தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
வெங்காயமும் பெருங்காயமும் வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத சீரகத்தைத் தந்தீரேல், தேடேன் பெருங்காயம்! ஏரகத்துச் செட்டியாரே! இது சித்தர்களின் பரிபாஷையில் எழுதப்பட்டதொரு பாடல். புலவர்களில் சிலர், மறைமுகச்சித்தர்களாக விளங்கினார்கள். சித்தர்கள், ரிஷிகளில் பல மாதிரியான மனப்பான்மை,குறிக்கோள்கள்,நடைமுறை,சித்தாந்தம் முதலியவற்றைக ்கொண்டவர்களாக விளங்கினர். சிற்சில அடிப்படைகளில் அவர்களை வகைப்படுத்திப் பிரித்து விடமுடியும். சிலர், உடலைப்பக்குவப்படுத்தி மூப்பு, நரை, நோய், நொடி,இல்லாமல் நீண்டகாலம் இருக்கப் பார்ப்பார்கள். சிலரோ இறக்காமலேயே இருந்து விடவேண்டும் என்று எண்ணுவர். பலவகையான உணவு…
-
- 0 replies
- 823 views
-
-
ஆவியர் என்போர் சங்ககாலக் குடிமக்களில் ஒருசாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. ஆவியர் குடியினர் “அருந்திறல் அணங்கின் ஆவியர்” எனக் குறிப்பிடப்படுவதால் இவர்களின் உடல் தோற்றமே வலிமை மிக்கதாக அமைந்து பகைவரை அச்சுறுத்தியதை உணரமுடிகிறது. இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். ‘முருகன் நற்பேர் ஆவி’ என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொருபகுதி. இப்பகுதி அரசன் வையாவிக்கோ என்றும், வையாவிக்கோமான் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். வையாவிக்கோப் பெரும்பேகன் வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோர் இப்பகுதியை ஆண்ட மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பதிற்றுப்பத்து நான்காம் பத்தின் பாட்டுடைத் தலைவன்…
-
- 0 replies
- 1k views
-
-
உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. தமிழை அமுதமாக பல்வேறு புலவர்கள், கவிஞர்கள் கூறினாலும் ஆங்கிலம் என்பது நம்முடைய சந்திப்பு மொழி யாகிவிட்டது. இதில் நாம் குறை கூற தேவையில்லை. ஆனால் இறைக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக அக்கால சித்தர்கள் முதல் இக்கால ஆன்மீக வாதிகள் கருதுகின்றனர். அதைப்பற்றிய ஒரு ஓப்பீடு. முத்தி தருபவன் அவனே ; ஞானம் தருபவன்அவனே ;ஞானமாய் விளங்குபவனும் அவனே ; பாலில் கலந்துள்ள நெய்போல் காணும் பொருளிலெல்லாம் கரந்துள்ளான்" எனத் திருமூலர் இறைவனைப் போற்றும் போது " முத்தமிழாகவும் விளங்குகிறான் " எனக் குறிக்கின்றார். எல்லாமாய் விளங்கும் இறைவன் தமிழாகவும் விளங்குகின்றான். எல்லாவற்றிலும் சுரந…
-
- 0 replies
- 899 views
-
-
எது கெடும் ? அடேயப்பா... கெடுவதற்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார். (01) பாராத பயிரும் கெடும். (02) பாசத்தினால் பிள்ளை கெடும். (03) கேளாத கடனும் கெடும். (04) கேட்கும்போது உறவு கெடும். (05) தேடாத செல்வம் கெடும். (06) தெகிட்டினால் விருந்து கெடும். (07) ஓதாத கல்வி கெடும். (08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். (09) சேராத உறவும் கெடும். (10) சிற்றின்பன் பெயரும் கெடும். (11) நாடாத நட்பும் கெடும். (12) நயமில்லா சொல்லும் கெடும். (13) கண்டிக்காத பிள்ளை கெடும். (14) கடன்பட்டால் வாழ்வு கெடும். (15) பிரிவால் இன்பம் கெடும். (16) பணத்தால் அமைதி கெடும். (17) சினமிகுந்தால் அறமும் கெடும். (18) சிந்தி…
-
- 0 replies
- 1k views
-
-
குட்டு + உணி =குட்டுண்பவன், அதாவது குட்டுப்படுபவன். அந்தக் காலத்தில் 'குட்டுணி' என்ற ஒரு சொல் வழங்கியது. இங்ஙனம் குட்டுப்பட்டு அவமானப்படுபவர்களை அது குறித்தது. அறிவின்றிப் பிறரால் தண்டனைக்கு ஆட்படுபவர்களைக் 'குட்டுணி' என்றார்கள். இவ்வாறே காலப்போக்கில் 'குட்டு' என்ற சொல்லுக்குத் துன்பம், இடர், அனுபவம் என்றெல்லாம் குறியீட்டுப் பொருள்கள் ஏற்படலாயின. விவரம் தெரியாமல் ஒரு தொழிலைத் தொடங்கிவிட்டுத் தவிப்பர்களைப் பார்த்துக் 'குட்டுப்பட்டால்தான் புத்தி வரும்' எனப் பேசுவார்கள். ஒன்றைத் தொடங்கித் துயரப்பட்டு அனுபவப்படுவதும் இதில் குறிக்கப்படுகிறது. மிகவும் வாழ்வில் அடிபட்டு விட்டவனை 'நல்லாக் குட்டுப்பட்டு விட்டான்' என்று கூறி இரக்கப் படுவார்கள். ஒருவனைத் துன்பப்படுத்திக் கொண்டேயி…
-
- 0 replies
- 512 views
-
-
தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும். காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம்: · புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர். · பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார் இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுக…
-
- 0 replies
- 4.5k views
-
-
நற்றிணை காட்டும் நற்பண்புகள்.! காதலையும் வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி வாழ்ந்தவர்கள் சங்ககால மாந்தர்கள். அத்துடன் கூர்த்தமதி உடையவர்கள் என்பதை அவர்தம் பாடல்கள் தெளிவாய் எடுத்துரைக்கும். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணை காதல், அன்பு, இல்வாழ்க்கை முதலிய அக வாழ்வு முறைகளை எடுத்தியம்புகிறது. நற்றிணை கூறும் நற்பண்புகள் சிலவற்றைக் காண்போம். அன்பு: தலைமக்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள அன்பின் வலிமையைப் பறைசாற்றிச் செல்கிறது இப்பாடல். தலைவன் தலைவியைக் காணக் காலம் தாழ்த்துதலைத் தோழி சுட்டிக்காட்டும் வேளையில், தோழிக்குத் தலைவி "என் தலைவன் எப்படிப்பட்டவன் தெரியுமா?' என்று கூறுவதுபோல் அமைந்துள்ளது " நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்' (பா.1) என்கிற பா…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஓரு படைப்பாளன், தன் சிந்தனையில் தோன்றும் காட்சிகளைப் படிப்பவர்களின் மனக்கண் முன்பே கொண்டுவரும் உத்திதான் வருணனை முறை. கற்பனையும் வருணனையும் இல்லாத எந்தவொரு படைப்பும் சிறந்த இலக்கியமாகாது. அந்த வகையில், சங்க இலக்கியங்களில் இவ்வருணனைகள் பொக்கிஷமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அவை வைரமாய் நம் கண்முன்னே மின்னிக் கொண்டிருக்கின்றன. இவ்வருணனையை, ஆள் வருணனை, இயற்கை வருணனை என்றும் இடம், காலம், நிகழ்ச்சி, கலை முதலிய பெயர்களிலும் வகைப்படுத்துவர். பாலைக்கலியில் உள்ள ஒரு பாடல், தலைவன் கூற்றின் மூலம் பாலை நிலத்தின் வெம்மை அழகாக வருணனை செய்யப்பட்டுள்ளது. ""அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழா அய் காடென்றார் அக்காட்டுள் துடியடிக் கயந்தலைக் கலக்கிய சின்னீரைப் பிடியூட்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
கண்ணுக்கே தெரியாத காற்றை விவரிக்க தமிழில் இத்தனை சொற்களா ? உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு ! இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும் ! (அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்: (௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று (௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று (௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று (௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று (ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்: (௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று" (௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்" (௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்" (௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று" (௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற…
-
- 0 replies
- 877 views
-
-
தொன்மையானதும் சமகாலத்தில் புளக்கத்தில் உள்ளதும் எதிர்கால இருப்புக்கு வாய்ப்புக்களையும் கொண்ட மொழியாக தழிழ்மொழி விளங்கி வருகின்றது. செம்மொழியாகிய தழிழ்மொழியே என்று பாராட்டவும்படுகின்றது. இணைய மொழியாகவும் தமிழ்மொழி வாழ்வு கொண்டுள்ளது. ஆயினும் அன்றாடாப் பாடப் பயில்வுகளில் தழிழ்மொழியின் நிலை கேள்விக்குரியதாகி வருகின்றமை மிகவும் வெளிப்படையானது. கல்வி வெளிகளிலும் வெகுசன ஊடக வெளிகளிலும் தமிழ் மொழியின் பாவனை குறைவடைந்தும் திரிபடைந்தும் வருவதும் யதார்த்தமாக இருந்து வருகின்றது. …
-
- 0 replies
- 1.6k views
-
-
அமிர்தா: "சும்மா பொய் சொல்லாதீங்க தாத்தா" இரத்தினம் தாத்தா: "சொல்றேன் கேள், இன்றைக்கு நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார். "ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக் கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத் தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால் வருவது கர்ணம் தானே" - போதையனார் விளக்கம்: இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும். இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம், ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
வாழ்வியல் தடமாற்றமும் வள்ளு வரின் தடுமாற்றமும் மானுட வாழ்வியல் காட்டுமிராண்டி நிலையிலிருந்து கணினி, இணைய நிலையை வந்தடைந்திருக்கிறது. இதற்கிடைப்பட்ட பல்லாயிரமாண்டு காலப் பரிணாம வளர்ச்சியையும் பரிமாண நிலைகளையும் உள்ளடக்கிக் கொண்டு உயர்ந்துள்ளது. தனிமனித குடும்ப, சமூக, அரசு நிலைகளில் மானுட வாழ்வியல் தத்தமக்கென ஒழுகலாற்று நெறிகளை உருவாக்கிச் செம்மைப்படுத்திக் கொண்டே இயங்குகிறது. மரபுகள், விழுமியங்கள், அறநெறிகள் மனிதனின் இயல்புநிலைகளைச் செம்மைப்படுத்து கின்றன. தமிழர்களின் வாழ்வியலைச் சங்காலச் சமூக அகம், புறம் என்ற பாகுபாட்டுமுறை பல்வேறு இலக்கிய, இலக்கணங்களின்வழி உயிர்ப்புமிக்கதாக நிலவச்செய்யும் வல்லமையுடன் வாழ்கிறது. எனினும், காலந்தோறும் மானுட வாழ்வியல் தன் இயல்புக்கேற்ற …
-
- 0 replies
- 1k views
-
-
இலக்கியமும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இலக்கியச்சுடர் இராமலிங்கம் அவர்கள் மெல்பேர்ண் நகரில் ஆற்றிய சொற்பொழிவு. http://youtu.be/Y2V99NVgeDk
-
- 0 replies
- 1.7k views
-
-
யார் பெரியவர் ? மரத்தின் மேலிருந்து தொங்கும் கூட்டைக் கட்டி, எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ள, அதற்கு கீழாக வாசலை வைத்து... தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் அமரவும் இடத்தை ஒதுக்கிக் கட்டியுள்ள தூக்கணாங் குருவி எறும்பினும் சிறிய தொட்டால் நசியக்கூடியது, ஆயினும்.. ஆளுயுர புற்றுக் கட்டி, அதனுள் அடுக்கடுக்காக தங்களுக்கான வீட்டைக் கட்டும் கரையான், தன் உணவான... திரவத்தை கீழே சிந்தாமல் அந்தரத்திலே நிற்கச் செய்யும் தேனி, தன் உணவு தன்னைத் தேடி வந்து, தன் வலைக்குள்ளே விழச் செய்யும் சிலந்தி.. என ஒவ்வொன்றுக்கும், ஒரு திறனை இயற்கை வழங்கியிருக்க... பெரியவர் என யாரும் செ…
-
- 0 replies
- 1.8k views
-
-
Decoding the Odyssey for Philocine – Part I Classical Language : Greek Name of the Literary Work: The Odyssey Author: Homer This Philocine Linguistic Medical Research is based on the translation by : Samuel Butler Probable timeline: Certainly before 750, and in all probability before 1000 B.C. Segment Specifically Decoded in this Module: Book 1 – The Gods in Council — Mivera’s Visit to Ithaca – The Challenge from Telemachus to the Suitors “Tell me, O Muse, of that ingenious hero who travelled far and wide…Many cities did he visit, and many were the nations with whose manners and customs he was acquainted” Abbreviated Philocine Notes and Expanded Philocine Notes placed at …
-
- 0 replies
- 692 views
-
-
1980இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டில் எம்.ஜி.ஆர். அவர்களால் அறிவிக்கப்பட்டு 1981ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் திகதி அண்ணா பிறந்த நாளில் தஞ்சையில் ஆரம்பிக்கப்பட்டது தமிழ் பல்கலைக்கழகம். இதற்கு தமிழக அரசால் 1000 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதன்நோக்கம் தமிழ்மொழியின் வளர்ச்சி, பண்பாடுகளை பாதுகாத்து மக்களிடம் கொண்டு செல்வது, பிற மொழிகளில் சிறந்த நூல்களை தமிழில் கொண்டு வருவது, முக்கியமானது, அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்வது என்பதற்காக உலகம் முழுவதும் தமிழ் மக்களின் சார்பாக மொழிக்கென்று உருவாக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம்தான் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம். கலைப்புலம், மொழிப்புலம், வளர் தமிழ் புலம், சுவடிப்புலம், அறிவியல் தமிழ்புலம…
-
- 0 replies
- 1.1k views
-
-
யானைக்கு 60 பெயர்கள்! யானைக்கு மொத்தம் எத்தனை பெயர்கள் இருக்கின்றன தெரியுமா? ஒன்று, இரண்டல்ல, மொத்தம் 60 பெயர்கள் உள்ளன. இவை எல்லாமே தூய தமிழ்ப் பெயர்கள். # யானை (கரியது) # வேழம் (வெள்ளை யானை) # களிறு # களபம் # மாதங்கம் # கைம்மா (துதிக்கையுடைய விலங்கு) # உம்பர் # உம்பல் (உயர்ந்தது) # அஞ்சனாவதி # அரசுவா # அல்லியன் # அறுபடை # ஆம்பல் # ஆனை # இபம் # இரதி # குஞ்சரம் # இருள் # தும்பு # வல்விலங்கு # தூங்கல் …
-
- 0 replies
- 883 views
-
-
அகநானுற்றில் பதுக்கை.! தமிழர் பண்பாடும் வழிபாடும் மிகவும் தொன்மை வாய்ந்தவை. அவ்வாறிருக்க பழந்தமிழரின் பதுக்கை எனப்படும் இறந்தவர்களின் புதையிடங்களும் அவற்றை வழிபடும் முறையையும் இக்கட்டுரை ஆராய உள்ளது. அதில்,அகநானூற்றில் குறிப்பிடப்படும் நடுகல் மரபும், பதுக்கை மரபும் விவாதப் பொருளாகின்றது பல்வேறு இலக்கியங்கள் நடுகற்கள், பதுக்கைகள் குறித்து பேசியிருப்பினும் அகநானூற்றில் அவை எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இங்குக் காண்போம். நடுகற்கள் பதுக்கை அறிமுகம் நடுகற்கள் போரிலோ சண்டையிலோ மாண்ட ஒரு வீரனுக்காக வைக்கப்படுவதாகும். இதனால் இதனை வீரக் கற்கள் என்றும் அழைக்கும் வழக்கு உள்ளது. நடுகல் இறந்த மனிதனின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாலேயே நடப்படுகிறது. இறந்…
-
- 0 replies
- 2.5k views
-
-
தமிழில் கணிதச் சொற்கள் அடிப்படை அலகு 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீசம் 1/80 - காணி 3/320 - அரைக்காணி முந்திரி 1/160 - அரைக்காணி 1/320 - முந்திரி 1/102400 - கீழ்முந்திரி 1/2150400 - இம்மி 1/23654400 - மும்மி 1/165580800 - அணு 1/1490227200 - குணம் 1/7451136000 - பந்தம் 1/44706816000 - பாகம் 1/312947712000 - விந்தம் 1/5320111104000 - நாகவிந்தம் 1/74481555456000 - சிந்தை 1/489631109120000 - கதிர்முன…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையின் இனவரலாறு இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கரும்,நாகரும்தான். அவர்கள் இந்து சமயத்தையே பின்பற்றிவந்துள்ளனர். புத்தபகவானின் இயற்பெயர் சித்தாத்தன் .அவரது தந்தையின் பெயர் சுத்தோதணன் .இவர் ஒரு இந்து சமயத்தவரும்,அரசரும் ஆவார். கி.மு 560 ஆவது ஆண்டில் நேபாளத்தில் பிறந்த சித்தாத்தன் தனது 29 ஆவது வயதில்துறவியாகி புத்த சமயத்தை உருவாக்கினார்.கி.முன் (247-207)தேவ நம்பிய தீசன் அனுராத புரத்தை தலை நகராய்க்கொண்டு ஆட்சிசெய்தான்.அப்பொழுதே பௌத்தம் முதன் முதலாய் இலங்கையிட்கு வந்தது . கி.பின் ஆறாம் நூற்றாண்டில் மகாவம்சம் என்ற நூல் தாதுசேனன் அரசனின் சகோதரனான மகாநாம தேரரால் பாளி மொழியில்தொகுக்கப்பட்டது.பௌத்தத்தில் இரு பிரிவுகளான மகாயானம்,தேரவாத…
-
- 0 replies
- 1.1k views
-
-
கயமூழ்கு மகளிர் கண்கள். தலைவன் தன்னைவிட பரத்தையரையே பெரிதும் விரும்புகிறான். இதைத் தோழிக்குத் தெரியக்கூடாது என்று மனதுக்குள்ளே மறைக்கிறாள் தலைவி. தலைவனோடு ஊடல்கொள்ள தலைவிக்கு இது போலப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றைத் தன் மனதில் கொள்ளாமல் தோழி வாயிலாக வந்தமை ஏற்றுத் தலைவனின் தவறை மறந்தாள் மறைத்தாள். உப்பங்கழியில் நெய்தல் மலர்கள் மலர்ந்துள்ளன. அம்மலர்களின் காம்பு இலைகளுக்கு மேல் உயரமாக வளர்ந்துள்ளது. அலைபெருக்கெடுத்து வரும்போதெல்லாம், நெய்தல் மலர்கள் நீருள் மறைந்து மறைந்து தோன்றுகின்றன. இக்காட்சி, குளத்திலே குளிக்கும் போது நீருள் மூழ்கி மூழ்கி எழும் பெண்களின் கண்களைப் போலவே காட்சியளிக்கின்றன. கண்களல்லாத நெய்தல் மலரானது, மகளிர் கண்கள் போலக் காட்சி தருகிறது. க…
-
- 0 replies
- 2.3k views
-
-
வணக்கம் வாசகர்களே !! கள உறவுகளே !!! இத்துடன் வேங்கையின் மைந்தன் சரித்திர நாவலை நிறைவு செய்கின்றேன் . நாம் யார் ??? எமது பின்னணி என்ன ??? எமது இனம் செய்த வீரதீரங்கள் என்பனவற்றை இந்த சரித்திர நாவலில் அகிலன் சரியாகவே சொல்லியிருக்கின்றார் . நான் இந்த நாவலில் கற்றுக்கொண்டது என்னவென்றால் , இந்த நாவல் ஓர் வரலாற்றுப் புதினமாக இருந்தாலும் , இதில் வருகின்ற ரோகணத்து ஐந்தாம் மகிந்தர் , அவருடைய சதித்திட்டங்கள் இறுதியில் சோழரிடம் படுதோல்வியில் முடிந்தாலும் , கால ஓட்டத்தில் அதே பெயரை நவீன மகிந்தராக வரித்துகொண்டு அதே ஈழத்தில் புதுயுகம் படைக்க வந்த சோழசாம்ராஜயத்தின் வாரிசுகளை சூழ்சியால் வென்ற சரித்திரத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை . ஒரு கற்பனையான வரலாற்றுப்புதினம் எவ்வாறு எமது …
-
- 0 replies
- 3.6k views
-
-
சங்கிலித் தொடர் ---- சுப.சோமசுந்தரம் எனது குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடம் அவ்வப்போது அளவளாவும் பேறு பெற்றோரில் நானும் ஒருவன். பண்டிதர் முதல் பாமரர் வரை எந்தப் பாகுபாடும் பாராமல் பேசக்கூடியவர்; பழகக்கூடியவர், தொ.ப என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பேரா. தொ.பரமசிவன். அதனாலேயே என்னைப் போன்ற பலரும் அவரிடம் நிறையப் படிப்பது கைகூடியது. "அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்" (குறள் 401; அதிகாரம் : கல்லாமை) (பொருள் : நிரம்பிய நூலறிவின்றி ஒருவன் சான்றோர் முன் பேச ஆசைப்படுதல் (கோட்டி கொளல்), சதுரங்கம் ஆடுவதற்கான களமின்றி வட்டினை உருட்டுவதற்குச் சமம்)…
-
- 0 replies
- 863 views
- 1 follower
-
-
ஆகொள்ளை விரும்பேல்த்திச்சூடி நீதிகதைஆத்திச்சூடி நீதிகதைகள்க (பதவுரை) கொள்ளை-(பிறருடைய பொருளைக்) கொள்ளையிடுதற்கு, விரும்பேல்-ஆசைப்படாதே. (பொழிப்புரை) பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே கள்ளாமை - பிறர் பொருள் விரும்பாமை குறள்:281 எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. குறள் விளக்கம்: பிறரால் இகழப்படாமல் இருக்க ஒருவன் விரும்புவானாயின் பிறருடைய சிறிய பொருளாயினும், அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாதபடி, தன் நெஞ்சினைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். ஏலாதி மேற்கோள் குறுகான் சிறியாரைக் கொள்ளான்புலால்பொய் மறுகான் பிறர்பொருள் வெளவான் - இறுகானாய் ஈடற்ற வர்க்கீவான் ஆயின் நெறிந…
-
- 0 replies
- 1.3k views
-
-
பூவின் ஏழு பருவப் பெயர்கள் பூவின் பெயர்கள் பூவினை மலர் என்று சொல்வது மட்டுமே நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். ஒரு பூவானது அரும்பி ,மலராகி, மணம் பரப்பி மனங்களைக் கொள்ளை கொள்ளும்வரை எத்தனை எத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன. மாற்றங்கள் மட்டுமா நிகழ்கின்றன? மாற்றங்களுக்கு ஏற்ப பெயரையும் அல்லவா மாற்றிக் கொள்கிறது. பருவத்துக்கு ஒரு பெயர் தாங்கி ஒவ்வொரு பருவத்தையும் என்னைப் பார் என்று உற்று நோக்க வைத்து உவகை கொள்ள வைக்கிறது. …
-
- 0 replies
- 7.6k views
-