செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7084 topics in this forum
-
கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்திலுள்ள வீதியொன்றில் வெள்ளை நிற பிளாஸ்ரிக் கொள்கலமொன்றில் தலை சிக்கியிருக்க நடந்து சென்ற கரடியொன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பறவைகளுக்கான தானியம் வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அந்த கொள்கலனில் உணவைத் தேடி கரடி தலையை நுழைத்தபோதே அதன் தலை பாத்திரத்தில் சிக்கிக்கொண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நிலையில் அந்தக் கரடியின் தலையிலிருந்து பிளாஸ்ரிக் கொள்கலனை பொலிஸார் வெட்டி அகற்றியதையடுத்து அது அதற்குரிய வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. http://virakesari.lk/art…
-
- 0 replies
- 463 views
-
-
தன்னை துரத்தி வந்த நாய்களிடமிருந்து தப்புவதற்காக மின் கம்பமொன்றில் ஏறிய கரடியொன்று அந்தக் கம்பத்தில் தன்னை மறந்து உறங்கி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது. சஸ்கட்சிவான் பிராந்தியத்தில் ஷெல்புறூன் எனும் இடத்திற்கு அண்மையிலுள்ள மின் கம்பத்திலேயே அந்தக் கரடி உறங்கியுள்ளது. அந்தக் கரடியை மின் தாக்குதலுக்கு உள்ளாகாமல் பாதுகாப்பாக கீழே இறக்குவதற்கு பிராந்திய மின்சார ஊழியர்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. virakesari
-
- 0 replies
- 531 views
-
-
பொலிவூட் நட்சத்திரங்களின் கிரிக்கெட் போட்டி பொலிவூட் கலைஞர்கள் பங்குபற்றும் பொக்ஸ் கிரிக்கெட் லீக் (பி.சி.எல்) சுற்றுப்போட்டி விரைவில் நடைபெறவுள்ளது. மும்பை வோரியர்ஸ், ரௌடி பெங்களூர், புனே அன்மோல், அஹமதாபாத் எக்ஸ்பிரஸ், கொல்கட்டா பாபு, ஜெய்பூர் ராஜ், சண்டிகார் கிளப்ஸ், டெல்ஹி ட்ரகன்ஸ் ஆகிய 8 அணிகள் இப்போட்டிகளில் மோதவுள்ளன. சுமார் 150 கலைஞர்கள் இவ்வணிகளில் இடம்பெறுகின்றனர். ஒவ்வொரு அணியிலும் ஆண்களும் பெண்களும் இடம்பெறுகின்றனர். ரௌடி பெங்களூர் அணியைச் சேர்ந்த நடிகைகள் சாரா கான், ராக்கி சாவந்த், நடிகர் அஜாஸ் கான் அணி உரிமையாளர் மயான்க் சிங் ஆகியோர் கடந்த திங்கன்று மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். - See more at: http://www.metronews.l…
-
- 0 replies
- 621 views
-
-
பட மூலாதாரம்,SHEBAZ ANWAR கட்டுரை தகவல் எழுதியவர்,ஷாபாஸ் அன்வர் பதவி,பிபிசி ஹிந்தி 3 ஏப்ரல் 2023, 12:12 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மாலை நேரத்தில் ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளின் சத்தத்தால், பிஜ்னூர் ஷேக் ஜமாலின் மாளிகையின் உள்ளே வித்தியாசமான சூழல் காணப்படுகிறது. சில நேரங்களில் பறவைகளின் கூட்டம் கூரையில் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு பறப்பதைக் காண முடிகிறது. மற்ற சில நேரங்களில் சிட்டுக்குருவிகள் கூட்டம் கூட்டமாக கூரை மீது அமர்ந்திருக்கின்றன. மாலை மங்க மங்க முற்றத்தில் உள்ள மரம், செடி கொடிகளில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரிக்…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
ராகம பிரதேசத்தில் உள்ள விஹாரை ஒன்றில் வசிக்கும் 19 வயதுடைய பிக்கு ஒருவர், சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் பெரியவர்களுடன் உடலுறவு கொள்ளும் வீடியோக்களை ஆபாச இணையத்தளங்களில் வெளியிட்டு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் 7 மாதங்கள் முதல் 18 வயது வரையிலான சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததாகவும், அவர்களில் 80 சதவீதமானேர் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட போது, சந்தேக நபரிடமிருந்து மூன்று கணினிகள் மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோக்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களும் பொலிஸாரின…
-
- 0 replies
- 159 views
-
-
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவர் 2 கருப்பைகள் கொண்ட பெண்ணாக இருக்கிறார். பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு காலேப் என்ற கணவரும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கெல்சி ஹேட்சர் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அதிசயமாக அவரது 2 கருப்பையிலும் தனித்தனி குழந்தைகளை அவர் சுமந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவ வரலாற்றில் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதை கடவுளின் ஆசீர்வாதமாக கெல்சி மற்றும் அவரது கணவர் கருதுகின்றனர். ஒவ்வொரு கருப்பையும்வெவ்வேறு நேரங்களில் சுருங்க கூடும் என்பதால் குழந்தைகள் மணி நேரம், நாட்கள் அல்லது வாரங்கள் இடைவெளியில் பிறக்கலாம் என மருத்துவர்கள் நம்புகிறார்கள். https://thinakkural.lk/a…
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
மைத்திரி விலகவுள்ளார்? July 12, 20157:25 am ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வேட்புமனு வழங்கியதைத் தொடர்ந்து, தமது ஆதரவாளர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்ட ஜனாதிபதி மைத்திரியின் நிலை தற்போது இருதலைக்கொள்ளி எறும்பாக மாறியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அவருக்கு ஆதரவாக செயற்பட்ட கட்சிகளும் ஆதரவாளர்களும் பிரிந்துசென்று, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுசேர்ந்துள்ளனர். மக்கள் ஆணையை மைத்திரி காப்பாற்றுவார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த மக்களும், தற்போது மைத்த…
-
- 0 replies
- 286 views
-
-
நேற்று மாலை பசுமைக் கட்சியை சார்ந்த திருமதி Ute Koczy, MdB (Bündnis 90 / DIE GRÜNEN) மற்றும் சமூகஜனநாயக கட்சி சார்பாக Christoph Strässer, MdB (SPD) அவர்களுடன் மற்றும் ஏனைய பல சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் மற்றும் ஊடகவியாளர்கள் ஈழத்தமிழர் மக்கள் அவையின் உறுப்பினர் உட்பட கலந்து கொண்ட சந்திப்பில் "இலங்கையில் அமைதி , சட்டம் மற்றும் மனிதஉரிமைகளின் பங்கு என்ன " எனும் தலைப்பில் கருத்தரங்கம் இடம்பெற்றது . Christoph Strässer தனது உரையில் இலங்கையில் மிக கொடூரமான போர்க்குற்றங்கள் நடைபெற்றதாக அறிகின்றோம் அத்தோடு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் விடையமாக எவ்வித திருப்திகரமான நடவெடிக்கைகளும் எடுக்காத வகையில் இவ்விடையம் குறித்து சர்வதேச சுஜாதீனமான விசாரணை மிக அவசியம் என வல…
-
- 0 replies
- 414 views
-
-
பட மூலாதாரம்,VARDHMAN OFFICIAL WEBSITE படக்குறிப்பு, எஸ்.பி.ஓஸ்வால் கட்டுரை தகவல் எழுதியவர், ஹர்மன்தீப் சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த 82 வயதான பத்மபூஷன் விருது பெற்ற ஜவுளி தொழிலதிபர் எஸ்.பி.ஓஸ்வால் மிகப்பெரிய இணைய மோசடியில் ஏமாற்றப்பட்டிருக்கிறார். ஓஸ்வாலிடம் திரைப்பட பாணியில் 7 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். போலியான இணையவழி உச்ச நீதிமன்ற விசாரணைகள், போலி கைது வாரண்டுகள், போலி சிபிஐ அதிகாரிகள் என மிகப்பெரிய ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றி ஓஸ்வாலை ஏமாற்றியிருக்கிறது ஒரு கும்பல். …
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான்‘ என, இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இதுநாள் வரையில், கடந்த இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் என்ற இனத்தில் இருந்துதான் நவீன மனிதன் தோன்றினான் என்றும், முதன்முதலில் ஆப்ரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்பட்டு வந்தது. சமீபத்தில், இஸ்ரேல் நாட்டில் உள்ள பென்-குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் உடல் படிவங்களை கண…
-
- 0 replies
- 1.1k views
-
-
தாயிற்சிறந்த கோயிலுமில்லை.... என்ற வைரவரிகள் தமிழ் கூறும் நல்லுலகில் பவனி வரும் இரத்தினச் சுருக்கமான வார்த்தை. ஒரு சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக. இப்படிப் பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது. இப்படிப்பட்ட அன்னையைக் கௌரவிக்கும் இந்நாளில் "அன்னையர் தினம் ' அகிலமெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்தவர் பற்றி நாம் சுற்றுத் தெரிந்து கொள்வோமா? 16ஆம் நூற்றாண்டில் கிறிஸ் நாட்டில்தான் ‘’MOTHERING SUNDAY’’ என்ற நாள் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்ட்டர் வரும் மாதத்தின் நான்காம் ஞாய…
-
- 0 replies
- 563 views
-
-
ராஜஸ்தான் மாநிலம் ஹோகரி கிராமத்தை சேர்ந்தவர் ஷிவ் சரண் யாதவ் (வயது 77) இவர் முதல் முறையாக 1968 ஆம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பரீட்சை எழுதி வருகிறார். இந்த ஆண்டு 10 ஆம் திகதி யாதவ் தான் எழுதும் தேர்வில் தேர்ச்சி அடைவேன் என நம்புகிறார். 10 வகுப்பில் தேர்ச்சி அடைந்த பின்தான் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சபதம் செய்து இருந்தார் ஆனால் இதுவரை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை அவருக்கு கணிதபாடம் மிக சவாலாக அமைந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நான் சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறேன். ஆனால் வேறு பாடத்தில் தோல்வி அடைந்து விடுகிறேன். குறிப்பாக நான் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் போதுமான மதிப்பெண் பெற்றிருந்தேன் ஆனால் இந்தி மற்றும் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்…
-
- 0 replies
- 416 views
-
-
யேர்மன் கார் பாங்கிங் மெசினில் இருந்து யூரோ நாணயங்கங்களை திருடி கோடிஸ்வரரான அரசு ஊழியர். பாங்கிங் மெசினில் இருந்து பணத்தை எடுப்பது தான் அவர் வேலை. அதை பயன்படுத்தி...🤣 இந்தியா இலங்கையில் தேர்தலில் நின்று போட்டியிட வேண்டியவர்.
-
- 0 replies
- 128 views
-
-
வாழப்பாடி அருகே ஏற்பட்ட விபத்தில் உயிருக்கு போராடிய இளைஞர்களை பொதுமக்கள் செல்போனில் படம் எடுக்க ஆர்வம் காட்டியதால் 3 பேர் உயிர் இழந்தள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புழுதிக்குட்டை புதுக்காடை பகுதியை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (24) நேற்று முன்தினம் தனது நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பேளூர் நோக்கி சென்றார். மோட்டார் சைக்கிள் ஏரிகோழிக்கரையில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிளில் சென்ற 4 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மற்ற மூவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.இதைபார…
-
- 0 replies
- 426 views
-
-
பிள்ளையாரை திருடியவர், சி.சி.டி.வி.யில் வசமாக மாட்டிக்கொண்டார் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கொட்டகலை கொமர்சல் பகுதியில் வீடு ஒன்றில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பிள்ளையார் சிலை ஒன்று கார் ஒன்றில் வந்த இளைஞரால் திருடப்பட்டு மூன்று நிமிடத்தில் மீண்டும் கொண்டு வந்து அங்கு வைக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் முன்புறம் இருந்த பிள்ளையார் சிலையினை காலையில் பார்க்கும் போது, அது இருந்த இடத்திலிருந்து வேறொரு இடத்தில் இருப்பதனை கண்டு வீட்டு உரிமையாளர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.யினை பரிசோதித்துள்ளார். இதன் போது நபரொருவர் சொகுசு கார் ஒன்றில் நேற்று அதிகாலை 5.27 மணியளவில் வந்து …
-
- 0 replies
- 195 views
-
-
மனிதர்களை அணு அணுவாய் சித்திரவதை செய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றின் கொடூர கருவிகள்.! பல சித்திரவதை முறைகள் சுருக்கங்கள், தலை நொறுக்கிகள், மார்பக ரிப்பர் அல்லது கத்தரிகள் போன்றவை பாதிக்கப்பட்டவனை சிதைப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை, ஆனால் அவற்றின் இறுதி நோக்கம் மரணத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. சில சாதனங்களின் நோக்கம் வாழ்நாள் முழுக்க வேதனையையும், ஊனத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது. மிக கொடூரமான வலியை ஏற்படுத்தும் வரலாற்றின் மோசமான சாதனங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம். ஸ்கோல்ட் பிரிட்ல்(Scold’s Bridle) 16 ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்தும் இங்கிலாந்தும் மந்திரவாதிகள், சூனியக்காரிகளாகக் கருதப்படும் பெண்கள் மீது அரசு ஸ்கோல்ட்ஸ் பிரி…
-
- 0 replies
- 600 views
-
-
https://www.facebook.com/BBCnewsTamil/videos/392166632125184
-
- 0 replies
- 446 views
-
-
கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ்ஸொன்றில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பல்கலைக்கழக மாணவிக்கு தமது அந்தரங்கத்தைக் காட்டி தொந்தரவு செய்த நபரொருவரை மஹபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்கலைக்கழக மாணவி ஏனைய பயணிகளுக்கு இது குறித்து தெரிவித்ததை அடுத்து பயணிகளும் பஸ் சாரதியும் சம்பந்தப்பட்ட நபரை நையப்புடைத்து மஹபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபர் மஹபாகே பொலிஸார் வத்தளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=4567
-
- 0 replies
- 367 views
-
-
உலகிலேயே உயரமான கட்டிடம் சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் செங்கடலின் ஓரத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் த கிங்டம் டவர் என்பதே. இந்தக் கட்டிடத்தில் வீடுகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டிடத்தின் உயரமே இதற்குப் பெருமை சேர்க்கிறது. இது போதாதென்று இதற்கு மற்றொரு பெருமையும் சேரப்போகிறது. உலகிலேயே உயர்ந்து நின்றால் போதுமா உயரத்தையும் விரைவாக எட்ட வேண்டும் என்ற ஆசை வருமல்லவா? அதுதான் அடுத்த பெருமை. இங்கு அமையவிருக்கும் லிஃப்ட் உலகின் மிக வேகமானது என்கிறார்கள். இது வினாடிக்கு 32 அடி 10 மீட்டர் - உயரம் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த லிஃப்ட் ஃபின்லாந்து நாட்டில் தயாராகிறது. மின் தூக்கிகள் தயாரிப்பில் …
-
- 0 replies
- 570 views
-
-
https://www.facebook.com/nammtamillar.London/videos/368652979993979/ கிளிநொச்சியை சேர்ந்த திருமதி இந்திரா யோகேந்திரன் அவர்கள் தனது காணியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி சாகுவரை உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளார்!
-
- 0 replies
- 280 views
-
-
அடப்பாவமே!.. 5 வயது சிறுமியை வெயிலில் நிற்க வைத்த கொடூரம்.. தாகத்தால் பலியான சம்பவம்! பெர்லின்: அடிமை போல் நடத்துவதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு தம்பதியினரால் வாங்கப்பட்ட 5 வயது சிறுமியை வெயிலில் நிற்க வைத்ததால் அவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஜெனிஃபர். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியை விட்டு வெளியேறினார். பின்னர் துருக்கி மற்றும் சிரியா வழியாக ஈராக் சென்ற அவர் அங்குள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தார்.அவரும் அவரது கணவரும் கடந்த 2015-ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை அடிமையாக விலைக்கு வாங்கினர். அந்த குழந்தைக்கு ஒரு நாள் உடல்நல குறைபாடு ஏற்பட்டது. இதனால் அவர் மெத்தையில் சிறுநீர…
-
- 0 replies
- 597 views
-
-
இலங்கை பெண் தாக்கியதில் பிலிப்பைன்ஸ் பெண் மரணம்! July 12, 201511:27 am ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் தொழில் புரிந்து வரும் இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணொருவர் தாக்கியத்தில் மற்றுமொரு வீட்டுப் பணிப்பெண் உயிரிழந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பெண் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஃஹூஜிரா என்ற பிரதேசத்தில் இந்த பெண்கள் தொழில் புரிந்து வந்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என ஐக்கிய அரபு ராஜ்ஜிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://www.jvpnews.com/srilanka/116159.html
-
- 0 replies
- 259 views
-
-
தமிழ்நாட்டிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள இலங் கைத் தீவில் வாழும் ஈழத் தமிழர்கள் அந்நாட்டு மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். இன்று அங்கு பெரும்பான்மையினராக எண்ணிக்கையில் இருக்கும் சிங்களவர்களோ அங்கு வந்து குடியேறியவர்கள். தமிழ்நாட்டோடு இணைந்திருந்த அந்தப் பூமி இயற்கைச் சீற்றத்தால் தமிழ்நாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டது என்பது ஆய்வாளர்களின் முடிவு. இப்பொழுது அந்தத் தீவில், அம் மண்ணுக்குரிய மக்களான தமிழர்கள் வாழ்வுரிமைக்காகப் போராடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏடுகளில் படித்த அரச பயங்கரவாதம் என்பது அங்கு நடைமுறையில் கொடிகட்டிப் பறந்துகொண்டு இருக்கிறது. அய்.நா., போன்ற அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளில் பல காலகட்டங்களில் இலங்கை சிங்கள இனவாத அரசைக் கடுமையாகக் கண்…
-
- 0 replies
- 1.1k views
-
-
உழைக்கும் கைகள் அவர்கள் கஸ்ரப்பட்டு உழைக்கும் தொழிலாளிகள். வெயில், மழை, பனி, காற்று... என்று பாரமல் திறந்த வெளியில் நின்று வேலை செய்பவர்கள். அவர்களது கடுமையான உழைப்புக்கு ஏற்ற பணம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் யேர்மனியில், கொக்கைம் நகரில் கடந்த ஜூலை மாதம் முதல் பைபர் ஒப்ரிக் கேபிள்களை (Fiber optic cables) நிலத்தினுள் தாட்பதற்காக ஒரு வீதி பாவனைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. அவ்வீதி கேபிள்கள் தாட்கப்பட்டு, செப்பனிடப் பட்டு மக்களின் பாவனைக்காக மீண்டும் ஓகஸ்ட் மாத இறுதியில் திறந்து விடப்பட்டது. 13.09.2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை திடீரென இருவர் அதே வீதியில் வேலை செய்ய ஆரம்பித்திருந்தார்கள். ஒருவர் இயந்திரம் (Mini excavator) கொண்டு வீதியை உடைத…
-
- 0 replies
- 214 views
-
-
முதலாவது உலக பழங்குடி விளையாட்டு விழா பழங்குடி மக்களுக்கான முதலாவது உலக பழங்குடி விளையாட்டு விழா பிரேஸிலின் பால்மாஸ் நகரில் ஒக்டோபர் 23 முதல் நவம்பர் முதலாம் திகதிவரை நடைபெற்றது. பிரேஸிலில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறுவதற்கு சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் பழங்குடிகளுக்கான இவ்விளையாட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, பிரே ஸில், கனடா, சிலி, கொலம்பியா, கொங்கோ, ஈக்குவடோர், எத்தியோப்பியா, பிரெஞ்ச் கயானா, மெக்ஸிகோ, மொங்கோலியா, குவாத்தமாலா, நியூஸிலாந்து, பனாமா, நிக்கரகுவா, பெரு, பராகுவே, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, உருகுவே, வெனிசூலா ஆகிய 23 நாடுகளைச் சேர்ந்த ச…
-
- 0 replies
- 673 views
-