அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
உலகம் முழுவதும் இப்போது தேன்கூடுகளின் எண்ணிக்கை வெகு வேகமாகக் குறைந்துவருகிறது. தேனீக்களின் எண்ணிக்கையும் குறைகிறது. ஆண்டுதோறும் தேன்கூடுகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அழிகிறது. தேனீக்கள், மலரிலிருந்து தேனைத் திரட்டி மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கையினால்தான் தாவரங்கள் பெருகுகின்றன. இதனாலேயே விவசாயிகள், தேனீயை விரும்புவோர், தேனீயை வளர்ப்போர் என்று அனைவரும் அதைச் சமுதாயத்துக்கு நன்மை தரும் பூச்சியினமாகப் பார்க்கின்றனர். நெருக்கடியான தருணங்களில்தான் நாம் சில பாடங் களைப் படிக்கிறோம். இப்போதைய மனித சமூகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும் கொடிய ரசாயனங்களின் தீமைகளை அறியவும், அழிவிலிருந்து காத்துக்கொள்ளவும் தேனடை களின் அழிவு நமக்கு நல்லதொரு பாடமா…
-
- 1 reply
- 502 views
-
-
தமிழில் மருத்துவ நூல்கள் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியம் பலவகைப்படும். அவை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தம் என விரிவடைந்து இலக்கிய வகையின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகும். காலத்துக்கு ஏற்ப கருத்துகள் வளர்ந்து கொண்டே வருவதைப் போல இலக்கிய வளர்ச்சியும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. கலை இலக்கியம் இலக்கியம் கலை என்னும் கோட்பாட்டினை உள்ளடக்கியது. தமிழ்ப் புலமை மிக்கோர் நெஞ்சில் இடம் புகுந்த கலை, வடிவ நிலையை அடைந்து கைத்தொழில் கைவினைத் திறத்தினால் உருவாகும் கட்டிடக் கலை போன்ற பயன் கலைகளும், புலன்களுக்கும் மனத்திற்கும் இன்பத்தைத் தருகின்ற சிற்பம், ஓவியம் போன்ற இன்பக் கலைகளும், மாந்தர் தம் உள்ளங்களில் சுவையுணர்வை…
-
- 0 replies
- 14.5k views
-
-
பால்வெளி மண்டலத்தின் மையத்தில் இருக்கும் ராட்சத கருந்துளை (Black hole) இனம்புரியாத அதி-ஆற்றல் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்து அனுப்புவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு மேல் ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டால், நியூட்ரினோக்கள் உற்பத்தியை கருந்துளையக் காரணமாக்கும் முதல் கண்டுபிடிப்பு என்று கூறமுடியும். நியூட்ரினோக்கள் என்பது மிகமிகச் சிறிய துகள்கள் ஆகும். இது மின்னூட்டம் இல்லாதது. மேலும் புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான்களுடன் மிகவும் பலவீனமாக ஊடாடும் துகள்கள் ஆகும். மின்னூட்ட துகள்கள் அல்லது ஒளி போன்று அல்லாமல், நியூட்ரினோக்கள் அதன் அண்டவெளியின் அடியாழ ஆதாரங்களிலிருந்தே உருவாகும். மேலும், பிரபஞ்சம் முழுதும் அது பயணிக்கக் கூடியது. இடையில…
-
- 0 replies
- 926 views
-
-
ஒரு வாரமாக மழை கொட்டித் தீர்க்கிறது. மழையில் நனையாமல் இருக்க குடை, ஷவர் கேப், ரெயின் கோட்டு என எடுத்துக்கொண்டு வெளியே கிளம்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ரெயின் கோட் போட்டால் பார்க்கவே பயங்கரமாக இருக்கும். குடை பிடித்தபடி இரு சக்கர வாகனங்களை ஓட்ட முடியாது. நடந்து சென்றால்கூடப் பேருந்து ஏறி இறங்கும்போது குடையை விரித்து, மடக்குவதற்குள் நனைந்துவிடுவோம். இவை எல்லாவற்றிற்கும் ஓர் எளிய தீர்வைக் கண்டு பிடித்திருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் குழு. சீனாவில் இருக்கும் நான்ஜிங்க் பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர்கள் புரட்சிகரமான ஒரு குடையை உருவாக்கியுள்ளார்கள். குடையின் முக்கிய பாகம் என்ன? அரை வட்டத்தில…
-
- 0 replies
- 775 views
-
-
மாலை மணி ஐந்து. கடிகாரத்தை பார்த்து மோகன் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் இவ்வளவு இருக்கின்றதே என்ற மலைப்பில் அன்றைய தினமும் தாமதமாக தான் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றான். வேலை நேரத்துக்குள் செய்து முடிக்கவேண்டிய பணிகள் எவ்வாறு வேலை நேரத்தையும் தாண்டி முடிக்கப்படாமல் மீதம் இருக்கின்றன என்ற ஐயம் மோகன் மனதில் மலைப்பை ஏற்படுத்தியது. பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் கூறியதை போல நேரத்தை வீணாக்கினால் வாழ்க்கைக்கு அர்த்த மில்லை, வாழ்வின் அடிப்படையே நேரத்தினால் நிர்ணயிக்கப்படுகின்றது என்ற சொற்கள் மனதில் அலைமோதியது. இருப்பதோ 24 மணி நேரம். இதில் எதை செய்வது? எதை விடுவது? இருக்கும் 24 மணி நேரத்தில் வேலைகளை தள்ளிப் போட்டாலோ, முன்னுரிமைகளை மாற்றி வேலைகளை செய்தாலோ நிகழ்வத…
-
- 0 replies
- 697 views
-
-
எதிர்காலத்தில் பெற்றோலிய, நீர் உற்பத்திகளின் தேவைகளை இயற்கையில் இருந்து இவசமாகக் கிடைக்கும் சூரிய ஒளி, காற்று, நீரலைகள் போன்றவதை தான் தீர்க்கப் போகின்றன. அப்படியான சூழலில் எம் மண்ணில் தாரளமாகக் கிடைக்கும் சூரிய ஒளியால் கிடைக்கும் பலன்களை நம்மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதால் சூரியகலம் பற்றிய அறிவினைப் பகிரும்படி இங்கே கேட்கின்றேன். முக்கியமாக எனக்கும் சூரியகலம் பற்றிய தேடல் இருக்கின்றது. ஆனால் இணையங்களில் எனக்குப் போதுமான வடிவில் கிடைக்கவில்லை. சூரிய ஒளியின் தூண்டுதலால் ஒருபக்கம் நேர், மறுபக்கம் எதிர் மின்னணுக்கள் கிடைக்கின்றன என்ற அடிப்படை அறிவு மட்டும் தான் என்னில் உள்ளது. சூரிய ஒளியை நாம் பாவிக்கின்றபோது, எதிர்காலங்களில் ஊர்ச்சங்கங்களின் வளர்ச்சியால் நம் மக்களி…
-
- 6 replies
- 1.1k views
-
-
குதிரை சாணத்தில் வளரும் காளானை பக்டீரியாக்கள் சிலவற்றை அழிப்பதற்கு மருந்தாக, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகளாவிய ரீதியில் பலரின்; மரணத்துக்கு காரணமான பக்டீரியாக்களை அழிப்பதற்காக புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டுமென, பல விஞ்ஞானிகள் தமது ஆயுள் காலத்தை ஆய்வுக் கூடத்தில் செலவளித்துள்ளமை நாம் அறிந்ததே. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பக்டீரியாக்களை அழிப்பதற்கு சிறந்த மருந்தாக குதிரை சாணத்தில் வளரும் காளானை சுவிட்ஸர்லாந்திலுள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 'இது அருவருக்கத்தக்க விடயம் என்றாலும் அந்த காளான் மருந்தாகவே கருதப்படுகின்றது. இது மற்றைய காளான்களை விட வித்தியாசமாகவும் கருஞ்சாம்பல் நிறத்தையும் கொண்டிருக்கும். இந்த சாம்பல் காளானானது …
-
- 2 replies
- 835 views
-
-
மூளை எவ்வாறு சுவையை உணர்கிறது என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் இடையே நெடுங்காலமாக இருந்துவந்த ஓரு விவாதத்திற்கு தீர்வை எட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர் நம்புகின்றனர். ஒவ்வொரு சுவைக்கும் மூளையில் சிறப்பு நியூரான்கள் உள்ளனவாம்உப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு உரைப்பான உமாமி சுவை ஆகிய ஐந்து வகையான சுவைகளுக்கும் என தனித்தனியான விசேட நியூரான்கள் (உணர்வு உயிரணுக்கள்) மூளையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வெவ்வேறு சுவைகொண்ட உணவுகளை சுண்டெலிகளுக்கு கொடுக்கும்போது அவற்றின் மூளையில் ஒவ்வொரு நியூரானிலும் ஏற்படுகின்ற மாற்றத்தை அவதானித்து கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். உணவு நாளுக்கு நாள் சுவையில்லாமல் போவதாக உணரும் வய…
-
- 0 replies
- 406 views
-
-
பொதுமக்கள் பயணத்திற்கு பாதுகாப்பான வகையில் வடிவமைக்கப்பட்ட இ-ரிக்சா டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து மத்திய மந்திரி கட்காரி கூறும்போது, ‘‘இந்த ஆட்டோக்கள் அறிமுகம் மூலம் மனிதர்களே மனிதர்களை இழுக்கும் என்ற நிலைமை முற்றிலும் மாறும். மேலும், இதனால் கைகளால் ரிக்சாக்களை இழுத்து தொழில் நடத்தியவர்கள் பயன்அடைவார்கள்’’ என்றார். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆட்களால் இழுக்கப்படும் ரிக்சா பயணம் பெயர்போனதாக இருந்தது. இந்த ரிக்சா இழுக்கும் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக அனைத்து ரிக்சாக்களும் இ-ரிக்சாவாக மாற்றப்படும் என்று மத்தியில் ஆட்சி அமைத்த பா.ஜனதா கூறியது. இதன்படி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் சாதாரண ரிக்சாக்கள் அனைத்தும் இ- ரிக்…
-
- 0 replies
- 581 views
-
-
'ஆப்ஸ்' தயாரித்து 'அள்ளு'கிறோம்! ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களை உருவாக்கும் விருதுநகரைச் சேர்ந்த தாரணி சண்முகராஜன்: சிறு வயது முதலே எனக்குப் படிப்பு மேல் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்குப் படிப்பதை எளிமைப்படுத்தணும். இதுக்கு, நம்மால் முடிந்த உதவியை செய்யணும்ன்னு யோசித்துக் கொண்டே இருந்தேன். சமீப காலமாக ஸ்மார்ட் போன் பிரபலமாக இருப்பதால், இதன் மூலம் ஏதாவது செய்யலாம் என, தோன்றியது. அந்த யோசனையில் உருவானது தான், இந்த அப்ளிகேஷன்கள் எல்லாம். இதுவரைக்கும், 13 அப்ளிகேஷன்களைத் தயார் செய்திருக்கோம்.எங்களின் அப்ளிகேஷன்கள் பெரும்பாலும், மாணவர்களை மையப்படுத்தித் தான் இருக்கும். குறிப்பாக, வங்கிப் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் நுழைவு…
-
- 0 replies
- 978 views
-
-
வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் அன்செஸ் இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது. ஒரு முப்பரிமாண படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் நமது மூளை அதனை ஒரே படமாக புரிந்துகொள்ளும். இவ்வாறாகத்தான் முப்பரிமாண படங்களை நாம் கிரகித்துக்கொள்கிறோம். ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளின் கண்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காத சூழ்நிலையில், முப்பரிமாணப் படங்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு அப்படங்களை கிரகித்துக்கொள்ள அதிக சிரமமாக இருக்கும். அதனால் அவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் பெரியவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என என அன்செஸ் வாதிடுகிறத…
-
- 0 replies
- 413 views
-
-
காந்திகிராமம்:பார்த்தீனிய செடிகளை அழிக்கும் 'மெக்சிக்கன்' வண்டுகள், காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தில் இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.இந்தியாவில் பார்த்தீனிய செடிகள் 100 லட்சம் எக்டேரில் பரவியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள், ரோடு, தண்டவாள ஓரங்கள், குடியிருப்புகளில் இந்த செடிகள் காணப்படுகின்றன. தோல் ஒவ்வாமை, ஆஸ்துமா, காய்ச்சல் போன்றவற்றை இவை ஏற்படுத்துகின்றன. பார்த்தீனிய செடிகளை அழிப்பது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. ஒரு செடி 25 ஆயிரம் விதைகளை உற்பத்தி செய்யும் என்பதால் எளிதாக எல்லா இடங்களில் வியாபித்துள்ளது. இவற்றை முழுமையாக அழிக்க 'மெக்சிக்கன்' வண்டுகள் பயன்படுமென மத்திய பிரதேசம் ஜபல்பூர் வேளாண் களைக்கொல்லி ஆராய்ச்சி நிலையத்தினர் கண்டுபிடித்து…
-
- 6 replies
- 866 views
-
-
ஊர்ந்து செல்லும் வண்ணங்கள் Nov 4, 2014 பலரும் பயத்துடனும் அருவருப்பாகவும் நினைக்கும் ஊர்ந்து செல்லும் உயிரினங்களால் பள்ளிப் பருவத்திலேயே ஈர்க்கப்பட்டவர் மா. ரமேஸ்வரன். ஒரு பக்கம் இந்திய வனப் பணி அலுவலராகும் முயற்சிகளுடன் மற்றொருபுறம் ஊர்வனவற்றைத் தேடுவது, அவற்றைப் படம் எடுப்பது, ஆராய்ந்து கட்டுரைகளை எழுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே முழு நேர வேலையாகக் கொண்டிருக்கிறார். இதற்காக www.rcind.in என்ற இணையதளத்தையும் உருவாக்கி வருகிறார். ஊர்ந்து செல்லும் உயிரினங்களைப் பற்றிய புரிதலை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் இவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளியே இல்லை எனலாம். தொடர்புக்கு: mrameshwaran@rcind.in கறையான் புற்றுப் பல்லி: இந்தப் பல்லிக்குப் பூச…
-
- 4 replies
- 6.4k views
-
-
சூரியப் புயலால் டிசம்பரில் 6 நாட்கள் பூமியே இருட்டாயிரும்.. நாசா கூறுவதாக சொல்லுவாங்க.. நம்பிராதீங்க (வீடியோ இணைப்பு) நியூயார்க்: மார்கழியில் கொட்டித்தீர்க்கும் பனி வேண்டுமானால் சூரியனின் கதிர்களைக் குறைப்பதுபோன்ற ஒரு உணர்வு உங்களுக்கு ஏற்படலாம். ஆனால், ஃபேஸ்புக், டுவிட்டரில் சூரியனானது டிசம்பரில் ஆறு நாட்கள் பூமியை இருளாக்கும் என்ற செய்தியை பார்த்தீர்கள் என்றால் தயவு செய்து நம்பாதீர்கள். ஏனெனில், அச்செய்தி முழுக்க, முழுக்க ஒரு வதந்தியே. இதனை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமே தெரிவித்துள்ளது. ஆதாரம்: Lanka Road.net
-
- 0 replies
- 555 views
-
-
“ பிரபஞ்சத்தை எது உண்டாக்கியது எனும் கேள்வி என்னை எப்போதுமே ஈர்த்துள்ளது. காலமும் வெளியின் புதிராக இருக்கலாம். ஆனால் இது எனது தேடலை முடக்கிவிடவில்லை. நம் ஒருவருக்கு ஒருவர் இடயிலான தொடர்பு எல்லையில்லாத முறையில் வளர்ந்திருக்கிறது. இப்போது வாய்ப்பிருப்பதால் உங்களூடன் என் பயணத்தை பகிர்ந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ஆர்வமுடன் இருங்கள். நான் எப்போதும் இருப்பேன்” என்று குறிப்பிட்டு பேஸ் புக்கில் தன்னோட 72 வது வயதில் இணைத்துள்ளார் " த பிரீப் கிஸ்ட்ரி ஒப் டைம் " என்ற தமிழில் சொல்வதாயின் " காலத்தின் சுருக்கமான வரலாறு " என்ற புத்தகம் மூலம் உலகம் எங்கும் உள்ள சாதாரண விண்வெளி ஆர்வம் உள்ள எல்லாரையும் ஏடு தொடக்கி வைத்த அஸ்ட்ரோ பிசிக்ஸ் விஞ்ஞானி பேராசிரியர் ஸ்டீபன் ஹாவாக்கிங். சென்ற…
-
- 1 reply
- 3.8k views
-
-
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உண்மையில் ஓர் தனி உலகம் என்பது உங்களுக்குத் தெரியுமா…? இல்லை என்றால் கண்டிப்பாக இந்த அறிவு டோஸைப் படியுங்கள்! ஒவ்வொரு மனிதனிலும் நமது கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் எனப்படும் Microorganisms வாழ்ந்து வருகின்றன. இவை நுண்ணோக்கியின் (Microscope) உதவியுடன் மட்டும் பார்க்கக் கூடிய, தனிக் கலம் (Single Cell) அல்லது கூட்டுக் கலங்களால் (Multicellular) ஆன உயிரினங்கள் ஆகும். இவற்றை தீ நுண்மம் (வைரசு, Virus), கிருமி (Bacteria), பூஞ்சை (Fungi) மற்றும் மூத்தவிலங்கு (Protozoa) என்று முக்கிய நான்கு வகையாகப் பிரிக்கலாம். பெரும்பாலான நுண்ணுயிரிகள் ஆபத்தானவை என்றாலும், அவற்றுள் சில, மனிதனுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு வைரசுகள் மற்றும்…
-
- 0 replies
- 777 views
-
-
-
- 1 reply
- 929 views
-
-
நியூட்டன்’... இந்தப் பெயரை வாசித்ததும் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன் மட்டுமே உங்கள் நினைவுக்கு வந்தால், 'ஆப்பிள்’ நிறுவனத்தின் மெகா தோல்வி பற்றி அறியாதவர் நீங்கள்! 90-களின் ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட மொபைல் சாதனம் 'நியூட்டன்’. அலைபேசி, டிஜிட்டல் இசைப் பேழை என்பது எல்லாம் என்னவென்றே அறியாத அந்த நாட்களில் Personal Digital Assistant, சுருக்கமாக 'PDA’ என்ற வகையறாவை அறிமுகப்படுத்தியதே ஆப்பிள்தான். 20 வருடங்களுக்கு முன் இருந்த கணினி தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது அற்புதமான சாதனம் நியூட்டன். பிரத்யேகத் தகவல்களைச் சேகரிக்கும் பேழையாக மட்டும் இல்லாமல், திரை மீது எழுதப்படும் கையெழுத்தைப் புரிந்துகொள்ளும் மென்பொருள், ஃபேக்ஸ் அனுப்பும் வ…
-
- 0 replies
- 1.6k views
-
-
உலக மக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. ஆன்ட்ராய்ட், ஆப்பில், பயர் பாக்ஸ் உள்ளிட்ட செயலிகள் (Mobile Application) ஸ்மார்ட் போன்கள் இயங்குவதற்கு உதவுகின்றன. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்கள் வளர்ந்துவரும் நாடுகளின் மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நம் இந்தியாவிலும் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் மக்களின் மனதில் முக்கிய இடம் பிடித்துள்ளது. விளையாட்டு (Games), இணையம் (Internet) மற்றும் சமூக வலைத்தளங்கள் (Social Networking Sites) போன்ற பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் மொழி சார்ந்த பல்வேறு செயலிகளும் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக தமிழ் மொழிக்கும்…
-
- 0 replies
- 3.1k views
-
-
இணையம் வந்த புதிதில் பலரும் கேட்ட கேள்வி. ‘இன்டெர்நெட்டினால் என்ன பயன்? தினசரி இரண்டு ஜோக் மடல் அனுப்பலாம்… அதைத் தவிர என்ன மாறப் போகிறது!’ தூரயியங்கி இன்னும் விடலைப் பருவத்தில் இருக்கும் இந்தக் காலத்திலும் இதே கேள்வி புழக்கத்தில் இருக்கிறது. ‘டிரோன்களினால் என்ன உபயோகம்? அடுத்த வீட்டை எட்டிப் பார்க்கலாம்… சாலையில் கார் ஓட்ட வயதிற்கு வராத பாலகர்கள் வேண்டுமானால் கூரையேறாமல் கோழி பிடிக்கலாம்!’ என்கிறார்கள். நிஜத்தை சொல்லப் போனால், தூரயியங்கிகளால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதன் சாத்தியக்கூறுகளுக்கான ஆராய்ச்சிகளையும் அதன் முழுமையான பயன்களையும் நாம் இன்னும் துவங்கக் கூட இல்லை. ஐஃபோன் போல் எல்லோரின் கைகளிலும் தூரயியங்கி வைத்திருக்கும் காலம் இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் நி…
-
- 0 replies
- 664 views
-
-
ஜப்பானில் காபி மேக்கரை கூவிக்கூவி விற்கும்... “சேல்ஸ்மேன்” ரோபோக்கள் அறிமுகம்! டோக்கியோ: ஜப்பானில் நெஸ்லே நிறுவனத்தில் ரோபோக்கள் சேல்ஸ்மேன் பணியில் செயல்பட்டு வருவது காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நவீன அறிவியல் உலகில் ரோபோக்களின் பங்கு மிக அவசியமானதாக திகழ்கிறது. இந்நிலையில், சர்வதேச உணவு வர்த்தக நிறுவனமான நெஸ்லே "ரோபோ"க்களை சேல்ஸ்மேன் பணியில் அமர வைத்துள்ளது. காபி மேக்கர் விற்கும் ரோபோ: ஜப்பானில் தான் தயாரிக்கும் காபிமேக்கர் கருவிகளை விற்பனை செய்ய 1000 ரோபோக்களை உருவாக்கியுள்ளது. "பெப்பர்" என்னும் பெயர்: இது பிரான்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தைவானில் தயாரிக்கப்பட்டது. பெப்பர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் ஜப்பான் வர்த்தக நிறுவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பொருட்களில் இன்று வரை விண்வெளியில் வெகு தூரம் சென்றுவிட்ட விண்கலம் வொயேஜர் 1 (Voyager 1) ஆகும். அமெரிக்க நாசாவால் (NASA) கட்டப்பட்ட இந்த ஆளில்லா விண்ணுளவி (space probe) சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக 05.09.1977இல் ஏவப்பட்டது. 30.01.2014 அன்று வொயேஜர் 1 ஏறத்தாழ 19,200,000,000 (19.20 பில்லியன்) km சென்றுவிட்டது. 61,000 km/h வேகத்தில் பயணிக்கும் இந்த விண்ணுளவியின் தூரம் ஒவ்வொரு வருடத்திற்கும் ஏறத்தாழ 540 மில்லியன் kmகு அதிகரித்துக் கொண்டு போகின்றது. இன்றும் கூட இந்த விண்கலம் செய்திகள் மற்றும் படங்களைப் பெற்று, பூமிக்கு அனுப்பிக் கொண்டு இருக்கின்றது. வொயேஜர் 1 ஆல் அனுப்பப்படும் இந்த செய்திகள் ஒளியின் வேகத்தில் சென்றாலும் புவ…
-
- 16 replies
- 1.3k views
-
-
நெதர்லாந்தின் டெல்ப்ட் பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவர் அலெக் மோமண்ட் மாரடைப்பு ஏற்படும் நோயாளியை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை உதவி அளிக்கும் டிரோன் என அழைக்கப்படும் ஆளில்லா விமானத்தை கண்டுப்பிடித்துள்ளார். மாரடைப்பு நோயாளிகளின் அவசர டெலிபோன் கால் கிடைத்ததும் டிரோனில் உள்ள அதிர்வு கருவி செயல்படதொடங்கும். அதன் மூலம் ஆளில்லா விமானம் நோயாளி இருக்கும் இடத்துக்கு சென்று சில வினாடிகளில் தேவையான மருத்துவ உதவியை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 கிலோ எடையுள்ள இந்த விமானம் மணிக்கு 100 கிலோமீட்டர் வேத்தில் பறக்கும் என பல்கலைக்கழக குறிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=119787&category=CommonNews&language=tamil
-
- 0 replies
- 489 views
-
-
இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர சூரிய மண்டல புயல் வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால் தூசி, துகள்கள் நிரம்ப போவதால் சூரிய ஒளி பூமிக்கு வருவது தடைப்படும் என்றும் அவர் கூறுகின்றார். நாசாவின் தலைவர் சார்ஸ் போல்டன் மேலும் தெரிவிக்கையில், இந்த சூரிய மண்டலப் புயலால் பூமி இருளில் மூழ்கினாலும் எந்தவித பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது. இதற்கு யாரும் அஞ்ச வேண்டியது இல்லை. இது 250 வருடங்களில் ஏற்படப்போகின்ற மிகப்பெரிய சூரிய மண்டல புயலாகும். 216 மணித்தியாலங்கள் தொடர்ந்து இருள் நீடிப்பதால் ஆறு நாட்கள் பூமியில் மின் விளக்குகளுடனேயே செயல…
-
- 1 reply
- 1k views
-
-
*பூமிக்குள் இதுவரை துளையிட்டதிலேயே அதிகபட்ச ஆழம் 13 கிலோ மீட்டர். பூமியின் மையப்பகுதியை அடைய வேண்டும் எனில், இதைப் போல 500 மடங்கு துளையிட வேண்டும். *பூமித்தட்டுகள் எப்போதும் நகர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆண்டுக்கு சராசரியாக 2.5 சென்டிமீட்டர் தூரம். ஓராண்டில் நம் நகங்கள் வளர்வதும் ஏறத்தாழ இதே அளவுதான்! *வெதுவெதுப்பான, சூரிய ஒளி நிறைந்த ஆழ்கடல் பகுதிகளிலேயே பவழங்கள் காணப்படுகின்றன. *6,690 கிலோமீட்டர் நீளம் கொண்ட, உலகின் மிக நீளமான நைல் நதியும் காலத்தின் கோலத்தில் சுருங்கி வருகிறது. *உலகின் மிகப்பெரிய ஆற்றுக் கழிமுகம் (டெல்டா), 77 ஆயிரத்து 700 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. கங்கை, பிரம்மபுத்ரா நதிகளால் உருவான இந்த டெல்டா, இந்தியாவிலும் பங்க…
-
- 1 reply
- 894 views
-