Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. நாளை இந்த "பச்சைக் குழந்தை" கதறி அழப் போவதைப் பார்க்க பேஸ்புக்கில் ஒரு படையே காத்திருக்கு பாஸ்! சென்னை: ஜெயலலிதா வழக்கில் நாளை தீர்ப்பு வரப் போவதைத் தொடர்ந்து அதிமுகவினர், எதிர்க்கட்சிக்காரர்கள், தமிழக மக்கள், இந்திய மக்கள் என அனைவரும் ஒவ்வொரு விதமான உணர்வுகளுடன் காத்திருப்பதைப் போல பேஸ்புக், டிவிட்டரிலும் விதம் விதமான எதிர்பார்ப்புகளுடன் மக்கள் செம ஆவலாக காத்துள்ளனர். மக்களும், கட்சியினரும் ஜெயலலிதாவுக்கு என்னாகுமோ என்ற கவலையிலும், எதிர்பார்ப்பிலும் இருக்கிறார்கள் என்றால், பேஸ்புக், டிவிட்டரில் காத்திருப்போர் வேற ரேஞ்சில் காத்திருக்கிறார்கள். காரணம், இவர்கள் எப்போதுமே வேற மாதிரி.. அதுக்கும் மேல ரகத்தைச் சேர்ந்தவர்கள். ரகளைப் பார்ட்டிகள் கையில் இப்போது ஒரு அதி…

  2. ஓமைகாட்: கோஹ்லி போன்றே அச்சு அசலாக இருக்கும் பாக். வாலிபர் ஓமைகாட்: கோஹ்லி போன்றே அச்சு அசலாக இருக்கும் பாக். வாலிபர் சென்னை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி போன்றே அச்சு அசலாக இருக்கும் பாகிஸ்தானிய வாலிபரின் புகைப்படத்தால் ட்விட்டர் பரபரக்கிறது. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி இந்திய கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவராக உள்ளார். இந்நிலையில் ட்விட்டரில் மக்கள் கோஹ்லியை பற்றி தான் பேசுகிறார்கள். ஆனால் விராட் கோஹ்லியை பற்றி அல்ல. பார்க்க அச்சு அசலாக அவரைப் போன்றே இருக்கும் மற்றொரு வாலிபரைப் பற்றி தான் ட்விட்டரில் மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானில் வசிக்கும் அந்த வாலிபர் கோஹ்லியின் இரட்டை சகோதரர் போன்று உள்ளார். அந்த வாலிபருக்கு டிவி தொடர்கள் மற்றும் விளம்பரப்…

  3. நி்யூயார்க் நகருக்கு வருகை தந்திருந்த அதிபர் ஒபாமா, திடீர் பயணமாக அங்குள்ள பிரபலமான சென்டிரல் பார்க்குக்குச் சென்றார். பாதுகாப்புப் படையினர் புடை சூழ அவரும், மகள்கள் மலியா, சாஷா இருவரும் பார்க்குக்கு வருகை தந்தது அங்கிருந்த பொதுமக்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆனால் அதிபரின் பாதுகாப்புப் படையினர்தான் பெரிய அலப்பறையை செய்து விட்டனர். மோட்டார் வாகனங்களில் தபதபதவென வந்த அவர்கள் கூட்டம் சேர விடாமல் மக்களை ஆங்காங்கு ஒதுங்கிப் போகச் செய்து பரபரப்பைக் கிளப்பினர். ஆனால் ஒபாமாவும், அவரது மகள்களும் சராசரி அமெரிக்கர்கள் போல இயல்பாக நடந்து கொண்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒபாமா பார்க்கில் இருந்தபோது ஏகப்பட்ட ஹெலிகாப்டர்கள் சுற்றியபடி இருந்தன. போலீஸ் படையினர் உஷாராக இருந்தன…

    • 0 replies
    • 348 views
  4. விவேக்-நீது உடல் எடையை குறைக்க வேண்டி, அம்மருத்துவமனையின் 12வது மாடிக்கு நீது தினமும் படிகளின் வாயிலாகவே ஏறி, இறங்கினார். அதோடு தனக்குப் பிடித்தமான உணவு வகைகளான இனிப்பு, ஆயில் வகைகளைத் தன் கணவருக்காகத் துறந்து, கடினமான டயட்டையும் பின்பற்றினார். மாகாராஷ்டிராவில், தன் கணவருக்கு கல்லீரல் தானம் வழங்குவதற்காக மனைவி மேற்கொண்ட முயற்சிகள், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் மதுபானக்கடை வைத்திருப்பவர் விவேக் ஜெயின். ஒயின் ஷாப் நடத்தி வரும் விவேக் ஜெயின்(51) மது பழக்கத்திற்கு அடிமையானார். அளவுக்கு அதிகமான மது காரணமாக அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் கல்லீரல் …

  5. ரிஷாட் – மன்னார் ஆயர் நேற்று சந்திப்பு! மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் எம்பியுமான ரிஷாட் பதியூதீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (23) மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் முஷர்ரப் முது நபீன் எம்பி, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/ஆயர்/

  6. கொரோனா வைரஸ் எதிரொலி: எதிர்காலத்தில் பயணம் என்பது எப்படி இருக்கும்? ஷாம்சுதீன் கடந்த 40 வருடங்களாக சுற்றுலா வழிகாட்டியாக உள்ளார். மறைந்த பிரிட்டன் இளவரசி டயானா உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை இவர் சுற்றிக் காண்பித்துள்ளார். மக்கள் கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெளிவாகக் கூறிவிட்ட நிலையில், சுற்றுலாத் துறையே முற்றிலும் மாற்றம் காணலாம் என ஷாம்சுதின் நம்புகிறார். பொது முடக்கம் நீக்கப்பட்டாலும் வரும் காலங்களில் சுற்றுலாத்துறை முன்பு இருந்தது போல இருக்காது என அவர் கூறுகிறார். மக்கள் சுற்றுலா சென்றாலும் குழுவாகச் செல்லாமல் தனித்தனியாகவே செல்வார்கள் என்கிறார் அவர். ‘’எதிர்காலத்தில…

  7. களுத்துறை 16 வயது யுவதி மரணம்-நீதிமன்றத்தின் உத்தரவு! களுத்துறையில் 16 வயது யுவதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயதான பிரதான சந்தேகநபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேவேளை, உயிரிழந்த யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்ததாக விசாரணைகளை முன்னெடுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி…

  8. வீட்டுப்பாடம் செய்யாததால் 15 வயது மாணவி சிறைக்கு செல்ல அமெரிக்க கோர்ட் தீர்ப்பு வாஷிங்டன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் இணையம் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க - ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த கிரேஸ் என்ற = 15 வயது சிறுமி வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என கூறி கடந்த மே மாதம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளார் ஒரு நீதிபதி. இந்த மாணவியின் வழக்கை விசாரித்த ஓக்லாந்து குடும்ப நீதிமன்றம், அந்த மாணவி வீட்டுப்பாடத்தை முடிக்காமல் நன்னடத்தை விதிகளை மீறி இருக்கிறார் என்றும், அவர் மீதுள்ள முந்தைய குற்றச்சாட்டுகளை வைத்து அவர் இந்த சமூகத்திற்கான அச்சுறுத்தல் என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து வெளிப்படையாக எ…

  9. யாழ்ப்பாணத்தின், எம்.ஜி.ஆர் காலமானார்! யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி கிரிகைகள் கோப்பாயிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறவுள்ளது. கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த இராசையா சுந்தரலிங்கம் (வயது 79) தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர ரசிகனாவார். அத்துடன் அ.தி.மு.கவின் தீவிர விசுவாசியும் ஆவார். தமிழகம் சென்று எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தும் உள்ளார். எம்.ஜி.ஆர் போன்று கண்ணாடி அணிந்து தோளில் சால்வையுடன் சைக்கிளில் வலம் வரும் இவரை பலரும் யாழ்ப்பாண எம்.ஜி.ஆர் என அழைத்தனர். அதனால் அவரின் இயற்பெயர் பலருக்கு தெரியாது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக …

  10. அமெரிக்கா: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அலைவதால் அவரின் பங்களாவை வாங்க மக்கள் அஞ்சுகிறார்கள் என்று கூறப்படுகிறது. மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பங்களா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் சான்டா பார்பரா கவுன்ட்டியின் நெவர்லேண்டில் உள்ளது. அவர் கடநத் 1987ம் ஆண்டு அந்த பங்களாவை வாங்கி அங்கு 15 ஆண்டுகளுக்கும் மேல் வசித்தார். 2 ஆயிரத்து 700 ஏக்கர் எஸ்டேட் மற்றும் பங்களா அடங்கிய நெவர்லேண்ட் ரான்ச் விற்பனைக்கு வந்துள்ளது. மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு அவரது ஆவி நெவர்லேண்ட் ரான்ச் எஸ்டேட்டில் உலாவி வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதனால் அந்த எஸ்டேட்டை வாங்க வருபவர்கள் பயந்து சென்றுவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. நெவர்லே…

    • 0 replies
    • 348 views
  11. எரிச்சலூட்டும் வகையில் பாடல்களை பாடி கடத்தல் காரர்களிடமிருந்து சிறுவன் ஒருவன் தப்பிய சம்பவமொன்று ஜோர்ஜியாவில் இடம்பெற்றுள்ளது. ஜோர்ஜியாவின் அட்லாண்டா பிரதேசத்தில் வசித்து வரும் வில்லி மிரிக் என்ற 10 வயது சிறுவனே இவ்வாறு கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொள்ளைக்காரர் கும்பலொன்று மேற்படி சிறுவனை கடத்தி 3 மணித்தியாலங்கள் காரொன்றினுள் அடைத்து வைத்துள்ளனர். இதேவேளை, குறித்த சிறுவனின் குடும்பத்தாரிடம் தொடர்புகொண்டு சிறுவனை கடத்தி விட்டதாகவும் ஒருதொகை பணத்தை கொடுத்தால் மட்டுமே சிறுவனை உயிருடன் விடுவிக்க முடியுமென்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் தான் கடத்தப்பட்டதை பொருட்படுத்தாத அச்சிறுவன் எரிச்சலூட்டும் வகையில் தொடர்ந்து 3 மணித்தியா…

  12. மன்னார் ஆயர் தலைமையில்…! முதல்வர் “CV” அதிரடி அறிவிப்பு. April 17, 201510:41 am புலம்பெயர், உள்நாட்டு தமிழ் பேசும் மக்கள், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்து எப்பேர்ப்பட்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை அறிந்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் 75ஆவது அகவைப் பூர்த்தி நிகழ்வு மன்னார் ஆயரின் வாசஸ்தலத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ‘எமது மக்களின் நன்மையிலும் தீமையிலும், வாழ்க்கையிலும் மரணத்தறுவாயிலும் பக்கத்தில் நின்று, இறுக்கமா…

    • 0 replies
    • 348 views
  13. வட்டக்கச்சியில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டிச் சவாரி! கிளிநொச்சி மாவட்ட சவாரிச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்மடு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் (06) வட்டக்கச்சி கலைவாணி சவாரித்திடலில் மாபெரும் சவாரிப்போட்டி நடைபெற்றது. இதன்போது 100 சோடி மாடுகள் பங்குபற்ற சவாரி போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்றது. https://newuthayan.com/வட்டக்கச்சியில்-நடைபெற்/

  14. கனடா- குளிர்காலத்தின் ஆழ்ந்த உறைபனி நயாகரா நீர்வீழ்ச்சியை கண்கவர் பனி கற்பாறைகளாக மாற்றியுள்ளதோடு சுற்றுபுறங்களில் உள்ள மரங்களை சுற்றி படிககற்கள் தொங்குவது போன்று காட்சியளிக்கின்றன. இக்காட்சிகள் உல்லாச பயணிகளை கவர்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. நயாகரா ஆறு உறைபனியினால் மூடப்பட்டுள்ளபோதும் வீழ்ச்சி முற்றாக உறைந்து விடவில்லை. ஆனால் வீழ்ச்சியின் விளிம்பு அருகில் உள்ள பிரமாண்டமான பனி கட்டமைப்பு சுற்றுலா பயணிகளை காந்தமாக ஈர்க்கின்றதென கூறப்பட்டுள்ளது. இந்த உறைபனி நிலைமை விரைவில கரைந்து விடும் என எதிர்பார்க்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நயாகரா பகுதி வெப்பநிலை தான இதற்கு காரணம். - See more at: http://www.canadamirror.com/canada/38266.html#sthash.Ov1hJx…

  15. [size=4]இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் சுமை 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு வெளிநாடுகளிலிருந்து மட்டும் வியாபார மற்றும் வர்த்தக நம்பிக்கையின் அடிப்படையில் வாங்கப்பட்ட கடன்களின் மதிப்பு 13 சதவிகிதம் உயர்ந்து 20 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.[/size] [size=4]கடந்த 2011 ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சுமார் 18 லட்சமாக இருந்த கடன் தொகை, 2012 ஆண்டில் 13 சதவிகிதம் உயர்ந்து 20 லட்சம் கோடிக்கு மேலாக அதிகரித்துள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் உலக வர்த்தக சந்தைகளின் நிலையற்ற போக்கும் அதனால் நடந்த கடும் பொருளாதார வீழ்ச்சியும் இதற்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன.[/size] [size=4]http…

  16. உலகில் உள்ள அனைத்து கிரிக்கட் வீரர்களின் வீடுகளில் சிறந்த 10 வீரர்களின் வீடுகளை Cric traker சஞ்சிகை வரிசைப்படுத்தி உள்ளது. உலக பணக்கார நாட்டு வீரர்களின் வீடுகளுடன் ஒப்பிட்டு இலங்கை வீரர் சங்ககாரவின் கண்டி வீடும் Top 10 இல் உள்ளடக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிஸ் கெய்ல் : ஜமைய்க்கா கிங்க்ஸ்டன் நகர் ( பெறுமதி ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்) ஷேன் வோர்ன் : அவுஸ்திரேலியா பிரைட்டன் சச்சின் : மும்பாய் பிரட்லீ: அவுஸ்திரேலியா டேவிட் வார்னர்: அவுஸ்த்திரேலியா – கோர்டன் போக் ( 6 மில்லியன் அமெரிக்க டொலர்) குமார் சங்ககார: Engeltine Cottage என வர்ணிக்கப்படும் சங்ககாரவின் இந்த வீடு கண்டி லேக் ரவுண்ட் மேல் பகுதியில் அமைந்துள்ளது…

    • 0 replies
    • 347 views
  17. பிரித்தானியாவில் தாய் ஒருவர், இறந்த மகளின் கருவை தனது வயிற்றில் சுமக்க கடந்த 4 வருடமாக போராடி வருகிறார். 59 வயதாகும் அந்த பெண்ணின் மகள், கடந்த 45 வருடங்களுக்கு முன் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயினால், தன்னால் கருவுற முடியாது என்ற பயத்தில் அந்த பெண்மணி, 2008ம் ஆண்டு லண்டனில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையத்தில் தனது கருமுட்டையை சேமித்து வைத்தார். இந்நிலையில் நோயின் தாக்கம் தீவிரமடைந்ததால், அந்தப்பெண்மணி உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு முன்னால் தனது தாயிடம், என் கருமுட்டையை கொண்டு நீ ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். நான் பிறந்த உன்னுடைய கருப்பையிலேயே என்னுடைய குழந்தையும் வளர வேண்டும் என தனது இறுதி ஆசையை கூறியுள்ளார். ஆனால் இங்கிலாந்தில் உள்ள சட்டங்கள் …

  18. மகிந்தவின் பின்னால் கோப்புகளை எடுத்துச் செல்லும் யுவதி யார்? [ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 01:46.38 PM GMT ] முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பின்னால், யுவதி ஒருவர் செல்லும் புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த யுவதி யார் என தேடிப் பார்த்த போது அவர் அயேஷா மதுஷானி என்ற கலைஞர் எனவும் அவர் நடன குழுவொன்றை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்த யுவதி மிகவும் பிரபலமாகி விட்டதாகவும் மகிந்தவின் கோப்புகளை எடுத்துச் செல்லும் யுவதி என்றால் எல்லோருக்கும் தெரியும் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது. http://www.tamilwin.com/show-RUmtyITXSVms5F.html

    • 0 replies
    • 347 views
  19. மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் தீ பரவல்! கொத்மலை – வேவன்டனில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் வீட்டின் கூரை முழுமையாக சேதமடைந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா தீயணைப்பு படைப்பிரிவுக்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தின் மூலம் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியின் ஆதர…

  20. ஏறத்தாள மூன்றாண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக பட்டாசு கொளுத்தி கொண்டாடியது மகிந்த அரசு. போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக நேரடிக் கண்டனங்களுக்கு உட்பட்டிருக்கும் மகிந்தாவின் அரசு பல்வேறு விதமான புரளிகளை கடந்த இரண்டு வருடங்களாக கிளப்பிவிட்டுக் கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவிற்கு எதிராக 24 நாடுகள் வாக்களித்தன. சிறிலங்காவிற்கு எதிராக இந்தியாவும் வாக்களித்ததுதான் சிறிலங்காவிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதன் காரணமாகத்தான் சிறிலங்கா அரசு கிளப்பிவிட்டிருக்கிறது மீண்டும் புலி எனும் கிலியை. காலத்திற்குக் காலம் இந்தியாவின் அரசியலில் என்றாலும் சரி, சிறிலங்காவின் அரசியலில் என்ற…

  21. வலியால் துடித்த தாய்க்கு பிரசவம் பார்த்து நெகிழ வைத்த 11 வயது மகன்! நியூயார்க்: பிரசவ வலியால் கதறித்துடித்து கொண்டிருந்த தாயின் அருகில் இருந்து, அவருக்கு ஆறுதலும், தைரியமும் அளித்து அவர் குழந்தை பெற்றெடுக்க உதவியாக இருந்துள்ளான் அமெரிக்காவை சேர்ந்த 11 வயது சிறுவன். அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள மரியேட்டா பகுதியை சேர்ந்தவர் கென்யார்டா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு குறிப்பிடப்பட்டிருந்த தேதிக்கு முன்னதாகவே திடீரென பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. அப்போது வீட்டில், அவருடைய 11 வயது மகனை தவிர யாரும் துணைக்கு இல்லாததால் அவர் வேதனையால் துடிதுடித்துப் போயுள்ளார். அந்த நேரத்தில், பிரசவ வலியால் தனது தாய் கதறி துடித்துக்கொண்டிருப்பதை வீட்டில் விளையாடிக் கொண்டி…

  22. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 37 மில்லியன் சொத்துக்களுக்கு அதிபதி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது 77-வது வயதில் மரணமடைந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது குடும்பச் சொத்தான 20 மில்லியன் டாலரை பங்கிட்டுக்கொள்ள விரும்பிய அந்த சகோதரிகளுக்கு அவர்களது தந்தை எழுதி வைத்திருந்த உயிலில் அதிர்ச்சி காத்திருந்தது. விக்டோரியா லபோஸ்(17) மற்றும் மர்லினா லபோஸ்(21) என்ற அந்தப் பெண்கள், திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்ற பின் அல்லது அவர்களது தாயாரை நன்கு கவனித்துக் கொண்டால் மட்டுமே சொத்துக்களை அனுபவிக்க முடியும் என்று அவர்களின் தந்தை அவரது இறப்பிற்கு ஒன்பது மாதங்கள் முன்பு உயில் எழுதி வைத்துள்ளார். இன்னொரு விதத்தில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பட்டம் பெற்றால், ஏழு…

    • 0 replies
    • 347 views
  23. சுனாமியில் காணாமல் போன மகள், நிச்சயம் ஒரு நாள் கிடைப்பார் என நம்பிக்கையுடன் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக தந்தை தேடி வருகிறார். குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி சங்கர் (44). இந்திய விமானப்படை அதிகாரியான சங்கர் சுனாமி ஏற்பட்ட சமயத்தில் கார் நிக்கோபர் தீவில் தனது மனைவி மற்றும் அபூர்வா (8), அருண் (1) என இரண்டு குழந்தைகளுடன் குடும்பமாக இருந்துள்ளார். என்ன நடக்கிறது என யூகிப்பதற்கு முன்னதாகவே சுனாமி அலை அவர்களது குடும்பத்தைப் பிரித்தது. அலையில் சிக்கி சிறிது நேரம் கழித்து தான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறோம் என்ற நிதானத்திற்கு சங்கர் வந்தபோது, அவரது மனைவி இடுப்பில் மகனை வைத்தபடி நண்பர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டார். ஆனாலும், அச்சிறு…

  24. யாழ்ப்பாணத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பல் சிக்கியது – நகைக் கடை உரிமையாளரும் கைது யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றவர்களின் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற நால்வர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, அச்சுவேலி, சுன்னாகம் உள்பட 5 இடங்களில் வீதியில் பயணித்தவர்களிடம் தங்க நகைகளை அறுத்து அபகரித்துச் சென்ற தெல்லிப்பழை மற்றும் ஏழாலையைச் சேர்ந்த 20 - 25 வயதுடைய நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து நகைகளைக் கொள்வனவு செய்த சுன்னாகத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் 6 தங்கப் பவுண் எடையுடைய 5 சங்கிலிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வழிப்பறிக்குப் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.