செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
தெஹிவளை மிருககாட்சிசாலையில் பறவைகளின் கண்காட்சியொன்று இடம்பெற்றபோது அங்கிருந்து தப்பிச் சென்ற கிளியொன்று ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கம்பளை தொலுவ பிரதேசத்திலுள்ள அதன் உரிமையாளரது வீட்டைச் சென்றடைந்துள்ளது. கடந்த நவம்பர் 25 ஆம் திகதி தெஹிவளை மிருககாட்சிசாலையில் கண்காட்சியொன்று நடைபெற்ற போது தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது எழுந்த சப்தத்தால் கண்காட்சியிலிருந்த கிளியொன்று அச்சமுற்று அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது. எலெக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஏழு வயதுக் கிளி பறவைக் கண்காட்சியில் பல சாகசங்களைச் செய்துள்ளது. தப்பிச் சென்ற கிளி 5 மாதங்களின் பின்னர் கிளியை சிறு வயதில் வளர்த்த கம்பளை தொலுவ பிரதேசத்…
-
- 0 replies
- 603 views
-
-
கோப்பாயில், அதிகாலையில்... தொடரும் வழிப்பறி கொள்ளைகள்! கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும், அதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோப்பாய் வீதியில் அதிகாலை 4 மணியளவில் முகம் முகத்தினை மறைத்தவாறு தொப்பி அணிந்துகொண்டு கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் நிற்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறது…
-
- 0 replies
- 411 views
-
-
பேஸ்புக்' கில் இணைந்திருந்த போது இடையூறு விளைவித்த குழந்தையை கொன்ற தாய், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அமெரிக்க வட புளோரிடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் ' பேஸ்புக் ' இணையத்தளத்தினை உபயோகிக்கும் போது இடைஞ்சலாக இருந்த தனது குழந்தையைக் கொல்ல நேரிட்டதாக, தனது குற்றத்தைத் தானே நேற்று ஒப்புக் கொண்டார். அலெக்ஸேண்ரா டொபியஸ் எனும் இப்பெண் 'பேஸ்புக்'கில் உள்ள ' பார்ம்வெளி ' எனும் பிரபல கணினி விளையாட்டில் ஈடுபட்டிருந்துள்ளார். அந்நேரத்தில் இவரது 3 மாதங்களேயான குழந்தை அழுதுள்ளது. இதன்போது கோபமடைந்த இவர் ஆத்திரத்தில் குழந்தையைத் தூக்கி வேகமாக குலுக்கவே, அதன் தலை கணினியில் மோதி குழந்தை உயிரிழந்ததாக அலெக்ஸேண்ரா தெரிவித்துள்ளார். இவருக்கான தீர்ப்பு எதிர்வரும் டிச…
-
- 0 replies
- 676 views
-
-
https://www.facebook.com/slupfa/videos/10153351355951259/ மருத்துவமனையில் சுசில் அனுமதிக்கப்பட்டதும் வேட்புமனுக்களை கைப்பற்ற ஓடிச்சென்ற மகிந்த JUL 14, 2015 | 1:36by கார்வண்ணன்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் நேற்றுமுன்தினம் இரவு திடீர் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வேட்புமனுக்களைப் பாதுகாப்பதற்காக கூட்டம் ஒன்றில் இருந்து ஓடிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசியல்வாதிகள் பலருடைய வேட்புமனுக்களை கட்சி நிராகரித்திருந்த …
-
- 0 replies
- 346 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் குறித்து ஆராய்ந்து முக்கியமானதொரு தீர்மானத்தை எடுக்கும் நோக்கில் வட்டமேசை மாநாடொன்றை இன்று புதுடில்லியில் அவசரமாக கூட்டுகின்றது இலங்கை வந்து சென்ற இந்திய நாடாளுமன்றக் குழு. ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வுகள் அணுகு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தீர்க்கமானதொரு முடிவை எடுக்கும் முனைப்பில் நடைபெறும் இந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் பங்குபற்றும் எனத் தெரியவருகின்றது. கொழும்பு வந்து சென்ற குழுவில் இடம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இலங்கை விஜயத்தில் அங்கம் வகிக்காத இதரக்கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களும் இந்த முக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு தமதுக்கருத்துக்களை முன்வ…
-
- 0 replies
- 485 views
-
-
கூகுள் உரிமையாளராக ஒரு நிமிடம் இருந்த இந்தியருக்கு ரூ.8 லட்சம் பரிசு வழங்கிய கூகுள் கூகுள்.காம் இணையதளத்தை இந்தியர் ஒருவர் விலைக்கு வாங்கி ஒரு நிமிடம் உரிமையாளராக இருந்துள்ளார். அவருக்கு பரிசாக ரூ.8 லட்சத்தை கூகுள் நிறுவனம் வழங்கி உள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள மந்த்வி பகுதியை சேர்ந்தவர் சான்மே வேத். இவர் தற்போது அமெரிக்காவில் எம்பிஏ படித்து வருகிறார். இவருக்கு இணைய முகவரிகளை வாங்கும் பழக்கம் உள்ளது. ஏற்கெனவே கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார் வேத். அதனால், கூகுள் டொமைன்ஸ் மூலம் இணைதள முகவரிகளை அவ்வப்போது வாங்கி வந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூகுள் டொமைன்ஸ் சென்று புதிதாக …
-
- 0 replies
- 359 views
-
-
ரியாஸ் சொஹைல் பிபிசி உருது பாகிஸ்தானில் திருமணமாக இருந்த புது மாப்பிள்ளை ஒருவர், மண விழாவில் இருந்து அடித்துத் துரத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதற்கு காரணம் அவருக்கு ஏற்கனவே ஒரு முறை அல்ல இரு முறை திருமணம் நடந்திருந்தது தெரியவந்ததுதான். அடி தாங்க முடியாமல் வாகனம் ஒன்றுக்கு கீழே சென்று ஒளிந்து கொண்ட புது மாப்பிள்ளை, பின்னர் அடையாளம் தெரியாத நபர்களால் மீட்கப்பட்டார். பாகிஸ்தானில் ஓர் ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்துகொள்ள சட்ட ரீதியாக அனுமதியுண்டு. ஆனால், ஏற்கனவே திருமணம் செய்துகொண்டு தன்னுடன் வாழும் பெண்களின் அனுமதியைப் பெற்ற பின்னரே அவர்கள் அடுத்த திருமணம் செய்துகொள்ள முடியும். ஆனால், ஆசிஃப் ரஃபீக் சித்திக்கி எனும்…
-
- 0 replies
- 344 views
-
-
கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். கரடிபோக்கு சந்தியிலிருந்து பெரியபரந்தன் ஊடாக பூநகரி வீதிக்குச் செல்லும் வழியில் ஐந்தாம் வாய்க்கால் பகுதியிலேயே இந்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரி, வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே விபத்துக்குள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டதுடன், கிளிநொச்சி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 0 replies
- 187 views
-
-
NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. ______________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabol…
-
- 0 replies
- 430 views
-
-
மோடியை கடவுளாக வணங்கும் பீகார் கிராம மக்கள் பாட்னா: ஆதரவோ எதிர்ப்போ... அது எதுவாக இருந்தாலும் சரி... அரசியல் அசுர வளர்ச்சியில் மோடியை ஒதுக்கி விட முடியாது. டீ கடையில் வேலை பார்த்த சாதாரண சிறுவன் இன்று பிரதமர் ஆகிவிட்டதை கண்டு நாடே வியந்தது. நம்மை ஆண்ட பல பிரதமர்களுக்கு நாம் பல பட்டப் பெயர்களை சொல்லி அன்பாக அழைத்திருக்கிறோம். ஆனால் மோடி இதிலும் சற்று வித்தியாசப்பட்டே நிற்கிறார். அதாவது எந்த அளவுக்கு என்றால், மனிதரில் இருந்து கடவுள் ஸ்தானத்துக்கே உயர்ந்துவிட்டார். ஆம்... மோடியை கடவுளாக வணங்குகிறார்களாம் ஒரு கிராம மக்கள் காந்திக்கு கோயில் லட்சக்கணக்கான சிலைகள் மகாத்மா காந்திக்கு இருந்தாலும், ஒரே ஒரு கோயில்கூட இதுவரை நாட்டில் இல்லை. அதனால் மகாத்மா கா…
-
- 0 replies
- 360 views
-
-
பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக எண் 10 டவுனிங் தெருவுக்கு குடிபெயர்கிறார் . இங்கு பல ஆண்டுகளாக, பிரதம மந்திரிகள் வந்து போயிருக்கிறார்கள், ஆனால் டவுனிங் தெருவில் எப்போதும் குடியிருப்பாளராக இருக்கிறார் லெரி. அதாவது லெரி என்ற செல்லப் பூனை. ஐந்து பிரிட்டிஷ் பிரதமர்களுடன் வாழ லெரிக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. லெரி சந்திக்கும் ஆறாவது பிரதமர் ஸ்டார்மர் ஆவார். கடந்த 14 ஆண்டுகால அரசியல் எழுச்சியின் போது உறுதியாக இருந்த ஒரே ஒருவராக லெரியை பிரிட்டிஷ் ஊடகங்கள் சித்தரித்துள்ளன. லெரி ஜனவரி 13, 2007 இல் பிறந்தது. லெரிக்கு 17 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. லெரி தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிரதம மந்திரியுடன் பழகப் போவது…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
வரலாறு காணாத வறட்சி – 700 உயிரினங்களை கொன்று மக்களுக்கு வழங்க திட்டம். தென் ஆப்பிரிக்காவின் பல பிரதேசங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. அந்த நாடுகளின் தரவுப்படி கடந்த 40 ஆண்டுகளில் இது மாதிரியான வறட்சியை எதிர்கொண்டது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 83 யானைகள் உள்ளடங்கலாக சுமார் 700 வன உயிரினங்களை கொல்ல உள்ளதாக நமீபியா அறிவித்தது. இந்நிலையில், நமீபியாவை தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 50 …
-
- 0 replies
- 153 views
-
-
இங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள அதேநேரம், முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மை சமூகமாக வியாப்பகம் பெற்றுள்ளனர். இரண்டாம் நிலையில் இருந்த தமிழர்கள் நான்காம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளனர். இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைவடைந்து வருகின்றதொரு நிலையில் முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி அதிகரித்து வருகிறது. 1881 ஆம் ஆண்டு முதலாவது சனத்தொகை கணக்கெடுப்பின் படி சிங்களவர்கள் 66.91வீதமாகவும், தமிழர்கள் 24.90வீதமாகவும், முஸ்லீம்கள் 6.60வீதமாகவும் இருந்தனர். இலங்கையில் இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் கடந்த 1981 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத…
-
- 0 replies
- 684 views
-
-
தமில் மொழியை வளமாக்க உங்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது என்னும் அழைப்போடு புதிய அகராதி பற்றிய இந்த பதிவை துவக்கலாம்.காரணம் இந்த அகராதியின் நோக்கமும் அது தான். ஆம் தமிழில் முற்றிலும் திறந்த தன்மை கொண்ட அகராதியாக இந்த புதிய அகராதி உருவாக்கப்பட்டு வருகிறது.அதாவது விக்கி பாணியில் இணையவாசிகளின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டு வரும் அகராதி இது. மற்ற இணைய அகராதிகள் போல இல்லாமல் இதில் இணையவாசிகளே புதிய சொற்களை சமர்பித்து அதற்கான பொருளையும் குறிப்பிடலாம்.விக்கி பாணியிலான அகராதி என்பதால் அந்த சொல்லுக்கான அர்தத்தில் திருத்தம் இருந்தால் சக இணையவாசிகளே அந்த திருத்ததை சமர்பிக்கலாம். இவ்வாறு இணையவாசிகளின் பங்களிப்போடு இந்த இணைய அகராதி வளர்ந்து வருகிறது. புதிய சொற்களை யார்…
-
- 0 replies
- 644 views
-
-
மயிலிட்டி பேச்சியம்மன் ஆலய புனருத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு November 25, 2020 மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனருத்தாபன பணிகளை தொடர்வதற்கு தேவையான ஏற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். ஆலய நிர்வாக சபையினர் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கையினை ஆராயந்த ஆராயந்த கடற்றொழில் அமைச்சர், சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி குறித்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்தவகையில், சுமார் முப்பது வருடங்களின் பின்னர் மீள்குடியேற்றப்பட்ட மயிலிட்டி மக்கள் தமது பிரதேசத்தில் சிறிய தற்காலிக கொட்டகையில் அமைந்திருந்த பேச்சியம்மன் ஆலயத்தின் புனருத்தாபனம் செ…
-
- 0 replies
- 305 views
-
-
கடந்த இரண்டு வருடமாக நடைபெற்று வந்த எந்திரன் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்தது. இதை எந்திரன் படக்குழு ஒரு விழாவாக கொண்டடியது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்,நடிகை ஐஸ்வர்யாராய்,இயக்குனர் ஷங்கர்,ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு மற்றும் முன்னனியினர் கலந்து கொண்டன்ர். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந் கேக் வெட்டினார். இது தொடர்பான படங்கள் கீழே இணைக்கப் பட்டுள்ளது. நன்றி: http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4246
-
- 0 replies
- 509 views
-
-
ஆப்பிள் தொழில்நுட்ப உலகில் கொண்டாடப்படும் பிரான்ட் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு இருக்க தான் செய்கின்றது என்றாலும் அதே அளவு குறைபாடுகளும் இருக்க தான் செய்கின்றது. ஐபோன்களில் எரிச்சலூட்டும் சில விஷயங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். விலை குறைந்த ஐபோன் 6 சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு முன் வெளியானவைகளில் பெரிய போன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்கேனர் புதிய ஐபோனில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் எனப்படும் கைரேகை ஸ்கேனரும் இருக்கின்றது, இதனால் இந்த போனை திருடபவன் உங்களது கை விரலையும் சேர்த்து எடுத்துகொள்ள வாய்ப்புகள் இருக்கின்றது. ஐபோன் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்களில் "Sent from my iPhone" என்ற தகவலும் இருக்கும், இது உங்கள…
-
- 0 replies
- 340 views
-
-
அமெரிக்காவின் மிசௌரியை சேர்ந்த பெண்மணி, மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறிய தனது மகளுடன் 49 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்தார். கடந்த 49 வருடங்களுக்கு முன் மிசௌரியில் உள்ள செயிண்ட் லூயிஸ் மருத்துவமனையில் செல்லா ஜாக்சன் பிரைஸ் என்ற பெண்மணி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரைசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். வேறொரு குடும்பம் பிரைசின் பெண் குழந்தையை தத்தெடுத்து சென்று வளர்த்து வந்தது. சில வருடங்களுக்கு பின், தான் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட குழந்தை என்று தெரிந்து கொண்ட பிரைசின் பெண் மெலானி டயானே கில்மோரே, தனது தாயை தேடியவாறு இருந்தார். மெலானிக்கு திருமணமும் ஆகி 2 குழந்தைகளுக்கு தாயா…
-
- 0 replies
- 357 views
-
-
இங்கிலாந்தில் உயிரை மாய்த்துக் கொண்ட இலங்கையரின் மரணத்துக்கு காரணம் நிர்வாண புகைப்படங்களாம்! 29 FEB, 2024 | 02:42 PM இங்கிலாந்தில் வசித்த 16 வயது இலங்கையர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் டினால் த அல்விஸ் என்ற 16 வயது இளைஞராவார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி அன்று உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இளைஞரது நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக கூறி அச்சுறுத்தி ஒருவர் கப்பம் கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் தொடர்பில் எந்தவித தகவல்களும் …
-
- 0 replies
- 398 views
- 1 follower
-
-
இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும். அதிக நீளம் என கருதி நம் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பயணித்து விடாதீர்கள். தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது... இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர் "இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்" என்று நேதாஜி அறைக்கூவல் விடுத்தார். அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாய…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிது காலம் ஆகிவிட்டது ஆண்டுகள் மூன்று கடந்தது அன்று நானும் அழுதேன். என் இனமும் அழுததே நம் இனத்தில் துலைத்த உயிர்கள் பல ஆயிரம் இது யாருக்கு தான் தெரியப்போகுது´ .உங்கலுக்கு புரியும்? யாருக்கு தெரிய வேண்டுமோ. அவர்களுக்கும் தெரியும். உலகமே வேடிக்கை பார்த்தது. யாருக்கு ஏன் என்றும் கேக்கவில்லை குற்றவாளிகளின் பெயரும் தெரியும் . பெயருக்கு செந்த காரர்களும் இவர்லோ? அமைதி காக்கும் உலகமே அமைதி ஆனதும் ஏன்? ஆயிரக்கணக்கில் வதையுண்டு மடித்தது முள்ளிவய்கலில். இவர்கள் இனவேறி யுத்தம் செய்யவில்லை மறக வாழ்வதற்காகவே போராடினார்கள். சித்தனைக்கு பல கேள்விகள். சித்தனை சிர் குளையுமே. உயிரின் விலை இடத்தை பொறுத்ததே? இனத்தை பொறுத்ததே? வாழ்கையின் பெறுமதியை யார் தான் த…
-
- 0 replies
- 428 views
-
-
வாலிபரின் . Tuesday, 29 April, 2008 02:45 PM . பாரிஸ், ஏப். 29: இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். இப்படித்தான் பிரான்ஸ் நாட்டில் வாலிபர் ஒருவர் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காரோட்டி பிடிபட்டிருக்கிறாராம். நெடுஞ்சாலை ஒன்றில் அவர் அதிவேகமாக காரோட்டி சென்ற குற்றத்திற்காக கைது செய்யப் பட்டிருக்கிறாராம்.. . அது மட்டுமல்ல அவர் காரோட்டும் போது தனது செல்போனில் வீடியோ படத்தை பார்த்துக் கொண்டிருந்தாராம். அவரது காரை மடக்கி பிடித்த காவலர், அவர் செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டி ருப்பதை பார்த்து திடுக்கிட்டு போய் விட்டாராம். தாறுமாறான வேகத்தில் காரோட்டுவதே தவறு. அப்படி யிருக்க, வீடியோ பார்த்துக் கொண்டு அதிவேகமாக காரோட்டினால் அது மாபெரும் தவறுதானே. அதனால…
-
- 0 replies
- 1.6k views
-
-
[size=4][/size] [size=4]அமெரிக்க சர்ச்சில், கறுப்பின ஜோடியினர் திருமணம் செய்ய மறுப்புத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தை சேர்ந்தவர்கள் சார்லஸ், டி ஆன்ட்ரீயா. கறுப்பினத்தை சேர்ந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.[/size] [size=4]இதற்காக இந்த மாகாணத்தின் கிறிஸ்டல் ஸ்பிரிங் பகுதியில் உள்ள, சர்ச்சின் பாதிரியாரை தொடர்பு கொண்டனர். "இந்த சர்ச், 1883ல் கட்டப்பட்டது முதற்கொண்டு, கறுப்பினத்தவருக்கு திருமணம் செய்வித்தது கிடையாது. எனவே, உங்களுக்கும் திருமண சடங்கை இங்கே செய்ய முடியாது' என, பாதிரியார் ஸ்டேன் வெதர்போர்டு தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இந்த சர்ச்சில் சார்லஸ் உறுப்பினராக இல்லை. ஆனால், ஆன்ட்ரியாவின் தந்தை …
-
- 0 replies
- 2k views
-
-
வெளிநாடுகளில் வேலை பார்த்து, சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்புவர்களில், இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். கடந்த ஆண்டில், 38 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர். உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த, 2012ம் ஆண்டில், பல வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் தாய்நாடான இந்தியாவுக்கு, 38 ஆயிரம் கோடி ரூபாயை அனுப்பியுள்ளனர். இவ்வளவு அதிக தொகையை, வேறு எந்த நாட்டினரும், தங்கள் நாட்டிற்கு அனுப்பாததால், அதிக பணத்தை பெற்ற நாடு என்ற ரீதியில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை சீனா பெற்றுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்கள், 36 ஆயிரம் கோடி ரூபாயை சீனாவுக்கு அனுப்பியுள்ளனர். அதற்கு அடுத்த இடங்க…
-
- 0 replies
- 421 views
-
-
யாழில்... ஓடுகளை திருடி, விற்ற... குற்றச்சாட்டில் கைதானவருக்கு விளக்கமறியல்! யாழில் ஓடுகளை திருடி விற்பனை செய்து வந்த நபரை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 30 வயதான சந்தேகநபர் நகர்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து ஓடுகளை திருடி விற்பனை செய்துவந்த. நிலையிலேயே குறித்த நபர் யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியபோதே நீதவான் விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டார். https://athavannews.com/2022/1271422
-
- 0 replies
- 176 views
-