Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. யாழில். ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழப்பு! வீதியோரமாக இருந்த ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சரசாலை பகுதியை சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் கடந்த 16ஆம் திகதி வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில், தனிப்பட்ட தேவைக்காக வெளியில் சென்ற சமயம், கொடிகாமம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த சீமெந்தினால் ஆனா உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் முதியவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்திருந்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்ப…

  2. யாழில். உயிர்கொல்லி தேள்கள்: உயிரி ஆயுதமாக புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் உயிர் கொல்லி தேள்கள் காணப்படுவதாக சிங்கள தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் எப்போது கண்டிராத வெள்ளை நிறத்திலான மிகவும் கொடி விஷத்தைக் கொண்ட தேள் வகையொன்று யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த தேள் கொட்டினால் மரணம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இந்தத் தேள் கொட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்த தேள் வகை இந்தியாவின் மஹாராஸ்டிரா மாநிலத்தில் அதிகமாக காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ…

  3. யாழில். காவற்துறையினரிடம் இருந்து தப்பிக்க மணலை கொட்டிய கடத்தல்காரர்கள்! adminNovember 6, 2023 டிப்பரில் மணலை கடத்தியவர்கள் காவற்துறையினரை கண்டுவிட்டு தப்பித்தோடியபோது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றதால் வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை (06.11.23) அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனத்தில் மணல் கடத்தி செல்லப்பட்ட போது, வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர் வாகனத்தை மறித்துள்ளனர். அதன் போது, மணலை கடத்தி…

  4. யாழில். சுவிஸ் நாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து 12 பவுண் நகைகள் திருட்டு! யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டில் இருந்த 12 பவுண் தங்க நகைகளை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர். சுவிஸ் நாட்டில் இருந்து வந்த குடும்பம் ஒன்று உரும்பிராய் கிழக்கு பகுதியில் வீடொன்றில் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆலயம் ஒன்றுக்கு சென்று இருந்த வேளை , வீட்டின் கதவுகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 12 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். https://athavannews.com/2022/1302151

  5. யாழில். நடமாடும் கஞ்சா வியாபாரி கைது! யாழ்.நகரில் நடமாடி கஞ்சா பொதிகளை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர், சிறிய சிறிய பொதிகளாக, பொதி செய்து, நபர் ஒருவர் யாழ்.நகரில் நடமாடி விற்பனை செய்து வருவதாக, இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன், கஞ்சா பைக்கட்டுக்களையும் மீட்டுள்ளனர். சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் https://athavannews.com/2022/1266360

  6. யாழில். நண்பன் வீட்டுக்கு சென்ற நிலையில்... உயிரிழந்தவர், போதை ஊசியாலையே உயிரிழந்தார்! நண்பன் வீட்டுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவர், ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றியமையால் தான் உயிரிழந்தார் என உடல் கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கோப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்து உயிரிழந்தார் என பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட உடல் கூற்று பரிசோதனையின் போது , கையில் ஊசி மூலம் போதை பொருளை செலுத…

  7. Published By: DIGITAL DESK 3 17 NOV, 2023 | 12:27 PM யாழ்ப்பாணத்தில் பிட்டு சாப்பிடும்போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டில் பிட்டு சாப்பிட்ட போது, அது புரைக்கேறி உள்ளது. அதனை தொடர்ந்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறியபோது, வீட்டார் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர். சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்ததை அடுத்து, இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, இளைஞன் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். அ…

  8. யாழில். பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் உயிரிழப்பு யாழில், பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். புலோப்பளையை சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் என்ற 26 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் மிதி பலகையில் நின்றவாறு பயணித்துள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக கரந்தாய் பகுதியில் வைத்து அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அ…

  9. யாழில். பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த இருவர் கைது! யாழில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது” பன்னாலை பகுதியில் இயங்கும் உணவு உற்பத்தி மையம் ஒன்றிற்கு சோதனை நடவடிக்கைக்காக நேற்றைய தினம் இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் சென்றுள்ளனர். அதன்போது உற்பத்தி நிலையம் உரிய அனுமதிகள் பெறாது இயங்கி வந்ததமையும், டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்தமையும் சுகாதார பரிசோதகர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய போது சுகாதார பரிசோதகர்களுக்கும் அங்கு பணியாற்றிவரும் ஊழியர்களுக்கும் இடையே வாய…

  10. யாழில். பொலிஸ் அதிகாரியின் வீட்டில் கொள்ளை: ஒருவர் கைது! யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டினுள் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நவாலி பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டினுள் கடந்த 12ஆம் திகதி உட்புகுந்த திருடர்கள் ஆறரை பவுண் நகை மற்றும் 29ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவரை கடந்த திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்…

  11. Published By: DIGITAL DESK 3 31 AUG, 2023 | 12:38 PM தனது மனைவியை வாள் முனையில் கடத்தி சென்ற கணவனுக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், குடத்தனை பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மனைவி கணவனை விட்டு, பிரிந்து குடத்தனையில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில், மனைவி தங்கி இருந்த குடத்தனை வீட்டுக்கு வாளுடன் சென்ற கணவன் மனைவியை வாள் முனையில் கடத்தி சென்றுள்ளார். இது தொடர்பில் கடத்தப்பட்ட பெண்ணின் தாயார் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முற…

  12. Published By: DIGITAL DESK 3 14 DEC, 2023 | 03:31 PM யாழ்ப்பாணத்தில், நேற்று புதன்கிழமை (13) இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு , கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பொன்னாலை மேற்கு சுழிபுரத்தை சேர்ந்த இரட்ணம் அருளானந்தம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார். அதேவேளை பலாலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்த முதியவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு, த…

  13. யாழில். முதியவர் படுகொலை – இருவருக்கு மரண தண்டனை. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ் . மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் ,இன்றைய தினம் வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது. தீர்ப்புக்காக வழக்கு மன்றில் நீதிபதி டி.எஸ் சூசைதாஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிரிகளான இருவரையும் மன்று நியாமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்ற…

  14. யாழில். வாகன உதிரிபாக விற்பனை நிலையத்திற்கு தீ வைத்த வன்முறை கும்பல்! வாகன உதிரிபாக விற்பனை நிலையம் ஒன்றின் கதவுகளை உடைத்து உட்புகுந்த வன்முறை கும்பல் அங்கிருந்த பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி விட்டு , தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட ஆறுகால்மடம் லோட்டஸ் வீதியில் உள்ள குறித்த விற்பனை நிலையத்தினுள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உட்புகுந்த வன்முறை கும்பலே விற்பனை நிலையத்தினுள் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவித்து தீ வைத்துள்ளது. சம்பவம் தொடர்பில் விற்பனை நிலைய உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavann…

  15. யாழில். விபத்தினை ஏற்படுத்தியவர் தற்கொலை! விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. கட்டுவான் மேற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் நேற்று முன்தினம் இரவு குறித்த நபர் பயணித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்தில் தனது முச்சக்கர வண்டியை கைவிட்டு விட்டு தப்பி சென்ற அந்நபர் மறுநாள் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்…

  16. யாழில்... 11 வயது மகளை, போதைப் பொருள் விற்பனையில்.. ஈடுபடுத்திய தாய்! தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது மகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் தாயாரின் பாதுகாப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். சிறுமி யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது…

  17. யாழில்... ஓடுகளை திருடி, விற்ற... குற்றச்சாட்டில் கைதானவருக்கு விளக்கமறியல்! யாழில் ஓடுகளை திருடி விற்பனை செய்து வந்த நபரை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 30 வயதான சந்தேகநபர் நகர்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து ஓடுகளை திருடி விற்பனை செய்துவந்த. நிலையிலேயே குறித்த நபர் யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியபோதே நீதவான் விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டார். https://athavannews.com/2022/1271422

  18. யாழில்... கொரோனா தொற்றுக்கு, உள்ளான பெண் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தார்! யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில், தாயும் சேய்களும் நலமாக வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார். இந்த நிலையில் தாய்க்கு தொடர்ந்து வைத்தியர்களின் விசேட கண்காணிப்புடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அதேநேரம், பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் தாய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ள நிலையில், நேற்றைய தினம் தனது இரட்டை குழந்தைகளுடன் அவர் வீடு தி…

  19. தனக்கு தானே, தீ மூட்டிக்கொண்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு - யாழில் சம்பவம் தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரம் ரவிச்சந்திரம் (வயது 48) என்ற 10 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை குறித்த நபர் போதையில் அவரது வீட்டுக்கு அருகிலுள்ள தனது சகோதரன் வீட்டுக்கு சென்று, சகோதரனுடன் முரண்பட்டு அவரை தாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்கு சென்றுள்ளார். இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்து…

  20. யாழில்... பேருந்து சாரதியின், மூக்கை வெட்டிய நபர்! யாழில் தனியார் பேருந்தை இடைமறித்த நபரொருவர் சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வீதியில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார். அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்த…

  21. யாழில்... போதைப் பொருள் பயன்படுத்திய, இரண்டு பெண்கள் கைது! யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் மறைந்திருந்து போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை இரவு பெண்கள் போதைப்பொருளை நுகர்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் 2…

  22. யாழில்... முகநூல் ஊடாக மிரட்டி, கப்பம் பெற்ற நபர் கைது! குடும்பத்தையே கொலை செய்வோம் என முகநூல் ஊடாக மாணவனுக்கு மிரட்டல் விடுத்து , நகைகள் மற்றும் பெரும் தொகை பணத்தினை கப்பமாக பெற்று வந்த நபர் ஒருவரை நேற்று வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவனுடன் , போலி முகநூல் ஊடாக அறிமுகமான நபரொருவர் , மாணவனின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தையே கொலை செய்ய போவதாக முகநூல் ஊடாக மிரட்டல் விடுத்து கப்பம் கோரியுள்ளார். அதற்கு மாணவன் கப்பம் செலுத்த தயாராகியுள்ளார். அதற்கு அந்நபர் பணத்தினை வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள இடம் ஒன்றினை குறிப்பிட்டு , அங்கு பணத்தினை வைத்து விட்டு …

  23. யாழில்... ரயிலில் மோதி, இராணுவ வீரர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற இராணுவ அதிகாரி ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியே அவர் இவ்வாறு உயிரிழந்தார். சாவகச்சேரி தம்புதோட்ட இராணுவ முகாமை சேர்ந்த ஏழாவது விஜயபாகு ரெஜிமென்டில் கடமையாற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோப்ரல் டபுள்யு.எம்.எஸ் சமன் குமார (வயது 37) என்பவரே உயிரிழந்தவராவார். https://athavannews.com/2022/1277461

  24. யாழில்... விரிவுரையாளரின் வீடு உடைத்து, ஒரு கோடி ரூபாய் பெறுமதியான... நகைகள் கொள்ளை!! யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. விரிவுரையாளரது குடும்பம் அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர், வீட்டில் அவர்கள் இல்லாத நேரத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளது என பொலிஸார்…

  25. யாழில்... வீடு புகுந்து, பெட்ரோல் திருட்டு! யாழில் வீடு புகுந்த திருட்டுக்கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (புதன்கிழமை) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டார் நேற்று காலை வீட்டில் இருந்த துவிச்சக்கர வண்டியை காணவில்லை என தேடிய போதே , மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டு உள்ளமையையும் கண்டறிந்தனர். அதனை அடுத்து வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்பு கமராவில் பரிசோதித்த போது , வீட்டினுள் நுழைந்த திருடன் துவிச்சக்கர வண்டியையும், மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலையும் தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.