிரகங்களின் அமைப்புகளை ஆராய்ந்து வருகிறது.அவ்வாறு பூமி மற்றும் கிரகங்களில் இருந்து வரும் மர்ம ஒலிகளை மின்கா…

    • 0 replies
    • 716 views
  23. கனடா யு.எஸ் உட்பட்ட துருவமண்டலப்பகுதிகளில் திங்கள்கிழமை இரவு வானத்தில் சிவந்த மற்றும் பச்சை நிற நீண்ட குறுகிய கொடி போன்ற இயற்கை மின் நிகழ்வு பரவலாக ஏற்பட்டது.உலகின் வடகிழக்கு மற்றும் வடக்கு சமவெளிகளில் தெளிவான வானில் தோன்றிய இந்த பிரகாசமான வானியல் நிகழ்வுகளை அப்பகுதி பூராகவும் உள்ள மக்கள் கண்டுகளித்துள்ளனர்.கனடாவின் யெலோநைவ், வடமேற்கு பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் இந்த வானியல் நிகழ்வுகளை காணக்கூடியதாக இருந்துள்ளது.மிகவும் திகைப்பூட்ட கூடிய காட்சிகள் யு.எஸ் மற்றும் கனடா எல்லை பகுதிகளிற்கு அண்மையில் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.இந்த வளிமண்டல நிகழ்வு பிணையப்பட்ட திரைச்சீலைகள் அல்லது நீண்ட குறுகிய தோற்றத்தில் பச்சை சிவப்பு அல்லது மஞ்சள் நிறங்களில் துருவபகுதிகளில் வான் ம…

    • 0 replies
    • 472 views
  24. Started by Knowthyself,

    தமிழனின் வரலாறு விருந்தினர் பக்கம் | கடல் ஆராச்சியாளர் | ஒரிஸா பாலு | ஆனி 23, 2015 | SunTv www.youtube.com/watch?v=hghKrleVoQk&list=PL6J49nu506tgE36tmIdQlWG_lHXDuS0P_&index=2 https://www.youtube.com/playlist?list=PL6J49nu506tgE36tmIdQlWG_lHXDuS0P_ உனை நீ அறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.