செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
கூவுவதற்கான உரிமையை.. சட்டப் போராட்டத்தின் ஊடாக வெற்றி கொண்ட சேவல்! பாரம்பரியமாக இயற்கையுடன் ஒன்றித்து மனித சமூகத்திற்கு பயனுள்ள பறவையாக வாழும் சேவலுக்கு கூவுவதற்கும் சட்டரீதியாக உரிமையை பெற வேண்டிய சூழ்நிலை பிரான்சில் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் அந்த நாட்டினரிடையே அபூர்வமான வழக்காக பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், மொரிஸ் என்கின்ற சர்ச்சைக்குரிய சேவலுக்கு காலையில் கூவுவதற்கான அனுமதியை பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று வழங்கியுள்ளது. கிராமத்தில் வசிப்பவர்களுக்கும், நகரத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலின் அடையாளமாக நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், மொரிஸ் என்ற இந்த சேவல் தனது காலை வழக்கத்தை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவல் உரிமையாளரின்…
-
- 2 replies
- 529 views
-
-
டைம்ஸ் ஆஃப் இந்தியா: மத்திய பிரதேசத்தில் மழை நிற்க வேண்டி தவளைகளுக்கு விவாகரத்து மத்திய பிரதேசத்தில் பெய்துவரும் கடும் மழையை நிறுத்த வேண்டி ஓம் ஷிவ் சேவா மண்டல் உறுப்பினர்கள் தவளைக்கு விவாகரத்து செய்யும் பூஜையை பரிகாரமாக செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் இதே தவளைகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஓம் ஷிவ் சேவா மண்டல் உறுப்பினர்கள் திருமணம் செய்து வைத்தனர். மழை கடவுளை மகிழ்விக்கும் முயற்சியில் மத்திய பிரதேசம் போபாலில் உள்ள இந்திரபுரி கோயிலில் வேத மந்திரங்கள் ஒலிக்க …
-
- 1 reply
- 1.1k views
-
-
மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் விமானத்தில் நின்று கொண்டே பயணித்த கணவர்! மனைவிக்காக விமானத்தில் சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணித்த கணவரின் புகைப்படம் வைரலாகியுள்ளது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும். பெரும்பாலும் அவை சினிமா நடிகர், நடிகையரின் புகைப்படங்களாகவோ, அல்லது விலங்குகள், குழந்தைகள் சேட்டை செய்யும் புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ தான் இருக்கும். ஆனால் தற்போது வைரலாகியுள்ள புகைப்படம், மனிதநேயத்தையும், கணவன் - மனைவி இடையேயான காதலை சொல்லும் வகையில் அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த புகைப்படத்தில் ஒரு ஆண் விமானத்தில் நின்றபடி இருக்கிறார். அவருக்கு அருகில் ஒரு பெண் இருக்கையில் படுத்து உறங்குகிறார்.இந்த…
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
வங்கி தவறுதலாக வைப்பிலிட்ட பணத்தை, செலவிட்ட தம்பதி மீது வழக்கு! அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள வங்கி ஒன்று, தங்களது வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் தவறுதலாக லட்சக்கணக்கான அமெரிக்க டொலர்கள் பணத்தை வைப்பிலிட்ட நிலையில், அதனை அவர்கள் முழுவதுமாக செலவு செய்துள்ளனர். ரொபர்ட் மற்றும் டிஃபானி வில்லியம்ஸ் ஜோடியின் வங்கி கணக்கில் 1,20,000 டொலர்கள் பணத்தை வங்கி தவறுதலாக வைப்பு செய்திருந்தது. அதில் அவர்கள் SUV கார், மற்றும் பிற பொருட்களை வாங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப்பணம் அவர்களுக்கு சொந்தம் இல்லை என்று தெரிந்தும், அவர்கள் அதனை செலவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்…
-
- 1 reply
- 816 views
-
-
யாருடைய உதவியையும் பெறாமல், படகில் உலகைச் சுற்றிவந்த 77 வயது பெண்! உலக சாதனைக்கும், வீரதீர செயல்களுக்கும் வயதோ, தோற்றமோ தடையல்ல என்பதை பிரித்தானியாவைச் சேர்ந்த 77 வயதான பெண்ணொருவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். ஜீன் சோக்ரடீஸ் (Jeanne Socrates) என்பவர் தன்னந்தனியாக, இடையில் எங்கும் தங்காமல், யாருடைய உதவியும் இன்றி உலகத்தை சுற்றிவந்த படகோட்டி என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த வருடம் ஒக்ரோபர் 3 ஆம் திகதியில் இருந்து இந்த மாதம் 7 வரையான 330 நாள்களைத் தனியே கடலில் கழித்த அவர் கனடாவின் விக்டோரியா துறைமுகத்தைச் சென்றடைந்தார். தனது வெற்றிப்பயணம் பல சவால்கள் நிறைந்ததாக இருந்து என்று ஜீன் தெரிவித்துள்ளார். படகின் ரேடார் தொடர்புக் கருவி, திரைச்சீலை போன்றவை சேதமடைந…
-
- 0 replies
- 399 views
-
-
ஹிஜாப் அணிந்து கொண்டு ஆபாசக்காட்சியில் நடிக்க சொன்னபோது, "அப்படி ஒரு காட்சியில் நடித்தால் நான் கொல்லப்படுவேன்" என்று அவர்களிடம் சொன்னேன். ஆனால், அவர்கள் சிரித்தார்கள். செய்ய மாட்டேன் என்று சொல்ல தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது என்கிறார் பிபிசி ஹார்ட் டாக் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ஆபாசப்பட நடிகை மியா கலிஃபா. அவர் எவ்வாறு ஆபாசப்படத்துறைக்கு வந்தார், அவரது அனுபவங்கள், அதிலிருந்து வெளியேறியது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசியுள்ளார். அந்தப் பேட்டியின் தொகுப்பு: …
-
- 0 replies
- 554 views
-
-
ஆன்மீக சக்தியால் நோயை குணப்படுத்துவதாக நடத்தப்பட்ட நிகழ்வில் நோயாளர்கள் இருவர் உயிரிழப்பு ஆன்மீக சக்தியால் நோய்களை குணப்படுத்துவதாக கூறி அனுராதபுரம் ஹொரவபொத்தானை பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆரோக்கிய முகாமில் கலந்துகொண்டிருந்த நோயாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண்னொருவரும் காலி பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவரும் இவ்வாறாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மேலும் 18பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆன்மீக சக்தியில் நோய்களைக் குணப்படுத்துவதாக கூறப்படும் நபர் ஒருவரால் ஹொரவப்பொத்தானை மத்திய மகா வித்தியாலயத்தின் மைத்தானத…
-
- 0 replies
- 396 views
-
-
74 வயதான எர்ராமட்டி மங்கம்மா என்ற வயோதிப பெண் அறுவை சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் ஒன்று இந்தியாவின் ஆந்திராவில் குண்டூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நெலபார்த்திபாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எர்ராமட்டி மங்கம்மா (வயது 74) அவரின் கணவர் எர்ராமட்டி ராஜா ராவ் (வயது 80). இந்த தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லத காரணத்தால் சமூகத்தில் பெரும் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. இதனால் எப்படியாவது ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்ற அவர்களின் கனவை நனவாக்க முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றி கண்டுள்ளனர். பொதுவாக ஒரு பெண்ணின் கருத்தரித்தல் காலம் அவரின் (…
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
சீனாவில் பெரும் டிராஃபிக் நடுவே 12 வழிச்சாலையை கடக்க முயன்ற முதியவர் - பிறகு நடந்தது என்ன? சிசிடிவி காட்சிகள்
-
- 1 reply
- 383 views
-
-
வீடு கட்ட, அஸ்திவாரம் தோண்டியவருக்கு தங்கப் புதையல்.. அள்ளிக்கொண்டு போன போலீஸ் உத்தப்பிரதேசத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியவருக்கு குவியல் குவியலாக தங்க நகைகள் புதையலாக கிடைத்துள்ளது. இதை அவர் மறைக்க முயன்ற நிலையில், ஊருக்குள் தகவல் கசிந்து கடைசியில் போலீஸ் நகைகளை அள்ளிக்கொண்டுபோனது. இதன் மதிப்பு ரூ.25லட்சம் என போலீசார் தெரிவித்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்டோய் நகரில் ஒருவர் புதிதாக வீடு கட்டுவதற்காக நிலத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மண்ணுக்குள் தங்கம் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தார். அந்த புதையலை எடுத்து பார்த்த போது, அதில் 650 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி ஆபரணங்களை இருப்பதை அறிந்தார். ஆனால் இதை யாருக்கும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
இரவில் மாடுகளால் ஏற்படும் விபத்தை தடுக்க சூப்பர் பிளான் போட்ட உ.பி. அரசு ! ஐடியாவை கண்டு அசந்து போன மக்கள் ! பொதுவாக இரவு நேரங்களில், கார், பைக், லாரி, பஸ் போன்ற வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுவது இல்லை. இரவு நேர பேருந்துகள், மற்றும் சொந்த பயணங்களை மேற்கொள்ளுபவர்கள் மட்டுமே பயணம் செய்வார்கள். அதுவும் இரவு நேரங்களில் டிராபிக் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால், 100 கிலோ மீட்டருக்கு குறைவாக வாகனங்கள் செல்வதில்லை. இப்படி செல்லும் போது, அடிக்கடி... நாய்கள் மற்றும் மாடுகள் விபத்துக்குள்ளாகிறது. குறிப்பாக மாடுகளால் ஏகப்பட்ட விபத்துகள் நடப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில், இது போல் நடு ரோடுகளில் அலைந்து கொண்டிருக்கும் மாட…
-
- 1 reply
- 749 views
-
-
தென் ஆப்பிரிக்க சமையல்காரர் ஒருவர், பூச்சி உணவின் ருசியை அறிந்து கொள்ள முயன்று தற்போது பூச்சி உணவு மட்டுமே கொண்ட உணவகத்தை தொடங்கி நடத்தி வருகிறார். 4 ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்து சென்றிருந்த சமையல்காரர் மரியோ பர்னார்ட், உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார். அங்கு கொடுக்கப்பட்ட வறுத்த தேள் மற்றும் மசாலாவுடன் சேர்த்த பூச்சிகளை அருவருப்பால் உண்ணமுடியாமல் உணவகத்தை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் அந்த பூச்சிகளின் சுவை எப்படி இருக்கும் என்ற ஆர்வம் மரியோவுக்கு அதிகரிக்கவே அது அவரை தென் ஆப்பிரிக்காவில் முதல் பூச்சி உணவகம் ஒன்றை தொடங்கி தூண்டியுள்ளது. இது குறித்து மரியோ பேசுகையில், இன்செட் எக்ஸ்பீரியன்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பூச்சி உணவகம் உலகம் முழுவதும் ப…
-
- 1 reply
- 353 views
-
-
மனிதனுக்கு மரணம் என்பது எந்த நேரத்தில் நிகழும் என்பது தெரியாது என்பதற்கு சான்றாக கர்நாடகாவில் ஒரு விடயம் நடந்தேறியுள்ளது. இந்தியாவில், கர்நாடகாவில் மேடை பாடகர் ஒருவருக்கு நேர்ந்த மரணம், நினைத்தாலே நெஞ்சத்தை பதற வைப்பதாக உள்ளது. கர்நாடகாவில் புழக்கத்தில் உள்ள மொழிகளில் ஒன்று கொங்கணி. இந்த மொழியில் அருமையான பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம்பிடித்தவர், ஜெர்ரி போஜ்ஜோடி. 51 வயததகிறது. கர்நா…
-
- 0 replies
- 825 views
-
-
சுற்றுலா தளமாக்கப்படும் மோடி தேத்தண்ணீர் விற்ற இடம்... ஏழை மகனுக்கு புகழாரம்..! பிரதமர் நரேந்திர மோடி தேத்தண்ணீர் விற்ற இடம் சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மோடி இளம் வயதில் தான் தேத்தண்ணீர் விற்றதாக அவரே கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தேத்தண்ணீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குஜராத்தில் உள்ள வாட்நகர் ரயில் நிலையத்தில்தான் தேத்தண்ணீர் விற்பனை செய்து வந்தார். கடந்த காலங்களில் அவர் கணிசமான நேரத்தை செலவிட்ட ஸ்ராலை ஒரு சுற்றுலா இடமாக மாற்ற மாநில அரசு இப்போது முடிவு செய்துள்ளது. அதன் பழமையை மாற்றாமல் இந்த ஸ்ரால் ஒரு சுற்றுலாத் தளமாக்கப்பட உள்ளது. இது தொடர்…
-
- 1 reply
- 605 views
-
-
‘என் கடவுளே, என்ன நடந்தது?’ டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசியம் கசிந்தது! பிரான்ஸில் 22 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. டயானாவின் உயிரை காப்பாற்ற போராடிய பரிஸ் தீயணைப்பு வீரர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஊடாக இந்த இரகசியம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டுள்ள பரிஸ் தீயணைப்பு வீரர் Xavier Gourmelon, ‘1997 ஆம் ஆண்டில் பரிஸில் உள்ள ஆல்மா சுரங்கப்பாதையில் இளவரசி சென்ற விபத்துக்குள்ளான போது, சம்பவ இடத்திற்கு சென்ற அவசர உதவி சேவை வீரர்களில் நானும் ஒருவர். கார் விபத்துக்குள்ளாகி இருந்தது, வழக்கமான வீதி விபத்து …
-
- 0 replies
- 374 views
-
-
சூழலுக்கு உகந்த வகையில், செடிகளாக வளரும் விநாயகர் சிலைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. "தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் இந்த விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துப் பேசிய துறை இயக்குநர் சுப்பையன், ''இந்த ஆண்டு 3000 சிலைகளை உருவாக்கி உள்ளோம். மாதவரத்தில் கிடைக்கும் களிமண் மிகுந்த சத்துகள் நிறைந்தது. செடிகள் வளர ஏதுவானது. அதனால் மாதவரத்தில் கிடைக்கும் மண்ணைப் பயன்படுத்தியுள்ளோம். கத்தரி, தக்காளி, மிளகாய் மற்றும் பச்சைக் காய்கறிகளின் விதைகளை மட்டுமே சிலைகளில் பயன்படுத்தினோம். விருப்பமுள்ளவர்கள் பழ வகைகள், மரங்கள் ஆகியவற்றைக் கொண்ட விதைகளைக் கேட்டாலும், உருவாக்கிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். சிலைக…
-
- 2 replies
- 928 views
-
-
மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்! பிரித்தானிய மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் பெண்கள், குழந்தைகள் என பலரையும் பாலியல் குற்றத்தில் ஈடுபட வைத்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் அவருடைய நெருங்கிய நண்பரான பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவும், சிறுமிகளுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அரண்மனை நிர்வாகமும், இளவரசரும் மறுப்பு தெர…
-
- 6 replies
- 1k views
-
-
தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் சில கோழிகளை வளர்த்து வந்தார். கோழிகளைப் பராமரிப்பது, அவற்றுக்குத் தேவையான பணிகளையும் அவரே கவனித்து வந்துள்ளார். கோழி முட்டைகளை எடுப்பதற்காக வீட்டின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கூண்டுக்குச் சென்று அங்கிருந்த முட்டைகளை எடுத்துள்ளார். இதைக் கவனித்த சேவல் ஒன்று அவரது கால் நரம்புகளில் கொத்தியுள்ளது. அவரைத் தொடர்ந்து அங்கிருந்து நகரவிடாமல் காலில் கொத்தியுள்ளது. அந்தப்பெண் வெரிகோஸ் வெயின் என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் காலின் தொடைப்பகுதிகளுக்குக் கீழ் நரம்புகள் முடிச்சு போட்டு இருப்பதுபோல் இருக்கும். இதன் காரணமாகக் கால் பகுதியில் ரத்த ஓட்டத்தில் பாத…
-
- 0 replies
- 614 views
-
-
சென்னையில் தலைக்கவசம் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்த சம்பவம் நடந்தேறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் - நந்தினி தம்பதியினருக்கு போக்குவரத்து காவல்துறையினரிடமிருந்து குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதற்காக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அதில் குறிப்பிட்டிருந்த எண், நந்தினி பயன்படுத்தி வந்த காரின் வாகன பதிவெண் ஆகும். இதுகுறித்து, யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் இந்த தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று அ…
-
- 0 replies
- 324 views
-
-
50 டொலர்கள் கொள்ளையடித்தமைக்காக 36 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டவர் விடுதலை August 31, 2019 50 அமெரிக்க டொலர்களை அங்காடி ஒன்றிலிருந்து திருடியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 36 ஆண்டுகளை சிறை வைக்கப்பட்டவரை அமெரிக்காவின் அலபாமா மாகாண நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில் 1970களில் அமுல்படுத்தப்பட்ட கடுமையான விதிமுறைகளின் கீழ் கைது செய்யப்பட்ட ஆல்வின் கென்னார்ட் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்போது 58 வயதாகின்ற ஆல்வின் தான் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் செய்துகொண்டிருந்த தச்சர் வேலையை மீண்டும் தொடருவதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டு, அவருக்கு 22 வயதிரு…
-
- 0 replies
- 418 views
-
-
எனக்கு பெட் அனிமல்ஸ் பிடிக்கும், நான் விலங்கு நல ஆர்வலர் என யார் வேண்டுமானாலும் சோசியல் மீடியாவில் சொல்லிக் கொள்வது சுலபம். ஆனால், நிஜ வாழ்க்கையில் மற்ற உயிரினங்களின் மீது அளவு கடந்த அன்பு காட்டுபவர்கள் வெகு சிலரே. அப்படியான ஒருவர்தான் குரோசியாவைச் சேர்ந்த ஸ்டெஜபன் வோகிக். கடந்த 27 ஆண்டுகளாகத்தான் தத்தெடுத்த நாரையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். இந்தக் கட்டுரை வோகிக் பற்றியது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், கட்டுரையின் முடிவில் ஒரு அற்புதமான ரொமாண்டிக் மூவி பார்த்த உணர்வு உங்களுக்கு இருக்கும் என்பது நிச்சயம். குரோசியாவில், Brodski Varos என்னும் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்பட்ட நிலையில் கிடந்த நீர் பறவையை மீட்டு முதலுதவி செய்தார் வ…
-
- 3 replies
- 1.1k views
-
-
முச்சக்கர வண்டி மோதியதில் அடிபட்டு உயிருக்கு போராடிய தனது கன்றுக் குட்டியைப் பார்த்து பதறிய தாய்ப் பசு, கன்றை நாக்கினால் தடவி பாசப் போராட்டம் நடத்தியக் காட்சி கண்டோரின் கண்களில் நீரை வரவழைத்தது. தமிழகத்தின் திருச்சி மன்னார்புரத்தில் இருந்து கே.கே.நகருக்கு ஒரு முச்சக்கர வண்டி சென்று கொண்டிருந்தது. காஜாமலை காலனி அருகே அந்த முச்சக்கர வண்டி சென்றபோது, ஓடிவந்த கன்றுக் குட்டி அதன் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், முச்சக்கர சாரதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. முச்சக்கர வண்டி மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட கன்றுக் குட்டி, படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்…
-
- 0 replies
- 432 views
-
-
சுமார் 3.8 மில்லியன் வருடங்களுக்கு முந்திய குரங்கின மனிதர் ஒருவரது மண்டை ஓட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எத்தியோப்பியாவில் இந்த மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆய்வுக்கு உட்படுத்தி, மனித இனப்பரம்பல் குறித்த புதிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குரங்குகளில் இருந்து மனிதர்கள் கூர்ப்பு அடைந்ததாக நம்பப்படுகிறது. இந்த கோட்பாட்டில் இதுவரையில் நம்பப்பட்டுவந்த விடயங்களில் மாற்றி அமைக்கக்கூடிய தகவல்கள், இந்த மண்டை ஓட்டின் ஆய்வின் மூலம் வெளிப்படலாம் என்றும் நம்பப்படுகிறது. http://www.hirunews.lk/tamil/223198/குரங்கின-மனிதர்-ஒருவரது-மண்டை-ஓடு-கண்டுப்பிடிப்பு
-
- 0 replies
- 366 views
-
-
இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமான இன்று (வியாழக்கிழமை) இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, விளையாட்டு மற்றும் உடல் பயிற்சியை ஊக்குவிக்கும் நோக்குடன் 'ஃபிட் இந்தியா மூமண்ட்' (FIT INDIA MOVEMENT) எனும் பிரசாரத்தை டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதன் நோக்கம் என்ன? இந்தியாவின் தேசிய விளையாட்டு தினம் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாட்டு மக்களின் தினசரி செயல்பாட்டில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டை இணைப்பதற்கு ஊக்குவிக்கும் 'ஃபிட் இந்தியா மூமண்ட்' எனும் பிரசாரத்தின் தொடக்க விழ…
-
- 0 replies
- 305 views
-
-
பெருவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரலாற்றில் மிகப்பெரிய குழந்தைகளின் திரள் குழந்தைகள் பிணக்குவியலை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஐந்து முதல் 14 வயதுக்குட்பட்ட 227 சிறார்களின் சடலங்கள் பெருவின் தலைநகர் லிமாவுக்கு வடக்கே உள்ள கடலோர நகரமான ஹுவான்சாகோ அருகே கண்டெடுக்கப்பட்டன. இந்த குழந்தைகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சென்ற ஆண்டு இதே நாட்டின் இருவேறு பகுதிகளில் 200 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டன. சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிறுவர்களின் பிணக்குவியலில் சிலரது முடி மற்றும் தோல் புதைக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் ப…
-
- 3 replies
- 657 views
-