Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மலேரியா எச்சரிக்கை மருந்துகளுக்குக் கட்டுப்படாத மலேரியா ஒட்டுண்ணிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் எல்லைகளுக்குப் பரவி, இந்த நோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கின்றனர். கம்போடியா, பர்மா ,தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் சுமார் 1,000 நோயாளிகளுக்கும் மேற்பட்டோர் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் , மலேரிய எதிர்ப்பு மருந்துகளில் மிகவும் சக்தி வாய்ந்த மருந்தான, ஆர்டெமிஸ்னின் என்ற மருந்தால்கூட கொல்லப்பட முடியாத அளவுக்கு ஒட்டுண்ணிகள் வளர்ந்திருப்பதைக் காட்டின. இந்த ஒட்டுண்ணிகள் மருந்துகளுக்கு எதிராக பலம்பெறுவது , ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஊடாகப் பரவுவதைத் தடுக்க , நோய் தோன்றிய …

  2. சிவகாசி : ""விருதுநகர் மாவட்டத்தில் 1100 ஏக்கரில் கூட்டு பண்ணை விவசாயம் திட்டம் செயல்படுத்த உள்ளதாக,'' எக்ஸ்னோரா நிறுவனம்இன்டர் நேஷனல் சேர்மன் நிர்மல் தெரிவித்தார். சிவகாசி வேலாயுதம் ரஸ்தா சிவிக் எக்ஸ்னோரா, ராஜபாளையம் ரவுண்ட் டேபிள், இன்னர் வீல் கிளப் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில்சிவகாசியில் நடந்த "எக்ஸ்னோரா கோ ஆர்கானிக் எக்போ 2011' கருத்தரங்கில் அவர் பேசியதாவது: வெப்பமயமாதலால் உலகம் மோசமான நிலைக்கு செல்கிறது. கடல் உள்வாங்கி, நிலத்தில் கடல் நீர் புகுந்து, விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும். 2016-2018ல் பீக் ஆயில் காலமாக மாறும். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1000,2000க்கு விற்பனையாகும். இதற்கு தீர்வு, விவசாய நிலத்தை கண் இமைபோல் காக்க வேண்டும். வெளிநாடுகள் ஐந்து ஆண்டுகளில் வ…

    • 0 replies
    • 700 views
  3. மைன்கிராஃப்ட்: கற்பனைக்கலையா, கணினி விளையாட்டா? பாஸ்டன் பாலா | இதழ் 110 | 01-08-2014| அச்சிடு மேற்கத்திய உலகில் இருக்கும் அனேக இந்தியர்கள் கணினித்துறையில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நிரலி எழுதுகிறார்கள். ஐ-போன் வைத்திருக்கிறார்கள். பி.எம்.டபிள்யூ போன்ற கார் ஓட்டுகிறார்கள். கூகுள் தொலைக்காட்சிப் பெட்டி உபயோகிக்கிறார்கள். முதல் நாள், முதல் காட்சியில், நெடிய வரிசையில் கால்கடுக்க நின்று எக்ஸ் மென், அயர்ன் மென், போன்ற ஹாலிவுட் படங்கள் பார்க்கிறார்கள். சாதாரணமாக கீக் (geek) என்று சொல்ல இவை போதுமானவை. ஆனால், உண்மையான கீக் என்பதற்கு சில சாமுத்ரிகா லட்சணங்கள் இருக்கின்றன. அறிவியல் புனைவுகளை அதிகம் படிப்பது முதல் தகுதி. எச்.பி.ஓ.வில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game o…

  4. வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி பௌர்ணமி நாள். வழக்கம் போல வருகிற பௌர்ணமிதான். ஆனால் ஒரு வித்தியாசம். அன்று இரவு முழு நிலவானது வழக்கத்தை விட சற்றே பெரியதாகத் தெரியும்.ஒப்பு நோக்குகையில் சந்திரன் நமக்கு சற்றே பக்கத்தில் இருக்கும் என்பதே அதற்குக் காரணம். அன்றைய தினம் நிலவு வழக்கத்தை விட சுமார் 14 சதவிகித அளவுக்குப் பெரிதாக இருக்கும். நிலவின் பிரகாசம் வழக்கத்தைவிட 30 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே அன்றைய முழு நிலவை சூப்பர் நிலா என்று வருணிக்கலாம். பூமியை சந்திரன் சுற்றிச் சுற்றி வருகிறது. ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதை மிகச் சரியான வட்டமாக இருப்பது கிடையாது . அதுங்கிய வட்டமாக உள்ளது. ஆகவே சந்திரன் சில சமயங்களில் பூமிக்கு அருகில் இருக்கிறது.வேற…

  5. கல்யாணம் தொடங்கி கட்சி பொதுக்கூட்டம் வரை அனைத்திற்குமே பத்திரிக்கை அடிக்கும் கலாச்சாரம் உருவாகிவிட்டது...இன்றைய சூழலில் ஆப்செட் பிரிண்டர்ஸ்,டிஜிட்டல் பிரிண்டர்ஸின் அதிவேக வளர்ச்சியில் தன் முகவரியை இழந்து- வருகிறது பழைய ட்ரடில் பிரிண்டிங் மிஷின் அச்சகங்கள் இன்னமும் அந்த முறையில் பிரிண்ட் செய்யும் சில அச்சகங்களை இன்னமும் நாம் காணலாம்.இதில் அச்சடிக்கப்படும் பத்திரிக்கைகள் காலத்தால் அழியாதவை காரணம் அதில் பயன்படுத்தப்படும் மை யின் தரம் அப்படிபட்டது...இப்போது உள்ள மையில் எல்லாம் அப்படிபட்ட தரம் இல்லை என கூற ஆரம்பித்தார் இன்னமும் பழைய அச்சுமுறையை பயன்படுத்தி புதுக்கோட்டையில் அச்சகம் நடத்தி வரும் அம்பாள் அச்சக உரிமையாளர் இராமையா. முன்னாடியெல்லாம் நிறைய பிரிண்டிங் பிரஸ்கள் இந்…

  6. தற்போது மைக்ரோமேக்ஸ் மொபைல்களுக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது எனலாம். அந்தவகையில் விரைவில் மைக்ரோமேக்ஸ் வெளியிட இருக்கும் ஒரு மொபைலுக்கு அமோகமான எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. அதன் பெயர் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் L A108 என்பதாகும் இதோ அந்த மொபைலை பற்றி தெரிந்துகோள்ள சில குறிப்புகள். மைக்ரோமேக்ஸ் விரைவில் வெளியிட இருக்கும் புது மொபைல்....! ADVERTISEMENT 5.5 இன்ச் டிஸ்பிளேயுடன் வெளியாக இருக்கும் இந்த மொபைலில் 8GB க்கு இன்பில்ட் மெமரியும் 1GB Ram ம் உள்ளது. மேலும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் ஓ.எஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைலில் 8MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்…

  7. மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல். டெல்லி: கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது, இது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரிக்கிறது இந்திய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வு. இதற்கு காரணம் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதுதானாம். இயற்கை விவசாயம் எங்கே? இயற்கைக்கு முரணாக மனிதன் எதை செய்தாலும் அது மனிதனுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்கள் கொட்டி கிடக்கின்றன. இயற்கை விவசாயத்தை விடுத்து, பூச்சிக்கொல்லி, உரம் என செயற்கையை திணிக்க தொடங்கியதால்தான் புற்றுநோய் பெருகியது என ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. வாரந்தோறும் சிக்கன் அவசியமா? …

  8. நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றினோம் என்பது நமக்கு மனமகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரக்கூடியது, அதற்கு இணையாக வேறெதையும் ஒப்பிட இயலாது. ஸ்டெப்ஃபெனி கோலக் ஸ்டெப்ஃபெனி கோலக் (Stephanie Louise Kwolek, ஜூலை 31, 1923 - ஜூன் 18, 2014) தனது கண்டுபிடிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காத்திருக்கிறார். உலகப் புகழ் பெற்ற நிறுவனமான 'டூபாண்ட்' (DuPont) நிறுவனம் வெறும் 500 மில்லியன் டாலர்களை ஒரு செயற்கை இழை ஆராய்ச்சியில் முதலீடு செய்து, பின்னர் அதன் மூலம் பில்லியன் பில்லியன்களாக டாலர்களில் பொருள் ஈட்டியது. அதற்கு அடிப்படைக் காரணம், ஸ்டெப்ஃபெனி கோலக் கண்டுபிடித்த ஒரு செயற்கை இழை. இன்று உலகெங்கிலும் குண்டு துளைக்காத கவச ஆடை அணிந்ததால் உயிர் பிழைத்தோரின் உயிர்க…

  9. )Last updated : 18:04 (29/07/2014) 90களில் பிறந்தவர்கள் வருங்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் இடையே பாலமாக விளங்குகின்றார்கள். பழையதை விட முடியாமலும், புதியதை பிடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கும் உள்ளாக்கப்படுகிறவர்கள். 90களில் பிறந்தவர்களைப் பற்றி மேலே எழுதியிருப்பது கொஞ்சம்தான். இன்னும் நிறைய எழுதலாம். உலகிலேயே மிக வேகமாக வயதாகுவது யாருக்குத் தெரியுமா? 90களில் பிறந்த ஜெனரேஷன் Y மக்களுக்குத்தான். உத்தேசமாக 1985 முதல் 1995 வரை பிறந்த இவர்கள்தான் மிக வேகமாக வயதாகுபவர்கள். இங்கு வயது என்பது உடலளவில் அல்ல. மனதளவிலும், தாங்கள் சந்திக்கும் அனுபவங்களையும் குறிக்கிறது. 90களில் பிறந்தவர்களுக்கு என சில சிறப்புகள் இருக்கின்றன. சில விஷயங்களில் இவர்கள் கொடுத்து …

  10. தொழில்நுட்பத்தின் வழியே கொள்ளும் உறவில் மொழிக்கு இடமேது? வெகு விரைவில் மனித இனங்கள், அதாவது தொழில்நுட்பம் என்னும் அசுரனின் வலையில் விழுந்திருக்கும் மனித இனங்கள், பேச்சையும் செவித்திறனையும் இழந்துபோனால் அதற்கு ஒப்பாரி வைக்கக்கூட இயலாமல் போகும். குறுந்தகடு, ஃபேஸ்புக், ட்விட்டர் யுகத்தில் மொழி என்பது கண்டந்துண்டமாய்ச் சிதிலமடைந்துவிட்டது. 'குயின்'ஸ் இங்கிலீஷ்' என்ற பெருமை கொண்ட ஆங்கில மொழி, சொற்களை இழந்து உருமாறிப்போனது நினைத்துப்பார்க்க முடியாத சோகம். மூன்று எழுத்து, நான்கு எழுத்து வார்த்தைகளெல்லாம் ஒற்றை எழுத்துக்களாகச் சுருங்கி நிற்கும் வாக்கியங்களுக்குப் பழகிப்போன இளைய தலைமுறைக்கு இனி ஒழுங்காக ஆங்கிலம் எழுத முடியுமா என்பது சந்தேகம். தமிழில் இன்னும் அத்தனை அவலம் வராவிட…

  11. புவி வெப்பமயமாதல், உலகையே அச்சுறுத்தி வருகிறது. அதைத் தடுக்க உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் போராடி வருகிறார்கள். அப்படி இருக்கையில், நம் காலடியில் நடமாடும் எறும்புகள், புவி வெப்பமயமாதலை தடுத்து, புவியை குளிர வைப்பதாக அமெரிக்காவில் அரிசோனா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எறும்புகள், மண்ணில் உள்ள கால்சியம், மக்னீசியம் சார்ந்த மணற்சத்துகளை சிதைக்கின்றன. இதனால், காற்றில் கலந்துள்ள கார்பன் டைஆக்சைடு படிப்படியாக குறைகிறது. இதன்மூலம், புவி வெப்பமயமாதல் குறைந்து, புவி குளிரும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=114064&category=WorldNews&language=tamil

  12. நாசாவின் காஸினி விண்கலம், சனிக் கிரகத்தின் பனி நிலாவான என்சிலேடஸில் 101 தனித்துவ வெந்நீர் ஊற்றுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. அந்த நிலாவின் அடிநிலப்பகுதியில் இருந்து திரவ நிலை நீர் மேலே வந்திருப்பதற்கான சாத்தியக் கூறு இருப்பதாக இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக காஸினியின் கேமரா, இந்தச் சிறிய நிலாவின் தெற்கு முனைப் பகுதியில் படங்களை எடுத்து ஆராய்ந்து வருகின்றது. காஸினி ஹைஜன் மிஷன், நாஸா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் இத்தாலி விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆராய்சித் திட்டம். http://www.seithy.com/breifNews.php?newsID=114085&category=WorldNews&language=tamil

  13. விவசாயிகளின் நண்பன் என்று எல்லோரும் மண்புழுவைத்தான் சொல்வார்கள். அந்த வரிசையில் ஆந்தையையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் துரதிர்ஷ்டவசத்தின் குறியீடாக பார்க்கப்படுவதாலோ என்னவோ ஆந்தை பகலில் வெளியில் வருவதில்லை. சூரியன் மறைந்தவுடன் கூட்டைவிட்டு வெளியே வரும். பொதுவாக மரப்பொந்துகள், பாறை இடுக்குகள், கல் இடுக்குகள், பாழடைந்த வீடுகள், கட்டடங்கள் என பகலிலும் இருட்டு எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கே தங்கிக் கொள்ளும். அந்தி மறைந்து இரவு தொடங்கும் நேரத்தில் ஆந்தை ‘கெர்ர்.... என்ற ஓசையுடன் வெளியே வரும். இதை மக்கள் கெட்ட சகுனத்தின் முன்னறிவிப்பாக பார்க்கிறார்கள். ஆந்தை அலறினாலே, "யாரோ இறக்க போறாங்க..!" என்று கிராமங்களில் பேசிக்கொள்வது வழக்கம். வேதத்திலும் மாய உலகங்களின் கதைகளிலும் ஆந்…

  14. புதன் கிரகமும் மோல்னியா செயற்கைக்கோளும் வானில் கிரகங்களைக் காண்பது குறித்து இப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரையைப் படித்த ஒரு வாசகர் சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகம் சூரியனில் போய் விழாமல் இருப்பது எப்படி என்று கேள்வி கேட்டிருந்தார். அவர் கேட்டது நியாயமான கேள்வியே. சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பது புதன் கிரகமே. ராஜ சிநேகிதம் ஆபத்து என்பார்கள். சூரியனுக்குப் பக்கத்தில் இருப்பதால் புதன் கிரகம் படாதபாடு படுகிறது. புதன் கிரகம் வெயிலில் உலர்த்தப்பட்ட இலந்தைப் பழம் மாதிரி சுருங்கி வதங்கிக் கிடக்கிறது. புதனில் வெயில் அடிக்கும் பக்கத்தில் ( புதனின் பகல்) ஆளைக் கொல்லும் வெயில். இரவாக இருக்கின்ற பக்கத்தில் சொல்ல முடியாத குளிர். ஆளில்லா விண்கலம…

    • 6 replies
    • 782 views
  15. செவ்வாய்க்கு அருகே வால் நட்சத்திரம்: நாஸா கவலை செவ்வாய் கிரகத்தை “உரசி“ செல்லும் அளவுக்கு ஒரு வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தைக் கடந்து செல்ல இருக்கிறது. இது குறித்து அமெரிக்கா நாஸா கவலை கொண்டு செவ்வாயை சுற்றுகிற தனது செயற்கைக்கோள்களையும் காப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறது. அந்த வால் நட்சத்திரத்தால் செவ்வாய் கிரகத்துக்குப் பெரிய ஆபத்து ஏற்படப் போவதில்லை. சொல்லப் போனால் அந்த வால் நட்சத்திரம் செவ்வாயைக் கடந்து செல்லும் போது செவ்வாய்க்கும் அந்த வால் நட்சத்திரத்துக்கும் இடையே சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும். இருந்தாலும் விண்வெளிக் கணக்குப்படி இது “மிக அருகில்” என்றே கருதப்படுகிறது. அமெரிக்காவின் இரு விண்கலங்கள் இப்போது செவ்வாய் கி…

  16. செவ்வாய் கிரகத்தில் நாசா ஆய்வுக்கலம் எடுத்த காட்சி சூரிய குடும்பத்தின் நான்காவது கோளான செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அங்கே அனுப்பப்பட்டிருக்கும் நாசாவின் நடமாடும் ஆய்வுக்கலமான ஆப்பர்டியூனிடி (Opportunity) புதிய சாதனை படைத்திருக்கிறது. செவ்வாய்க்கிரகத்தில் இந்த ஆய்வுக்கலம் இதுவரை 40 கிலோமீட்டர் தூரத்தை பயணித்திருக்கிறது. இதுவரை காலமும் இப்படிப்பட்ட ஆய்வுக்கலங்கள் பயணித்த அதிகபட்ச தூரத்தை இந்த ஆப்பர்டியூனிட்டி ஆய்வுக்கலம் முறியடித்திருப்பதாக நாசா கூறுகிறது. இதில் சுவாரஸியமான செய்தி என்னவென்றால் இந்த தானியங்கி ஆய்வுக்கலம் செவ்வாய் கிரகத்தில் சென்று இறங்கும் இடத்தில் இருந்து அதிகபட்சம் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணித்தாலே போதும் என்று தான் நாசா முதலில் எதிர்பார்த்தது. நா…

    • 1 reply
    • 495 views
  17. ஒரு பகுதியில் புதிதாக அறிமுகப்படுத்தும் உயிரினத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் என்னென்ன? எல்லா நாடுகளிலும் அயல்நாட்டினர் வந்து குடியேறுவது காலங்காலமாக நடந்துவருவதே. அதனால் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. எந்தவொரு நாட்டிலும் சுத்த சுதேசிகள் மட்டுமே இருப்பது தற்காலத்தில் சாத்தியமில்லை. இது மனிதர்களுக்கு மட்டுமின்றி, வேறு பல உயிரினங்களுக்கும் பொருந்தும். நாடுவிட்டு நாடு செல்லும் ஆய்வாளர்களும் பயணிகளும் குடியேறிகளும் மாலுமிகளும் அறிந்தும் அறியாமலும் தமது சொந்த ஊரிலிருந்து உயிரினங்களை எடுத்துவந்து புது இடங்களில் குடியேற்றிவிடுகிறார்கள். கோதுமை, தேயிலை போன்ற நன்மைதரும் பயிர்களும், வேலிகாத்தான், ஆகாயத் தாமரை, பார்த்தீனியம் போன்ற கேடு செய்யும் பயிர்களும் இவ்வாறே உலகெ…

  18. iSTREAM ஆட்டோமொபைல் உலகில் மாதம் தோறும் ஒரு புதிய தொழில்நுட்பம் வந்துகொண்டே இருக்கிறது. அவற்றில் பாதி, பெரும்பான்மை மக்களைச் சென்றடையாமல், அறிக்கைகளோடு காணாமல் போய் விடுகின்றன. ஆனால், இங்கே வெளியாகியுள்ள ஆறு தொழில்நுட்பங்களும் எதிர்காலத்தில் பரவலான பயன்பாட்டை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை. இவற்றில் முதல் மூன்று, 'கார்’ என்ற கான்செப்ட்டின் அடிப்படையையே மாற்றக்கூடியவை. உலகில் முதன்முதலாக ஹென்றி ஃபோர்டு, கார் தயாரிக்கும் அசெம்பிளி லைனைத் துவக்கியதில் இருந்து இன்று வரை 'கார்’ என்ற வாகனத்தைத் தயாரிக்கும் அடிப்படை முறை மட்டும் அப்படியே இருக்கிறது. இதை முற்றிலும் மாற்றியமைத்து, கார் தயாரிப்பு என்ற விஷயத்தை மிக எளிமையாக்கி இருக்கிறார் மெக்லாரன் F1 காரை உருவாக்கிய கார்டான் முரே…

  19. தர்க்கரீதியாக யோசித்துச் சரியான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டியது சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் ஒருவகை. இதை ‘லாஜிகல் ரீசனிங்’ என்று குறிப்பிடுவார்கள். இதற்கு உங்களுக்கு உடனடியாகவும் விடை தெரிய வேண்டும். விதவிதமாகவும் யோசிக்க வேண்டி இருக்கும். கீழே உள்ளவற்றில் எது மற்றவற்றிலிருந்து வித்தியாசமாகப்படுகிறது? ஏப்ரல், செப்டம்பர், தை, டிசம்பர். இந்தக் கேள்விக்கான விடை உங்களுக்குப் பார்த்தவுட​னேயே தெரிந்துவிடும். தை என்பது தமிழ் மாதம். மற்ற​வையெல்லாம் ஆங்கில மாதங்கள். எனவே ‘தை’ என்பதுதான் விடை. ஆனால் தர்க்கம் என்பது சில சமயம் பலவிதக் கிளைகளாகப் பிரியும். கேள்வி கீழ்க்கண்டதுபோல் இருந்தால், எதை மற்றவற்றிலிருந்து தனிமைப் படுத்துவீர்கள்? யாஹூ, கூகோல், மில்லியன், கோடி இந்தக் …

    • 1 reply
    • 572 views
  20. வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு பரவிய பார்த்தீனியம் களை, முதன்முதலாக 1956-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் தான் கண்டறியப்பட்டது. தற்போது அனைவருக்கும் பிரச்னையை ஏற்படுத்தும் இந்த பார்த்தீனியம், திரும்பும் இடமெல்லாம் பெருகியுள்ளது. 11.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இந்த களைச்செடியின் இலைகள் பார்ப்பதற்கு காரட் இலைகளைப் போன்று காணப்படுவதுடன் இவை கிளைவிட்டு பூக்கும் இனத்தைச் சார்ந்தவையாகும். மேலும், நமது சாகுபடி பயிருடன் ஒப்பிடுகையில் இவை ஒவ்வொன்றும் 15,000 முதல் 25,000 விதைகளை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. மேலும், இவ்விதைகளின் எடை மிகக் குறைவாக இருப்பதால் இவை எளிதில் காற்றின் மூலமாகவும், மனித மற்றும் விலங்குகள் செயல்பாட்டின் மூலமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு…

  21. எவர் “க்ரீன்” எலெக்ட்ரிக்! உலகின் நம்பர் -1 எலெக்ட்ரிக் கார்! ர.ராஜா ராம மூர்த்தி மின்சார கார்களா? அதெல்லாம் ஓட்ட நல்லாவும் இருக்காது; ஸ்பீடாகவும் போகாது. என்ன இருந்தாலும் பெட்ரோல் இன்ஜின் ஃபீல் இருக்காது’ என சிலர் சொன்னாலும், காலம் மாறிவிட்டது நண்பர்களே! இனி, மின்சார கார்களைத் தவிர்க்க முடியாது. பாரம்பரியமிக்க கார் நிறுவனங்களே மின்சார கார் தயாரிப்பிலும், ஆராய்ச்சியிலும் சொதப்பிக்கொண்டிருக்கின்றன. ஒரு மின்சார காராக மட்டுமில்லாமல், உலக ஆட்டோமொபைல் துறைக்கே பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறது, டெஸ்லா மாடல் S காரின் வெற்றி. 2009-ல் அமெரிக்க அரசின் எரிசக்தித் துறையிடம் இருந்து வாங்கிய 465 மில்லியன் டாலர் கடனில்தான் துவங்குகிறது, டெஸ்லா மாடல் S காரின் வரலாறு. புகழ்பெற்ற டி…

  22. வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் ரவி நடராஜன் எனக்கு தெரிந்த பெரியவர் ஒருவர், தன் மகன் மூலம், நான் அனிமேஷன் கட்டுரைகள் எழுதியதை அறிந்து, சில ஆண்டுகள் முன்பு, இப்படி அலுத்துக் கொண்டார்: “பொம்மை படம் பற்றி எல்லாம் கட்டுரை எழுதறயாமே!” (இவருக்கு, மனிதர்கள் நடிக்காத படங்கள் எல்லாமே பொம்மைப் படங்கள்) “ஆமாம்” “இந்த சின்ன பசங்க தொல்லை தாங்க முடியலப்பா. எப்பப் பாரு வீடியோ விளையாட்டு என்று எதையாவது திருகிகிட்டே இருக்காங்க” ”அவங்க சுறுசுறுப்புக்கு அது ஒரு நல்ல வடிகால் தானே. உங்க பேரங்க எல்லாம் நல்லாத்தானே படிக்கிறாங்க” “அதெல்லாம் சரிதான். அதென்ன 4,500 டாலருக்கு கம்ப்யூட்டர்? 600 டாலருக்கு பிரமாதமான கம்ப்யூட்டர் கிடைக்கறப்ப எதுக்கு இந்த வீண் செலவு?” …

  23. மரபணு மாற்று பயிர்களை பரிசோதனை அடிப்படையில் சாகுபடிக்கு அனுமதிக்கலாம்' என, மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.இது குறித்து, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், பல்வேறு விதமான கருத்துக்களை பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கூறியதாவது: மா.கம்யூ., - எம்.பி., டி.கே.ரங்கராஜன்:விஞ்ஞானத்துக்கு நாங்கள் ஒரு போதும் எதிரியில்லை. ஆனால், மரபணு மாற்று விதைகள் மற்றும் பயிர்கள், மேலை நாடுகளில் வெற்றியடைந்த ஒரு, 'பார்முலா' என சொல்லப்படுகிறது.அதை நம்பலாமா, நம்பக் கூடாதா என்ற ஆராய்ச்சிகளுக்குள் நாம் செல்லத் தேவையில்லை. ஆனால், மரபணு மாற்று விதைகள், பயிர்கள…

    • 0 replies
    • 475 views
  24. கிழக்கில் இரண்டு,மேற்கில் இரண்டு கிரகங்களைக் காணலாம் நமக்கு நன்கு பரிச்சயமான நான்கு கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க இது ஏற்ற சமயமாகும். இவற்றில் வெள்ளி, புதன் ஆகிய இரண்டு கிரகங்களை சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கு வானில் காணலாம். செவ்வாய், சனி ஆகிய இரண்டு கிரகங்களையும் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில் காணலாம். வானில் நம்மால் மொத்தம் ஐந்து கிரகங்களை மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க முடியும். மேலே கூறியபடி நான்கு கிரகங்களை மட்டுமே இப்போது நம்மால் காண இயலும். ஐந்தாவதான வியாழன் கிரகம் இப்போது பகலில் சூரியனுக்கு அருகே அமைந்திருப்பதால் அதைக் காண இயலாது. அதிகாலையில் கிழக்கு வானை நோக்கினால் வெள்ளி கிரகம் கண்ணில் படாமல் போகாது. அது வைர மூக்குப் பொட்டு போல ஜொல…

  25. வானியல் விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராகவும் தேடத் தேட ஆச்சரியமூட்டும் தன்மைகளைக் கொண்டிருப்பதுமானவை பிரபஞ்ச வெளியில் அமைந்துள்ள கரும் துளைகள் (Black holes) ஆகும். பிரபஞ்சத்தின் சில பகுதிகளில் நம்மால் கணக்கிட முடியாத மிக வலிமையான ஈர்ப்பு விசையுடன் தொழிற்படும் event horizon எனும் நிகழ்வை ஏற்படுத்தும் கரும் துளைகளின் அபார ஈர்ப்பு விசையில் இருந்து மிக நுட்பமான ஒளி கூட தப்ப முடியாது என அறிவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். இப்படிப் பட்ட ஓர் இடத்தில் இருந்து கூட சில சில நுட்பமான கதிர்கள் வெளியாவதாகவும் இக்கதிர்களைக் கொண்டு பிரபஞ்சத்தின் குறித்த பகுதி ஒன்றில் கரும் துளைகள் உள்ளனவா அல்லது இல்லையா என எதிர்வு கூற முடியும் என்ற தனது மிகத் தனித்துவமான தத்துவத்தை இந்த நூற்றாண்டில் ஒர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.