Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. நால்வரை வைத்திசாலைக்கு அனுப்பிய குடை குடையொன்று மோதியதால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரி கொண்டுச் சென்ற குடை, தனது உடலின் மோதியதாக கோபமடைந்த அம்பியுலன்ஸ் சாரதி திட்டியதால், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நால்வர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் மற்றும் அம்பியுலன்ஸ் சாரதி ஆகியோர் இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/நால்வரை-வைத்திசாலைக்கு-அனுப்பிய-குடை/175-280605

    • 2 replies
    • 319 views
  2. தாயின் இறப்­பைத் தாங்­காது­ உயிர்­மாய்த்தார் மகன்!வெள்ளவத்தையில் சம்பவம்! தாயின் இறப்­பைத் தாங்­காது­ உயிர்­மாய்த்தார் மகன் வெள்ளவத்தையில் சம்பவம்! தாயா­ரின் உயி­ரி­ழப்­புச் செய்­தி­யைத் தாங்­கிக்­கொள்ள முடி­யா­மல் அவ­ரு­டைய மகன் தவ­றான முடி­வெ­டுத்து உயிர்­மாய்த்­துக்­கொண்­டார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. வெள்­ள­வத்தை – மகேஷ்­வரி வீதி பகு­தி­யில் இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றது என்று வெள்­ள­வத்தை பொலி­ஸார் தெரி­வித்­த­னர். பொறி­யி­யல் துறை­யில் கல்­வி­கற்­கும் 26 வய­தான நபரே தூக்­கிட்டு உயிர்­மாய்த்­தார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவ­ரு­டைய தாயார், மார­டைப்புக் கார­ண­மாக களு­போ­வில மருத்­து­வ­ம­னைக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ளார். எ…

  3. உடுப்பிட்டியில் மோதல் -இராணுவப் பாதுகாப்பு September 8, 2021 உடுப்பிட்டியில் கிராமத்தில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து காவல்துறையினரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்தக் கிராமத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாள்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியது. இந்த மோதலில் சிலர் தலைமறைவாகிய நிலையில் வல்வெட்டித்துறை காவல்துறையினரின் அழைப்பின் பேரின் இன்றிரவு இராணுவத்தினர் சுற்றிவளைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். அதனால் அந்தக…

  4. நீதிமன்றங்களையும், பொலிசாரையும் 19 வருடங்களாக ஏமாற்றி வந்த மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நபரை, பண்டாரவளைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். பண்டாரவளைப் பகுதியைச் சேர்ந்த கப்பில பண்டார தர்மசிரி என்ற 48 வயதுடைய நபரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், கடந்த 2002 ஆம் ஆண்டு, மே மாதம் 14 ஆம் திகதி இரவு தமது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தப்பிச்சென்றிருந்தார். இது குறித்த வழக்கு பதுளை மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து குறித்த நபரை சந்தேக நபராகக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட குறித்த கொலை வழக்கு 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அன்றைய தினம்…

  5. "தொட்டில்" புடவையில்... கழுத்து இறுகி, 11 வயது சிறுமி உயிரிழப்பு! கேகாலை – தெரணியகல – மாளிபொட தோட்டத்தின் நிந்தகம பகுதியில் குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டில் புடவையில் கழுத்து இறுகி, சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 11 வயதான டில்மினி என்ற பாடசாலை சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில், தொட்டில் புடவையில் சிக்குண்டு, இந்த சிறுமி உயிரிழந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சிறுமி நாளாந்தம், தமது சகோதரர்களுடன், ஊஞ்சல்கட்டி விளையாடுவதை வழக்கமாக க…

  6. இங்கிலாந்தில்... செல்லப் பிராணிகளை திருடுவது, இனி குற்றச் செயலாகும்! இங்கிலாந்தில் செல்லப்பிராணிகளை திருடுவது ஒரு குற்றச் செயலாக கருதப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. கொவிட் முடக்க நிலை காலத்தின் போது, பதிவான திருட்டுக்களின் அதிகரிப்புக்கு பிறகு இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. செல்லப்பிராணியின் திருட்டு தற்போது ஒரு உரிமையாளரின் சொத்து இழப்பாகக் கருதப்படுகிறது. இந்த திட்டம் செல்லப்பிராணி திருட்டு பணிக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளில் ஒன்றாகும் . கடந்த ஆண்டு சுமார் 2,000 நாய்கள் திருடப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள், பொலிஸ்துறை, வழக்குரைஞர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அடங்கிய பணிக்குழு என்பன, விலங்கு நலக் குழுக்கள், பிரச…

  7. பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா காலமானார்! September 6, 2021 பிரபல சிங்கள பாடகரும் இசைக்கலைஞருமான சுனில் பெரேரா காலமானார். 68 வயதான இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து அண்மையில் வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையில், நியூமோனியா நிலை காரணமாக நேற்று (05) மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (06.09.21) அதிகாலை உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2021/165585

    • 12 replies
    • 833 views
  8. கலகொட அத்தே ஞானசார உனக்கு நான் சொல்கின்றேன், உன்னிடம் எந்த தேச பற்றும் இல்லை. உனக்கு விளங்குவது முஸ்லிம் பிரச்சினைகள் மட்டுமே. முஸ்லிம்கள் மட்டுமா இந்த நாட்டில் பிரச்சினை? பலம் இருந்தால் பேசு என ராஜாங்கனையே சத்தாரத்தன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். ஜனாதிபதி,பிரதமர் உட்பட இந்த நாட்டில் அனைத்து அரசியல்வாதிகளும் பெரிய கொள்கலன்களில் போதைபொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டில் இளைஞர்களுக்கு கொடுக்கின்றார்கள். நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் போதை பொருள். இன்று ஒரு காடு இல்லை, அனைத்து காடுகளையும் வெட்டி அழிக்கின்றார்கள். இந்த சிங்கள, பௌத்த அரசாங்கத்தில் மதுபானசாலைகள், சார…

  9. கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 30 வயது வரையிலானோருக்கு தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றபட்டுள்ளது. இன்னும் சிலர் ஏற்றிக்கொள்ளாமல் இருக்கின்ற நிலையும் காணப்படுகிறது. இந்நிலையில், ஒருவகையான தடுப்பூசியின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த வகையைச் சேர்ந்த தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட ஆண்கள் மட்டுமே தேவையென மணமகன் தேவையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. https://www.madawalaenews.com/…

  10. ஏ.ஏ.எம்.பாயிஸ் பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலியல் செயற்பாடுகளை ஈடுபடும் போது, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்துள்ளனர். வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள் குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியலில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் அதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தரவேற்றப்பட்டுள்ளமை குறிப்பித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என இரத்தினபுரி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என்.டீ.டி.வீரசிங்க உறுதிப்படுத்தினார். அங்குச் சென்றிருந்த கா…

  11. 1-2 minutes மணமேடையில் குட்கா (புகையிலை) மென்ற மணமகனின் கன்னத்தில் பளார் விட்டுள்ளார் மணமகள். திருமணத்தின் போதே, மேடையில் வைத்தே ஆட்டத்தை ஆரம்பித்த பெண்ணின் அதிரடி சம்பவ வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வட இந்தியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதனை யாரோ ஒருவர் வீடியோ படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் திருமணம் ஒன்று நடக்கிறது. மணமேடையில் மணமகனும், மணமகளும் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். அப்பொழுது மணமகன் வாயில் புகையிலையை வைத்திருக்கிறார். அடிக்கடி வாயை ஆட்டி அரைத்துக் கொண்டிருந்ததால் கடுப்பாகிய மணப்பெண், ஓங்கி ஒரு பள…

  12. ‘விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’: டான்ஸிங் ரோஸ் ரகளை (வீடியோ) சென்னை, கொரோனா தொற்று பரவலை தடுக்க ரயில் நிலையங்களில் முககவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் முககவசம் அணியாமல் நடைமேடையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரயில் நிலையத்தில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர், அந்த பெண்ணுக்கு அபராதம் விதித்தார். இதையடுத்து அந்த இளம்பெண் கையில் வைத்திருந்த முகக்கவசத்தை அணிந்து கொண்டு, அபராதம் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், டிக்கெட் பரிசோதகர் தொடர்ந்து அபராதம் விதித்ததில் உறுதியாக இருந்தார்.. இதனால், அந்த …

    • 19 replies
    • 1.1k views
  13. வாள் வெட்டில் உயிரிழந்த இளைஞனின் அஸ்திக்கு பெருமெடுப்பில் இறுதிச் சடங்கு August 30, 2021 யாழ்.குருநகர் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் அஸ்திக்கு உறவினர்கள் , நண்பர்கள் இறுதி கிரிகைகளை மேற்கொண்டனர். குருநகர் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த ஜெரன் (வயது 24) எனும் இளைஞன் படுகொலை செய்யப்பட்டார். யாழ்.போதனா வைத்திய சாலையில் சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனோ தொற்று கண்டறியப்பட்டது. அதனை அடுத்து சடலத்தை சுகாதார பிரிவினர் பொறுப்பெடுத்து தகனம் செய்ய முற்படட வேளை , அதற்கு பெற்றோர் , உறவினர்கள் , நண்பர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் வைத்தியசாலையில் …

  14. “மிகவும் அச்சமடையக் கூடிய... அளவிற்கு, கொரோனா தொற்று கொடிய நோய் அல்ல” கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 100 க்கு 81 விகிதமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டதை அறியாமல் வைரஸிலிருந்து மீண்டு வருவதாக கூறினார். மக்களிடையே காணப்படும் தேவையற்ற அச்சமே இறப்புகளுக்கு முக்கிய காரணம் என்றும் அவர் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இலங்கையில் இறப்பு விகிதம் இன்னும் 1.9 சதவீதமாக உள்ளது என்றும் எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டார். https://athavannews.com/2021/1236313

  15. (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விகாரையின் பிரதம பிக்கு ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பிற மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுவன் பிக்குவாக படிப்பதற்பாக விகாரையில் வந்து தங்கிருந்து படித்து வந்த சிறுவனை நீண்டகாலமாக பிரதம பிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பவதினமான இன்று புதன்கிழமை சிறுவன் பொலிசாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த பிக்குவை கைது செய்ததுடன், சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள…

    • 1 reply
    • 611 views
  16. யாழ்ப்பாணத்தில் இருந்து... 610 கிலோ மீற்றர் தொலைவில், 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம், 5.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆந்திராவில் காக்கிநாடாவின் தென்கிழக்கில் 296 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்று அதிகாலை தமிழக…

  17. சிகிச்சை பெற பெயர் பதிவுசெய்யும்போதே வீழ்ந்து இறந்த தொற்றாளர்! மருத்துவமனையில் சிகிச்சை பெற பெயர் பதிவுசெய்யும்போதே வீழ்ந்து இறந்த தொற்றாளர்! காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வவுனியா மருத்துவமனைக்கு சென்ற நபர், தனது பெயர் விவரங்களை பதிவுசெய்துகொண்டிருந்தபோதே நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றது. வவுனியா உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார்.அந்த நபர், காய்ச்சல் காரணமாக வவுனியா மருத்துவமனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சை பெறச் சென்றுள்ளார். அவரது உடல் நிலையை அவதானித்த தனியார் மருத்துமனையைச் சேர்ந…

  18. இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, வெளவால்களுக்கும் ஆந்தைகளுக்கும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கொழும்பில் இடம்பெறும் காட்சியொன்றை புகைப்படமெடுத்து மிகவும் உருக்கமான பதிவொன்று பேஸ்புக்கில் இடப்பட்டுள்ளது. கொழும்பு வோர்ட் பிளேசில் பிரதே அறை அமைந்துள்ள பகுதி மாலை ஆறு மணி முதல் அதிகாலை ஆறு மணிவரை பிரேத ஊர்வலம் நடக்கும் பகுதியாக காணப்படுகின்றது என அப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது, அந்தப் பகுதியில் உள்ள அலுவலகமொன்றில் பணிபுரியும் பெண்ணொருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இந்தப் படம் நேற்று மாலை நான்கு மணியளவில் நான் அலுவலகத்திலிருந்து திரும்பும்போது எடுத்தது- இந்தக்…

  19. பேய் விரட்டி 10 பேர் தனிமை-அம்பாறையில் சம்பவம் By Shana தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, வீடொன்றில் `பேய் விரட்டும்` சடங்குகளை செய்த சாமியார் உள்ளிட்ட 10 பேர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை - மாயாதுன்ன பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டதிலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களுக்கு பொலிஸார் பிணை வழங்கியுள்ளதோடு, சாமியார் உள்ளிட்ட 10 பேரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.14 நாள்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர், இவர்கள் அனைவருக்கு எதிராகவும் அம்பாறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்ப…

  20. 15 வயது சிறுமி விற்பனை – 4 இணையத்தளங்களுக்கு தடை! கல்கிசை பகுதியில் 15 வயதான சிறுமியொருவரை பாலியல் செயற்பாடுகளுக்காக இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வௌியிட்ட 4 இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மகளிர் மற்றும் சிறுவர் பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் https://athavannews.com/2021/1233947

  21. யாழில், நீண்ட கால குடும்ப பகை காரணமாக காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தமையால், காதலர்கள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முனைந்த நிலையில் காதலன் உயிரிழந்துள்ள நிலையில், காதலி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உறவு முறையான 19 வயது இளைஞனும் , 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப பகை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் தமது பிள்ளைகள் காதலிப்பதனை அறிந்த பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் காதலர்கள் இருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முனைந்துள்ளனர். இந்நிலையில், இருவரையும் மீட்டு…

    • 0 replies
    • 207 views
  22. நாய்... இறந்த சோகத்தில், உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா – யாழில் சம்பவம்! யாழ்ப்பாணத்தில் செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாட்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பின்னர் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜெயமலர் (வயது-61) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, குறித்த சடலம் சுகாதார முறைப்படி மின்தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1233399

    • 9 replies
    • 841 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.