செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்தால் ரூ.1.25 கோடி வழங்குவதாக குற்றவாளி கடிதம் வாயிலாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் களத்தில் உள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது இரண்டு முறை நடந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 12ம் தேதி பென்சில்வேனியா மாநாட்டில் மேத்யூவ் என்று இளைஞன் நடத்திய துப்பாக்கிச…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
20 SEP, 2024 | 11:48 AM இரண்டு மணிநேரத்திற்கு மேல் 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டிருந்த தாய்லாந்தை சேர்ந்த பெண்ணை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர். தாய்லாந்தின் தலைநகரிலிருந்து இரண்டுகிலோமீற்றர் தொலைவில் உள்ள சமுட் பிரகான் என்ற மாநிலத்தில் தனது வீட்டில் மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டதாக அரோம் அருண்ரோஜ் என்ற 64 வயது பெண் தெரிவித்துள்ளார். ஆடைகளை தோய்த்துக்கொண்டிருந்தபோது ஏதோ எனது காலில் தீண்டியது போல உணர்;ந்தேன் திரும்பிப்பார்த்தபோது அது பாம்பு என அவர் தெரிவித்துள்ளார். நான் அதனை எதிர்த்து போரட முயன்றேன்,உதவிக்காக கூக்குரலிட்டேன் ஆனால் எவரும் செவிமடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். …
-
-
- 9 replies
- 620 views
- 1 follower
-
-
தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை இரண்டாக வெட்டிய கணவன் கைது ! kugenSep 19, 2024 தகாத உறவில் ஈடுபட்ட தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான கணவன் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான கணவரின் ஒரு கை போரில் ஏற்பட்ட விபத்தில் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சந்தேக நபரின் மனைவி மற்றுமொரு நபருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் சந்தேக நபரான கணவன் இது தொடர்பில் தனது மனைவிக்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுத்து வந்துள…
-
- 1 reply
- 397 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 19 JUN, 2023 | 07:51 PM டைட்டானிக்கின் சிதைவுகளை பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து செல்லும் நீர்மூழ்கியொன்று அட்லாண்டிக்கில் காணாமல்போயுள்ளது நீர்மூழ்கி காணாமல்போயுள்ள நிலையில் தேடுதல் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன நீர்மூழ்கியில் எவராவது இருந்தார்களா எத்தனைபேர் பயணம் செய்தார்கள் போன்ற விபரங்கள் வெளியாகவில்லை. சிறியநீர்மூழ்கிகள் சுற்றுலாப்பயணிகளை கப்பலின் சிதைவை பார்ப்பதற்கு அழைத்துச்செல்வது வழமை. https://www.virakesari.lk/article/158103
-
-
- 34 replies
- 3.4k views
- 1 follower
-
-
வரலாறு காணாத வறட்சி – 700 உயிரினங்களை கொன்று மக்களுக்கு வழங்க திட்டம். தென் ஆப்பிரிக்காவின் பல பிரதேசங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. அந்த நாடுகளின் தரவுப்படி கடந்த 40 ஆண்டுகளில் இது மாதிரியான வறட்சியை எதிர்கொண்டது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 83 யானைகள் உள்ளடங்கலாக சுமார் 700 வன உயிரினங்களை கொல்ல உள்ளதாக நமீபியா அறிவித்தது. இந்நிலையில், நமீபியாவை தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 50 …
-
- 0 replies
- 153 views
-
-
பட மூலாதாரம்,YOUTUBE/WAKE AND BITE படக்குறிப்பு, உணவுப் போட்டிகளுக்கு அறிவிக்கப்படும் பரிசுத் தொகை பலரை ஈர்க்கின்றது. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 16 செப்டெம்பர் 2024 கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த இட்லி சாப்பிடும் போட்டியின் போது 49 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். போட்டியில் பங்கேற்ற அவருக்கு இட்லிகள் தொண்டையில் சிக்கிக் கொண்டதாகவும், சுற்றியிருந்தவர்கள் அவரை காப்பாற்றுவதற்காக தொண்டையிலிருந்த இட்லிகளை வெளியே எடுத்தனர் என்று காவல்துறை கூறியதாக பி டி ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இது இயற்கைக்கு மாறான மரணம் என்று காவ்லதுறையினர் வழ…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
ஒரே நாளில் 1, 000 தடவை அழைப்பை ஏற்படுத்திய காதலிக்கு சிறை! பிரித்தானியாவில், முன்னாள் காதலனைத் தொடர்ச்சியாகத் தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோபி கால்வில் [Sophie Colwill] என்ற 30 வயதுடைய பெண்ணை டேவிட் பாக்லீரோ [David Pagliero] என்ற நபர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாகக் குறித்த பெண் மன வருத்தத்தில் இருந்துள்ளார். காதலனை இழக்க விரும்பாத அவர், டேவிட்டிற்கு 1,000 முறை தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் டேவிட் அவருடைய அழைப்பைத் தவிர்த்துள்ளார். மேலும் டேவிட்டை கண்காணித்து வந்த அவர், டேவிட்டின் வீட்டிற்குள்ளும் அத்துமீறி நுழைந்துள்ளார். சோபி…
-
-
- 2 replies
- 944 views
-
-
உழைக்கும் கைகள் அவர்கள் கஸ்ரப்பட்டு உழைக்கும் தொழிலாளிகள். வெயில், மழை, பனி, காற்று... என்று பாரமல் திறந்த வெளியில் நின்று வேலை செய்பவர்கள். அவர்களது கடுமையான உழைப்புக்கு ஏற்ற பணம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் யேர்மனியில், கொக்கைம் நகரில் கடந்த ஜூலை மாதம் முதல் பைபர் ஒப்ரிக் கேபிள்களை (Fiber optic cables) நிலத்தினுள் தாட்பதற்காக ஒரு வீதி பாவனைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. அவ்வீதி கேபிள்கள் தாட்கப்பட்டு, செப்பனிடப் பட்டு மக்களின் பாவனைக்காக மீண்டும் ஓகஸ்ட் மாத இறுதியில் திறந்து விடப்பட்டது. 13.09.2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை திடீரென இருவர் அதே வீதியில் வேலை செய்ய ஆரம்பித்திருந்தார்கள். ஒருவர் இயந்திரம் (Mini excavator) கொண்டு வீதியை உடைத…
-
- 0 replies
- 220 views
-
-
மூதூரில் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வேண்டி பொது மக்களுக்கு பணம் கொடுத்த தமிழ் வர்த்தகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பம் ஒன்றுக்கு 5000 ரூபா பணம் வழங்கிய 26 வயதான வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார். பெரிய முல்லை பாலத்திற்கு அருகிலுள்ள சந்தேகநபரின் வீட்டில் வைத்து பணம் வழங்குவதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு சென்றுள்ளனர். மக்களுக்கு பணம் இதன்போது மேற்கொண்ட விசாரணையை அடுத்து குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியை சேர்ந்த வைத்தியர் ஒருவர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். https://tamilwin.com/article/money-to-promote-a-president-candidate-in-trinco-…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
ஸ்ரெபான் ராப் ஒரு பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளராக யேர்மனியில் அறியப்பட்டவர். பாடல்கள் இயற்றுவது இசை அல்பங்களைத் தயாரித்து வெளியிடுவது, பாடுவது, நகைச்சுவை நிகழ்ச்சிகள் செய்வது என மேலும் பல விடயங்களில் தன்னை வெளிக்காட்டியவர். பெண்களுக்கான குத்துச் சண்டையில் யேர்மனியில் முன்னணியில் இருந்த ரெஜினா ஹால்மிஸ்ஸை இவர் நகைச்சுவையாக விமர்சிக்கப் போய், அது இருவரையும் குத்துச் சண்டை வளையத்துக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது. ரெஜினா ஹால்மிஸ், தனது வாழ்நாளில் சந்தித்த 56 குத்துச் சண்டைப் போட்டிகளில் 54 தடவைகள் வெற்றியையும் ஒரே ஒரு தடவை தோல்வியையும் ஒரு தடவை சமநிலையையும் தழுவிக் கொண்டவர். “பெண்ணோடு மோதுவது என்ன பெரிய வேலையா?” என்று நினைத்து ரெஜினா ஹால்மிஸ்ஸுடன் 2001ஆம் …
-
-
- 7 replies
- 706 views
-
-
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரத்தில் வசிக்கும் பழைய இரும்பு வியாபாரியான ப்ரீதம் லாலுக்கு, ஆகஸ்ட் 25-ஆம் தேதி செய்தித்தாள் நல்ல செய்தியைக் கொண்டுவந்தது. கடந்த 50 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கிவரும் அவருக்கு இப்போது பஞ்சாப் ஸ்டேட் லாட்டரியில் இரண்டரை கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது.
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
சீனாவில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஜெய்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஜின்ஹுவா நகரில் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஹூவாங் என்ற நபருக்கு மாற்று பற்கள் பொருத்தும் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின்போது, ஹூவாங்கின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதே நாளில் 12 புதிய பற்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர் இரண்டு வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மகள் இணையத்தில் வெளியிட்ட பதிவில், “பற்களை பிடுங்கிய பி…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
பலத்காரம் செய்ய முயன்ற மருத்துவரின் ஆணுறுப்பை பிளேட்டால் அறுத்த தாதி. பீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு, மருத்துவமனை நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து குடிபோதையில் அங்கு பணியாற்றி வந்த தாதியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய தாதி, மருத்துவர் சஞ்சய் குமாரின் பிறப்பு உறுப்பை கையில் கிடைத்த பிளேடால் அறுத்துவிட்டுள்ளார். அதன்பின் மருத்துவமனையில் இருந்து தப்பித்த தாதி, அருகில் இருந்த இடத்தில் மறைந்துகொண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விரைத்த பொலிஸார் தாதியை மீட்டு மருத்துவர…
-
- 1 reply
- 141 views
- 1 follower
-
-
ஹிளவ்டியாவின் தந்தை பயிர்களை வளர்ப்பதில் ஆர்வமாக இருந்தார். தான் இறந்து அடக்கம் செய்யப்படும் கல்லறையைச் சுற்றி எப்போதும் பச்சை பசேல் என காய் கறி மரங்கள் இருக்க வேண்டும், குறிப்பாக தக்காளி மரங்கள் இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் அவளது தந்தை இறந்த பின்னர் அவளால் அதைச் சாத்தியப்படுத்த முடியவில்லை. காரணம், யேர்மனியில் கல்லறைகளைச் சுற்றி காய்கறி மரங்கள் நடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. கல்லறையில் காய் கறிகள், பழ மரங்கள் நடுவதை கல்லறைச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை. இறந்தவர் அடக்கம் செய்யப்படும் இடம் அமைதியாக இருக்க வேண்டும். இறந்தவர் கல்லறையில் உறங்குகிறார். பயிர்ச் செய்கைக்காக, மண்வெட்டி கொண்டு நிலத்தைத் தோண்டுவது அவரது அமைதிக்கு ஊறு விளைவிக்கும். கல்லறைக…
-
- 2 replies
- 217 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு(Prabhakaran) பலமாக இருந்த கருணாவை உடைத்ததற்கு ரணில்(ranil) தான் காரணம் என்பதை அறிந்த பிரபாகரன் 2005 ஜனாதிபதி தேர்தலில் ரணிலை தோற்கடிக்க தேர்தல் புறக்கணிப்புக்கு முடிவு செய்தார் என தென்னிலங்கை கட்டுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளமை வருமாறு, 2002ஆம் ஆண்டு கருணாவை பேச்சுவார்த்தை மேசைக்கு அனுப்பியது பிரபாகரன் செய்த மிகப் பெரிய தவறு. கருணா தாய்லாந்துக்கு(thailand) சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தச் சென்ற போது இரண்டு பேரை வைத்து அவரை சிக்க வைத்தார் ரணில். கருணாவை பிரித்த ரணில் ஒருவர் அப்போதைய கட்டுநாயக்க விமான நிலையத்தின் பணிப்பாளராக இருந்த காமினி அபேரத்ன(Gamini Abeyratn…
-
-
- 8 replies
- 496 views
- 2 followers
-
-
7 செப்டெம்பர் 2024 அமெரிக்காவில் இரவில் காணாமல் போன 3 வயது குழந்தை 100 ஏக்கர் மக்காச்சோள தோட்டத்திற்குள் தன்னந்தனியாக தவித்ததை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து காவல்துறையினர் மீட்டனர். விஸ்கான்சின் மாகாணத்தின் ஆல்டோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு 8:49 மணிக்கு தங்கள் 3 வயது மகனை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். வீட்டின் பின்புறம் இருந்த மக்காச்சோள தோட்டத்திற்குள் குழந்தை சென்றிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் தெர்மல் இமேஜிங் டிரோன் மூலம் குழந்தையை தேடிய நிலையில், ஒரு மணிநேர தேடுதலுக்குப் பின் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. எந்த காயமும் இன்றி குழந்தை மீட்கப்பட்டு பெற்றோர…
-
-
- 1 reply
- 377 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ்தான் வெற்றி பெறுவார் என பிரபல தேர்தல் கணிப்பாளர் தெரிவித்துள்ளார். நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19ம் திகதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார். ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகிய நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என பிரபல …
-
-
- 6 replies
- 533 views
- 1 follower
-
-
07 SEP, 2024 | 04:30 PM இத்தாலியப் பெண் ஒருவரை பலாத்காரமாக காரில் ஏற்ற முயன்ற தேரர் ஒருவர் மீது அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, இத்தாலியப் பெண் நேற்று (06) அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள ருவன்வெலிசாய விகாரைக்கு சென்றுள்ளார். இதன்போது, அங்கிருந்த தேரர் இத்தாலியப் பெண்ணிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் இத்தாலியப் பெண்ணின் வட்ஸ்அப் இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்த சென்றுள்ளார். பின்னர், சிறுது நேரம் கழித்து தேரர் இத்தாலியப் பெண்ணின் வட்ஸ்அப் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தன்னை சந்திப்பதற்கு வருமாறு கூறியுள்ளார். இதற்…
-
- 1 reply
- 264 views
- 1 follower
-
-
நாகபாம்புக்கு முத்தமிட்டு ரீல்ஸ் – இளைஞன் பலி. தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையை சேர்ந்தவர் சிவராஜ் என்ற 20 வயது நிரம்பிய பாம்பு பிடிக்கும் தொழிலாளி பல சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் நாகப்பாம்பு புகுந்து விட்டதாக அவரது தந்தை கங்காதருக்கு தகவல் தெரிவித்தனர். கங்காதர் உள்ளூரில் இல்லாததால் அவரது மகன் சிவராஜ் பாம்பு பிடிக்க சென்றுள்ளார். வீட்டில் இருந்த நாகப்பாம்பை பிடித்த சிவராஜ் பாம்பை வைத்து அப்பகுதி மக்களுக்கு சிறிது நேரம் விளையாட்டு காட்டினார். பின்னர் பாம்புக்கு முத்தமிட்டபடி தனது செல்போனில் ரிலீஸ் எடுத்தார். அப்போது நாக பாம்பு சிவ…
-
- 0 replies
- 240 views
-
-
வயது வந்த பெற்றோரை வீட்டில் வைத்துப் பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்ப்பது இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணம். இதை விமர்சிப்பவர்கள் சிலர் இருந்தாலும், இன்றைய காலத்தில் இந்த நடைமுறைதான் உலகெங்கும் பரவலாக இருக்கிறது. யேர்மனியில், உன்னா (Unna) மாவட்டத்தில் உள்ள செல்ம் (Selm) நகரத்தில் தனது 96 வயதான தந்தையை முதியோர் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற மகளின்(53)நிலைமை சிக்கலாகிப் போயிருக்கிறது. தந்தைக்கோ முதியோர் இல்லத்துக்குப் போவதற்கு சிறிதும் விருப்பமில்லை. மகளுக்கோ தந்தையை அங்கே அனுமதிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இந்த விடயம் முற்றி தந்தைக்கும் மகளுக்கும் பெரும் வாக்கு வாதமாகப் போனது. ‘இதுதான் முடிவு’ என்று மகள் சொன்னதன் பின்னர், கோவம…
-
- 1 reply
- 390 views
-
-
Published By: DIGITAL DESK 3 03 SEP, 2024 | 03:37 PM பிரிந்து சென்ற தனது மனைவியை மீண்டும் தன்னுடன் இணைத்துத்தருமாறு கோரி நபர் ஒருவர் மரத்தில் ஏறி போராட்டம் மேற்கொண்டமையால் வவுனியா நகரில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றையதினம் காலை வவுனியா தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் கீழே இறங்கமால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்துசென்றுள்ளதாகவும் அவரை தன்னுடன் மீண்டும் இணைத்துவைக்குமாறு தெரிவித்துள்ளா…
-
-
- 11 replies
- 863 views
- 2 followers
-
-
ஒலிம்பிக் ஓட்டப் பந்தய வீராங்கனை மீது பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்! உகாண்டா நாட்டை சேர்ந்த ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி [Rebecca Cheptegei] மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 சதவீத தீக்காயங்களுடன் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் ரெபேக்கா. கடைசியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்த ரெபேக்கா சமீபத்தில் நாடு திரும்பியிருந்தார். இதன்பின் கென்யா நாட்டில் மேற்கு Trans Nzoia மாகாணத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவ…
-
- 0 replies
- 262 views
-
-
தனிமையின் கொடுமை : 40,000 க்கும் மேற்பட்ட முதியவர்கள் மரணம்! 2024ஆம் ஆண்டு முதல் அரை வருட காலத்தில் ஜப்பானில் 40,000-க்கும் மேற்பட்ட முதியோர் தனிமையில் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு மரணித்த முதியவர்களில் 4000 பேர் இறந்து ஒரு மாதம் கழித்தும், 130 பேர் ஒரு வருடம் கழித்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மரணங்கள் ஜப்பானில் அதிகரித்து வரும் தனிமைப் பிரச்சனையின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாகவும், பல முதியோர் கவனிப்பாரின்றி தமது இறுதிக் காலத்தை தனிமையில் கழித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண,அரசு மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து ச…
-
- 1 reply
- 446 views
- 1 follower
-
-
கடினமான கற்களால் கட்டப்பட்ட மூன்று மீற்றர் நீளமும் மூன்று மீற்றர் அகலமுமான சிறிய அறை. உள்ளே இருந்த சிறிய யன்னலும் செங்கற்களால் கட்டப் பட்டிருந்தது. இரும்பினால் செய்யப்பட்ட கதவு. அந்தக் கதவைத் திறக்க முடியாதவிதமாக ஒரு பெரிய பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. அந்த அறையில் மின்சாரமும் இல்லை, தண்ணீரும் இல்லை. போலந்து நாட்டைச் சேர்ந்த ஆண் (35) ஒருவர், 30 வயதுடைய இளம் பெண் ஒருவரை, நான்கு ஆண்டுகளாக, இந்த சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். ஜேர்மன் எல்லையில் இருந்து ஒன்றரை மணிநேரப் பயணத்தில் மேற்கு போலந்தில் உள்ள Głogów (Glogau) அருகே 200 பேர்கள் வாழும் சிறிய கிராமம்தான் Gaika. இந்தக் கிராமத்தின் முடிவில் ஒரு பழைய பண்ணை தோட்டம் இருக்க…
-
-
- 6 replies
- 734 views
-
-
தற்போது உலகம் முழுவதும் விந்து தானம் செய்பவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் விந்தணுவுக்கு அதிக தேவை உள்ளது மற்றும் அது உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறது. அப்படியானால் பிரிட்டிஷ் ஆண்களின் விந்தணுக்களுக்கான தேவை ஏன் உலகளவில் அதிகரித்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது. விளக்கமான பதில் இதோ. இங்கிலாந்தில் எந்த மருத்துவமனையிலும் ஒரு விந்தணு தானம் செய்பவரிடமிருந்து 10 குடும்பங்களுக்கு மட்டுமே விந்தணுவை வழங்க முடியும் என்ற விதி உள்ளது. ஆனால் இங்கிலாந்து விந்தணு தானம் செய்பவர்களிடமிருந்து விந்தணுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப எந்த தடையும் இல்லை. இங்கிலாந்தில் விந்தணுவின் தேவை அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம். பிரிட்டனில் இனப்பெருக்க உடல்நலப் பிரச்சனைகள் …
-
- 1 reply
- 392 views
- 1 follower
-