செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
வாடகை காரினை 65 இலட்சத்திற்கு ஈடுவைத்த மூவர் கைது April 3, 2023 வாடகை காரை 65 இலட்ச ரூபாய்க்கு ஈடு வைத்த குற்றச்சாட்டில் மூவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது , யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நபர் ஒருவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூவர் சென்று கார் ஒன்றினை வாடகைக்கு பெற்று சென்றுள்ளனர். அதற்காக ஒரு இலட்ச ரூபாய் முற்பணமும் வழங்கியுள்ளனர். காரினை பெற்று சென்றவர்கள் சில தினங்களில் காரில் இருந்த GPS கருவியினை அகற்றியுள்ளனர். அது காரினை வாடகைக்கு கொடுத்த நபருக்கு தெரியவந்ததை அடுத்து வாடகைக்கு காரினை பெற்றவர்களுக்கு தொ…
-
- 0 replies
- 237 views
-
-
சிறப்புக் கட்டுரை: தமிழர்களே! தமிழர்களே! ‘தமிழ் வருஷப் பிறப்பு’ தமிழர்களே! மின்னம்பலம்2022-04-10 - எஸ்.வி.ராஜதுரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த ஆ.சிங்காரவேலு முதலியாரால் 1890ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கப்பட்ட 'முதல் தமிழ் கலைக்களஞ்சியத்திற்கு' பச்சையப்பன் அறக்கட்டளையின் கல்வி நிறுவனப் பிரிவின் அறங்காவலராக இருந்த வ.கிருஷ்ணமாச்சாரி, அதிக செலவாகுமென்று உதவி செய்ய மறுத்ததால், நிதியுதவி கேட்டுப் பலரிடம் விண்ணப்பித்தும் பலனின்றிப் போன நிலையில் மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்த பாண்டித்துரை தேவர் முழுச்செலவையும் ஏற்றுக்கொண்டதால் 1050 பக்கங்கள் கொண்ட 'அபிதான சிந்தாமணி’ (Abithana Chintamani: The Encyclopedia of Tamil Literature) 1910இல் வெ…
-
- 0 replies
- 237 views
-
-
செல்லப் பிராணிகள் இறக்குமதிக்கு தடை விதித்தது உக்ரைன்! சீனாவிலிருந்து செல்லப்பிராணிகளை இறக்குமதி செய்வதற்கு உக்ரைன் அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஹொங் கொங்கில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘கொரோனா நோய்க்கிருமியை உக்ரைனுக்கு பரப்புவதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க, உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான மாநில சேவை, சீன மக்கள் குடியரசில் இருந்து 33 ஆவது பிரிவின் கீழ் செல்லப்பிராணிகளை (நாய்கள், பூனைகள் போன்றவை) மற்றும் மாமிசங்களை இறக்குமதி செய்வதை உக்…
-
- 0 replies
- 237 views
-
-
போலிக் கச்சேரி காரியாலயம் சுற்றிவளைப்பு; மூவர் கைது மாத்தறை – கொப்பராவத்த பிரதேசத்தில் வீடொன்றிற்குள் நடத்திச் செல்லப்பட்ட போலியான கச்சேரி காரியாலயம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் போலி உத்தியோகபூர்வ முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பாடசாலையொன்றின் அதிபரின் உத்தியோகபூர்வ முத்திரைகள், பல்வேறு அரச நிறுவனங்களில் உத்தியோகபூர்வ கடிதங்கள் மற்றும் ஏனைய பல அரச நிறுவனங்களின் போலி உத்தியோகபூர்வ முத்திரைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தறை – கொப்பராவத்த, திக்வெல்ல தொடம்பஹல மற்றும் மாத்தறை – ராஹூல ஆகிய…
-
- 0 replies
- 237 views
-
-
முகநூலில் சில படங்கள் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பேஸ்புக்கில் பல அர்த்தங்கள் கூறும் படங்கள் உலாவுகின்றன. அவற்றிலிருந்து சில...! http://www.jaffnamuslim.com
-
- 0 replies
- 236 views
-
-
மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு 110 வருட கடூழிய சிறை தனது 11 வயது மகளை கடும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (05) தீர்ப்பளித்துள்ளது. அதோடு 06 இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் 8 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாய் வெளிநாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் பல சந்தர்ப்பங்களில் தனது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு தந்தை உட்படுத்தியுள்ளதாக உரகஸ்மஹந்திய பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருந்தபோது, தனது தந்தை குடித்துவிட்டு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அயலவர் ஒருவரிடம் சிறுமி கூற…
-
- 0 replies
- 236 views
-
-
கிளிநொச்சியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பத்தர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை பதிவாகியுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி வைத்தியாலைக்கு அண்மித்த பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் தினமான நேற்ற வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த நபர் அதே பகுதியை சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2…
-
- 0 replies
- 236 views
-
-
கடந்த வியாழக்கிழமை முதல் மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானம் இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து ஏன் இன்னும் நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கேள்வி தொழிலாளர் உரிமைகளை மீறும் புதிய சட்டமூலத்தை மீண்டும் கொண்டு வர அரசாங்கம் திட்டம் – முன்னிலை சோஷலிசக் கட்சி குற்றச்சாட்டு தையிட்டி விகாரை விவகாரம்: காணி உரிமையை தடுக்கும் வகையில் திட்டமிட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
-
- 0 replies
- 236 views
-
-
பூமியில் இருந்து விரைவில் காணாமல் போகும் முதல் நாடாக தென் கொரியா மாறுமா?. அதற்கான காரணமாக சொல்லப்படுவது என்ன தெரியுமா?. ஒரு காலத்தில் அதன் விரைவான நவீனமயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக கொண்டாடப்பட்ட தென் கொரியா, தற்போது கடுமையான மக்கள் நெருக்கடியை எதிர்கொள்கிறது. நாட்டின் பிறப்பு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் அதன் மக்கள் தொகை மூன்றில் இரண்டு பங்காக சுருங்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை கருத்தில் கொள்ளாமல் விட்டால், இது பொருளாதாரத்தை சீர்குலைத்து, தென் கொரியாவின் சமூகத்தை மறுவடிவமைக்கும் என்று சொல்லப்படுகிறது. 1960-களில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு கொள்கையை அர…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
மின்னல் தாக்கிய நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு - (காணொளி இணைப்பு) இந்தோனேஷியா ஜகார்த்தாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றி வரும் 35 வயதான நபர் ஒருவர், மழை பெய்து கொண்டிருந்த போது கையில் குடையுடன் பயணித்த வேளை அவரை மின்னல் தாக்கியது. மழை பெய்து கொண்டிருந்த போது வெட்டவெளியான இடத்தில் கையில் குடையுடன் அவர் சென்றுள்ளார். இதன்போது, திடீரென அவரை மின்னல் தாக்கியதில் தீப்பொறிகள் வெளிவந்தன. இருப்பினும் அவர் அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த காட்சிகள் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து மயங்கி விழுந்த அவரை அவருடன் பணி புரிபவர்கள் விரைந்து சென்று முதலுதவி அளித்…
-
- 0 replies
- 236 views
-
-
உலகில் ஒருவரைப் போல மற்றொருவர் இருக்க என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெர்மனி கால்பந்து வீரர் மெசுட் ஓசில் மற்றும் ஃபெராரி அணியின் நிறுவனர் என்சோ ஃபெராரி 18 நவம்பர் 2022 ஆக்னஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவரை அணுகிய ஓர் ஆண் ஆக்னஸிற்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார். அந்த நபர் நினைக்கும் நபர் நாம் இல்லை என்று உணர ஆக்னஸிற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அதை அவர் தெளிவுபடுத்தியதும், ஆக்னஸை போன்று இருக்கும் ஒருவரை தனக்கு தெரியுமென அந்த நபர் கூறினார். தன்னைப் போன்று இருக்கும் எஸ்டர் என்ற பெயர் கொண்ட அந்த நபரை முதலில் ஃபேஸ்புக் வழியாக ஆக்…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
கர்பப்பை பிரச்சனை காரணமாக சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம்தவறுதலாக சிறுநீர் பையை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் ஒரு தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. சென்னை எண்ணூர் தாழாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். அவரின் மனைவி சித்ரா(45). இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சித்ராவிற்கு கடந்த சில வருடமாக வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது. இதையடுத்து திருப்போரூரை அடுத்த அம்மாபேட்டையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு மே மாதம் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு ஒரு மாதம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார் சித்ரா. அப்போது அவரது கர்பப்பையை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். …
-
- 0 replies
- 236 views
-
-
திருடப்பட்ட பொருட்களுடன் அயலவர் சிக்கினார் – யாழில் சம்பவம் யாழ். சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த வீடுகளில் திருடப்பட்ட 9 லட்சத்து 45 ஆயிரம் பெறுமதியான பொருள்களும் சந்தேக நபரின் வீட்டிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள வீதியில் இரண்டு வீடுகள் கனடா மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு சொந்தமானது. அவர்கள் ஆண்டு தோறும் வருகை தந்த அந்த வீடுகளில் தங்கியிருந்துவிட்டு குடியு…
-
- 0 replies
- 236 views
-
-
கொலைக்கு சாட்சியான கிளி! அமெரிக்க மாநிலமான மிஷிகனில் கொலை வழக்கு ஒன்றில் தனது கணவரை ஐந்து முறை சுட்ட பெண்மணிக்கு எதிராக கிளி ஒன்று சாட்சி கூறியுள்ளது. படத்தின் காப்புரிமைABC 2015ஆம் ஆண்டு `க்ளென்னா ட்யுரம்` என்ற பெண் தனது கணவர் மார்டினை தங்களது வளர்ப்பு கிளியின் முன் துப்பாக்கியால் சுட்டார். பின்பு அவர் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அந்த கிளி பின்னர் பாதிக்கப்பட்டவரின் குரலில் "சுடாதீர்கள்" என்று கத்தியதாக ட்யுரமின் முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார். சாம்பல் நிறம் கொண்ட அந்த ஆப்ரிக்க கிளியின் பெயர் `பட்`; வழக…
-
- 0 replies
- 235 views
-
-
வேறொரு இளைஞனுடன் நடனமாடிய மனைவியைப் படுகொலை செய்த கணவன் கைது! களுத்துறை மாவட்டத்தின் கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையைச் செய்த சந்தேகநபர் அப்பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், எனினும் சில நாட்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. களுத்துறையில் இசை நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு வந்திருந்த யுவதி, தான் பணியாற்றிய ஆடைத்தொழிற்சாலையின் இளைஞர் ஒருவருடன் நடனமாடியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 235 views
-
-
மலேசியா நாட்டில் உள்ள கேடா மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஜூல் ஷஹ்ரில் சைதீன் (15) இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில் இவரது வயிற்றுக்குள் இறந்துப்போன கரு இருப்பது கண்டறியப்பட்டது, அதாவது, இவரது தாய் கர்ப்பம் தரித்தபோது இரட்டை கருக்கள் உருவாகியுள்ளன,அதில், ஒரு கருவானது ஜூலின் தொப்புள் கொடி வழியாக அவரது வயிற்றுக்குள் சென்று தங்கிவிட்டுள்ளது.இதைஅறியாத அவரது தாயார், தனக்கு ஒரு குழந்தைதான் பிறந்துள்ளது என நினைத்து ஜூலுவை வளர்த்து வந்துள்ளார், இந்நிலையில், ஜூலு வயிற்றுக்கள் இருந்த கருவின் கை, கால்கள், தலைமுடி மற்றும் ஆண் இனப்பெருக்க உறுப்பு போன்றவை வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், முகத்தில…
-
- 0 replies
- 235 views
-
-
லண்டன்: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளனர். வீட்டில் பணிபுரிபவர்கள், அலுவலக மீட்டிங்கிற்கு அதிகளவில், 'வீடியோ கால்' பயன்படுத்துகின்றனர். தனது பணியாளர்களுடனான வீடியோ கால் மீட்டிங்கில், முதலாளி தெரியாமல் உருளைக்கிழங்கு போல தோற்றமளிக்கும், பில்டர் ஆப்சனை தொட்டுவிட்டார். இந்த ஆப்சனை எவ்வாறு மாற்ற வேண்டும் என அவரால், கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மீட்டிங் முழுவதும் உருளைக்கிழங்கு தோற்றத்திலே இருந்துள்ளார். பணியாளர்களால் இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியான சில மணி நேரங்களில், பல கோடி பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். https://www.…
-
- 0 replies
- 235 views
-
-
திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் அரசாங்கம் உறுதி வழங்கியது போன்று தமக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருமாறு கோரி திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம்(16) மேற்கொண்டனர். அரசாங்கம் நாட்டிலுள்ள ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ள நிலையில் புறகணிக்கப்பட்ட மேலும் பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இணைத்துக்கொள்வதாக கூறியும் இதுவரை தமக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லையெனவும் துரித கதியில் வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரியே திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதில் ஐம்பதிற்கு…
-
- 0 replies
- 234 views
-
-
பேஸ்புக்கில் வழங்கப்பட்ட போலியான நேரலை ; கோடிக்கணக்கான மக்கள் பார்த்த அவலம் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் அமெரிக்காவிலிருந்து இயங்கும் வைரல் என்ற பேஸ்புக் பக்கம் ஒன்று கோடிக்கணக்கான மக்களை ஒரு போலி வீடியோவை நேரலை என்று கூறி மக்களை பார்க்க வைத்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் அமெரிக்க வைரல் பேஸ்புக் பக்கமொன்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரு விண்வெளி வீரர்கள் இருப்பது போன்ற ஒரு நேரலை வீடியோவை வெளியிட்டது. குறித்த வீடியோவை உலக முழுவதும் கோடிக்கணக்கான பேர் பார்த்துள்ளதோடு, இலட்சக் கணக்கான பேர் லைக் செய்துள்ளனர். குறித்து வீடியோ சுமார் மூன்று மணிநேரம் வெளியிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 234 views
-
-
01 SEP, 2023 | 04:54 PM மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதூரில் திருடன் ஒருவன் அவனது பக்கத்து வீட்டில் திருட முற்பட்ட வேளை மரத்தில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். வியாழக்கிழமை (31) மாலை திருடன் வீட்டின் கூரையை உடைத்து திருடமுற்பட்ட வேளை, திருடனை கண்டு வீட்டில் உள்ளவர்கள் சத்தமிட்டுள்ளனர். இந்நிலையில், திருடன் அங்கிருந்து தப்பி ஓடுவதற்காக கூரையில் இருந்து அருகிலுள்ள மரத்தில் பாய்ந்து ஏறி ஒழித்துக் கொண்டான். திருடனை பிடிப்பதற்காக அயலவர்கள் ஒன்றிணைந்ததையடுத்து திருடன் அங்கிருந்து தப்பி ஓடுவதற்காக முயற்சித்தபோது கீழே வீழ்ந்து கால் இரண்டாக உடைந்துள்ளது. …
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இல்லினாயிஸ் மாநிலத்தின் சிகாகோ நகரில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த மர்ம வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது, நான் ஒபாமாவின் மகன். இன்றிரவு 11 மணிக்கு என்னை சந்திப்பதற்காக எனது தந்தை ஒபாமா இங்கு வரப் போகிறார் என்று பதில் அளித்தார். அவரது முதுகில் இருந்த பையை பார்த்து சந்தேகப்பட்ட போலீசார், உடனடியாக வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கும் சிறப்பு படையை வரவழைத்தனர். அந்த பையை பரிசோதித்தில் அபாயகரமான, ஆபத்து விளைவிக்கக்கூடிய எதுவும் அதில் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து, மார்க்கெஸ் ஹாஸல்(20) என்ற அந்த வாலிபரை போலீசார் கைது செய்து, சிகாகோ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். போலி வெடி…
-
- 0 replies
- 234 views
-
-
வெறுக்கப்படும் நாள் திங்கள்கிழமை – கின்னஸ் அமைப்பு அறிவிப்பு வார நாட்களில் அனைவருக்குமே பிடிக்காத நாள் திங்கள்கிழமை. வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல், பாடசாலை செல்லும் மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரும் திங்கள்கிழமையை வெறுக்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை அலுவலகம், பள்ளிகளுக்கு செல்வோரின் முகங்களில் ‘திங்கள்’ சோகத்தை துல்லியமாகப் பார்க்க முடியும். உலக மக்களின் இந்த சோகத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பும் பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு உலக சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் நிலையில், அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த திங்கள்கிழமை அன்று ‘திங்கள்’ சோகம் பகிரப்பட்டது. “வாரத்தின் மிக ம…
-
- 1 reply
- 234 views
-
-
கண் சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று சென்றிருந்தார். நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பிறகு வைத்தியரை அவர் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமைச்சராக இருந்தபோதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் நின்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர். கண் சிகிச்சைக்காக வரிசையில் காத்திருந்த அமைச்சர்
-
- 1 reply
- 233 views
- 1 follower
-
-
வாடகை செலுத்தாமையால் வீட்டிலிருந்து வெளியேறுமாறு கூறப்பட்டதால் 200 போத்தல்களில் சிறுநீரை அடைத்து வைத்துவிட்டுச் சென்ற குடியிருப்பாளர் அவுஸ்திரேலியாவிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு குடியிருந்த நபர், நீண்டகாலமாக வாடகை செலுத்தத் தவறியதால், அவரை அங்கிருந்து வெளியேறுமாறு வீட்டின் உரிமையாளர் உத்தரவிட்டபின், சிறுநீர் நிரப்பப்பட்ட 200 போத்தல்களை குடியிருப்பாளர் அங்கு வைத்துவிட்டுச் சென்றுள்ளார். மெல்போர்ன் நகரிலுள்ள வீடொன்றின் உரிமையாளருக்கே இந்த அதிர்ச்சி அனுபவம் ஏற்பட்டுள்ளது. இவ்வீட்டின் உரிமையாளரான ரொஹன் ஜேம்ஸ், 2013 ஒக்டோபரிலிருந்து இவ்வீட்டை நபர் ஒருவருக்கு வா…
-
- 0 replies
- 233 views
-
-
பட மூலாதாரம், Supplied கட்டுரை தகவல் அபூர்வா அமீன் பிபிசி குஜராத்தி 7 நவம்பர் 2025, 15:41 GMT புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சவர்குண்ட்லாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனித்துவமான மற்றும் அரிதான பிரச்னை ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது. சூரத்தை சேர்ந்த 66 வயதான கீதாபென்னுக்கு சில மாதங்களாக கண் இமைகளில் கடுமையான வலியும் அரிப்பும் இருந்தது. கண்கள் சிவந்திருந்தன, அவரால் தூங்கவும் முடியவில்லை. கண் மருத்துவரை அணுகியபோது, கண் இமைகளில் உயிருள்ள பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் ஒன்றிரண்டு அல்ல, மொத்தம் 250 பேன்கள் மற்றும் 85 ஈர்கள் இருந்துள்ளன. வெளிச்சம் பட்டால் பேன்கள் இருக்கும் இடத்தில் இருந்து…
-
- 1 reply
- 233 views
- 1 follower
-