Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் வெங்கட் சாமிநாதன் 1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில, மாதிரிப்படைப்புக்களையும் மொழிபெயர்த்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எழுத என்னைப் பணித்திருந்தார், இதன் ஆசிரியத்வம் ஏற்ற ICCR இயக்குனர் திரு ஓ.பி. கேஜ்ரிவால். இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று Indian Horizons என்ற தலைப்பில் 500 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு ஜனவரி-ஜூன், 1999-ல் வெளியானது. இந்திய மொழிகள் அனைத்திலிருந்துமான (டோக்ரி, கஷ்மீரி, ஸ…

  2. தாலாட்டுப் பாடத்தெரியுமா? தாயின் கருவறையில் இருக்கும்போது அவளின் இதயத்துடிப்பையே தாலாட்டாகக் கேட்டுவந்த குழந்தை மண்ணுலகிற்கு வந்தவுடன் அந்த பாட்டுக் கேட்காமல் திருதிருவென விழிக்கிறது. சில நேரம் அழுகிறது. குழந்தையைத் தாய் தூக்கியவுடன் அழுகை நின்றுபோகிறது. குழந்தையைத் தூக்கிக்கொண்டே வைத்திருக்கமுடியுமா? அதனால் தான் பழந்தமிழர் கண்டறிந்தனர் தாலாட்டு என்னும் சீராட்டை! நான் சிறுவனாக இருந்தகாலத்தில் பல வீடுகளிலும் தாலாட்டுப் பாடும் ஓசை கேட்டிருக்கிறேன்.. நான் வளர வளர தாலாட்டின் பரிணாமமும் வளர்ந்துவந்திருக்கிறது. முதலில் திரைப்படப்பாடலைத் தாலாட்டாகப் பாடினார்கள்.. அடுத்து வானொலி...தொலைக்காட்சி...சிடி..டிவிடி..அலைபேசி... என இந்தக் காலத்துக் குழந்தைகளும் 'இவர்கள் பாடும…

  3. இவள் தமிழ்ப்பெண்! நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும் மனைவி வந்தபிறகு நிம்மதியைத் தேடுவதுமே ஆண்களின் வாடிக்கை! என்று இன்றைய திருமண வாழ்க்கையை நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. கணவனும், மனைவியும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல! இருவரும் இன்னொரு பக்கத்தைப் பார்ப்பதே இல்லை! என்ற கருத்தும் உண்டு. இருவேறு வாழ்க்கைச் சூழல்களிலிருந்த இருவர், பல எதிர்பார்ப்புகளோடு, ஒன்றாக வாழ்வில் இணையும்போது, அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறலாம், நிறைவேறாமல் போகலாம். அந்தச் சூழலில் இருவரும் தாம் பிறந்த குடும்பத்தின் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் குடும்பம் போர்க்களமாகத்தான் இருக்கும். இருவரும் ஒருவருக்கொருவர் இயன்றவரை விட்டுக்கொடுத்து வாழக்கற்றுக்கொண்டால் அதுதான் மக…

  4. சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக்கூடாது ஏன்? சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக் கூடாது என்று பன்னெடுங்காலமாகவே கூறிவருகிறோம். அதற்கு காரணங்களும் பலவாகவே கூறப்பட்டு வருகின்றன.. பாம்பை விட கொடிய விசத்தன்மை கொண்டவளா பெண்? உயிரைக் கொல்லும் தன்மையுடையவளா பெண்? பெண் இல்லாத உலகை நினைத்துக் கூடப் பார்க முடியாது. தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக என ஒவ்வொருவர் வாழ்விலும் பெண் தவிர்கமுடியாதவளாகவே இருக்கிறாள் ஆயினும்… ஏன் சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற கூறினர்..? சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலிருந்து ஓர் சான்று, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கர்க்கு உரைத்தது. (தலைவியை இயல்பாக ஓரிடத்…

  5. Proud To Be Tamil திருக்குறள் ஒரு தகவல்: ௧) 1330 பாக்களை உடையது. ௨) மொத்தம் 42,194 எழுத்துக்கள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளது. ௩) 1812 ஆம் ஆண்டு முதல் முதலாக ஓலைச்சுவடியில் இருந்து அச்சடிக்கப்பட்டது. ௪) திருக்குறளை முதல் முதலில் வேறு மொழியில் மொழி பெயர்த்தவர் பெஸ்கி என்றழைக்கப்படும் வீரமா முனிவர். ௫) 1730 ஆம் ஆண்டு முதல் முதலாக லத்தின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. ௬) 133 அதிகாரங்களை உடையது. ௭) குறிப்பறிதல் என்ற ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே இரண்டு அதிகாரங்களுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. ௮) திருக்குறளில் இடம் பெறாத ஒரே உயிரெழுத்து 'ஒள'. ௯) உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே தமிழ் நூல் 'திருக்குறள்'. ‪#‎நந்தமீனாள்‬ …

  6. Proud To Be Tamil இது போன்ற ஒரு பாடலை நான் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை.!! தயவு செய்து இதைப் படித்து விட்டுக் கடைக்கோடித் தமிழன் வரை பகிரவும்.!!! வில்லிப்புத்தூரார் என்னும் புலவர் ஒருவர் இருந்தார். நல்ல தமிழ்ப்புலமை கொண்டவர். ஆனால் புலவர்க்கே உரிய ஆணவமும் கொண்டவர். ... அவர் வருவோர் போவோர் எல்லாரையும் வாதத்திற்கு அழைப்பார். அதில் தோற்பவர் பாடு திண்டாட்டம் தான். தோற்றுவிட்டால் தோற்றவர்களின் காதை தன் கையில் வைத்திருக்கும் காதறுக்கும் துரட்டியால் ஒட்ட அறுத்து விடுவார். இதனால் காது இல்லாதவரைக் கண்டால் இவர் வில்லிப்பூத்தூராரிடம் வாதில் தோற்றவர் என தெரிந்து கொள்ளலாம். இதனால் புலவர்கள் அவர் முன்னிலையில் செல்ல அஞ்சியிருந்தனர். எந்த வில்லனுக்கும் அதி வில்லன் ஒ…

  7. சமீபத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய "வில்லோடு வா நிலவே" என்ற புத்தகத்தை படித்தேன். இது 1993ல் வெளிவந்தது. இப்பொழுது தான் எனக்கு அதை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. சேரன் செங்குட்டுவனின் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், காக்கை பாடினியார் நச்செள்ளை எனும் புலவரை பக்கத்தில் கொண்டதாக புறநானுற்றில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. "பக்கத்து கொண்டான்" எனபதற்கு பட்டத்து மனைவியாகக் கொண்டான் என்ற பொருளைக் கொண்டு எழுதப்பட்ட கவித்துவமான நாவல். கவிதை இனிது.. காதல் இனிது... வீரம் இனிது. இந்த மூன்றையும் சங்க காலத்து பிண்ணனியில் கொடுத்த இந்தக் கதையும் இனிதாக இருக்கிறது. அம்பைத் தீண்டுவது வீரனின் செயல், வம்பைத் தீண்டுவது காதலனின் செயல். இவர் இரண்டையும் தீண்டியுள்ளார். "வம்பு" என்பதன் மற்…

  8. மணல் வீடும் மாறாத மனமும். கதை ஒன்று… மாலை 6 மணியாகிறது. வழக்கமாக வேலைக்குச் சென்ற தன் மகள் 5மணிக்கே வந்துவிடுவாள். 7 மணி ஆனபின்னும் இன்னும் வந்து சேரவில்லையே என்று ஆளுக்கொரு பக்கமாகத் தேடுகிறார்கள். தன் மகளின் அலைபேசியைத் தொடர்புகொள்ள முடியததால்,அவள் அலுவலகத்துக்குத் தொலைபேசியில் அழைத்துக் கேட்கிறார்கள். அவர்களோ தங்கள் மகள் 4 மணிக்கே கிளம்பிவிட்டாளே என்கிறார்கள். ஒன்றும் புரியாத குடும்பத்தார், அவளின் தோழி வீட்டுக்கெல்லாம் அழைத்துப்பார்த்து ஏமாற்றத்தை மட்டுமே பதிலாகப் பெறுகிறார்கள். இந்த சூழலில் இந்தக் குடும்பத்தின் குழப்பத்தைப் பார்த்து அக்கம் பக்கத்திலுள்ளோர் கதை திரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஒருவர் சொல்கிறார்.. அந்தப் பொன்னு இப்படி ஓடிப் போகும்னு என…

  9. http://www.projectmadurai.org/pmworks.html

    • 8 replies
    • 1.3k views
  10. மறைக்கப்பட்ட வரலாறுகள் மனித வாழ்வியலில் திருக்குறளின் அவசியம்.... உயர் கல்வியின் பொருட்டு வெளியூர் செல்லவேண்டிய நிற்பந்தம், இவ்வளவு காலமும் தாய் தந்தையரின் அரவணைப்பில் வாழ்ந்த ஒரு இளைஞன் முதல் முறையாக பெற்றோரை பிரிந்து செல்லுகின்றான். அவனுக்கு எதை கொண்டு செல்லவேண்டும் எதை தவிர்க்கவேண்டும் என்பதில் ஒரு தடுமாற்றம். எப்படியான ஆடைகளை தெரிவுசெய்வது? இதுவரை படித்த நூல்கள் ஏதேனும் தேவைப்படுமா? புதிய மொழி, கலாச்சார அமைப்புக்கொண்ட பிரதேசத்தில் எப்படி சவால்களை எதிர் கொள்வது? போன்ற எண்ணற்ற கேள்விகள் அவனது ஆழ் மனதில் எழுந்தன. அதற்கு அவனுடைய தந்தை புறப்படும் பொழுது அவனுக்கு ஒரு திருக்குறள் நூலை கொடுத்து மூன்றே மூன்று வார்த்தைகளை மட்டுமே கூறி வழியனுப்பினார் புதிய கலாச்சாரம், புத…

    • 1 reply
    • 3.2k views
  11. உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. தமிழை அமுதமாக பல்வேறு புலவர்கள், கவிஞர்கள் கூறினாலும் ஆங்கிலம் என்பது நம்முடைய சந்திப்பு மொழி யாகிவிட்டது. இதில் நாம் குறை கூற தேவையில்லை. ஆனால் இறைக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக அக்கால சித்தர்கள் முதல் இக்கால ஆன்மீக வாதிகள் கருதுகின்றனர். அதைப்பற்றிய ஒரு ஓப்பீடு. முத்தி தருபவன் அவனே ; ஞானம் தருபவன்அவனே ;ஞானமாய் விளங்குபவனும் அவனே ; பாலில் கலந்துள்ள நெய்போல் காணும் பொருளிலெல்லாம் கரந்துள்ளான்" எனத் திருமூலர் இறைவனைப் போற்றும் போது " முத்தமிழாகவும் விளங்குகிறான் " எனக் குறிக்கின்றார். எல்லாமாய் விளங்கும் இறைவன் தமிழாகவும் விளங்குகின்றான். எல்லாவற்றிலும் சுரந…

  12. கொட்டாவி விட்ட காக்கை! அஃறிணை உயிரினங்களை அதிகமாக உற்றுநோக்குபவர்கள் கவிஞர்கள் தான் என்பது என் கருத்து. இதோ ஒரு கவிஞனின் ஒப்பீட்டைப் பாருங்களேன்.. அழகியதொரு கடற்கரைச் சோலை.. ஆங்கே வலிமையான காற்று வீசுகிறது.. அதனால்.. கண்டல் மரத்திலிருந்து பசுமையான காய்கள் நேராகக் கீழிருக்கும் நீர்நிலையில் வளர்ந்திருக்கும் ஆம்பல் மலர்களின் மீது வீழ்கின்றன... அதனால் ஆம்பலின் அரும்பு சாய்ந்து சிறிய வெண்ணிறக் காக்கை கொட்டாவி விட்டது போல வெண்ணிறமாய் மலர்ந்து நிற்கும். என்கிறார்.... இப்பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது. பாடல் இதுதான்.. கானற் கண்டல் கழன்று உகு பைங்காய் நீர் நிற இருங்கழி உட்பட வீழந்தென உறுகால் தூக்க தூங்கி ஆம்பல் சிறு வெண் காக்…

  13. ராவணன் தமிழன் "தமிழர் காதல்", ஆயிரம் வருடங்களிற்கு முன்னரே தமிழர், தம் காதலை பாடி வைத்தார்கள், இப்படிதான். "யாயும் ,ஞாயும் யாரா கியரோ" , (நானும், நீயும் யார், எவர் என்று அறியாதவர்களாக இருக்கட்டும், நானும், நீயும், முன் ,பின்ன தெரியாதவர்களாக இருக்கட்டும், எப்படி யாவது இருதுட்டு போகட்டும், இழவு ) "எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்", ( எம் இருவரது ,அப்பன், ஆத்தாள் முன்ன, பின்ன , எப்போதும், ஒருவருக்கு ,ஒருவர் அறிந்திருக்கு மாட்டார்கள், அதற்கான வாய்ப்பே இல்லை) "யானும், நீயும் எவ்வழி யறிதும்", ( நான் எப்படி பட்டவன், நீ எப்படி பட்டவள், பணம் , இருக்க, பந்தம் இருக்கா, சொந்தம் , இருக்கா, வேலை இருக்க, வெட்டி இருக்கா, கடவுள், இருக்கா, மதம், இருக…

  14. தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும். காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம்: · புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர். · பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார் இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுக…

  15. முதலில் தோன்றியது நீரா? நிலமா? பூமியைப் படைத்தது சாமியென்றும் சாமியைப் படைத்தது பூமியென்றும் காலகாலமாகப் பேசிவந்த பேச்சுக்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய இன்றைய அறிவியலாளர்கள், பூமிக்கு அடியே ஆழத்தில் ஹீலியம் தூண்களை மோதவிட்டு உயிரினங்களின் தோற்றத்தையும், படிநிலை வளர்ச்சியையும் காணமுற்பட்டு அதில் பெருமளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள். “பிக் பேங்“ என்னும் மாவெடிப்புக் கொள்கையின்படி சுமார் 10மில்லியன் காலத்திற்கு முன்னர் அண்டம் முழுவதும் இருளால் நிறைந்திருந்தது. எங்கும் பரவியிருந்த ஹைட்ரஜன் நெருப்புக்கோளமானது, பல மில்லியன் நெருப்புக்குமிழ்களை உமிழ்ந்துகொண்டிருந்தது. இந்த நெருப்புப் பந்தின் வெப்பநிலை எல்லை மீறியபோது வெடித்துச்சிதறியது. நெருப்புக்கோளத்…

  16. கயமூழ்கு மகளிர் கண்கள். தலைவன் தன்னைவிட பரத்தையரையே பெரிதும் விரும்புகிறான். இதைத் தோழிக்குத் தெரியக்கூடாது என்று மனதுக்குள்ளே மறைக்கிறாள் தலைவி. தலைவனோடு ஊடல்கொள்ள தலைவிக்கு இது போலப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றைத் தன் மனதில் கொள்ளாமல் தோழி வாயிலாக வந்தமை ஏற்றுத் தலைவனின் தவறை மறந்தாள் மறைத்தாள். உப்பங்கழியில் நெய்தல் மலர்கள் மலர்ந்துள்ளன. அம்மலர்களின் காம்பு இலைகளுக்கு மேல் உயரமாக வளர்ந்துள்ளது. அலைபெருக்கெடுத்து வரும்போதெல்லாம், நெய்தல் மலர்கள் நீருள் மறைந்து மறைந்து தோன்றுகின்றன. இக்காட்சி, குளத்திலே குளிக்கும் போது நீருள் மூழ்கி மூழ்கி எழும் பெண்களின் கண்களைப் போலவே காட்சியளிக்கின்றன. கண்களல்லாத நெய்தல் மலரானது, மகளிர் கண்கள் போலக் காட்சி தருகிறது. க…

  17. அந்த நாட்களில் பாடசாலையில் ஆங்கில பாடத்தில் ஓர் பாடம் கற்றுக்கொடுத்தார்கள் ஞாபகம் வரும் என நினைக்கிறன்... ஒவ்வொரு நாட்டின் குடிமகனும் எவ்வாறு I'm Ann I'm from England I'm Saman I'm from Japan இப்படியெல்லாம் ஆங்கிலம் கற்று .... நாளை தமிழன் கற்பான் I'm Tamingkalam I'm from ... from .... from.....? http://soundcloud.com/esai1985/bsdp0274dne4

    • 2 replies
    • 1.1k views
  18. மலரினும் மெல்லியது காமம் சிறிய கூதளச்செடிகள் காற்றில் ஆடும் பெரிய மலை! அங்கு ஒரு பெரிய தேனடை! அதைக் கண்ட காலில்லாத முடவன், தன் உள்ளங்கையை சிறுகுடைபோல குவித்து தேனடையை நோக்கி சுட்டி கையினை நக்குவது போல... என் காதலர் என்னை நினைக்கவோ, விரும்பவோ இல்லை, எனினும் அவரை பலமுறை காண்பது கூட என் உள்ளத்துக்கு இனியதே! அவரைக் இப்போது காணாததால் அந்த இன்பமும் இப்போது எனக்கு இல்லாமல் போனது என்று தன் ஆற்றாமையைத் தோழியிடம் புலப்படுத்துகிறாள் தலைவி. குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட விருக்கை முடவன் உட்கைச் சிறுகுடைஐ கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் நல்கார் நயவா ராயினும் பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே. குறுந்தொகை 60 பரணர். (பிரிவிடை ஆற…

  19. தமிழ் இலக்கணம் தொடர்பான மின் நூல்களை பதிவிறக்கம் செய்ய: http://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு%3Aதமிழ்_இலக்கணம் ‪#‎நூலகம்‬ # Grammar ‪#‎Tamil‬ ‪#‎Language‬ ‪#‎தமிழ்‬ ‪#‎தமிழ்மொழி‬‪#‎தமிழர்‬

  20. வலி்ச்சாலும் பிடிச்சிருக்கு! மீன் கொடித் தேரில் மன்மத ராசன் ஊர்வலம் போகின்றான் என்றொரு திரைப்படப் பாடல் கேட்டிருப்பீர்கள்.. மன்மதன் கரும்பை வளைத்து வில்லாக வைத்திருப்பானாம் அவனுடைய தோள்களில் தொங்கும் அம்பறாத்துணியில் மலர்கள் நிரம்பி வழியுமாம் அந்த மலர்களை அம்புகளாக (கணைகளாக) ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் எய்துகொண்டிருப்பானாம். அப்படி எய்யப்படும் மலர்(க்கணைகள்) அம்புகள் எவர் மீது விழுகின்றனவோ, அவர்களுக்குக் காதல் அரும்புமாம். இது பழந்தமிழர் நம்பிக்கை. இது சரியா? தவறா? என்று ஆய்வு செய்யும் முன்னர்... ஆண் மீது பெண்ணுக்கும் - பெண் மீது ஆணுக்கும் ஏற்படும் ஈர்ப்புக்கு இன்றைய அறிவியல் கூறும் வேதியியல் (ஆர்மோன்) விளக்கத்தோடு ஒப்புநோக்கத்தக்கதாக இச்சிந்தனை வி…

  21. வெட்கப்பட்ட ஆறு! தலைவன் சில காலம் தலைவியைக் காணவராமல் இருந்தான். அவனது பிரிவாற்றாமையால் வருந்திய தலைவி தலைவனின் மலையிலிருந்து ஓடிவரும்அருவியிடம் இவ்வாறு பேசுகிறாள்.. எம் தலைவரது மலைநாட்டிலிருந்து வரும் ஆறே…. எம் அணிகலன்கள் நெகிழுமாறு துன்பம் மிகுந்தது! மெல்லிய தோளும் மெலிந்து போயிற்று! உடல் பாழ்பட பசலையும் படர்ந்தது! உடலைப் பார்த்து நெற்றியும் பசலை கொண்டது! (புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டதுபோல என்றொரு பழமொழி சொல்வார்கள். அது போலவே தலையின் நிலை உள்ளது உடலைப் பார்க்கும் ஆற்றல் நெற்றிக்குக் கிடையாது என்றாலும் பார்த்தது அதனால் நெற்றியும் கெட்டது என்கிறாள். அறிவுக்கு இடம்கொடுக்காமல் கவிதையின் கற்பனை உலகத்துக்கு உள்ளே போனால் தலைவியன் நிலை சிரிக்கவைப்பதாக உள…

  22. தமிழ் எழுத்துக்கள் 247 என்றுதான் பள்ளியிலே படிக்கிறோம். ஆனாலும், எழுதும்போது வடமொழி எழுத்துக்களான ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ எனப்படும் கிரந்த எழுத்துக்களையும் சேர்த்தே எழுதவேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். இந்த வடமொழி கிரந்த எழுத்துக்கள் எந்தக் காலகட்டத்தில், எப்படி தமிழ் எழுத்துகளுக்குள் நுழைந்தன? என்பது பற்றி தமிழ் மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ்ப் பண்பாட்டு தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மு.இளங்கோவனிடம் பேசினோம். அவர் தந்த கருத்தினை இங்கு தருகிறோம். தமிழ்மொழி பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் பெற்றது. உலகில் பிறமொழிகளுக்கு இல்லாத தனித் தன்மை இதுவாகும். தமிழ்மொழி பன்னெடுங்கால வரலாறு உடையது. அரசியல், தன்னலம் காரணமாகத் தமிழ்மொழியின் சிறப்பு சில பொழுது குறைத்துக…

  23. இலக்கியமும் உணவுக் குறிப்புகளும் தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என அமையும் சங்க நூற்களில் உணவு முறை பற்றிய பல்வேறு குறிப்புகள், புலவர்களால் வருணனைகளாகவும், உவமைகளாகவும் பாடல் களில் கூறப்பட்டுள்ளன. கவிதை போன்ற இலக்கியப் படைப்புகளில் உணவு முறை போன்ற குறிப்புகள் முழுவதுமாக எதிர்பார்க்க இயலாது. எனினும் இலக்கியம் என்பது சமூக வாழ்வை விவரிக்கும் போக்குடையதால், அதிலும் குறிப்பாக, நாகரிகம் வாய்ந்த சங்க காலத்து மக்களின் வாழ்வைச் சங்க இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுவதால், சங்க இலக்கியங்களிலிருந்து அக்கால மக்களின் உணவு முறைகளும், பழக்கங்களும் தெளிவாகத் தெரிகின்றன. தொல்காப்பியம் தரும் உணவுக் குறிப்புகள் : தொல்காப்பியத்தின் இலக்கண நூற்பாக்களில் சில, அக…

  24. நயமான ஊடல். பரத்தையரிடமிருந்து மீண்டும் தலைவியிடம் வந்த தலைவன் தம் புதல்வனைத் தூக்கி விளையாடினான்.. தலைவனுக்குத் தம் புதல்வனை நீங்கிச் செல்ல மனமும் இல்லை.. பரத்தையர் நினைவையும் அவனால் கைவிடமுடியவில்லை..பரத்தையரோ தலைவன் வேறு யாருடனும் கூடக் கூடாது என்பதற்காகப் பல அணிகளையும் அடையாளமாக அணிவித்து அனுப்பிவைக்கிறாள். இதைப் பார்த்து ஊடல் (கோபம்) கொண்ட தலைவி தலைவனை நீ இங்கு இருக்கவேண்டாம் பரத்தையரிடமே செல்க என்று கோபமாகச் சொன்னாலும் நயமாக அவன் தவறை அவனுக்குப் புரியவைப்பது போலச் சொல்கிறாள்.. அழகான உவமை. பறவைகள் ஒலிக்கின்ற அகன்ற வயல்! அங்கு, ஒலிக்கின்ற செந்நெல் இடையிலே தாமரை மலர்ந்திருக்கிறது! அந்தத் தாமரை மீது முதிர்ந்த கதிர்கள் சாய்ந்திருக்கின்றன! இக்க…

    • 10 replies
    • 1.5k views
  25. இந்த உலகம் இன்னும் இயங்கக் காரணம்? நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் இயற்கைக்கூறுகள் இந்த உலகம் இயங்க அடிப்படையானவையாகும் என்று பாடம் படித்தோம். இருந்தாலும், மக்காத குப்பைகளாலும் வேதியியல் உரங்களாலும் மண்ணை மலடாக்கினோம், காடுகளை அழித்தோம், விவசாய நிலங்களைப் பட்டாப்போட்டு விற்றோம், தொழிற்சாலைக் கழிவுகளால் நீர்நிலைகளை விசமாக்கினோம், நச்சுப் புகையால் காற்றை மாசாக்கினோம் இப்படிப் பல வழிகளில் இயற்கையை அழித்தோம் அதனால், ஆறுகளிலும், குளங்களிலும் தண்ணீர் இல்லை! மழையில்லை, வெயில் வாட்டி வதைக்கிறது! எப்போது மழைவரும்? எப்போது புயல்வரும்? எப்போது கடல்சீற்றம் வரும்? என்பது யாருக்கும் தெரியாது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இருந்தாலும் உலகம் இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.