Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கொரோனா முடக்கலால் தலைகீழாக மாறிவிட்ட வாழ்க்கை கிறிசாந்தினி கிறிஸ்டொபர்- சண்டே டைம்ஸ் கொரோனா வைரசின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் சில பகுதிகளில் நடைமுறைக்கு வந்த முடக்கல் நிலை மூன்றாவது வாரத்தை கடந்து நீடிக்கின்றது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் அமைதியின்மையும் மன அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. மட்டக்குளி தெமட்டகொட பேலியகொட கட்டுநாயக்கா போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தங்கள் வாழ்க்கையை முடக்கிவிட்டன என தெரிவித்துள்ளதுடன் தாங்கள் வேலையற்றவர்களாக மாறிவிடுவோம் என அச்சம் வெளியிட்டுள்ளனர். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தினை சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்து…

  2. Zürich” மாநிலத்தில் ,,Stadthaus” என்னும் இடத்தில் நடைபெற்ற இவ் விழாவில் சுமார் 50 சுவிஸ் நாட்டு பிரஜைகள் பங்குபற்றினார்கள். அங்கு நின்ற தமிழர்கள் எங்களுடைய கலாசாரத்தையும், வரலாற்றையும் சுவிஸ் நாட்டு பிரஜைகளுக்கு விளங்கப்படுத்தினார்கள். எங்களுடைய தேசியக் கொடியும் அங்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 4 http://irruppu.com/?p=37706

  3. உன்னதமான தாய்மையினை வெளிப்படுத்திய தமிழச்சி; நெகிழ்ந்துபோன சிங்கள மக்கள்! இலங்கையின் மலையகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த, தொடருந்து ஒன்றில் பயணித்த தமிழ் பெண்ணொருவரிடம் கண்ட அன்பினால் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் பதுளை நோக்கிச் செல்லும் ’உடரட்ட மெனிக்கே’ என்ற பெயரைத் தாங்கிய தொடருந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த தொடருந்தினுள் தமிழ் பெண் ஒருவர் நடந்துகொண்ட பண்பினை வியந்தே மேற்படி தென்னிலங்கை சிங்கள இனத்தவர்கள் பாராட்டியுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த உடரட்ட மெனிக்கே தொடருந்தில் கொழும்பை சேர்ந்த ஒருவர் தனது பிள்ளையுடன் பயணித்துள்ளா…

  4. சிங்களம் பேசும் மனிதர்களுக்கு ஒரு கடிதம்… நட்புடன் சிங்களம் பேசும் நண்பர்களுக்கும் மற்றும் சக மனிதர்களுக்கு முதலில் சிங்கள மொழியில் தங்களுடன் தொடர்பு கொள்ளமுடியாமைக்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்கின்றேன். சிங்கள மொழி தெரியாமைக்கான காரணம் அந்த மொழி மீதான வெறுப்பினால் அல்ல. அதற்காக சிறுவயதிலும் வெறுப்பு இருக்கவில்லை என பொய் கூறவில்லை. நான் வளர்ந்த பின்பு சிங்கள மொழி மீது வெறுப்பு இல்லை. ஆனால் ஒரு மொழியை கற்கும் ஆற்றல் எனக்கு குறைவாக இருப்பதே சிங்கள மொழியில் எழுத முடியாமைக்கான முதன்மையான காரணம். இந்த ஆற்றலை வளர்க்க முடியாமைக்காக மனம் வருந்துகின்றேன். அதேவேளை தமிழ் மொழியில் எழுதுவதால் எனக்கு தமிழ் நன்றாகத் தெரியும் என்றோ அல்லது எனது அடையாளம் தமிழ் என்றோ நீங்கள் அர்த்…

    • 0 replies
    • 726 views
  5. எல்லா மாடும் சவாரியில் ஓடுதெண்டு உடையாற்ரை பேத்தைக் கண்டும் ஓடிச்சுதாம் ” என்ற விதமாக மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலர் பூ.பிரசாந்தன் ஆகியோரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. காமுகர்கள் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கப் பிரபல சட்டத்தரணிகளே காரணம். ” என்ற தலைப்பில் பூ.பிரசாந்தனின் அறிக்கை வெளியாகியுள்ளது. ‘ சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். தீர்ப்புகள் துரிதமாக்கப்பட வேண்டும். ” என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ் தினக்குரல் இவ்வறிக்கையைப் பிரசுரித்திருந்தது. புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்முறையின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவே அவர் இவ்வாறு ஆவேசப்பட்டுள்ளார்…

    • 0 replies
    • 683 views
  6. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரத்தில் வசிக்கும் பழைய இரும்பு வியாபாரியான ப்ரீதம் லாலுக்கு, ஆகஸ்ட் 25-ஆம் தேதி செய்தித்தாள் நல்ல செய்தியைக் கொண்டுவந்தது. கடந்த 50 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கிவரும் அவருக்கு இப்போது பஞ்சாப் ஸ்டேட் லாட்டரியில் இரண்டரை கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது.

  7. ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி என்றும் அதைவிட, இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தந்ததன் ஊடாக ஈழத்தமிழர்களுக்கு இந்தியா நம்பிக்கையூட்டும் வகையில் வெளிப்படையாகச் செயல்பட்டிருப்பதாக’வும் ஊடகங்களில் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானத்தை இறுதிவரை ஏற்றுக்கொள்ள மறுத்த இந்தியா, இறுதிநாளன்று இதனை வரவேற்றதுடன் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தது. எப்போதும் சிறீலங்காவைக் காப்பற்ற மட்டுமே முனைகின்ற இந்தியா, இம்முறை கைவிடும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டபோதும், சிறீலங்காவை அடித்துக் காப்பாற்றியது என்பதே உண்மை. அமெ…

  8. முச்சக்கர வண்டி மோதியதில் அடிபட்டு உயிருக்கு போராடிய தனது கன்றுக் குட்டியைப் பார்த்து பதறிய தாய்ப் பசு, கன்றை நாக்கினால் தடவி பாசப் போராட்டம் நடத்தியக் காட்சி கண்டோரின் கண்களில் நீரை வரவழைத்தது. தமிழகத்தின் திருச்சி மன்னார்புரத்தில் இருந்து கே.கே.நகருக்கு ஒரு முச்சக்கர வண்டி சென்று கொண்டிருந்தது. காஜாமலை காலனி அருகே அந்த முச்சக்கர வண்டி சென்றபோது, ஓடிவந்த கன்றுக் குட்டி அதன் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், முச்சக்கர சாரதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. முச்சக்கர வண்டி மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட கன்றுக் குட்டி, படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்…

  9. 2025ம் ஆண்டுக்கான நாட்காட்டியை வாங்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அவுஸ்திரேலியா ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தில் கால்நடை வைத்தியராக தகுதி பெற்று வெளியேறும் மாணவர்கள், தங்கள் உடைகளைக் களைந்து போட்டோ எடுத்து நாட்காட்டியாக வெளியிடுவது சில வருடங்களாக நடந்து வருகின்றது. இம்முறை 40 மாணவர்கள் இந்த நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள். அவர்களது படங்கள் நிறைந்த 2025இன் நாட்காட்டி இணையத்தில் விற்பனைக்கு உள்ளது. விலை ஒன்றும் அதிகம் இல்லை. வெறும் 11 டொலர்கள்தான். இந்த நாட்காட்டியின் விற்பனையால் கிடைக்கும் பணம் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக்கு வழங்கப்படும். பார்த்ததாகவும் இருக்கும். நன்கொடை அளித்ததாகவும் இருக்கும். நாட்காட்டி இங்கே கிடைக்கிறது. https://www.vetsun…

  10. கல்லெறி தாக்குதலுக்கு உள்ளான நபர் சடலமாக மீட்பு! கொஹுவல பகுதியில் பாடசாலை மாணவனின் பணப்பையை திருட முயன்றதற்காக கற்களால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் நுகேகொடை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுகேகொடை, நலந்தராம வீதியில் குறித்த ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (16) கொஹுவலாவில் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு மாணவனை மிரட்டி, அந்த நபர் மாணவனின் பணப்பையைத் திருட முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில், அருகிலுள்ள மக்கள் குறித்த நபரை கற்களால் தாக்கினர், அதையடுத்து அவர் தப்பிச் சென்றார். இருப்பினும், நேற்று (16) மாலை நுகேகொடையில் உள்ள நடைபாதையில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது தலையின் பின்புறம் மற்றும் காதுகளுக்கு அ…

  11. அசாம் மாநிலம் கட்டாக்கில் மத்திய நெல் பரிசோதனை ஆராய்ச்சி கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் நல்வோரா என்ற புதிய நெல் ரகத்தை கண்டு பிடித்துள்ளனர். இந்த நல்வோரா என்ற ரக நெல்லில் கிடைக்கும் அரிசியினை வேக வைக்க தேவையில்லை. இது குறித்து நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஏ.வி. சர்மா கூறுகையில், நல்ல நீரில் சமார் 45 நிமிடம் ஊற வைத்தாலே சாதமாக மாறிவிடும். இதற்கு கொதிக்க வைத்த நீரே தேவையில்லை என்றும், இந்த ரக நெற்பயிர் நல்ல மகசூலையும் தருகிறது என்றும் கூறினார். http://www.seithy.com/breifNews.php?newsID=77250&category=IndianNews&language=tamil

  12. பேராசிரியர் பத்மநாதனை வற்புறுத்தி இராஜினாமா செய்ய வைத்ததை அடுத்து, நிலைமையைச் சீர்செய்ய ஒரு சில மனச்சாட்சி உடைய விரிவுரையாளர்களின் முயற்சியும் தோல்வியானதைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட உள்ளதாக தெரிகிறது.

    • 0 replies
    • 390 views
  13. வாழ் நாளில் ஒரு தட­வை­யேனும் பிடிக்க வேண்டும் என மீன­வர்­களே ஆசைப்­படும் அரிய வகை மீன்­களில் ஒபாஹ் எனப்­படும் மீனும் ஒன்று. எதிர்­பா­ரா­த­வி­த­மாக இம்­மீன்கள் 3 ஒரே நாளில் மீன்­பி­டிப்­ப­டகு மூலம் கடந்த வாரம் பிடிக்­கப்­பட்­டுள்­ளன. நுட்­ப­மான முறையில் படகில் பய­ணித்து மீன் பிடிக்கும் ஆர்­மன்டோ கஸ்­டிலோ, ஜோ லுட்லோவ் மற்றும் ட்ரவிஸ் சவாலா ஆகிய மூவரும் இணைந்தே ஒபாஹ் மீன்கள் மூன்­றையும் பிடித்­துள்­ளனர். இவற்றின் சரா­ச­ரி­யான நிறை 70 கிலோ கிராம்­க­ளாகும். செம்­மஞ்சள் நிறத்தில் சற்றே இறு­வட்டு போன்ற அமைப்­பி­லுள்ள ஒபாஹ் மீன்கள் மூன்­று­டனும் மேற்­படி மூ­வரும் இணைந்து புகைப்­ப­ட­மெ­டுத்து பேஸ்­புக்கில் வெளி­யிட்­டுள்­ளனர். இப்­பு­கைப்­ப­டத்­தினை 2000 பேருக்கும் அதி­க…

    • 0 replies
    • 469 views
  14. மது கொடுத்து சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது! இறக்குவானையில் இருந்து 15 வயதுடைய சிறுமியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று, பலவந்தமான முறையில் மது அருந்த வைத்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இறக்குவானை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர், சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதன் பின்னர், அவரது இரண்டு நண்பர்களும் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவ…

  15. மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி, மாங்காடு பிரதேசத்தில் பேத்தை மீனை (puffer fish) உண்ட 27 வயதான பெண் உயிரிழந்துள்ளார். மூவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். உயிரிழந்த யுவதியின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், ஒவ்வாமை ஏற்பட்ட மற்றவர்களிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜப்பானில் தேர்ச்சிவாய்ந்த சமையற்கலை நி…

    • 0 replies
    • 439 views
  16. தன்னைக் கடத்திச் செல்வதாக எண்ணி ஊபர் சாரதியைக் கொன்ற பெண் தன்னைக்கடத்திச் செல்வதாக எண்ணி ஊபர் சாரதி மீது பெண் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபோப் கோபா (Phoebe Copa) என்ற பெண் மீதே கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெண்டகியைச் சேர்ந்த குறித்த பெண் தனது காதலனைக் காண ஊபரில் பயணித்துள்ள நிலையில், டெக்ஸாஸின் எல்லைநகரமான எல் பாசோ பகுதியில் வைத்து தான் மெக்ஸிகோவுக்கு கடத்தப்படுவதாக எண்ணி அதன் சாரதியான டேனியல் பீட்ரா கார்சியா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே 52 வயதான குறித்த சாரதி உயிரிழந்துள்ளார் . இதனையடுத…

  17. செவ்வாய் கிரத்திற்கு செல்வதற்கான ஒரு-வழி பயணத்திற்கு உலகம் பூராகவும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 100-பேர்களடங்கிய குறுகிய பட்டியலில் கனடாவை சேர்ந்த ஆறு பேர்கள் தெரிவாகியுள்ளனர். நெதர்லாந்தை அடிப்படையாக கொண்ட Mars One என்ற அமைப்பு சிவப்பு கிரகத்தில் மனித குடியிருப்பை ஸ்தாபிக்க எண்ணியுள்ளது. இதற்கான தெரிவில் மூன்றாவது சுற்றில் 100-பேர்களை தெரிவு செய்துள்ளது. வேட்பாளர்களில் ஒன்ராறியோவை சேர்ந்த நால்வரும், பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த இருவரும் அடங்குகின்றனர். யுகொனை சேர்ந்த ஒருவரும் தெரிவாகி மூன்றாவது சுற்றில் நீங்கி விட்டார். Mars One ஆரம்பத்தில் ஒரு-வழி பணிக்காக உலகம் முழவதிலும் இருந்து 200,000விண்ணப்பங்களை பெற்றுள்ளது. இவற்றில் 8,243 கனடிய விண்ணப்பங்களாகும். சாரணர் தலைவரும…

  18. கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - 510 பயணிகள் உயிர் தப்பினர் [ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 03:36.34 AM GMT ] அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கிப் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று அதிகாலை விமானம் தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர அதிகாரி தெரிவித்துள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஏ 380 ரக பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தரையிறக்கப்பட்ட விமானத்தில் 510 பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilwin.com/show-RUmtyGRaSUfxzB.html

    • 0 replies
    • 272 views
  19. நேர்காணல் காணொளி : Part :1 Part 2: http://youtu.be/2ovCehRZv_A Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக அனுபவித்த சம்பவங்களை கொண்டு உண்மை கதையில் எழுதப்பட்ட நாடகம் பெர்லின் நகரத்தில் சென்ற கிழமை பல்லின மக்களுக்கு காண்பிக்கப்பட்டது . குரல் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மனிதர்களின் உண்மைக் கதைகளை உலகத்திற்கு கொண்டு செல்வது Annet Henneman அவர்களின் நோக்கம் ஆகும்.அத்தோடு புலம்பெயர்ந்து அகதிகளாக பல கஷ…

  20. 100 வருடங்களுக்கு முன்பு எவரெஸ்ட் மலையில் ஏற முயன்று காணாமல் போனவரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நெஷனல் ஜியோக்ரபிக் இதழ் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. காலநிலை மாற்றம் மற்றும் இமயமலையைச் சுற்றி பனி குறைவடைந்துள்ளமையால் உலகின் மிகவும் உயரமான மலையின் உயரத்தை அளவிடுதலை தனது கனவாகக் கொண்டிருந்த மலையேறுபவர்களின் இறந்த உடல்களை அதிகளவில் வெளிப்படுத்துகின்றன. 1924ஆம் ஆண்டில் பிரிட்டன் அண்ட்ரூ மற்றும் ஜோர்ஜ் மல்லோரி ஆகிய இருவரும் முதன் முதலில் கடல் மட்டத்திலிருந்து 29,029 அடி உயரத்தில் எவரெஸ்ட் மலையை அடைய முயற்சித்தனர். இம் முயற்சியின்போது இருவரும் காணாமல் போனார்கள். இவர்களில் ஒருவரான மல்லோரியின் உடல் 1999ஆம் ஆண்டு கண்டுப…

  21. ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்திருந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தத் தீர்மானத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல், உள்ளார்ந்த அர்த்தங்களை உணர்ந்து கொள்ளாமல் தாம் அனுபவித்த அவலங்களுக்கான நியாயம் கிடைக்கவேண்டும், கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நிச்சயமாக ஜ.நாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் தமிழர்கள் அனுபவித்த அவலங்களுக்கு ஒரு சிறிய ஆறுதலைக்கூட பெற்றுக் கொடுத்திருக்கவில்லை. உண்மையாகவும் வெளிப்படையாகவும் சொல்லப்போனால் தமிழர்களுடைய பெயரைச் சொல்லியே சர்வதேச சதிகாரர்களால் தமிழர்கள் மௌனிகளாக்கப்பட்டிருக்கின்றார்கள். இதற்கு தமிழர்களின் பிரதிநிதிகள் தா…

  22. தொடர் மழையால் வெங்காயம் விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்திற்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள மார்கெட்டில் இரண்டு மூட்டை வெங்காயம் திருடியவர் சிக்கினார். மேலும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வழக்கமாக இறக்குமதி செய்யும் மொத்த வியாபாரிகள் வழக்கம் போல கொள்முதல் செய்ய முடியாததால் வெங்காயத்தின் அளவு டன் கணக்கில் குறைந்து, இதுவரை இல்லாத அளவிற்கு வெங்காயத்தின் விலையானது உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். விலையுயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசானது, வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்…

    • 0 replies
    • 232 views
  23. உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டுள்ளனர். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் (35) மற்றும் வர்ஷா ஜெயின் (32) தம்பதி ஐ.டி. ஊழியர்கள். இவர்களுடைய 3 வயது பெண் குழந்தை வியானா மூளை கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்மிக தலைவரும் சமண துறவியுமான ராஜேஷ் முனி மகராஜின் ஆலோசனையின் பேரில் ‘சந்தாரா’ வழக்கப்படி குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தக் குழந்தை கடந்த மார்ச் 21-ம் திகதி உயிரிழ…

  24. நரமாமிசம் விற்பனை செய்த நபருக்கு மரண தண்டனை ! தெற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நபர்களைக் கொன்று அந் நரமாமிசத்தை வான் கோழி இறைச்சி எனக் கூறி நரமாமிசத்தை விற்பனை செய்த நபரொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து தெரியவருவது. சீனாவில் யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்தவன் ஷங்யாங்மிங் (57). இவர் தொடர்ச்சியாக பலரை கொலை செய்துள்ளார். பின்னர் அவர்களின் உடலை வெட்டி மாமிசத்தை நாய்களுக்கு இரையாக்கினான். பலரின் உடலை எரித்தும், புதைத்தும் தடயங்களை அழித்தான். அனைத்துக்கும் மேலாக, தான் கொலை செய்த சிலரின் மாமிசத்தை விற்று பணம் சம்பாதித்துள்ளார். வான் கோழியிறைச்சி என ஏமாற்றி சந்தையில் பகிரங்கமாக விற்றுள்ளான். இதுபோன்று 11 பேரை கொலை செய்த ஷங்யாங் மிங்கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.