செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மற்றும் மத்திய அமைச்சருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டிலில் பாம்பு குட்டி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், அம்மாநில முதல்வர் ராமன் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அமன் அகூவா என்ற தனியார் நிறுவனம் 20 தண்ணீர் பாட்டில்களை வழங்கியிருந்தது. அந்த குடிதண்ணீர் பாட்டில்கள் முதலமைச்சர், மத்திய அமைச்சர் உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்டது. அப்போது அங்கிருந்த தண்ணீர் பாட்டில் ஒன்றில் சிறிய பாம்புக் குட்டி ஒன்று நெளிவதை …
-
- 0 replies
- 289 views
-
-
கம்ப்யூட்டரில் தொடர்ந்து 22 நாட்களாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென உயிரிழந்தார். ரஷ்யாவின் உச்சாலி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ருஸ்டம். கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட அவன், தனிமையில் இருக்கும்போதெல்லாம் மணிக்கணக்கில் விளையாடி பொழுதைக் கழிப்பான். குறிப்பாக 'டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ்' எனும் பழங்கால போர் தொடர்பான வீடியோ கேமை ஆரம்பித்தால் தன்னையே மறந்துவிடுவான். இந்நிலையில், கடந்த மாதம் விபத்தில் அவனது கால் முறிந்தது. குணமடையும் வரை வரை வீட்டில் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்ததால் படுக்கையை விட்டு நகரவில்லை. வீட்டில் தனது விருப்பமான டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ் வீடியோ கேமை கம்ப்யூட்டரில் விளையாடத் தொடங்கிய ருஸ்டம், …
-
- 0 replies
- 878 views
-
-
-
- 0 replies
- 285 views
-
-
-
- 0 replies
- 273 views
-
-
நடிகையுடன் ஊர் சுற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். இவர் கடைசியாக, 2013-ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதன்பின் அவர் அணியில் இடம்பெறவில்லை. கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் பல்வேறு நடிகைகளுடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்ட இவர், தற்போது லண்டன் நடிகை ஒருவருடன் டேட்டிங் சென்றதாக தகவல் பரவியுள்ளது. அந்த நடிகை பெயர் ஹசல் கீச் (28) என்று சொல்லப்படுகிறது. இவர் ஹிந்தியில் வசூலை வாரிக் குவித்த பாடிகார்டு படத்தில் நடித்துள்ளார். அத்துடன் அவர் பில்லா படத்திலும் நடித்துள்ளார். இருவரும் லண்டனில் ஒன்றாக இணைந்து சுற்றியுள்ளதாகவும்…
-
- 0 replies
- 360 views
-
-
ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு அமெரிக்க நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு [ ஞாயிற்றுக்கிழமை, 06 செப்ரெம்பர் 2015, 01:34.50 AM GMT ] அமெரிக்காவிலுள்ள எட்டு ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை அந்நாட்டு நீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிய வருகிறது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “பொரின் பொலிஸ்” சஞ்சிகை இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அமெரிக்க பிரஜைகளான பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, துமிந்த மனோஜ் ராஜபக்ச, புஷ்பா ராஜபக்ச, தேஜானி ராஜபக்ச, பிசல்கா ராஜபக்ச, டட்லி ராஜபக்ச, ஷசீந்திர ராஜபக்ச ஆகியோருக்கே இந்த நீதிமன்ற அறிவிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இலங்கையின் புகழை உயர்த்துவதற்காக இலங்கை மத்திய வங்கி 65 லட்சம் டொ…
-
- 0 replies
- 311 views
-
-
கனடா- மருத்துவ பயிற்சியற்ற வரவேற்பாளர் ஒருவர் தனது மூன்று வயது மகனிற்கு கண் இமையில் ஏற்பட்ட சிறிய வெட்டு காயத்திற்கு ஒட்டுவதற்கு சாதாரண பசையை பாவித்தார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.கியுபெக்கை சேர்ந்த இவர் தான் அதிர்ச்சியடைந்ததாகவும் இச்சம்பவம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்ததாகவும் தெரியப்படுத்தினார்.அவர்களது பூனை சிறுவன் வின்னியின் கண் இமையில் கீறியதால் வீட்டிற்கு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவ மனை ஒன்றிற்கு மகனை கொண்டு சென்றார்.வைத்தியர் மருத்துவ பசையினால் காயத்தை அடைத்து விடலாம் என தீர்மானித்து தனது சக பணியாளரை அழைத்தார்.வைத்தியர் சிறுவனையும் அவனது கண்ணையும் பிடித்திருக்க சக பணியாளர் பசையை பூசியுள்ளார். கண்ணும் மூடிவிட்டது. கண்ணை திறக்க முடியவில்லை என சிறுவன் கத்தினா…
-
- 0 replies
- 329 views
-
-
இந்த நவீன உலகில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுவதால், குழந்தைகளுடன் வெளியே செல்வது அவர்களுக்கு சவாலான காரியமாகவே உள்ளது. அடிக்கடி வெளியில் சுற்றுலா செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டு கிடப்பது குழந்தைகளுக்கு தனிமையான உணர்வை கொடுக்கலாம். இது அவர்களது இளமைக்கால மகிழ்ச்சியை கூட குறைக்கலாம். நீண்ட தூரம் பயணம் செய்து பல்வேறு விதமான மக்களின் வாழ்க்கை முறையை உணர்வது அற்புதமான மனிதனை செதுக்கும். கனடா நாட்டை சேர்ந்த தம்பதி, தங்கள் குழந்தைகளுக்கு அவர்களது வாழ்நாளில் அழிக்க முடியாத சந்தோஷமான தருணத்தை கொடுக்க நினைத்தனர். புருஸ் கிர்பை மற்றும் கிரிஷ்டின் பிட்கெனென் என்ற அந்த தம்பதி தங்களது இரு ஆண் குழந்தைகளையும் உலகம் முழுவதும் சுற்றுலாவாக அழைத்து செல்ல எண்ணினர். அது பெரும்பாலா…
-
- 0 replies
- 338 views
-
-
ம்ரிதா ராய் தனது பேஸ்புக் பக்கத்தில், தானும் திக்விஜய் சிங்கும் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டு, அதனை பதிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அம்ரிதா ராய் இது தொடர்பாக தனது பெஸ்பு பக்கத்தில், நானும், திக்விஜய் சிங்கும் திருமணத்தை நடத்தி முடித்துள்ளோம் என்பது எனது நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்து மத முறைப்படி இந்தத் திருமணம் நடந்தது. மேலும் எங்களது திருமணத்தையும் பின்னர் முறைப்படி பதிவு செய்து கொண்டோம். இந்தத் தருணத்தில், கஷ்டமான நேரத்தில் என்னுடன் வழிநெடுக துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மிகக் கடினமான கட்டத்தைத் தாண்டி வந்துள்ளேன். கடந்த ஒன்றரை வருடங்கள் எனக்கு மிகவும் கடினமானதாக, துயரம் மிகுந்ததாக, …
-
- 3 replies
- 385 views
-
-
ஃபரீதாபாத் இடையிலான மெட்ரோ விரிவாக்க வழித் தடத்தை ஹுடா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் தொடக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தில்லி ஜன்பத் மெட்ரோ நிலையத்திலிருந்து பாட்டா செக் வரை மெட்ரோ ரயிலில் ஞாயிற்றுக்கிழமை திடீர் பயணம் செய்தார். அவர் ஃபரீதாபாத் சிவில் நீதிமன்ற வளாக மைதானத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று பதர்பூர்-ஃபரீதாபாத் இடையிலான மெட்ரோ விரிவாக்க வழித் தடத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஹெலிகாப்டரில் பயணிப்பதை தவிர்த்துவிட்டு, அவர் திடீரென மெட்ரோ ரயிலில் பயணித்தார். ஜன்பத் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சுமார் காலை 10 மணிக்கு புறப்பட்டார். 32 கிலோ மீட்டர் தொலைவுடைய, விழா நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள பாட்டா செக் வ…
-
- 0 replies
- 161 views
-
-
ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்த பெண் ஒருவர், செக்ஸ் அடிமை சந்தைகளில் பெண்கள் எவ்வாறு விற்கப்படுகிறார்கள் என்பது குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களிடம் பிணைக்கைதிகளாக உள்ள பெண்களை செக்ஸ் அடிமைகளாக விற்று வருகின்றனர். இந்நிலையில் இவர்களிடம் இருந்து தப்பித்து வந்த ஜீனன்18) என்ற யாஸிதி பெண், தனக்கு ஏற்பட்ட சோதனைகள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த புத்தகம் இன்று வெளியிடப்பட்டுள்ளது, அந்த புத்தகத்தில் அவர் கூறியுள்ளதாவது, ஐ.எஸ் தீவிரவாதிகள் என்னை மதம் மாறுமாறு வலியுறுத்தினர். இதற்கு நான் மறுத்துவிட்டதால் செத்த எலி கிடந்த தண்ணீரை குடிக்குமாறு என்னை வற்புறுத்தினர், மேலும் ஒரு கட்டத்தில் உனக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத…
-
- 0 replies
- 383 views
-
-
60 வயது 'மிஸ்டர் பீன்' கொண்டாடிய 25வது பிறந்தநாள்! கலகலப்பான தோற்றம், பார்த்தாலே சிரிப்பு வரும் சைகைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கவரும் கதாபாத்திரம் தான் மிஸ்டர் பீன். கடந்த வெள்ளிக்கிழமையோடு மிஸ்டர் பீன் கதாப்பாத்திரம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை வித்தியாசமான முறையில் கொண்டாடினார் 60வது வயதான ரோவன் அட்கின்சன். 1994ம் ஆண்டில் ரோவன் அட்கின்சன் (Rowan Atkinson) நடித்த மிஸ்டர் பீனின் பகுதியில் இருந்து வரும் ஒரு காட்சியை நேரடியாக செய்து காட்டி அசத்தினார்.அதில் தனது கார் முழுவதும் பரிசு பொருட்களால் நிறைந்து விட அதனை சமாளிக்க காரின் மீது ஒரு நாற்காலியை வைத்து அதில் அமர்ந்து காரை இயக்குவார் பீன்.அதேபோல் 25வது வருடத்தை லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனையை பிர…
-
- 0 replies
- 766 views
-
-
சாண்டியாகோ: தாய் மது போதையில் நினைவிழந்து கிடந்ததால், பசியால் கதறிய இரண்டு வயது குழந்தைக்கு நாய் பாலூட்டிய சம்பவம் சிலியில் நடந்துள்ளது. ஆப்பிரிக்காவின் துறைமுக நாடு என்றழைக்கப்படுவது சிலி நாடாகும். இந்நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் இருந்து சுமார் ஆயிரம் மைல் தொலைவில் உள்ள கிராமமொன்றில், மெக்கானிக் ஷெட் அருகில் நாய் ஒன்றிடம் இரண்டு வயது குழந்தைப் பால் குடித்துக் கொண்டிருப்பதை வழிப்போக்கர் ஒருவர் கண்டார். அதன் அருகிலேயே அக்குழந்தையின் தாயார் மது போதையில் கிடந்துள்ளார். http://tamil.oneindia.com/news/international/malnourished-two-year-old-found-being-breastfed-dog-chile-235093.html
-
- 1 reply
- 259 views
-
-
கனடாவில் போலி மந்திரவாதிகள் மற்றும் சோதிடர்கள் மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ளவர்களை குறிவைத்து லட்சக்கணக்கான டொலர்களை கொள்ளையடித்து வருவதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் எட்மோண்டன் மாகாணத்தில் போலி மந்திரவாதிகள் மற்றும் சோதிடர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிசாருக்கு அதிகளவில் புகார்கள் வந்துள்ளன.மூடநம்பிக்கைகள் மற்றும் போலியான மதச்சடங்குகளை பின்பற்றி வரும் பலவீனமான மக்களை குறிவைத்து அந்த கும்பல் செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற மக்களை சந்திக்கும் சோதிடர்கள், அவர்கள் மிக மோசமான சாபத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனை நீக்கி வாழ்க்கையில் சுபிச்சம் உண்டாக வேண்டுமெனில் சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான டொலர்களை பறித்து வரு…
-
- 1 reply
- 387 views
-
-
பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன் 3-வது முறையாக கர்ப்பமாக இருப்பது உண்மைதான் என அந்நாட்டில் வெளியாகும் வாரப்பத்திரிகை ஒன்று பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய இளவரசி மூன்றாவது குழந்தைக்கு தயாரா என சில வாரங்களுக்கு முன்னர் எழுந்த பரபரப்பிற்கு தற்போது ஒரு பதில் கிடைத்துள்ளது. குட்டி இளவரசியான சார்லோட் பிறந்து 4 மாதங்களுக்கு பிறகு இந்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இளவரசர் வில்லியமும், இளவரசி கேட் மிடில்டன்னும் அடைகாத்து வந்த ரகசியத்தை அந்நாட்டில் வெளியாகும் ஸ்டார் என்ற வாரப்பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. பத்திரிகைக்கு நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதில், இளவரசி 3-வது முறையாக கர்ப்பமாக இருப்பது உண…
-
- 0 replies
- 365 views
-
-
எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் பதவியேற்பு! கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பதற்றம்! [ வியாழக்கிழமை, 03 செப்ரெம்பர் 2015, 06:09.35 PM GMT ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இன்று எதிர்கட்சி தலைவராக தெரிவாகியதன் பின்னர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செல் நம்பர் J பிரிவில் அடைக்கப்பட்ட கணிசமான தமிழ் அரசியல் கைதிகள் சித்திரவதைக்குட்பட்டுள்ளனர். அப் பகுதிக்கு இன்று மாலை 4:00 மணியளவில் குறித்த J பிரிவுக்கு சென்ற சிறைக் காவலர்கள் எதிர்க் கட்சி தலைவராக உங்கள் தலைவரா தெரிவாகியுள்ளார் எனக் கேட்டு தாக்கியதோடு, இது எங்களுடைய நாடு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது எனக் கேள்விகளைக் கேட்டவாறே அரசியல் கைதிகளை நிர்வாணப்படுத்தியதுடன் அடைமழைக்குள் அவர்களை தள்…
-
- 7 replies
- 433 views
-
-
பெய்ஜிங்: சீனாவில் நூடுல்ஸ் சாப்பிடும் ஆர்வத்தில் ஸ்பூனையும் சேர்த்து விழுங்கி விட்டார் பெண் ஒருவர். அதிர்ஷ்டவசமாக அந்த ஸ்பூனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஸ்பூனுக்கும் ஒன்றும் ஆகவில்லை! சீனாவின் கிழக்குப் பகுதியில் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்ஷகு நகரைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று ரசித்து ருசித்து நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது நூடுல்ஸை வாயில் போடும் ஆர்வத்தில் கையில் இருந்த ஸ்பூனையும் அவர் சேர்த்து விழுங்கி விட்டார். ஸ்பூன் தொண்டைப் பகுதியைத் தாண்டி வயிற்றுப் பகுதிக்குச் சென்று விட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார் அப்பெண். அங்கு மருத்துவர்களிடம் தன் நிலையை அவர் விளக்கியுள்ளார். வலி ஏதும் இல்லாமல் சாதாரணமாக இருப்பத…
-
- 0 replies
- 278 views
-
-
ரயில் நிலையத்தில் வைத்து தனது அலைபேசியில் ஆபாச படம்பார்த்த சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார், விசாரணைகளின் பின்னர் அவரை விடுவித்த சம்பவமொன்று தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரணவீர பட்டபெதிலாகே ரணில் விக்கிரமசிங்க என்ற இளைஞனே இவ்வாறு ஆபாச படம்பார்த்துகொண்டிருந்துள்ளார். அவரை அவரது தந்தையான ஆர்.பி. மைத்திரிபால பொலிஸுக்கு வந்து பொலிஸ் பிணையில் மகனை அழைத்துச் சென்றார். - See more at: http://www.tamilmirror.lk/153328/ஆப-சப-படம-ப-ர-த-த-ரண-ல-ப-ண-ய-ல-எட-த-த-ர-ம-த-த-ர-#sthash.z75fU7mu.dpuf
-
- 2 replies
- 767 views
-
-
சிகரெட் குப்பைகளை தடுக்க லண்டன் மாநகராட்சியின் அட்டகாச ஐடியா! சிகரெட் குடித்துவிட்டு கண்டபடி ரோட்டில் வீசுவதை தடுக்க, லண்டன் மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. எந்த நடவடிக்கைக்கும் புகைப்பவர்கள் மசியவில்லை. ரோட்டில் சிகரெட் துண்டுகள் வீசப்படுவதை தடுக்க முடியவில்லை. லண்டன் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் கால்பந்து ரசிகர்கள். இதனால் கால்பந்தை மையமாக வைத்து ஏதாவது செய்தால்தான் சிகரெட் குப்பைகளை தடுக்க முடியும் என்று ஆலோசித்தது மாநகராட்சி நிர்வாகம். அந்த கண நேரத்தில் உதித்ததுதான் இந்த ஐடியா. அதாவது லண்டன் நகரத் தெருக்களில், முக்கியமாக பாதாள ரயில் நிலையங்களின் அருகில், சிறந்த கால்பந்து வீரர் ரொனால்டோவா? மெஸ்சியா? என்று எழுதி, இரு குப்பை டப்பாக்களை வைத…
-
- 0 replies
- 314 views
-
-
ஆக்கம் பெற்ற அனைத்தும் அழியவும் செய்யும் என்பது தான் உலகம் அழியும் என்று நம்பக் கூடியவர்களின் கோட்பாடாகும். அவர்களின் கோட்பாடுகளையும், அவர்கள் சொல்லும் நிதர்சனங்களையும் கேலி செய்பவர்களும் உண்டு, தீர்க்கமாக ஆராய்ந்து பார்ப்பவர்களும் உண்டு..! உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..! அப்படியாக உலகத்தின் முடிவு ஆரம்பமாக போகிறது என்று தெரிவித்துள்ளனர் 'எண்ட் டைம் பிலிவர்ஸ்' (End-times believers) அதாவது உலகம் அழியும் என்று நம்புபவர்கள். அழிவின் ஆரம்பம் என்று அவர்கள் கூற காரணமாக இருப்பது - ரத்த நிலா..!இது தான் கடந்த 2014-ஆம் ஆண்,டு ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி தோன்றிய முதல் ரத்த நிலா (Blood moon) ஆகும்..! இரண்டாவது ரத்த நிலா அக்டோபர் 08, 2014 அன்றும், மூன்றாவது ரத்த ந…
-
- 0 replies
- 1.3k views
-
-
தலையில் முளைத்த கொம்பால் அவதிப்படும் மூதாட்டி Aug 29, 2015 Bella Dalima Don't miss, Local 0 தென் மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வசித்து வரும் லியாங் க்சியுஷென்(87) என்பவருக்கு தலையில் திடீரென கொம்பு முளைத்துள்ளதால் அவதிக்குள்ளாகி வருகிறார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தலையில் சிறிய கருப்பு கட்டி ஒன்று உருவானது. அப்போதைக்கு இந்தக் கட்டியை நாட்டு வைத்தியரிடம் காண்பித்து சரிசெய்து கொண்டுள்ளார். இந்தக் கட்டி இரண்டாண்டுகளுக்கு முன் திடீரென உடைந்தது. இது தலையின் மீது சிறு விரல் அளவிளான கொம்பாக வளர்ந்தது. இதையடுத்து, பயந்துபோன லியாங்கின் மகன் அவரை அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எனினும், அவரைச் சந்தித்த மருத்துவர்களுக்கு…
-
- 0 replies
- 392 views
-
-
சீன வானில் பறந்த மர்மப்பொருள் (Video) Sep 01, 2015 Bella Dalima Don't miss, Local 0 சீனாவின் விமான நிலையம் அருகே மர்மப்பொருள் ஒன்று பறந்துள்ளது. தட்டு வடிவ விமானம் போல அது பறந்து சென்றுள்ளது. இதுகுறித்து சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அந்தப் பொருள் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை. http://newsfirst.lk/tamil/2015/09/சீன-வானில்-பறந்த-மர்மப்ப/ வந்துட்டாங்கையா! வந்துட்டாங்க!
-
- 0 replies
- 420 views
-
-
நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு மலேசிய விமானம் சென்று கொண்டிருந்தது. 235 பயணிகள் அதில் இருந்தனர்.இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் உடனடியாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அதில் இருந்த 235 பயணிகளும் இறக்கிவிடப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து விமான நிலைய என்ஜினீயர்கள் விமானத்தின் இயந்திர கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு கோளாறு சரி செய்யப்பட்டது.இதையடுத்து 235 பயணிகளும் விமானத்தில் ஏற்றப்பட்டு அதிகாலை 4.30 மணி அளவில் விமானம் புறப்பட்டு சென்றது. …
-
- 0 replies
- 255 views
-
-
உலகின் மிக விஷம் நிறைந்த மீனுக்கும் பாம்பு ஒன்றுக்கும் இடையில் நடந்த சண்டை ஒன்றை, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மீனவர் ஒருவர் படம்பிடித்துள்ளார். Image copyrightRick TrippeImage captionபாம்பை தன் வாயில் கவ்வியிருக்கும் விஷம் நிறைந்த ஸ்டோன் ஃபிஷ் மீன்.ஆஸ்திரேலியாவின் டார்வினுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் ஒரு பாம்புக்கும் மீனுக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த சண்டயை ரிக் ட்ரிப் என்ற அந்த மீனவர் பார்த்தார். இந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டதும், அவை உலகம் முழுவதும் வேகமாகப் பரவின. இரண்டாம் உலகப்போர் காலத்து சிதைவுகளைத் தேடி டார்வின் துறைமுகத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது இந்தச் சண்டையைப் பார்த்தாக ரிக் தெரிவித்துள்ளார். பாம்பையும் அதைத் தன் வாயில் கவ்வியிருந்த மீனை…
-
- 0 replies
- 456 views
-
-
அரியானா மாநிலத்தில் 96 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய புத்தகம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது. பரீதாபாத்தில் சமண மதத்தைச் சேர்ந்த புரட்சிகர துறவி முனி ஸ்ரீ தருண் சாகரின் சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகம் 2,000 கிலோ எடையில், 33 அடி உயரம், 22 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 96 மணி நேரத்தில் புத்தகத்தை உருவாக்கும் பணியில் 25 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. வரும் ஞாயிறன்று நடைபெறும் விழாவில் உலகின் மிகவும் சிறிய பெண்ணான நாக்பூரைச் சேர்ந்த ஜோதி ஆம்கே இந்த புத்தகத்தை வெளியிடுகிறார். கின்னஸ் உலக சாதனை புத்தகம் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் பதிவு செய்வதற்காக நிபுணர்கள் குழுவினர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெர…
-
- 0 replies
- 511 views
-