செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7084 topics in this forum
-
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இராட்சத பாம்புகளைப் பிடிப்பதற்கான போட்டி நேற்று முன்தினம் ஆரம்பமானது. இந்தப் போட்டி பெப்ரவரி மாதம் 10ம் திகதி வரை நீண்டு செல்லும். இந்தக் காலப் பகுதியில் ஆகப் பெரிய பாம்பைப் பிடிப்பவர்களிற்கு 1.500 டொலர்கள் வழங்கப்படும். மலைப்பாம்பு என வெப்பவலய நாடுகளில் அழைக்கப்படும் இந்தப் பாம்புகள் இராட்சமாக வளரக்கூடியன. புளோரிடாவின் ஆற்றுநிலம் மற்றும் சேற்றுப் பகுதிகளில் இந்தப் பாம்புகளின் தொகை அதிகரித்துள்ளதால் இந்த பாம்புகள் காடுகளில் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மிருகங்கள் அணைத்தையும் தமக்கு உணவாக்குகின்றன. இதனால் ஏனைய மிருகங்களின் தொகை குறைந்து வருவதனால் இந்தப் பாம்புகளின் தொகையை அரசு இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் குறைத்து வருகிறது. 800 பேர்…
-
- 1 reply
- 463 views
-
-
-
வீடுகளை உடைத்த களவெடுக்கப்பட்ட புகையிரதம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ரெயில் பணிமனை உள்ளது. இங்கு வேலை செய்த துப்புரவு பெண் பணியாளர் இன்று காலியாக நின்றிருந்த பயணிகள் ரெயிலை புறநகர் பகுதிக்கு திடீரென ஓட்டிச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த பெண்ணுக்கு சரியாக ரெயிலை ஓட்டத் தெரியாததால் சுமார் ஒரு மைல் தூரம் சென்றதும் தடம் புரண்டது. பின்னர் அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோதி நின்றது. ரெயிலை கடத்திச் சென்ற பெண் பலத்த காயம் அடைந்து ஸ்டாக்ஹோம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் 3 குடும்பத்தினர் இருந்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து …
-
- 0 replies
- 436 views
-
-
வங்கதேசத்தில், காதலனிடமிருந்து பிரிக்கப்பட்ட கிளி, ஒரு வாரமாக பட்டினி கிடந்ததால், கோர்ட் மூலம், மீண்டும் காதலனுடன் இணைந்துள்ளது. வங்கதேசத்தை சேர்ந்தவர் இக்ரம் சலீம். இவர் பிரேசில் நாட்டை சேர்ந்த பஞ்சவர்ண கிளிகளை வளர்த்து வந்தார். வாடகை வீட்டில் இந்த கிளிகளை, வளர்க்க போதிய இடவசதி இல்லாததால், சிறிது காலத்துக்கு, தாகா நகரில் உள்ள, தனியார் உயிரியல் பூங்காவில் விட்டிருந்தார்.உயிரியல் பூங்கா வில், ஆண் பஞ்ச வர்ணகிளியுடன், இந்த ராணி கிளிக்கு தொடர்பு ஏற்பட்டு, மூன்று குஞ்சுகள் உருவாயின. ஒரு கிளியை, உயிரியல் பூங்கா உரிமையாளர் விலை கொடுத்து வாங்கி கொண்டார். இதற்கிடையே, வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்த சலீம், தனது செல்ல பெண் கிளி ராணியை, உயிரியல் பூங்காவிலிருந்து அழைத்து வ…
-
- 1 reply
- 559 views
-
-
By Kavinthan Shanmugarajah 2013-01-15 14:17:01 இந்தியாவில் இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் மகா கும்பமேளாவில் நேற்று தொடங்கியது. இம்முறையும் இதில் கோடிக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் கோடிக்கணக்கானோர் தொடர்ச்சியாக அங்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா அலகாபாத்தில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா கொண்டாடப்படுகின்றது. மகா கும்பமேளாவே உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகத் திகழ்கின்றது. இத்திருவிழாவானது எதிர்வரும் மார்ச் மாதம் வரை 55 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மகா சங்கராந்தி தினத்தில் தொடங்கும்…
-
- 1 reply
- 899 views
-
-
சிறீலங்கா அரசு தமிழர்களுக்கு எதிரான இனவாத, இன அழிப்பு நடவடிக்கையை கட்டவிழ்த்தபோது, தமிழ் மக்கள் மீது பொருளாதார, மருந்துத் தடைகளை விதித்தபோது பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காகத் தோற்றம் பெற்றதுதான் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (Tamils Rehabilitation Organisation). பாதிக்கப்படும் தமிழ் மக்கள் யாரிடமும் கையேந்தி நின்றுவிடக்கூடாது, தங்களைக் கவனிப்பதற்கு யாருமே இல்லை என்று அவர்கள் சோர்ந்துபோய்விடக்கூடாது என்பதற்காக இலாப நோக்கமற்ற, அரச சார்பற்ற ஒரு நிறுவனமாக உருவாக்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்கியது மட்டுமல்ல, சிறீலங்காவின் சட்டவிதிகளின் கீழ் அதனையரு அமைப்பாகப் பதிவு செய்து தமிழ் மக்களுக்கான உதவிகளைப் புரிவதற்க…
-
- 8 replies
- 772 views
-
-
டோக்கியோ: உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமை பெற்ற ஜப்பான் பாட்டி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 115. உலகின் அதிக வயதான பெண்மணியாக கருதப்பட்டவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த டினா மான்ஃப்ரெடினி 115 வயதான இவர் கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமைக்கு உரியவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த கோட்டோ ஒக்குபோ (115 வயது) என்பவர் கருதப்பட்டார். 24.12.1897-ல் பிறந்த இவர் கிழக்கு ஜப்பானில் உள்ள கவாசாக்கி நகரில் மகனுடன் வாழ்ந்து வந்தார். கடந்த 27 நாட்களாக கோட்டோ ஒக்குபோதான் உலகின் வயதான பெண்மணி என்ற பெருமையை பெற்றிருந்தார். இந்தநிலையில் சில நாட்களாக காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், கவாசா…
-
- 0 replies
- 487 views
-
-
துக்கம் தின்ற கணங்கள் - கண்ணீருடன் சமீலா யூசுப் அலி 12 ஜனவரி 2013 துக்கம் தின்ற கணங்கள் துக்கம் தின்ற ஒரு பெருமாலையில் உன் மரணச்செய்தி வந்தடைந்தது.நூறு துண்டுகளாய் நொருங்கிப்போனேன்.உள்ளுக்குள் அடங்க மறுத்த கண்ணீர் திமிறிக்கொண்டு வெளியேறியது. கைகளும் கால்களும் செயலற்று உறைந்தேன். உன் வீட்டின் நாளைக்காய் உன் நிகழ்காலத்தை,கனவுகளை,உம்மாவின் அருகாமையை அடகு வைத்தாய்… உன் வலிக்கும் ஞாபகங்களை மட்டும் எங்களுக்காய் மீதம் வைத்து நீ சென்று விட்டாய்… இல்லை உன்னை பலவந்தமாய் அனுப்பி வைத்தது அநீதியின் கொடிய கரங்கள். உன்னைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை கடைசியில் வெற்றுக் கனவாய் போனது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூ…
-
- 0 replies
- 2.6k views
-
-
மொடல் அழகிகள் இருவர் ஆழ்கடலில் சுறாவுடன் நின்று புகைப்படங்களுக்கு போஸ்கொடுத்துள்ள காட்சியானது பலரை வியப்படைய செய்துள்ளது. இவர்கள் மிகப்பெரிய சுறா ஒன்றை சுற்றி சுற்றி நீந்திய நிலையில் இவ்வாறு போஸ் கொடுத்துள்ளனர். கடலில் மீன் வேட்டை தொடர்பிலான விழிப்புணர்வுக்காக இவர்கள் இப் புகைப்படங்களை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிலிபைன்ஸைச் சேர்ந்த ஹன்னா பாசர், ரொபேர்டா மென்சினோ ஆகியோரே இவ்வாறு புகைப்படங்களுக்கு காட்சியளித்துள்ளனர். மேற்படி இருவரும் கடலின் ஆழம்கூடிய பகுதிக்கு சென்று சுமார் 30 அடி நீளமான சுறாவைச் சுற்றி நீந்தியுள்ளனர். புகைப்படக் கலைஞரான கிறிஸ்டினா ச்மிட் என்பவர் இவர்களை புகைப்படம் பிடித்துள்ளார். இது நான்கு மாத திட்டமென அவர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 5 replies
- 671 views
-
-
ஆபாசப் படங்களில் நடிக்கும்போது நடிகர்கள் ஆணுறை அணிந்திருப்பதைக் கட்டாயமாக்கும் லாஸ் ஏஞ்சலிஸ் மாவட்ட சட்டத்தை எதிர்த்து அமெரிக்காவின் ஆபாசப் பட தாயாரிப்பு நிறுவனங்கள் இரண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. அமெரிக்க அரசியல் சாசனத்திலே உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை மீறுவதாக இந்த கட்டுப்பாடு அமைந்துள்ளதென விவிட் எண்டர்டெய்ண்மெண்ட், கலீஃபா புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்களும் கூறுகின்றன. மெஷர் பி என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த நிபந்தனைக்கு கடந்த நவம்பரில் லாஸ் ஏஞ்சலிஸ் வாக்காளர்கள் ஆதரவளித்து வாக்களித்திருந்தனர். ஆபாசப் படங்களில் நடிக்கும் நடிகர்களை ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று அபாயத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த நிபந்த…
-
- 8 replies
- 958 views
-
-
ஆலங்குடி: பசுவுக்கு நாளை, வளைகாப்பு நடத்துவதாக அச்சிட்டப்பட்ட அழைப்பிதழால், புதுக்கோட்டை மாவட்டத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்தவர், சன்னாசி. இவர், ஸ்ரீகோமாதா எனும் செல்லப்பொண்ணு என்ற பெயருடைய தன் பசுவுக்கு, நாளை, மழை மாரியம்மன் கோவிலில், வளைகாப்பு நடத்த இருப்பதாகவும், அதற்கு அனைவரும் வந்து வாழ்த்த வேண்டும் என, அழைப்பிதழ் தயாரித்துள்ளார்.மொத்தம், 500 பத்திரிக்கைகள் அச்சிட்டு, தன் சொந்த பந்தங்கள், நண்பர்கள், வி.ஐ.பி.,க்களுக்கும் வழங்கியிருக்கிறார். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கும், அறந்தாங்கி யூனியன் தலைவர் மெய்யநாதன் கூறியதாவது:வளைகாப்பு நடத்த இருக்கும் சன்னாசி மீது, கடும் கோபமாகத்தான் இருந்தேன். அழைப்பிதழைப்…
-
- 0 replies
- 560 views
-
-
சிட்னி: ஆஸ்திரேலிய விமானமான குவான்டாஸின் இறக்கையில் 9 அடி மலைப்பாம்பு ஒன்று 2 மணிநேரமாக பயணம் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள குவீன்ஸ்லாந்தில் இருக்கும் கெய்ர்ன்ஸ் என்ற பகுதியில் இருந்து குவான்டாஸ் பயணிகள் விமானம் நேற்று காலை பாப்புவா நியூ கினியா தலைநகரான போர்ட் மோர்ஸ்பிக்கு கிளம்பியது. இந்த விமானத்தின் இறக்கையில் 9 அடி நீள மலைப்பாம்பு ஒன்று பயணம் செய்துள்ளது. விமானம் பறக்க ஆரம்பித்து 20 நிமிடங்கள் கழித்து தான் பெண் பயணி ஒருவர் மலைப்பாம்பு ஒன்று விமான இறக்கையில் இருப்பதைப் பார்த்தார். இந்த 2 மணிநேர பயணத்தின்போது அந்த பாம்பு கீழே விழுந்துவிடாமல் இருக்க போராடியதுடன், குளிர்ந்த காற்றையும் சமாளித்தது. ஆனால் விமானம் போர்ட் மோர்ஸ்பியில் தரையிறங்கியபோது அந்த பாம்பு இறந…
-
- 0 replies
- 467 views
-
-
நரமாமிசம் விற்பனை செய்த நபருக்கு மரண தண்டனை ! தெற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நபர்களைக் கொன்று அந் நரமாமிசத்தை வான் கோழி இறைச்சி எனக் கூறி நரமாமிசத்தை விற்பனை செய்த நபரொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து தெரியவருவது. சீனாவில் யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்தவன் ஷங்யாங்மிங் (57). இவர் தொடர்ச்சியாக பலரை கொலை செய்துள்ளார். பின்னர் அவர்களின் உடலை வெட்டி மாமிசத்தை நாய்களுக்கு இரையாக்கினான். பலரின் உடலை எரித்தும், புதைத்தும் தடயங்களை அழித்தான். அனைத்துக்கும் மேலாக, தான் கொலை செய்த சிலரின் மாமிசத்தை விற்று பணம் சம்பாதித்துள்ளார். வான் கோழியிறைச்சி என ஏமாற்றி சந்தையில் பகிரங்கமாக விற்றுள்ளான். இதுபோன்று 11 பேரை கொலை செய்த ஷங்யாங் மிங்கை…
-
- 0 replies
- 406 views
-
-
FILE உலகிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்ட சுரங்க இரயில் பாதைக்கு இன்றுடன் 150 வயது ஆகிறது. உலகின் முதல் இரயில் சுரங்க பாதை லண்டனில் அமைந்துள்ளது.1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 தேதி துவங்கப்பட்ட இந்த இரயில் பாதைக்கு இன்று 150 வயதாகின்றது. ஆரம்பத்தில் மிகக் குறைந்த தூரத்தில் உருவாக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை படிப்படியாக விரிவடைந்து இன்று 402 கி.மீட்டர் நீளத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. லண்டன் டியூப் என்றழைக்கப்படும் இந்த சுரங்கப் பாதையின் வழியாக ஆண்டொன்றுக்கு லட்சம் கோடி பேர் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1301/10/1130110031_1.htm
-
- 1 reply
- 630 views
-
-
சவுதியில் சிரிய பிரஜைக்கு தலையை வெட்டி மரண தண்டனை By General 2013-01-10 11:00:36 சவூதி அரேபியாவில் பெருமளவு போதை மாத்திரைகளைக் கடத்திய சிரியப் பிரஜையொருவருக்கு செவ்வாய்க்கிழமை தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இது சவூதி அரேபியாவில் இந்த வருடம் நிறைவேற்றப்பட்ட முதலாவது மரண தண்டனையாகும். மொஹமட் டர்விஷ் என்ற மேற்படி நபருக்கு சவூதி அரேபியாவின் வட பகுதி மாகாணமான அல் ஜாப்பில் தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த வருடம் அந்நாட்டில் 76 பேருக்கு தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/world.php?vid=413
-
- 0 replies
- 407 views
-
-
புத்தளம், பாவத்தாமடு பகுதியில் சுமார் 10 அடி நீளமான முதலையை கொன்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்படி நபரை கைது செய்துள்ளனர். பாவத்தாமடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் கண்ணிப் பொறி வைத்து முதலையை கொன்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந் நபரை இன்று மாலை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கொல்லப்பட்ட முதலையானது சுமார் 100 கிலோகிராம் நிறைகொண்டது என தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-…
-
- 1 reply
- 394 views
-
-
தமிழில் "கிரெம்ளின் மாளிகை" (ரசிய அதிபர் மாளிகை ) ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்! தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ... ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள். தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் …
-
- 10 replies
- 3.8k views
-
-
2013ம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தலமாக இலங்கை காணப்படுவதாகப் பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனம் தெரிவு செய்துள்ளது. இலங்கையில் இயற்கை அழகுகள் மிகுந்த இடங்கள், வரலாற்றுத் தலங்கள் மற்றும் விருந்தோம்பலுக்கு ஏற்ற விதமான இடங்கள் போன்றவற்றைக் கருத்திற்கொண்டே இலங்கைக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த முடிவு தமிழ் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இனப்படுகொலை நடந்த மண்ணை சிறந்த சுற்றுலாத் தலமாக ‘பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனம்’ எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கவும் ஏற்பாடு செய்துவர…
-
- 2 replies
- 392 views
-
-
நாட்டுப் பற்றாளர் வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாட்டுப்பற்றாளர்வைத்திலிங்கம்பரமேஸ்வரன்அவர்களதுமுதலாம் ஆண்டு நினைவு நாள் யேர்மனில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது . நினைவுநாளில் நாட்டுப்பற்றாளர்வைத்திலிங்கம்பரமேஸ்வரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து சுடர் , மலர் வணக்கம் செலுத்தப்பட்டது . தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களின் நினைவுகளை மீட்டு , அவர் தமிழீழ மக்களுக்கு ஆற்றிய பணி விடையமாக உரையாற்றப்பட்டது . புலம்பெயர் வாழ்விலும், தாயகத்தின் விடுதலையை உயிர் மூச்சாகச் சுமந்து பணியாற்றிய பரமேஸ்வரன் ஒரு உதாரண தமிழீழ மகனாக எமக்கெல்லாம் வாழ்ந்து காட்டியுள்ளார். தேசிய விடுதலைமீதானஉறுதியும், …
-
- 0 replies
- 188 views
-
-
உறவுகளே! உண்மையைக் காக்க – உரிமையை வென்றெடுக்க ஒன்றாகி உடன் செயற்படுவோம் வாரீர்! உறவுகளே– உண்மையைக் காக்க – உரிமையைப் வென்றெடுக்க – ஒன்றுபட்டு செயற்படுவோம் -சிறிலங்கா அரசுகளின் – ஈழத் தமிழினத்துக்கு எதிரான உண்மை நிலை தெரியாதவர்கள் -அரசியல் வரலாறு புரியாதவர்கள் - தமிழ் இனத்திற்குக் – களங்கத்தை – பங்கத்தை –மக்கள் மத்தியில் குளப்பத்தை – ஏற்படுத்துகின்ற கருத்துக்கள் வெளியிடுவதை உடன் நிறுத்துமாறு வேண்டுகின்றோம் - தலைவர்களே! தமிழ் மக்களின் உரிமைக்காக உழைப்பவர்கள்தானே நீங்கள்? நாங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் – எந்த அமைப்பிலிருந்தாலும் – தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்க – எமது விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக ஒன்றுபடுவோம் - எமது உரிமைபெற்ற – பாதுகாப்பான – வாழ்வுக்காக- அ…
-
- 0 replies
- 298 views
-
-
வெளிநாடுகளில் வேலை பார்த்து, சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்புவர்களில், இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். கடந்த ஆண்டில், 38 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர். உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த, 2012ம் ஆண்டில், பல வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் தாய்நாடான இந்தியாவுக்கு, 38 ஆயிரம் கோடி ரூபாயை அனுப்பியுள்ளனர். இவ்வளவு அதிக தொகையை, வேறு எந்த நாட்டினரும், தங்கள் நாட்டிற்கு அனுப்பாததால், அதிக பணத்தை பெற்ற நாடு என்ற ரீதியில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை சீனா பெற்றுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்கள், 36 ஆயிரம் கோடி ரூபாயை சீனாவுக்கு அனுப்பியுள்ளனர். அதற்கு அடுத்த இடங்க…
-
- 0 replies
- 421 views
-
-
Discovery and NHK captured the legendary giant squid on film deep in the Pacific Ocean.
-
- 3 replies
- 630 views
-
-
2012 ஆம் ஆண்டு மாயன்கள் புண்ணியத்தால் உலகம் இதோ அழியுது, அதோ அழியுது என்றுக் கூப்பாடு போட்டு போட்டுக் களைத்துவிட்டார்கள். இறுதியாக திசம்பர் 21, 2012-யில் உலகம் அழிந்துவிட்டது, கற்பனையில் மட்டுமே. அது தான் ஓய்ந்தது எனப் பார்த்தால் 2013-யில் 13 என்ற எண் உண்டாம் அது ஆபத்தாம்,உலகில் பல அழிவுகள் ஏற்படுமாம், அடங்க மாட்டாங்களா, எவன் தான் ரூம் போட்டு இப்படி எல்லாம் யோசிப்பவனோ, கையில் கிடைத்தான் கய்மா தான் பண்ணவேண்டும் அவனை. பாருங்கள் ! சான்றோர், ஆன்றோர் என்ன சொன்னாலும் கேட்காத உலகம், எந்த மாங்காய் மடையனாவது வந்து உருவாக்கும் கதைகளை அப்படியே நம்பிவிடுவார்கள். சில சமயங்களில் அவை தலைமுறைகள் பலக் கடந்து நீடித்து வந்துக் கொண்டே இருக்கும், அவற்றுக்கு வைத்திருக்கின்றார்கள் பெயர் மதம…
-
- 0 replies
- 770 views
-
-
கடந்த பதினைந்து வருடங்களாக யாழ்ப்பாணத்து மக்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு புகையிரதப் பாதையை அமைத்து எங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தலைநகருக்கு செல்வதற்கு வசதி செய்யும்படி அரசாங்கத்தை மன்றாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசாங்க மந்திரிகள் அனுராதபுரம் மட்டுமே புகையிரத சேவையைத் திறப்பதற்கு கட்டளையிட்டுள்ளனர். அனுராதபுரம் மட்டுமே புகையிரத சேவை திறக்கப்பட்டால் தமிழராகிய எம்மால் என்ன செய்ய முடியும்? மேலும் இலங்கையை நிர்வகித்த முன்னாள் தேசாதிபதி ஒருவர் ஒரு தடவை இந்தத் தமிழர் ஏன்தான் கொழும்புக்கு வரவேண்டும் என வினவியதாகச் சொல்லப்படுகிறது. இலங்கை அரசாங்கம் இந்த அளவுக்குத் தமிழரை வெறுத்தால் ஏன் எம்மை இந்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு ஒழ…
-
- 0 replies
- 416 views
-
-
வாழைப்பழத்துக்கு தடை! By Kavinthan Shanmugarajah 2013-01-08 16:20:41 பி.பி..சி. செய்திச் சேவையின் லண்டனில் அமைந்துள்ள புதிய தலைமை அலுவலகத்தில் பணியாளர்கள் வாழைப்பழம் உண்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியரொருவருக்கு வாழைப்பழத்தால் ஒவ்வாமை நிலை ஏற்படும் அச்சுறுத்தல் நிலவுவதாகவும் இதனால் உயிராபத்து ஏற்படக்கூடுமென்பதாலேயே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பணியாளரின் நன்மை கருதியே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்காக அலுவலகத்தின் பல இடங்களில் இது குறித்து அறிவிப்புகளும் ஒட்டப்பட்டுள்ளன. ஊழியர்கள் சிலர் இணைந்தே இந்நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். http://www.virakesari.l…
-
- 0 replies
- 724 views
-