அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
எய்ட்ஸ் நோயை ஒழிப்பது சம்பந்தமான மருத்துவ ஆராய்ச்சியில் நம்பிக்கையூட்டும் ஒரு புதிய முன்னேற்றம் கிடைத்துள்ளது. ஒரு நோயாளியின் உடலில் பதுங்கியிருக்கும் ஹெச் ஐ வி கிருமியை வலுக்கட்டாயமாக வெளியே வரவைப்பதற்கு வழிகண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தொடர்புடைய விடயங்கள் உடல்நலம் ஹெச் ஐ வி கிருமி ஒரு நபரின் மரபணுத் தொகுதியுடைய அங்கமாகவே ஆகிவிடுகிறது.பல ஆண்டுகள் அவரது உடலில் ஒன்றும் செய்யாமல் பதுங்கி இருந்துவிட்டு பிற்பாடு அது தலைதூக்குகின்ற ஒரு தன்மை இருக்கிறது. ஹெச் ஐ வி கிருமியை முழுமையாக அழிக்க முடியாததற்கு அதனுடைய இந்த தன்மையும் ஒரு காரணம். ஹெச் ஐ வி கிருமி மரபணுக்களில் ஒளிந்துகொண்டிருந்தவர்கள் ஆறு பேருக்கு, வீரியம் குறைவான கீமோதெரெபி கொடுத்தபோது அவர்களது …
-
- 0 replies
- 532 views
-
-
பாமக நிறுவனர் ராமதாஸ்| கோப்புப் படம். மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள ஆய்வுக்கும், சோயாபீன்ஸ் எண்ணெய் இறக்குமதிக்கும் அனுமதி தரும் மதிப்பீட்டுக் குழுவின் முடிவுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மரபணு மாற்றப்பட்ட அரிசி, கடுகு, கொண்டைக்கடலை, பருத்தி, கத்தரி ஆகியவற்றை வயல்களில் பயிரிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது. மரபணு மாற்றப்பட்ட சோயாபீன்ஸ் எண்ணெயை இறக்குமதி செய்யவும் இக் குழு அனுமதித்திருக்கிறது. இம்முடிவு பேரதிர்ச்சியையும், வேளாண்மையின் எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்துகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கள ஆய்வுக்கு அனுமதிப்ப…
-
- 1 reply
- 599 views
-
-
கடந்த,1920முதல் இன்று வரை, வரலாற்று ஆய்வாளர்களுக்கு சவாலாக இருப்பது சிந்து சமவெளி நாகரிகம் வேர்கொண்ட, ஹரப்பா, மொகஞ்சதாரோ தான். ஐராவதம் மகாதேவனின் ஆராய்ச்சியை தொடர்ந்து, சிந்து சமவெளி குறித்து, சென்னை, ரோஜா முத்தையா சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன, இயக்குனர், ஜி.சுந்தர் மற்றும், ஆய்வாளர் ச.சுப்பிரமணியன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் பேசியதில் இருந்து... * ரோஜா முத்தையா சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பற்றி? ஜி.சுந்தர்: சென்னையில், 1994ல் துவக்கப்பட்டது, ரோஜா முத்தையா நூலகம். அதில், 2007ல் துவக்கப்பட்டதுதான், ரோஜா முத்தையா சிந்துவெளி பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். இந்நிறுவனத்தின் முதல் மதிப்புறு ஆலோசகராக, ஐராவதம் மகாதேவன் இருந்தார். அவரை தொடர்ந்த…
-
- 0 replies
- 593 views
-
-
பலவீனமான ரத்த நாளங்களின், சீரான ரத்த ஓட்டத்திற்காக பயன்படும் உலோகத்திலான, 'ஸ்டென்ட்'டால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, உயிரி தொழில்நுட்பத்திலான கரையும் ஸ்டென்ட் பற்றி கூறும், மருத்துவர் ஜி.செங்கோட்டுவேல் :நான், இதய சிகிச்சை நிபுணராக, சென்னை யில் பணியாற்றுகி றேன். இதயத்தின் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்காக செய்யப்படும் சிகிச்சை, 'ஆஞ்சியோபிளாஸ்டி' எனப்படும். இச்சிகிச்சையின் போது நீளமாக, பலவீனமாக இருக்கும் ரத்த நாளங்களின், சீரான ரத்த ஓட்டத்திற்காக, நிரந்தரமாக பொருத்தப்படுவது, 'ஸ்டெண்ட்!'இந்த ஸ்டென்ட், மெல்லிய வலைப்பின்னலோடு, உலோ கத்தால் செய்யப்பட்டது. உலோகத்தால் செய்யப்பட்ட ஸ்டென்ட்டை பொருத்தும்போது, அது நிரந்தரமாக உடலிலேயே தங்கி விடும். இதனால், இயல்பிலேயே சுர…
-
- 1 reply
- 493 views
-
-
மழைநீர் சேகரிப்பின் மகத்துவம் அறிந்த தேனி தொழில் அதிபர்: 2 கோடி லிட்டர் தண்ணீர் சேகரிப்பு. நம் முன்னோர்களிடம் ஒரு வழக்கம் இருந்து வந்தது. அவர்கள் தினமும் குளத்தில் குளிக்கும் போதும் குளித்து முடித்த பின்னும், ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து கரைக்கு வெளியே போட்டு விடுவார்கள். இப்படி செய்வது, குளத்தினை தினமும் தூர்வாருவதற்கு சமம். குளிக்கும் ஒவ்வொருவரும் தினமும் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி வெளியேற்றும் போது, குளம் எப்போதும் ஆழமாகவே இருக்கும். நீர் எப்போதும் நிறைந்திருக்கும். அந்தளவிற்கு அப்போது பொறுப்பான சமூகம் இருந்தது. அதேபோல் ஆற்றிலோ, குளத்திலோ சிறுநீர் கழிப்பதோ, மலம் கழிப்பதோ, மலம் கழித்து விட்டு சுத்தம் செய்வது போன்ற செயல்களையும் செய்ய மாட்டார்கள். அது குடிநீர், குளிக…
-
- 2 replies
- 945 views
-
-
எல்லோரும் கவனிக்கத் தவறிவிட்ட நிதிநிலை அறிக்கையின் 102-வது பத்தி சொல்வது என்ன? சிறு, குறு தொழில் பிரிவுகள் தொடங்குமாறு அரசு ஊக்குவிப்பதுதான் சமூக நீதிக்கு வழிவகுக்கும். 1970-களில் மலேசியா இந்த மாதிரியான பிரிவுகளை ஊக்குவித்ததால் வெறும் 2%-லிருந்து 1990-ல் 20% ஆக இவை உயர்ந்துவிட்டன. இதைத்தான் நிதிநிலை அறிக்கையின் 102-வது பத்தியும் வலியுறுத்துகிறது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை பற்றிய பெரும்பாலான விவாதங்கள் அந்நிய நேரடி முதலீடு, முதலீட்டு ஊக்குவிப்பு, வரிச் சலுகைகள் போன்றவற்றைச் சுற்றியே நடைபெறுகின்றன. நிதிநிலை அறிக்கையின் பத்தி 102 குறித்து யாருமே அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், அதுதான் இந்தியப் பொருளாதாரத்தின் சரிபாதியைப் பற்றியது! பிரதமர் நரேந்திர மோடி அரசின் முக்…
-
- 0 replies
- 552 views
-
-
இயற்கை விவசாயப் பொருட்கள் விற்கப்படும் ‘நவதானியா’ கடையில் கஜலட்சுமி. வேளாண் பொருட்களையே மக்களுக்கு தரவேண்டும் என்பதற்காக நாங்கள் மிகவும் அக்கறை கொள்கிறோம். ஆனால், மக்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லையே’ என ஆதங்கப்படுகிறார் மதுரை கோமதிபுரத்தில் இருக்கும் ‘நவதானியா ஆர்கானிக் அண்ட் எக்கோ ஃபிரண்ட்லி குட்ஸ் ஷாப்’ உரிமையாளரான கஜலட்சுமி. ‘இயற்கை இவரது கடையின் விசேஷமே அரிசி, பருப்பில் இருந்து வற்றல், வடகம் வரை அனைத்துமே இயற்கை விவசாயத்தில் விளைந் தவை, இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களால் செய்யப் பட்டவை. இயற்கை விவசாயத்தின் பயனை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கடையை ஆரம்பித்தார் கஜலட்சுமி. அதற்கு முன்பு, வீடுவீடாய் போய் இயற…
-
- 0 replies
- 501 views
-
-
காயமடைந்த மூளையின் நினைவுகளை மீட்டெடுக்க புதிய முறையை அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி அமைப்பு கண்டறிந்துள்ளது. இதற்காக அந்த அமைப்புக்கு 4 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.240 கோடி) பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு நவீன ஆய்வுத்திட்ட முகாமை (டிஏஆர்பிஏ), நினைவுகள் மீட்டெடுப்பு திட்ட மேலாளர் ஜஸ்டின் சான்செஸ் கூறியதாவது... கடந்த 2000 வது ஆண்டிலிருந்து இதுவரை 27 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களும், ஆண்டு தோறும் 17 லட்சம் அமெரிக்க மக்களும் மூளை காயமடைவதால் தங்களின் நினைவுகளை இழக்கின்றனர். அவர்களின் நினைவுகளை மீட்டெடுப்பது அவசியம். குறிப்பாக ராணுவ வீரர்களுக்கு இதுபோன்ற சூழல்களில் அடிப்படை நிகழ்வுகள், இடங்கள் உள்ளிட்ட நினைவுகள் மங்கிவிடுகின்றன. தேசத்துக்காக உ…
-
- 1 reply
- 492 views
-
-
சும்மா ஒரு தகவலுக்காகத்தான்……….! நவீன சந்தையில் ஒரு பொருள் விற்பனைக்கு வரும் போது, அந்தப் பொருளை நாம் வாங்குவதற்காக, நம்மையறியாமலே நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கூட்டுக் கடைகளுள்ள ஒரு பெரும் சந்தைக்கு (Shopping Mall), நீங்கள் குடும்பத்துடன் போகும் போது, அங்கு எதை வாங்குவது, எதை வாங்கக் கூடாது என்பதை நீங்கள்தான் முடிவு செய்வீர்கள். அநேகமாக நம் முடிவின்படிதான் அந்தப் பொருளை நாம் வாங்குகிறோம் என்றுதான் நினைத்துக் கொண்டுமிருக்கிறோம். ஆனால், உண்மையில் நாம் அந்த விற்பனை நிறுவணத்தின் கண்ணுக்குத் தெரியாத மறைமுக நிர்ப்பந்தத்தின் மூலம், அவர்கள் தெர்வு செய்யும் வகையிலேயே பொருட்களை வாங்குகிறோம். "இது என்ன பேத்தல்! எனக்குப் பிடித்தால் நான் வாங்குகிறேன், பிட…
-
- 6 replies
- 875 views
-
-
இரவு வானத்தை அண்ணாந்து பார்த்தா சும்மா கற்பனைக் குதிரை மண்டைக்குள்ளர இருக்கிற அறிவைக் கொண்டு அது பாட்டுக்கு இலக்கில்லாம பறந்து திரியும். அப்போ இப்படி விரிஞ்சி கெடக்கிர வானக் கம்பளத்தில நம்ம பூமிய ஒரு தடவ திரும்பி பார்த்தா ஒரு தூசியின் அளவை விட சிறிசா ஒண்ணுமில்லாம போயிடும். அந்த அளவிற்கு இந்த அண்டவெளி நம் கற்பனைக்கும் எட்டாத விரிதலை உள்ளடக்கியது. நம்ம சூரியன் இருக்கிற பால்வீதி (Milky Galaxy) மாதிரியே பல பில்லியன் பால்வீதிகள் இந்த வெளியில மிதந்து திரிகிறது. அந்த ஒவ்வொரு பால்வீதியிலும் மில்லியன்ஸ் அண்ட் மில்லியன்ஸ் நம்ம சூரியனையொத்த ஸ்டார்கள் இருக்கின்றன. அவைகளைச் சுற்றியும் நம் சூரியக் குடும்பத்திற்கென அமைந்த கிரகங்களையொட்டி கிரகங்களும் உள்ளன. அந்த கிரகங்களில் நமக்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
'சீட் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை மூலம், கொசுக்களை அழிக்க உதவும் நொச்சி கன்றுகளை உருவாக்கி, பொதுமக்களுக்கு வழங்கி வரும், அதன் நிர்வாக அறங்காவலர், ரட்சகன்: கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், மக்கள் நோய்வாய்ப்படாமல் சுகாதாரமாக வாழவும், 'சீட் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளையை உருவாக்கி, பல்வேறு முயற்சிகளை, பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறோம். மழைக்காலங்களில், கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நொச்சி செடியை வளர்ப்பதால், இயற்கையான முறையில் கொசு பெருக்கத்தை தடுக்க முடியும் என, சென்னை மாநகராட்சி, கடந்த ஆண்டு அறிவித்தது. அதனால், நொச்சி செடிகளை உருவாக்குவதற்கான மாநகராட்சி, 'டெண்டரில்' லாப நோக்கமின்றி நாங்களும் பங்கேற்று, நொச்சி செடிகளை வளர்த்து வருகிறோம்.இதற்காக, உளுந்த…
-
- 0 replies
- 1.6k views
-
-
புதிதாக வீடு கட்டுபவர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் அழகு படுத்திப் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகின்றனர். இந்த விருப்பத்தால் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு அறையும் எப்படி அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்பதைக் காண்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காகச் சிலர் வீட்டு உள் அலங்கார நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனைகள் பெறுவதுடன், வீடு அழகுபடுத்தும் பணிகளை அவர்களிடம் ஒப்படைப்பதுண்டு. சிலர் தங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் புதிதாகக் கட்டியிருக்கும் வீடுகளில் செய்யப்பட்டிருக்கும் அழகுபடுத்தல் பணி களைப் போய்ப் பார்த்து அதில் சில மாற்றங்களைச் செய்து தங்கள் வீடுகளில் அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்வதுமுண்டு. இருப்பினும், சிலருக்குப் பிற வீடுகளைக்காட்டிலும் தங்கள…
-
- 0 replies
- 549 views
-
-
இந்திய தொழிலக கூட்டமைப்ப்பின் (சிஐஐ) பட்ஜெட் கலந்துரையாடலுக்கு வந்திருந்தார் டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி எஸ்.மகாலிங்கம். டிசிஎஸ் நிறுவனத்தின் 15வது நபராக சேர்ந்து, 42 வருடங்களாக டிசிஎஸ்-ல் பணிபுரிந்த அவரிடம் பேசுவதற்கு விஷயங்களுக்கா பஞ்சம். டிசிஎஸ் வாழ்க்கை, ஓய்வு, தொழில்முனைவு உள்ளிட்ட பல விஷயங்களை மேலாக பேசினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற உரையாடலின் தொகுப்பு இதோ... சார்டட் அக்கவுன்ட்டண்டான நீங்கள் டிசிஎஸ்-ல் எப்படி நுழைந்தீர்கள்? படித்து, பயிற்சி முடிந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். எதாவது கன்சல்டிங் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இரண்டு மூன்று வருடங்கள் வேலை பார்த்து, பிறகு எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். மூன…
-
- 0 replies
- 337 views
-
-
கண்ணை விற்று சித்திரமா? நியூட்ரினோ ஆராய்ச்சி X சுற்றுச்சூழல் இத்தாலியின் நியூட்ரினோ கண்டறியும் கருவி காலையில் எழுந்து செய்தி பார்க்கிறீர்கள். உங்கள் பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைக்கப் போவதாக அரசு அறிவித்திருக்கிறது. உங்களது எதிர்வினை எப்படி இருக்கும்? அட போங்க நீங்க வேற ஒரு குடும்ப அட்டை வாங்குவதற்கே ஆறு மாசம் அலையணும். இதில் பேருந்து நிலையம் எல்லாம் வேண்டும் என்றால் ஒரு தலைமுறைக்காவது போராடனும். அரசாவது நமக்கு தேவையான திட்டத்தை தானாக முன்வந்து தருவதாவது என்று உங்களில் பலர் நினைக்கலாம். அவ்வாறு நினைப்பதில் ஒன்றும் தவறில்லை. நீண்ட காலமாகவே நம் நாட்டில் நிலைமை அவ்வாறு தான் இருந்து வருகிறது. இந்நிலையில் நடுவண் அரசு 900 கோடி ரூபாய் மதிப்பிலான நியூட்ரினோ ஆராய…
-
- 0 replies
- 528 views
-
-
http://www.youtube.com/watch?v=lx3FhRqr0Es#t=15
-
- 1 reply
- 693 views
-
-
விஞ்ஞானமும் , தொழில்நுட்பம் வியக்க வைக்கின்றன. அவற்றின் முன்னேற்றம் அதை விட அதிமாக வியக்க வைக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகள் சோதனை என்ற நிலையில் இருந்து நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் அன்றாட வாழ்வில் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. புதிதாக அறிமுகமாகும் நவீன தொழில்நுட்பங்கள் புதிய வசதியை அளிப்பதுடன் நடைமுறை பிரச்சனைகளுக்கான தீர்வாகவும் அமைந்துள்ளன. கம்பூட்டர் , ஸ்மார்ட் போன்கள், இணைய சேவை என ஏற்கனவே தொழில்நுட்பம் பல விதங்களில் நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட நிலையில் எதிர்காலத்தில் மேலும் பல நுட்பங்கள் நம் வாழ்வில் இணைய காத்திருக்கின்றன. கம்ப்யூட்டர்களையே ஆடையாக அணியலாம் என்கின்றனர். எங்கும் சென்சார்கள் நிறைந்து எல்லாமே விழிப்புணர்வு பெற்றிருக்கும் எ…
-
- 13 replies
- 19.4k views
-
-
“எல்லா அறிவியல் பிரிவுகளுக்கும் கணிதமே மகாராணி. ஆனால் எண்கணிதமே கணிதத்தின் மகாராணி” என்று புகழ் பெற்ற கணித மேதை காஸ் (Gauss) கூறியுள்ளார். அப்படிப்பட்ட எண் கணிதத்தில் இன்றைய ஆராய்ச்சியாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் இந்திய கணித மேதை இராமானுஜன் என்றால் மிகையாகாது. “ஒவ்வொரு நேர்மறையான முழு எண்ணும் (positive integer) இராமானுஜனின் தனிப்பட்ட நண்பர்கள்” என்ற டி.ஜெ. லிட்டில்வூட் (Littlewood) என்ற கணிதவியலாளரின் கூற்றுக்கிணங்க 1919 ஆம் ஆண்டு இராமானுஜன் இயல் எண்களைப் பற்றி எழுதி வைத்துச் சென்ற குறிப்பின் வீச்சும், பொருளும் அறிய ஏறக்குறைய 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. அதனைக் கண்டறிந்தவர் அமெரிக்காவிலுள்ள எமோரி பல்கழகத்தைச் சேர்ந்த எண்கணித வித்தகர் கென் ஓனோ (Ke…
-
- 1 reply
- 1.8k views
-
-
http://deciwatt.org/installation-guide/ புவியீர்ப்பு விசையிலிருந்து மின்சாரம் 25 நிமிடங்களிற்க்கு மேல்.
-
- 5 replies
- 855 views
-
-
அல்சைமர்ஸ் எனப்படும் மூளை அழுகல் நோய் ஒருவருக்கு வரவிருப்பதை அதன் ஆரம்பகட்டத்திலேயே கண்டறியக்கூடிய வழிமுறை ஒன்றை தாங்கள் நெருங்கிவிட்டதாக பிரிட்டனில் இருக்கும் விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். ஒருவரின் ரத்தத்தில் இருக்கும் குறிப்பிட்ட பத்து புரதங்களை கொண்டு அவருக்கு அடுத்ததாக அல்சைமர்ஸ் நோய் தோன்றக்கூடும் என்று கணிக்க முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள். தொடர்புடைய விடயங்கள் உணவு முறை, உடல்நலம் அல்சைமர்ஸ் என்பது அடிப்படையில் நினைவிழப்பு நோயின் அதி தீவிர வடிவம். தற்போதைய நிலையில் இந்த அல்சைமர்ஸ் ஒருவருக்கு வந்திருக்கிறது என்பதை கண்டறிவது என்பது அந்த நோய் ஏற்கெனவே ஒருவருக்கு தாக்கத்தொடங்கிய பிறகே சாத்தியமாகிறது. அதற்குள் அவருக்கு அல்சைமர்ஸ் நோயின் தாக்கம்…
-
- 0 replies
- 404 views
-
-
நமது ஊர்ப்புறங்களில் வில் போலத் தோற்றமளிக்கும் இறக்கைகளைக் கொண்ட பறவைகளை, குறிப்பாக பனைமரங்களின் அருகில் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? ஆங்கிலத்தில் Palm Swift என்று அறியப்படும் பனை உழவாரன்கள்தான் அவை. இவை பறந்துகொண்டே காற்றில் பறக்கும் சிறிய பூச்சிகளைப் பிடித்து உண்ணக் கூடியவை. இந்த பறவை வகையைச் சேர்ந்த, அதேநேரம் பனை உழவாரன்களைவிட உருவில் பெரிய அல்பைன் உழவாரன் (Alpine Swift) எனும் பறவை அதிசயிக்க வைத்திருக்கிறது. அல்பைன் உழவாரன்கள் ஆண்டில் சுமார் 200 நாட்களுக்கு (சுமார் 6 மாதங்களுக்கு மேல்) தொடர்ச்சியாக பறந்து கொண்டிருந்த உண்மையை சுவிஸ் அறிஞர்கள் தங்களது சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர். உலகம் சுற்றும் பிப்ரவரி முதல் மே மாதங்கள்வரை மேற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கன்னியாகுமரியில் என்னவோ இருக்கிறது. முக்கடல் சங்கமத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சுற்றிலும் சுற்றுலாப் பயணிகள். ஒரே ஆரவாரமும் கொண்டாட்டமும். அலைகள் பாறைகளில் மோதுவதும் பாறைகளைத் தழுவுவதும் பாறைகளைத் தாண்டுவதுமாக இருக்கின்றன. பார்வை நீள்கிறது. தூரத்தில் இரு படகுகள். தவிர, நீலம், நீலம், எங்கும் நீலம். இன்னும் கொஞ்ச நேரத்தில் வண்டி வந்துவிடும் என்றார் நண்பர். நீரோடிக்குப் போக வேண்டும். தமிழகக் கடற்கரையின் எல்லை நீரோடி. கன்னியாகுமரி, அடுத்து மணக்குடி, சொத்த விளை, பள்ளம், புத்தன்துறை, பொழிக்கரை, பெரியகாடு, முட்டம், கடியபட்டினம், மண்டைக்காடுபுதூார், குளச்சல், குறும் பனை, இணையம், தேங்காய்ப்பட்டினம், இறையுமண் துறை, பூத்துறை, தூத்தூர் தாண்டினால் நீரோடி. கடலையே பார்த்துக் கொண்ட…
-
- 0 replies
- 519 views
-
-
இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் கணித மேதை என்பதைக் கேட்டதும் பாமரனுக்கும் நினைவில் வருவது இராமானுஜன் பெயர்தான். இந்தியாவில் எத்தனையோ கணித வித்தகர்கள் இருந்த போதும், இவருடைய கணித ஆராய்ச்சியின் சுவடுகள் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவதால்தான் இவருக்கு இந்தப் புகழ். ராமானுஜன் சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஈடுபாடும், கடினமான கணிதப் புதிர்களுக்குக் கூட குறுகிய நேரத்தில் தீர்வு காணும் திறமையும் பெற்றிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ராமானுஜன் பள்ளி நாட்களில் லோனியின் “திரிகோணமிதி” புத்தகத்தில் இருந்த கணக்குகளுக்குத் தீர்வு கண்டார். அதன் பின் கார் (Carr) என்பாரின் கணிதப் புத்தகம் கிடைக்கப் பெற்றார். அதைப் படித்ததில் ராமானுஜனுக்கு 18-19 ஆம் நூற்றாண்டின் கணிதத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிஸ்கெட் விள்ளலை காப்பியில் ஊறவைத்து சுவைப்பது என் போன்ற ’நோ-பல்’ இளைஞர்களின் கொணஷ்டை (கரும்பை கூட ஜூஸ் செய்தே அருந்துவோம்). அனுபவித்து செய்பவர்களுக்கே இதிலுள்ள சகாயங்களும் சங்கடங்களும் தெரியும். சற்றே மொறுமொறுப்புடன், சூடாய், இதமாய், நாக்கில் பிஸ்கெட் கரைவது சகாயம். சௌக்கியம். குறிப்பிட்ட அவகாசத்திற்குமேல் முக்கியிருந்தால், சங்கடம். சொதசொதத்த பிஸ்கெட், வாயிலிட முனைகையில் ஸ்லோமோஷனில் மடிந்து ‘ஸ்பளச்’ என்று காப்பியினுள் விழுந்துத்தொலைக்கும். ‘முக்கிய’ஸ்தர்கள் கூடியிருக்கும் டிஸ்கஷனில், அல்லது ‘பெண் பார்க்கும்’ வைபவத்தில். பிஸ்கெட்டை ஊறவைத்து சுவைப்பது சிலருக்கேனும் ‘முக்கிய’மான மேட்டரே. காபியில் ஊறவைத்த பிஸ்கெட்டிற்கு சுவை அதிகம் என்கிறது இத்தரப்பு. ஆமோதிக்கிறேன். அமெர…
-
- 0 replies
- 1.2k views
-
-
காடுகளில் வாழும் சிம்பான்ஸி குரங்குகள் தாம் நினைப்பதை மற்றக் குரங்குகளுக்கு தெரியப்படுத்த பயன்படுத்துகின்ற சைகைளுக்கு ஸ்கொட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் அர்த்தம் கண்டுபிடித்துள்ளனர். யுகாண்டாவிலுள்ள சிம்பான்ஸிகளை தொடர்ந்து அவதானித்த செயிண்ட் அண்ட்ரூஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அவை வெவ்வேறு செய்தியைப் பரிமாறிக்கொள்வதற்காக குறைந்தபட்சம் 66 சைகளை பயன்படுத்துகின்றன என்று கூறுகின்றனர். சிம்பான்ஸி பாஷையில், ஒரு இலையை எடுத்து கடித்தால் அது ஜோடியை ஈர்ப்பதற்குரிய சைகையாம். குத்தப்போவது போல் செய்தால், அது மற்ற குரங்கை நகரந்து போகச் சொல்வதற்கான சைகையாம். நினைப்பதை வெளிப்படுத்துவதற்கான வழியை உருவாக்கியது மனிதர்கள் மட்டுமே என்றில்லை, வேறு சில விலங்குகளிடத்திலும் அது உண்டு என்பதற்கான …
-
- 4 replies
- 727 views
-
-
இமயமலை போன்ற பெரிய மலைகளின் உச்சியில் பிராணவாயு குறைவாக இருப்பதால் மலைச்சிகரம் ஏறுபவர்கள் பிராணவாயுப்பெட்டிகளை சுமந்து செல்லவேண்டியிருக்கிறது. ஆனால், இதே போல கடல் மட்டத்திலிருந்து வெகு அதிக உயரத்தில் இருக்கும் திபெத் போன்ற மலைப் பிரதேசத்தில் , திபேத்தியர்கள் எப்படி சாதாரணமாக வாழ முடிகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். தொடர்புடைய விடயங்கள் மானுடவியல் 'உலகின் கூரை' என்று வர்ணிக்கப்படும் திபெத் பீடபூமியில் வசிக்கும் திபெத்தியர்கள் வசிக்கும் இடங்கள் எல்லாமே பொதுவாக சுமார் 4 கிமீ உயரத்தில் அமைந்திருக்கின்றன. இந்த அளவு உயரத்தில் மற்ற பகுதியில் வசிக்கும் மனிதர்கள் சென்று வாழமுடியாது. அங்கு பிராணவாயு குறைவாக இருப்பது , மூச்சுத் திணறல்,உயர்ந்த இடங்களில்…
-
- 0 replies
- 677 views
-