Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஹாலிவுட் படங்களில் வருவதைப் போன்று, எதிரிகளை, ராணுவ வீரர்கள் பறந்து பறந்து தாக்க வல்ல ஆயுதங்களுடன் கூடிய கவச உடைப்பிரிவை சீனா ராணுவம் உருவாக்க உள்ளது. ஹாலிவுட் படமான "அயர்ன் மேன்" படத்தில் வரும் காட்சிகளைப் போன்று, ராணுவ வீரர்கள் திடீரென பறந்து பறந்து எதிரிகளை தாக்கவல்ல, ஆயுதம் தாங்கிய கவச உடைகளை வடிவமைக்க சீன ராணுவம் முடிவு செய்துள்ளது. எறிகுண்டுகள், துப்பாக்கிகள், குண்டுகளை அடுத்தடுத்து உமிழும் பிரத்யேக கருவிகள் கொண்டதாக, அந்த கவச உடையைத் தயாரிக்க சீன ராணுவம் உத்தேசித்துள்ளது. எதிரிகளை நோக்கி முன்னேறும் ராணுவ வீரர், திடீரென எதிரிகள் சூழ்ந்துவிட்டால், கண்ணிமைக்கும் நேரத்தில், மேலே பறந்து பறந்து தாக்கும் வகையில், இந்த பிரத்யேக கவச ஆடை வடிவமைக்கப்படுகிறது. இதையொட…

    • 0 replies
    • 248 views
  2. திருடப்பட்ட பொருட்களுடன் அயலவர் சிக்கினார் – யாழில் சம்பவம் யாழ். சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த வீடுகளில் திருடப்பட்ட 9 லட்சத்து 45 ஆயிரம் பெறுமதியான பொருள்களும் சந்தேக நபரின் வீட்டிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள வீதியில் இரண்டு வீடுகள் கனடா மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு சொந்தமானது. அவர்கள் ஆண்டு தோறும் வருகை தந்த அந்த வீடுகளில் தங்கியிருந்துவிட்டு குடியு…

  3. பளையில் பல்கலைக் கழக மாணவிக்கு நடந்தது என்ன..? June 25, 20159:46 am கிளிநொச்சி மாவட்டம் பளையில் கராந்தாய் எனும் இடத்தில் நேற்றுக் காலை (ஜூன் 24, 2015) பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் பயிலும் 24 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். பானுசா சிவப்பிரகாசு எனும் இந்த யுவதியின் பெயர், தொலைபேசி எண் என்பவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்டு ஒரு இளைஞன் இழிவு படுத்தியதே தற்கொலைக்கான காரணமென பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் அறிந்து பானுசாவின் தந்தை அந்த இளைஞனின் வீட்டுக்கு நியாயம் கேட்க சென்ற போது அந்த இளைஞனின் தந்தை தன்னை மிரட்டியனுப்பியதாக பானுசாவின் தந்தை தெரிவித்துள்ளார். http://www.jvpnews.com/srilanka/113796.html

    • 0 replies
    • 247 views
  4. புதுடில்லியில் மந்திரியின் மனைவியை கடித்த நாயை காவல்துறை கைது செய்ய இருக்கிறார்கள். புதுடில்லியின் அர்விந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் முன்னாள் சட்ட மந்திரியாக இருந்தவர் சோம்நாத் பார்தி. அவர் மீது, அவரின் மனைவி போலிஸில் புகார் தெரிவித்திருந்தார். அதில் "சோம்நாத் என்னை கொலை செய்வதற்கு இரண்டு முறை முயற்சி செய்தார். 2013ம் ஆண்டு நான் கர்ப்பமாக இருந்த போது, அவர் வளர்க்கும் “டான்” என்ற நாயை ஏவி விட்டு என்னை கடிக்க வைத்தார்" என்று புகார் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, டெல்லி போலிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். டெல்லி போலிசார் தன்னை கைது செய்யக் கூடாது என்று சோம்நாத் கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அந்த மனு நேற்று தள்ளு…

  5. சிகரட் புகைக்க வேண்டுமென பயணி அடம்பிடித்ததால் 38,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது 38,000 அடி உய­ரத்தில் பறந்­து­கொண்­டி­ருந்த விமா­னத்தில் பயணி ஒருவர் சிகரெட் புகைக்க வேண்டும் என அடம்­பி­டித்­ததால் அவ் ­ வி­மானம் திசை திருப்­பப்­பட்டு அவ­ச­ர­மாக தரை­யி­றக்­கப்­பட்ட சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளது. ஜேர்­ம­னியின் லுப்­தான்ஸா நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான இவ் ­வி­மானம் கடந்த ஞாயி­றன்று ஜேர்­ம­னியின் மூனிச் நக­ரி­லி­ருந்து கன­டாவின் வன்­கூவர் நகரை நேக்கி சென்று கொண்­டி­ருந்­தது. அப்­போது விமா­னத்­தி­லி­ருந்து பயணி ஒருவர் தனக்கு சிகரட் புகைக்க வேண்­டி­யுள்­ள­தாகக் கூறி­ய…

  6. பசுபிக் பெருங்கடலில் 95 நாட்களாக காணாமல் போன பெருவியன் மீனவர் மீட்பு! பசுபிக் பெருங்கடலில் 95 நாட்கள் காணாமல் போய், கரப்பான் பூச்சிகள், பறவைகள் மற்றும் கடல் ஆமைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்த பெருவியன் மீனவர் ஒருவர், தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி, தெற்கு பெருவியன் கடற்கரையில் உள்ள மார்கோனா என்ற நகரத்திலிருந்து மீன்பிடிப் பயணத்திற்காக மாக்ஸிமோ நாபா காஸ்ட்ரோ என்ற 61 வயதுடைய நபர் புறப்பட்டார். இரண்டு வார திட்டமிடப்பட்ட பயணத்திற்கான உணவை அவர் கொண்டு சென்றார். ஆனால், பத்து நாட்களுக்குப் பின்னர் புயல் காற்று அவரது படகை திசைதிருப்பியது. இதனால், அவர் பசுபிக் பெருங்கடலில் தத்தளித்ததுடன், காணாமல் போனார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் தேடுத…

    • 1 reply
    • 247 views
  7. TikTok பற்றிய ஒரு தனித்துவமான முடிவு TikTok செயலியை வைத்திருக்கும் சீன நிறுவனத்தை அமெரிக்க அரசாங்கம் எச்சரித்துள்ளது. சீன நிறுவனமான “பைட் டான்ஸ்” TikTok செயலியை வைத்துள்ளது. சீன நிறுவனம் TikTok செயலியை மற்றொரு சீன அல்லாத நிறுவனத்திற்கு விற்க வேண்டும், தவறினால் அமெரிக்காவில்TikTok தடை செய்யப்படும் என்று அமெரிக்க அரசாங்கம் கூறுகிறது. அமெரிக்கா அத்தகைய கோரிக்கையை விடுத்ததை TikTok செயலி உறுதிப்படுத்தியது. TikTok செயலியை பயன்படுத்தும் அமெரிக்கர்களின் தரவுகளை சீன நிறுவனம் வைத்திருப்பது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். https://thinakkural.lk/article/245101

  8. வட்டுக்கோட்டையில் வீடு உடைத்து கவரிங் நகைகளை திருடிய திருடர்கள்! யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீடொன்றினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த கவரிங் நகைகளை களவாடி சென்றுள்ளனர். வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் தமது தொழில் நிமிர்த்தம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற சமயம் வீட்டின் கதவினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் சல்லடை போட்டு தேடி வீட்டில் இருந்த ஒரு தொகை கவரிங் நகைகளை திருடி சென்றுள்ளனர். தமது வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தமையை அவதனித்து உள்ளே சென்று பார்த்த போது , தமது கவரிங் நகைகள் அனைத்தும் திருட்டு போயுள்ளமையை அறிந்துள்ளனர். வீடு உடைக்…

  9. கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு: மருமகள் பக்கம் நின்று ரூ.4 கோடி ஜீவனாம்சம் வாங்கி கொடுத்த மாமியார் - கோபத்தில் கொந்தளித்த மகன் கர்நாடகாவில் விவகாரத்து வழக்கு ஒன்றில் மாமியார் ஒருவர் மருமகளின் பக்கம் நின்று, தன் மகனிடம் இருந்து ஜீவனாம்சமாக ரூ. 4.85 கோடி வாங்கி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் கஷ்யப்பானவரின் மகன் தேவானந்த். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது சகோதரியின் மகள் ரம்யாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் 2012-ம் ஆண்டில் இருந்து தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரம்…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப்படம் கட்டுரை தகவல் கெல்லி என்ஜி பிபிசி செய்திகள் 7 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஒரு பெண்ணையும் அவரது மூன்று குழந்தைகளையும் தாக்கி விட்டு, செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட சிங்கம் தப்பியோடியது. அதனையடுத்து அந்த சிங்கத்தின் உரிமையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில், ஒரு சிங்கம் கான்கிரீட் சுவரைத் தாண்டி ஒரு பெண்ணைத் துரத்தியதையும், அங்கிருந்தவர்கள் பயந்து, பாதுகாப்புக்காக ஓடியதையும் சிசிடிவி காட்சிகள் காட்டின. அந்த சிங்கம் தாக்கியதில், அந்தப் பெண்ணுக்கும், ஐந்து மற்றும் ஏழு வயதுடைய அவரது குழந்தைகளுக்கும், கைகளிலும் முகங்களிலும் காயம் ஏற்பட்டத…

  11. சூடு பிடிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ‘நடனம்’! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ‘ஆட்டத்தை’ அடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ‘ஆட்டம்’ சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது. காணொளியில், சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, ஆங்கிலப் பாடல் ஒன்றை வாய்விட்டுப் பாடியபடியே, சக விருந்தினர்களுடன் ஆடும் காட்சி பதிவாகியுள்ளது. அந்தக் காட்சி இதோ, உங்களுக்காக: http://www.virakesari.lk/article/29722

  12. மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு 110 வருட கடூழிய சிறை தனது 11 வயது மகளை கடும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (05) தீர்ப்பளித்துள்ளது. அதோடு 06 இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் 8 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாய் வெளிநாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் பல சந்தர்ப்பங்களில் தனது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு தந்தை உட்படுத்தியுள்ளதாக உரகஸ்மஹந்திய பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருந்தபோது, தனது தந்தை குடித்துவிட்டு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அயலவர் ஒருவரிடம் சிறுமி கூற…

  13. கனகராசா சரவணன் மட்டக்களப்பில் விபச்சாரவிடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட, மட்டு மாநகரசபையின் முன்னாள் மேயர் சிவகீர்த்தா, 50 ஆயிரம் ரூபாயை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (17) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்னாள் அமைந்திருந்து முன்னாள் மாநகரசபை மேயரான சிவகீர்த்தாவின் வீட்டுடன் நடாத்திவந்த தங்குவிடுதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியை, கடந்த 2016ஆம் ஆண்டு பொலிசார் முற்றுகையிட்டிருந்தனர். இதன்போது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள், விடுதியை நடாத்திவந்த முன்னாள் மேயர் ஆ…

  14. உணவில் பல்லி – மட்டு. போதனா வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலைக்கு சீல்! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையை மூடி பொதுசுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்துள்ளனர். குறித்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய சாப்பாட்டில் பல்லி காணப்பட்டதையடுத்து, அவர் உடனடியாக வைத்தியசாலை பணிப்பாளருக்கு முறையிட்டுள்ளார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த சிற்றுண்டிச்சாலையை பரிசோதனை செய்த பின்னர் சிற்றுண்டிச்சாலையை நடாத்தி வருபவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) உணவு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்குதல் செய்தனர். இதனையடுத்து, 10 ஆயிரம் ரூபாய் அபதாரமாக செலுத்துமாறும் சிற்றுண்டிச்சாலையை மூடி சீல்வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான…

  15. வவுனியாவில் 2,85,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்! வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழமொன்று 2,85,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாளான நேற்று(14) மாம்பழத் திருவிழா நடைபெற்றது. இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழமொன்றே ஆலயத்தின் வளர்ச்சி நிதிக்காக இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டது. இந்நிலையில் பலத்த போட்டிக்கு மத்தியில் குறித்த மாம்பழத்தை உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ஒருவர் 2,85,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http:/…

  16. ஏடிஎம் எந்திரத்தில் சிக்கிக்கொண்ட நபர், காப்பாற்ற குறிப்பு அனுப்பிய வினோதம் படத்தின் காப்புரிமைKZTV Image captionவங்கிக்கு வரும் வாடிக்கையாளருக்கு குறிப்பு மூலம் தனது ஆபத்தை வெளிப்படுத்தினார் ஏடிஎம் எந்திரத்திற்குள் தவறுதலாக மாட்டிக்கொண்ட டெக்ஸாஸ் நபர் ஒருவர், பண விவரம் வழங்கும் தாளில் உதவி குறிப்பு எழுதி அனுப்பிய வினோதம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது வங்கி ஒன்றின் புதுப்பிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர் ஒருவர் தன்னுடைய செல்பேசியை காரிலேயே விட்டுச்சென்று, ஏடிஎம் எந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டார். புதன்கிழமையன்று கார்புஸ் கிறிஸ்டியில் இந்த மனிதர் சிக்கிக்கொண்ட ஏடிஎம் எந்திரத்தில் தொ…

  17. 08 APR, 2025 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் இடம்பெறும் நடவடிக்கைகள் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனினும் செவ்வாய்க்கிழமை (08) சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிற்பகல் 1.40 மணி அளவில், எதிர்க்கட்சி பக்கத்திலிருந்து உறுப்பினர் ஒருவர் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார். ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய நபர் யார்? என்ன? ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார் என்பது நேரடியாக ஒளிபரப்பபடவில்லை. எனினும், யாரோ கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் ஹேமாலி வீரசேகர, சபைக்கு ஒவ்வாத வார்த்தைகளை, பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இவ்வாறு சபையில் …

  18. வெசாக் தினத்தினை முன்னிட்டு... வவுனியா சிறையில் இருந்து மூவர் விடுதலை. அவர்களில் இருவர், மீண்டும்... சிறையில் அடைக்கப்பட்டனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் இன்று ( ஞாயிற்கிழமை ) விடுதலை செய்யப்பட்டனர். இன்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 244 சிறைகைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறுகுற்றங்களை புரிந்த மூன்று பேர் இன்று இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் . எனினும் https://athavannews.com/2022/1281931

  19. எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி பதவி, பிபிசி செய்தியாளர் “குழந்தைப் பருவத்திலேயே எங்களுக்கு நிச்சயம் செய்துவிடுவார்கள். அதன் பிறகு அந்த பெண்ணின் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் மாப்பிள்ளை வீட்டார் தான் எடுப்பார்கள். ஒருவேளை அந்த பெண்ணுக்கு இந்த உறவிலிருந்து வெளியில் வர வேண்டும் என்றால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும். என்னிடம் எனது கணவர் வீட்டார் ரூ. 18 லட்சம் கேட்டுள்ளனர்.” மத்திய பிரதேசத்திலுள்ள ராஜ்கர் மாவட்டத்தில் இருக்கும் கெளஷல்யா இவ்வாறு கூறுகிறார். இந்த நடைமுறை பல தலைமுறைகளாக அங்கு நடப்பதாகவும் இதை ‘ஜடா நாத்ரா’ என்று அழைப்பதாகவும் அவர் தெரிவித்தார். பகாரியா கிராமத்தை சேர்ந்த கெளஷல்யா, தனது இரண்டாம் வயதில் இந்த நாத்ரா வழக்கப்பட…

  20. முகநூலில் சில படங்கள் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பேஸ்புக்கில் பல அர்த்தங்கள் கூறும் படங்கள் உலாவுகின்றன. அவற்றிலிருந்து சில...! http://www.jaffnamuslim.com

  21. Published By: DIGITAL DESK 3 26 MAY, 2025 | 11:04 AM யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. சனிக்கிழமை (24) யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கே ஒரே சூழில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. 3 ஆண்குழந்தைகளையும் 2 பெண் குழந்தைகளையும் குறித்த தாயார் பிரசவித்துள்ளார். தாயும் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்களென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/215702

  22. அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் போல அரச அதிகாரிகளும் மாற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும், நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் சந்திப்பு இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகோந்தா ஆகியோருடன் தனித்தனி கலந்துரையாடல் ராஜபக்ச நிர்வாகத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய விழாவுடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை நில மீட்பு மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் கைது

  23. வாடகை காரினை 65 இலட்சத்திற்கு ஈடுவைத்த மூவர் கைது April 3, 2023 வாடகை காரை 65 இலட்ச ரூபாய்க்கு ஈடு வைத்த குற்றச்சாட்டில் மூவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது , யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நபர் ஒருவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூவர் சென்று கார் ஒன்றினை வாடகைக்கு பெற்று சென்றுள்ளனர். அதற்காக ஒரு இலட்ச ரூபாய் முற்பணமும் வழங்கியுள்ளனர். காரினை பெற்று சென்றவர்கள் சில தினங்களில் காரில் இருந்த GPS கருவியினை அகற்றியுள்ளனர். அது காரினை வாடகைக்கு கொடுத்த நபருக்கு தெரியவந்ததை அடுத்து வாடகைக்கு காரினை பெற்றவர்களுக்கு தொ…

  24. காதல் திருமணம் புரிந்தவர்களுக்கான பாராட்டு விழா சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''இன்றைக்கு ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார வளர்ச்சியின் காரணமாக கல்வி நிறுவனங்கள், பணியிடங்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாகப் பழகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஜாதி, மதம், இனம் என்ற பாகுபாடு, தடைகளைக் கடந்து காதல் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால் பழமைவாதிகளும், பிற்போக்கு சக்திகளும், ஜாதிய, மதவாத சக்திகளும் இத்தகைய திருமணங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். இதனால் கெளரவக் கொலைகளும், பல்வேறு இழிவுபடு…

  25. 20 Oct, 2025 | 05:02 PM தங்காலை துறைமுகத்தில் இருந்த ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த ஐந்து நாய்களில் இரண்டு நாய்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தங்காலை துறைமுகத்தில் கடந்த 14ஆம் திகதி கடலில் மிதந்த 51 பொதிகளில் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பொதிகள் கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்த நீரை குடித்த ஐந்து நாய்கள் சுயநினைவின்றி ஒரே இடத்தில் சுற்றித்திரிந்த நிலையில் தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள் அவற்றுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். எவ்வாறிருப்பினும் அவற்றில் இரண்டு நாய்கள் நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. ஏனைய நாய்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.