Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கடலில் மிதந்து வந்த போத்தலினால் பறிபோன இரு உயிர்கள்! புத்தளம் பகுதியில் கடலில் மிதந்து கொண்டிருந்த போத்லில் இருந்த திரவத்தை அருந்திய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த திரவத்தை அருந்திய மேலும் இருவர் தற்போது புத்தளம் வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புத்தளம், நுரைச்சோலை பகுதியில் உள்ள ஒரு மீன்பிடி வாடியில் இருந்தபோது நான்கு பேர் கொண்ட குழு திரவத்தை அருந்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஒருவர் இறந்ததை தொடர்ந்து, பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர். அதன் பின்னர், மீன்பிடி வாடியிலிருந்த மற்றொரு நபரின் உடலை பொலிஸார் கண்டுபிடித்தனர். சம்பவ…

  2. அவுஸ்திரேலியாவில் வினோதம் : வீதியை ஆக்கிரமித்த சிவப்பு நண்டுகளால் போக்குவரத்து தடை ! 25 Oct, 2025 | 11:09 AM அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவில் (Christmas Island National Park) வசிக்கும் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் (Red Crabs), தங்களின் வருடாந்திர இனப்பெருக்கப் பயணத்தின் காரணமாகச் வீதிகளை ஆக்கிரமித்துள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடக்கும் ஒரு வினோதமான இயற்கை நிகழ்வாகும். இந்தச் சிவப்பு நண்டுகள் கிறிஸ்மஸ் தீவின் காட்டுப் பகுதிகளில் சிறிய குழிகளை அமைத்து வாழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், இனப்பெருக்கப் பருவம் வரும்போது, இலட்சக்கணக்கான ஆண் மற்றும் ப…

  3. Published By: Digital Desk 3 24 Oct, 2025 | 01:04 PM ஐஸ்லாந்து நுளம்புகள் இல்லாத நாடு என்ற பெருமையை இழந்துள்ளது. ஐஸ்லாந்தின் இயற்கை அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த பூச்சியியல் நிபுணர் மத்தியாஸ் ஆல்ப்ரெட்ஸன் (Matthias Alfredsson), தலைநகர் ரேக்ஜாவிக்கில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் (20 மைல்) வடக்கே, மூன்று நுளம்புகள் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 'குலிசெட்டா அன்யூலேட்டா' (Culiseta annulata) வகையைச் சேர்ந்த இந்தக் கொசுக்கள் இரண்டு பெண் என்றும் மற்றொன்று ஆண் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தாட்டிக்காவுடன் சேர்த்து, ஐஸ்லாந்து நீண்ட காலமாக நுளம்புகள் இல்லாத சில இடங்களில் ஒன்றாக இருந்து வந்தது. இந்நிலையில், அங்கு நுளம்புகள் உருவாகியிருப்பதை மத்தியாஸ் ஆல்ப்ரெட்ஸன் கண்டுபி…

  4. காலி - பிலான பகுதியில் கழிவறை குழி வெடித்து ஒருவர் உயிரிழந்தார். வீட்டில் உள்ள கழிவறை குழியில் கார்பைடைப் பயன்படுத்தி எரிவாயு தயாரிக்க முயன்ற போது நேற்று (12) மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். 50 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmgonwccm00yjqplpn4ia8856 https://www.facebook.com/reel/1324971306092243

  5. 20 Oct, 2025 | 05:02 PM தங்காலை துறைமுகத்தில் இருந்த ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த ஐந்து நாய்களில் இரண்டு நாய்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தங்காலை துறைமுகத்தில் கடந்த 14ஆம் திகதி கடலில் மிதந்த 51 பொதிகளில் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பொதிகள் கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்த நீரை குடித்த ஐந்து நாய்கள் சுயநினைவின்றி ஒரே இடத்தில் சுற்றித்திரிந்த நிலையில் தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள் அவற்றுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். எவ்வாறிருப்பினும் அவற்றில் இரண்டு நாய்கள் நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. ஏனைய நாய்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தங…

  6. தீபாவளி பண்டிகையில் 26 இலட்ச அகல்விளக்குகள் ஏற்றி உலக சாதனை! உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கமாகும் இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை, மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மகா தீபத்திருவிழாவை நடத்தியது. இதன்போது சரயு ஆற்றின் கரையில் 26,17,215 இலட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது. திரளான மக்கள் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றினர். உத்தரப் பிரதேசத்தின் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், 26 இலட்சத்திற்கும் அதிகமான விளக்குகளை ஏற்றியமைக்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்ற…

  7. மகன் வாங்கிய காரில்... மருமகள் சென்றதால், காரை எரித்த மாமியார். சென்னையில் மகன் வாங்கிய காரில் மருமகள் சென்றது பிடிக்காமல் காரை அவரது தாயே தீயிட்டு கொளுத்தியது தெரியவந்துள்ளது. சென்னையில் மகன் வாங்கிய காரில் மருமகள் செல்லக் கூடாது என்பதற்காக காரை அவரது தாயே தீயிட்டு கொளுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த ஆவடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவர் தனது தாய் இந்திராணி மற்றும் மனைவி வைஜெயந்திமாலா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டு வீடு வாசற்படி என்பதற்கேற்ப மாமியார்- மருமகளிடையே பிரச்சனை ஏற்பட்டது. ராஜேந்திரன் தாயை தனியாக குடி வைத்துள்ளார். இந்நிலையில் அண்மையில் ராஜேந்திரன் புது கார் வாங்கியுள்ளார். அந்த காரில் வைஜெயந்தி…

    • 2 replies
    • 257 views
  8. Published By: Digital Desk 3 14 Oct, 2025 | 02:41 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இத்தாலியின் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியைப் பார்த்து பேசிய வார்த்தைகள், எகிப்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் சலசலப்பையும், இணையத்தில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதையொட்டி, எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசிய ட்ரம்ப், "நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண்," என்று தெரிவித்தார். …

  9. உத்தர பிரதேசத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ஒருவர், தன்னுடைய மனைவி இரவில் பாம்பாக மாறுவதாகவும், தன்னை கடித்துக் கொல்ல பல முறை முயற்சித்ததாகவும் முறைப்பாடு அளித்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அவரது முறைப்பாடு குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், சமதான் திவாஸ், அதாவது பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளின் போது, வழக்கமாக மின்சாரம், சாலைகள், ரேஷன் கார்டுகள் உள்ளிட்டவைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை மக்கள் மாவட்ட நீதிபதியிடம் கொண்டு வருவார்கள். அந்த வகையில், சமீபத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள லோத்சா கிராமத்தில் வசிக்கும் மீர…

  10. நாகொடையில் பேனா வடிவிலான துப்பாக்கி மீட்பு! காலி, நாகொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து நேற்று (06) மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, பேனா வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோட்டாவை மட்டுமே சுடும் திறன் கொண்டது. கைது செய்யப்பட்ட நேரத்தில் இரண்டு சுடப்படதாத தோட்டாக்கள், பயன்படுத்தப்படாத தோட்டங்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டனர். மாபலகமவைச் சேர்ந்த சந்தேக நபர், விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு …

  11. 40,000 மொபைல்கள் திருட்டு; சர்வதேச கொள்ளை கும்பல் இங்கிலாந்தில் கைது! கடந்த ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து சீனாவிற்கு 40,000 திருடப்பட்ட மொபைல் தொலைபேசிகளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு சர்வதேச கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொலைபேசி திருட்டுகளுக்கு எதிரான இங்கிலாந்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக இது அமைந்ததாக மெட்ரோபொலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்போது, 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2,000 க்கும் மேற்பட்ட திருடப்பட்ட மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லண்டனில் திருடப்பட்ட அனைத்து மொபைல்களிலும் பாதி வரை ஏற்றுமதி செய்ததற்கு இந்தக் கும்பல் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் நம்புகின்றனர் – இங்கிலாந்தில் பெரும்பாலான மொபைல்கள் இங்குதா…

  12. 03 Oct, 2025 | 12:43 PM அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லோஸ் வேகாஸில் பாராசூட் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய இளைஞர், பாராசூட் திடீரென செயலிழந்ததால் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சாகச விளையாட்டுகளுக்குப் பிரபலமான லோஸ் வேகாஸ் நகரில், மிட்செல் டீக்கின் (வயது 25) என்ற இளைஞன் பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அவரது பயிற்றுவிப்பாளரும் சென்றிருந்தார். அவர்கள் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, துரதிர்ஷ்டவசமாக பாராசூட் திடீரெனச் செயலிழந்தது. இதன் காரணமாக, மிட்செல் டீக்கின் மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் இருவரும் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே…

  13. குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது ஒலுவில் - களியோடை ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது. ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையின் தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய் நிந்தவூரை பிரதேசத்தவர் எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தார்கள். தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயதையுடையவர்கள் எனவும், அவர்களுக்கு திருமணமாகாத நிலையிலேயே, இந்தக் குழந்தை பிறந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர். குழந்தையின் தாயும் – தந்தையும் காதலித்து வந்த நிலையில், தந்தையின்…

  14. 'குழந்தைகளை இழுத்து செல்லும் ஓநாய்கள்' - உத்தரபிரதேசத்தில் இங்கே என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, செப்டம்பர் 20 ஆம் தேதி காலை, தனது மூன்று வயது மகனை வீட்டின் முற்றத்தில் இருந்து ஓநாய் ஒன்று திடீரென இழுத்துச் சென்ற சம்பவத்தை அனிதா நடுங்கும் குரலில் விவரிக்கிறார். கட்டுரை தகவல் சையத் மோஜிஸ் இமாம் பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2025 "நாங்கள் மசாலா அரைத்துக் கொண்டிருக்கும்போது, எனது மகன் தன் சகோதரியின் மடியில் அமர்ந்து கொண்டிருந்தான் . அப்போது இரண்டு ஓநாய்கள் வந்து அவனை இழுத்துச் சென்றன. நாங்கள் ஒருபுறம் பிடித்துக் கொண்டிருந்தோம், ஆனால் மற்றொரு ஓநாய் எங்கள் மீது பாய்ந்த போது என் மகன் எங்கள் கைகளிலிருந்து நழுவினான் " என்று அனிதா விவரிக்கிறார். செப்டம்பர் 20 ஆம் த…

  15. 01 Oct, 2025 | 06:14 PM வங்கியொன்றின் பண வைப்பு இயந்திரத்தில், பெண்ணொருவரின் பணத்தை வங்கிக்கணக்கொன்றுக்கு வைப்பிலிட உதவி செய்வது போல் வந்த இளைஞன், அந்தப் பணத்தை தனது வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு, பெண்ணை ஏமாற்றிச் சென்ற சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்காக வங்கியொன்றுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள பண வைப்பு இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிடத் தெரியாத அந்தப் பெண், மின் கட்டணத்தை வைப்புச் செய்வதற்காக அருகில் நின்ற இளைஞர் ஒருவரிடம் உதவி கோரியுள்ளார். பணத்தை வைப்பிலிடுவதற்காக அந்த இளைஞனிடம், தனது வீட்டு மின்சார கணக்கு இலக்கத்தையும் ஆறாயிரம் ரூபாய் பணத…

  16. Published By: Digital Desk 3 28 Sep, 2025 | 12:47 PM சீனாவிலுள்ள உலகின் மிக உயரமான ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களில் கட்டுமான பணிகளை நிறைவு செய்து குய்சோவில் உள்ள மற்றொரு பாலத்தின் பொறியியல் சாதனையை இந்த பாலம் முறியடித்துள்ளது. சீனாவின் கரடுமுரடான தெற்கு மாகாணமான குய்சோவில் உள்ள நதி மற்றும் பரந்த பள்ளத்தாக்கின் மேலே 625 மீட்டர் உயரத்தில் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் அமைந்துள்ளது. https://www.virakesari.lk/article/226300

  17. யாழில் மாதா சொரூபத்தில் கண்ணீர் வடியும் காட்சி! 28 SEP, 2025 | 11:06 AM யாழ்ப்பாணம் - மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மாதா சொரூபத்தில் இருந்து கடந்த மூன்று தினங்களாக கண்ணீர் வடிகின்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த சம்பவமானது தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில் இதனை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் திரள்தின்றது. https://www.virakesari.lk/article/226294

  18. ராஜினி கொலையாளிகளை அம்பலப்படுத்திய பேரினவாதம்…! Vhg செப்டம்பர் 22, 2025 ராஜினி திராணகம அல்லது ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) இலங்கையில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். ராஜினி இராஜசிங்கம் 1989ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர், கூடவே யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும். ராஜினி, வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தின் தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் பெப்ரவரி 23, 1954 இல் பிறந்தார். நிர்மலா, சுமதி, வாசுகி ஆகியோர் இவரின் சகோதரிகள் ஆவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்துக் கொண்ட ராஜினி, 1973 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புலத்தில் இணைந்தார். அக்காலப்பகுதியில் மாணவர் அரசியல…

  19. பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு! கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் குற்றச் செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்வதற்கு வீடு சென்ற வேளை பொலிஸாரை கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணறொன்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ” நேற்றிரவு மாலை சுமார் 6.30 மணி அளவில் குறித்த பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றுள்ள நிலையில், பொலிஸாரைக் கண்டு அதிர்சியடைந்த சந்தேக நபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி வி…

  20. 23 Sep, 2025 | 03:26 PM ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டில்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு, குறித்த சிறுவன் அதே விமானத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். காபூலிலிருந்து புறப்பட்ட கேஏஎம் (KAM) விமானம், இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது, விமானத்தின் சக்கரப் பகுதிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாகத் திரிந்த ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கண்டனர். அவனை விசாரித்தபோது, தான் விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து வந்ததாகத் தெரிவித்தான். சிறுவன் ஒளிந்தி…

  21. சத்திரசிகிச்சை மூலம் உடலில் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது! சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உடலில் நூதனமான முறையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்து , சிகிச்சை அளித்து தங்கத்தை மீட்டுள்ளனர். கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் , சென்னையில் இருந்து , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில், பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய உத்தியோகஸ்தர்கள் பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , குறித்த பெண் சத்திர சிகிச்சை மூலம் உடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தமையை கண்டறியப்பட்டுள்ளது. இதை அடுத்து அப்பெண்ணை கைது செய்த உத்தியோகஸ்…

  22. எஜமானின் நலன் விசாரிக்க யாழ். மருத்துவமனை விரைந்த அழையா விருந்தாளி 20 September 2025 மனிதர்களைக் கடந்து ஐந்தறிவு ஜீவன்களுக்கும் கருணை உண்டு என்பதை நிருபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று யாழ். மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிட அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் சென்று பார்வையிடுவது வழக்கமானதொன்றாகும். அந்த வரிசையில் தனது எஜமானை பார்க்க நாய் ஒன்று சென்றுள்ள சம்பவம் பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. யாழ். மருத்துவமனையின் 24 ஆம் இலக்க விடுதியில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் பதிவானதாக எமக்குக் கிடைத்த தகவல்களின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. மருத்துவமனைக்குள் எவ்வித குழப்பமும் விளைவிக்காமல் குறித்த ந…

  23. மனிதனை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை! இந்தியா முழுவதும் தெருநாய் பிரச்சனை ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து இருக்கும் நிலையில் இது தொடர்பாக உத்தரபிரதேச அரசு ஒரு வினோதமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு தெருநாய் காரணமே இல்லாமல் இரு முறை மனிதர்களைக் கடித்தால் அந்த நாய்க்கு ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில காலமாகவே இந்தியாவில் தெருநாய் பிரச்சனை மிக மோசமான ஒன்றாக மாறியிருக்கிறது. தெருநாய் பிரச்சனையைக் கையாள உச்ச நீதிமன்றமும் கடந்த மாதம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தது. மேலும், இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது…

  24. கொத்மலை என்பது நாட்டின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்த, எப்பொழுதும் அழியாத பல நினைவுகளை கொண்ட அழகான வரலாற்று நகரமாகும். வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த கொத்மலை நகரம் அழகான மலைகளால் சூழப்பட்ட மிக பாதுகாப்பான மற்றும் அழகான பகுதி என்பதுடன் அங்கு மெய்யான கிராமவாசிகள் வசிக்கும் பல வரலாற்று கிராமங்கள் உள்ளன. அவ்வாறான அழகான நகரத்தில் அமைந்துள்ள ரணமுனே பீலி,கொத்மலை மாவெல நகரத்தின் அருகில் உள்ள மதிப்புமிக்க தனித்துவமான இடமாகும். இந்த பீலி, துட்டகெமுனு மன்னனின் ஆட்சிக் காலமான கி மு 137 மற்றும் 161 இல் இருந்த ஒரு பீலியாகும். தற்போது கொத்மலை என்பது ஒரு ஊரின் பெயர் என்றாலும், இலங்கை மன்னர் ஆட்சிக் காலத்தில், கொத்மலை பகுதி ஒரு நாடாக இருந்துள்ளது. அந்த காலத்தில் இந்த ரணமுனே பீலி அமைக்கப்பட…

  25. படக்குறிப்பு, சார்லஸ் மெவேசிகா தனது பிரிட்டன் ஓட்டுநர் உரிமத்தைக் காட்டினார், மேலும் தான் ஒரு முன்னாள் லண்டன் பேருந்து ஓட்டுநர் என்று கூறினார். கட்டுரை தகவல் ருனாகோ செலினா பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன் 16 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்த கட்டுரையில் சங்கடத்தை ஏற்படுத்தும் மற்றும் பாலியல் வன்முறை மற்றும் தற்கொலை குறித்த விவரங்கள் உள்ளன துபையின் மிக கவர்ச்சியான பகுதிகளில் செயல்பட்டு, பெண்களை சுரண்டி வரும் ஒரு பாலியல் வர்த்தகக் கும்பலின் தலைவர் பிபிசி புலனாய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளார். லண்டன் முன்னாள் பேருந்து ஓட்டுநர் என சொல்லிக் கொள்ளும் சார்லஸ் மெவேசிகா, மாறுவேடத்தில் இருந்த எங்களது செய்தியாளரிடம் ஒரு பாலியல் ரீதியான விருந்துக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.