செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த வைரமுத்து வசந்தராசா (வயது44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபரை கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தடுமாற்றம், தண்ணீரை கண்டால் பயம் போன்ற நிலை உருவானதால், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று வியாழக்கிழமை அவர் உயிரிழந்துள்ளார். நாய் கடித்த நிலையில் உரிய தடுப்பூசியை பெறாமையால் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி…
-
- 1 reply
- 361 views
-
-
மும்பை கோரேகாவ் ஆரே காலனி பகுதியில் அடர்ந்த காடு இருக்கிறது. இங்கு சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இப்பகுதியில் சிறுத்தை தாக்கி 5 பேர் காயம் அடைந்துள்ளனர். தற்போது மீண்டும் மூதாட்டி ஒருவரை சிறுத்தை தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறது. ஆரே காலனியில் பால்பண்ணை அருகில் உள்ள தனது வீட்டிற்கு வெளியில் நிர்மல் சிங் (68) என்ற மூதாட்டி இரவு 8 மணியளவில் ஊன்று கோல் உதவியுடன் நடந்து வந்து தின்னையில் வந்து அமர்ந்தார். ஏற்கெனவே சிறுத்தை ஒன்று அருகிலிருந்த புதருக்குள் மறைந்திருந்தது. அந்த சிறுத்தை மூதாட்டி மீது பாய்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி தன்னிடம் இருந்த கைத்தடியின் உதவியுடன் சிறுத்தையை எதிர்த்துப் போராடினார். மூதாட்டி மீது மீண்டும் சிறுத்தை பாய முயன்றது. ஆ…
-
- 0 replies
- 303 views
-
-
மட்டு. வவுணதீவில்... 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது! மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 21 வயது இளைஞர் ஒருவரை நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர் . குறித்த சிறுமியின் தந்தையார் வெளிநாட்டில் வேலைவாய்பு பெற்று அங்க பணியாற்றிவரும் நிலையில் தாயாருடன் வாழந்துவரும் குறித்த சிறுமியை சம்பவதினமான நேற்று தனிமையில் இருந்தபோது அங்கு சென்ற இளைஞன் சிறுமிக்கு தனது கையடக்க தொலைபேசியிலுள்ள ஆபாச படத்தை காட்டி சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாத…
-
- 0 replies
- 213 views
-
-
இந்தியாவின் மகாராஜாக்கள் அல்லது சுதேச ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்கள் பொதுவாக யானைகள், நடனமாடும் பெண்கள் மற்றும் பெரிய அரண்மனைகள் இவற்றுடன் இணைத்தே பார்க்கப்படுகிறார்கள். வரலாற்றாசிரியர் மனு பிள்ளை அவர்களின் பாரம்பரியத்தை ஆராய்கிறார். ஏராளமான நகைகளைப் பூட்டிக்கொண்டு, பெரிய அரண்மனைகளிலும் அலங்கரிக்கப்பட்ட நீதிமன்றங்களிலும் ஆட்சி செய்ததைத் தாண்டிப் பார்த்தால், அவர்கள், சிற்றின்பத்துக்கு அடிமைகளாக, கேலிப்பொருளாக, உல்லாசமாக வாழ்ந்ததாகவே அவர்கள் சித்தரிக்கப்பட்டார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் காலத்தில், உள் நாட்டு இளவரசர்களைக் கோழைகளாகவும் அரசாட்சியில் கவனமின்றி சிற்றின்பத்துக்கு அடிமையானவர்களாக இருந்ததாகவே சித்தரித்திருந்தார்கள். உதாரணமாக, ஒரு வெள்ளை அ…
-
- 1 reply
- 513 views
-
-
யாழ்.மாவட்டத்தில், மாறு வேடத்தில்... தலைமறைவாக இருந்த, கொலைச் சந்தேகநபர் கைது! யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கனோஜி என்ற வாள்வெட்டு குழு சந்தேக நபர் 2019ஆம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும், மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுதுமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சந்தேக நபர் கொக்குவிலை சேர்ந்தவரெனவும், தனுறொக் குறுப் என்ற வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது. மேலும் உப்புமடம் – கோண்டாவில் பகுதியில் காட்வெயார்கடை உரிமையாளருக்கு தலையில் அடித்து கொலை செய்த வழக்கி…
-
- 0 replies
- 315 views
-
-
யாழ்ப்பாணம்- அல்வாய் பகுதியில் வீடுகள் தீக்கிரை- வெட்டுக்குமார் கைது! யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த “வெட்டுகுமார்” என்பவரை கைது செய்த பொலிஸார் தலைமறைவாகியுள்ள ஏனையோரை தேடி வருகின்றனர். கடந்த 2ஆம் திகதி மது போதையில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் நுழைந்த வெட்டுக்குமாரும் அவரது கூட்டாளிகளும் இணைந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டமையால், 6 குடும்பங்கள் வீடுகளில்…
-
- 0 replies
- 455 views
-
-
சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் – மரபணு ரீதியாக பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர் என, கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மரபணு தொழில்நுட்பம், மூலக்கூறு அறிவியல் துறை நடத்திய நான்கு வருட ஆய்வை தொடர்ந்து இந்த விடயம் அவதானிக்கப்பட்டது. வேறு சில அம்சங்களை ஆராயும் போது, இலங்கையின் முக்கிய இனங்கள் பற்றிய இந்த அவதானிப்பு தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக, மேற்படி ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நம்பப்படுவது போல் இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றவில்லை என்றும், அவர்கள் இந்தியாவில் இருந்து தோன்றியதாகவும் டொக்டர் கயானி கல்ஹேன மேலும் கூறியுள்ளார். …
-
- 16 replies
- 1.1k views
-
-
காரைக்காலில் சமூக பொறுப்பற்றவர்களால் கொண்டு வந்து விடப்பட்ட 6 அடி நீள நாக பாம்பு யாழ்ப்பாணம்- நல்லூர், காரைக்கால் சிவன் ஆலய பகுதியில் சமூகப் பொறுப்பற்ற நபர்களினால் விடப்பட்ட 6 அடி நீளமான நாக பாம்பு மீள பிடிக்கப்பட்டு, வனவிலங்கு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் சிவன் ஆலய பகுதியில் 6 அடி நீளமான நாக பாம்பை இருவர் கொண்டு வந்து விட்டு சென்ற நிலையில், அது குறித்து தகவல் அறிந்த நல்லூர் பிரதேச சபையின் அப்பகுதி வட்டார உறுப்பினர் சி.கௌசல்யா, அது தொடர்பில் தவிசாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதன்பின்னர் அவர் ஊடாக வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதேவேளை அந்த பாம்பினை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீள பிடித்து, அங்கு வந…
-
- 0 replies
- 271 views
-
-
மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் அதிக மதுபானம் அருந்தும் போட்டி விபரீதமாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும், அவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தென்மராட்சி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், மதுபானம் அருந்தும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் யார் அதிக மதுபானம் அருந்துவது என்ற போட்டியில் ஒருவர் உயிரிழந்தார். அவர் மதுபானம் புரையேறி இறந்ததாக, அவருடன் போட்டியில் ஈடுபட்டவர்கள் விசாரணையில் தெரிவித்தனர். எனினும், அவர் அதிக மது அருந்தச் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசி…
-
- 4 replies
- 815 views
- 1 follower
-
-
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றுமாலை கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில் பாரிய கோமராசி மீன் பிடிபட்டுள்ளது. சுமார் 8 அடி நீளம் கொண்ட குறித்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டியிழுத்தனர். கோமராசி அல்லது புள்ளிச் சுறா என அழைக்கப்படும் குறித்த மீனை வலையில் இருந்து அகற்றி மீனவர்களால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது. வலைகளுக்கு நடுவே அதிகளவான மீன்கள் வந்த போதிலும் கோமராசி மீனின் வருகையால் மீன்கள் எதுவும் பிடிபடவில்லை சில நாட்களுக்கு முன்பு மேலும் ஒரு கோமராசி மீன் குறித்த சம்மாட்டியின் வலையில் அகப்பட்டதோடு நேற்று இரண்டாவது முறையாகவும் பிடிபட்டுள்ளது. ஆழ்கடலில் வசிக்கும் இம் மீன்கள் சில நாட்களாக கரைக்கு வந்து போவதாக…
-
- 0 replies
- 274 views
-
-
Editorial / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 07:26 - 0 - 84 FacebookTwitterWhatsApp பாராளுமன்ற உறுப்பினர் (எம்.பி) வீட்டின் கூரையிலிருந்து, மூன்று ஆந்தை குஞ்சுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அரிய வகையான இந்த மூன்று ஆந்தை குஞ்சுகளையும் வனவிலங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினர் பிடித்துச் சென்றுள்ளனர். புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டின் கூரையிலிருந்தே அந்த ஆந்தை குஞ்சுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அந்த ஆந்தை குஞ்சுகளை அவர் வளர்க்கவில்லை. வீட்டின் கூரையிலிருந்து அந்த ஆந்தை குஞ்சுகள் மூன்றும் கீழே விழுந்துள்ளன. இது…
-
- 0 replies
- 474 views
-
-
தனக்கு தானே, தீ மூட்டிக்கொண்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு - யாழில் சம்பவம் தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரம் ரவிச்சந்திரம் (வயது 48) என்ற 10 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை குறித்த நபர் போதையில் அவரது வீட்டுக்கு அருகிலுள்ள தனது சகோதரன் வீட்டுக்கு சென்று, சகோதரனுடன் முரண்பட்டு அவரை தாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்கு சென்றுள்ளார். இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்து…
-
- 32 replies
- 2.8k views
-
-
முல்லைத்தீவில்... தடத்தில் சிக்கிய, பெண் சிறுத்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது முல்லைத்தீவு- கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வனஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளது. 5 அடி நீளம் கொண்ட குறித்த பெண் சிறுத்தை, புலி வேட்டைக்காக கட்டப்பட்டிருந்த தடத்தில் சிக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர், சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மேலும் சிறுத்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் வில்பத்து காட்டில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1240510
-
- 0 replies
- 181 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் மயில்களின் வருகை அதிகரிப்பு September 16, 2021 மயில்களின் வருகையினால் வெற்றுக்காணிகள் வயல்வெளிகளில் உள்ள விசஜந்துக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் வெளாண்மை செய்கை அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில் பெரும்போக செய்கை ஆரம்பமாக உள்ள நிலையில் காலை முதல் மாலை வரை மயில்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மக்களினால் கைவிடப்பட்டுள்ள வெற்றுக்காணிகள் வயல் வெளிகளில் உள்ள விசஜந்துக்களான பாம்புகள் பூராண்கள் தேள்கள் நண்டுகள் விசப்பூச்சிகளின் தொல்லை மயில்கூட்டங்களின் வருகையினால் குறைவடைந்துள்ளதுடன் விசஜந்துக்களின் நடமாட்டங்களும் மயில்களின் விகாரமான சத்தங்களினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் மகி…
-
- 12 replies
- 925 views
-
-
இலங்கையில் உள்ளாடை பஞ்சம்? இலங்கையில் உள்ளாடைகள் இறக்குமதிக்குத்தடை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி ஊடகங்களில் கேலிசித்திரங்கள் வரை சென்றுள்ளது. இலங்கைக்குச் செல்வோர் எதை மறந்தாலும் ஜட்டிகளை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள், மறந்தீர்களானால் கச்சை யுடன் தான் அலையவேண்டும். அந்த நாட்டின் சூடான காலநிலைக்கு "கச்சை " பல "இச்சை"களைத் தோற்றுவித்துவிடும் அபாயத்தையும் கவனத்தில் கொள்கவென சிலர் வாரிவிட ஊடகங்களோ ஜட்டிகளை அமெரிக்க தயாரிப்பாக்கி கோவணத்தை உள்ளுர் மட்டத்திற்கு இறக்கிவிட்டுள்ளன. https://www.thaarakam.com/news/ca993f8c-c683-4d4b-a50a-19dd94c6b2c4
-
- 52 replies
- 5.1k views
- 3 followers
-
-
மன்னாரில்... திருட்டு பழி சுமத்திய, 14 வயது சிறுவன் தற்கொலை- கொலை என தாயார் சந்தேகம்! மன்னார் – கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவருடைய சடலம் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கள்ளியடியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவரின் அரிசி ஆலை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான முரண்பாட்டின் காரணமாவே குறித்த சிறுவன் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை காலை, கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி…
-
- 2 replies
- 320 views
-
-
தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி எடுத்த மகன்- வாழைச்சேனையில் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியில் தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணாமாக 67 வயதுடைய தனது தந்தையை கடுமையாக தாக்கிய 19 வயதான மகன், தந்தையின் கண்ணை தோண்டி சிதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த செயற்பாட்டுக்கு போதைவஸ்துப் பாவனையே காரணமாக அமைந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இவ்வாறு கண் சிதைவடைந்து வெளியில் வந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக…
-
- 1 reply
- 452 views
-
-
யாழில்... உயிரிழந்த நிலையில், சடலாக கண்டெடுக்கப்பட்ட இளைஞன்.. குழுவொன்றால் அடித்துக் கொலை? யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு பின்னர் உயிரிழந்தவர், ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, சம்பவம் இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை ஆரம்பித்த மல்லாகம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியுமாறும் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த சம்பவத்தில் நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது-24) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். யாழ்ப்பாணம்- காங்…
-
- 1 reply
- 240 views
-
-
நடிகர் சூரி வீட்டில் நகை திருடிய 'பப்ளிசிட்டி திருடன்' சிக்கியது எப்படி? 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ACTOR SOORI FACEBOOK கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற நடிகர் சூரியின் அண்ணன் வீட்டு திருமண விழாவில் காணாமல்போன 10 சவரன் நகையை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருடியது தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது. கைது செய்யப்பட்ட நபர் தனது சுய விளம்பரத்திற்காக முக்கிய பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இவ்வாறு செய்து வருபவர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். "ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் மணிவாசகம். இவர்…
-
- 2 replies
- 475 views
- 1 follower
-
-
கொழும்பில்... தனியார் வைத்தியசாலையில், மீட்கப்பட்ட கைக்குண்டு – பொலிஸார் வெளியிட்ட தகவல்! கொழும்பு – நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய மூவர் மீது கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக நாரஹேன்பிட்டி பொலிஸாரும் கொழும்பு குற்றவியல் பிரிவும் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. அத்கமைய வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினரிடமும் கட்டுமானப் பணிகளுக்காக வைத்தியசாலைக்குச் சென்ற சிலரிடமும் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அத்துடன், வைத்தியசாலையின் சி.சி.ரி.வி காணொளி காட்சிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகி…
-
- 0 replies
- 294 views
-
-
சண்டிகர்: அரியானா மாநிலம் ஹிஷார் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவர் வங்கியில் பணிபுரிகிறார். மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காது கேட்கும் கருவியை பயன்படுத்தி வரும் கணவர் மனைவியிடம் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- எனது மனைவி செல்வ செழிப்பானவள். அவர் தனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு என்னை அவமானப்படுத்தி வந்தார். சிறிய விஷயங்களுக்காக சண்டையிடுவார். நாளடைவில் இது சரியாகி விடும் என்று நம்பியிருந்தேன். ஆனால் அவரது நடத்தை மாறவில்லை. என் மனைவி என்னை…
-
- 3 replies
- 741 views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவ பீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார். குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும…
-
- 0 replies
- 228 views
-
-
பெண்ணின் உள்ளாடையில் இருந்த படி 6,400 கிலோமீட்டர் பயணித்த பல்லி 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RSPCA படக்குறிப்பு, இந்த மார்பக உள்ளாடையில் தான் பார்பி பல்லி பாதுகாப்பாக பயணித்திருக்கிறது. பெண்களின் உள்ளாடையை விரும்பும் ஒரு பல்லி, பார்படாஸ் நாட்டிலிருந்து, பிரிட்டனில் இருக்கும் யார்க்ஷருக்கு விமானம் வழியாக பயணித்து வந்திருக்கிறது. பார்பி என்றழைக்கப்படும் அந்த பல்லியை லீசா ரஸ்ஸல் என்கிற பெண்மணி, தெற்கு யார்க்ஷரில் இருக்கும் தன் வீட்டில், தன் பெட்டி படுக்கைகளை எல்லாம் பிரித்து மீண்டும் சரி செய்யும் போது கண்டுபிடித்தார். "அது நகரத் தொடங்கிய போது, நான் கத்த…
-
- 1 reply
- 569 views
- 1 follower
-
-
நால்வரை வைத்திசாலைக்கு அனுப்பிய குடை குடையொன்று மோதியதால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரி கொண்டுச் சென்ற குடை, தனது உடலின் மோதியதாக கோபமடைந்த அம்பியுலன்ஸ் சாரதி திட்டியதால், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நால்வர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் மற்றும் அம்பியுலன்ஸ் சாரதி ஆகியோர் இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/நால்வரை-வைத்திசாலைக்கு-அனுப்பிய-குடை/175-280605
-
- 2 replies
- 318 views
-
-
தாயின் இறப்பைத் தாங்காது உயிர்மாய்த்தார் மகன்!வெள்ளவத்தையில் சம்பவம்! தாயின் இறப்பைத் தாங்காது உயிர்மாய்த்தார் மகன் வெள்ளவத்தையில் சம்பவம்! தாயாரின் உயிரிழப்புச் செய்தியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவருடைய மகன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. வெள்ளவத்தை – மகேஷ்வரி வீதி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். பொறியியல் துறையில் கல்விகற்கும் 26 வயதான நபரே தூக்கிட்டு உயிர்மாய்த்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவருடைய தாயார், மாரடைப்புக் காரணமாக களுபோவில மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எ…
-
- 3 replies
- 878 views
- 1 follower
-