Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இப்பொழுதும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவளித்துக் கொண்டு, இராணுவத்துடன் ஒட்டுக்குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கும் புளொட் இயக்கத்தை நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்து கொள்ள மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசுகிறார், தமது கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து விட்டதாக கூறிவருகிறார். ஆனால் மட்டக்களப்பில் புளொட் இயக்கத்தினர் அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் துணைக்குழுவாக இயங்கி வருகின்றனர். மட்டக்களப்பு மாநகரசபையில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக கொண்டுவரப்ப…

    • 0 replies
    • 556 views
  2. ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர். லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி. வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையி…

  3. சென்னையிலிருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஒரு லட்சம் கையெழுத்துக்களை திரட்டும் போராட்டத்தை தொடங்கப்போவதாக போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த ஊடகச் சந்திப்பின் பொழுது போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பின் அமைப்பாளர்களான டொக்டர் எழிலன், தோழர் இரா. திருமலை முதலியோர் இந்தத் தகவலை தெரிவித்தனர். ஐக்கிய நாடுகளின் மன்றம் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து, இலங்கையில் தமிழ் மக்களுக்கான பொ…

  4. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு, சச்சின் டெண்டுல்கர் கையெழுத்திட்டு கொடுத்த கிரிக்கெட் பேட் 3400 பவுண்ட்ஸ்சுக்கு ஏலம் போனது.கடந்த 2010ம் ஆண்டில், இங்கிலாந்து பிரதமர் கேமரூன், இந்தியா வந்தபோது, சச்சின் அவருக்கு தான் பயன்படுத்திய கிரிக்கெட் பேட்டை கையெழுத்திட்டு பரிசாக வழங்கினார். இதுவரை அதை பத்திரமாக பாதுகாத்து வந்த கேமரூன், ருவாண்டாவில் கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்று கட்டும் பணிக்கு நிதி திரட்டுவதற்காக சச்சின் வழங்கிய பேட்டை நன்கொடையாக வழங்கினார். கேமரூன் தொகுதியின் தலைவராக இருந்த கிறிஸ்டோபர் ஷாலேயின் முதலாமாண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. அதை முன்னிட்டு லார்ட்ஸில் உள்ள லாங் ரூமில் சச்சின் பேட் ஏலம் விடப்பட்டது. அதில், பேட் 3400 பவுண்ட்ஸ்சுக்கு ஏலம் …

  5. தாயிற்சிறந்த கோயிலுமில்லை.... என்ற வைரவரிகள் தமிழ் கூறும் நல்லுலகில் பவனி வரும் இரத்தினச் சுருக்கமான வார்த்தை. ஒரு சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக. இப்படிப் பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது. இப்படிப்பட்ட அன்னையைக் கௌரவிக்கும் இந்நாளில் "அன்னையர் தினம் ' அகிலமெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்தவர் பற்றி நாம் சுற்றுத் தெரிந்து கொள்வோமா? 16ஆம் நூற்றாண்டில் கிறிஸ் நாட்டில்தான் ‘’MOTHERING SUNDAY’’ என்ற நாள் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்ட்டர் வரும் மாதத்தின் நான்காம் ஞாய…

  6. மட்டக்களப்பு வாழைச்சேனை துறைமுகப்பகுதியில் காட்டுக் குரங்கு ஒன்றின் தாக்குதலால் பலர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது தொடர்கதையாகவுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பலர்; அச்சமடைந்து காணப்படுகின்றனர். இக்குரங்கானது வாழைச்சேனை ஆற்றங்கரைப் பகுதியில் உள்ள கண்ணாக்காட்டில் வசித்து வருகின்றது. அவ்வழியால் நாசிவன்தீவு கிராமத்திற்கு செல்லும் பொது மக்கள், அருகிலுள்ள கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், மீனவர்கள், பாதசாரிகள், ஆசிரியர்கள், மற்றும் கிராமத்தவர்கள் என பலரையும் பாராபட்சம் காட்டாது கடித்தும், பிறாண்டியும், கன்னத்தில் அறைந்தும் துன்பம் விளைவித்து வருகின்றது. இதனால் பொது மக்கள் அச்சமடைந்து காணப்படுகின்றனர். இது தொடர்பாக வாழைச்சேனை பொலி…

  7. தமிழரசுக்கட்சியின் தற்போதைய தலைவர் இரா.சம்பந்தனை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு மட்டக்களப்பில் நீண்டகாலமாக தமிழரசுக்கட்சியில் இருக்கும் சட்டத்தரணி ஒருவரை தலைவராக தெரிவு செய்வதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மகாநாடு எதிர்வரும் 25, 26, 27ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெற உள்ளது. 25ஆம் திகதி மாலை மத்திய செயற்குழுவின் கூட்டம் நடைபெறும். 26ஆம் திகதி காலை மகாநாடு ஆரம்பமாக முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் தலைவர், பொதுச்செயலாளர், மூத்ததுணைத்தலைவர், இணைச்செயலாளர்கள், இணைப்பொருளாளர்கள், மற்றும் மத்தியகுழுவும் தெரிவு செய்யப்படும். தலைவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர்கள், மூத்ததுணைத்தலைவ…

  8. டெல்லி: அமெரிக்கத் தயாரிப்பான இலகு ரக பீரங்கிகளைக் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கத் தயாரிப்பான ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புடைய 145 இலகு ரக எம்777 பீரங்கிகள், ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புடைய 65 எல்-70 ஏர் கன் ரேடார்கள், ரூ.480 கோடி மதிப்புடைய பயிற்சி கப்பல், ரூ.350 கோடி மதிப்புடைய கூட்டு விமானப்படை மற்றும் ராணுவ சாதனங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய பாதுகாப்பு தளவடாங்கள் கொள்முதலுக்கான கவுன்சில் அனுமதித்துள்ளது. பிஏஇ சிஸ்டம் நிறுவனத் தயாரிப்பான இத்தகைய பீரங்கிகளை சீன எல்லைப் பகுதிகளான காஷ்மீரின் லடாக், வடகிழக்கில் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மலைப்பாங்கான களங்களில் பயன்படுத்த முடியும். இதன் எடை குறைவு என்பதால் ஹெலிக…

  9. நோமொபோபியா என்னும் பீதியால், 66 சதவீதம் பேரால் செல்போனை ஒரு வினாடிகூட பிரிந்திருக்க முடியாது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. முன்பெல்லாம், வீட்டிலிருந்து ஒருவர் வெளியே புறப்படும் போது, கண்ணாடி, பணம், பேனா என எப்போதும் தேவைப்படக் கூடிய பொருட்களை எடுத்து செல்வார்கள். எதுவும் மறந்து விடக் கூடாது என்பதற்காக பல முறை யோசித்து பார்த்து விட்டு படியிறங்குவார்கள். ஆனால், இன்றைய நவீன உலகில் இந்த பட்டியலில் செல்போன் முதலிடம் பிடித்துள்ளது. இங்கிலாந்தில் செக்யூர் என்வாய் அமைப்பு, செல்போன் பயன்படுத்துவோர் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதில் வெளியான தகவல்: செல்போன் இல்லாமல் ஒரு வினாடி கூட இருக்க முடியாது. செல்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று …

  10. இம்மாதம் மே 18 Albert Campbell (Scarborough Town Centre) சதுக்கத்தில் தமிழின அழிப்பு மாதத்தின் போர்க்குற்ற நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது. நான்காவது வருடமாக கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்படும் போர்க்குற்ற நாள் நிகழ்வு வழமைபோன்று இம்முறையும் இளையோர் அமைப்பு,மகளிர் அமைப்பு, கலைபண்பாட்டுக் கழகம், விளையாட்டுத் துறை, மற்றும் 25க்கும் மேற்பட்ட அமைப்புகள், நலன்புரி அமைப்புகள், விளையாட்டு கழகங்களுடன் இணைந்து ஒற்றுமையாக ஒன்றுபட்ட தமிழராய் போர்க்குற்ற நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது. சிறிலங்கா அரசு புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒற்றுமையை சீர்குழைக்கும் முகமாக மாவீரர் தினம், போர்க்குற்ற நாள், கறுப்பு ஜுலை, மற்றும் தமிழ்த் தேசியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும…

    • 1 reply
    • 586 views
  11. ஆஸ்திரேலியாவில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத நண்டு லண்டன் அருங்காட்சியகத்துக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவு பகுதியில் மீனவர் வலையில் ‘கிளாட்’ வகையை சேர்ந்த ராட்சத நண்டு கடந்த மாதம் சிக்கியது. ஆஸ்திரேலியாவில் எந்த வகை நண்டு கிடைத்தாலும் உடனே சட்டிக்குதான் போகும். ஓட்டல்கள், விடுதிகளில் அமோக விளம்பரத்துடன் நண்டுக் கறிகள் விற்பனையாகும். ஆனால், பிடித்த மீனவர் அதை கறிக்கு விற்காமல் பத்திரமாக வைத்திருந்தார். கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் ‘ஸீ லைஃப்’ என்ற அமைப்பு இதை ரூ.2.58 லட்சம் கொடுத்து அவரிடம் இருந்து வாங்கியிருக்கிறது. இது இங்கிலாந்தின் டார்செட் கவுன்டியில் உள்ள வேமோத் ஸீ லைஃப் அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது. இதற்…

  12. இலங்கையின் வட கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினர் போதைப்பொருள் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பாடசாலை இளைஞர்கள் மத்தியில் திட்டமிட்டு இப்போதை பொருள் விற்பனை திட்டமிட்டு நடைபெறுகின்றது. பல ஆற்றல் மிக்க இளைஞர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகிவருகின்றனர். வட கிழக்கு மக்களில் நலன்களில் அக்கறை கொள்வதாகக் கூறும் அரசியல் கட்சிகளோ அமைப்புகளோ இது குறித்து மௌனம் சாதிக்கின்றனர். புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு “மறுவாழ்வு வழங்கப்பட்டதாக” விடுதலை செய்யப்பட்ட ஆண்கள் பெண்கள் ஆகிய இருபகுதியினர் மத்தியிலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. முன்னை நாள் போராளிகள் என சந்தேகிக்கப்பட்…

  13. யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் உடனடியாக செயற்படும் வண்ணம் தடலாடியாக இடமாற்றஞ்செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதி செயலகத்திற்கு அவர் இடமாற்றஞ்செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சிலிருந்து அனுப்பப்பட்ட பக்ஸ் மூலம் அவரிற்கு தகவல் இன்று வழங்கப்பட்டுள்ளது.இதனிடையே அவரது இடத்திற்கு தற்போதைய மட்டக்களப்பு அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த இடமாற்றம் பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருந்ததாக கூறும் யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் அதனை தாம் எதிர்பார்த்திருந்ததேயென மேலும் தெரிவித்தார்.யாழ்,குடாநாட்டிற்கு விஜயம் செய்யும் ராஜதந்திரிகளை சந்திப்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அவர் சர்ச்சைகளி…

  14. இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் குறித்து ஆராய்ந்து முக்கியமானதொரு தீர்மானத்தை எடுக்கும் நோக்கில் வட்டமேசை மாநாடொன்றை இன்று புதுடில்லியில் அவசரமாக கூட்டுகின்றது இலங்கை வந்து சென்ற இந்திய நாடாளுமன்றக் குழு. ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வுகள் அணுகு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தீர்க்கமானதொரு முடிவை எடுக்கும் முனைப்பில் நடைபெறும் இந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் பங்குபற்றும் எனத் தெரியவருகின்றது. கொழும்பு வந்து சென்ற குழுவில் இடம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இலங்கை விஜயத்தில் அங்கம் வகிக்காத இதரக்கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களும் இந்த முக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு தமதுக்கருத்துக்களை முன்வ…

  15. மணமகள் பிறிதொரு ஆடவனுடன் சென்றதினால் வெட்கம், ஆத்திரம் மேலிட்ட மணமகன் கல்யாணத் தரகரின் மகளை பலவந்தமாக இழுத்துச் சென்று குடும்பம் நடத்திய சம்பவம் ஒன்று மினிப்பேயில் இடம்பெற்றுள்ளது. கல்யாணத் தரகரின் மகளின் வயது 16 என்று மஹியங்கனைப் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மஹியங்கனைப் பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார் மணமகனையும் அவரது தந்தையையும் கல்யாணத் தரகரையும் கைது செய்துள்ளனர். கல்யாணத் தரகரின் மகள் மஹியங்கனை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் மருத்துவ அறிக்கையைப் பெற்றுக் கொள்ளவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்றதும் கைது செய்யப்பட்டவர்களை மஹியங்கனை ம…

  16. இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான மன்ஜெஸ்ரரில் 13 வயதுச் சிறுமி மீது பாலியல் வெறியாட்டம் போட்ட 9 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே இடத்தில்.. குறித்த நபர்களின் உதவியுடன்.. இன்னொரு சிறுமியும்... 20 வரையான ஆண்களால்.. ஒரே நாளில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கொடுமையும் நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்தின் வரலாற்றில்.. உள்ளக ஆட்கடத்தல் மூலம்.. இந்தச் சிறுமிகள் ஏமாற்றப்பட்டு.. வீடுகளுக்கு அழைக்கப்பட்டு.. இலவசமாக.. மதுவும்.. புகையும் வழங்கி.. பலாத்காரம் மூலம்.. பாலியல் வன்முறைக்கு இலக்காக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் அனைவரும் பாகிஸ்தான்.. முஸ்லீம்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகள் 25 வயதில் இருந்து 59 வயது வரை பரந்துள்ளனர். பாத…

  17. முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நெருங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத்தமிழர்களை கியூ பிரிவு காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா இராணுவத்தின் போர், 2009ம் மே 18ம் நாள் முடிவுக்கு வந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் பலிகொண்ட இந்தப் போர் முடிந்து 3 ஆண்டுகள் நிறைவடைகிறன. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் போர் நினைவு நாளில், தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள அகதிகள் சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க என்று கூறி கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள முகாம்…

  18. சுவாசிலாந்து மன்னரின் ஆறாவது மனைவி, கணவனின் கொடுமை தாங்க முடியாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார். தெற்கு ஆப்ரிக்க நாடான சுவாசிலாந்தில் மன்னராட்சி நடக்கிறது. இந்த நாட்டின் மன்னர் முசுவாத்தி. இந்த நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் நாணல் புல் திருவிழா நடக்கும். இந்த விழாவில், இந்நாட்டை சேர்ந்த இளம் பெண்கள் மேலாடை அணியாமல், அரண்மனை அருகே மன்னர் எதிரே அணிவகுத்து செல்வார்கள். இதில் தனக்கு பிடித்த பெண்ணை, மன்னர் தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வார். இதுவரை 13 பெண்களை, மன்னர் முசுவாத்தி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கிடையே 12வது மனைவி நொதாண்டோ டூபி என்பவர் அமைச்சருடன் கள்ளக் காதல் கொண்டது தெரிய வந்ததால் மன்னரால் கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில், அரண…

  19. வடக்கில் பௌத்த மதத்தினையும் மதக்கடவுளின் சிலைகளையும் வலுக்கட்டாயமாக திணித்து வருகின்றது சிறீலங்கா அரசு இதைத் தடுப்பதற்கு இந்துகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கைலாசபிள்ளை தெரிவித்தார். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாழ்ப்பாண பணிமனையில் இன்று திங்கள் ´வடக்கில் துளிர்விடும் பௌத்தம்´ என்ற தொனிப்பொருளில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்தஅகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கைலாசபிள்ளை, வடக்கில் தற்போது புத்தர் சிலையினுடைய ஆக்கிரமிப்பு அதிகளவில் ஏற்பட்டு வருகின்றது. இதற்காக நாம் ஏற்கனவே கண்டனங்களைத் தெரிவித்திருந்தோம் அதன்பிரகாரம் தற்போது அது இடை நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கில் …

  20. அன்புக்குரிய இந்து இளைஞர்களுக்கு, தாழமுடியாத வேதனையோடு இந்த மடலை எழுதுகின்றோம். எழுதுவதால் ஏதேனும் பிரயோசனம் உண்டா? என்று கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் ‘இல்லை’ என்பதாகக் கூட இருக்க முடியும். இருந்தும் எழுதுவதையும் நிறுத்தி விட்டால் அது படுமோசமாகிவிடும் என்பதின் அடிப்படையில் இவ்வறிக்கையை வெளியிட நேர்ந்தது. ... அன்புக்குரிய இந்து இளைஞர்களே! இந்த உலகம் முழுவதிலும் உள்ள சமயங்களை எடுத்துக் கொண்டு எந்த சமயத்தில் இளைஞர்கள் நாட்டம் குறைந்தவர்களாக - சமயப்பற்று இல்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்றொரு ஆய்வு நடத்தினால், அதன் முடிபு இந்துசமயம் என்பதாகவே இருக்கும். அது எந்த நாட்டில் அதிகம் என்ற அடுத்த ஆய்வு வினாவுக்கான பதில் இலங்கை என்பது முடிபாகவரும். எமது அருமை இ…

  21. விலங்குகள் பற்றியதான உறவாடற் புலத்தில் காட்டு ராஜாவாக கருதப்படும் சிங்கத்துக்கு சவால்விடக்கூடிய பலத்துடன் கூடிய விலங்காகக் கொள்ளப்படுவது புலிதான். ஆனாலும் இந்த இரு விலங்குகளுமே பூனைக் குடும்பத்தின் இருவேறு பிரிவுகள்தான். இதனால்தான் வாளேந்திய சிங்கத்தை கொடியாகக் கொண்டுள்ள அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு பாயும் புலியைத் தமது சின்னமாகவும், கொடியாகவும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் வரித்துக் கொண்டார்கள். ஒருகட்டத்தில் தொண்ணூறுகளுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர்களின் தேசியக் கொடியாகவும் புலிக்கொடி பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழர்களின் போர்த் திறனை வெளிப்படுத்தி வெற்றிகளைக் குவித்த சோழப் பேரரசின் கொடியாகவும் புலிக்கொடியே இருந்ததால் அநேக தமிழர்கள் புலிக்கொடியை தமது தேசியக…

  22. [ ஈழத்தமிழ் மக்கள் இறையாண்மையுடன் சுதந்திரமாக அவர்களுடைய பூர்வீக பூமியாகிய வடக்குகிழக்கில் வாழ்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு ஜனநாயக அமைப்பாகவும், பிரித்தானிய அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு செயற்படும் அமைப்பாகவும், பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த 2006 இல் இருந்து செயற்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக 2008, 2009 காலப்பகுதியில் மக்களை அணிதிரட்டி மேற்கொண்ட எழுச்சிமிக்க ஊர்வலத்தில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதும், தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களை பிரித்தானிய தமிழர் பேரவை. மேற்கொண்டுவருவதும் யாவரும் அறிந்ததே. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் முள்வேலி முகாமிற்க்குள் அடைத்துவைத்த மக்களை விடுத…

  23. நாக மாணிக்கம் (ரத்தினம்) நாக ரத்தினம் பற்றி பலரும் பல விதமாக கதைகள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். இப்போது நான் நாக ரத்தினம் பற்றி கேள்விப்பட்ட சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பொதுவாக நவரத்தினங்களில் இருந்து நாக ரத்தினம் முற்றிலும் வேறுபட்டது. நவரத்தினங்கள் பூமியிலிருந்து எடுக்கப்படும். நாகரத்தினமோ நாகபாம்பிலிருந்து எடுக்கப்படும். நாகபாம்பு பல வகைப்படும் யோகிகள்,ரிஷிகள் இவைபற்றிய நிறைய ஆய்வுகளை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே நடத்தியிருக்கின்றனர். அவற்றில் ஒரு வகையான நாகங்கள் நல்ல எண்ணங்கள் கொண்டவை யாரையும் தீண்டாமல் இறந்தவற்றை மாத்திரம் உண்டு வாழக் கூடியவையாக இருந்தன. இதனால் இவற்றின் விஷம் பயன்படாமல் போய்விடும் இரையை தாக்கவே விஷம் பயன்படும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.