செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7112 topics in this forum
-
கடினமான கற்களால் கட்டப்பட்ட மூன்று மீற்றர் நீளமும் மூன்று மீற்றர் அகலமுமான சிறிய அறை. உள்ளே இருந்த சிறிய யன்னலும் செங்கற்களால் கட்டப் பட்டிருந்தது. இரும்பினால் செய்யப்பட்ட கதவு. அந்தக் கதவைத் திறக்க முடியாதவிதமாக ஒரு பெரிய பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. அந்த அறையில் மின்சாரமும் இல்லை, தண்ணீரும் இல்லை. போலந்து நாட்டைச் சேர்ந்த ஆண் (35) ஒருவர், 30 வயதுடைய இளம் பெண் ஒருவரை, நான்கு ஆண்டுகளாக, இந்த சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். ஜேர்மன் எல்லையில் இருந்து ஒன்றரை மணிநேரப் பயணத்தில் மேற்கு போலந்தில் உள்ள Głogów (Glogau) அருகே 200 பேர்கள் வாழும் சிறிய கிராமம்தான் Gaika. இந்தக் கிராமத்தின் முடிவில் ஒரு பழைய பண்ணை தோட்டம் இருக்க…
-
-
- 6 replies
- 762 views
-
-
தற்போது உலகம் முழுவதும் விந்து தானம் செய்பவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் விந்தணுவுக்கு அதிக தேவை உள்ளது மற்றும் அது உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறது. அப்படியானால் பிரிட்டிஷ் ஆண்களின் விந்தணுக்களுக்கான தேவை ஏன் உலகளவில் அதிகரித்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது. விளக்கமான பதில் இதோ. இங்கிலாந்தில் எந்த மருத்துவமனையிலும் ஒரு விந்தணு தானம் செய்பவரிடமிருந்து 10 குடும்பங்களுக்கு மட்டுமே விந்தணுவை வழங்க முடியும் என்ற விதி உள்ளது. ஆனால் இங்கிலாந்து விந்தணு தானம் செய்பவர்களிடமிருந்து விந்தணுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப எந்த தடையும் இல்லை. இங்கிலாந்தில் விந்தணுவின் தேவை அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம். பிரிட்டனில் இனப்பெருக்க உடல்நலப் பிரச்சனைகள் …
-
- 1 reply
- 399 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 01:14 PM இலங்கையில் 97 வயது மூதாட்டி ஒருவர் முதுமாணிப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற களனிப் பல்கலைக்கழகத்தின் 143ஆவது பட்டமளிப்பு விழாவில் லீலாவதி தர்மரத்ன என்ற மூதாட்டி பௌத்த கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இளந்தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழும் அவர் பட்டம் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல” என தெரிவித்துள்ளார். லீலாவதி தர்மரத்ன இதற்கு முன்னர் ஆசிரியையாகவும் நோட்டரி அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/192017
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
நாட்டில் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் – 30,000 விபச்சாாிகள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல். இலங்கையில் தற்போது 30,000 விபச்சாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். மேற்கொண்ட ஆய்வின் படி, கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தனது சமீபத்திய தரவுகளில் இதனைத் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1397015
-
-
- 3 replies
- 517 views
-
-
உலகின் மிக வயதான பெண்மணி என்ற கின்னஸ் சாதனை படைத்த மரியா பிரான்யாஸ் 117 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்களைப் பார்த்துள்ளதுடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர் மற்றும் 1918 ஆம் ஆண்டு பெரிய அளவில் பரவிய காய்ச்சல், கொவிட் தொற்று ஆகியவற்றையும் பார்த்துள்ளார். இவர் 1907 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 4 ஆம் திகதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓலோட் நகரில் சாண்டா மரியா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வந்த இவர் காலமானார். உலகின் மிக வயதான பெண்மணியான மரியா பிரன்யாஸ் உயிரிழந்ததை அடுத்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியான தொமிக்கோ இதூக்கா உலகின் மிக வயதான பெண்மணியாக கி…
-
- 1 reply
- 171 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 20 AUG, 2024 | 01:18 PM விமான நிலையத்தில் கத்தரிக்கோல் ஒன்று காணாமல் போனதால் விமானங்கள் இரத்து செய்யப்பட்ட சம்பவம் ஒன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை (17) ஜப்பானில் கொக்கைடோவின் நியூ சிட்டோஸ் விமான நிலையத்தின் உள் நுழையும் வாயிலின் அருகே இருந்த கடையொன்றில் கத்தரிக்கோல் காணாமல் போனதால் 36 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதோடு, 201 விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன. விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளுக்காக சனிக்கிழமை (18) காலை சுமார் இரண்டு மணி நேரம் ஸ்தம்பித்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமான நிலைய ஓய்வறையில் இருந்த பயணிகள் மீண்டும…
-
-
- 2 replies
- 352 views
- 1 follower
-
-
வவுனியாவில் 2,85,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்! வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழமொன்று 2,85,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாளான நேற்று(14) மாம்பழத் திருவிழா நடைபெற்றது. இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழமொன்றே ஆலயத்தின் வளர்ச்சி நிதிக்காக இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டது. இந்நிலையில் பலத்த போட்டிக்கு மத்தியில் குறித்த மாம்பழத்தை உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ஒருவர் 2,85,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http:/…
-
- 0 replies
- 236 views
-
-
சீனாவில் 13 வயதான லீ முசி என்ற சிறுமி பரதநாட்டிய கலையில் அரங்கேற்றம் புரிந்து சாதனை படைத்துள்ளார். தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியத்தை சீனாவில் அந்த நாட்டின் குருவிடம் பயின்று, அங்கேயே அரங்கேற்றம் செய்த முதல் நபர் என லீ முசி அறியப்படுகிறார். அண்மையில் நடந்த இந்த அரங்கேற்ற நிகழ்வில் பிரபல பரதநாட்டிய நடன கலைஞர் லீலா சாம்சன் மற்றும் இந்திய பிரதிநிதிகள் சிலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வை அனைவரும் பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது. சுமார் 10 ஆண்டு காலமாக பரத கலையில் பயிற்சி பெற்று வந்துள்ளார் லீ முசி. அவருக்கு சீனாவின் ஜின் ஷான் என்ற பரத கலைஞர் பயிற்சி கொடுத்துள்ளார். கடந்த 1999-ல் டெல்லியில் ஜின், அரங்கேற்றம…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
9 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க ஈராக் நாட்டின் அரசு அனுமதி அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈராக் நாட்டில் தற்போது பெண்களின் திருமண வயது 18 என்று உள்ள நிலையில் புதிய மசோதா அவர்களின் படி ஆண்களுக்கு 15 வயதிலும் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்துடன் ஒன்பது வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் என்பது சட்டமயமாக்கப்படுகிறது. பெண்களின் திருமண வயது 18 என்று இருந்தபோதிலும் ஏற்கனவே ஈராக்கில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக ஐநா குழந்தைகள் அமைப்பு குற்ற…
-
- 0 replies
- 273 views
-
-
ஐந்து பெண்களை திருமணம் செய்த நபரொருவர், 49 பெண்களுடன் தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெண்களை திருமணம் செய்து அவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவின் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யஜித் சமால். 34 வயதான இவர், தான் ஒரு பொலிஸ் அதிகாரி என ஏமாற்றி 5 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சமாலால் ஏமாற்றப்பட்ட இரு பெண்கள், காவல் நிலையத்தில் தனித்தனி புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி சமாலை கைதுசெய்தனர். குறிப்பாக, சமாலை கைது…
-
-
- 2 replies
- 309 views
-
-
எப்போது திருமணம் என்று அடிக்கடிக் கேட்டுக்கொண்டிருந்த முதியவரை அடித்துக் கொன்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. இந்தோனேசியா, வடக்கு சுமத்திரா பகுதியில் அசிம் இரியான்டோ என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரியொருவர் வசித்து வந்தார். இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 45 வயது சிரேகர் மீது அதிக அக்கறைக் கொண்ட இவர் சிரேகரைப் பார்க்கும் போதெல்லாம் ”எப்போது திருமணம்?” என்று கேட்டு வந்துள்ளார். இந்தக் கேள்வியால் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29 ஆம் திகதி முதியவரின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று மரக்கட்டையால் குறித்த முதியவரைத் தாக்கியுள்ளார். குறித்த முதியவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வைத்தி…
-
- 0 replies
- 125 views
-
-
01 AUG, 2024 | 12:36 PM பாட்னா: பிஹாரில் 5 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் சக மாணவன் காயம் அடைந்தார். பிஹாரின் சுபவுல் மாவட்டத்தில் புனித ஜோன் உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நர்சரி வகுப்பில் படிக்கும் 5 வயது மாணவன் நேற்று துப்பாக்கியை தனது புத்தகப் பையில் மறைத்து வைத்து, பள்ளிக்கு எடுத்து வந்துள்ளார். பிறகு அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவனை நோக்கி சுட்டதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைபெறும் 10 வயது மாணவன் கூறுகையில், “நான் எனது வகுப்புக்கு சென்று கொண்டிருந்தபோது, அச்சிறுவன் தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து என்னை நோக்கி சுட்டான். நான் அவனை தடுக்க முயன்றபோது…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 31 JUL, 2024 | 01:14 PM நியூசிலாந்தில் அளவுக்கு அதிகமாக உணவு வழங்கியமையால் நாய் ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உரிமையாளரான பெண்ணுக்கு இரண்டு மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நகி (Nuggi) என்ற நாய் 53 கிலோகிராம் எடையும், கடுமையான உடல் பருமனும் கொண்டிருந்தது. நாய்க்கு அவர் தினமும் சராசரியான உணவை விட 10 இறைச்சி துண்டுகளை அதிகம் கொடுத்து வந்ததனால் அந்நாய்க்கு உடல் எடை அதிகரித்துள்ளது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கம் அதை கண்டறிந்து அந்த நாயை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். 2 மாத சிகிச்சையில் 8.8 கிலோ குறைந்த பின்னரும் கல்லீரல் இரத்த க…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்து. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி 155 கட்டை பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சுமந்திரனின் சொகுசு வாகனம் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. https://athavannews.com/2024/1393818
-
- 0 replies
- 268 views
-
-
திருட எதுவும் இல்லை – 20 ரூபாய் டிப்ஸ் வைத்த திருடன். தெலுங்கானா மாநிலத்தில் திருட வந்த ஓட்டலில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் இரக்கப்பட்டு 20 ரூபாயை அங்கு வைத்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முகத்தை துணியால் மறைந்துள்ள திருடன் திருடுவதற்கு எந்த மதிப்புமிக்க பொருளும் கிடைக்காமல் விரக்தியடைந்து 20 ரூபாய் நோட்டை அங்கு வைத்து செல்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024…
-
- 1 reply
- 282 views
-
-
சிங்களவர்களை நெகிழ வைத்த தமிழ் பெண் Vhg ஜூலை 27, 2024 திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர். பணமில்லாத ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கும் ஷீலாம்மா என்ற தமிழ் பெண் தொடர்பிலேயே பதிவிடப்பட்டுள்ளது. தினமும் அன்னதானம் வழங்கும் ஷீலாம்மா என்ற பெயரில் இந்த பதிவை சிங்கள இளைஞன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மனிதாபிமான செயல் “பதவியில் இருந்து திருகோணமலை செல்லும் போது இக்பால் நகர் என்ற இடத்திலேயே இந்த மனிதாபிமானமிக்க பெண்ணை சந்தித்தேன். வீதிக்கு அருகிலுள்ள சிறிய குடிசை ஒன்றில், மிகவும் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் சுவையில் வழங்கப்பட்ட உணவ…
-
- 1 reply
- 358 views
-
-
48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாண வீரர் சாவகச்சேரியினைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.11M உயரத்தினை கடந்து புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார் https://www.facebook.com/share/6mUGvkA5M2xtjZAt/
-
- 4 replies
- 238 views
-
-
கடனில் சிக்கியிருந்த தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் - ரூ 80 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்த ஆச்சரியம் படக்குறிப்பு,ராஜு கவுண்ட் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைரம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார் கட்டுரை தகவல் எழுதியவர், செரிலன் மோலன் பதவி, பிபிசி நியூஸ், மும்பை 3 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஒரு பெரிய வைரத்தைக் கண்டுபிடித்த ஏழை தொழிலாளியின் வாழ்க்கை ஒரே இரவில் மாறிவிட்டது. ராஜு கவுண்ட் என்னும் தொழிலாளி சுரங்கத்தில் கண்டெடுத்த 19.22 காரட் வைரம், அரசாங்க ஏலத்தில் சுமார் 80 லட்சம் ரூபாய் வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வை…
-
-
- 1 reply
- 292 views
- 1 follower
-
-
சவாலுக்காக சுமார் 10 மணி நேரமாக தொடர்ந்து சாப்பிட்ட சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது பலரும் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலம் அடைய முயற்சிக்கின்றனர். சில தகவல் தருவதாகவும், வ்லாக் மற்றும் நகைச்சுவை போன்றவற்றை உருவாக்கி நெட்டிசன்களை மகிழ்வித்து வருகின்றனர். சிலர் சாப்பிடும் வீடியோக்களை உருவாக்கி பார்வைகளையும், பின் தொடர்பவர்களையும் பெறுக்குகின்றனர். ஆனால் அதிகப்படியான உணவு எப்போதும் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சவாலை ஏற்று அதிகமாக சாப்பிட்டு நேரலையில் உயிரிழந்தார். அந்த இளம்பெண்ணின் பெயர் பான் ஜோதிங். அவருக்கு 24 வயது. அவர் சாப்பிடும் சவால்களை ஏற்றுக் கொண்டு அவற்றை நேரலை…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,KAILAASAA.ORG 2 மணி நேரங்களுக்கு முன்னர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, தன்னையே கடவுள் என்று அறிவித்துக்கொண்டுள்ள நித்யானந்தா வெகு காலமாக பேசி வந்த கைலாசா என்ற தனது 'நாட்டைப்' பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் மீதுள்ள பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக போலீஸாரால் தேடப்பட்டும் வரும் நபர் நித்யானந்தா. கைலாசா என்ற 'நாட்டை' உருவாக்கியிருப்பதாக நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்த நித்யானந்தா, அது எங்கு உள்ளது, அந்த நாடு எப்படி இருக்கும் என்ற தகவல்களை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்திருந்தார். இணைய விவாதங்களில் கைலாசா எங்குள்ளது என்பது அவ்வப்போது பேசுபொருளாக இருந்து வந்துள்ளது. த…
-
-
- 12 replies
- 933 views
- 1 follower
-
-
Janu / 2024 ஜூலை 22 , பி.ப. 05:08 - 0 - 71 கொழும்பு சுகததாச உள்ளகரங்கில் செப்டெம்பர் 7ஆம் திகதி நடைபெற உள்ள விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியின் முன்னேற்பாடாக One Galle Face வணிக வளாகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (21) நடத்தப்பட்டது. குறித்த இசை நிகழ்ச்சியின் promo வெளியிடப்பட்டதுடன் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 30,000 ரூபாய் பெறுமதியுடைய நுழைவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வோர்களுக்கு விஜய் ஆண்டனியுடன் (செல்ஃபி) புகைப்படம் எடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், ரசிகர்கள் நிரம்பியிருந்தனர். Tamilmirror Online || விஜய் ஆண்டனியுடனான செல்ஃபிக்கு ரூ.30,0…
-
- 0 replies
- 214 views
-
-
60 நாய்களை பலாத்காரம் செய்தவருக்கு 249 ஆண்டுகள் சிறை. நாய்களை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக விலங்கியல் நிபுணர் ஆடம் பிரிட்டனுக்கு 249 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீரியல் கொலை சம்பவத்தை விடவும் நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட ஆடம் பிரிட்டன் என்பவர் ஆஸ்திரேலியாவில் விலங்கியல் நிபுணராக பணியாற்றி வருகிறார். 52 வயதாகும் இவரது வீடு டார்வின் பகுதியில் அமைந்துள்ளது. விலங்கியல் நிபுணர் என்பதால் நாய்களிடம் நெருங்கி பழகிய அவர், சில நாய்களை தனது வீட்டிற்கு கொண்டு வந்து அவற்றிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். தொடர்ந்து நாய்களை பலாத்காரம் செய்த அவர், பின்னர் அவற…
-
- 3 replies
- 430 views
-
-
பெண்ணின் தலைக்குள் 77 ஊசி – மந்திரவாதி கைது. ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா 19 வயதான பெண்ணின் தலையில் இருந்து 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளன. சில காலங்களாக பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார். அதன்பிறகு சில காலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரெஷ்மா வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென தலையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு மருத்துவமனையில் ரெஷ்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலை பகுதியில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் ரெஷ்மா தலையில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரெஷ்மா தலையில் இருந்து முதற்கட்டமாக எட்டு ஊசிகள் …
-
- 1 reply
- 444 views
- 1 follower
-
-
மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சிரிப்புக்கான புதிய சட்டம் ஒன்றை ஜப்பானிய மாகாணம் ஒன்று கொண்டுவந்துள்ளது. ஜப்பானின் யமகடா (Yamagata) மாகாணம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு புதிய உத்தரவை கொண்டு வந்துள்ளது. இதன்படி, மக்கள் தினசரி சிரிக்க வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறது. யமகடா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி, இதய நோய் அபாயத்தை குறைக்க சிரிப்பு எப்படி உதவும் என்பதைக் காட்டுகிறது. விமர்சனம் ஜப்பானின் இந்தச் சிரிப்புச் சட்டம் தனிமனிதர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதயப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிலரால் மருத்துவக் காரணங்களால் சிர…
-
- 3 replies
- 358 views
- 1 follower
-
-
தற்கொலை எண்ணம் இருப்பவர்களுக்கு அதிலிருந்து விடுபட பல நாடுகளில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகள், தற்கொலை செய்து கொள்வோரின் நோக்கத்தின் அடிப்படையில் அவர்களுக்கு உதவுகின்றன; வலியின்றி மரணிக்க வழிவகைகளைச் செய்து தருகின்றன. சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவர்களின் மேற்பார்வையில்லாமல், வலி தெரியாமல் மரணிக்க விரும்புவர்களுக்கென்றே சிறுரக வாகனம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம், 2019-ம் ஆண்டில் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது. பார்ப்பதற்கு விண்வெளிக்குச் செல்லும் ஓடம் போலத் தோன்றும் இந்த வாகனம், 3டி வடிவில் உள்ளது. 7.10 லட்சம் அமெரிக்க டொலர் செலவில் நெதர்லாந்தில் 12 ஆண்டுக்கால ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு சட்டம் அ…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-