செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
மும்பை: பிரபலமான பெண்மணிகள் தங்களின் குடும்ப வாழ்க்கையும், பணியையும் எப்படி பேலன்ஸ் செய்து வெற்றி பெறுகிறார்கள் என்பது பலரது கேள்வி. அரசியலாகட்டும், விளையாட்டு, கார்ப்பரேட் துறை, சினிமா என பல துறைகளிலும் இவ்வாறு வெற்றி பெற்ற பெண்மணிகள் பலர் இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள பிரபல பெண்மணிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனைவரையும் கவர்ந்த தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தையும், அரசியல் வாழ்க்கையும் அவர் சரிசமமாக பேலன்ஸ் செய்யும் பிரபல பெண்மணிகள் பற்றி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் 5100 பெண்களிடம் இது தொடர்பாக கருத்துக் கணிப்பு நடைபெற்றது. திருமணத் தகவல் இணையத்தளம் பிரபல பெண்மணிகள் பற்றி கேள்வி கேட்டது. அதில் சுவாரஸ்…
-
- 0 replies
- 310 views
-
-
யேர்மனியில் உள்ள Spalt நகரத்தில், ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் முதியவர் ஒருவர் குப்பைத் தொட்டிக்குள் காகிதக் கைக்குட்டையைப் போட்டதால் அவருக்கு 78 யூரோக்கள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 10.06.2023 அன்று Klaus-Dieter Heidmann (65) க்கும் Marlies (66)க்கும் 40வது திருமணநாள். மதியம் ரெஸ்ரோரண்டில் சாப்பிட்டுவிட்டு Brombachsee அருகே கொஞ்சம் காற்று வாங்கிக் கொண்டு நடந்து வரலாம் என்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு மதியச் சாப்பாடு சுவையாக இருந்தது. அடுத்தது நடைப்பயணம். நடந்து போகும் போது Enderndorf என்ற இடத்தில் Klaus-Dieter மூக்கைச் சீறி, காகிதக் கைக்குட்டையால் துடைத்து அங்கிருந்த குப்பைத் தொட்டிக்குள் போட்டார். அங்கேதான் பிரச்சனை உருவானது. …
-
- 2 replies
- 310 views
-
-
யாழில் விபத்து! முதியவர் படுகாயம்..! யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்துச் சம்பவத்தில், துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் தலையில் படுகாயமடைந்து, மயக்கமடைந்த நிலையில் முச்சக்கரவண்டி ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகளான யாழ் வைத்தியசாலை மற்றும் நொதோண் வைத்தியசாலைகளுக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. உடனடியாக அங்கு நின்ற மக்கள் விபத்தில் சிக்கிய முதியவருக்கு சிகிச்சை அளிக்குமாறு மேற்குறித்த இரண்டு வைத்தியசாலைகளிலும் உதவி கோரியிருந்தனர். இருந்தும…
-
- 0 replies
- 310 views
-
-
இஸ்ரேல் நலன்களுக்காக உளவு பார்த்த டொல்பின் மீன் ஒன்றை காஸா கடற்கரை பகுதியில் கைப்பற்றியதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்ப்பில் ஹமாஸ் அமைப்புடன் நெருக்கமான வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டி பிரிட்டனின் டைம்ஸ் என்னும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.உளவு கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் குறித்த டொல்பின் மீனில் கட்டப்பட்டிருந்ததாக ஹமாஸ் கடற்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் உளவுத் துறை (மொசாத்) உளவு பார்க்க பயன்படுத்தும் நீண்ட மிருக இனங்களின் பட்டியலில் டொல்பின் மீன் இனமும் அடங்குவதாக குறித்த பிரிட்டிஷ் பத்திரிக்கை சுட்டிக் காட்டி உள்ளது. இஸ்ரேலுக்காக உளவு பார்த்த சந்தேகத்தில் சவூதி மற்றும் சூடான் ஆகிய நாடுகள் ஒரு சந்தர்ப்பத்தில் வேட்டையாடும் பறவைகள் …
-
- 0 replies
- 310 views
-
-
கொழும்பில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்ற கொவிட்-19 தொற்றாளர் கொழும்பு டி சொய்சா மகப்பேற்று மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை இன்று(17) பிரசவித்துள்ளார். மருதானையைச் சேர்ந்த 29 வயது பெண்ணுக்கே இரு பெண் குழந்தைகளும் இரு ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளதாக அறிய வருகிறது. கொழும்பில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்ற கொவிட்-19 தொற்றாளர் – Thinakkural
-
- 0 replies
- 310 views
-
-
நெருக்கடியான அரசியல் சூழலிலும் கவலை மறந்து நடனமாடிய ரணில் நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கவலையை மறந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் நடனமாடியதாக ஐ.பி.சி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் பிணை,முறி ஊழல் விவகாரம் தொடர்பான அறிக்கை வெளியாகி இரண்டு நாட்களிற்குள் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு நடனமாடியிருக்கின்றார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டுமென கூட்டு எதிரணியினர் கூறிவருகின்றனர். அத்துடன் பிரதமர் பதவியிலிருந்து ரணில் …
-
- 3 replies
- 310 views
-
-
915 அதிஷ்ட நாணயங்களை விழுங்கிய ஆமை சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழப்பு தாய்லாந்தில் 915 நாணயங்களை விழுங்கிய கடலாமையொன்று, சத்திரசிகிச்சையின் பின்னர் உயரிழந்துள்ளது. 25 வயதான இந்த கடலாமை, தாய்லாந்தின் சோன்பூரி மாகாணத்திலுள்ள பூங்காவொன்றின் தடாகத்தில் சுமார் 20 வருடங்களாக வசித்து வந்தது. அத் தடாகத்தில் நாணயங்களை வீசுவது தமக்கு அதிஷ்டத்தை ஏற்படுத்தும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இவ்வாறு வீசப்படும் நாணயங்களை மேற்படி ஆமை விழுங்கி வந்ததால் அதற்குப் பாதிப்பு ஏற்பட்டது. தாய்லாந்தின் சூலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிருக வைத்தியர்களால் இம் மாத முற்பகுதியில் மேற்படி ஆமை சத்…
-
- 0 replies
- 310 views
-
-
குருநாகல் தோரையாய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் இன்று பேராதனை போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளை (மூன்று ஆண் மற்றும் ஒரு பெண்) பெற்றெடுத்துள்ளார். பிறக்கும் போது 1.3 கிலோ மற்றும் 1.1 கிலோ எடையுடன் இருந்த குழந்தைகள், விசேட சிசு சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் இந்த குழந்தைகளுக்கும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இது தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், மிகவும் அர்ப்பணிப்புடனும் அன்புடனும் அவர்களைப் பார்த்துக்கொள்வதாகவும் இந்த குழந்தைகளின் தந்தை புத்திக ஹேரத் தெரிவித்துள்ளார். https://thina…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
சர்ச்சைக்குரிய வழக்கில் சந்தேக நபர் விடுதலை : யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய கோடீஸ்வரரின் திகைப்பான கருத்து யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை நீதிமன்றம் விடுதலை செய்த திகைப்பான சம்பவம் ஒன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த 46 வயதுடைய கோடீஸ்வரரான வர்த்தகர் இஷான் அப்துல் அஸீஸ் இலண்டனில் வசித்து வருகின்றார். இவர் 18 வயதுடைய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது குறித்த கோடீஸ்வரர் திகைப்பான ஒரு விடயத்தை கூறியுள்ளார். 'எனது ஆண் உறுப்பு தவறுதலாக பெண்ணின் மர்ம உறுப்புக்குள் ஊடுறுவி இருக்கலாம். இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது…
-
- 0 replies
- 310 views
-
-
ஷெரீ எச்செசன் 26 வருடங்களின் பின்னர் தனது தாயை சந்தித்தார் இலங்கையிலுள்ள தனது தாயை கண்டுபிடித்துத் தருமாறு முன்வைக்கப்பட்ட ஷெரீ எச்செசனின் கோரிக்கையை நியூஸ்பெஸ்ட் இன்று நிறைவேற்றியது. 26 வருடங்களின் பின்னர் தனது உண்மையான தாயை ஷெரீ எச்செசன் இன்று (14) சந்தித்தார். இலங்கையிலுள்ள தமது தாயை கண்டுபிடுத்துத் தருமாறு, சில வாரங்களுக்கு முன்னர் நியூஸ்பெஸ்டுக்கு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. ஐக்கிய இராச்சியத்தில் தொழில்நுட்பத் துறையில் பிரபலமான ஷெரீ எச்செசன் என்பவரே அந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார். இதற்கமைய நாம் முன்னெடுத்த உறவுத் தேடல் பயணத்தில கண்டறியப்பட்டவர், ஷெரீ எச்செசனின் உண்மையான தாய் என…
-
- 0 replies
- 309 views
-
-
ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் 79 ஆயிரம் ரூபா அபராதம் இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்தால் 79 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோமானிய கட்டடக்கலையின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இத்தாலி தலைநகர் ரோமின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் மிக முக்கியமானது ‘ஸ்பானிஷ் படிகள்’. இந்தப் படிகள் 1723 மற்றும் 1726ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ப்ரான் செஸ்கோ டி சாங்டிஸ் எனும் கட்டடக்கலை வல்லுனரால் வடிவமைக்கப்பட்டன. 174 படிகளுடன் நீண்டு செல்லும் ஸ்பானிஷ் படிகளின் உச்சிப்பகுதியில் ட்ரினிடா டி மாண்டி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த நிலையில் அண்மைகாலம…
-
- 0 replies
- 309 views
-
-
உறவுகளே! உண்மையைக் காக்க – உரிமையை வென்றெடுக்க ஒன்றாகி உடன் செயற்படுவோம் வாரீர்! உறவுகளே– உண்மையைக் காக்க – உரிமையைப் வென்றெடுக்க – ஒன்றுபட்டு செயற்படுவோம் -சிறிலங்கா அரசுகளின் – ஈழத் தமிழினத்துக்கு எதிரான உண்மை நிலை தெரியாதவர்கள் -அரசியல் வரலாறு புரியாதவர்கள் - தமிழ் இனத்திற்குக் – களங்கத்தை – பங்கத்தை –மக்கள் மத்தியில் குளப்பத்தை – ஏற்படுத்துகின்ற கருத்துக்கள் வெளியிடுவதை உடன் நிறுத்துமாறு வேண்டுகின்றோம் - தலைவர்களே! தமிழ் மக்களின் உரிமைக்காக உழைப்பவர்கள்தானே நீங்கள்? நாங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் – எந்த அமைப்பிலிருந்தாலும் – தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்க – எமது விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக ஒன்றுபடுவோம் - எமது உரிமைபெற்ற – பாதுகாப்பான – வாழ்வுக்காக- அ…
-
- 0 replies
- 309 views
-
-
பொய்யான விளம்பரத்திற்காக மைக்டோனால்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியது! Published on December 6, 2012-8:19 pm · சுவிஸ் நாட்டில் உள்ள பிரபல உணவு நிறுவனமான மைக்டோனால்ட் விளம்பரம் ஒன்றில் பொய்யான தகவலை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கோரியுள்ளதுடன் விளம்பரத்தை திருத்தி அமைத்துள்ளது. மைக்டொனால்ட் நிறுவனத்தில் வழங்கப்படும் பூர்கர் என்ற உணவிற்கு பயன்படுத்தப்படும் சீஸ் அல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள பசுக்களின் பாலில் இருந்து பெறப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. இணையத்தளங்களிலும் தொலைக்காட்சியிலும் இந்த விளம்பரம் ஒளிபரப்பபட்டு வந்தது. ஆனால் சுவிஸ் விவசாய திணைக்கள தகவல் பிரிவு இது பொய்யான தகவல்களை கொண்ட விளம்பரம் என சுட்டிக்காட்டியுள்ளது. இது பொய்யான தகவல் என்றும் சுவிஸ் அல்ப்ஸ…
-
- 0 replies
- 309 views
-
-
2,500 ஆண்டுகள் பழமையான மனித மூளை ஒன்று இங்கிலாந்தில், கடந்த 2008-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. இதனை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தலை வெட்டப்பட்ட நிலையில் சேற்றுக்குள் புதைந்தவாறு கண்டெடுக்கப்பட்ட, ஒரு மனித மண்டை ஓட்டுக்குள் மூளை சேதம் அடையாமல் கிடைத்தது. அவரது மூளை சிதையாமல் இருக்கக் காரணம் என்ன வென்றும், அதற்கு சேறு காரணமாக இருக்கலாமா என்ற கோணத்திலும் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனை ஆராய்ச்சி செய்து வரும் 34 பேர் கொண்ட விஞ்ஞானிகள், இது சுமாராக 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவரின் மூளையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். அந்த மனிதர் கொல்லப்பட்ட போது, அவருக்கு 26 முதல் 45 வயது இருக்கலாம் என்று பற்களை கொண்டு கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த ம…
-
- 0 replies
- 308 views
-
-
குப்பை கூளமாக காட்சியளிக்கும் கிரீஸ் தீவுகள்: அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் அகதிகள்[ வியாழக்கிழமை, 23 யூலை 2015, 12:08.00 மு.ப GMT ] கிரிஸ் நாட்டின் தீவுகளில் அடிப்படை வசதிகள் கூட இன்றி ஆயிரக்கணக்கான அகதிகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு போரின் காரணமாக சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 5000க்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக கிரீஸ் நாட்டின் லெஸ்பொஸ் தீவில் தஞ்சமடைந்துள்ளனர். எனினும் அவர்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. கழிவறைகள் சுத்தமின்றி இருப்பதாகவும், இடமில்லாததால் மக்கள் வீதிகளிலேயே கூடாரம் அமைத்து தங்க வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெக்தத் மெகமத் என்பவர் கூறியதாவது. எனது மனைவி …
-
- 0 replies
- 308 views
-
-
-
பெரமுனவின் ஆதரவாளர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு! வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவர் நேற்று (10) இரவு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் இடம்பெற்ற சடங்கு நிகழ்வு ஒன்றில் குறித்த நபர் கலந்து கொண்டிருந்தார். இரவு 9.00 மணியளவில் அவரை காணவில்லையென தேடிய போது சடங்கு நிகழ்வு இடம்பெற்ற வீட்டு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் ஜனக்க நந்தகுமாரவின் ஆதரவாளரான சுந்தரபுரத்தை சேர்ந்த நித்தியானந்தம் (34-வயது) என்ற நபராவார். https://newuthayan.com/பெரமுனவின்-ஆதரவாளர்-கிணற/
-
- 0 replies
- 308 views
-
-
அரச வைத்தியசாலையிலுள்ள அறிவித்தல் பலகையில் தவறான தமிழ் சொற்பிரயோகம்: அசௌகரியத்திற்குள்ளாகும் நோயாளர்கள்..! பதுளை பிரதான அரசினர் மருத்துவமனையில் நோயாளர்கள் கவனத்திற் கெடுத்துக்கொள்ளப்படும் வகையிலான பல்வேறு அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவ்வறிவுறுத்தல்கள் தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் குறிப்பதினால், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர். இவ்விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதாக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், பதுளை மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தின் பிரதிகள், ஊவாமாகாண ஆளுனர் ஏ.கே.எம். முசாம்மில்,? ஊவா மாகாண சுகாதாரப் பணிப்பாளர…
-
- 0 replies
- 308 views
-
-
விசா கோரி 50 தொலைபேசி அழைப்பு மேற்கொண்டவர் கைது : மனநிலையை ஆராயவும் உத்தரவு! பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்புகளை செய்து அதன் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது. குருந்துவத்தை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொட்டாஞ்சேனை கதிரேசன் தெருவைச் சேர்ந்த தவராஜ் சிங்கம் கிருஷ்ண குமார் என்ற சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார். பிரான்ஸ் தூதரகத்தின் எலிசபெத் டெசன் செய்த முறைப்பாட்டின்படி, பிரான்ஸ் தூதரகத்திற்கு தொலைபேசியில் …
-
- 0 replies
- 308 views
-
-
புத்தளம் கொட்டுக்கச்சி தங்கஸ்வெவ பகுதியில் விகாரையொன்றில் அரியவகை உயிரினமான தேவாங்கு குட்டியொன்று உயிருடன் மீட்டு புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் அலுவலகத்தில் விகாராதிபதியினால் ஒப்படைக்கப்பட்டது. குறித்த உயிரினமான தேவாங்கு நிகாவெரெட்டிய கால்நடை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இவ் உயிரினம் அடர்ந்த காடுகளிலே வாழ்ந்து வருவதாகவும் குறித்த உயிரினத்தை மக்களுக்கு எழிதில் காணக்கூடிய வாய்ப்புகள் கிடைப்பதில்லையெனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரினமான தேவாங்குகள் அதிகமாக வேட்டையாடப்படுவதால் இவை இயற்கையில் அழிவடைந்து வருகின்றதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர…
-
- 0 replies
- 308 views
-
-
பொலிவியா பாலியல் தொழிலாளர்கள் 'ரெயின்கோட்'களை பயன்படுத்துவது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் GASTON BRITO கொரோனா காரணமாக வேலையிழந்த பொலிவியாவை சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள், தங்களையும், வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள கையுறை, பிளீச் மற்றும் ரெயின்கோட்களை பயன்படுத்த உள்ளதாக கூறுகின்றனர். கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக, பொலிவியாவின் இரவு தொழிலாளர்கள் அமைப்பு இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக நடந்து வருகிறது. உரிமம் பெற்ற விபச்சார விடுதிகளும் அங்கு இயங்கி வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக …
-
- 0 replies
- 308 views
-
-
உலகிலேயே 5 பேருக்கு மாத்திரம் இருந்த விசித்திர நோய் : சிறுமி ஒருவருக்கும் தொற்றியதால் அதிர்ச்சி உலகில் 5 பேருக்கு மாத்திரமே காணப்பட்ட விசித்திர தோல் நோய், பங்களாதேஷில் உள்ள சிறுமி ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷின் வட பகுதியில் உள்ள ஒரு பின் தங்கிய கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியான சஹானா, இ.வி என அழைக்கப்படும் எபிடெர்மோடிஸ்பிலேசியா வெரிசிபோர்மஸ் (epidermodysplasia verruciformis) எனும் அபூர்வ தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த நோய் காரணமாக சிறுமியின் முகம், காது, நாடி மற்றும் மூக்கு உள்ளிட்ட உறுப்புகளில், மரம் போன்று சிறிய அளவில் சதை வளர்ந்து வருகின்றது. …
-
- 0 replies
- 308 views
-
-
ஜேர்மனி நாட்டில் உடலில் புகுந்த பேயை விரட்டுவதாக கூறி பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தினர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தென் கொரியா நாட்டை சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கடந்த 2015ம் ஆண்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளனர். ஜேர்மனியில் Hesse என்ற நகரில் அவர்கள் வசித்து வந்தபோது, அவர்களில் 41 வயதான பெண் ஒருவரின் நடவடிக்கை திடீரென வினோதமாக மாறியுள்ளது. தனியாக பேசுவது, சாலையில் செல்பவர்கள் மீது திடீரென பாய்ந்து தாக்குவது, காற்றில் கைகளை அசைத்தவாறு சிரிப்பது போன்ற நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண்ணின் உடலுக்குள் பேய் நுழைந்துள்ளதாக பாதிரியார் ஒருவர் தெரிவித்ததால், அதனை உண்மை என எண்ணி பேயை முயற்சியில் குடும்பத்தினர் ஈ…
-
- 0 replies
- 307 views
-
-
மனைவிக்கு கோவில் கட்டிய கணவர் : சிறப்பு செய்தி தொகுப்பு
-
- 0 replies
- 307 views
-
-
உடலில் தோன்றிய மின்சாரம்: அமானுஷ்ய சக்தியுடன் வாழ்ந்த வினோதப் பெண்! [ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015, 11:32.40 மு.ப GMT ] இங்கிலாந்தை சேர்ந்த ஜாக்குலின் என்ற பெண்மணிக்கு உடலில் ஒரு அமானுஷ்ய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசித்து வந்த ஜாக்குலின் என்ற பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் ஒரு நாள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஜாக்குலின், அவரது கணவரிடம் “உங்கள் கழுத்து உடைந்தால் என்ன?” என்று கத்தியுள்ளார். இதையடுத்து தான் ஜாக்குலின் வாழ்வில் பல அமானுஷ்ய விடயங்கள் தொடர் கதையாகியுள்ளன. இந்த சண்டையை அடுத்து கோபத்தில், வீட்டைவிட்டு வெளியேறி ஸ்கூட்டரில் சென்ற ஜாக்குலினின் கணவர் ரான் விபத்தில் சிக்கி கழுத்து மற்றும…
-
- 0 replies
- 307 views
-