Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அண்டார்டிகாவில் கேப் அடேர் பகுதியில் 106 ஆண்டுக்கு முன்னர் பழமையான “பழ கேக்” ஒன்றினை கண்டெடுத்துள்ளனர். அண்டார்டிகாவில் உள்ள மிகப் பழமையான கட்டடத்தில் இருந்து இந்த கேக்கை ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு கண்டெடுத்துள்ளது. இந்த பழமையான கேக், பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வுப் பயணியான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இந்த பழமையான கட்டடம் 1899ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1911 ஆம் ஆண்டு தனது டெர்ரா நோவா அய்வுப்பயணத்தின் போது ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட் இந்த கட்டடத்தில் தங்கியுள்ளார். http://newuthayan.com/story/16/106-ஆண்டுகள்-பழமையான-கேக்-கண்டெடுப்பு-பழுதடையாமல்-இருக்கும்-அதிசயம்.html

  2. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டதில் எண்ணெய் டேங்கர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்துள்ளன. விர்ஜினியா மாகாணத்தில் வடக்கு டக்கோடாவில் இருந்து யார்க் டவுனுக்கு டேங்கர் ரயில் ஒன்று எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த ரயில் அதீனா மற்றும் பூமர் நகரங்களுக்கு இடையே கனவா ஆற்றின் கரையோரம் சென்றபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த திடீர் விபத்தில், எண்ணெய் ஏற்றிச் சென்ற 13 டேங்கர்கள் கவிழ்ந்ததோடு, ஒரு டேங்கர் ஆற்றுக்குள் விழுந்துள்ளது. தடம் புரண்டு கவிழ்ந்த எண்ணெய் டேங்கர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்ததில், அவை வெடித்து சிதறி கரும் புகையுடன் எரிந்துள்ள…

  3. வாழைப்பழம் சாப்பிடும் குரங்குகளுக்கு சுவிஸில் இடம் இல்லை: கருப்பின நபரை சரமாரியாக தாக்கிய அதிகாரி[ ஞாயிற்றுக்கிழமை, 19 யூலை 2015, 11:19.12 மு.ப GMT ] சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணம் செய்த கருப்பின நபரை டிக்கெட் பரிசோதிக்கும் பெண் அதிகாரி ஒருவர் இனவெறி தாக்குதல் நடத்தியதற்காக நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.சுவிஸில் உள்ள பெர்ன் மண்டலத்தில் வசித்து வரும் கருப்பின நபர் ஒருவர் அண்மையில் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது, பயணிகளிடம் டிக்கெட்களை பரிசோதனை செய்ய இரண்டு பெண் அதிகாரிகள் வந்துள்ளனர். அவர்களில் ஒரு பெண் அதிகாரி அந்த கருப்பின நபரிடம் டிக்கெட்டை கேட்டுள்ளார். ஆனால், அந்த கருப்பின நபரிடம் சரியான டிக்கெட் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அதிக…

    • 0 replies
    • 356 views
  4. மூக்கில் சாதனை விடுமுறை நாட்களில் குறும்புத்தனமாக எதையாவது செய்வதே எமது வழமை. அவ்வாறிருக்கையில், இளைஞரொருவர் கணினியின் விசைப்பலகையில் அவரது மூக்கை வைத்து டைப் செய்து கிண்ணஸ் சாதனை படைத்ததுள்ளார். இந்தியாவின், ஹைதராபாத்தைச் சேர்ந்த குர்ஷித் ஹூசைன் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறான தொருசாதனையை நிலைநாட்டியுள்ளார். 10 விரலைவைத்தே டைப் செய்ய சிரமப்படும் பலரின் மத்தியில், அவரது மூக்கை பயன்படுத்தியது மாத்திரமல்லாது, ஒரு கண்ணை மூடிக்கொண்டு இவர் இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இவர் 47.44 செக்கன்களில், 103 எழுத்துக்களை மூக்கின் மூலம் டைப் செய்துள்ளார். இதன்போது, இவரது கைகள் இரண்டும் பின்னோக்கி கட்டியுள்ளார். இவ்வாறான சாதனையை படைப்பதற்காக மூன்று வருடகாலத்தை இவர் செலவுச…

  5. (ஜெயந்தி) ஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று வழுக்கை. வயோதிபத்தின் அடையாளமான வழுக்கை இளம் வயதிலேயே வருவதுதான் பிரச்சினையாகின்றது. இதற்குப் பலவாறு மருந்துகளும் பூச்சுகளும் அறிமுகப்படுத்தப்பட்ட போதும். இது இன்னமும் ஆண்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை தரவில்லை என்றுதான் கூறு வேண்டும். புதிய முயற்சியாக ஆண்கள் விரும்பி அணியும் தொப்பிகளில் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழுக்கைகளில் முடி வளர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தானாக சிறியமின்கலன்கள் மூலம் மின்னை உற்பத்திசெய்து உச்சந்தலையில் ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொப்பி வழுக்கைத்தலையில் ஒரு மாதத்திற்குள் முடியை மீண்டும் வளரவைக்கும் என ஆராய்ச்சியா…

  6. இந்திய பீகார் மாநிலத்தில் சாசராம் ரயில் நிலையத்தின் மேடையில் இவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? மின்சாரத்தில் இயங்கும் ரயில்களுக்காக 24 மணிநேர தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. பக்கத்து ஊர்களில் மின்சாரம் இல்லாத வீடுகளில் அல்லது, அடிக்கடி மின்தடை உண்டாவதால் பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள், இந்த மேடைக்கு வந்து அங்கே கிடைக்கும் வெளிச்சத்தில் படிக்க தொடங்கினார்கள். நாளடைவில் சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களுக்கு உதவி செய்யும் கலாசாரம் ஆகியது. இன்று.... ஒரு பெரிய கல்வி கூடமாக, மாணவர்கள் கூட்டம், கூட்டமாக இருந்து படிக்கும் இடமாகி உள்ளது. முக்கியமாக, போட்டி மிக்க, இந்திய நிர்வாக சேவை பரீட்சைக்கு (IAS) ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கே தயாராகுகிறார…

    • 0 replies
    • 356 views
  7. யாழில் நட்சத்திர ஆமை மீட்பு July 19, 2022 யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நட்சத்திர ஆமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆமை அரிய இனம் என்றும் , அதனை பாதுகாப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் ஊர் வாசிகள் தெரிவித்தனர் https://globaltamilnews.net/2022/178601

  8. கடைவீதியில் உலாவந்த பொப் பிரான்சிஸ் போப் பிரான்சிஸ் வாடிகனில் உள்ள கடை வீதியில் உலா வந்தார். அவருடன் பொதுமக்கள் போட்டிபோட்டு ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டனர். உலக கத்தோலிக்க மத கிறிஸ்தவ தலைவரான போப் ஆண்டவருக்கு எப்போதுமே அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கும். எனவே போப் ஆண்டவராக இருப்பவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் தான் வெளியே வருவது வழக்கம். சாதாரணமாக மற்ற இடங்களில் அவர்களை பார்க்க முடியாது. ஆனால் தற்போது உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் இதில் வித்தியாசமானவராக இருக்கிறார். அவர் மக்கள் முன்பு சாதாரணமாக தோன்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் போப் ஆண்டவர் வாடிகனில் உள்ள கடை வீதியில் உலா வந்த சம்பவம் நடந்துள்ளது. தனது அரண்மனையில் இருந்து பி…

  9. உலகமே இந்தியாவிடம் பெரிதாக வியக்கும் விஷயம் இந்தியாவின் வளம், அதற்கு அடுத்தபடியாக அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு என்ற விஷயத்தை தான். இந்திய இளைஞர்கள் பற்றிய சமீபத்திய ஆய்வும் இதனையே உறுதி செய்கிறது. இந்திய இளைஞர்கள் வேலை, கல்வி, அறிவு, திறமை, ஆர்வம் என பல்வேறு காரணிகளிலும் கனகச்சிதமாகப் பொருந்துகிறார்கள். பின்வரும் ஐந்து காரணங்களுக்காக‌ இந்திய இளைஞர்கள் கட்டாயம் பெருமிதம் கொள்ளலாம். 1. உலகிலேயே அதிக நேரம் பணிபுரிபவர்கள்! உலகிலேயே ஒரு வாரத்தில் அதிக நேரம் பணிபுரியும் இளைஞர்கள் இந்திய இளைஞர்கள் தான் என்கிறது புதிய ஆய்வு ஒன்று. ஒரு வாரத்தில் அதிகபட்சமாக 52 மணிநேரங்கள் பணி புரிகிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 9 மணி நேரம் பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். இதற்கு அடு…

  10. கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல்! கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்படையின் ஊடகப்பேச்சாளர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2021/1217257

  11. மருத்துவரால் தாக்கப்பட்டு உயிரிழந்த நோயாளி மருத்துவர் ஒருவரால் தாக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவொன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் பெல்குரோட் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த டிசெம்பர் 29 ஆம் திகதி இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எனினும், மேற்படி நோயாளியே முதலில் வன்முறையாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாதி ஒருவரை அந்நோயாளி காலால் தாக்கியதாகவும் அதையடுத்தே அவரை மருத்துவர் தாக்கியதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. …

  12. மே 2009ற்கு பின்னர் சர்வதேச அரங்கத்தில் மீண்டும் தமிழர் பிரச்சினை தொடர்பான விடயங்கள் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தத் தொடங்கியுள்ளது. வேவ்வேறு நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் அமைப்புக்களில் ஒருசிலவும், தனி நபர்களும் தனித் தனியாகவும் கூட்டாகவும் முன்னெடுத்த பல்வேறு செயற் திட்டங்கள் இதற்கு காத்திரமான பங்களிப்பினை வகித்தன. எதிர்வரும் கால கட்டத்தில் தமிழ் மக்கள் கொடுமையான இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்ற விடயம் உலகத்தின் முக்கியமான தளங்களில் முன்னே நகர்த்தப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பெருமளவு எண்ணிக்கையில் பாரிய அர்ப்பணிப்புக்களுடன் செயற்பட்ட புலம் பெயர் வாழ் தமிழ் மக்களில் பலர், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்த…

  13. வெறும் சோறா.. தொட்டுக்க ஒன்னும் இல்லையா.... உறவுப் பெண்ணை, வெட்டிக் கொன்ற நபர்! திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள எதுவும் வைக்காததால், சாப்பாடு பரிமாறிய பெண்ணை உறவினர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சடயன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராமன் (45). இவரது மனைவி கலைச்செல்வி (33). இத்தம்பதி திருவள்ளூர் அடுத்த கனகம்மாசத்திரம் மாதா கோயில் தெருவில், வாடகை வீட்டில் வசித்தபடி, சீடை, முறுக்கு, வத்தல் ஆகியவற்றைத் தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்தனர். வியாபார உதவிக்காக தங்கராமன், தனது உறவினரான செல்லத்துரை (37) என்பவரை தனது வீட்டில் தங்க வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை செல்லத்துரைக்க…

  14. 200 வருடம் பழைமையான கத்தி மாயம்! மக்களிடத்தில் பதற்றநிலை! நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் கிழ் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200 வருடம் பழைமை வாய்ந்த கத்தி ஒன்று காணாமல் போனமையினால் குறித்த தோட்ட பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு தோட்ட தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லாது பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த தோட்டப்பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போது இந்த ஆலயத்தில் உள்ள பழைமை வாய்ந்த கத்தி ஒன்று காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது ஆலய நிர்வாகத்…

  15. யூ டியூப் காணொளிகளை பார்த்து விமானம் தயாரித்த நபர்..! யூ டியூப் காணொளிகளை பார்த்து, அதனுடாக விமான தயாரிப்பு முறைகளை தெரிந்துகொண்ட நபர் ஒருவர் விமானத்தை வெற்றிகரமாக தயாரித்து இயக்கியுள்ள சம்பவம் கம்போடியாவில் இடம்பெற்றுள்ளது. கம்போடியாவை சேர்ந்த பாயென்லாங் என்ற வாகன திருத்துணர், விமானத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தினமும் விமான தயரிப்புகள் தொடர்பான காணொளிகளை பார்த்து, அதனுடாக விமான தயாரிப்பு பற்றி பயின்றுள்ளார். மேலும் தான் கற்றவற்றை பரீட்சித்து பார்ப்பதற்காக, இரண்டாம் உலக மகா யுத்த பயன்பாட்டிற்காக ஜப்பான் தயாரித்திருந்த பழுதடைந்த விமானத்தை வாங்கி, அதனை மீள் செயல்முறைக்கு கொண்டுவரும் முயற்சில் பாயென்லாங் ஈடுபடலானார். இந…

  16. 23 வருடங்களின் பின் தந்தையைக் கண்ட இன்ப அதிர்ச்சியில் இளைஞர் பலி ஆயுள் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளிவந்த தன் தந்தையை இருபத்து மூன்று ஆண்டுகளின் பின் கண்ட இன்ப அதிர்ச்சியில் இளைஞர் ஒருவர் மரணமானார். கொலை ஒன்றுடன் தொடர்புடையது நிரூபிக்கப்பட்டதையடுத்து 1996ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஹசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருடைய மகன் சஜித்துக்கு ஒரு வயது. தண்டனைக் காலத்தில் ஒருபோதும் பிணையில் வெளிவரவோ, குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கவோ ஹசன் முயற்சிக்கவில்லை. தொலைபேசி மூலமே குடும்பத்தினரின் சுகத்தை விசாரித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் 17ஆம் தேதி அவர் விடுதலையானார். அவரை வரவே…

  17. அவுஸ்ரேலியாவில், மாரடைப்பால் இறந்துவிட்டதாக கருதப்பட்ட பெண்ணை, மருத்துவர்கள் மீண்டும் உயிர்பெற செய்துள்ளனர். அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில், விற்பனை பிரதிநிதியாக பணியாற்றியவர் வனிசா டனாசியோ, 41. கடந்த வாரம், இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், கோமா நிலையில் இருந்தார். அவரது இதய குழாய்களில் ஒன்று, முற்றிலுமாக அடைப்பட்டு, மூளைக்கு ரத்தம் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. உடனடியாக மருத்துவர்கள், நவீன இயந்திரத்தின் உதவியுடன், அடைப்பட்டிருந்த ரத்த குழாயை துண்டித்து, இயந்திரத்தின் உதவியுடன், இதயத்துக்கு சில அதிர்வை கொடுத்து, மீண்டும் இயங்க செய்தனர். 42 நிமிடம், இறந்த நிலையில் இருந்த வனிசா, இந்த சிகிச்சையின் மூலம்,…

  18. சென்னை: பெண்களுடன் டேட்டிங்; நடிகை வீட்டில் வேலை! -மோசடி தம்பதியிடம் ரூ.16 லட்சத்தை இழந்த தொழிலதிபர் எஸ்.மகேஷ் டேட்டிங் மோசடியில் கைதுசெய்யப்பட்ட யாசிம் கான் ரசூல் பெக் நடிகை வீட்டில் வேலை, கைநிறைய சம்பளம் என விளம்பரப்படுத்தி, கொஞ்சும் குரலில் பேசி, தொழிலதிபர்களிடமும், சபல புத்தியுள்ளவர்களிடமும் பணம் பறித்த கணவன், மனைவியை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மனிஷ்குப்தா. இவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் menx her என்ற இணையதளம் மூலமாக அடையாளம் தெரியாத நபரால் தான் 16,50,993 ரூபாய் ஏமாற்றப்பட்டதாகப் புகாரளித்தார். அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தன…

  19. 4 வயதிலே வயோதிபரான சிறுவன் பங்களாதேஷத்தில் 4 வயது சிறுவனிற்கு ஏற்பட்ட இனந்தெரியா நோயினால் முதுமை தோற்றத்தை அடைந்துள்ளார். குறித்த சிறுவன் வயதுக்கு மீறிய வகையில் மூப்படைந்து தளர்ந்து, தொங்கும் தோலுடன் வயோதிபரை போல் காட்சியளிக்கின்றார். குறித்த சிறுவனின் முதிந்த தோற்றத்தினை மாற்ற டாக்காவில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்று இலவச பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை செய்ய முன்வந்துள்ளது. பங்களாதேஷத்தை சேர்ந்த லாப்லு லட்கர் – காத்தூனிற்கு மகனாக பிறந்த பைசித் ஷிக்தர், பிறக்கும் போதே திடமான உடலமைப்பு இல்லாமல் காணப்பட்டதை அறிந்த பெற்றோர், நாளடைவில் இக்குறைபாடு நிவர்த்தியாகுமென எண்ணியுள்ளனர். ‘புரோகேரியா’ எனப்படும் விரைவில் வயோதிப…

  20. https://www.facebook.com/slupfa/videos/10153351355951259/ மருத்துவமனையில் சுசில் அனுமதிக்கப்பட்டதும் வேட்புமனுக்களை கைப்பற்ற ஓடிச்சென்ற மகிந்த JUL 14, 2015 | 1:36by கார்வண்ணன்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் நேற்றுமுன்தினம் இரவு திடீர் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வேட்புமனுக்களைப் பாதுகாப்பதற்காக கூட்டம் ஒன்றில் இருந்து ஓடிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசியல்வாதிகள் பலருடைய வேட்புமனுக்களை கட்சி நிராகரித்திருந்த …

    • 0 replies
    • 355 views
  21. கனடாவில் கார் ஒன்று அந்தரத்தில் பறந்தபடி சென்று கடையில் மோதி விபத்துக்குள்ளானது அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.கனடாவின் டொரொன்டோ நகரில் உள்ள நோர்த் யோர்க்(North York) பகுதியில் கார் ஒன்று வேகமாக அந்தரத்தில் பறந்தபடி அங்கிருந்த ஒரு வாகனம் பழுதுபார்க்கும் கடையில் மோதியது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த காரின் ஓட்டுனரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிருக்கு பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த மற்ற காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை, இந்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஓட்டுனர் ப்ரேக் என்று நினைத்து ஆக்சிலேட்டரை அழுத்தி இருக்கலாம் என்று தெரி…

    • 0 replies
    • 355 views
  22. சீன வெடி விபத்தில் 50 பேர் பலி…700 பேர் படுகாயம்: அதிர்ச்சி தகவல்கள் (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 13 ஓகஸ்ட் 2015, 06:26.41 மு.ப GMT ] சீன ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இதுவரை 50 பேர் பலியாகியுள்ளதுடன் 700க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.சீனா நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று மாலை டியாஜின் நகரில் அமைந்துள்ள துறைமுகத்தை ஒட்டியுள்ள ரசாயன கிடங்கு ஒன்றில் இரண்டு பயங்கர வெடி விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 50 பேர் பலியாகி இருப்பதுடன் 700க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்த செய்தி நிறுவனம் அச்சம…

    • 0 replies
    • 354 views
  23. ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி என்றும் அதைவிட, இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தந்ததன் ஊடாக ஈழத்தமிழர்களுக்கு இந்தியா நம்பிக்கையூட்டும் வகையில் வெளிப்படையாகச் செயல்பட்டிருப்பதாக’வும் ஊடகங்களில் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானத்தை இறுதிவரை ஏற்றுக்கொள்ள மறுத்த இந்தியா, இறுதிநாளன்று இதனை வரவேற்றதுடன் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தது. எப்போதும் சிறீலங்காவைக் காப்பற்ற மட்டுமே முனைகின்ற இந்தியா, இம்முறை கைவிடும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டபோதும், சிறீலங்காவை அடித்துக் காப்பாற்றியது என்பதே உண்மை. அமெ…

  24. காதலனின் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட 'அசாதாரண' பெண்ணின் உருக்கமான கதை கட்டுரை தகவல் எழுதியவர்,டிம் ஸ்டோக்ஸ் பதவி,பிபிசி நியூஸ் 10 ஜனவரி 2023, 06:10 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செய்யாத குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட எடித் தாம்சன் 1923ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பிரிட்டனை சேர்ந்த ஓர் இளம்பெண் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். எடித் தாம்ஸன் என்ற அந்த பெண்ணுக்கும் அவரது காதலர் ஃப்ரெடிரிக் பைவாட்டர்ஸுக்கும் ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தனது காதலனால் தன்னுடை…

  25. அதிசய கிணறு: தண்ணீர் உறிஞ்சும் குகைகள் - தோண்டத் தோண்ட விலகும் மர்மம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள திசையன்விளை பகுதியில் அதிசய கிணறு போல் சுற்று வட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திசையன்விளை அருகே முதுமொத்தான் மொழி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை காலங்களில் நொடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றது. அந்த கிணற்றுக்குள் பல நாட்களாக தண்ணீர் சென்றபோதும் அது நிரம்பவில்லை. இதையடுத்து அந்த இடத்தை 'அதிசய கிணறு' என உள்ளூர்வாசிகள் அழைத்தனர். அந்த கிணறு குறித்து ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.