துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
சமீபத்தில் முகப்புத்தகத்தில் கண்ணுற்ற காணொளி. உடனடியாக நண்பனுடன் தொடர்பு கொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொண்டேன். முற்றிலும் உண்மை தனிப்பட்ட முறையில் குறித்த வைத்தியரையும் தெரியுமென்பதால் அவரிடமும் உறுதிப்படுத்திக்கொண்டேன். வைத்திய செலவுக்காகும் தொகை மிகப்பெரிதென்பதால் நல்லுள்ளங்களிடம் உதவிவேண்டி நிற்கிறார் இந்த சிறுமி. உதவும் எண்ணம் கொண்டவர்கள் நேரடியாக காணொளியில் இருக்கும் வங்கிக்கணக்கிற்க்கு செலுத்திவிட்டு என்னிடமோ அல்லது அதிலுள்ள வாட்ஸ் ஆப் இலக்கத்திற்கோ அறியத்தந்தால் உங்களுக்கான காணொளியை வெளியிடும் போது அறியத்தர உதவியாக இருக்கும். என்னுடைய உதவித்தொகையை ஏற்கனவே குறிப்பிட்ட கணக்கிற்கு செலுத்தி உறுதிப்படுத்திக்கொண்டும் விட்டேன். நல்லுள்ளங்களுக்கு நன்றிகள் ht…
-
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
'கனடியத் தமிழர் தேசிய அவை- NCCT' கனடா வாழ் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டு, சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டு கனடிய மண்ணில் பல்வேறு பணிகளை கனடா வாழ் தமிழ் மக்களுக்கும் தமிழீழ தாயக மக்களுக்கும் ஆற்றி வருகின்றது. குறிப்பாக தமிழர்களின் மறுக்கப்பட்ட நீதியை வென்றெடுக்க சனநாயக ரீதியாக பெரும் பணியை செய்வதோடு 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தின் கோர வடுவால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட தமிழீழ தாயக மக்களை அவல வாழ்வில் இருந்து மீட்டு மீண்டும் மறுவாழ்வு கொடுத்து வாழவைக்கும் பணியையும் 'மண்வாசனை' திட்டத்தினூடாக இந்த மண்ணில் இருந்து ஆற்றி வருகின்றது. முற்று முழுதாக தாயக மக்களின் துயர் துடைப்பை மையப்படுத்திய பணிகளை மட்டுமே கொண்டதாக கனடிய தமிழர் தே…
-
- 1 reply
- 458 views
-
-
‘சிறுவர் போசாக்கு வாரம்’ 100 குழந்தைகளை உள்வாங்கும் திட்டம். போசாக்கு மாதத்தினை முன்னிட்டு போசாக்கு குறைந்த சிறுவர்கள் (இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் சிறுவர்கள் ஒரு வயது முதல் 5வயது வரையானவர்கள்) , தாய்மார்களுக்குமான சத்துணவு வழங்கலினை மேற்கொள்ளும் திட்டத்தினை தேன்சிட்டு உளவள அமைப்பானது பரிந்துரை செய்துள்ளது. இத்திட்டத்தில் 2வாரகாலத்திற்கான போசாக்கு உணவுத் திட்டத்தின் கீழ் வறுமையால் நல்லுணவு கிடைக்காத போசாக்கு குறைபாடுள்ள குழந்தைகள் 100பேரைத் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யவுள்ளோம். வடகிழக்கில் இரு இடங்களில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் குழந்தைகளுக்கான 2வாரத்திற்கான 2நேர உணவு மற்றும் மாலைநேர சிற்றூண்டிகளும் வழங்கி விழிப்பணர்வு வாரமாக அனுட்டிக…
-
- 0 replies
- 783 views
-
-
‘தேன்சிட்டு இசைவிருது 2014′ மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள். எமது கலைஞர்களின் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் நேசக்கரம் உப அமைப்பான தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் ஏற்பாட்டில் மாவட்டம் தோறும் ‘தேன்சிட்டு இசைவிருது 2014′ தேர்வு நடைபெற்று வருகிறது. 02.08.2014அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது தேர்வு இடம்பெற்றது. இந்நிகழ்வானது தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் அனுசரணையுடன் ஏறாவூர்பற்று பிரதேச கலாசார பேரவையின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் நாட்டாரியல் பாடல் தேர்வு போட்டியில் நூற்றிற்கு மேற்பட்ட கலைஞர்கள் கலந்து சிறப்பித்தனர். வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் கோவில் முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வினை பிரதேச செயலாளர் உதயசிறீதர் அவர்கள் தலைமையேற்றிர…
-
- 0 replies
- 922 views
-
-
‘தேன்சிட்டு இசைவிருது 2014′ முல்லைத்தீவு மாவட்ட முடிவுகள். தேன்சிட்டு இசை விருதுக்கான முல்லைத்தீவு மாவட்ட பாடகர்களுக்கான குரல் தேர்வு 16.09.2014 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நேசக்கரம் அமைப்பின் அனுசரணையில் தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை யோ.புரட்சி அவர்கள் நெறியாள்கை செய்தார். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் நூறு வரையான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பார்வையாளர்களும் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் திரு.இ.பிரதாபன் அவர்கள் ஆசியுரை கூறி சுடறேற்றினார். பிரதேச செயலக முக்கிய அதிகாரிகளும், வண பிதா ரோய் அவர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்துக் …
-
- 1 reply
- 669 views
-
-
-
IBC தமிழ் தொலைக்காட்சியில் பிரதி ஞாயிற்று கிழமைகளில் மத்திய ஐரோப்பிய நேரம் மாலை 7:30 மணிக்கு ( 19h 30 ) ஒளிபரப்பாகும் "லகர தொடு கரம் கொடு " நிகழ்ச்சியில் பங்குபற்ற இன்றே தொடர்பு கொள்ளுங்கள்..... இது கடந்த வரம் ஒளிபரப்பானது...
-
- 0 replies
- 723 views
-
-
“தேன்சிட்டு” ஆயுர்வேத மருத்துவ குறுநிலம் உருவாக்கம். அருகிவரும் தமிழ் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மேம்படுத்திப் பேணும் நோக்கிலும் ஆங்கில வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத (வாதம், அஸ்மா , நீழிழிவு…..போன்ற) நோய்களைக் குணப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மாணவர்களுக்கு சித்த வைத்தியப் பயற்சியை வழங்கும் நோக்கிலும் எம்மால் உருவாக்கப்படும் தேன்சிட்டு குறுநிலத்தில் அரிய வகை 500மூலிகைச் செடிகளைப் பயிரிடும் முயற்சிகளை மேற்கொள்கிறோம். இதன் மூலம் ஆயுர்வேத வைத்திய நிலையத்தையும் உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது மருத்துவத்துறையை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்பினையும் உருவாக்க முடியும். முழுமையாக அழிந்து வரும் தமிழ் ஆயுர்வேத சித்த வைத்தியத்தினை எமது மக்கள் சரியான வகையில் பெற்றுக் கொள்ளும…
-
- 19 replies
- 3.2k views
-
-
100பாலர் பாடசாலை மழலைகளுக்கான கற்றல் உபகரணம் வழங்கல். மட்டக்களப்பு சவுக்கடி,ரமேஸ்புரம்,ஐயங்கேணி ஆகிய கிராமங்களின் முன்பள்ளி மழலைகள் 100பேருக்கான உளவள பயிற்சிக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. தேன்சிட்டு நேசக்கரம் உளவள அமைப்பின் களச்செயற்பாட்டாளர்களால் தெரிவு செய்யப்பட்ட 100 குழந்தைகளுக்குமான உதவியை 30.03.2015அன்று பிறந்தநாளைக் கொண்டாடிய பெயர் குறிப்பிட விரும்பாத உறவு ஒருவர் வழங்கியிருந்தார். தலா குழந்தையொன்றுக்கு 200ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்வுதவியை முன்வந்து உவந்தளித்த பெயர் குறிப்பிட விரும்பாத உறவுக்கு நேசக்கரம் தேன்சிட்டு உளவள அமைப்பானது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. http://nesakkaram.org/ta/nesakkaram.3920.html
-
- 4 replies
- 1.2k views
-
-
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600
-
- 0 replies
- 766 views
-
-
2 குழாய்கிணறுகளின் வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டன. அம்மாவின் திவசம் மற்றும் பெரியக்காவின் 75வது பிறந்தநாள் சார்ந்த உதவிகளின் படி 2 குழாய்க்கிணறுகளை செய்வதற்கான காலம் ஆனி என கணிக்கப்பட்டது. அதாவது இதற்கு முன்னர் தண்ணீருக்கான துவாரம் போடும் போது மழைத்தண்ணீர் மேலே நிற்பதால் தண்ணீரை தொடர்ந்து பெற முடியாது போய் விடும் என்பதால் தண்ணீர் கீழிறங்கும்வரை பொறுக்கவேண்டியதாயிற்று. ஆனால் அதற்கிடையில் கொரோனா காரணமாக உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டதால் மேலும் தள்ளிப்போடவேண்டி வந்து விட்டது. ஆனாலும் இனியும் தாமதித்தால் மீண்டும் மழை வந்தால் மீண்டும் ஒரு வருடம் தோண்டமுடியாது போய் விடும் என்பதால் கொரோனா உள்ளிருப்பு காலத்தில…
-
- 11 replies
- 1.7k views
- 1 follower
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து கல்வி கற்கும் 15மாணவர்களுக்கான கல்வியுதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது. மீள்குடியேறியுள்ள கிராமங்களில் வாழும் இம்மாணவர்கள் தமது கல்விச் செயற்பாட்டைத் தொடர்வதற்கான பொருளாதார உதவிகளை இழந்து நிற்கின்றனர். ஒரு மாணவருக்கு 10€ (அண்ணளவாக இலங்கை ரூபா 1500ரூபா) தேவைப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் முன்னாள் போராளிகளிலிருந்து 5மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கான உதவிகளை எம்மிடம் வேண்டியுள்ளனர். 2மாணவிகளும் 3மாணவர்களும் உறவுகளிடமிருந்து உதவிகளை எதிர்பார்த்து விண்ணப்பித்துள்ளனர். ஒரு மாணவருக்கு தலா 4ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது. உதவ விரும்பும் உறவுகள் கீழ் வரும் விபரங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். உதவிகளை…
-
- 1 reply
- 1.1k views
-
-
200ஏக்கர் நிலத்தில் உருவாகும் மாதிரிக்கிராமம். மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக பிரிவக்கு உட்பட்ட காரமுனை பகுதியில் நேசக்கரம் கைவினைப் படைப்பாளிகள் அமைப்பினால் 99வருட குத்தகைக்கு 200ஏக்கர் காணி பெறப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு சுயதொழில் ஊக்குவிப்புகளை உயர்த்தும் வகையில் மேற்படி காணி பெறப்பட்டுள்ளது. இந் நிலத்தினை மாதிரிக் கிராமமாக உருவாக்கும் எமது முயற்சிக்கு ஆதரவுகளை வேண்டி நிற்கிறோம். பாற்பண்ணை, மீன் வளர்ப்பு, சேனைப்பயிர்ச்செய்கை ,கால்நடை வளர்ப்பு போன்றவைகள் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் பெற்றுக் கொள்வோர் கீழ்வரும் விபரங்களில் பெற்றுக் கொள்ளலாம். Shanthy +49 (0)678…
-
- 1 reply
- 1.4k views
-
-
2011 – 2014 வரையான கடன் உதவித்திட்டத்தின் தொகுப்பறிக்கை. சிறு சிறு துளியாக பாதிக்கப்பட்டவர்களின் துணையாக எழுந்த நேசக்கரமானது 2011 யூலைமாதம்; கடன் வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்திருந்தது. இதுவொரு பரீட்சார்த்த முயற்சியாக செயற்படுத்த திட்டமிட்டோம். புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்படும் நிதியை மீள செலுத்தக் கூடியவர்களிடமிருந்து மீளப்பெறுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் வழங்கும் உதவிகளை கடன் அடிப்படையில் வழங்கி மீளப்பெறும் நிதியை சுழற்சி முறையில் அடுத்தடுத்தவர்களுக்கு பயன்படுத்தலாம் எனவும் திட்டமிடப்பட்டது. கட்டம் 1. திருமுறிகண்டியில் மீள்குடியேறிய குடும்பங்களில் 4குடும்பங்களை தெரிவு செய்து தலா ஒரு குடும்பத்திற்கு 30ஆயிரம் ரூபா அடிப்படையில் 120000ரூபா(ஒருலட்சத்த…
-
- 2 replies
- 623 views
-
-
2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்பு மேற்கு வலயம் ஏறாவூர் மேற்கு கோட்டப்பிரதேசத்தில் நடைபெறும் 2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேசம் இலவச வழிகாட்டி பயிற்சி முன்னோடிப் பரீட்சைகளில் மேற்படி கோட்டப் பிரதேசத்தில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற 48மாணவர்களுக்குமான சிறப்பு தயார்படுத்தல் பயிற்சி வகுப்பினை ஆவணி 24ம் திகதி வரையும் நடாத்த திட்டமிட்டு மாணவர்களுக்கான தொடர் பயிற்சிநெறி நடைபெற்று வருகிறது. இம்மாணவர்கள் அனைவரும் திங்கள் தொடக்கம் சனிக்கிழமை வரையிலும் தங்கி நின்று கல்வியைப் பெறுகின்றனர். இவர்களுக்கான உணவு இதர அடிப்படை உதவிகளை சோபா நிறுவனம் வழங்கிவருகிறது. நேசம் …
-
- 0 replies
- 657 views
-
-
2014 க.பொ.த.சாதாரணதரம் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான உதவி. 2014 க.பொ.த.சாதாரணதரம் தோற்றும் போரால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களிற்கான நேசக்கரம் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் 6மாத பயிற்சி வகுப்புகளை நடாத்தவுள்ளோம். விஞ்ஞானம், இயந்திரவியல் துறைகளுக்கான மாணவர்களை அதிகரிக்கும் வகையில் எம்மால் நடத்தப்பட்டு வரும் பயிற்சி வகுப்புகளில் கடந்த வருடமும் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வருடம் அனைத்துப் பாடங்களுக்குமான பயிற்சிகளை வழங்கவுள்ளோம். இம்மாணவர்களுக்கான இலவச கற்றல் பயிற்சி வகுப்புகளை எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தினர் கிராமங்கள் தோறும் செயற்படுத்தி வருகின்றனர். இவ்வருடம் முதல் குறைந்தது ஆறுமாத காலம் பயிற்சி வகுப்புகளை நடாத்துவதென தீர்ம…
-
- 7 replies
- 813 views
-
-
2014ஜனவரியிலிருந்து மே மாதம் வரையிலான முகவர் வியாபார கணக்கறிக்கை. BY ADMIN IN கணக்கறிக்கை எமது முகவர் வியாபாரத்தின் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.எமது முதலீட்டாளர்களில் ஒருவரான சபேசன் அவர்களின் இலாபமானது அவரால் எமக்கு தரப்பட்ட வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்படுகிறது. மற்றும் தேன்சிட்டு உளவள அமைப்பின் கல்விச் செயற்பாட்டிற்கு கனடாவைச் சேர்ந்த றவி ,சுரேஷ் நண்பர்களின் உதவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதர முதலீட்டாளர்களின் இலாபத்தின் மூலம் கடந்த 5மாதங்களில் எமது வியாபாரத்தின் இலாபத்திலிருந்து போரால் பாதிக்கப்பட்ட 2குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சிக்கு உதவியுள்ளோம். கடந்த 5மாதங்களில் மொத்தம் தொழிலாளர் கொடுப்பனவு வாகனம் யாவும் கொடுத்து எமக்கு கிடைத்த மொத்த இல…
-
- 0 replies
- 508 views
-
-
285€ உதவினால் ஒரு குடும்பத்தின் வாழ்வு முன்னேறும். 17வருடங்கள் போராட்ட வாழ்வு. போராளியையே திருமணம் செய்து கொண்டான் பிள்ளைகள் 2. அவன் பங்கேற்ற களங்களில் பலமுறை காயமுற்று உடலில் எறிகணைத்துகள்கள் கலந்து அந்த வலிகளோடு வாழும் ஒரு முன்னாள் போராளி. எல்லா விடயங்களிலும் அவன் ஒரு முன்னுதாரணம். இதைச் செய்யென்றால் இதற்கு மேலும் தனது வலுவை வழங்கி வேலைகளை முடிக்கும் கடமையுணர்வாளன். இறுதியுத்தத்தில் எல்லாம் இழந்து போனபின்னரும் அவனது குடும்பத்தின் முயற்சியில் உயிர் பிழைத்தவன். சிறை புனர்வாழ்வு என எல்லாத் துயரங்களையும் அனுபவித்தான். சிறையிலிருந்து ஊர் திரும்பியவனுக்கு அடுத்த வேளையைக் கொண்டு செல்ல ஆதரவற்ற நிலமை. அன்றாட வாழ்வை குழந்தைகளின் பசிபோக்க முடிந்தவரை கிடைக்கிற தொழில்கள் யா…
-
- 7 replies
- 1.3k views
-
-
34மாணவர்களுக்கான புத்தகப்பைகள் பாதணிகள் தேவை. மன்னார் மாவட்டம் மடுவலயத்திற்கு உட்பட்ட மினுக்கன் ஆரம்பப் பாடசாலையில் தரம் 1முதல் 5வரையான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இவ்வகுப்புகளில் மொத்தம் 34மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இப்பிரதேசம் வசதிகளைக் கொண்டிராத தன்னிறைவற்ற பிரதேசமாகும். கல்வி கற்கும் மாணவர்களின் குடும்ப வாழ்வாதார நிலமையும் வறுமைக்கோட்டின் கீழ்தான் இருக்கிறது. மினுக்கன் பாடசாலையும் மிகவும் வசதிகள் குறைந்த பாடசாலையாகவே காணப்படுகிறது. இங்கு 1முதல்5வரையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பாதணிகள் புத்கப்பைகள் கூட இல்லாமலேயே பாடசாலை செல்கின்றனர். இப்பிள்ளைகளுக்குத் தேவையான பாதணிகள் , புத்தகப்பைகளை வழங்குமாறு குறித்த பாடசாலையின் அதிபர் விண்ணப்பித்துள்ளார்…
-
- 7 replies
- 1.2k views
-
-
35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரம் தேவை. செங்கலடி பிரதேச செயலர் பிரிவு வந்தாறு மூலை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் 35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி மற்றும் வாழ்வாதார உதவிகள் தேவைப்படுகிறது. கட்டாய நிலப்பறிப்பை தடுக்கும் நோக்கில் இந்தப் பகுதியில் உள்ள தமிழ்ப்பற்றாளர்களினால் உருவாக்கப்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் தற்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட காணிகள் அற்ற 35 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். மேற்படி கிராமத்தில் குடியேறியுள்ள குடும்பங்களுக்கான அடிப்படைத் தேவைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. குடிநீர் வசதிகள் கூட இல்லாத நிலமையில் வாழும் இக்குடும்பங்களுக்கு குளாய்கிணறுகளை அமைத்துக் கொடுப்பதன் மூலம் குடிதண்ணீரை அவர்கள் …
-
- 19 replies
- 1.5k views
-
-
போரால் பாதிக்கப்பட்ட 5குடும்பங்களுக்கான தொழில்விருத்திக்கான உதவியாக 252500ரூபா (இரண்டு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து ஐநூறு ரூபா) பண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலிருந்து நேசக்கரம் நீட்டிய நாதன் , பவித்திரன் , MGR அகியோரின் உதவியில் மேற்படி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3குடும்பங்களுக்கான அவசர நிதியாக 50000ரூபா (ஐம்பதாயிரம் ரூபா) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இப்பங்களிப்பை வழங்கிய பெயர் குறிப்பிட விரும்பாத உறவுகளுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளை கிழக்கு மாகணத்தில் போரால் பாதிக்கப்பட்ட உதவிகள் பெற்ற குடும்பங்களின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம். உறவுகளுக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள :- முகவரி: Nesakkaram e.V Hauptstr …
-
- 0 replies
- 607 views
-
-
https://chng.it/ZZCGSdj7Bn Justice for the Forcibly Disappeared: Ensure Truth, Justice, and Accountability for Chemmani and Beyond We, the undersigned, call upon the Government of Sri Lanka to take immediate, transparent, and meaningful action to address the long-standing issue of enforced disappearances and mass graves, including the recent discovery at Chemmani, Jaffna. The excavation at the Ariyalai Siththupaaththi Hindu Crematorium has already uncovered 19 bodies, including three infants. This painful discovery has reopened the wounds of thousands of families whose loved ones were forcibly disappeared during Sri Lanka’s brutal civil war. Chemmani is not just a site of…
-
-
- 1 reply
- 145 views
- 1 follower
-
-
செயல் செயல் செயல்............ புங்குடுதீவில் மக்கள் இல்லை அங்கு எல்லாமே அழிந்து போய்க்கிடக்கின்றது என்பவர்களுக்கும் ஒரு பகுதிக்கு செய்கின்றோம் என்பவர்களுக்கும் சமர்ப்பணம்..... (இந்த சந்திப்புக்காக எம்மவர்கள் சென்றபோது மிகவும் பயங்கர காய்ச்சல் அப்பகுதியில் பரவியிருந்ததால் பிள்ளைகளின் வரவு குறைவாக இருந்ததை அந்தந்த பாடசாலை ஆசிரியைகள் வீடியோவில் சொல்லியுள்ளார்கள்)
-
- 1 reply
- 571 views
-
-
France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன் Sinnathamby Kumarathas அவர்களின் மேற்பார்வையில் எமது ஊரிலுள்ள மூலவளங்களை பாவனைக்குட்படுத்துவதனூடாகவும் அங்கு வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வளங்குவதனூடகவும் எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு பசளை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சியின் பரிட்சார்த்த ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில படங்கள். …
-
- 25 replies
- 3.3k views
-
-
France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் + நேசக்கரம் = 35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அன்பார்ந்த உறவுகளே 35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரமாகத்தேவை என யாழ்களத்தில் நேசக்கரத்தின் பொறுப்பாளர் சாந்திக்கா அவர்களால் கோரப்பட்ட கோரிக்கையை France புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் Saspanithi SUPPIAH மற்றும் பொருளாளர் Logeswaran KANDASAMY ஆகியோரது கவனத்துக்கு கொண்டுவந்திருந்தேன். செயலாளர் சாந்தியக்காவினுடன் பேச்சுக்களை நடாத்தி அதற்கான பத்திரங்களை தயார் செய்தபடியிருக்க பொருளாளர் தனது வீட்டில் இதைப்பார்த்தபடி இருந்தபோது அதைக்கவனித்த அவரது மகன் Logeswaran சந்துரு (பட்டதாரி - கணக்காளர்) மக்களுக்கு தண்ணீர் தானே நானே செய்கின்றேன் எ…
-
- 50 replies
- 6k views
-