மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
956 topics in this forum
-
பல வெற்றிகளுக்கு வேவுத்தகவல்களை மிகத் துல்லியமாக பெற்றுத்தந்தவர் மேஐர் அசோக். வேவுப்புலி மேஐர் சேரன் / அசோக் குணசிங்கம் குணராஐ் வீரச்சாவு 02.8.1994 1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த அசோக் பயிற்சியின் பின் வலிகாமப் பகுதியில் நின்று பல்வேறு களம் கண்ட ஒரு வீரனாவான் கந்தையாவைப் போலவே இவனும் பலாலிக்கான ஒரு வேவுக்காரன்.ஆனால் இவனோ வலிகாமப் பகுதியிலிருந்து தனது வேவு நடவடிக்கையை ஆரம்பித்தான்.ஒவ்வொருமுறை வேவு நடவடிக்கையின் போதும் இவனது தூரம் அதிகரித்துக் கொண்டபோனது. அதிலும் ஒரு ஆனந்தம் ஏனெனில் தான் ஓடித்திரிந்து விளையாடிய தான் படித்த பாடசாலை இவைகளை சக போராளிகளுடன் பகிர்ந்து கொண்டதுடன் .குறைந்தளவு போராளிகளுடன் எதிரிக்கு பெரும் சேதத்தை ஏற்ப…
-
- 0 replies
- 951 views
-
-
30.07.2003 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் முருகேசன், மேஜர் இசைநிலவன், மேஜர் புகழினி மற்றும் மேஜர் தனிச்சுடர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பன்னாட்டுக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட படகு விபத்தின்போது கடற்கரும்புலி லெப்.கேணல் முருகேசன் (கில்லரி) (கணேசன் சிவகுருநாதன் - ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன் (மதிவண்ணன்) (கந்தசாமி தனேந்திரன் - காரைநகர், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் புகழினி (விஜயராணி வடிவேல் - மூதூர், திருகோணமலை) கடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர் (பூவிழி) (இராசலிங்கம் மலர்விழி - பூநகரி, கிளிநொச்சி) ஆகியோர் வீர…
-
- 16 replies
- 1.3k views
- 1 follower
-
-
எத்தடை வரினும் எம்படை நகரும் கப்டன் அன்பரசி படையணி எத்தடை வரினும் எம்படை நகரும் அன்பரசி படையணியின் வீரம்கண்டு எதிரி அதிர்ந்தான். 29.07.1995ம் ஆண்டு அம்பாறை மாவட்டம் 4 ஆம் முச்சந்தி சிறிலங்கா படை முகாம் தாக்குதலின்போது கப்டன் அன்பரசி வீரச்சாவடைந்தாள். அன்பரசி ஒரு சுறுசுறுப்பான விவேகமான போராளி. இவளது ஞாபகமாகவே மட்டு – அம்பாறை மகளிர் படையணிக்கு அன்பரசி படையணி என்று பெயர் சூட்டப்பட்டது. லெப். கேணல் மதனாவினது சுறுசுறுப்பையும், துணிவையும், புத்துணர்வையும், களங்களில் படைநடத்தும் திறமையையும் கண்ணுற்ற மட்டு அம்பாறை மாவட்ட சிறப்புத்தளபதி அவர்கள் படையணியின் முதல் சிறப்புத் தளபதியாக லெப். கேணல் மதனாவை அன்பரசி படையணியின் சிறப்புத்தளபதியாக நியமித்தார்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 344 views
-
-
லெப். கேணல் சரா நினைவில்...! அவனது முகத்தைக் கடைசியாக ஒரு தரம் பார்க்க வேண்டும். எனக்கு இதயம் வெடித்து விடும்போல இருந்தது. எங்கள் போராளிகளின் உடல்கள் துப்பரவு செய்யும் இடம். ” சராவின் உடல் வந்துவிட்டதா ? ” என்னை மாதிரிப் பலர் கேட்டுக்கொண்டு நின்றார்கள். உள்ளே போனேன். வீரமரணமடைந்த எமது போராளிகள் , அங்கொன்றும் , இங்கொன்றுமாகக் கிடந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் முகங்களாக நான் தடவினேன். எனக்கு பழக்கமான சராவின் முகத்தைக் காணவே இல்லை. ஆனால் அந்தத் தோழர்களின் முகங்களும் எனக்குப் பல கதைகளைச் சொல்லின. பதினைந்து வயதிருக்கும். சற்று நிறமான , சுருள் சுருளான தலைமயிருடன் ஒரு போராளி முகம் வாடிக்கிடந்தான் அவனது உயிரை அழைத்துச் சென்ற விமானக் க…
-
- 3 replies
- 1.1k views
-
-
விடுதலை விலைமதிப்பற்றது. நாளை மலரப் போகும் தமிழீழத்திற்காக ஆயிரமாயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இன்னுயிர்களை விடுதலை வேள்விக்கு காணிக்கையாக்கிக் கொண்டார்கள். தனது எதிர்காலத் தலைமுறை எந்த வித அடக்குமுறைகளும் அற்று உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்காக தன்னை அழித்துக் கொண்டவர்தான் குட்டிமணி என்று அழைக்கப்படும் திரு செல்வராசா யோகச்சந்திரன். ஈழத் தமிழர்களின் இன்னல்கள் நிரந்தரமாகக் களையப் படவேண்டுமென்றால் தனித் தமிழீழம்தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் மிக உறுதியாக இருந்தவர் குட்டிமணி. அந்த விடுதலை வீரரை 08-05 1981 அன்று சிங்களக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிங்கள நீதிமன்றம் அவருக்கு மரணதன்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்த நீதிப…
-
- 2 replies
- 1.1k views
-
-
லெப்டினன்ட் செல்லக்கிளி வேர் விட்ட விடுதலையின் உயிர் மூச்சு செல்லக்கிளி, அம்மான், சந்திரன்…. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தி ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில் கல்வியைக் கைவிட்ட செல்லக்கிளி, ஆரம்பத்தில் அண்ணா கோப்பி விற்பனை வானில் சாரதியாக வேலை பார்த்தான். செல்லக்கிளி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே இயக்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன். எந்த வாகனத்தையும் மிகத் திறமையாக ஓட்டும் பயிற்சியைப் பெற்றிருந்த செல்லக்கிளி, ஆயுதங்களாகட்டும், மோட்டார் இயந்திரங்களாகட்டும் பழுத…
-
- 7 replies
- 2.2k views
-
-
இம்ரான் பாண்டியன் படையணியின் ஒரு பிரிவினைச் சேர்ந்த போராளி & மாவீரர் மதுரன் அவர்கள்
-
- 0 replies
- 274 views
-
-
முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் - 1 படைநடவடிக்கையில் 19.07.1996 அன்று நடைபெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஐந்து கடற்கரும்புலிகள், லெப்.கேணல் சேரன் உட்பட்ட 112 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். முல்லைத்தீவு படைத்தளம் மீது 18.07.1996 அன்று தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையில் படைத்தளத்தின் பெரும்பகுதி முதல்நாள் சமரில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் (19.07.1996) படைத்தளத்தின் எஞ்சிய பகுதிகள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்த நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில் சிறிலங்கா படைகளினால் கடல் மற்றும் வான் மூலமான மீட்பு அணிகளை தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முல்லைத்தீவு தளத்தில் தாக்குதலுக்குள்ளா…
-
- 11 replies
- 1.8k views
-
-
மீண்டும் வருவான் மேஜர் மில்ரன்…. “தனம் அத்தான் இருந்திருந்தால் அவனைத்தான் கலியாணம் கட்டியிருப்பன் இப்பவும் அவனை மாதிரி ஒரு கறுவலைத்தான் கட்டியிருக்கிறன்.” அவனது பள்ளித் தோழி விமலா இப்படித்தான் நினைவு கூருகிறாள். அவனது, அம்மாவின் மொழியில் கூறுவதானால், “அவனோட ஆரெண்டு இல்லை – எல்லோரும் வந்து ஒட்டிக்கொள்ளுவினம். அவன் ஊரில இருந்து ஓமந்தைப் பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப் போகேக்க ஊர் பெடி, பெடிச்சியள் எல்லாரையும் அவன்தான் சாச்சுக்கொண்டு போறவன்.” அவனது கறுத்த முகத்தில் அப்படி ஒரு வசீகரம் என்று சொல்வதைவிட உள்ளார்த்தமாக உண்மையாக, நேர்மையாக, உள்ளார்த்த அன்புடன் பழகிய அவனது உள்ளத்து அன்பே வசீகரத்தின் காரணமெனலாம். …
-
- 4 replies
- 1k views
-
-
16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 27 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள்.இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர்.தென் தமிழீழத்தின் புகழ் பூத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன், கேணல் ராம் ஆகியோர் லெப்.கேணல் றீகன் அவர்களின் படையணியில் இருந்து அவரினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பி…
-
- 6 replies
- 3.1k views
-
-
கப்டன் ரஞ்சன் (லாலா) நீங்காத நினைவில் …… Last updated Jul 13, 2020 கப்டன் லாலா ரஞ்சன் கனகநாயகம் ஞானேந்திரமோகன் ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:02.09.1960 வீரச்சாவு:13.07.1984 நிகழ்வு:யாழ்ப்பாணம் தொண்டமானாற்றுப் பகுதியில் சிறிலங்கா அதிரடிப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு ” மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால் தான் நான் சிறந்த முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறேன் என தங்கள் இயக்கம் நற்சான்றிதழ் வழங்கும் எ…
-
- 6 replies
- 1.2k views
-
-
13.07.2004 அன்று மட்டக்களப்பு மருத்துவமனையில் வீரச்சாவினை அணைத்துக் கொண்ட மட்டு. நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சேனாதிராஜாவின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு நகரில் அரசியற் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த லெப்.கேணல் சேனாதிராஜா 05.07.2004 அன்று அரசடிச் சந்திப் பகுதியில் வைத்து சிறிலங்கா படை ஒட்டுக்குழுவின் துப்பாக்கிச் சூட்டில் விழுப்புண்ணடைந்து மட்டக்களப்பு மருத்துவமனையில் பண்டுவம்(சிகிச்சை) பெற்றுவரும்வேளை 13.07.2004 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அரசியற்துறையின் முக்கிய போராளியான லெப்.கேணல் சேனாதிராஜா, மட்டக்களப்பு மண்ணில் துரோகச் செயற்பாடு முறியடிக்கப்பட்ட பின்னர் மீளவும் மட்டக்களப்பு நகர அரசியற் பொறுப்பாளராக கடமையேற்று விடுதலைப் போரா…
-
- 13 replies
- 2.1k views
-
-
கடற்கரும்புலி கப்டன் வினோத் கடற்கரும்புலி கப்டன் வினோத் வேலுப்பிள்ளை திலகராசா காட்டுவளவு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:19.08.1970 வீரச்சாவு:10.07.1990 நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு அடுத்தநாள் தான் தம்பி தெரிஞ்சது. அதில நான் பெத்த குஞ்சுவும் ஒண்டெண்டு அண்டைக்கு ஊரெல்லாம் ஒரே பரபரப்பாய் இருந்தது. அண்ணைமார் கடற்கரைக்கு வாறதும் போறதுமாய் இருந்தினம். “இன்றைக்குப் பெடியள் கரும்புலியாய்ப் போய் நேவிக் கப்பலை அடிக்கப்போறாங்களாம்.” என்று, ஜனங்கள் பரவலாய்க் கதைக்கினம். “அப்படியெண்டா நாளைக்குக் காலமை நேவி அடிப்…
-
- 1 reply
- 465 views
-
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி மேஜர் கிண்ணி (அசோகன்) கந்தசாமித்துரை ரவீந்திரன் வேம்படி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் 25.07.1966 - 10.07.1992 கிளிநொச்சி இயக்கச்சியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு என்றென்றும் மறக்க முடியாத நண்பன், மாவீரன் கிண்ணிக்கு வீர வணக்கம்!💐🙏
-
-
- 7 replies
- 1.9k views
- 1 follower
-
-
காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன். கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் யோகராசா கோணேஸ்வரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:10.09.1971 வீரச்சாவு:10.07.1990 நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன். 1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில், எதிரி…
-
- 1 reply
- 913 views
-
-
முதலாவது கடற்கரும்புலிகளின் தாக்குதல் 10.07.1990… எடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990….! பலர் கருதுவது போல எமது வாழிடமான நிலப்பகுதி மட்டும்தான் தமிழீழத் தாயகம் அல்ல. பழமையும், பெருமையும், செழுமையும் கொண்ட தமிழீழக் கடலும் தமிழர் தாயகம் தான். எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை எமது கடலிற்கும் முக்கிய பங்குண்டு. விநியோகங்களும், போக்குவரத்திற்கும், வெளி உலகத் தொடர்பிற்கும் இக்கடலே பிரதான பாதையாக இருந்துவருகின்றது. இதை நன்கு அறிந்த சிங்கள அரசு கடற்பயனங்களைத் தடுத்து விடுதலைப் போராட்டத்தை நசுக்கத் திட்டமிட்டது. அதன் பிரகாரம் 1984ம் ஆண்டு திரு.லலித் அத்துலத்முதலி பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற பின் , இந்தக் கடல் எமதும் எமது …
-
- 1 reply
- 670 views
-
-
மறைந்தும் மறையாத வரலாற்றுக் காவியம்- ஈழத்துக் கொற்றவை ஈழத்துக் கொற்றவைகள் தெய்வங்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு துயிலுமில்லங்களில் நினைவுக் கற்களோ கல்லறைகளோ இருக்காது. இவர்கள் வீரச்சாவடைந்தால் நினைவுநாட்களில் பெயர்களோ அடையாளங்களோ தகவல்களோ வெளிப்படுத்தப்பட மாட்டாது. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் எந்தக் காலத்திலும் வெளிவராது. ஊரறியாமல் உறங்கும் உண்மைகள் இவர்கள். ஊமையாய் இருந்து ஒரு பெரும் சரித்திரத்தைப் படைத்துவிட்டுச் செல்வார்கள். கல்லாகிக் கிடக்கும் கடவுளர்களை மறந்துவிட்டு கல்லறை கூட இல்லாத எம்மின கொற்றவை தெய்வங்களை வணங்குவதே என்றும் போற்றுதற்குரியது. அவ்வாறாகப் போற்றப்பட வேண…
-
- 0 replies
- 725 views
-
-
நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.! On Jun 26, 2020 கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை 10.2000 விடுதலைப் போர்களத்திற் புலிகள் இயக்கம் தீக்குளித்த நாட்களுள் அன்றைய நாளும் ஒன்று. ஆனையிறவை முற்றுகையிட்டிருந்த புலிகளின் இத்தாவிற் போர்க்களம் அது. அமைதியாகவே விடிந்திருந்த அந்தப் போர்க்களத்தைச் சிறிது நேரத்திலேயே பெரும் எரிமலைபோல் வெடிக்கச் செய்தான் எதிரி. புலிகளை மட்டுமல்ல, தமிழனின் வீரம்பேசி எழுந்துநின்ற அந்தச் சின்னஞ்சிறு பிரதேசத்தையே பூ…
-
- 4 replies
- 951 views
-
-
வித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன் ஜிம்கலி On Jun 27, 2020 விடுதலைக்கான வீரமிகு போராட்டம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் போராடி, இழந்த தமது தாய் நாட்டை மீட்டெடுத்து தம்மைத்தாமே ஆட்சி செய்த வெற்றிமிகு போராட்டம் ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற உயரிய குறிக்கோள் ஒன்றைத்தவிர வேறு எவ்விதமான ஆசையும் எமது மாவீரர்களுக்கு இருந்ததில்லை. இவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் நாம் படிக்க வேண்டும் அதனுடாக விடுதலைப் பயணத்தில் எம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும். என்பதுதான் பற்றோடு வாழ்கின்ற அனைத்து தமிழர்களின் பெரு விருப்பாகும்…
-
- 2 replies
- 1.1k views
-
-
உரிமைப் போரில் உணர்வுடன் கால்பதித்த, பொறியியல் பீட மாணவன் கப்டன் முத்துசாமி, மருத்துவ பீட மாணவன் லெப். சுதர்சன் உரிமைப் போரில் உணர்வுடன் கால்பதித்த, பொறியியல் பீட மாணவன் கப்டன் முத்துசாமி, மருத்துவ பீட மாணவன் லெப். சுதர்சன் தமிழ்த்தேசியஇனத்தின் இழந்த தாயக மீட்பிற்கான போராட்டத்தின் கண்ணுக்கெட்டிய கால இடைவெளியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உட்பட்ட எமது மக்களை இழந்திருக்கின்றோம். ஒவ்வொருவருடைய இழப்பும் எமக்குப் பேரிழப்பாகயிருந்தபோதும் விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியில், எமது இளைய தலைமுறையினர் வாழ்வும் வளமும் எதிர்காலத்தில் எமது இனத்தின் தனித்துவத்தோடு அமைந்ததாக இருக்குமென்ற எண்ணம் எமது மக்களையும் ,இளையோர்களையும் போராட்டத்தின்பால் முழு வீச்சாகப் பயணிக்க…
-
- 1 reply
- 859 views
-
-
1985 காலப்பகுதியில் தமிழகத்தில் 35 போராளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூத்த தளபதி கேணல் சங்கரண்ணாவின் நெறிப்படுத்தலில் நீரடி நீச்சல் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது. அந்த விசேட நீரடி நீச்சற்பிரிவில் லெப் கேணல் கங்கையமரன் அவர்களும் செயற்பட்டிருந்தார். இவ் அணியில் பயிற்சிபெற்ற சுலோஜன் என்பவர் காரைநகர் கடற்பரப்பில் தரித்துநின்ற கடற்கலத்தை தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டபோது,வீரச்சாவைத்தழுவிக் கொள்கின்றார்.இவரது பெயரிலேயே கடற்புலிகளின் “சுலோஜன் நீரடி நீச்சல் அணி” தளபதி கங்கையமரன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டது. இவ்வணியே பாரிய கடல் வெற்றிகளைப் பெற்றுத்தந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னாளில் இவ்வணி கங்கையமரன் நீரடி நீச்…
-
- 4 replies
- 902 views
-
-
04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38 மாவீரர்களினதும், தென்மராட்சியில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் நிஸ்மியா மற்றும் லெப். டயஸ் ஆகியோரினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவோடு டாங்கிகளின் துணையுடன் நாகர்கோவில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து முன்னகர்ந்த சிறிலங்கா படையினரின் பாரிய படை நகர்விற்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் தீரமுடன் களமாடி படைநகர்வை முற்றாக முறியடித்தனர். முற்று முழுதாக பெண் போராளிகளே இந்த முன்னகர்வு முயற்சியை முறியடித்து சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய அழிவுகளை ஏற்படு…
-
- 13 replies
- 1.6k views
-
-
வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்.! On Jun 28, 2020 தாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர். ஒவ்வொரு கணமும் அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்த சிரமங்கள் ஏராளம். அவர்கள் சந்தித்த எந்தத் துயர்மலையாலும் துளிகூட அவர்களை நிலைகுலையச் செய்யமுடியவில்லை. ஒவ்வொரு வீரனின் உள்ளமும் உறுதியால் இழைக்கப்பட்டு தேசப்பற்றினால் உரம் பெற்றிருந்தது. எவ்வளவு கடினத்திற்குள்ளும் விடுதலைக்காக உழைக்கும் அவர்களின் உழைப்பு வீச்சுள்ளதாய் இருந்தது. அத்தனை வீரத்தையும் விடுதலைப்பற்றையும் தலைமுறைப் பற்றையும் ஊட்டியிருந்தான் அவன். காட்டு மரங்களும் மேட்…
-
- 1 reply
- 769 views
-
-
“ரணகோச” நடவடிக்கை சமரின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவில்.... 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் ஐயன், லெப்.கேணல் தணிகைச்செல்வி உட்பட ஏனைய 75 மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். லெப்.கேணல் ஐயன் (சூரியகாந்தி உதயசூரியன் – யாழ்ப்பாணம்) லெப்.கேணல் தணிகைச்செல்வி (சுப்பிரமணியம் சத்தியதேவி – யாழ்ப்பாணம்) மேஜர் தேன்மொழி (டிலானி) (தில்லைநாயகம் யூடிஸ்ராதிலகம் – யாழ்ப்பாணம்) மேஜர் யாழிசை (பரராஜசிங்கம் மங்கையற்கரசி – யாழ்ப்பாணம்) மேஜர் கலைமகள் (இராமலிங்கம் பிருந்தா – யாழ்ப…
-
- 0 replies
- 423 views
-