Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தாம்பத்ய உறவில் ஈடுபட கைதிக்கு அனுமதி தாம்பத்ய உறவில் ஈடுபட ஆயுள் தண்டனை கைதியான கணவனை பரோலில் விடுதலை செய்யக்கோரி மனைவி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், கணவனிற்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தாம்பத்ய உறவில் ஈடுபட ஆயுள் தண்டனை கைதியான கணவனை பரோலில் விடுதலை செய்யக்கோரி மனைவி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், கணவனிற்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த நந்தலால் கொலை குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறையில் உள்ளார். நந்தலாலுக்க…

    • 0 replies
    • 296 views
  2. விலங்கியல் பூங்காவில் வேலியை தாண்டி, புலி இருக்கும் பகுதிக்குள் குதித்த பெண்: ஏன் தெரியுமா? டொரண்டோ: கனடாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் பெண் ஒருவர் வேலியில் ஏறி புலி இருக்கும் இடத்தில் குதித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் டொரண்டோ நகரில் இருக்கும் விலங்கியல் பூங்காவுக்கு பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது அவரின் தொப்பி ஹரி எனப்படும் புலியை அடைத்து வைத்திருந்த பகுதியில் பறந்து விழுந்தது. இதை பார்த்த அந்த பெண் வேலியில் ஏறிக் குதித்து புலி இருக்கும் பகுதியில் கிடந்த தனது தொப்பியை எடுத்தார். இதை பார்த்த புலி பாய்ந்து வந்தது. ஆனால் புலிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே இரண்டு வேலிகள் அமை…

  3. எதிரிகளைக் கொன்று தலை துண்டிக்கப்பட்ட சடலங்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டேன் - மெக்ஸிகோ யுவதி தெரிவிப்பு மெக்­ஸிகோ நாட்டின் கடத்தல் குழு­வொன்றைச் சேர்ந்த யுவதி ஒருவர், பல நபர்­களை தான் கொலை செய்­த­துடன் தலை துண்­டிக்­கப்­பட்ட சட­லங்­க­ளுடன் பாலியல் உற­விலும் ஈடு­பட்­ட­தாக ஒப்­புக் ­கொண்­டுள்ளார். ஜூவானா எனும் இந்த யுவதி தற்­போது கைது செய்­யப்­பட்டு, மெக்­ஸி­கோவின் பாஜா கலி­போர்­னியா பிராந்­தி­யத்­தி­லுள்ள சிறைச்­சா­லை­யொன்றில் அடைக்­கப்­பட்­டுள்ளார். தனக்­கான தண்­டனைத் தொடர்­பான தீர்ப்­புக்­காக காத்­தி­ருக்கும் ஜூவா­னாவை உள்ளூர் ஊட­க­மொன்று அண்­மையில் செவ்வி கண்­டது. இச்­செவ்­வி­யி…

  4. பிறந்து 5 நாளேயான சிசுவை விற்ற தாய் – யாழில் சம்பவம்! பிறந்து ஐந்து நாட்களான சிசுவை பணத்திற்காக விற்பனை செய்ய முயற்சித்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸார் இதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நெல்லியடி – மந்திகை மருத்துவமனையில் அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய இந்த விசாரணை நடத்தப்படுகிறது எவ்வாறாயினும் குறித்த சிசுவின் தாயார் திருமணமாகாதவர் என்றும் அவர் சிசுவை விற்பனை செய்துவிட்டார் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. https://newuthayan.com/பிறந்து-5-நாளேயான-சிசுவை-வ/

  5. அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் டேவிட் கேனல்ஸ் என்பவரால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பறவைகளில் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் கழுகு, ஒரு கூட்டுக்குள் இருந்த கடல் காகத்தை கொத்தி தூக்கிக் கொண்டு வருகிறது. இதைப் பார்த்து ஆவேசமடைந்த மற்றொரு கடற்காகம் கழுகைக் காயப்படுத்தி அதன் காலில் மாட்டியுள்ள பறவையை விடுவிக்க முயற்சிக்கிறது. ஆனால் அதனால் கழுகின் சிறகை காயப்படுத்த முடியவில்லை. சோகத்துடன் பறந்து போய்விடுகிறது. இந்த புகைப்படத்தையும் செய்தியையும் தனது பேஸ்புக் பக்கத்தில் அமெரிக்க உள்துறை(U.S. Department of the Interior) பதிவேற்றியுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/46320.html#sthash.xJjzcEwy.dpuf

    • 0 replies
    • 296 views
  6. விசாரணைக்கு தடையாக தரிஷா இருந்திருந்தால் நடவடிக்கை எடுக்க முடியும் – நீதிமன்றம் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் நாடகமாடியதாக குற்றம்சாட்டப்படும் வழக்கில் தமது விசாரணையை தடுக்க முயன்றிருந்தால் ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியனுக்கு எதிராக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று இன்று (21) சிஜடிக்கு கொழும்பு பிரதம நீதிபதி லங்கா ஜயரத்ன தெரிவித்துள்ளார். இன்றைய இந்த வழக்கு விசாரணையின் போது ஊடகவியலாளர் தரிஷாவின் லப்டொப் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இதன்போது தரிஷாவின் லப்டொப் ஜூன் 4ம் திகதி சிஐடியால் கைப்பற்றப்பட்டது என்று அவரது சார்பான சட்டத்தரணி சிராஷ் நூர்டீன் மன்றில் தெரிவித்தார். இதனை மறுத்து மன்றுரைத்த சிஐடியினர் ஜூன் பத்தாம் திகதியே லப்டொப்பை கைப்ப…

  7. தலைமறைவாக இருந்த குற்றவாளி 28 ஆண்டுகளின் பின்னர் கைது கென்ற், மெய்ட்ஸ்ரன் சிறையில் இருந்து 1992 ஆம் ஆண்டு தப்பி ஓடிய குற்றவாளி மீண்டும் கைதாகியுள்ளார். சார்ள்ஸ் லின்ச் (Charles Lynch) என்ற நபர், தனது மோட்டர் படகில் ஆங்கிலக் கால்வாயினூடாக சட்டவிரோதக் குடியேறியவர்களை ஏற்றிவந்த நிலையில் எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றுக்குக் கொண்டுவரப்பட்ட சார்ள்ஸ் லின்சுக்கு 44 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நொவெம்பர் 6 ஆம் திகதி இரண்டு எல்லை படைக் கப்பல்களும் கடலோரக் காவல்படையின் ஹெலிகொப்ரரும் இணைத்து விரட்டிப்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டன. இறுதியில் ஆங்கிலக் கால்வாயின் சில மைல்…

  8. படக்குறிப்பு, குறிப்பிட்ட இரண்டு மாணவிகளின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு காதல் தொடர்பு உள்ளதா என்று பள்ளியின் முதல்வர் கேட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 3 செப்டெம்பர் 2023 இலங்கை - அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் உயர்தரம் (13ஆம் வகுப்பு) கற்கும் மாணவிகளின் மாதவிடாய் நாட்களைக் கேட்டுக் குறிப்பெடுத்து, தனக்கு வழங்குமாறு சிரேஷ்ட மாணவத் தலைவி ஒருவரிடம் கேட்ட பள்ளி முதல்வர் ஒருவருக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. குறித்த சிரேஷ்ட …

  9. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானார். ஆனால் ஒரு வயதுக்கூட ஆகாத கைக்குழந்தையுடன் இளம்பெண் காட்டுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். கொலம்பியாவில் உள்ள சோகோவின் குயிப்டோ என்ற இடத்திலிருந்து நுகுய் என்ற இடத்திற்கு பசிபிக் கடல் வழியாக ஒரு குட்டி விமானம் சென்றது. இந்த விமானம் அல்டோ பவுடோ என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது கடந்த சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை கர்லோஸ் மரியோ செபல்லோஸ் என்ற விமானி ஓட்டிச் சென்றார். இதில் மரியா நெல்லி முரில்லோ (வயது 18) என்ற இளம்பெண் தன் கைக்குழந்தையுடன் சென்றார். இரண்டு என்ஜின் கொண்ட இந்த விமானம் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இத்தகவல் கிடைத்…

    • 0 replies
    • 295 views
  10. கொரோனா பாஸ்போர்ட் ஏன் வழங்கப்படுகின்றது? 22 Views கடந்த ஓராண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று சூழல் உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களின் பயணத்திட்டங்களை முற்றிலுமாக சீர்குலைத்திருக்கிறது. இந்த சூழலில், கொரோனா பாஸ்போர்ட் என்ற சொல்லாடல் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றது. கொரோனா பாஸ்போர்ட் என்றால் என்ன? கொரோனா பாஸ்போர்ட் என்பது கொரோனா பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தடுப்பூசி செலுத்தியிருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா பாஸ்போர்ட் வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது. இது டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் எனவும் அல்லது நடைமுறையில் உள்ள பாஸ்போர்டுடன் ஒரு சான்றிதழாக வழங்கப்படும் எனவும் சொல்லப்படும் நிலை…

  11. உலகில் மிக அதிக வாழ்நாள் கொண்டவர்கள் சுவிஸ் ஆண்கள் என்று உலக பொது சுகாதார புள்ளியியல் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் சுவிஸ் பெண்களின் ஆயுட்காலம் உலகின் எஞ்சிய நாடுகளைவிட குறைந்துள்ளதாகவும், இது இரண்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு சரிவை சந்தித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. ஆயுட்காலம் குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை புதன்கிழமையன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையில் முதலிடத்தில் இருந்த ஐஸ்லாந்து நாட்டவரை பின்னுக்கு தள்ளி சுவிஸ் முதலிடத்தில் வந்துள்ளது. சுவிஸ் நாட்டில் பிறக்கும் ஆண்களின் ஆயுட்காலம் சராசரியாக 81.3 ஆண்டுகள் எனவும், ஆனால் ஒட்டுமொத்த உலக ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 69.1 …

  12. மதுரை மாவட்டம் பெருமாள்பட்டியில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், இறுதிசடங்கின் போது உயிர் பிழைத்துள்ளார். பாண்டித்துரை என்பவர் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள்‌ கூறியுள்ளனர். இறுதிசடங்கு நடைபெற்ற போது, உறவினர்கள், பாண்டித்துரையின் மார்பில் பலமாக அடித்து அழுதுள்ளனர். அப்போது, பெரு மூச்சு விட்ட பாண்டித்துரை உயிருடன் எழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிச்சைக்கு அனுமதித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=154351&category=IndianNews&language=tamil

  13. 13 வருடங்களுக்கு பிறகு கரட்டில் இருந்து மீண்டும் கிடைத்த திருமண மோதிரம்! கனடாவில் சுமார் 13 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன திருமண மோதிரம் ஒன்று கரட்டில் இருந்து மீண்டும் கிடைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் அல்பெர்ட்டா பகுதியில் நார்மன் மற்றும் மேரி க்ராம்ஸ் என்ற தம்பதியர் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு 1951ல் திருமணம் இடம்பெற்றது. நார்மன் தோட்டக்கலையில் ஆர்வம் உள்ளவர் என்பதால் தனது வீட்டுக்கு பின்புறம் பெரிய காய்கறி தோட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தார். மேரியும் அவரோடு சேர்ந்து பணிபுரிவது வழக்கம். 2006 ஆம் ஆண்டளவில் மேரி தோட்டப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது தான் அணிந்திருந்த மோதிரம் காணாமல் போனமை பற்றி அறிந்தார். தோட்ட…

  14. காவல்துறை உங்கள் நண்பன் - ரெயிலில் இருந்து கர்ப்பிணி பெண்ணை மீட்க படிக்கட்டுகளாக மாறிய காவலர்கள் சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே நடுவழியில் நின்ற மின்சார ரயிலில் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண் உட்பட பயணிகள் கீழே இறங்குவதற்கு காவலர்கள் படிக்கட்டுகளாக மாறி உதவி செய்த நிகழ்வு பாராட்டுகளை பெற்றுவருகிறது. #ElectricTrain #TNPolice சென்னை: தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் ஒன்று, சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரெயில்…

  15. கலகொட அத்தே ஞானசார உனக்கு நான் சொல்கின்றேன், உன்னிடம் எந்த தேச பற்றும் இல்லை. உனக்கு விளங்குவது முஸ்லிம் பிரச்சினைகள் மட்டுமே. முஸ்லிம்கள் மட்டுமா இந்த நாட்டில் பிரச்சினை? பலம் இருந்தால் பேசு என ராஜாங்கனையே சத்தாரத்தன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். ஜனாதிபதி,பிரதமர் உட்பட இந்த நாட்டில் அனைத்து அரசியல்வாதிகளும் பெரிய கொள்கலன்களில் போதைபொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டில் இளைஞர்களுக்கு கொடுக்கின்றார்கள். நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் போதை பொருள். இன்று ஒரு காடு இல்லை, அனைத்து காடுகளையும் வெட்டி அழிக்கின்றார்கள். இந்த சிங்கள, பௌத்த அரசாங்கத்தில் மதுபானசாலைகள், சார…

  16. சுடு நீரை சிறுவனின் முகத்தில் ஊற்றிய சித்தி 7 வயது சிறுவன் ஒருவன் சிறிய தாயினால் சுடுநீர் முகத்தில் ஊற்றப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செரண்டிப் (அந்தோணிமலை) தோட்டத்தில் சிறிய தாயொருவர் தனது 7 வயதான மகனின் முகத்திலும் கைகளிலும் சுடுநீரை ஊற்றியுள்ளார். இவ்வாறு பாதிப்புக்குள்ளான சிறுவன் எஸ்.சிவராஜ் (7 வயது ) எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சிறுவனின் தாய் இறந்துவிட்ட பின்னர் சிறுவனின் தந்தை மறுமணம் முடித்துள்ளார். இவர்களின் இருவரிடையே வாழ்ந்து வருகின்ற குறி…

  17. கொழும்பில்... தனியார் வைத்தியசாலையில், மீட்கப்பட்ட கைக்குண்டு – பொலிஸார் வெளியிட்ட தகவல்! கொழும்பு – நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய மூவர் மீது கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக நாரஹேன்பிட்டி பொலிஸாரும் கொழும்பு குற்றவியல் பிரிவும் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. அத்கமைய வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினரிடமும் கட்டுமானப் பணிகளுக்காக வைத்தியசாலைக்குச் சென்ற சிலரிடமும் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அத்துடன், வைத்தியசாலையின் சி.சி.ரி.வி காணொளி காட்சிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகி…

  18. தடுப்பூசி பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு போர்த்துகீசிய சுகாதார பணியாளர் உயிரிழப்பு! ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு போர்த்துகீசிய சுகாதார பணியாளர் இறந்துள்ளார். 41 வயதான சோனியா அசெவெடோ, புத்தாண்டு தினத்தன்று வீட்டில் ‘திடீர் மரணம்’ அடைந்தார். பிரேத பரிசோதனை இன்று அல்லது நாளை பிற்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர்டோவில் உள்ள போர்த்துகீசிய ஆன்காலஜி இன்ஸ்டிடியூட்டில் குழந்தை மருத்துவ துறையில் பணிபுரிந்த இருவரின் தாய், தடுப்பூசி போட்ட பிறகு எந்தவிதமான பாதகமான பக்க விளைவுகளையும் சந்தித்ததாகக் கூறப்படவில்லை. அசெவெடோவின் தந்தை அபிலியோ அசெவெடோ கூறுகையில், ‘அவள் நன்றாக இருந்தாள். அவளுக்கு எந்த உடல்நலப…

  19. கணவனை கொலை செய்து 7 ஆவது மாடியில் இருந்து வீசிய மனைவி மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அம்போலி பகுதியை சேர்ந்தவர் சாந்தனுகிருஷ்ண சேஷாத்ரி (54). தனியார் நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ஜெய்ஷீலா, மகன் அரவிந்த் (26). பொறியல் பட்டதாரி. இந்நிலையில், சேஷாத்ரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார், சேஷத்ரியின் மனைவி மற்றும் மகனிடம் விசாரணை நடத்தினர். அதில் சேஷாத்ரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாகவும், இதற்கு முன்பு கூட அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களது வீட்டிலும் நடத்திய சோதனையில், வாஷிங் ம…

  20. மனிதர்கள் அவ்வப்போது முகத்தைத் தொடுவது ஒரு பொதுப் பழக்கம். முகத்தைத் தொடுதல் என்பது தாடியைத் தடவிக்கொடுப்பது, நெற்றியில் கைவைப்பது, வியப்பிலோ அதிர்ச்சியிலோ வாயில் கைவைப்பது, மூக்கை நோண்டுதல், விரல் நகத்தைக் கடித்தல், கண்ணைக் கசக்குதல் என்று பல்வேறு செயல்களை உள்ளடக்கியது. தற்போது கரோனா கொள்ளைநோயின் பரவலையொட்டி முகத்தில் கை வைக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ளும்படி வலியுறுத்துகிறார்கள். கரோனா தொற்று உள்ள ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் அவரைச் சுற்றியுள்ள பரப்பில் போய் அந்தக் கிருமி படியும். அதில் கை வைக்கும் இன்னொருவர் தன்னிச்சையாகத் தனது வாய், மூக்கு, கண்ணுக்குக் கையைக் கொண்டுபோவதால் கரோனா வைரஸ் அவருக்கும் தொற்றிக்கொள்ளும். இதனால்தான், முகத்தைத் தொடக் கூடாது என்பது கரோன…

  21. கோகுலம் விருந்தினர் மாளிகையில் நன்கொடையைச் செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம். அங்கு அவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வி.ஐ.பி. பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படும். திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். ஆனால், எல்லோரும் 40 அடி தள்ளி நின்றுதான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆனால், இப்போது 10,000 ரூபாய் பணம் கட்டினால் திருப்பதி வேங்கடேசப் பெருமாளை அருகில் நின்று தரிசிக்கலாம். தீபாவளி இனிப்பாக இனிக்கும் இந்தச் செய்தியை விரிவாகப் பார்ப்போம். Tirupati திருமலை திருப்பதி வேங்கடசப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு, சர்வ தரிசனம், நேர ஒதுக்கீட…

    • 0 replies
    • 294 views
  22. பங்களாதேசில் கடந்த ஆண்டு, இந்து மதத்தைச் சேர்ந்தவரைக் கொலை செய்த வழக்கில், எட்டு பேருக்கு மரண தண்டனையும், 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.பங்களாதேசில், கடந்த ஆண்டு, டிச., 9ம் தேதி நடந்த, நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் போது, ஆளும், "அவாமி லீக்' கட்சியைச் சேர்ந்தவர்கள், தாகா நகரில், பகதூர் ஷா பூங்காவில், விஸ்வஜித் என்பவரை கொலை செய்தனர். இந்த சம்பவம், பங்களாதேசில் "டிவி'க்களில், நேரடியாக ஒளிபரப்பானதையடுத்து, கொலையாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம், இந்த வழக்கை, தாகா நகர நீதிபதி, நிஜாமுல் ஹக், 10 நிமிடங்களில் விசாரித்து முடித்து, தண்டனை வழங்கினார். பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில், விஸ்வஜித்தை கொலை செய்த, ஆளும் கட்சியி…

  23. பீட்றோ எனச் செல்லப் பெயரிடப்பட்ட ஆண் தண்டி எனப் பெயரிடப்பட்ட பெண் பென்குவின்களிற்கு திசெம்பரில் பொரித்த (பிறந்த) குஞ்சு, ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மேலதிக எட்டு ஆபிரிக்க பென்குவின் குஞ்சுகளோடு சேர்ந்து ரொறன்ரோ விலங்குச்சாலையில் உள்ள பென்குவின் கூட்டத்தோடு இணைந்துள்ளது. இந்தப் பென்குவின் குஞ்சுகள் பெப்ரவரி நடுப்பகுதியில் தொடங்கும் பென்குவின் காட்சியில் இருக்கும். ஆண் இன பென்குவின்களான பெட்றோ அதன் நண்பரான பட்டியினோடு கொண்ட நட்பு அட ஓரினக் காதலா என்பது பற்றியும் அவற்றின் நெருக்கம் பற்றிய குறிப்பு 2011இல் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாயிற்று! அதன்பிறகு ஒருவாரு இந்த இரண்டு ஆண் நண்பர்களும் பிரிக்கப்பட்டு அவை பெண் துணையோடு இணைக்கப்பெற்றன. ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இந்த ஆபிரிக…

    • 0 replies
    • 293 views
  24. காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த யுவதி; காதலனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உடதியலும பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (05) பண்டாவரளை நீதவான் நீதிமன்றில் முன்னலைப்படுத்தி உள்ளார். அத்தோடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இரவில் தங்கிய இளம் ஜோடி கடந்த மே மாதம் 11 ஆம் திகதி மாலை கொஸ்லாந்த, தியலும நீர்வீழ்ச்சியின் உடதியலும பகுதிக்கு பிரவேசித்த குறித்த இளம் ஜோடி இரவில் தங்க முற்பட்டுள்ளனர். இதன்போது இளம் யுவதி காட்டு யானை தாக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.