செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
யாழ். பல்கலைக்கழக பகிடிவதை குறித்து புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பு: அமைச்சர் ரம்புக்வெல பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதைகளை தடுப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகவியலாளர் தமது கேள்வியின் போது, அரசாங்கம் தேர்தல் காலங்களில் நாட்டின் பல்கலைக் கழகங்களில் பகிடிவதையை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு த…
-
- 2 replies
- 377 views
-
-
திருடிய மகனுக்கு தாய் கொடுத்த அதிர்ச்சி தண்டனை!!! சீனா - ஷயோடாங் என்ற பகுதியில் ஒரு வீட்டில் வைத்திருந்த பணத்தை திருடிய மகனுக்கு அவனின் தாய் கொடுத்த தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்த 20,000 ரூபாய் பணத்தை சிறுவன் திருடி செலவழித்துள்ளான். இதுபற்றி அவனின் தாய் விசாரித்ததற்கு சிறுவன் சரியான பதிலை கூறாமலிருக்க ஆத்திரமடைந்த அவனின் தாய் தனது மோட்டார் சைக்கிளின் பின்புறம் அந்த சிறுவனை கயிற்றால் கட்டி தரதரவென சாலையில் இழுத்து சென்றுள்ளார். இதைக் கண்ட பொதுமக்களில் ஒருவர் தனது கைத்தொலைப்பேசியில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பியதோடு பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 377 views
-
-
பணம் பிரச்சினை காரணமாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட இருவர் முகத்திற்கு முகம் எச்சில் துப்பி சண்டை பிடித்துக்கொண்ட சம்பவம் ஒன்று பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பணப்பிரச்சினை காரணமாக முரண்பட்டுக்கொண்ட 52 வயதான அம்மாவும் அவருடைய 25 வயதான மகளுமே இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து இவ்வாறு சண்டை பிடித்துக்கொண்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டப்ளியு.ஏ.ஆர் கருணாரத்ன பெற்றோரின் பொறுப்புக்கள் என்ன? பிள்ளைகளின் பொறுப்புக்கள் என்ன? என்பது தொடர்பில் தெளிவுப்படுத்திகொண்டிருந்த போதே இருவரும் முகத்திற்கு முகம் எச்சில் துப்பி சண்டைபோட்டுக்கொண்டுள்ளனர். அறிவுரையை கைவிட்ட பொலிஸ் நிலை…
-
- 0 replies
- 377 views
-
-
கொச்சி: ஏமனில் இருந்து பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டு விமானத்தில் இன்குபேட்டரில் வைத்து இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் இருந்து 4 ஆயிரத்து 600 இந்தியர்களை மத்திய அரசு மீட்டுள்ளது. ஏமனில் வசித்து வந்த ராஜி என்பவர் குறைமாதத்தில் பார்வதி என்ற பெண் குழந்தையை பெற்றார். இந்நிலையில் குழந்தையுடன் ராஜி ஏமனில் உள்ள சனா நகரில் இந்தியர்கள் மீட்கப்படும் இடத்திற்கு வந்தார். அவர்கள் விமானம் மூலம் அண்டை நாடான ஜிபோட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குழந்தைக்கு மஞ்சள்காமாலை, மூச்சு திணறல் பிரச்சனை இருப்பது தெரிந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் குழந்தையை இன்குபேட்டரில் வைத்தனர். பின்னர் குழந்தையை இன்குபேட்டருடன்…
-
- 0 replies
- 377 views
-
-
இந்தியாவிடம் 7,500 கோடி கடன் கோரியுள்ள இலங்கை அந்நியச் செலாவணி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இலங்கை இந்தியாவிடம் மேலும் 7,500 கோடி ரூபாய் கடன் கோரியுள்ளது. கொரோனா பாதிப்பால் சுற்றுலா வருவாய் குறைந்ததையடுத்து, இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்துள்ளது. இதன் காரணமாக தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் இலங்கையின் கடன் தகுதியைக் குறைத்துள்ளது. இதேவேளை இலங்கையின் மூலதன சந்தைகள் துறை இணையமைச்சர் அஜித் நிவால் கப்ரால் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக இந்திய றிசேவ் வங்கியிடம் ஜுலை மாதம் அந…
-
- 1 reply
- 377 views
-
-
மறுசுழற்சி முறையில் பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு மிகப்பெரும் மறுசுழற்சி தொழிற்சாலைக் கட்டிடம் ஒன்று தைவானில் உருவாகிவருகிறது. உலக அளவில் மனிதர்கள் உருவாக்கும் பல்வேறுவகையான கழிவுகள், மனிதர்களுக்கு மாபெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இந்த தலைவலி, தைவான் நாட்டை கடுமையாக பாதித்ததன் விளைவு, அந்த நாட்டு அரசாங்கம் அந்த கழிவுகளையே தங்களின் தேவைகளுக்கான மூலப்பொருளாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. தைவான் தீவு சுமார் பதினான்காயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட ஒரு குட்டித்தீவு. சுமார் இரண்டரை கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இந்தத் தீவின் பெரும்பகுதி மலைகள். அதனால் மக்கள் பயன்பாட்டுக்கான நிலப்பகுதி என்று பார்த்தால் மற்ற நாடுகளைவிட அங்கே குறைவு. மின்ன…
-
- 0 replies
- 377 views
-
-
உலகின் மிகப்பெரிய, அதி உயர கோபுரம் என்று அழைக்கப்படும் டோக்கியோ ஸ்கை டிரீ இன்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபட்டது. அதிவேக எலிவேட்டர்கள் மூலம் சுமார் 8,000 பார்வையாளர்கள் இன்று இந்த உலகின் அதி உயர கோபுரத்திலிருந்து உலகைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோபுரம் 634 மீட்டர்கள், அதாவது 2080 அடி உயர கோபுரமாகும் இது. சீனாவில் உள்ள கேன்டன் கோபுரம் 600மீ, அதாவது 1968.5 அடி உயரம் கொண்டது. அதனையும் தாணி விட்டது டோக்கியோ ஸ்கை டிரீ. ஆனால் துபாஇயில் உள்ள புர்ஜ் கலிப்பா என்ற விடுதி 828 மீட்டரக்ள் உயரம் கொண்டது, அதாவது 2,717 அடி உயரம் கொண்டது. ஒரு கட்டிடம் என்ற அளவில் இது மிக உயரமானது. ஆனால் டோக்கியோ ஸ்கை டிரீ ஒரு கோ…
-
- 0 replies
- 377 views
-
-
யாழ் பல்கலைக் கழக மாணவர்களை இலங்கை இராணுவம் கைதுசெய்தது, மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பாகவும். மேலும் பல மாணவர்களை இலங்கை இராணுவம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருவதைக் கண்டித்தும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இல்லத்துக்கு முன்னதாக தொடர்போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நடைபெறும் இப் போராட்டம் இன்று மாலை 6.00 மணி முதல் 8.00 மணிவரை நடைபெறும் எனவும், நாளை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 3 எழுத்துப் பெயரில் இயங்கி வரும் தமிழ் தொலைக்காட்சி ஒன்று, நேரங்களை மாற்றிச் சொல்லி மக்களை குழப்பி வருகிறது. எனவே போராட்டம் நடைபெறும் இடத்தையும் நேரத்தையும் நாம் இங்கே மிகத் தெளிவாக தந்துள்ளோ…
-
- 0 replies
- 377 views
-
-
கலவான பகுதியில் கணவனின் பையில் பெண் ஒருவரின் உள்ளாடை இருப்பதை கண்ட மனைவி கணவனை சரமாரியாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கணவன் கடைக்குச் சென்று மனைவிக்கு பாதனி ஒன்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிச் செல்லும் வழியில் பொருட்கள் இருந்த பை பாரம் தாங்காமல் அறுந்துள்ளது. இந்நிலையில் குறித்த நபருக்கு வீதியால் சென்ற பெண் ஒருவர் உதவி செய்துள்ளதோடு, தனது பையையும் தவறுதலாக அவரிடம் விட்டுச் சென்றுள்ளார். இதை அவதானிக்காது குறித்த பையை வீட்டுக்கு கணவன் எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்துள்ளார். பையை திறந்து பார்த்த மனைவி, பையினுள் பெண்ணின் உள்ளாடை இருப்பதை அவதானித்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த மனை…
-
- 1 reply
- 377 views
-
-
போதிய அளவு வீட்டு வேலைகளை செய்யவில்லையென மனைவிக்கு எதிராக கணவர் வழக்கு 2016-02-08 10:47:00 தனது மனைவி போதியளவில் வீட்டிலுள்ள வேலைகளை செய்யவில்லை எனக் கூறி, இத்தாலிய நபர் ஒருவர் தனது மனைவிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். இவ் வழக்கில் மேற்படி பெண் குற்றவாளியாகக் காணப்பட்டால் அவருக்கு 6 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டில் அதுவும் இத்தாலியில் இத்தகைய வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளமை பலரையும் வியப்படையச் செய்துள்ளது. சமையல், சலவை மற்றும் சுத்திகரிப்பு பணிகளை செய்யாததன் மூலம், தனது குடும்பத்தை மனைவி மோசமாக நடத்துகிறார் என அந் நபர் குற்ற…
-
- 0 replies
- 377 views
-
-
குறைபாடுடைய மாணவர்களுக்குள் மலர்ந்த காதல்: மனதை வருடும் காட்சி (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 27 மே 2015, 02:25.26 பி.ப GMT ] நியூயோர்க்கில் டவுண் சிண்ட்ரோம் என்ற குறைபாடுடைய இளம் காதலர்கள் டேட்டிங் செல்லும் வீடியோ இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது. தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடன் இருப்பவர்கள் டவுண் சிண்ட்ரோம் குறைபாடுடையவர் ஆவர். மேலும், தலை, காது, வாய் போன்ற உறுப்புகள் வழக்கத்தைவிட சிறிதாக இருக்கும். காதுகள் வளைந்தும், நாக்கு துருத்திக்கொண்டும் காணப்படும். "டவுன் சிண்ட்ரோம்" குறைபாடுள்ள குழந்தைகளின் அறிவுத்திறன் மற்ற குழந்தைகளைப்போல் முறையாக வளர்ச்சியடைவதில்லை. …
-
- 0 replies
- 377 views
-
-
[size=2] [/size]
-
- 0 replies
- 377 views
-
-
நாயுடன் நடந்து சென்ற தம்பதி ஒன்று சுமார் 13 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நாணயங்களுடன் வீடு திரும்பிய சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. கலிபோனியாவைச் சேர்ந்த ஜோன் மற்றும் மேரி என்ற தம்பதிகளே இவ்வாறு தங்கக் காசுகளுடன் வீடு திரும்பியுள்ளனர். ஆனால் இவர்கள் தங்களை வெளியில் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. வழக்கமாக நாயுடன் நடந்து செல்லும் வழியில் பழைய பேணி ஒன்று நிலத்தின் வெளியே தெரியுமாறு புதையுண்டுள்ளது. தொடர்ந்து அந்த பேணியை குச்சி ஒன்றினால் தோண்டி எடுத்துள்ளனர். அந்த ஒரு பேணியுடன் அங்கு புதையுண்டிருந்த மேலும் 7 பேணிகளை இத்தம்பதிகள் தோண்டி எடுத்துள்ளனர். இவற்றுள் 1400க்கும் அதிகமான தங்க நாணயங்கள் இருந்துள்ளன. இச்சம்பவம் கடந்த வருடம் இடம்பெற்றத…
-
- 0 replies
- 376 views
-
-
சீனாவில் 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் 80 சதவீதம் பேர் 21 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தேசிய புள்ளியியல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. உள்நாட்டிலேயே ஒரு இடத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் வேறு இடத்தில் பணி செய்ய செல்வதும், வெளிநாட்டினர் பலர் வேலை செய்ய சீனாவுக்கு வருவதும் அதிகரித்துள்ளது. இதுபோல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.இவர்கள் சொந்த ஊரை விட்டு பல மாதங்கள், பல ஆண்டுகள் வேலை செய்வதால் மன அழுத்தம், தனிமை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வேறு இடங்களில் வந்து சீனாவில் வேலை செய்யும் ஊழியர்கள், தற்காலிக திருமணம் செய்து கொள்வது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாக…
-
- 2 replies
- 376 views
-
-
-
பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகள் பலவும் பலரின் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறிவிடும். பலரும் தங்களின் வளர்ப்பு பிராணிகளை குழந்தைகளாக பாவித்து உணர்ச்சிப் பெருக்கோடு வளர்ப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தவகையில் ஹச்சிகோ என்ற ஒரு வளர்ப்பு நாயின் நிஜக்கதை ஏராளமான புத்தகங்கள் தொடங்கி திரைப்படங்கள்-அறிவியல் புனைகதைகள் வரை அனைத்திலும் இடம்பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த நாயின் உருவச்சிலையை வெண்கலத்தில் செதுக்கி சிறப்பும் செய்துள்ளனர். இந்த ஹச்சிகோ நாய்க்கு பின்னால் உள்ள கதை மிகவும் சிறப்பு வாய்ந்தது. 1923 ஆம் ஆண்டு, ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழத்தில் பணிபுரிந்த ஹிடெசாபுரோ யுனோ என்ற பே…
-
- 2 replies
- 376 views
- 1 follower
-
-
சவூதியில் முதலாளியை கொலை செய்து அவர் மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் சவூதி அரேபியாவில் வாகன சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், அவரது முதலாளியை கொலை செய்துவிட்டு, அவரின் மனைவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள கோபார் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதலாளியையும் அவரது மனைவியையும் காரில் ஏற்றிச் சென்ற குறித்த சாரதி, கோபாரில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் வைத்து முதலாளியை கொலை செய்துள்ளார். அதன்பின்னர் அவரது மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த போது பொலிஸார் அவரை மீட்டுள்ளனர். கைதான இலங்கையருக்கு 50 வயது ௭ன்றும் கொலை செய்யப்பட்டவருக்கு 70 வயது ௭ன்றும் த…
-
- 0 replies
- 376 views
-
-
ஜாம்பியா சுரங்கத்தில் மிகப் பெரிய பச்சை நிற மரகதக்கல் கண்டுபிடிப்பு! ஜாம்பியா நாட்டில் உள்ள சுரங்கப்பகுதியில் இருந்து மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை நிற மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) உள்ள ஜெம்ஃபீல்ட் சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் 1.1 கிலோ (கிட்டத்தட்ட 2.5 பவுண்ஸ்கள்) எடையை கொண்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற மரகதக் கல்லை சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடக்கும் நிகழ்வின் போது ஏலத்தில் விட சுரங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குநித்த கல் 44.84 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மரகதக்கல் பட்டை தீட்டப்பட்டால் 5 ஆயிரத்து 655 காரட் எடை கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 376 views
-
-
தனிஈழம் உடனடித் தீர்வாக அமையாது என புதிய இடதுசாரி முன்னணியின்தலைவர் கலாநிதி விக்ரபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். தனி ஈழம் மட்டுமே ஒரே தீர்வு என்ற கொள்கையில் தமக்குஉடன்பாடில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். சுயாட்சி அதிகார சந்தர்ப்பம் காணப்படுவதாகவும், இந்தப்பிரச்சினை குறித்து பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண முடியும் எனவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர் பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படுவதாகத் தெரிவித்து தமிழர்களிடம்காணிகள் அபகரித்து, அதனை பல்தேசிய கம்பனிகளிடம் இந்த அரசாங்கம் வழங்கி வருவதகக்குற்றம் சுமத்தியுள்ளார். பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும்நோக்கில் ச…
-
- 0 replies
- 376 views
-
-
கண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். 7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர். ஒழுங்காக உணவு, நீர் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் தொடர்பில் நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் மீட்கப்பட்டுள்ளார் http://newuthayan.com/story/16/67-வருடங்களாக-அடைத்து-வைக்கப்பட்டிருந்த-பெண்-நேரில்-கண்ட-பொலிஸார்-அதிர்ச்சி.html
-
- 0 replies
- 376 views
-
-
தங்கம் கலந்த ஒரு பிளேட் பிரியாணியின் விலை ரூ. 20 ஆயிரம்; உலகிலேயே விலையுயர்ந்த பிரியாணி துபாய் இந்தியா போலவே வளைகுடா நாடுகளிலும் பிரியாணியும் விரும்பி உண்ணப்படுகிறது. குறிப்பாக , துபாயில் விதவிதமாக பிரியாணி தயாரித்து சாப்பிடுகிறார்கள். ஏராளமான பிரியாணி ரெஸ்டாரன்டுகளும் துபாய் முழுவதும் நிறைந்துள்ளன. இந்திய தயாரிப்பு பிரியாணியும் துபாயில் விரும்பி உண்ணப்படுகிறது. அந்த வகையில், துபாயில் செயல்பட்டு வரும் பாம்பே போரோ என்ற பிரியாணி ரெஸ்டாரன்ட்டில் ராயல் பிரியாணி என்ற பெயரில் உலகிலேயே அதிக விலை கொண்ட பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரியாணியில் 23 கேரட் சாப்பிடக் கூடிய தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு பிளேட் அலங்கரிக்…
-
- 0 replies
- 376 views
-
-
கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய உலகின் முதல் தடுப்பு மருந்தை கண்டுபிடித்த இத்தாலி! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க, உலகநாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. இதில் பிரித்தானியா, ஜேர்மனி, அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் இறுதிகட்ட ஆய்வில் உள்ளன. இந்த நிலையில், மனித செல்களில் உள்ள கொரோனா வைரஸை அழிக்கக் கூடிய, உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டறிந்துள்ளதாக இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இத்தாலியின் டக்கீஸ் (Takis) என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஸ்பாலன்சானி மருத்துவமனையில் சில மாதங்களாக கொரோனா நோய் தடுப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. இந்தநிலை…
-
- 0 replies
- 376 views
-
-
ஒரு சாண்ட்விச் தயாரிக்க 6 மாதம்... அப்படி என்ன ஸ்பெஷல்? யூடியூப் நட்சத்திரமான ஆண்டி ஜார்ஜ், நம்மூர் உணவான இட்லியோ, தோசையோ செய்ய முயன்றால் எப்படி இருக்கும் என யோசித்துப்பார்த்தால் வியப்பாக இருக்கும்.ஜார்ஜ் நிச்சயம் இதற்கு மாதக்கணக்கில் எடுத்துக்கொள்வார்.ஆயிரக்கணக்கில் பணத்தை செலவிடுவார்.அதைவிட முக்கியமாக நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த வயலில் இறங்கி உழைப்பார். இப்படி எல்லாம் யாராவது உணவை தயார் செய்வார்களா? என ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆண்டி ஜார்ஜ் நிச்சயம் இப்படிதான் செயல்படுவார். அதற்கு அவர் உருவாக்கியுள்ள சாண்ட்விச் உணவே சாட்சி! இந்த சாண்ட்விச்சை தயார் செய்ய அவருக்கு தேவைப்பட்ட காலம் ஆறு மாதம். ஆன செலவு 1500 டாலர்கள்- நம்மூர் கணக்குபடி கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய். என…
-
- 1 reply
- 376 views
-
-
ஆசிய நாடான ஜப்பானில், புத்தாண்டு தினத்தன்று நடந்த மீன் ஏலத்தில், 276 கிலோ எடையுள்ள, டுனா வகை மீனை, 13 கோடி ரூபாய்க்கு, ஓட்டல் நடத்தி வரும், 'டுனா கிங்' என்றழைக்கப்படும், கியோஷி கிமுரா ஏலம் எடுத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் டுனா மீன் ஏலத்தில், அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்து பிரபலமானவர் இவர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2451177
-
- 0 replies
- 376 views
-
-
களுத்துறை – அத்துளுகமையில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பியவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2ம் திகதி அத்துளுகமை பகுதியில் கொரோனா தொற்று பரிசோதனைக்கு சென்ற சுகாதார பரிசோதகர் மீது இவர் எச்சில் துப்பியிருந்தார். இந்நிலையில் பாணந்துறை நீதிமன்றால் இன்று (21) மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் இவருக்கு ஆறு ஆண்டுகள்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/பி-எச்-ஐ-மீது-எச்சில்-துப்/
-
- 0 replies
- 376 views
-