Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 30 MAR, 2024 | 11:30 AM முழு சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தோன்றும் எனவும் இந்த முழு சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே அவதானிக்க முடியும் எனவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது. எப்போதாவது அரிதாகத்தான் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றும். வட அமெரிக்கர்கள் இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு எதிர்வரும் 2044 ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/ar…

  2. கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் நம்மைச் சுற்றி மர்மமான 'பேய்' துகள்கள் (Ghost particles) உள்ளதாகவும், இந்த பிரபஞ்சத்தின் உண்மைத் தன்மை பற்றிய நமது புரிதலை மேம்படுத்த அவை உதவும் என்றும் சில இயற்பியலாளர்கள் நீண்ட காலமாக நம்பி வந்தனர். அத்தகைய பேய் துகள்கள் நிஜமாகவே இருக்கிறதா இல்லையா என்பதை நிரூபிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (சிஇஆர்என்- CERN) அந்த துகள்களுக்கான ஆதாரங்களைக் கண்டறிய ஒரு புதிய சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுபோன்ற துகள்…

  4. படக்குறிப்பு, மியா(MIA) எனப்படும் கருவியால் மருத்துவர்கள் தவறவிட்ட கட்டிகளைக் கண்டறிய முடிந்தது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ க்ளீன்மேன் பதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரிட்டிஷ் மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கருவி, மருத்துவர்களால் கவனிக்கப்படாமல் போன 11 பெண்களில் மார்பக புற்றுநோயின் சிறிய அறிகுறிகளை அடையாளம் கண்டுள்ளது. மியா(MIA) என்று அழைக்கப்படும் இந்தக் கருவி, பிரிட்டனில் உள்ள பல சுகாதார மையங்களில் சோதிக்கப்பட்டது. இந்த கருவி கிட்டத்தட்ட 10,000 மேமோகிராம்களை பகுப்பாய்வு செய்தது. அவற்றில் பெரும்பாலானவை புற்றுநோயின் அறிகுறிகளைக் காட்டவில்…

  5. பட மூலாதாரம்,ISRO/X கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 23 மார்ச் 2024, 12:47 GMT புதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முதல் முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட்டான ‘புஷ்பக்’-ஐ இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. நேற்று (மார்ச் 22) காலை 7 மணிக்கு கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் நடத்தப்பட்ட மூன்றாவது கட்ட சோதனையில் ஆளில்லா புஷ்பக் ராக்கெட் தானியங்கி மூலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட் என்றால் என்ன? இந்த திட்டத்தின் வெற்றியால் இந்தியாவுக்கு கிடைக்கப் போகும் பலன்கள் எ…

  6. நோபல் பரிசு பெற்ற Crispr மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் இருந்து HIV ஐ வெற்றிகரமாக அகற்ற முடியும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். Crispr மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உடலிலிருந்து முழுவதுமாக வைரஸை அகற்ற முடியும், இருப்பினும் இது பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதை சரிபார்க்க இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகிறது. தற்போதுள்ள எச்.ஐ.வி மருந்துகள் வைரஸை கட்டுப்படுத்தலாம் ஆனால் அதை அகற்ற முடியாது. நொட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஸ்டெம்-செல் மற்றும் மரபணு சிகிச்சை தொழில்நுட்பங்களின் இணை பேராசிரியரான டாக்டர் ஜேம்ஸ் டிக்சன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் : “எதிர்கால சிகிச்சைக்காக முழு உடலிலும் இந்த…

  7. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களின் 145 வது பிறந்தநாளை ஒட்டி 'அருஞ்சொல்' இதழில் இயற்பியல் விரிவுரையாளரும், அறிவியல் எழுத்தாளருமான ஜோசப் பிரபாகர் அவர்களால் மார்ச் 14, 2024 அன்று எழுதப்பட்ட கட்டுரை இது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பற்றியும், அவரது ஆராய்ச்சிகள் பற்றியும் தமிழில் எல்லோருக்கும் புரியக் கூடிய வகையில் எழுதப்பட்ட மிகச் சிறந்ததொரு கட்டுரை இது. ********* ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: காலம் வெளி கடந்த மனிதன் -------------------------------------------------------------------------------- (ஜோசப் பிரபாகர். மார்ச் 14, 2024) மனித இனம் எத்தனையோ மகத்தான சிந்தனையாளர்களைக் கண்டிருக்கிறது. அந்த வரிசையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு வரலாற்றில் ஒரு தனிச் சிறப்புமிக்க இடம் உண்டு. இன்று ஆ…

  8. விண்ணில் சீறிப்பாய்ந்த உலகின் மிகப்பெரிய ரொக்கெட். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” என்ற ரொக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனமனானது, உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமானது. ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” எனப்படும் உலகின் மிகப்பெரிய ரொக்கெட்டானது, பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டார்ஷிப் ரொக்கெட் 394-அடி (120-மீற்றர்) உயரத்துடன் 33 என்ஜின்களை கொண்டுள்ளது. குறித்த ரொக்கெட் தெற்கு டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ…

      • Haha
    • 2 replies
    • 718 views
  9. கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயினின் மதிப்பு, அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது. அதாவது, இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் மதிப்பு 50 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. பிட்காயின் மதிப்பு அதிகரித்தன் பின்னணியில் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த கிரேஸ்கேல், பிளாக்ராக் மற்றும் ஃபிடிலிட்டி போன்ற முதலீட்டு நிறுவனங்கள், நிலையற்றது என்று வர்ணிக்கப்படும் இந்த டிஜிட்டல் கரன்சியை வாங்க பில்லியன்கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளன. இந்த முதலீட்டின் காரணமாக, இந்த சக்திவாய்ந்த நிறுவனங்கள் 'பிட்காயின் திமிங்கலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. பிட்காயின் என்றால் என்ன? பிட்காயின் என்பது மின்னணு …

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நீங்கள் கூகுளில் ‘பரிணாமம்’ என்ற வார்த்தையைத் தேடினால் முதலில் வருவது ரால்ப் ஜாலிங்கர் என்பவரின் புகழ்பெற்ற ஓவியம்தான். ‘முன்னேற்றத்தின் அணிவகுப்பு’ என்று பெயரிடப்பட்ட அந்த ஓவியத்தில் இடமிருந்து வலமாக, ஒரு சிம்பன்சி குரங்கு படிப்படியாக மனிதனைப் போல நிமிர்ந்து நடப்பதைக் காணலாம். பரிணாமத்தை இவ்வாறு விளக்கும் படங்களில் பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பொதுவாக நாம் கொண்டிருக்கும் தவறான பார்வைகள் பொதிந்திருக்கின்றன. அதாவது ‘நாம் பரிணாமச் சங்கிலியின் உச்சத்தில் உள்ள ஓர் இனம், பரிணாமத்தின் முழுமை’. நாம் பிழைத்திருக்க மிகவும் தகுதியான உயிரினம், என்று கற்பனை செய்கிறோம். ஆனால் இதில் ஒரு முரண்பாடு …

  11. சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் உள்ள மரபணு நெருக்கம் Published By: VISHNU 01 MAR, 2024 | 05:27 PM தெற்காசியாவில் வேறு எந்த இனக் குழுமங்களுக்கும் இடையில் இத்தகைய நெருக்கம் கிடையாது என்று ஆய்வில் கண்டுபிடிப்பு பி.ரி.ஐ. (புதுடில்லி ) இலங்கையின் இரு பெரிய இனக்குழுமங்களான சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் இருக்கும் மரபணு ஒப்புடைமை தெற்காசியாவில் வேறு எந்த இனக்குழுமங்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய மரபணு ஒப்புடைமையை விடவும் மிகவும் நெருக்கமானது ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இலங்கையையும் இந்தியாவையும் சேர்ந்த மரபணு விஞ்ஞானிகளினால் கூட்டாக மேற்கொள்ளப்பட்…

  12. 28 FEB, 2024 | 08:41 PM சவூதி கலாச்சார அமைச்சு உலகின் முதல் தேசிய கலாச்சார மெட்டாவெர்ஸ் தளத்தினை கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது, இது பயனர்களுக்கு மெய்நிகர் (Virtual Reality) வரலாற்று, உல்லாசப் பயணங்களில் பங்கேற்க உதவுகிறது. மெட்டாவெர்ஸ் இன் இந்த அற்புதமான கண்டுபிடிப்பானது ஜெனரேட்டிவ் மீடியா இன்டலிஜென்ஸ் (GMI) எனும் செயற்கை நுண்ணறிவு அமைப்பு மூலம் மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. GMI உடன் இணைந்து ஹைப்பர்லெட்ஜர் ஃபேப்ரிக் 2.5 பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி droppGroup மற்றும் 'phygital' metaverse உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அற்புதமான தளம் மெய்நிகர் ஆய்வு மற்றும் அத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதி…

  13. நிலவில் கால் பதிக்க அமெரிக்கா, இந்தியா, சீனா போட்டா போட்டி - முந்துவது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 பிப்ரவரி 2024, 11:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னும் சில ஆண்டுகளில் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் காலடி எடுத்து வைத்ததே முதல் முறையாக மனிதர்கள் நிலவில் தரையிறங்கியது. அதற்கு பிறகு, தொடர் அப்பல்லோ திட்டங்களின் மூலமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி இதுவரை மொத்தம் 12 பேரை நிலவில் தரையிறக்குவதில் வெற்றி பெற்ற…

  14. நிலாவில் தரையிறங்கிய தனியார் விண்கலம் அமெரிக்கா கொண்டாடும் அளவுக்கு என்ன செய்யப்போகிறது? பட மூலாதாரம்,INTUITIVE MACHINES படக்குறிப்பு, அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிலாவுக்கு செல்லாத குறையை, இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் போக்கியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் அமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க நிறுவனம் ஒன்று நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் வணிக நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. ஹூஸ்டனை தளமாகக் கொண்ட இன்டுயடிவ் மெஷின்ஸ்(Intuitive Machines) நிறுவனம் அதன் ஒடிசியஸ்(Odysseus) ரோபோவை நிலவின் தென் துருவத்திற்கு அருகில் …

  15. பட மூலாதாரம்,THAT படக்குறிப்பு, சித்தரிப்பு: J0529-4351 துடிப்பண்ட கருந்துளையின் பிரகாசமான மையம் கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டியன் வுல்ஃப் பதவி, வானியற்பியல் இணை பேராசிரியர் 44 நிமிடங்களுக்கு முன்னர் நரகம் உண்மையில் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகளால் இதுவரை விவரிக்க முடியாத நிலை இருந்தது. ஒருவேளை அது குறித்து சொல்ல நரகத்திலிருந்து யாரும் திரும்பி வர முடியாததால் கூட இருக்கலாம். நரகம் என்பது மிகவும் மோசமான, நெருப்பால் சூழப்பட்ட, மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு இடமாக தான் கற்பனை செய்யப்பட்டுள்ளது. இறுதியாக ஒரு பெரிய வானியல் ஆய்வின் மூலமாக, பிரபஞ்சத்தின் நரகம் எது என்பதை விஞ்ஞா…

  16. பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு, பூமியில் விழப் போகும் ERS - 2 செயற்கைக்கோள் 14 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு காலத்தில் முக்கியமானதாக கருதப்பட்ட ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்று எந்நேரமும் பூமியின் மீது விழலாம் என்று அச்சம் நிலவி வருகிறது. ERS-2 என்ற பெயர் கொண்ட இந்த செயற்கைக்கோள் 1995ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் இருந்து பூமியை கண்காணிக்கும் தற்போதைய நவீன தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியான இது 2011ஆம் ஆண்டு செயலிழந்து போனது. அதிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக பூமியை நெருங்கிக் கொண்டிருந்த இந்த செயற்கைக்கோள் தற்போது முற்றிலுமாக கட்டுப்பாட்டை இழந்து எப்போது வேண்டுமானாலும் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என்று எதிர்பா…

  17. Published By: DIGITAL DESK 3 16 FEB, 2024 | 04:05 PM எழுத்துரு ஆவணத்தை கொண்டு காணொளியை உருவாக்கும் கருவியை சட் ஜிபிடியை (ChatGPT) உருவாக்கி ஓபன் ஏஐ நிறுவனம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு சோரா என யெரிடப்பட்டுள்ளது. சோரா என்ற ஜப்பானிய சொல்லுக்கு வானம் என அர்த்தம். இதன்மூலம், எழுத்துரு ஆவணத்தில் வழங்கப்படும் விடயம் மற்றும் வடிவம் தொடர்பான அறிவுறுத்தல்களுக்கு இணங்க ஒரு நிமிடத்தில் யதார்த்தபூர்வமான காட்சிகளை உருவாக்க முடியும். மனதிலுள்ள ஒரு படத்தின் அடிப்படையில் ஒரு காணொளியை உருவாக்கலாம் அல்லது புதிய உள்ளடக்கத்துடன் இருக்கும் காட்சிகளை நீடிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. சோராவை ஒரு சில ஆர…

  18. பட மூலாதாரம்,UK ATOMIC ENERGY AUTHORITY / EUROFUSION கட்டுரை தகவல் எழுதியவர், எஸ்மி ஸ்டாலர்ட் பதவி, காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர் , பிபிசி நியூஸ் 11 பிப்ரவரி 2024 உலகின் அள்ளஅள்ளக் குறையாத தூய்மை ஆற்றலை உருவாக்கும் கனவு சமீபத்திய ஆய்வுகளால் ஒரு படி முன்னேறியுள்ளது. சமீபத்திய ஆய்வுகளின்படி, அணுக்கரு இணைவின் (Nuclear fusion) மூலம் உருவாக்கப்படும் ஆற்றலின் அளவு முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது. இந்த ஆய்வில் இங்கிலாந்தை தளமாக கொண்டு இயங்கும் ஜெஇடி ஆய்வகம் புதிய உலக சாதனையை படைத்துள்ளது. அணுக்கரு இணைவு என்பது நட்சத்திரங்களுக்கு ஆற்றல் தரக்கூடிய ஒரு செயல்முறையாகும். இருவேறு அணுக்கள் ஒன்றாக …

  19. உயிர்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலுடன் கூடிய புதிய கிரகமான “சூப்பர் எர்த்” பற்றிய ஆய்வு அறிக்கைகளை அமெரிக்காவின் நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கிரகத்திற்கு “TOI-715 b” என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இது பூமியில் இருந்து 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது என்று நாசா நிறுவனத்தை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இது ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரத்தை சுற்றி வருவதாகவும், இதனை ஒருமுறை சுற்றிவருவதற்கு சுமார் 19 நாட்கள் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பூமியை விட ஒன்றரை மடங்கு பெரிதான இந்த கிரகம் குறித்து நாசா மேலும் ஆய்வுகளை நடத்தி வருகிறது. https://thinakkural.lk/article/290535

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெங்கி ராமகிருஷ்ணனுக்கு 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், கார்லோஸ் செரானோ பதவி, பிபிசி நியூஸ் 28 ஜனவரி 2024 முதுமை அடைவதும், இறப்பதும் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் சந்திக்கும் நிலை. பலர் மரணத்திற்கு பயப்படுகிறார்கள். ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஏன் வயதாகி இறக்க வேண்டும்? வயதாவதை நிறுத்த முடியுமா அல்லது மரணத்தைத் தவிர்க்க முடியுமா? இந்தியாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி மூலக்கூறு உயிரியலாளரான வெங்கி ராமகிருஷ்ணன் தனது முழு வாழ்க்கையையும் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவே செலவிட்டிருக்கிறார். ராமகிருஷ்ணன்…

  21. நியூட்டன் தலையில் ஆப்பிள் விழவே இல்லையா? ஈர்ப்பு விசையை அவர் எப்படி கண்டுபிடித்தார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐசாக் நியூட்டன் ஆப்பிள் மரத்தடியில் அமரவுமில்லை, அந்த மரத்திலிருந்து அவர் தலைமீது பழம் விழவுமில்லை. கட்டுரை தகவல் எழுதியவர், க. சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது யார்? இந்தக் கேள்விக்குப் பள்ளிப்பருவத்தில் அனைவருமே ஒருமித்த குரலில் ஐசாக் நியூட்டன் என்று உரக்கச் சொல்லியிருப்போம். அவர் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது எப்படி என்ற கேள்விக்கும் அதேபோல் ஒருமித்த குரலில், நியூட்டன் தலையில் விழுந்த …

  22. சினிமா போல, குற்றம் நடக்கும் முன்பே கண்டுபிடித்து எச்சரிக்கும் 'செயற்கை நுண்ணறிவு' - எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேன் வேக்ஃபீல்ட் பதவி, தொழில்நுட்ப செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பல நாடுகளில் காவல் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகளின் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. குடும்ப வன்முறையை எதிர்கொண்ட சாரா, உடனடி உதவிக்காக தனது மொபைல் பேசியிலிருந்து அவசர எண்ணை அழைத்தார். தனது முன்னாள் கணவர் வீட்டுக்குள் நுழைய வன்முறையை பிரயோகிப்பதைக் கண்டு அவர் திகிலடைந்தார். கால் சென்டர் நபரிடம் சாரா பேசும்போது ஏ.ஐ. மென்பொருள் அமைப்பு அவ…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரபஞ்சம் எதனால் ஆனது என்பது இதுவரை யாருக்கும் புரியாத புதிராகவே தொடர்கிறது. 16 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இயற்கை உலகின் மர்மங்களை அவிழ்ப்பதை விட சில விஷயங்கள் மிகவும் உற்சாகமானவையாக இருக்கின்றன. ஒரு புதிரை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளும் போது அந்த அற்புதமான தருணத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள். பொதுவாக அந்த புத்திசாலித்தனமான மனங்களில் ஒன்று அல்லது பலர் அதைப் புரிந்து கொண்டதற்காக தங்கள் ஆன்மாவையும், இதயத்தையும், வாழ்க்கையையும் பயன்படுத்தினர். அறிவியல் பல்வேறு ஆராய்ச்சிகளில் வியக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆனால் பல கேள்விகள் இன்னும்…

  24. பட மூலாதாரம்,STELLARIUM படக்குறிப்பு, பெரிய வளையம் (நீல நிறத்தில்) மற்றும் ராட்சத வளைவு (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது) ஆகியவற்றின் நிலைகளை குறிக்கும் மாதிரி தோற்றம். கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 15 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனில் உள்ள மத்திய லாங்கிஷா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் விண்வெளியில் பெரிய, வளைய வடிவிலான அமைப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது 130 கோடி ஒளியாண்டுகள் விட்டம் கொண்டது மற்றும் பூமியில் இருந்து பார்க்கும்போது இரவு வானில் நிலாவை அளவை விட 15 மடங்கு பெரிதாக உள்ளது. …

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ க்ளீன்மேன் பதவி, தொழில்நுட்ப செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வொரு நபரின் கைகளில் உள்ள ரேகையும் முற்றிலும் தனித்துவமானது என்று ஒரு பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் அந்த நம்பிக்கைக்கு இப்போது கொலம்பியா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி ஒன்றின் மூலம் சவால் விடப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க பல்கலைக் கழகத்தில் உள்ள ஒரு குழு, 60 ஆயிரம் கைரேகைகளை ஆய்வு செய்ய ஒரு செயற்கை நுண்ணறிவுக் கருவியைப் பயிற்றுவித்தது. ஒருவரின் வெவ்வேறு விரல்களிலிருந்து பெறப்பட்ட கைரேகைகள் ஒரே நபருடையது தானா என்பதை 75-90% துல்லியத்துடன் இந்த தொழில்நுட்ப கருவி அடையாளம் காண …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.