Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. உடல் முழுவதும் 1 லட்சம் தேனீக்கள்: வாலிபரின் சாதனை குமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது முகம் மற்றும் உடலில் 1 லட்சம் தேனீக்களை ஏந்தி சாதனை படைத்துள்ளார். குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அருகே உள்ள சடையால்புதூரை சேர்ந்தவர் பிளவேந்திரராஜ். இவர் தேனீக்கள் வளர்த்து தேன் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (24). ஐடிஐ முடித்துவிட்டு பிளம்பிங் வேலை பார்க்கும் ராஜேஷிற்கு தனது சிறு வயது முதல் தேனீக்களை உடலெங்கும் விட்டு சாதனை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இந்நிலையில் சடையால்புதூரில் உள்ள சடையால்குளம் அருகே ஒரு முறிந்த தென்னையில் தேனீக்கள் இருப்பதாக பிளவேந்திரராசுக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து ராஜேஷுடன் சென்றிருந்த அவரது நண்பர்களும்…

  2. வங்கிக் கொள்ளையை கடமையாக கருதிய கிளர்ச்சியாளர்: ஹாலிவுட்டையே மிஞ்சிய உண்மை கதை பட மூலாதாரம்,COURTESY OF EDITORIAL TXALAPARTA கட்டுரை தகவல் எழுதியவர்,போலா ரோஜாஸ் பதவி,பிபிசி நியூஸ் முண்டோ 18 மார்ச் 2023 "பொதுமக்கள் நலன் கருதி வங்கியைக் கொள்ளையடித்தேன். அதை நீங்கள் திருட்டு என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஏழையைக் கொள்ளையடிப்பதே திருட்டு எனச் சொல்லப்படுகிறது. கொள்ளையனை கொள்ளையடிப்பவன் என்றென்றும் மன்னிக்கப்படுகிறான். வங்கியைக் கொள்ளையடிப்பது மரியாதைக்குரிய விஷயம்." கொள்ளையடிப்பது, 'சொந்த நலனுக்காக அல்லாமல் கூட்டு நன்மைக்காக' செய்யப்படும் வரை லோஸியோ அர்தாபியாவ…

  3. துபாய் சாலைகளில் ஓர் ரவுண்டப் - சுவாரஸ்யமான தொகுப்பு கடந்த 30 ஆண்டுகளில் உலகின் மிக வேகமான வளர்ச்சியை பெற்று வரும் நகரமாக துபாய் விளங்குகிறது. உலக மக்களை கவரும் முக்கிய சுற்றுலா நகரமான துபாயின் செல்வ செழிப்பை பரைசாற்றுவதில் வானுயர்ந்த கட்டடங்கள் மட்டுமல்ல, அதன் அழகு ரசம் சொட்டும் சாலைகளும், அந்த சாலைகளில் பறக்கும் விலையுயர்ந்த கார்களும் சாட்சியாக நிற்கின்றன. விலையுயர்ந்த கார்கள் என்றால் அதில் ஒரு பிரத்யேக தன்மை இருக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் தீர்க்கமாக இருப்பதையும் காணலாம். அதுபோன்று துபாய் சாலைகளில் தினசரி காணக்கிடைக்கும் கார்கள் மற்றும் சாலைகளையும் பற்றிய சுவாரஸ்யமான தொகுப்பாக இது அமைகிறது. தரமான தங்கம் தங்க ஆபரணங்கள் வாங்குவதற்கு உலகிலேயே சிறந்த ந…

  4. ரோந்து சென்ற இராணுவத்தினரை இலக்கு வைத்து "குட்ஷெட்"(Goodshed Road) வீதி, தோனிக்கல் பகுதியில் இன்று(8/7/07) நன்பகல் 1.10மணியளவில் நடாத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்து வவுனியா பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்டதாகவும், குறிப்பிட்ட அப்பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

  5. மாமியாரின் மூக்கை... அறுத்துக் கொலை செய்த, மருமகள் கைது. மும்பை : மகாராஷ்டிராவில் குடும்ப சண்டையில் மாமியாரின் மூக்கை அறுத்துக் கொலை செய்த மருமகளைப் போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம் நாலாசோப்ரா கிழக்கு பிரகதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஊர்மிளா (55). இவரது மருமகள் சாந்தினி (28). சாந்தினிக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தார். கடந்த சில நாட்களாகவே மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக மோதல் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சாந்தினி சமையல் அறையில் இருந்த கத்தியால் மாமியாரின் மூக்கை அறுத்து…

  6. Published By: SETHU 08 MAR, 2024 | 01:37 PM பறந்துகொண்டிருந்த சர்வதேச விமானத்தின் சக்கரமொன்று கழன்று வீழ்ந்த சம்பவம் அமெரிக்காவில் நேற்று இடம்பெற்றுள்ளது. சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமானநிலையத்திலிருந்து ஜப்பானை நோக்கி புறப்பட்ட யுனைடெட் எயார்லைன்ஸ் விமானமொன்றிலிருந்தே இவ்வாறு சக்கரம் கழன்றது. போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த அவ்விமானம் தரையிலிருந்து கிளம்பிய நிலையில் அதன் சக்கரமொன்று கழன்று, விமான நிலையத்தின் வாகனத் தரப்பிடப் பகுதியில் வீழ்ந்தது. அதையடுத்து அவ்விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜப்பானின் ஒசாக்கா நகரை நோக்கி புறப்பட்ட அவ்விமானத்தில் 249 பேர் இருந்தனர் என யுனைடெட் எய…

  7. பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube) போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656

  8. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த இந்தத் தீர்மானம் வழிவகுக்கும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அதுல் அன்ஞான் குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வு நடவடிக்கைகளை மட்டுமன்றி தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் விவகாரத்திலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். www.eeladhesam.com

  9. இந்தியாவின் வெளியகத் தகவல் சேகரிக்கும் அமைப்பு “றா” (RAW) என்ற மூன்றெழுத்தால் அறியப்படுகிறது. இந்த மூன்று எழுத்தின் விரிப்பு Research and Analysis Wing என்பதாகும். அதாவது சேகரிக்கப்பட்ட தகவலை ஆராய்ச்சி செய்வதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் பொறுப்பான அமைப்பு என்று பொருள். இந்திய நாட்டிற்கு உட்பட்ட தகவல் சேகரிக்கும் நிறுவனங்களும் வெளிநாடுகளில் தகவல் சேகரிக்கும் நிறுவனங்களும் வௌ;வேறாக இயங்குகின்றன. வெளிநாடுகளில் தகவல் சேகரிக்கும் பொறுப்பு றா அமைப்பிற்குரியது. இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஒட்டுமொத்தத் தேசிய நலனுக்கும் றாவின் சேவை அத்தியாவசியமானது. றா அமைப்பு செப்ரம்பர் 1968ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப் படுவதற்கு ஒரு முக்கிய உடனடிக் காரணம் இருந்தது. 1962ம் ஆண்டின…

  10. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தின் மூலம் பணம் எடுக்க வந்தவர்களுக்கு அதனை பயன்படுத்தி பணம் எடுக்க தெரியாததையடுத்து அவர்களுக்கு உதவி செய்வது போல் அவர்களின் ஏ.ரி.எம். காட்டை கொண்டு பணமோசடி செய்து வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை போலி ஏ.டி.எம் காட்டுடன் இன்று வியாழைக்கிழமை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் உள்ள ஒருவர் அங்குள்ள வங்கியின் ஏ.டி.எம் காட்மூலம் பணம் பெறச் சென்றுள்ளார் அவருக்கு ஏ.டி.எம் இயக்கி பணம் தெரியாத நிலையில் அங்கு நின்ற குறித்த நபர் அவருக்கு உதவுவது போல அவரின் ஏ.டி.எம் காடட் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தில் 4 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு சென்ற…

  11. "பப்ஜி" விளையாடிய, இளவாலை இளைஞன்... தற்கொலை! அலைபேசியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இளவாலையில் நேற்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. அலைபேசியில் பப்ஜி வீடியோ கேம் விளையாடுவது இளைஞனின் அண்மைக்கால நடவடிக்கையாக இருந்துள்ளது. அதில் மூழ்கிப் போன அவர் இன்று காலை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் விசாரணையில் தெரிவித்தனர். இளைஞனின் சடலத்தில் காதுகளில் மாட்டிய நிலையில் ஹெட்செட் மற்றும் பொக்கெட்டில் அவரது அலைபேசி என்பன காணப்பட்டுள்ளது. சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு உடற்கூ…

  12. 2009ம் ஆண்டு மாவீரர் நாளை முன்னிட்டு வளரி வலைக்காட்சிக்காக பிரான்சு ஈழத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான "மூடுதிரை" எனும் நிகழ்ச்சி கலைஞர்; கருணாநிதிக்கு எதிராக தமிழகத்தின் கேப்படன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பாக்கி வருகின்றது. சிறிலங்கா அரசுத் தலைவரை மையப்படுத்தி உருவாக்கம் பெற்றிருந்த இந்த நிகழ்ச்சி ஏற்கனவே பெருவாரியான தமிழர்களின் கவனத்தைப் பெற்றிருந்த நிலையில் மீண்டும் தமிழகத்தின் தேர்தல் களத்தில் முக்கிய கருவியாக கலைஞர் கருணாநிதிக்கு எதிராக கேப்படன் தொலைக்காட்சி பாவிக்கின்றது. வளரி வலைக்காட்சிக்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சராக இருக்கின்ற சுதன்ராஜ் அவர்களினால் எழுதி நெறிப்படுத்தப்பட்டிருந்த மூடுதிரை நிகழ்ச்சியில் மகிந்தர் வேடமேற்ற…

  13. மரதன் ஓட்டம் ஓடிய பின் குழந்தையை பெற்றார் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரத்தில் இடம் பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் 27 வயதுடைய நிறைமாத கர்ப்பிணிப்பெண் அம்பிய மில்லர் என்ற பெண்மணி பங்கேற்றார். கர்ப்பிணியான இவர் மரதன் ஓட்டத்தை முழுமையாக ஓடுவது பொருத்தமல்ல என்று மருத்துவர்கள் கூறியிருந்தும் இவர் போட்டியில் பங்கேற்றார். மொத்தம் 42.16 கி.மீட்டர் தூரத்தை இவர் 6 மணி 25 நிமிட நேரத்தில் ஓடி முடித்தார். இவர் ஓடும்போது ரசிகர்கள் கர்ப்பிணிப் பெண்ணே ஓடு ஓடு என்று பெரும் ஆரவாரமும் ஆதரவும் தெரிவித்தார்கள். ஓட்டம் முடிவடைந்த பின்னர் பிரசவ வலி எடுத்து 3.5 கிலோ நிறையுள்ள பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தனது குழந்தையை உலகப் புகழ் பெற்ற சாதனையுடன் பெற்றெடுத்து புகழடைந்து…

    • 0 replies
    • 403 views
  14. அவுஸ்ரேலியாவின் பொப் பாடல் சகோதரிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றம்! அவுஸ்ரேலிய சிட்னி விமான நிலையத்தில் வைத்து பொப்பிசை பாடகிகளான இரண்டு சகோதரிகள் விமானத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பொப்பிசை பாடகிகளான லிசா மற்றும் ஜெசிகா ஓரிக்லியாசோ ஆகியோர் இரட்டை சகோதரிகளுக்கு பெரும் திரளான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாகாணத்தின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லிசா-ஜெசிகா சகோதரிகள் சிட்னி விமான நிலையத்திற்கு சென்று, குவாண்டாஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் ஏறி பயணத்திற்கு தயாராகினர். அந்த தருணத்தில் விமான பணி பெண் ஒருவருக…

  15. 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ள மாம்பழம்! யாழ்ப்பாணம் நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. மேற்படி ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா கடந்த எட்டாம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இதன் ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று (14) இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு முருகனுக்கும் விநாயகப் பெருமானிற்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் உலக சுற்றி முதலில் வலம் வருபவருக்கே மாம்பழம் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து முருகப் பெருமான் மயில் ஏறி உலகைச் சுற்ற செல்ல விநாயகப் பெருமான் சிவனையும் உமாதேவியாருமான வலம் வந்து மாம்பழத்தை பெற்றுக்கொண்டார். இச் சரித்திரத்தை பிரதிபலிக்கும் நாடகம் …

  16. கொத்மலை என்பது நாட்டின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்த, எப்பொழுதும் அழியாத பல நினைவுகளை கொண்ட அழகான வரலாற்று நகரமாகும். வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த கொத்மலை நகரம் அழகான மலைகளால் சூழப்பட்ட மிக பாதுகாப்பான மற்றும் அழகான பகுதி என்பதுடன் அங்கு மெய்யான கிராமவாசிகள் வசிக்கும் பல வரலாற்று கிராமங்கள் உள்ளன. அவ்வாறான அழகான நகரத்தில் அமைந்துள்ள ரணமுனே பீலி,கொத்மலை மாவெல நகரத்தின் அருகில் உள்ள மதிப்புமிக்க தனித்துவமான இடமாகும். இந்த பீலி, துட்டகெமுனு மன்னனின் ஆட்சிக் காலமான கி மு 137 மற்றும் 161 இல் இருந்த ஒரு பீலியாகும். தற்போது கொத்மலை என்பது ஒரு ஊரின் பெயர் என்றாலும், இலங்கை மன்னர் ஆட்சிக் காலத்தில், கொத்மலை பகுதி ஒரு நாடாக இருந்துள்ளது. அந்த காலத்தில் இந்த ரணமுனே பீலி அமைக்கப்பட…

  17. கொரோனாவின்தாக்கம் உலக நாடுகளிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல நாடுகள் ஊரடங்குகளை அமுல் படுத்தி தமது நாட்டை முடக்கிவைத்து கண்காணித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியா தமது நாட்டை 21 நாட்களுக்கு முடக்குவதற்கு தீர்மானித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இச்சூழலில், இந்தியாவின் உத்தரபிரதேசம், மாநில தலைநகரின் புராணி பஸ்தி பகுதியை சேர்ந்த பெற்றோர் தமக்கு புதிதாகப் பிறந்த இரட்டையர்களுக்கு 'கொரோனா மற்றும் கொவிட்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராய்ப்பூரில் உள்ள ஒரு வைத்தியசாலையில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி சிசேரியன் மூலம் பிறந்த ஆண் (கொவிட்) மற்றும் பெண் (கொரோனா) குழந்தைகளுக்கே அவர்களது பெற்றோர் இ…

    • 0 replies
    • 310 views
  18. சென்னை: கணவர் இறந்த பின் உறவினர்களும் உதவிக்கரம் நீட்ட மறுத்ததால், வறுமையில் விரக்தியடைந்த தாய், தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஓட்டேரி வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (36). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த செப்டம்பர் மாதம் உடல் நலமின்றி இறந்தார். இவரது மனைவி மகேஸ்வரி (34), மகள்கள் திலகவதி (16), தீபாவுடன் (13) வசித்து வந்தார். குடும்ப செலவுக்கு போதிய வருமானம் இல்லை. கூலி வேலை செய்தும் ஒரு வேலை உணவு மட்டுமே சாப்பிட முடிந்தது. குழந்தைகள் பள்ளிக்கு மதிய உணவு கூட எடுத்துச் செல்ல வழியில்லாமல் பசியும், பட்டினியுமாக வாழ்ந்து வந்தனர். மகேஸ்வரியின் பெற்றோர், உறவினர் என யாரும் உதவிக்கரம் நீட்டவில்லை. இதனால், எதிர்காலத்தை எப்படி நகர்த்துவது, இரண்டு ப…

  19. 2013 ஏப்ரல் மாதம் 27, 28 ஆம் திகதிகளில் Dates 2013 April 27th, 28th இடம் கொழும்புத் தமிழ்ச் சங்கம், இலங்கை Venue Colombo Tamil Sangam, Sri Lanka மின்னஞ்சல் | Email noolahamfoundation@gmail.com தொலைபேசி | Phone 0094 112363261 http://noolahamfoundation.org/wiki/index.php?title=தமிழ்_ஆவண_மாநாடு_2013 இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், வினோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம், வெள்ளவத்தை, கொழும்பு - 6 காலம் : 27, 28 ஏப்ரல் 2013 (சனி, ஞாயிறு) நேரம் : காலை 9:00 - மாலை 6:00 மாநாட்டு ஆரம்ப நிகழ்வு : (சனி 27-04-2013 : மு.ப 9:00 மு.ப 10:00) தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை மாநாட்டுத் தொடக்கவுரை சிறப்புரை : ஆவணப்படுத்தலும் சமூகமும் - சுந்தர் கணேசன் (இயக்குனர், …

  20. Siri Raja சைப்பிரஸில் சட்டவிரோதமாக வாழ்ந்தமைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையரை விடுதலை செய்யும்படி கே.ஐ.எஸ்.ஏ எனும் புலம்யெர்ந்தோர் ஆதரவுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இவர், கடந்த 20 வருடங்களாக சைப்பிரஸில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வருவதுடன் அங்கு பணிபுரிந்தும் வருகின்றார். இவர் யூலை 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதற்காக மெனோயியா தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த தம்பதியினர் 1993 இலிருந்து சைப்பிரஸில் சட்டரீதியாக வாழ்ந்து வருவதுடன் வேலையும் செய்துவருகின்றனர் என்று கே.ஐ.எஸ்.ஏ எனும் புலம்யெர்ந்தோர் ஆதரவுக் குழு தெரிவித்துள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த மகளுக்கு ஆறு வயதாகும். இரண்ட…

  21. அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் அனுப்பி வைத்த கைபேசி குறுஞ்செய்தி - சகோதரி விசாலாக்‌ஷி தேம்பி அழுத வண்ணைமும். சகோதரர் BH குரல் கம்ம தொலைபேசி வாயிலாகத் தந்த அந்த சோகத் தகவல் என்னை அதிர வைத்தது - பதற வைத்தது - துக்கத்தால் தொண்டையை இறுக வைத்தது. ராஜேஸ்வரி சண்முகம் - இலங்கை கலை உலகின் துருவ நட்சத்திரம் - யாழ்ப்பாணம் சென்ற இடத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதுதான் இதயத்தைக் கனக்கச் செய்த அந்த சோகச் செய்தி. ஒன்றா இரண்டா அறுபது ஆண்டுகாலப் பழக்கம் - கலை உலகில் இணைந்த பயணம். வர்த்தக ஒலிபரப்பு பிரபல்யமாகு முன்பு, தேசிய ஒலிபரப் பொன்றே கலை உலக ஆக்கங்களுக்கு வடிகாலாய் அமைந்த காலை, அமரர் “சானா” சண்முகநாதன் நெறியாழ்கையில் கொடி கட்டிப் பறந்த…

    • 0 replies
    • 694 views
  22. மனைவி, தங்கையுடன் அழகுசாதன தொழிற்சாலைக்கு சென்ற கிம் ஜாங் உன்! படத்தின் காப்புரிமைKCNA VIA AFP பியோங்கியாங்கில் உள்ள அழகுசாதனம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தனது தனது மனைவி ரி சொல்-ஜு மற்றும் சகோதரி கிம் யோ ஜாங்க் உடன் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சென்றார். விளம்பரம் புதியதாக மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்ற அந்த தொழிற்சாலைக்கு, கட்சியின் மூத்த உறுப்பினர்களும் சென்றனர். கிம் ஜாங் உன்னின் மனைவியும், சகோதரியும் அரிதாகவே பொதுவெளியில் காணப்படும் நிலையில், அந்நாட்டின் அரசு ஊடகம் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. வட கொரிய அரசில் வலிமைமிக்க பதவிக்கு கிம் யோ ஜாங்க் உயர்த்தப்பட்ட பிறகு, அவர் வெளியில் தோன்றியிருக்…

  23. 94 வயதில் தகப்பனாகி உலக சாதனை படைத்த இந்தியர்! (காணொளி மற்றும் புதிய படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) உலகில் மிக கூடிய வயதில் தகப்பனாகி இருக்கும் சாதனையை 94 வயது உடைய இந்திய தொழிலாளி ஒருவர் நிலைநாட்டி உள்ளார். இவரின் பெயர் ராமஜித் ராகவ். வட இந்தியாவில் உள்ள ஹர்யானா மாநிலத்தில் வசிக்கின்றார். அங்கு விவசாயப் பண்ணை ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கின்றார். இவரது மனைவி சகுந்தலா. இவருக்கு வயது 53 வரை இருக்கும். கடந்த மாதம் அரச வைத்தியசாலையில் சகுந்தலா ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்து உள்ளார். சாதாரண சுகப் பிரசவம்தான். குழந்தை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. இக்குழந்தை கடவுளின் அருட்கொடை என்று பெற்றோர் கூறுகின்றனர். குழந்தைக்கு கரம்ஜித் என்று பெயர் சூட்டப்பட்டு …

  24. இந்துக்களுடன் இணைந்து நடனமாடிய அமெரிக்க பொலிஸ் https://www.youtube.com/watch?v=lnQEqQ3iTnk&feature=player_embedded இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி பூஜை உலக வாழ் இந்துகளினால் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந் நிலையில் அமெரிக்காவின், நியூ ஜெர்சி மாகாணத்தில் நவராத்திரி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு அங்கு வசிக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த குராத்தியர்கள் ஒரிடத்தில் ஒன்று கூடி நடனமாடி மகிழ்வர். அந்த வகையில் நேற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் குஜராத்தியர்கள் ஒன்றுசேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்த வேளை அப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்காரர் ஒர…

    • 0 replies
    • 447 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.