Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. இது 'தமிழ்த் தந்தி' நாளிதழில் ஊடகவியலாளர் மின்னல் ரங்கா அவர்களால் மே 2018 அன்று எழுதப்பட்ட கட்டுரையாகும். மூலம்: Tamilnet ----------------------------------- தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவ…

  2. அன்றைய நாள் மிகவும் சோகமாக விடிந்தது போலத் தோன்றியது. மனதில் ஏதேதோ நெருடல்கள். நெஞ்சம் கனத்தது. ஏனென்றே தெரியவில்லை, எதையோ இழந்துவிட்டதுபோல் தவிப்பு உண்டானது. சக போராளிகள் இருவர் வந்தனர். இவர்கள் முகங்களிலும் சோகம். காரணத்தை அறிய மனம் துடித்தது. “உங்கட றெயினிங் மாஸ்ரர் சிறீ மதியல்லோ வீரச்சாவு” “ஆ………..? சிறீமதியக்காவோ ? எங்க ” “மணலாத்தில…………” நான் அழவும் முடியாமல், கதைக்கவும் முடியாமல், வாயடைத்துப் போனேன். சிறீமதி, உறுதியும், துணிச்சலும், தனக்கு கொடுக்கப்பட்டவேலையைப் புரிந்து கொண்டு செயற்படக்கூடிய திடகாத்திரமான உள்ளமும் படைத்தவள் அவள். அல்லிப்பளையில், ஒருநாள் மண்வெட்டி வாங்குவதற்காக வீடொன்றுக்குச் சென்றோம். எம்முடன் சிறீமதியும் வந்தாள். அங்கே எம…

  3. பொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய், விடியலுக்காய் எழுந்தவன் லெப். சைமன் (ரஞ்சன்). தென் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களுரின் தொடரூந்து நிலையத்தில் சுமார் நூறுவரையிலான விடுதலைப்புலிப் போராளிகள் இராணுவப் பயிற்சிபெறும் நோக்கோடு செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தனர். அப்போது ரஞ்சன் தனது போராளி நண்பர்களை நோக்கி இந்த பெங்களூர் நகருக்கு நான் அப்போதே வரவிருந்தேன். வானூர்தி ஓட்டியாக பயிற்சி பெறுவதற்கு இங்குள்ள நிறுவனத்தில் அனுமதியும் பெற்றிருந்தேன். ஆனால் வரவில்லை. இன்று, இங்கு நிற்கின்றபோது அதையும் எண்ணிப்பார்க்கின்றேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏனெனில் எமது மக்களின் விடுதலைக்கான ஓர் பயணத்தில் நாம் இருப்பதுதான் அந்த மகிழ்ச்சிக்குரிய காரணமாகும்…

  4. அன்புக்கு இலக்கணம் ஆகிய அழகிய வதனம் கொண்ட சங்கவியை தெரிந்தவர்கள் யாராலும் மறக்கவே முடியாது…… அமைதியான சுபாபம் கொண்டவள். கூட இருப்பவர்களுக்கு உதவிடும் நல்ல உள்ளம் படைத்தவள். இரக்க குணம் அவளோடு கூட பிறந்தது. பழகியவர்களால் அவளை மறப்பது மிகவும் கடினம். 1998ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டவள் சிறுத்தைப் படையணியில் நித்திலா 1 பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்துக் கொண்டு மூன்றுமுறிப்பு களமுனையில் அவளது தோழிகளுடன் தடம் பதிக்கிறாள். முன்னணிக் காவலரண்களை பலமாக்கி பாதுகாப்பது, எதிரியின் ஊடறுப்பு தாக்குதல்களை முறியடித்து சமர் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டவள். தொடர்ந்து வந்த காலங்களில் அம்பகாமம், ஒட்டு ஒட்டுசுட்டான் போன்ற பகுதிகளில…

  5. எமது புரட்சிகரத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இளமைக் காலத்தில் உற்ற உறவுகளை மறந்து ஒரு சராசரி மாந்தன் அனுபவிக்கும் அத்தனை இன்பங்களையும் துறந்து தாயகத்தின் மீது கொண்ட தீராத பற்றினாலும் அரசியல், சமூக அக்கறையினாலும் பெண் விடுதலை வேண்டியும் பல்லாயிரக்கணக்கான தமிழீழப் பெண் போராளிகள் எமது தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களுடன் இணைந்து, அவரின் தலைமையினையும் வழிகாட்டல்களையும் உளமார ஏற்றுப் போராடி தம்முயிரீந்து மாவீரர்களாகியுள்ளார்கள். அவ்வாறே லெப்ரினன்ட் சாந்தாவும் சிறீலங்கா இராணுவத்தினரின் கொடும் ஒடுக்குமுறைகளாலும், திட்டமிடப்பட்ட இனவழிப்பினாலும் தனது குடும்பமும் மக்களும் இன்னலடைவதைக் கண்டு அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், இந்த ஒடுக்குமுறைகளிலிருந்து எம் மக்களைக் காப்…

  6. இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது…. காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்….. வணக்கம்…. தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று. யாரெண்டு தெரியுதா? இல்லை… என்ற எனக்குத் தன்னை ஞாபகப்படுத்திய குரல். 3 வருடங்கள் மேலாக தொடர்பற்றிருந்த தோழனின் குரல் அது. குழந்தைகள், குடும்பம் என …

  7. மூடு இனியன் தமிழீழம் இன் இடுகையில் உள்ள படங்கள் மொபைல் பதிவேற்றங்கள் விருப்பத்தேர்வுகள் Messenger இல் அனுப்பு விரும்பு பகிர் …

  8. ஈழ மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காகக் களத்தில் நின்று புரட்சிக்கனல் கக்கிய புதுவையை முகநூலில் சிலர் இன்று நினைவு கூர்ந்ததால் அவரைப் பற்றி முன்பொருகால் நானெழுதிய இந்தக் கவிதையைப் பதிவிட்டேன். அதனை யாழிலும் பதிலிடுகிறேன். தணலை மூட்டிய தமிழ்க் கவி வாணன் புதுவையென்னும் புகழுக்குரியவன் புனிதவேள்விக் கவிகளியற்றுவோன் எதுகை மோனை இலக்கணச் சாத்திரம் எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும் வதுவை செய்து கவிமகள் தன்னையே வாழ்வு முற்றும் அவட்கென வாழ்ந்தவன் மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன் மாந்தி வீழ்ந்து மயங்கினர் ஆயிரம். அகவை ஐம்பது ஆனது அவன் கவிக்(கு) ஆயினும் பதினாறின் இளமையாள் தகைமையால் தமிழ் ஈழமறவரின் தழலெரிந்திடு நெஞ்சினை மூட்டினாள் பகைமை தோற்றது பா…

    • 0 replies
    • 1.2k views
  9. தமிழீழ விடுதலைப்போராட்டம் பல போராளிகளின் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டது. எங்கள் தேசத்தின் விடியலுக்காக தமது வாழ்க்கையினை தியாகம் செய்த எம் போராளிகள் ஒவ்வொருவரும் எதோ ஒருவகையில் பெரும் தியாகத்தின் உச்சத்தை தொட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் சுரேன் என்றும் இசைவாணன் என்றும் அழைக்கப்படும் போராளியும் ஒருவராகிறார். தமிழீழ விடுதலைக்காக ஒரு காலை கொடுத்துவிட்டு அதற்கு மாற்றீடாக ஒற்றைச் செயற்கை காலோடு தன் வாழ்க்கையை தமிழீழ விடுதலைக்காக கொடுத்த உன்னதமான வேங்கை இசைவாணன். இன்று நாம் இழந்து விட்டோம் என்ற உண்மை ஏற்க முடியாது தொண்டைக்குள் சிக்குண்டு கிடக்கிறோம். ஒற்றைக்கால் என்பது சில வேளைகளில் அவர் நடக்கும் போது புலனாகினும் அவரின் நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் அதை…

  10. அந்த நீண்ட சண்டை முடிந்த போது…… எங்கள் ஜொனி…… அவன் வரவில்லை; முதல்நாள் எம்மிடம் அவன் சொல்லிவிட்டுப் போனதைப் போல இன்றுவரை அவன் வரவேயில்லை… எங்களால் என்றுமே மறக்க முடியாத அந்த இருள் சூழ்ந்த நாட்கள். இங்கே “அமைதி தேடுகின்றோம்” என வந்து – அக்கிரமங்கள் புரிந்த இந்தியத் துப்பாக்கிகளின் ஆட்சிக்காலம். வன்னியில் கருப்பட்ட முறிப்பு என்ற சிற்றூர்ப் பொறுப்பாளனாக ஜொனி இருந்தான். ஒரு நாள் அப்போதைய எமது பிரதான போக்குவரத்துச் சாதனமாக இருந்த மிதி வண்டியில் போய்க்கொண்டிருக்கிறான். அவன் சென்றுகொண்டிருந்த பாதை யாழ்ப்பாணப் பிரதான வீதியில் சந்திக்கின்ற மூலை. மிதிவண்டி வளைவில் திரும்பவும் பதுங்கியிருந்த இந்தியப் படையினர் அவன் மீது பாயவும் சரியாக இருந்தது. எதிர்பாராத தாக…

  11. சுகந்திரபுரம் சுடுகாடாய் எரிந்து கொண்டிருந்தது எறிகணைகள் கண் மூடித்தனமாக விழுந்து வெடித்தது. எரிபொருள் களஞ்சியங்கள் தீப்பற்றி எரிந்தது.அங்கு இயங்கிய எமது தற்காலிக மருத்துவ மனையும் இடம்பெயர்ந்து போவதற்காகன ஆயத்தங்கள் நடந்தன. எனது குழந்தைகள் எனது அப்பாவுடனும் எனது மாமாவின் வீட்டாரின்(மேஜர் அரி மாறனின் தாய் தந்தையுடன்) பாதுகாப்பிலும் இருக்கின்றனர். நானும் அங்கு செல்கின்றேன் சுகந்திர புரம் பிரதான வீதி. பகுதியில் இருந்து சற்று உள்நோக்கி இருந்த எமது இருப்பிடத்தில் பிரசன்னா அண்ணாவின் மனைவியும் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். தொடர் இடப்பெயர்வுகளால் அந்த காணியில் தறப்பாள் கொட்டில்களைப் போட்டுக் கொண்டிருந்த 10 மேற்பட்ட குடும்பங்கள் அரையும் குறையுமா தறப்பாள் கொட்டில்கள…

  12. வடமாகாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான தெல்லிப்பளை யா/ மகாஜனாக் கல்லூரியின் மாணவனான சரவணபவன் தரம் பத்தில் கல்வி கற்கும் போதே மாணவர் அமைப்பில் இணைந்ததின் மூலம் தனது தாய்நாட்டுக்கான விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தான். பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களில் தனது வகுப்பில் எப்போதும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று முதலாவது அல்லது இரண்டாவது தரநிலையைத் தட்டிச் செல்லுவான். கற்றல் செயற்பாடுகளில் மட்டுமல்ல விளையாட்டு ஓவியம் வரைதல் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினான். அத்துடன் முதலுதவிப் பயிற்சிகளும் பெற்று அவற்றிலும் சிறந்து விளங்கி எல்லாவற்றிலும் முன்னணி மாணவனாகத் திகழ்ந்தான். வீரவேங்கை சிந்து (சரவணபவன் ரகுநாதன்) உடுவில் சுன்னாகம். பிறந்த திகதி – 11.07.1974 வீரமரணம் – 25…

  13. லெப்.சுடரொளி (சிம்மான்) நவம்பர் 10, 2013 | ஒரு போராளியின் குருதிச் சுவடுகள். Edit Post வீட்டுக்கொரு ஆண் பிள்ளையாயிருந்தும் விடுதலையை நேசித்த வீரன். கடல் அலைகளும் அதன் நுரைகளும் கால்தடவிச் சென்றோடும் மணற்கரைகளில் சிம்மானின் நினைவுகளை காலம் எழுதிச் செல்கிறது. ஆம் அவன் பிறந்த வடமராட்சி கிழக்கு சிம்மானின் வரலாற்றாலும் தனது வீரத்தை நிரப்பியிருக்கிறது. கடலோரக் கிராமத்தில் பிறந்தவன் அந்தக் கரைகளில் காலாற நடந்தவன் கடுமையான போராட்ட வாழ்வை நேசித்தானென்பது வியப்புக்குரியதே. ஓவ்வொரு வீரனின் இயல்பான வாழ்வினுள் ஒரு பெரிய வரலாறே புதைந்து கிடப்பதை அவர்களோடு வாழ்ந்தவர்களால் மட்டுமே அறியவும் ஆழமாய் உணரவும் முடியும். அத்தைகயவனாய் தான் சிம்மான் என்னோடு அறிமுகமானான். 1989ம் …

    • 0 replies
    • 890 views
  14. 1988ம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச ஆட்சியை கைப்பற்றியதும், அவருக்கு பக்கத்துணையாக இருந்த இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுருந்த லெப். ஜெனரல். ரஞ்சன் விஜையரட்னாவை பாதுகாப்பு அமைச்சராக நியமித்தார். அதற்கு முக்கிய காரணம் அந்த நேரத்தில் கொழும்பில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு JVP என்னும் கெரிலா அமைப்பு, சிங்கள இளைஞர்களைத் திரட்டி ஆயுதப் போராட்டத்தில் குதித்திருந்தது. வடக்கில் தமிழர்களாலும், கிழக்கில் சிங்கள இளைஞர்களாலும், சிங்கள அரசு நெருக்கடியைச் சந்தித்திருந்தது. அந்த நேரத்தில் இந்திய இராணுவத்திற்கும், புலிகளுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தமையால், புலிகளின் கவனம் அதிலேயே இருந்தது. அதனால் பிரேமதாசவின் கவனம் JVP இன் பக்கம் திரும்பியது. ஆட்சி அமைத்ததும் ரஞ்சன…

    • 0 replies
    • 1.6k views
  15. எத்தடை வரினும் எம்படை நகரும் கப்டன் அன்பரசி படையணி எத்தடை வரினும் எம்படை நகரும் அன்பரசி படையணியின் வீரம்கண்டு எதிரி அதிர்ந்தான். 29.07.1995ம் ஆண்டு அம்பாறை மாவட்டம் 4 ஆம் முச்சந்தி சிறிலங்கா படை முகாம் தாக்குதலின்போது கப்டன் அன்பரசி வீரச்சாவடைந்தாள். அன்பரசி ஒரு சுறுசுறுப்பான விவேகமான போராளி. இவளது ஞாபகமாகவே மட்டு – அம்பாறை மகளிர் படையணிக்கு அன்பரசி படையணி என்று பெயர் சூட்டப்பட்டது. லெப். கேணல் மதனாவினது சுறுசுறுப்பையும், துணிவையும், புத்துணர்வையும், களங்களில் படைநடத்தும் திறமையையும் கண்ணுற்ற மட்டு அம்பாறை மாவட்ட சிறப்புத்தளபதி அவர்கள் படையணியின் முதல் சிறப்புத் தளபதியாக லெப். கேணல் மதனாவை அன்பரசி படையணியின் சிறப்புத்தளபதியாக நியமித்தார்.…

  16. மண்ணின் மைந்தர்களான மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களை நான் போற்றுகின்றேன். உங்கள் குழந்தைகள் தமது தாய்நாட்டின் சுதந்திரத்தை நேசித்தவர்கள். இந்த உன்னதமானவர்களை ஒரு புனித இலட்சியத்திற்காக உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமைகொள்ளவேண்டும். உங்கள் குழந்தைகள் சாகவில்லை சரித்திரமாகிவிட்டார்கள். என்ற தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உள்ளத்துச் சிந்தனைக்கு அமைவாக மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வின் நீட்சியாக யாழ்கள உறவுகளும் மாவீரர்களைப் பெற்றெடுத்த அந்தப் பெற்றவர்களை அறிந்து தெரிந்திருந்தால், அவர்கள் இருக்கும் போதே போற்றி மதிப்பளிப்பது போற்றுதற்குரியது. மொறிசம்மா என்று செல்லமாக அழைக்கப்படும் தியாகராசா…

    • 0 replies
    • 435 views
  17. இம்ரான் பாண்டியன் படையணியின் ஒரு பிரிவினைச் சேர்ந்த போராளி & மாவீரர் மதுரன் அவர்கள்

  18. மாவீரர் நினைவுகள் - சந்தோசம் மாஸ்டர் | லெப் கேணல் ராதா | எழுதியவர்: ஜூட் பிரகாஷ் பரி யோவான் கல்லூரியின் பழைய மாணவன், அபாரமான தமிழ் மொழி ஆற்றல் படைத்தவர். அரியாலையில் இருந்து வந்து, பரி யோவானில் படித்து, உயர்தரத்தில் சித்தியெய்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பெளதீக விஞ்ஞானப் பிரிவில் (Physical Science), பட்டம் பெற்று, திருகோணமலையில் ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது, இயக்கத்திற்குப் போனவர். எண்பதுகளில் புலிகள் இயக்க உறுப்பினர்களிடம் தனித்துவமாக மிளிர்ந்த குணங்குறிகளிற்கு இவரும் ஒரு அடையாளம். திருகோணமலை மாவட்டத் தளபதியாக இருந்தவர். இந்திய இராணுவத்துடன் சண்டை தொடங்கிய போது, 21 ஒக்டோபர் 1987 அன்று, கோண்டாவிலில் இடம்பெற்ற ஒரு தீரமிகு சண்டைய…

  19. தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ, தலைசாய்ந்து தாய்மண்ணில் வீழ்ந்த மேஜர் டேவிட். ஒரு போராளியின் புனிதப்பயணம். தமிழர் வரலாற்றை நிலைநிறுத்தும் வரலாற்றுப்போரில், வரலாறாகிப்போன மேஜர் டேவிட், உண்மையில் ஓர் புரட்சி வீரன். தென்தமிழீழ எல்லையில், சிங்களத்தின் நிலப்பறிப்பில் 1963ம் ஆண்டு காலப்பகுதியில் உருவான அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்ற பழந்தமிழ் ஊரில் இன்ஸ்பெக்டர் ஏற்றம் என அடையாளப் படுத்தப்பட்ட இடத்தில் வாழ்ந்த தமிழ்க்குடும்பத்திலிருந்து எழுந்த விடுதலைப் போராளிபற்றிய நினைவுப்பதிவில் தொடக்கத்தின் முதல் அத்தியாயமாக நாம் கண்ட போராளிகளில் ஒருவராக டேவிட் அவர்களின் போராளி வாழ்க்கை அமைந்திருந்தது. அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாது எல்லைத் தமிழ் ஊர்களி…

  20. லெப்.கேணல் ஜொனி இயற் பெயர் - விக்கினேஸ்வரன் விஐயகுமார் இயக்கப் பெயர் - ஜொனி தாய் மடியில் - 21.05.1962 தாயக மடியில் - 13.03.1988 தமிழீழ விடுதலைப் புலிகளின் முதனிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல். ஜொனி பேச்சுவார்த்தைக்கென இந்திய இராணுவத்தால் அழைத்து வரப்பட்டு வஞ்சகமாக 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி முல்லைத்தீவு தேவிபுர பகுதியில் வைத்து சுடப்பட்டு வீரச்சாவடைந்தார். 1980களில் யாழ்க் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணாவால் கொண்டு வரப்பட்டது. அதற்கு கிட்டண்ணாவால் சிறீலங்காப் படைக ளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனி முன்னின்று சமராடினார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் வந்த போது கிட்டண்ணாவுடன் த…

  21. Started by Paanch,

    இதுவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரரானவர்கள் பற்றி நிலவன் அவர்கள் தந்த விபரம். 1989ம் ஆண்டு நவம்பர் 27 முதல் ஆண்டுதோறும் மாவிரர் நாள் அனுட்டிக்கப்படு வருகிறது. 2008ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் மாவீரர் எழுச்சி நாள் தமிழீழத்தில் அனுட்டிக்கப்பட்ட இறுதி மாவீரர் எழுச்சி நாள்ஆகும். எமது துயிலும் இல்லங்களின் எண்ணிக்கை -27. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை அந்த வருடத்தின் அக்டோபர் 31ம் திகதி வரை 22,114. மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை அறிவித்திருந்தது. இவர்களில் 17,305 ஆண் போராளிகளும் 4,809 பெண் போராளிகளும் உள்ளடங்குகின்றனர். கரும்புலிகள் 372 இவர்களில் தரைக் கரும்புலிகள் 113 மற்றும் கடற்கர…

    • 0 replies
    • 620 views
  22. மாவீரர்... வாரம், இன்று ஆரம்பம். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தின அனுஷ்டிப்பு வாரம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இன்னுயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்த முதலாவது மாவீரர் சங்கரின் நினைவாக, அவர் உயிரிழந்த கார்த்திகை 27ஆம் திகதி, விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனினால் மாவீரர் தினமாக 1987ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைக்காய் உயிர் தியாகம் செய்த விடுதலைப்புலிகளை நினைவுகூரும் அஞ்சலிகள் நடைபெற்றுவருகின்றன. மாவீரர் நாளை அனுஷ்டிக்கும் வகையில் கார்த்திகை 21ஆம் திகதி மாவீரர் வாரம் ஆரம்பம…

  23. Started by karu,

    வீரம் பிறந்ததடா.... வீரம் பிறந்ததடா தமிழ் ஈழமண் மீதினிலே - வரி வேங்கை எழுந்ததடா வல் வெட்டித் துறையினிலே ஆரத்தில் ஆல விடத்தினைக் கட்டிய ஆண்மைக் குமரனடா - பெரும் ஆபத்தையே பனியாக மதித்திட்ட ஆதித்ய சோதியடா சீலத்தில் வாய்மையில் போர்ப்படை கட்டிய சிந்தனையாளனடா - எங்கள் செந்தமிழன் பிரபாகரன் என்கின்ற செல்வக் குமரனடா இந்தியச் சூதினை எட்டியுதைத்திட்ட எங்கள் தலைவனடா - தமிழ் விந்தியந் தொட்டுக் குமரி வரையெனும் விதியை மறுத்தவன் டா செந்தமிழ் ஈழ மணித்திரு நாட்டைச் செதுக்கிய சிற்பியடா - ரத்தம் சிந்திச் சிந்தித் தமிழ் மானத்தைக் காத்திடச் சீறிய வேங்கையடா. குட்டக் குனிந்த தமிழன் நிமிர்ந்து குதறிட வைத்தவன் டா - அட எட்டுத்திசையிலும் ஈடிணையற்ற - எம் ஈழத்தலைமகன் டா து…

    • 0 replies
    • 1.4k views
  24. இலக்குத்தவறாத இலட்சியப்பயணத்தில் மேஜர் வேணுதாஸ் 28வது ஆண்டு நினைவு ( 11.12.2019 ) மீள் பதிவு பொன் . வேணுதாஸ் அவர்களைப்பற்றி நாம் எழுதமுனையும் பொழுது மட்டக்களப்புப்பற்றியும் மாவட்ட அரசியல்பற்றியும் எழுதுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அன்னியர் ஆதிக்கத்தால் இழந்துபோன ஈழத்தமிழருக்கான இறமையுள்ள தாயகத்தை இலங்கையின் வடகிழக்கே நிறுவவேண்டுமென்ற இலட்சியத்தை சொல், செயல், சிந்தனை மூலம் பள்ளிப்பருவத்திலிருந்து ஆரம்பித்த இவருடையபணி எமது தேசிய விடுதலை இயக்கத்திற்கு நீண்டகால ஆதரவாளராக செயல்பட்டவர்கள் என்றவரிசையிலும் உள்ளடக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணம் என்றழைக்கப்படுகின்ற தென்தமிழீழம் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழர்நிலமாகும். 1948 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.