செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7107 topics in this forum
-
இந்திய மாணவனின் நாக்கை வெட்டியெறிந்த கும்பல் வெள்ளி, 28 டிசம்பர் 2012( 12:07 IST ) உலகெங்கிலும் வாழும் இந்தியர்கள் பலவிதமான இனவெறி கொடுமைகளை சந்தித்து வரும் நிலையில், ஜெர்மனியில் உள்ள போன் பகுதியில் இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்ததால் இந்தியர் ஒருவரின் நாக்கை வெட்டி எறிந்த சம்பவம் நடந்துள்ளது. 24 வயது நிரம்பிய இந்திய மாணவனை சுற்றி வளைத்த ஒரு மர்ம கும்பல், அவரின் மதம் பற்றி விசாரித்தனர். அதன் பிறகு இஸ்லாமிய மதத்திற்கு மாறாவிட்டால் நாக்கை வெட்டிவிடுவோம் என மிரட்டியிருக்கிறார்கள். இதனை மறுத்து அங்கிருந்து வெளியேறிய மாணவனை அடித்து துன்புறுத்தி, நாக்கை வெட்டி எறிந்துவிட்டு அக்கும்பல் காரில் தப்பியது. தெருவில் ரத்தவெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்த மாணவனை அப்பகுதி மக்கள் …
-
- 3 replies
- 726 views
-
-
என் மகள் போனுக்கு பசங்க கிட்டேருந்து ஒரே போனா வருது... ஒபாமா தகவல் வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் டீன் ஏஜ் மகள் மலியா கையில் செல்போனை கொடுத்து விட்டார்கள் அவரது பெற்றோர். போன் கைக்கு வந்தது முதல் அவருக்கு நிறைய டீன் ஏஜ் பசங்களிடமிருந்து போனாக வந்தவண்ணம் இருக்கிறதாம். தந்தை ஒபாமாவும் தாயார் மிஷலும் இதைச் சொல்லியுள்ளனர். இதுகுறித்து ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர்கள் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: இபோது மலியாவுக்கு செல்போன் கொடுத்து விட்டோம். ஆனால் அவர் யாருடன் பேசுகிறார் என்பதையெல்லாம் நாங்கள் ஒட்டுக் கேட்பதில்லை. இருந்தாலும் 'நீண்ட கயிறு' கொண்டு அவரை பிணைத்திருக்கிறோம். அதேசமயம், அதிபர் மாளிகையில் வசிப்பதால், செல்போன் பேச்சுக்கள் நிச்ச…
-
- 0 replies
- 717 views
-
-
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் தீப்பற்றி எரிந்த வீட்டுக்கு விரைந்து சென்ற தீயணைப்புப்படையினரை சினப்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீட்டு உரிமையாளர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று அதிகாலையில் றேசெஸ்ரர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பற்றி எரிவதாக தொலைபேசி மூலம் தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்த தீயணைக்கும் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எரிந்து கொண்டிருந்த வீடு மற்றும் காரின் உரிமையாளரே, துப்பாக்கிச்சூட்டை நடத்தினார்.வீட்டை தீவைத்து எரித்து விட்டு அவர் பாதுகாப்பான இடம்ஒன்றில் நிலையெடுத்திருந்து சினப்பர் துப்பாக்கியால் ஒவ்வொருவராக சுட்டார். இந்தச் சம்பவத்தில் நியுயோர்க் பகுதி தீயணைக்கும் படையைச் சேர்ந்த இருவர் ம…
-
- 4 replies
- 594 views
-
-
மனிதப் பெண் ஒருவருக்கு பிள்ளையாக பாம்பு பிறந்து உள்ளது என்று ஒரு கிராமம் முழுவதுமே முழுமையாக நம்புகின்றது. இது நடப்பது வெளிநாட்டில் அல்ல. நம் நாட்டில்தான். கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் உள்ளது கடுக்கன் என்கிற தனித் தமிழ் கிராமம். இங்கு அனைவருமே இந்துக்கள். இக்கிராமத்தைச் சேர்ந்த பெண் முத்துலிங்கம் மோசிகசுந்தரி. 1966 ஆம் ஆண்டு பிறந்தவர். 46 வயது. 1983 ஆம் ஆண்டு 17 ஆவது வயதில் தகாயநாயகம் என்பவரை திருமணம் செய்தார். தகாயநாயகம் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. முதல் இரண்டும் பெண் குழந்தை. மூன்றாவது ஆண். நான்காவது பாம்பு. ஐந்தாவது ஆண் குழந்தை. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு இப்பெண்ணுக்கு பாம்புக் குழந்தை பிறந்தது. இங்கு வீடுக…
-
- 3 replies
- 6k views
-
-
dec25,2012 அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர். ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அவ்வளவு ஆழ…
-
- 0 replies
- 748 views
-
-
1960களில் இந்தியாவுக்கு ஆதரவாக சீனா மீது அணுகுண்டு வீச அமெரிக்கா திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபராக 1961- 1963 வரை பதவி வகித்தவர் ஜான் எஃப்.கென்னடி. அவரது பதவிக்காலத்தின்போது வெள்ளை மாளிகையில் பதிவான அவரது பேச்சுகள், சந்திப்புகள் ஆகிய ரகசியத் தகவல்களைத் தொகுத்து 'Listening In: The Secret White House Recordings of John F Kennedy' என்ற தலைப்பிலான ஆங்கிலப் புத்தகம் அண்மையில் வெளியாகியுள்ளது. இப்புத்தகத்தை கென்னடியின் மகள் கரோலின் கென்னடி மற்றும் டெட் விட்மர் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கின்றனர். இதில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விஷயம், இந்தியா மீது சீனா 1962ல் போர் தொடுத்தது. அதற்கு 6 மாதங்களுக்குப் பிறகு, 1963 மே-ந் தேதி, அப்போதைய அமெரிக்க அதிபர் கென…
-
- 0 replies
- 437 views
-
-
கொச்சி: குற்றத்துக்கு தண்டனை இன்னொரு குற்றம் அல்ல... மரண தண்டனை என்பது சட்டத்தின் பார்வையில் நடக்கும் கொலைதான், என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நேற்று 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் பங்கேற்றார். அப்போது அவரிடம், டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவர், ஓடும் பஸ்சில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது தொடர்பாகவும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனக்கோரி நடந்து வரும் போராட்டம் தொடர்பாகவும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கமல், "சம்பவம் நடைபெற்ற பஸ், என்னுடைய பஸ். நடைபெற்ற இடம், என்னுடைய நாட்டின் தலைநகரம். பாதிக்கப்பட்ட பெண், என்னுடைய சகோதரி.தவறு செய்தவன், என்னுடைய சகோதரன்.…
-
- 1 reply
- 582 views
-
-
காதலுக்கு உயரம் ஒரு தடையல்ல By General 2012-12-24 10:24:39 உலகின் மிகவும் உயரமான இளவயது யுவதியாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த எலிஸானி டா குருஸ் சில்வா (17), ஐந்து அடி நான்கு அங்குல உயரம் கொண்ட கர்வல்ஹோ (22) என்ற இளைஞருடன் காதல் வசப்பட்டுள்ளார். பிரேசிலின் சலினோபொலிஸ் நகரில் 8 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த எலிஸானி தனது 11 ஆவது வயதிலிருந்து வேகமாக வளர ஆரம்பித்துள்ளார். அவருக்கு 14 வயதானபோது உயரம் 6 அடி 9 அங்குலமானது. இந்த திடீர் வளர்ச்சியினால் கை,கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டுள்ளது. இந்த அபார வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த அவரது கேடயச் சுரப்பியில் ஏற்பட்ட கட்டி இரு வருடங்களுக்கு முன் அகற்றப்பட்டதையடுத்து அவரது வளர்ச்சி தடைப்பட்டது. அளவுக்க…
-
- 4 replies
- 840 views
-
-
காயமடைந்த மான் குட்டியை பராமரித்து வரும் சிறுவன் கட்டுத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காலில் காயத்துக்குள்ளான மான்குட்டியொன்றை காட்டிலிருந்து மீட்டு வந்து அதற்கு உணவளித்துவரும் சிறுவனொருவர் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கல்கமுவ மடதொம்பே பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தருவன் என்ற அச்சிறுவனின் வயது 12 என தெரிவிக்கப்படுகின்றது. காட்டில் காயமடைந்துகிடந்த மானை அச்சிறுவன் தள்ளு வண்டியொன்றில் வைத்து தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளான். பின்னர் அதற்கு உணவளித்துள்ளமை மட்டுமன்றி மான் குட்டியின் காயத்துக்கு மருந்துமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மான்குட்டியை பாதுகாப்பத…
-
- 0 replies
- 545 views
-
-
இந்தியாவின் வெளியகத் தகவல் சேகரிக்கும் அமைப்பு “றா” (RAW) என்ற மூன்றெழுத்தால் அறியப்படுகிறது. இந்த மூன்று எழுத்தின் விரிப்பு Research and Analysis Wing என்பதாகும். அதாவது சேகரிக்கப்பட்ட தகவலை ஆராய்ச்சி செய்வதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் பொறுப்பான அமைப்பு என்று பொருள். இந்திய நாட்டிற்கு உட்பட்ட தகவல் சேகரிக்கும் நிறுவனங்களும் வெளிநாடுகளில் தகவல் சேகரிக்கும் நிறுவனங்களும் வௌ;வேறாக இயங்குகின்றன. வெளிநாடுகளில் தகவல் சேகரிக்கும் பொறுப்பு றா அமைப்பிற்குரியது. இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஒட்டுமொத்தத் தேசிய நலனுக்கும் றாவின் சேவை அத்தியாவசியமானது. றா அமைப்பு செப்ரம்பர் 1968ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப் படுவதற்கு ஒரு முக்கிய உடனடிக் காரணம் இருந்தது. 1962ம் ஆண்டின…
-
- 0 replies
- 739 views
-
-
பிறக்கும்போதே இதயகுறைபாடுகளுடன் பிறந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் ஒருவர், உயிருக்காக போராடி கொண்டிருக்கின்றான். அவன் கொண்டாடும் கடைசி கிறிஸ்துமஸ் இதுதான் என நினைத்து அவனது பெற்றோர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். பிரிட்டனில் உள்ள Chestnut Tree House என்ற இடத்தில் வாழும் Zoe Granger என்ற இரண்டு வயது குழந்தைக்கு பிறக்கும்போதே இதயத்தின் நான்கு அறைகளில் ஒன்று இல்லாமலேயே பிறந்துள்ளது. எனவே இரத்த சுத்திகரிப்பு பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. மூன்று அறுவை சிகிச்சை மற்றும் செயற்கை இதயம் போன்றவற்றின் காரணமாக இறப்பை தற்காலிகமாக மருத்துவர்கள் ஒத்திவைத்தனர். எந்த நேரமும் இதயம் செயலிழந்து போகலாம் என்ற அபாய கட்டத்தில் இருக்கும் சிறுவன் கொண்ட…
-
- 1 reply
- 500 views
-
-
மாயன் காலண்டர் முடிவில் உலகம் அழிந்துவிடும் என்ற புரளி ஒருபுறம் பரவியுள்ள நிலையில், மாயான் காலண்டர் முடிந்து புதிய யுகம் பிறப்பதாக மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. மெக்ஸிகோவின் மாயன் இனத்தவரின் தொன்மையான நகரமான சிசென் இட்சாவில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய யுகம் பிறக்கும் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மெக்ஸிகோவில் அரசு அதிகாரப்பூர்வமாக இந்த புதிய யுக கொண்டாட்டத்தை நடத்தவில்லை என்றாலும், அங்குள்ள தொன்மை வாய்ந்த பிரமிடு பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி புது யுகத்தை வரவேற்றனர். அவர்களின் கருத்துப்படி மாயன் காலண்டர் மீண்டும் முதலில் இருந்து புதிதாகத் தொடங்குகிறது. அமெரிக்க பழங்குடியின மக்களான ம…
-
- 3 replies
- 1.2k views
-
-
மாயன் காலண்டர்படி உலகம் இன்று அழியும் என்றால் அது இன்று இரவு 11.11 மணி்க்கு அழியும் என்று ஒரு புதுத் தகவலை கிளப்பியுள்ளனர். மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டதாக கூறப்படும் மாயன் இனத்தினர் தான் முதல் மனித நாகரீக இனத்தினர் என்று கூறப்படுகிறது. வானியல் சாஸ்திரம், ஜோதிடத்தில் மிகச் சிறந்து விளங்கிய அவர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே காலண்டரை தயாரித்து பயன்படுத்தி உள்ளனர். இந்த காலண்டர் 5,126 ஆண்டுகளை கொண்டதாக இருந்தது. இந்த காலண்டர் கி.மு. 3,114ல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காலண்டர் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் இன்றுடன் உலகம் அழிந்துவிடும் என்று உலகம் முழுவதும் பல ஆண்டுகளாகவே பேசி வந்தனர். இந்நிலையில் இன்று அந்த 21ம் தேதியும் வந்துவிட்டது. உலக…
-
- 19 replies
- 8.3k views
-
-
மேற்கு நாடுகளின் கலெண்டர், பருவகாலங்கள், மாயரின் கலண்டர். மேற்கு நாடுகளின் கலண்டர் என்பதை விளங்கிக் கொள்வது அவ்வளவு ஒன்றுல் சிக்காலான விடையம் இல்லை. அதை விளங்கிவிட்டால் கலண்டரின் முதல் நாளும் முடிவு நாளும் அவ்வளவு ஒன்றும் பெரிய விசேடமான நாட்கள் அல்ல என்பதும் புலப்படும். மாயர்கள் தங்கள் கலண்டரை எதற்கு ஆக்கினார்கள் என்பது புரிவில்லை. பூமியில் இருக்கும் உயிர்களை அவ்வளவு இலகுவாக அழிக்க முடியாது. எனவே மாயர்கள் எதாவது அழிவை பற்றி சொல்கிறார்களாயின் அதை மனித குலத்தினது அழிவு என்று மட்டும்தான் எடுக்கலாம். கலண்டர்களை விளங்கினால் மாயர்களின் கலண்டரில் காணப்படும் முடிவு நாளை மனித குலத்தின் முடி நாளாக விளங்க வைக்க தேவை இல்லை. நாம் தைப்பொங்களை கொண்டாடுவதற்கும் மேற்குநாடுகள் வர…
-
- 3 replies
- 911 views
-
-
http://youtu.be/2lkcsQZ-_tc 12 மணி நேர ஆய்வுக்குப் பின்னர் இந்த காணொளி சில கனடிய கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட அனிமேசன் காணொளி என்று இனங்காணப்பட்டுள்ளது. இதே போல் நானும் நேற்று சற்று ஏமாந்தன். நான் மிகவும் பிடித்து விளையாடும் strategic game age of empire (இதன் மூலமே மாயன் வரலாற்றையும் முதலில் விரிவாகத் தெரிந்து கொண்டேன்) . இது மைகுராசாவ்டின் ஒரு வெளியீடு. இதன் 1,2 மற்றும் 3 வெளியீடுகள் பூராவும் விளையாடி 4 இன் வரவுக்காக சில வருடங்களாக காத்திருக்கிறேன். இந்த நிலையில்.. நேற்று இணையத்தில் age of empire 4 இன் முன்னோட்டக் காணொளி என்ற பெயரில் ஒன்றிருக்க பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தேன். இருந்தாலும்.. உள்ளூர ஒரு நம்பிக்கையீனம் பிறக்க மேலும் தகவலைப் பார்…
-
- 2 replies
- 676 views
-
-
பிரிட்டன் அண்மைக் காலமாக பொருளாதாரப் பின்னடைவைக் கண்டுள்ளமை பல பாதகங்களைத் தந்தாலும்.. மணமுறிவு விடயத்தில் மட்டும் அது நன்மை பயத்துள்ளது. மணமுறிவுகளை அது 1.7% ஆல் குறைத்துள்ளது. இதற்குக் காரணம்.. கலியாணம் என்ற பெயரில் ஒன்றைக் கட்டி.. காசு கரையும் வரை கூத்தடித்துவிட்டு அப்புறம்.. பிரிஞ்சு போய் தனிய இருந்து.. தான் சம்பாதிக்கும் பணத்தில் தான் நினைத்த மாதிரி.. சுதந்திரமாக வாழ இப்போ நிலைமை சரியில்லாமையே ஆகும். குறிப்பாக பெண்கள் வேலை இழப்பின் பின்னர் காரை இழக்கிறார்கள்.. வசதி வாய்ப்பை இழக்கிறார்கள்... கவுன்சில் வேற கொடுப்பனவுகளில் கராரா இருக்குது. இந்த நிலையில்.. எப்படி உழைச்சுப் போடும் அடி மாடுகளாக உள்ள கணவனை இழப்பது...??! இழந்தா சோறு தண்ணிக்கு எங்க போறது. அதனால்.. நா…
-
- 1 reply
- 629 views
-
-
வாஷிங்டன்: வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை நாளிதழ்களிலும், கம்பெனிகளின் வாசல்களிலும் பார்த்திருப்போம். ஆனால் ‘மனைவி தேவை' என்ற விளம்பரப்பலகையை கழுத்தில் மாட்டிக்கொண்டு பொது இடங்களில் நின்று கொண்டிருக்கிறார் முதியவர் ஒருவர். சாண்டி மிக்கோலச் என்ற அந்த முதியவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவருக்கு 82 வயதாகிறது. தனக்கு ஒரு நல்ல பெண் துணை வேண்டுமெனக் கோரி அதற்கென எழுதப்பட்ட ஒரு அட்டையை தனது கழுத்தில் மாட்டி அவர் விளம்பரம்படுத்தியும் வருகிறார். இவர் தனது 40 வயதிற்குள்ளேயே மூன்று திருமணங்கள் செய்து விவகாரத்து செய்துவிட்டார். இப்போது வயதான காலத்தில் தனிமையில் தவிப்பதால் துணை தேடுகிறார் மிக்கோலச். வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இப்போது நன்றாக கற…
-
- 2 replies
- 1.1k views
-
-
பெண்ணொருவர் தான் வளர்த்து வந்த நாய்க்கு அயல்வீட்டாரின் பெயரை வைத்தக் குற்றத்திற்காக 500 ஸ்ரேலிங் பவுனை இழப்பீட்டுத்தொகையாக செலுத்த வேண்டிய விபரீத நிலையை எதிர்கொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. ஹூ லின் என்பவரே இத்தகைய விபரீத நிலையை எதிர்கொண்டுள்ளார். இவர் தனது வீட்டின் அருகில் வசித்து வருபவரான வெங் சன் என்பவரின் பெயரை தனது செல்லப்பிராணிக்கு வைத்துள்ளார். தாம் குடியிருந்த கட்டிடத்தை விரிவாக்கம் செய்தமை காரணமாக மேற்படி இருவரும் ஆறுவருடங்களுக்கு முன்னர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் மேற்படி நபரின் பெயரை தனது செல்லப்பிராணிக்கு வைத்து அழைத்துள்ளார். குறித்த நபர் வெளியில் செல்லும்போதெல்லம் இப்பெண் தனது செல்லப்பிராணியை சத்தமாக அழைத்துள்ளார்.…
-
- 0 replies
- 551 views
-
-
சுவிஸிலிருந்து வெளிவரும் சுவான்சிக் மினுட்டன் பத்திரிகை இன்று சுவார்சியமான கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என நம்புகிறீர்களா என தனது வாசகர்களிடம் அப்பத்திரிகை கேட்டிருந்தது. 30ஆயிரம் வாசகர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 3வீதமானவர்கள் நிட்சயமாக உலகம் அழியப்போகிறது. அன்றுதான் உலகத்தின் கடைசிநாள் என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள். 3வீதமானவர்கள் அன்று பெரிய பாதிப்பு ஒன்று வரலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். முழுமையாக உலகம் அழியுமா அல்லது சில பகுதிகளில் அழிவு ஏற்படுமா தெரியாது. ஏதோ நடக்கப்போகிறது என கூறியிருக்கிறார்கள். 4 வீதமானவர்கள் இதுபற்றி சரியாக தெரியவில்லை என சொல்லியிருக்கிறார்கள். 21வீதமா…
-
- 1 reply
- 853 views
-
-
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த எகிப்திய மாமன்னர் ஒருவரின் படுகொலை தொடர்பான மர்மத்துக்கு விடைகண்டு விட்டதாக தடயவியல் நிபுணர்கள் நம்புகின்றனர். பண்டைய எகிப்தியப் பேரரசின் கடைசி மாமன்னரான மூன்றாம் ராமிசெஸ்ஸின் பாதுகாப்பட்ட சடலத்தை முதல் தடவையாக ஸ்கேனிங் செய்த விஞ்ஞானிகள் அவர் எவ்வகையில் எதற்காக கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கு பதில் கண்டதாகக் கூறுகின்றனர். பண்டைய எகிப்தில் பாரோ என்றழைக்கப்படும் மன்னர்களின் இறந்த உடல்களை நெடுங்காலம் அழியாமல் பாதுகாப்பதற்கு கையாளப்பட்ட மம்மியாக்கி பதனிடும்முறையில் பாதுகாக்கப்பட்டுள்ள பேரரசர் மூன்றாம் ராமிசெஸ்ஸின் எச்சங்களை முதல் தடவையாக சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது கழுத்துப் பகுதியில் ஏழு செண்டி மீட்டர் நீளத்துக்…
-
- 1 reply
- 680 views
-
-
அமெரிக்காவின் கனட்டிக்கட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் சிலர் தங்கள் உயிரை அர்ப்பணித்து பலரது உயிரைக் காப்பற்றியுள்ளனர். அந்த வகையில் மிகவும் மதிநுட்பத்துடன் செயற்பட்டவராக மதிக்கப்படுபவர் விக்ரோறியோ சொடோ ஆவர். 27 வயதான விக்ரோறியா சொடொ ஸ்ராபோட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற, யாருடனும் அன்பாகப் பழகும் இந்த ஆசிரியை முதலாம் தர மாணவர்களிற்கான பாடங்களை நடத்திக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தான் 20 வயதான அந்த இளைஞன் பாடசாலைக்குள் புகுந்து சராமரியாக சுடத் தொடங்கினான். நிலைமையின் தர்ப்பரியத்தை உணர்ந்த விக்ரோறியா தனது வகுப்பிலிருந்த முதலாம் தர மாணவர்களை அலுமாரிகள் மற்றும் வின்ரர் கோட்டுக்கள் தொங்கவிடப்படும் சிறிய தடுப்பு என்பனவற்றிற்குள் மறைந்து நிற்கச…
-
- 8 replies
- 570 views
-
-
21 ஆம் திகதி உலகம் அழியாது மாத இறுதியில் பூமியதிர்ச்சி ஏற்படும் By Leo Niroshan 2012-12-19 10:20:42 உலகத்தின் அழிவு நாட்களாக 2012 ஆம் டிசம்பர் மாதம் 21 மற்றும் 22 ஆகிய தினங்கள் வர்ணிக்கப்பட்ட போதிலும் இதில் எவ்விதமான உண்மையும் கிடையாது. ஆனால், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி அதாவது இவ்வருடத்தின் இறுதி சனிக்கிழமையன்று மத்திய நிலையிலான பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படும். இதன்தாக்கம் இந்தியாவிற்கு காணப்படும் என்று விஞ்ஞானியும் புவியியலாளருமான லலித் விஜயவர்தன தெரிவித்தார். 2019ஆம் ஆண்டில் பாரியளவிலான பூமியதிர்வு மற்றும் விண்கல் வீழ்ச்சி என்பவற்றினால் இயற்கை அழிவுகளை அமெரிக்கா மற்றும் அராபிய நாடுகள் சந்திக்கும். 2004ஆம் ஆண்டு இலங்கையில் சுனாமி மற்றும் …
-
- 1 reply
- 689 views
-
-
100 பேரை கொன்று குவித்த ரவுடி சுட்டுக்கொலை உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இன்று நடந்த மோதலில், பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டான். கூலிப்படையாக செயல்பட்டு சுமார் 100 பேரை கொன்ற ஜோகிந்தர் என்ற ஜக்கு பகல்வன், இன்று காலை ஒருகாரில் சென்றான். டிலா மோர் என்ற இடத்தில் சென்றபோது மற்றொரு காரில் வந்த 3 பேர் வழிமறித்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஜோகிந்தரும் திருப்பி சுட்டார். பின்னர் தாக்குதல் நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த ஜோகிந்தர் மற்றும் டிரைவர் சந்தீப் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஜோகிந்தர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெ…
-
- 0 replies
- 475 views
-
-
சிறிலங்காவில் தொடருந்து நிலையத்தில் பிச்சைக்காரர் ஒருவரைக் கைது செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவர் ஒரு இலட்சாதிபதி என்ற விபரத்தை அறிந்து அதிர்ந்து போயுள்ளனர். ராகம தொடருந்து நிலையத்தில் தொடரூந்துப் பெட்டிகளில் ஏறி பிச்சை எடுத்து வந்த 18 பிச்சைக்காரர்களை அண்மையில் பாதுகாப்பு அதிகாரிகள் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் பணக்காரப் பிச்சைக்காரர் என்று கண்டறியப்பட்டுள்ளதாக ‘லங்காதீப‘ சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் ஒரு வான், இரண்டு முச்சக்கரவண்டி ஆகியவற்றுக்கு உரிமையாளராக இருப்பதும், அவரது வங்கிக்கணக்கில் 20 இலட்சம் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டபோது அவரிடம் 4000 ரூபா பணம் இருந்தது. அது இரண்டு மணி …
-
- 5 replies
- 938 views
-
-
இனி சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்க முடியாது- வருகிறது தடைச்சட்டம் திங்கள், 17 டிசம்பர் 2012( 11:06 IST ) Share on facebookShare on twitterMore Sharing Services வங்கிகளில் கணக்கில் வராத கறுப்பு பணத்தை பெறுவதை தடை செய்யும் சட்டம் ஒன்றை இயற்ற சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. உலகளவில் கருப்பு பணம் மிகுதியாக பாதுக்கப்படும் இடமாக கருதப்படும் சுவிட்சர்லாந்து வங்கிகளில், இனி கணக்கில் வராத கருப்பு பணத்தை பதுக்கமுடியாது. பெர்ன் நகரில் நடந்த சுவிஸ் பெடரல் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்க இச்சட்டம் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்தை இயற்றுவது தொடர்…
-
- 3 replies
- 512 views
-