Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. படகுமூலம் அவுஸ்ரேலியாவிற்கு செல்வதற்காக தமிழகம் தூத்துக்குடி பகுதியில் தங்கி இருந்த ஈழத்தமிழ் அகதிகள் 60பேர் கைது! திருச்சி ராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள ஈழத்தமிழ் அகதி முகாமில் வசித்து வந்த 25 அகதி குடும்பத்தை சேர்ந்த சுமார் 60 பேர் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை கோவில் ‌தொடர்ந்து இரு தினங்களாக தங்கியிருப்பதாக தமிழக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் எட்டையபுரம் தாசில்தார் அம்புரோஸ் மேரி ஈழத்தமிழ் அகதிகளிடம் விசாரணை நடத்தினார். தப்பி செல்ல முயன்றவர்களில் ஆண்கள் 21 பேர் பெண்கள் 19 சிறுவர்கள் 7 சிறுமியர்கள் 8 பேர் அடங்குவர். இதில் அகதிகள் குழுவை‌ சேர்ந்த ஐந்து பேர் காவல்துறை விசாரணையில் தப்ப…

  2. பாலியல் குற்றவாளி என சந்தேகித்து தவறான நபரை தாக்கி கொலைசெய்த 16 வயது இளைஞன் கைது! கென்ட் நகரில் உள்ள கடல் பகுதியில் (Alexander Cashford) அலெக்சாண்டர் காஷ்ஃபோர்ட் என்ற 49 வயது நபர், மூன்று பதின்ம வயது இளைஞர்களால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதேவேளை, இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் ஒரு குழந்தை பாலியல் குற்றவாளி என்று தவறாகக் கருதி, இளைஞர்கள் அவரை ஒரு போலிப் பெயரில் குறுஞ்செய்திகள் மூலம் கடற்கரைக்கு வரவழைத்துள்ளனர். அங்கு அவரைத் துரத்திச் சென்று போத்தல்கள் மற்றும் கற்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியதில் அவருக்குத் தலையில் பலத்த காயங்களும் நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்தச் சம்பவத்தை ஒரு சிறுமி காணொளியாக பதிவு செய்ததோடு, தாக்குதலில் …

  3. 160 கி.மீ. தூரம் காரை செலுத்திச் சென்ற 12 வயது சிறுவன் 2016-09-15 12:21:55 12 வய­தான சிறுவன் ஒருவன் சுமார் 160 கிலோ­மீற்றர் தூரம் காரை செலுத்திச் சென்ற சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளது. ஜேர்­ம­னியின் லிம்­பபாச் ஃப்ரோஹ்னோ ( Limbach-Frohnau ) நகரில் வசிக்கும் இச்­ சி­று­வ­னையும் 13 வய­தான அவனின் நண்­ப­னையும் காண­வில்லை என பொலி­ஸா­ரிடம் இச்­ சி­று­வனின் பெற்றோர் முறைப்­பாடு செய்­தி­ருந்­தனர். அதன்பின் மேற்­கொண்ட விசா­ர­ணை­யின்­போது, தனது தாத்தா, பாட்­டியின் வீட்டை அச்­ சி­று­வனும் அவனின் நண்­பனும் சென்­ற­டைந்­தமை தெரி­ய­வந்­தது. 12 வய­தான இச் ­சி­றுவன் ஒரு­வ­ரி­டமும் கூறாமல் தன…

  4. யாழ்ப்பாணம்- அல்வாய் பகுதியில் வீடுகள் தீக்கிரை- வெட்டுக்குமார் கைது! யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த “வெட்டுகுமார்” என்பவரை கைது செய்த பொலிஸார் தலைமறைவாகியுள்ள ஏனையோரை தேடி வருகின்றனர். கடந்த 2ஆம் திகதி மது போதையில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் நுழைந்த வெட்டுக்குமாரும் அவரது கூட்டாளிகளும் இணைந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டமையால், 6 குடும்பங்கள் வீடுகளில்…

  5. உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் என வர்ணிக்கப்படும் மெக்ஸிகோவைச் சேர்ந்த ஜோகின் எல் சபோ கூஸ்மன் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். 56 வதான ஜோகின் கூஸ்மன் கடந்த 13 வருடங்களாக கைது செய்யப்படுவதிலிருந்து தப்பி வந்தவர். இதனால் ஏறுத்தாழ ஒரு மர்ம நபராக அவர் கருதப்பட்டார். அமெரிக்க கண்டத்தின் பல நாடுகளில் ஹெரோயின், கனபீஸ், கொக்கேய்ன் உட்பட பல்வேறு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஜோகின் கஸ்மன், பலநூறு கோடி டொலர்களை சம்பாதித்தவர். கூஸ்மன் தலைமையிலான போதைப்பொருள் கடத்தல் குழுவுக்குக்கும் அவரின் போட்டியாளர்களுக்கும் இடையிலான மோதல்களால் மெக்ஸிகோ வீதிகளில் தலையற்ற மனித சடலங்கள் காணப்படுவது வழக…

  6. சொர்க்கத்தை நோக்கிய பாதையில் திருமணம் செய்தால் என்ன என்ற யோசனை தமிழ்நாட்டில் ஒரு ஜோடிக்கு வர, தங்கள் திருமணத்தின் ஒரு பகுதி சடங்கை அவர்கள் ஹாட் ஏர் பலூன் என்ற உஷ்ணக் காற்று அடைக்கப்பட்ட பலூனில் பறந்து செய்திருக்கிறார்கள். விநோத முறைகளில் திருமண வைபவத்தை நடத்தி அதனை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனவா? இது போன்ற திருமணம் மற்றும் பிற சமூக வைபவங்களை நடத்த ஏற்பாடு செய்யும் ஐஸ் இவெண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் மேலாளர் அருண் செல்வராஜன் தமிழோசைக்கு அளித்த பேட்டியை நேயர்கள் இங்கு கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/india/2014/04/140428_baloonwedding.shtml

  7. பதின்மூன்று கோடி இருபத்திரண்டு லட்ச ரூபா பெறுமதியான ஒன் மில்லியன் டாலர் நோட்டு அறுபது லட்ச ரூபாவுக்கு கொழும்பிலும். காத்தான்குடியிலும். கொழும்பில் பெட்டா. கதிரேசன் வீதி, செட்டியார் தெரு, தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு முன் கோள் பேஸ் திடல், மெரைன் ரைவ். பம்பலப்பிட்டி மெஜஸ்ரிக் சிட்டி என கிட்டத்தட்ட ஒரு 500 பேர். ஒவ்வொருவருடனும் ஒரு மூன்று நான்கு பேர் அனைவரும் காத்தான் குடி. திருகோணமலை. வவுனியா. கண்டி. அக்குறணை. காலி என படித்தவர்கள். ரொம்பவும் படித்தவர்கள். வியாபாரம் செய்து உடனடியாக பணம் உழைக்க வேண்டும் என்ற அவாவில் துடிக்கும் துடிப்பான இளைஞர்கள். மற்றும் பாமரர்கள் என ஒரு பட்டாளம். யார் இவர்கள் ??? இவர்கள் ஒரு மில்லியன் டொலரை வைத்துக்கொண்டு விற்பதற்காக கொழும்பு வந்தவர்கள். இ…

  8. அமெரிக்காவில், தினமும், இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் போலீசாரால் கொல்லப்படுவதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை வெளியிட்ட விவரம்: இந்தாண்டு, அமெரிக்க போலீசாரால், 385 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு நாளைக்கு, இரண்டுக்கு மேற்பட்டோர், போலீசாரால் உயிரிழக்கின்றனர். இது, கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்க அரசு வெளியிட்ட இறப்பு விகிதத்தை விட, பல மடங்கு அதிகம். அமெரிக்காவில், மாகாண அரசுகள், போலீசாரால் உயிரிழப்போர் குறித்த புள்ளி விவரங்களை, தேசிய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. விருப்பத்தின் பேரில் தரலாம் என்பதால், தேசிய அரசிடம், மாகாண அளவில் போலீசாரால் கொல்லப்பட்டோர் குறித்த விவரங் கள் சரிவர இல்லை. அமெரிக்க போலீசா…

    • 0 replies
    • 260 views
  9. தமிழ்த் தேசிய தளத்தின் கள நிலமை, அமைவிட பிராந்திய நிலமை, நாடுகளது நலன்சார் நிலமை குறித்த புரிந்துணர்வுக் குறைபாட்டுடனேயே பலர் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசி வருகின்றார்கள். எழுதியும் வருகின்றார்கள். விடுதலைப் புலிகளது போர்க் களம் மௌனிக்க வைக்கப்பட்டதன் பின்னர், விடுதலைப் புலிகளது வெற்றிக்குப் பின்னே அணி வகுத்த பலரும், இப்போது சர்வதேச அரசியல் குறித்து சோதிடம் சொல்லும் ஆசான்களாக மாற்றமெடுத்து வருகின்றனர். தமக்குத் தெரிந்த ஒற்றைப் பாதையிலேயே தமிழீழத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கியுள்ளர்கள். சிங்கள தேசத்தை அனுசரித்துப் போவதன் மூலம் ஈழத் தமிழர் நலனைப் பேணுவது என்று ஒரு சாராரும், இந்தியாவைத் தழுவுவதன் மூலம் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கலாம் என்று ஒரு ச…

  10. பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் கார் விபத்தில் பலியான தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட அதே போஸ்களில் மகளுடன் புகைப்படம் எடுத்து அனைவரின் மனதையும் தொட்டுவிட்டார். பிரேசிலைச் சேர்ந்தவர் ரபேல் டெல் கோல். பிளாக்கரான(blogger) அவரின் மனைவி கடந்த 2013ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் பலியானார். அவர்களுக்கு ரைசின்ஹா(4) என்ற மகள் உள்ளார். 27 வயதில் பலியான தனது மனைவியை பிரிந்த ரபேல் தனது வாழ்வில் அனைத்தும் இருந்தும் இல்லாதது போன்று உணர்ந்தார்.அவருக்கு தனது மகளை பார்க்கையில் மனைவியின் ஞாபகம் வந்தது. திடீர் என்று ஒரு நாள் மகளை பார்த்தபோது தனது மனைவியுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்ட அந்த தருணத்தை மீண்டும் வரவழைக்க விரும்பினார். இதையடுத்து அவர் புகைப்படக் கலைஞர்களை வரவழைத்து …

  11. எஜமானின் நலன் விசாரிக்க யாழ். மருத்துவமனை விரைந்த அழையா விருந்தாளி 20 September 2025 மனிதர்களைக் கடந்து ஐந்தறிவு ஜீவன்களுக்கும் கருணை உண்டு என்பதை நிருபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று யாழ். மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிட அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் சென்று பார்வையிடுவது வழக்கமானதொன்றாகும். அந்த வரிசையில் தனது எஜமானை பார்க்க நாய் ஒன்று சென்றுள்ள சம்பவம் பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. யாழ். மருத்துவமனையின் 24 ஆம் இலக்க விடுதியில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் பதிவானதாக எமக்குக் கிடைத்த தகவல்களின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. மருத்துவமனைக்குள் எவ்வித குழப்பமும் விளைவிக்காமல் குறித்த ந…

  12. மும்பையில் செயல்படும் மிக பெரிய வர்த்தகம்..! மிகப் பெரிய நிறுவனம்... 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்... பக்காவான தொழில் பயிற்சி... மாத வருவாய் 15 கோடிக்கு மேல்... ஊழியரின் சம்பளம் 15 ஆயிரத்துக்கு குறைவில்லை... என்ன, இப்படிப்பட்ட பெரிய கம்பெனியில் வேலை கிடைக்கலையேன்னு நினைக்கத் தோன்றுதா... சாரி, அந்த எண்ணத்தை மாத்திக்குங்க. இது, முழுக்க முழுக்க ‘பிச்சை’ பிசினஸ் விவகாரம். மொழி, இனம் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் மும்பை சாலைகளில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள், தங்களின் பாஸுக்கு மாதந்தோறும் சம்பாதித்து தரும் தொகைதான் ரூ. 15 கோடி. தொழிலாளிக்கோ ஒருநாள் சம்பளம் ரூ. 500. நாளுக்கு நாள் மாறி வரும் தொழில்நுட்பத்தை கற்றுத் தருவதற்காக பல கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங…

  13. வாஷிங்டன் : எவ்வளவுதான் வேலைச் சுமை, கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் கடவுள் நம்பிக்கையும் இருந்தால் மன அழுத்தத்தில் இருந்து விரைவில் விடுபடலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மனஅழுத்தத்தில் இருந்து விடுபடும் வழிகள் பற்றி கனடாவின் டொரன் டோ நகரில் உள்ள ஸ்கார்பெரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். முதல் கட்டமாக இவர்களிடம் பல சோதனைகள் நடத்தப்பட்டன. ஆய்வு முடிவுகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த விவரம் வருமாறு: தவறு செய்தவர்கள், தவறு செய்யாதவர்கள் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஆய்வு நடந்தது. இரு தரப்பினரது மூளையின் செயல்பாடுகளும் ஆராயப்பட்டன. தவறு செய்யாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருந்தது. இதுவே …

  14. நடக்கவே முடியாமல் இருந்த வின்னி மோப்ப நாயாக மாற உதவிய சிகிச்சை Play video, "நடக்க முடியாமல் இருந்த வின்னி மோப்ப நாயாக மாறிய கதை", கால அளவு 1,37 01:37 காணொளிக் குறிப்பு, நடக்க முடியாமல் இருந்த வின்னி மோப்ப நாயாக மாறிய கதை 31 டிசம்பர் 2022, 02:39 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் "வின்னியை நான் முதலில் சந்தித்தபோது, அவள் மிகவும் பாவமான நிலையில் இருந்தாள். அவளால் நடக்க முடியவில்லை. பின்புறம் மேலே தூக்கிக் கொண்டிருக்க, முன்னங்கால்களின் முட்டியால் தான் அவள் நடக்க வேண்டியிருந்தது. அவளை அப்படிப் பார்க்க மிகப் பாவமாகவும் வேதனையாகவும் இருந்தது. வின்…

  15. நீளம் 134 அடி எடை 2067 கிலோ 37 நாட்கள் போராடி இந்தப் பாம்பை ராயல் பிரிட்டிஷ் கமாண்டோ போர்ஸ் என்னும் குழு பிடித்துக் கொன்றுள்ளது. இது வரை இந்தப் பாம்பு 257 மனிதர்கள்2325 விலங்குகளைக் கொன்று தின்றுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/43877.html#sthash.Np78pAiK.dpuf

    • 0 replies
    • 1.6k views
  16. தமிழர் உணர்வாளர் பழ. நெடுமாறன் எழுதிய “பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியிடப்படவுள்ளது. இதற்கான அழைப்பினை தமிழ்ககுலம் பதிப்பாலயம் விடுத்திருக்கின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5.மணிக்கு சென்னை பிட்டி தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நிகழ்சிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் தலைமை தாங்குவார். அதன் முழு விபரம் வருமாறு, நாள் – 13-4-2012, வெள்ளிக்கிழமை நேரம் – மாலை 5 மணி இடம் – பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை தலைமை – கவிஞர் காசி. ஆனந்தன் நூலை வெளியிட்டு சிறப்புரை – திரு. வைகோ நூலை பெறுபவர்கள் திரு. மு. பாலசுப்ரமணியன் திரு. வி. கே. டி. பாலன் திரு. சா. சந்திரேசன் திருச்…

  17. கடந்த பல ஆண்டுகளாகவே, ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 0.5 சதவிகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் குறைந்தது 2 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. மேலும் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு, 10 ஆயிரம் டொலர் வழங்கும் திட்டத்தையும் ரஷ்ய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இருப்பினும் குழந்தை பிறப்பு விகிதத்தில் போதுமான முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்நிலை தொடர்ந்தால் தற்போது 143 மில்லியனாக இருக்கும் ரஷ்யாவின் மக்கள் தொகை 2050-ம் ஆண்டில் 111 மில்லியனாக குறைந்து விடும் என ரஷ்ய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பணிபுரியும் வயதுள்ளவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரு…

  18. இலங்கையின் வட கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினர் போதைப்பொருள் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பாடசாலை இளைஞர்கள் மத்தியில் திட்டமிட்டு இப்போதை பொருள் விற்பனை திட்டமிட்டு நடைபெறுகின்றது. பல ஆற்றல் மிக்க இளைஞர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகிவருகின்றனர். வட கிழக்கு மக்களில் நலன்களில் அக்கறை கொள்வதாகக் கூறும் அரசியல் கட்சிகளோ அமைப்புகளோ இது குறித்து மௌனம் சாதிக்கின்றனர். புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு “மறுவாழ்வு வழங்கப்பட்டதாக” விடுதலை செய்யப்பட்ட ஆண்கள் பெண்கள் ஆகிய இருபகுதியினர் மத்தியிலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. முன்னை நாள் போராளிகள் என சந்தேகிக்கப்பட்…

  19. மனிதர்களின் கண்ணீரில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பல வகையான உப்புகள் லண்டனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மனிதர்களிடம் ஒவ்வொரு உணர்வுகளின் போது ஏற்படும் கண்ணீரின் வகைகளினால் இந்த உப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஹொக்டன் தெரு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். துக்கத்தினால் ஏற்படும் கண்ணீர், தும்மும் போது ஏற்படும் கண்ணீர், வெங்காயம் வெட்டும்போது ஏற்படும் கண்ணீர், சிரிப்பின் போது ஏற்படும் கண்ணீர், கோபத்தின் போது ஏற்படும் கண்ணீர் என ஒவ்வொரு உணர்வுகளின் போது ஏற்படும் கண்ணீர் மூலம் சுமார் 7 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான உப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு உப்புகளும் மாறுபட்ட சுவை கொண்டவை என நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.…

  20. முல்லைத்தீவில் மாத்திரைகளை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு! முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை தவறுதலாக உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. சம்பவ தினமான நேற்று, குறித்த குழந்தை வீட்டில் இருந்த பாட்டியின் மாத்திரைகளை யாரும் கவனிக்காத வேளை உட்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அக் குழுந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அ…

  21. வனத்துறை அதிகாரிகளைப் புலிக் கூண்டில் அடைத்த கிராம மக்கள்! கர்நாடக மாநிலத்திலுள்ள சாமராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியைச் ஒட்டிய விவசாய நிலங்களில் புலிகள் நடமாட்டம் உள்ளதாகவும், கால்நடைகளை கொன்று வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு மட்டும் சென்றுவிடுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு ஆய்வுக்கு சென்ற வனத்துறையினரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். அப்போது முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிவித்து, வனத்துறை அதிகாரிகள்…

  22. பிரித்தானிய அரசிக்கு 50 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பரிசு பிரித்தானிய அரசி 2 ஆம் எலிஸபெத் கோடிக் கணக்கான ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியான சொத்துக்களைக் கொண்டவர். ஆனால், சுப்பர் மார்க்கெட் ஒன் றின் 50 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 10,500) ரூபா பெறுமதியான வவுச்சர் ஒன்றை வென்றமையால் அவர் பெரும் மகிழ்ச்சி யடைந்துள்ளாராம். குதிரையோட்டப் போட்டியொன்றில் பரிசுக்குலுக்களில் அவருக்கு இப் பரிசு கிடைத்துள்ளது. 2 ஆம் எலிஸபெத் அரசியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் 34 கோடி ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 7140 கோடி ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே 50 பவுண்ட்ஸ் பெறுமதியான வவுச்சர் பொருளாதார ரீதிய…

  23. தமிழீழ பெண்கள் எழுச்சி நாளையும் முதல் பெண் போராளி 2ம் லெப்ரினன்ற் மாலதியின் இருபத்தைந்தாவது நினைவு நாளையும் நினைவுறுத்தி எழுச்ச்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த 13ம் திகதி சனிக்கிழமை மாலை மேற்கு லண்டன் கொலின்டேல் பகுதியில் நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திகழ்ச்சி மாலை 7 மணிக்கு தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. உயிரோடை தமிழ் வானொலியின் அறிவிப்பாளரும்இ நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திருமதி. ரூபி குமார் தேசியக் கொடியினை ஏற்றி வைக்கஇ முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி தேசியச் செயற்பாட்டாளர் திரு. இராதாகிருஸ்ணன் ஆகியோர் மாலதியின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்த…

  24. தடுப்புச்சுவரை தாண்டி செல்ல ‘குட்டி’க்கு பயிற்சி அளித்த தாய் யானை கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு மலைப்பாதை செல்கிறது. இந்த மலைப்பாதையில் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி காணப்படுகிறது. இந்த வனப்பகுதியில் காட்டுயானைகள், புலிகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும். குறிப்பாக காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.