Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 10:27 AM உறங்கிக்கொண்டிருந்த காட்டு யானையை இளைஞர் ஒருவர் தொடும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகிறது. இது தொடர்பில் அநுராதபுரம் வனவிலங்கு உதவிப் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த காணொளி அநுராதபுரம் ரணஜயபுர காட்டுப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரணஜயபுர காட்டுப்பகுதிக்குள் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த யானையின் அருகில் மெதுவாகச் சென்று அதைத் தொட்டுவிட்டுவரும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது. காட்டு யானையை எப்படி நெருங்குவது என்பதை காண்பிக்க, ஒரு சாகச செயலாக இந்த காணொளியை இளைஞர்கள் பதிவு செய்து சமூக ஊடகங்களி…

  2. Published By: DIGITAL DESK 3 11 JUN, 2024 | 10:31 AM ஒஸ்திரியா விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் முன்பகுதி மற்றும் ஜன்னல்கள் ஆலங்கட்டி மழையால் பலத்த சேதமடைந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இந்த விமானம் ஸ்பெயினின் பால்மா டி மெலியோர்காவிலிருந்து ஒஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிற்கு 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்துள்ளது. அப்போது, இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் விமானம் சிக்கியுள்ளது. இதன்போது, விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் நொறுங்கி பலத்த சேதம் அடைந்ததோடு, விமானி அறையின் மேற்பகுதி வளைந்ததோடு, ஜன்னல்களிலுள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளன. ஆன…

  3. Published By: DIGITAL DESK 3 10 JUN, 2024 | 04:11 PM அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகருக்கு தனது குடும்பத்தாரை பார்க்கச் சென்ற இலங்கையைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் சதையை உண்ணும் அரியவகை கிருமியின் தாக்கத்திற்கு பாதிக்கப்பட்டு அவரது கையை இழந்துள்ளதாக அவுஸ்திரரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 74 வயதான கார்மெல் ரோட்ரிகோ என்ற வயோதிப பெண் இவ் வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலுள்ள மகளை பார்ப்பதற்குச் சென்றுள்ளார். இந்த வயோதிப பெண் அங்கு பல மாதங்கள் மகளுடன் தங்கியிருந்த நிலையில், கடந்த மாதம் அவருக்கு இடது கையில் துப்பாக்கியால் சுடப்பட்டது போல் வலி ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் கத்தியுள்ளார். அவர் …

  4. எம்மை பிரிக்க முடியாது. நாம் இருவரும் ஒரே வீட்டில் தான் ஒன்றாக வாழ்வோம்...’’ என கூறியத்துடன் பிள்ளைகள் மற்றும் கணவரிடம் செல்ல மறுத்த இரண்டு பெண்கள் குறித்த செய்தியை கண்டி பொலிஸார் தெரிவித்தனர் இருபத்தி ஒன்பது வயது மற்றும் முப்பத்தைந்து வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்மார்களே இவ்வாறு கதறி அழுது தம்மை பிரிக்க வேண்டாம் என கோரியுள்ளனர். இந்த இரண்டு பெண்களுக்கும் தலா பதினைந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், கணவர்கள் மற்றும் குழந்தைகள் வந்து பெண்களை ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். அப்போது, வீட்டுக்கு செல்ல மறுத்த இந்த பெண்கள், தனித்தனியாக செல்ல முடியாது என போலீசாரிடம் கதறி …

  5. 13 முதல் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். நாளை (31ஆம் திகதி) அனுஷ்டிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (29ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதின்ம வயதினரிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர் தெரிவித்துள்ளார். இந்த கணக்கெடுப்பில், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் 5.7% பேர் ஒரு முறையாவது புகைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாணவர்களில…

  6. இன்றைய நவீன காலகட்டத்தில் ‘சும்மா தான் இருக்கேன்’ என்று சொன்னால் கூட கையில் ஃபோன் வைத்துக்கொண்டு இன்ஸ்டாகிராம், யூடியூப் என்று எதையாவது பார்த்துக் கொண்டோ அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டோ தான் இருக்கிறார்கள். உலகில் என்னென்னவோ போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தென்கொரியா வித்தியாசமாக “ஸ்பேஸ்- அவுட்” என்ற போட்டியை நடத்தியது. அதாவது 90 நிமிடங்கள், எந்த வேலையும் செய்யாமல், தூங்காமல், ஃபோன் பார்க்காமல், அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும். இவ்வளவு தானே என்று ஈசியாக எண்ணிவிட முடியாது. போட்டியாளர்களின் இதய துடிப்பு சீராக இருக்கிறதா என்று கண்காணிக்கப்படுகிறது. …

  7. ரெ.ஜாய்சன் 28 May, 2024 10:04 PM தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரே ஒரு மனிதரான முதியவர் கந்தசாமி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி ஊராட்சியில் உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமம் நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269. படிப்படியாக இந்த ஊரின் மக்கள் தொகை குறைந்தது. இந்த ஊரில் இருந்த மக்கள் அனைவரும் பிழைப்புக்காக ஊரை காலி செய்து விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இவ்வூரில் நிலவிய தண்ணீர் தட்டுப்பாட…

  8. வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த யாழ் இளைஞர் விபத்தில் மரணம்! கனடா நாட்டிற்கு செல்வதற்கு தயாராக இருந்த இளைஞன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்., மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி – புத்தூர் வீதியில், நேற்று முன்தினம் இரவே இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த பகுதியில் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து, மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளான். மட்டுவில் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பி.பானுஜன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த இளைஞன் இன்று கனடாவுக்கு பயணம் செய்வதற்கு தயாராக இருந்தவர்…

  9. கடந்த சில வருடங்களாக இலங்கையின் காட்டு யானைகள், மனிதர்களிடமிருந்து உணவைப் பெற சாலையில் திரிவது அதிகரித்துள்ளது. பயணிகள் பலர் மீதமான உணவை சாலையில் கொட்டுவதால், பசியுடன் இருக்கும் யானைகளுக்கு இவை எளிதான உணவாகிவிட்டது.

  10. யாழ்ப்பாணத்திலுள்ள கடையொன்றில் நபரொருவர் வாங்கிய ரோல்ஸில் துருப்பிடித்த கம்பித் துண்டொன்று காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, கடந்த 21ஆம் திகதி குறித்த பகுதியில் உள்ள கடையொன்றில் வாங்கிய பாணுக்குள் பீங்கானின் கண்ணாடித் துண்டொன்று காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றமையால் கடைகளில் உணவுகளைக் கொள்வனவு செய்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/302386

  11. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,சிம்பன்சி நடாலியா ஈன்றெடுத்த குட்டி பிறந்து 14 நாட்களில் இறந்து போனது. கட்டுரை தகவல் எழுதியவர், டேரியோ ப்ரூக்ஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 23 மே 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடாலியா என்ற பெண் சிம்பன்சி குரங்கு தன் குட்டியை இழப்பது இது இரண்டாவது முறை. ஸ்பெயினில் இருக்கும் வலென்சியா நகரில் உள்ள உயிரியல் பூங்காவான 'பயோபார்க்’-இல் (Bioparc), நடாலியா கடந்த பிப்ரவரி மாதத் துவக்கத்தில் ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. எல்லாம் நன்றாகத்தான் சென்றது. ஆனால் பிறந்து 14 நாட்கள் ஆன நிலையில், ஒரே இரவில், அந்தச் சிம்பன்சிக் குட்டி மிக விரைவாக பலவீனமடை…

  12. யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு! யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றையதினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளதுடன், அதனை வீட்டில் சாப்பிட முனைந்த போது, பாணினுள் இருந்து உடைந்த போத்தலின் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த கடை சுன்னாகம் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பகம் ஒன்றே பாண் விநியோகம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குறித்த வெதுப்பகத்திற்கு எ…

  13. கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று, பின்னர் குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்யும் நபர்களுக்கு பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்குவது வழக்கம். இதுதவிர தொழிலதிபர்கள், கலைத்துறையினர், சாதனை படைத்தவர்கள் என பலருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பூனைக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பேசு பொருளாகி இருக்கிறது. அங்குள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்கிற பூனை வசித்து வருகிறது. 4 ஆண்டுகளாகவே பல்கலைக்கழகத்தில் சுற்றி வரும் இந்த பூனை மாணவர்களிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டது. அதோடு பல்கலைக்கழக வளாகத்தில் குப்பை தொட்டிகளை பொறுப்புடன் பராமரித்ததாகவும் கூறப்படுகிற…

  14. யாழில். பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த இருவர் கைது! யாழில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது” பன்னாலை பகுதியில் இயங்கும் உணவு உற்பத்தி மையம் ஒன்றிற்கு சோதனை நடவடிக்கைக்காக நேற்றைய தினம் இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் சென்றுள்ளனர். அதன்போது உற்பத்தி நிலையம் உரிய அனுமதிகள் பெறாது இயங்கி வந்ததமையும், டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்தமையும் சுகாதார பரிசோதகர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய போது சுகாதார பரிசோதகர்களுக்கும் அங்கு பணியாற்றிவரும் ஊழியர்களுக்கும் இடையே வாய…

  15. சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் வெளிநாட்டுப்பிரஜை கைது! (ஆதவன்) போலிக்கடவுச்சீட்டு, போலி வைப்பகப்புத்தகம், போலி ஆவணங்கள் என்பவற்றைத் தயாரித்தமை, ஆள்மாறாட்டம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் நெதர்லாந்துப் குடியுரிமையைக் கொண்ட ஒருவர் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அவரது சகோதரி செய்த முறைப்பாட்டுக்கமையவே மேற்படி 42 வயதுடைய பெண்மணி கைது செய்யப்பட்டு நீதிவான் இல்லத்தில் முற்படுத்தப்பட்டு மருத்துவக்காரணங்களைக் கருத்திற்கொண்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளார். சகோதரியினுடைய ஆவணங்களைப் பயன்படுத்தி போலியான கடவுச்சீட்டை சந்தேகநபர் 2015ஆம் ஆண்டு தயாரித்துள்ளார். அந்தக் கடவுச்சீட்டை தவிர்த்து வேறு கட…

  16. யாழில் நாய் இறைச்சி கொத்து. யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாட்டிறைச்சி கொத்து வாங்கிய நபர் ஒருவருக்கு கொத்து ரொட்டியில் பழுதடைந்த இறைச்சி துண்டு காணப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இறைச்சி துண்டு , மாட்டிறைச்சி போல் அல்லாது வேறு இறைச்சி போன்று காணப்பட்டதால் , அது குறித்து உணவகத்தில் இருந்தவாறே அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு குறித்த நபர் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார். இருந்த போதிலும் , பொது சுகாதார பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வராத க…

  17. டுபாயில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா பெறுமதியான நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள பிரிவினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் உரிய தீர்வையை செலுத்தாது 1,083 நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுதவிர, குறித்த இருவரும் தம்வசம் வைத்திருந்த 200 பென்ட்ரைவ்களும் மீட்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/301907

  18. சிங்கப்பூரில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர், 34 வயதில் பாட்டி ஆகி இருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதத்தை எழுப்பியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த உணவக உரிமையாளரான ஷிர்லி லிங் என்பவர், இன்ஸ்டாகிராமில் பல்வேறு வகையான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர். கடந்த அன்னையர் தினத்தன்று இன்ஸ்டாவில் வாழ்த்து ஒன்றை பதிவிட்ட அவர், தனது 17 வயது மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டார். இளம்வயதில் பாட்டி ஆகி இருப்பதில் சாதகம் மற்றும் பாதக அம்சங்கள் இருப்பதாகவும், குடும்பத்தை பொறுப்புடன் நடத்துவது குறித்து மகனுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அப்பெண் பதிவிட்டுள்ளார். மேலும், இளம்வயதில் தாயாவது பெரும் இன்னலை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், தனது மகனை கண்டிப்பதற்கு…

  19. தினமும் மனைவிக்காக குர்குரே வாங்கி வந்துகொண்டிருந்த கணவன், ஒரு நாள் மனைவியுடன் நடந்த சண்டையில் குர்குரே வாங்கி வர மறந்து விட்டார். இந்தியாவில் சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் நொறுக்குதீனியாக குர்குரே(கார முறுக்கு) உள்ளது. அரிசி, சோளம் ஆகியவற்றுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளைக் கலந்து மொறுமொறுப்பான நொறுக்குதீனியாக இது தயாராகிறது. இதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பலர் கூறிவந்தாலும் அதிகமானோர் இதை விரும்பி உண்ணப்படும் பண்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கணவன் கார முறுக்கு வாங்கித் தராததால் மனைவி அவரைப் பிரிந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு க…

  20. இந்தியாவின் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிர்மாணிக்கப்பட்ட முருகன் சிலை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ’குன்றுகள் இருக்கும் இடம்தோறும் குமரன் இருப்பான்’ என்பது முருக பெருமான் குறித்து சொல்லப்படும் ஒரு பழமொழி. அதுபோல தமிழ்நாட்டின் பல குன்றுகளிலும், ஊர்களிலும் முருகருக்கு பல கோவில்கள் இருந்து வருகிறது. மலேசியா வரை முருகனுக்கு கோவில் உள்ள நிலையில் விதவிதமான உயரங்களில் முருகருக்கு கோவிலுக்கு அருகிலேயே சிலை அமைப்பது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோவில் ஒன்றிலும் சமீபத்தில் முருகருக்கு 56 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. முருகன் என்றால் அழகு என்பார்கள். அதற்கேற்றார்போல வீட்டு காலண்டர் தொடங்கி கோவில் வ…

  21. ரிதிகம பிரதேச செயலகப் பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்பட்ட அரிசியை பனகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் எடுத்துச் சென்று கோழிகளுக்கு உணவளித்துள்ளார். மேற்படி அரிசியை சாப்பிட்ட 7 கோழிகள் உயிரிழந்ததாக உரிமையாளர் சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். கோழிகளின் இறப்பு தொடர்பில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் இறப்புக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை, எனவே உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும், பரிசோதனை அறிக்கையை பெறவும் உத்தரவு பெறப்பட்டதாக பொது சுகாதார மருத்துவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/301509

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பெர்னாண்டோ டுவார்டே பதவி, பிபிசி உலக சேவை 13 மே 2024 சில வருடங்களுக்கு முன்னர், அமெரிக்காவில் ஒருவர், சட்டப்பூர்வ வரம்பைத் தாண்டி மூன்று மடங்கு அதிகமாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அன்று அவர் மது அருந்தவில்லை. மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் இதை அவர் நிரூபித்தார். 40 வயதான ரே லீவிஸ், குடல் நொதித்தல் (Auto-brewery syndrome) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் தானாக ஆல்கஹால் உற்பத்தி செய்யப்படுகிறது. ரே லீவிஸ் பெல்ஜியத்தை பூர்வ…

  23. முல்லைத்தீவில் மாணவிகள் குளியல்; காணொலி எடுத்தவர் நையப்புடைப்பு (புதியவன்) முல்லைத்தீவு, முத்தையன் கட்டில் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பெண்களை கையடக்க தொலைபேசியில் காணொலி எடுத்த இளைஞன் நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகள் சிலர், புதுக்குடியிருப்பிலுள்ள தமது நண்பியொருவரின் வீட்டுக்கு சென்று, அவரின் உறவினர் வீடு அமைந்துள்ள முத்தையன்கட்டில் நீரோடும் வாய்க்காலில் மாணவிகள் குளித்துக் கொண்டிருந்த போது, உந்துருளியில் வந்த இரண்டு இளைஞர்கள் மாணவிகளுடன் ஆபாசமாக பேசியுள்ளனர். சிறிது தூரம் சென்று மீண்டும் உந்துருளியில் வந்த இளைஞர்கள் இருவரும், …

  24. பொதிசெய்யப்பட்ட இரண்டு பாண் பாக்கெட்டுகளில் எலியின் உடலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 100,000 க்கும் மேற்பட்ட பாண்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இச்சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. ஜப்பான் உயர்தர சுகாதாரம் பேணப்படும் நாடாகும். இவ்வாறான சம்பவங்கள் அங்கு நடைபெறுவது அரிதாகும். எலியின் எச்சங்கள் அதன் தயாரிப்புகளில் எவ்வாறு ஊடுருவின என்பதை ஆராய்ந்து வருவதாக குறித்த பாண் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஷிகிஷிமா தெரிவித்துள்ளார். “எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியதற்காக நாங்கள் ஆழ்ந்த மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்” என்று குறித்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜப்பானில் தூய்மை மற்றும் சுகாதாரம் தீவிரமாக எ…

  25. Published By: DIGITAL DESK 7 10 MAY, 2024 | 01:20 PM யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொது சந்தையில் வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து வியாபாரிகளுக்கு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால், பொது சந்தையில் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பழுதடைந்த மரக்கறிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அதேவேளை, வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183142

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.