Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. உலகின் சந்தோஷமான நாடு நார்வே உலகிலேயே நார்வே தான் சந்தோஷமான நாடு ஆகும். பிற நாடுகளை ஒப்பிடுகையில் இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது நார்வே. 2வது சந்தோஷமான நாடு டென்மார்க் உலகின் சந்தோஷமான டாப் 20 நாடுகள் பட்டியலில் 4வது ஆண்டாக இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு டென்மார்க். 3வது இடத்தில் ஸ்வீடன் கடந்த 2009ம் ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 7வது இடத்தில் இருந்த ஸ்வீடன் இந்த ஆண்டு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு 4வது இடம் உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. உலக அளவில் ஆஸ்திரேலியா கல்வியில் 2வது இடத்திலும், தனிநபர் சுதந்திரத்தில் 3வது இடத்தில…

    • 0 replies
    • 869 views
  2. சவுதி அரேபியாவில் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதால், இந்த ஆண்டு, ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பக்ரீதையொட்டி, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, உலகம் முழுவதும் இருந்து ஏராளமான முஸ்லிம் யாத்திரிகர்கள், புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு, 32 லட்சம் பேர், பக்ரீத் பண்டிகையின் போது, மெக்காவில் கூடினர். தற்போது, அரேபியாவில், நுரையீரலை பாதிக்கும் வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை, 50 பேர் இந்த காய்ச்சலால், உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சவுதி அரசு, நோயாளிகள் பலரை "ஹஜ் பயணத்துக்கு வரவேண்டாம்' என தடுத்து விட்டது. இதன் காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு, ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை, 20 சதவீதம் குறைந்…

  3. தரமான கல்வி தேடி இந்தியாவுக்கு ஏராளமான ஆப்பிரிக்கர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் சமீபகாலமாக நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி பாகுபாடு பிரச்சனைகள் நடப்பது போன்று இந்தியாவிலும் வெளிநாட்டினர்களுக்கு எதிரான இனவெறி பிரச்சனைகள் நடந்தேறி வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தரமான கல்விக்காக டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் மீது டெல்லிவாசிகள் இனவெறி பாகுபாட்டை நடத்துகிறார்கள். இந்தியா முழுவதும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆப்பிரிக்க மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்திய பட்டப்படிப்புகளுக்க…

    • 0 replies
    • 254 views
  4. நெதர்லாந்த் நாட்டின் அசென் நகரிலுள்ள டெரெண்ட்ஸ்(Drents) அருங்காட்சியகத்தில் புத்தர் சிலை ஒன்றை CT Scan எனப்படும் அதிநுட்பமான பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்த பரிசோதனையில், புத்தர் சிலைக்கு உள்ளே அமர்ந்தவாறு எலும்புக்கூடு ஒன்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதை மேலும் பரிசோதனை செய்ததில், பதினோறாம் நூற்றாண்டை சேர்ந்த சீனத்துறவி ஒருவரின் உடலை அமர்ந்த நிலையில் பதப்படுத்தி, அதன் மேல் புத்தர் சிலையை வடிவமைக்கப்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த எலும்புக்கூடுகளை ஆய்வு செய்கையில், இவர் சீனாவில் புகழ்பெற்ற சோகுஷின்புட்சு(Sokushinbutsu) என்ற கலையை பயில்வித்த மாஸ்டர் லியுகுவான்(Master Liuquan) என்ற…

  5. ஆப்கானிஸ்தானின் வட பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலையில் தாயொருவர், ஆறு குழந்தைகளை ஒரே தடவையில் பிரசவித்துள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை சுமப்பது தொடர்பாக குறித்த பெண் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதுடன், முறையான சிகிச்சைகளையும் பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட அதேநாளில் மூன்று பெண் குழந்தைகளயும், மூன்று ஆண் குழந்தைகளையும் குறித்த பெண் பிரசவித்துள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். சீரான சிகிச்சைகளைப் பெறாமல் ஆறு குழந்தைகள் பிரசவித்துள்ளமை மிகவும் அரிதாகவே நிகழ்வதாக வைத்தியர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.உலகில் அதிகூடிய தாய் மற்றும் குழந்தை இறப்பு வீதம் காணப்படும் நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  6. டிக்கோயாவில் புத்தாண்டில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு டிக்கோயா பெரிய கெந்தகலையில் நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சு ஒன்று புதுவருட தினத்தில் பிறந்துள்ளது. இந்த நான்கு கால்களில் இரண்டு கால் சிறிதாக காணப்படுவதுடன் ஏனைய இரண்டு கால்கள் நடப்பதற்கு பயன்படும் வகையில் காணப்படுகின்றன. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=14012#sthash.HMeIEqwn.dpuf

  7. நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு கனகராசா சரவணன்,பாறுக் ஷிஹான் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்துள்ள சடலம் ஒன்று இருப்பதாக பொதுமக்கள் புதன்கிழமை (05) மாலை தகவல் வழங்கியதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை முள்ளிமலையடி பிரதேசத்தில் இந்த சடலம் தொங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தது. குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு கிழமையாக துர்நாற்றம் வீசி வந்துள்ள நிலையில் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் அந்த பகுதியை சுற்றி சோதனையிட்டபோது அங்கு மரம் ஒன்றில் தொங்கி உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தனர் இதனையடுத்து குறித்த பகுதியில் யானைகள் நடமாடுவதால் அங்கு பொலிஸார் செல்…

  8. ஒரு உப்புப் பாக்கெட் 60 ரூபாயாக விலை நிர்ணயம் செய்ய 76 ஆண்டுகள் ஆனது என்றும், எனினும், 60 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக மாற வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆனது என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகிறார். மற்ற அரசாங்கங்கள் எவ்வளவுதான் லஞ்சம் கொடுக்க முயன்றாலும், ஒரு பாக்கெட் உப்பு அல்லது ஒரு கிலோ அரிசிக்கு ஒருபோதும் லஞ்சம் கொடுத்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்; தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு திறமையின்மைக்கும் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மோசடி மற்றும் ஊழல் இல்லாதது என்று கூறும் அரசாங்கம், உண்மையில் அ…

  9. உலக முஸ்லிம்களால் மீலாதுன் நபி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நபி முஹம்மத் எப்படியெல்லாம் பொறுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வாழ்வாங்கு வாழ்ந்தார் என்பதை அடியொட்டி வெளிவந்துள்ளது 'லாயிலாஹ இல்லல்லாஹ்'' என ஆரம்பிக்கும் புதிய பாடல். மனதை மயக்கும் இசை, இதயத்தை ஊடறுக்கும் குரல், சிந்திக்க தூண்டும் வரிகள் காண்போர்களை கவர்ந்து இழுக்கும் காட்சியமைப்பு என பாடல் கேட்போரை ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. பாடலை இசையமைத்து பாடியுள்ளார் வவுனியாவை சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன். பாடல் வரிகளை எழுதியுள்ளார் கவிஞர் பொத்துவில் அஸ்மின். இவர்களது இருவரது முயற்சியில் முன்பு வெளிவந்து தமிழ் பேசும் உலகெங்கும் கவனத்தை பெற்ற எங்கோ பிறந்தவளே(2010) காந்தள் …

  10. அமெரிக்காவில், நடுவானில் பறந்த விமானத்தின் கதவு கழன்று, ஹோட்டல் கூரை மீது விழுந்தது. அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தின், மான்டரி விமான நிலையத்திலிருந்து, கடந்த வாரம், சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் வேகமாக பறந்து கொண்டிருந்த போது, திடீரென சத்தம் கேட்டது. இதைஅடுத்து திரும்பி பார்த்த பைலட், விமானத்தின் கதவு காணாதது கண்டு பதற்றம் அடைந்தார். விமானத்தை தாழ்வாக பறக்க செய்து, கதவு எங்கே விழுந்திருக்கிறது, என்று தேடினார். இரண்டு மூன்று முறை வட்டமடித்து தேடி பார்த்தும், கதவு கிடைக்காததால், விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி விட்டு, விஷயத்தை, அங்குள்ள அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள, ஹோட்டல் உரிமையாள…

  11. ‘சீதை’ டெஸ்ட் டியூப் பேபி: ‘நாரதர்- கூகுள்’: வைரலாகும் உ.பி. துணை முதல்வரின் சர்ச்சை பேச்சு உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா : கோப்புப்படம் - படம்: பிடிஐ ராமாயணத்தில் வரும் சீதா தேவி, பூமியில் இருந்து பிறந்தவர் என்ற கூறப்பட்டாலும், இன்றைய தொழில்நுட்பத்தில் அவர் டெஸ்ட் டியூப் குழந்தை போன்றவர் என்று உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். . மதுரா நகரில் இந்தி இதழியல் குறித்து நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை முதல்வர் தினேஷ் சர்மா பேசினார். அவர் பேசிய வீடியோ அதன்பின் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தினேஷ் சர்மா பேசியதாவது: இதழியல்துறை(…

  12. மகாராஷ்டிராவில் நிலத்துக்கு அடியில் கேட்ட மர்ம ஒலி: பூகம்ப வதந்தியால் பொதுமக்கள் பீதி Published By: RAJEEBAN 17 FEB, 2023 | 10:53 AM மகாராஷ்டிரா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள லத்தூரில் பூமிக்கு அடியில் மர்மமான ஒலிகள் கேட்டுள்ளன. ஆனால் நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மர்ம ஒலியானது புதன்கிழமை காலை 10.30 முதல் 10.45 மணிக்கு இடையில், விவேகாந்தா சவுக் அருகில் கேட்டுள்ளது. இதனால் பூகம்பம் வந்துவிட்டதாக பரவிய வதந்திகளால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் சிலர் உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை, லாத்தூர் …

  13. படக்குறிப்பு, குறிப்பிட்ட இரண்டு மாணவிகளின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு காதல் தொடர்பு உள்ளதா என்று பள்ளியின் முதல்வர் கேட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 3 செப்டெம்பர் 2023 இலங்கை - அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் உயர்தரம் (13ஆம் வகுப்பு) கற்கும் மாணவிகளின் மாதவிடாய் நாட்களைக் கேட்டுக் குறிப்பெடுத்து, தனக்கு வழங்குமாறு சிரேஷ்ட மாணவத் தலைவி ஒருவரிடம் கேட்ட பள்ளி முதல்வர் ஒருவருக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. குறித்த சிரேஷ்ட …

  14. ஹெலிகொப்டர் சத்தம் கேட்டு ஓரே நேரத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபட்ட 3000 முதலைகள்! அவுஸ்திரேலியாவில் உள்ள முதலைப் பண்ணையில், ஹெலிகொப்டரின் சத்தத்தைக் கேட்டு சுமார் 3000 முதலைகள் ஒரே நேரத்தில் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் அமைந்துள்ள ‘கூரானா’ முதலை பண்ணையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப் பண்ணையில் ஏறத்தாழ 3,000 முதலைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் இப்பண்ணைக்கு மேலே கொஞ்சம் தாழ்வாக ஹெலிகொப்டர் ஒன்று பறந்து சென்றுள்ளது. இச்சத்தத்தைக் கேட்ட சிலநொடிகளுக்குள்ளேயே ஆயிரக்கணக்கான முதலைகள் இனச்சேர்க்கையில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. இதனைப் ப…

  15. படத்தின் காப்புரிமை Getty Images Image caption இளம் பெண்கள் திருமணமாகி, குழந்தைகளை பெற்று குடும்பமாக வாழ வேண்டுமென சீன அரசு விரும்புகிறது. வேலை செய்வதில் சிறு இடைவெளி எடுத்துவிட்டு, சீனாவின் சந்திர நாள்காட்டியின்படி, புத்தாண்டில் தங்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்ல மில்லியன்கணக்கான மக்கள் தயாராகி வருகின்றனர். ஆனால், சில தொழிலாளர்களுக்கு வழக்கமாக இந்த புத்தாண்டில் கிடைக்கின்ற 7 விடுமுறை நாட்களோடு மேலும் 8 நாட்கள் அதிகமாக கிடைக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். திருமணம் ஆகாமல், 30 வயதுகளில் இருக்கின்ற பெண்களுக்கு இந…

  16. பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்டிருந்த குண்டு மனிதர் மரணம்![Wednesday 2015-06-24 20:00] பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்டிருந்த இளைஞர், கார்ல் தாம்சன் உயிரிழந்தார். பிரிட்டனின் தென்கிழக்குப் பகுதியில் கென்ட் நகரம் உள்ளது. அந்த நகரைச் சேர்ந்தவர் கார்ல் தாம்சன். 33 வயதான அவரின் எடை 412 கிலோ. அளவுக்கு அதிக மான உடல் எடையால் அவரால் நடக்க முடியாது. அவரது உதவிக்கு எப்போதும் இரண்டு பேர் உடன் இருந்தனர். பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்ட மனிதராக அவர் கருதப்பட்டார். தனது 17 வயதில் கென்ட் பகுதியில் உள்ள ஹோட்டலில் கார்ல் தாம்சன் பணியாற்றி வந்தார். அப்போது ஹோட்டலில் விற்காத பொருட்கள் அனைத்தையும் சாப்பிட்டு விடுவாராம். அப்போது முதலே அவரது உடல் எடை தாறுமாறாக அதிகரித்தது. அதன்பி…

  17. அடிச்சு வளர்த்திருக்கணும் இப்ப போட்டு அடித்து என்ன பலன்??

  18. யாழ்ப்பாணம் - இளவாலைப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் இன்று (06) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது வீட்டில் வைத்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இப்பெண்ணிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவர் நாளை (07) சனிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://newyarl.lk/comments_news.php?pid=724

  19. சிறார்களின் ஆபாச வீடியோக்கள் சம்பந்தமாக பொலிஸார் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் யேர்மனியில் Recklinghausen என்ற நகரில் உள்ள ஒரு வீட்டை சோதனையிடச் சென்ற போது அவர்களுக்கு கிடைத்தது ஆபாசப் படங்களும் வீடியோக்களும் மட்டுமல்ல. ஒரு அதிசயமும் சேர்ந்தே கிடைத்தது. அந்த வீட்டில் உள்ள ஒரு அலுமாரியை சோதனைக்காக பொலீஸார் திறந்த போது அந்த அலுமாரிக்குள் ஒரு சிறுவன் ஒளித்து வைக்கப் பட்டிருந்ததைக் கண்டார்கள். அந்தச் சிறுவனை விசாரித்த போது அவனது பெயர் Marvin என்பது அவர்களுக்குத் தெரியவந்தது. 11.06.2017இல் காணாமல் போன Marvin Konsog என்ற பதினைந்து வயதான சிறுவன்தான் அவன் என்பதைப் பொலீஸார் அறிந்து கொண்டார்கள். இனி தனது மகன் கிடைக்க மாட்டான். அவன் இறந்து விட்டிருப்பான்…

  20. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு சிறைத்தண்டனை வன்கூவரில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குழந்தைகளின் செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு, மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈவா அன்ட் கோ. விக்ஸ் நிறுவனத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தலா 2,500 டொலர்கள் மதிப்புள்ள 150 செயற்கை தலைமுடிகளை 53 வயதான மார்ட்டின் வைகெல்ட் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் 2019ஆம் ஆண்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் குறித்த நபருக்கு வன்கூவரில் உள்ள டவுன் ரவுன் சமூக நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முடி உதிர்தல், புற்றுநோய் அல்லது அலோபீசியா போன்ற நிலைமைக…

  21. உலகின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட்டின் மறுமதிப்பீடு செய்யப்பட்ட உயரம் அறிவிப்பு! உலகின் மிக உயரமான மலை எவரெஸ்ட் முன்பு அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டதை விட 0.86 மீ உயரத்தில் உள்ளது என்று நேபாளமும் சீனாவும் கூட்டாக அறிவித்துள்ளன. மறுமதிப்பீடு செய்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848.86 மீட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1954ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்திய நில அளவைத் துறை அளவிட்டது. அப்போது அந்த சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என அறிவிக்கப்பட்டது. உலகின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட் அமைந்துள்ள நேபாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உட்பட பல்வேறு காரணங்களால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏ…

  22. மஹிந்த ராஜபக்ச... நலமாக உள்ளார் – முன்னாள் பிரதமர் அலுவலகம். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. ருவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் பிரதமரின் செயலாளர் கீத் காசிலிங்கம், முன்னாள் பிரதமரின் உடல்நிலை சரியில்லை எனவும் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார். https://athavannews.com/2022/1289140

  23. லீப் ஆண்டில் பிறந்த தாய்க்கு இந்த 2024 லீப் வருடத்தில் பெண் குழந்தை பிறந்ததாக அமெரிக்காவில் இருந்து ஒரு செய்தி பதிவாகியுள்ளது. வட கரோலினா பகுதியில் வசிக்கும் பேராசிரியரான காய் சன் பெப்ரவரி 29 அன்று சோலி என்ற மகளை பெற்றெடுத்தார். வட கரோலினாவில் உள்ள டியூக் ஹெல்த் காலேஜ் ஆஃப் மெடிசினில் உதவி பேராசிரியராக பணிபுரியும் காய் சன், பெப்ரவரி 29 அன்று காலை 5:12 மணிக்குப் பெண் குழந்தையை பிரசவித்தார். https://thinakkural.lk/article/294139

  24. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோருமே புகைப்படம் எடுக்கிறோம்- ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்லூரி மாணவி ஒருவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட புகைப்படம் இணையத்தின் மனசாட்சியையே உலுக்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தின் நாயகனான ஏழை சிறுவனை, ஊக்கத்தின் அடையாளம் என மனதார பாராட்டுகிறது. அதைவிட முக்கியமாக அந்த சிறுவனுக்கு உதவிகள் குவிந்து ,அவனது வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது. எல்லாம் அந்த ஒரு புகைப்படத்தால் நிகழ்ந்த மாற்றம்! அந்த புகைப்படத்தை பார்த்தால் நீங்களும் கூட உருகித்தான் போவீர்கள்! ஒரு சிறுவன், டெஸ்க் முன் அமர்ந்து மங்கிய விளக்கொளியில் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் புகைப்படம்தான் அது. சாதாரணமாக பார்த்தாலே கூட …

    • 0 replies
    • 230 views
  25. வானில் கைகோர்த்து கொண்டு நின்ற 164 பேர்: பிரமிக்க வைக்கும் சாதனை (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 01:04.42 பி.ப GMT ] கனடாவின் ஒட்டோவாவில் 164 பேர் வானில் செங்குத்தாக ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ளனர்.ஒட்டாவா புறநகர் பகுதியில் வான் வெளியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. பாராசூட் உதவியுடன் 164 பேரும் ஒருவரது கையை ஒருவர் கோர்த்து ஒரு ராட்சச மலர் வடிவில் சில நிமிடங்கள் நின்றனர். 240 கிலோ மீட்டர் வேகத்தில் 164 பேர் வானில் செங்குத்தாக ஸ்கை டைவிங் செய்து சாதனை புரிந்து உள்ளனர்.13 முறைக்கு மேல் முயற்சி செய்து இதற்கு முன் உள்ள சாதனையை முறியடித்து உள்ளனர். 2012 ஆம் ஆண்டு 138 பேரால் ஸ்கை டைவிங் சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த காட்சியை பார்வையாளர்கள் தரையில் இருந்துக…

    • 0 replies
    • 204 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.