தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுடன் தமிழுக்கு இருந்த உறவு அரசியல் காரணங்களால் நலிவடைந்தது. திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ், இந்திய விடுதலைக்கு முன்புகூட தன் சக மொழிகளுடன் நல்லுறவு கொண்டிருந்தது. மொழிவாரி மாநிலம் உருவான பிறகு ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி, மொழி மீதான அரசியல்வாதிகளின் நிதானமற்ற ஆவேசம் இரண்டும் ஒரு குடும்ப மொழிகளுக்குள்ளே மாறுபாட்டை உருவாக்கிவிட்டன. கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கும் தமிழுக்குமான உறவில் சில அரசியல் காரணங்களால் இடைவெளி வந்துவிட்டது. என்றாலும், விதிவிலக்காகப் பண்பாட்டு ஆய்வாளர் சிலர் இனத்துக்கும் மொழிக்குமான பழைய உறவைச் சரியாகவே பதிவுசெய்துள்ளார்கள். ஷெட்டரின் ஆராய்ச்சி சங்க இலக்கியங்களின் கன்னட மொழி பேசிய பகுதியின் வரலாற்றை நே…
-
- 0 replies
- 700 views
-
-
-
சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பது பெண்கள் தான்!!!!!!
-
- 0 replies
- 933 views
-
-
கந்தபுராணம் தெரிந்த தமிழனுக்கு கந்தப்பனை தெரியுமா? மணி ஸ்ரீகாந்தன். ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று ஆரம்பித்து ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் மாபெரும்; படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், அய்யன் திருவள்ளுவர். உலகத்தின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் ஒரே நூலில் முப்பாலாக பிரித்து உலக அரங்குகளில் தமிழனின் பெருமையை பறைசாற்றியவர் வள்ளுவர். “தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்…” என்று குறளின் பெருமையை அக்கால புலவரான கபிலர் வியந்து பாடியிருக்கிறார். அதிகாலை நேரம், கபிலர் பசும் புல் ஒன்றைப் பார்க்கிறார்.தரையுடன் ஒட்டிக் கிடக்கும் அந்தச் சிறிய புல்லின் …
-
- 0 replies
- 2k views
-
-
ஒரு மொழியின் தொன்மை எவ்வளவு பெருமைக்குரியதோ அதே அளவுக்கு அதன் இளமையும் பெருமைக்குரியது. மொழியில் இளமை என்பது சமகாலத்துடன் அதற்கு இருக்கும் உயிரோட்டமுள்ள உறவைக் குறிப்பது. தொன்மைச் சிறப்பு மிக்க தமிழ் மொழி எந்த அளவுக்கு இளமையாக இருக்கிறது? இன்றைய சூழலில் தமிழை எப்படி அணுகுவது? மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கேற்பத் தமிழை எப்படிப் பயன்படுத்துவது? உலகின் எல்லா அறிவுத் துறைகளும் தமிழில் வருவதற்கான முயற்சிகள் நடக்கின்றனவா? அன்றாட வாழ்வில் தமிழின் இடம் என்ன? உலக நடப்புகளைப் புரிந்துகொள்வதில் தமிழின் திறன் என்ன? அந்த விஷயத்தில் ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் தமிழ் எங்கே இருக்கிறது? உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவெடுத்ததை ஒட்டி ஆங்கில ஊடகங்களில் ‘…
-
- 0 replies
- 692 views
-
-
நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலைப்பாடு முன்னுரை. தமிழ் இலக்கிய மரபுகளுக்கெல்லாம் தனி சிறப்பாக இருப்பது அக மரபே ஆகும். அகத்திணையில் தோழிப்பாடல்களே அதிகம். சங்க காலம் கடந்து பிற்காலத்தில் தோன்றிய நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலையை அறிவதே இக் கட்டுரையாகும். தோழி தோழி என்ற சொல்லை தோழூூ இ எனப் பிரித்தால் ‘இ’ என்பது பெண்பால் விகுதியைக் குறிக்கின்றது. தோளோடு தோள் நின்று உழைத்தல், தோள் கொடுத்தல் என்பன உதவுதல் என்ற பொருளில் இருந்தே தோழி என்ற சொல்லானது தோன்றியது. இகுனை, பாங்கி, சிலதி, இணங்கி, துணைவி, சேடி, சகி போன்ற சிறப்பு பெயர்களால் தோழியினை அழைக்கின்றனர். தோழி இல்லையேல் காதல் இல்லை, அகப்பொருளும் இல்லை என்று சுட்டும் அளவிற்கு சிறப்பைப் பெற்ற…
-
- 0 replies
- 3.3k views
-
-
ஜெயமோகன் - உலக இலக்கியம் ‘பாதேர் பாஞ்சாலி’யின் [ வங்கத்தில் பொதேர் பஞ்சாலி .பாதையின் குரல்கள்] ஆசிரியர்’ யார் என்று கேட்டால் கணிசமானோர் `சத்யஜித்ரே’ என்று கூறக்கூடும். அப்புகழ்பெற்ற திரைப்படத்தின் பாதிப்பு அத்தகையது. அந்த விரிவான பாதிப்பிற்கு படம் மட்டும் காரணமில்லை என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அது ஓர் அழகிய திரைப்படம்-அவ்வளவுதான், தீவிரமானதோ மகத்தானதோ அல்ல. அதன் காட்சிப்படிமங்களில் நம் ஆழ்மனத்துக்குள் செல்லும் மறைபிரதி இல்லை. எது காட்டப்படுகிறதொ அதுவே அப்படம். ஆனால் அப்படம் பலவகையிலும் முன்னோடியானது. மேற்கத்திய புது யதார்த்தபாணி திரைப்படங்களை அடியொற்றி இந்திய திரைப்படத்துறை தன் படிமமொழியை கண்டடைந்தது. அத்திரைப்படம் வழியாகத்தான். மிதமிஞ்சிய உற்சாகத்துடன் நாற்பது வர…
-
- 0 replies
- 549 views
-
-
-
வள்ளுவன் சொன்ன சுவையான கதை ‘’ராஜாவுக்கு முடிவெட்டும் ஒரு நாவிதன் காட்டு வழியாக வந்தான். மரத்தின் மீதிருந்த பிரம்ம ராக்ஷசன் (பேய்), உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா? என்று கேட்டது. யாருக்குதான் ஆசை இருக்காது? நாவிதனும் வேண்டும் என்று சொல்லவே ஏழு ஜாடி தங்கம் கிடைத்தது. ஆனால் ஒரே ஒரு குறை! ஒரு ஜாடியில் மட்டும் தங்கம் கொஞ்சம் குறைவாக இருந்தது. அதை எப்படியாவது நிரப்பவேண்டும் என்ற ஆசை வந்தது. உழைத்து உழைத்து ஓடாகிப் போய் எத்தனை போட்டாலுல் ஜாடி நிரம்பவே இல்லை. ராஜாவுக்கு முடி வெட்டப் போகும் போதெல்லாம் மகிழ்ச்சியாக அவருடன் பேசிவிட்டு கூடுதலாகப் பணத்துடன் திரும்புவது அவனது வாடிக்கை. ஆனால் ஏழு ஜாடி தங்கம் வந்த பின் அந்த மகிழ்ச்சி எல்லாம் மாயமாய்ப் பறந்தோடி விட்டது. மு…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ் ஒர் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. அதாவது தமிழில் எழுதுவதற்கும் உச்சரிப்பது அல்லது பலக்குவதற்கும் நேரடியான, வரையறை செய்யப்பட்ட, இயல்பான தொடர்பு இருக்கின்றது. ஆகையால் தமிழை ஒலிப்பியல் மொழி என்றும் வகைப்படுத்துவர். தமிழ் ஒலிப்புமுறை கட்டுரை தமிழ் மொழியில் இருக்கும் தனித்துவ ஒலி இயல்புகளை, வரையறைகளை விளக்குவதற்கும், தமிழைத் தெளிவாக உச்சரிப்பதில் இருக்கும் பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதற்கும், தமிழைப் பேசுவதில் இருக்கும் பன்முகத் தன்மையைப் பட்டியலிடுவதற்கும், பிறமொழி ஆள் இடப் பெயர்களைப் பலக்குவதில் இருக்கும் சிக்கல்களை விளக்குவதற்கும் ஒர் அறிமுகக் கட்டுரையாக இருக்கும். தமிழ்ச் சொற்களில் இன்ன எழுத்துக்கள் முதலில் வராதவை, இன்ன எழுத்துக்கள் இறுதியில் வராதவை, இன்ன இன்ன எழ…
-
- 0 replies
- 3.3k views
-
-
Proud To Be Tamil திருக்குறள் ஒரு தகவல்: ௧) 1330 பாக்களை உடையது. ௨) மொத்தம் 42,194 எழுத்துக்கள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளது. ௩) 1812 ஆம் ஆண்டு முதல் முதலாக ஓலைச்சுவடியில் இருந்து அச்சடிக்கப்பட்டது. ௪) திருக்குறளை முதல் முதலில் வேறு மொழியில் மொழி பெயர்த்தவர் பெஸ்கி என்றழைக்கப்படும் வீரமா முனிவர். ௫) 1730 ஆம் ஆண்டு முதல் முதலாக லத்தின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. ௬) 133 அதிகாரங்களை உடையது. ௭) குறிப்பறிதல் என்ற ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே இரண்டு அதிகாரங்களுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. ௮) திருக்குறளில் இடம் பெறாத ஒரே உயிரெழுத்து 'ஒள'. ௯) உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே தமிழ் நூல் 'திருக்குறள்'. #நந்தமீனாள் …
-
- 0 replies
- 1.1k views
-
-
கடற்கரை புக்குளி **************** தமிழுக்கும் சைவத்திற்கும் பெரும் தொண்டாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் ஒருசமயம் நீதிமன்றத்திற்கு ஆட்சியாளர்களின் வழக்கு ஒன்றிற்கு சாட்சி கூறவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.ஆறுமுக நாவலர் தமிழ் மொழியில் மட்டுமல்ல ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றவர்.[பைபிள் கிறீஸ்தவ மதநூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்தவரும் இவரே] வழக்கு வேறொன்றுமில்லை மரத்தாலான கப்பலொன்றை கடற்கரையில் யாரோ தீ இட்டு கொழுத்தியதை கண்ணால் கண்ட சாட்சியத்தை கூறவேண்டும் அதற்கான சந்தர்ப்பம் வந்தபோது மிகவும் தெளிவாக ஆங்கிலத்தில் கூறினார். அப்பொது இடை மறித்த வழக்கறிஞர் ஆறுமுகநாவலரை பார்த்து எங்களிடம் மொழி…
-
- 0 replies
- 900 views
-
-
கிட்கிந்தா காண்டம் சீதையைத் தேடிச் செல்கின்ற இராமனும், இலக்குவனும் கிட்கிந்தைக்கு வருகிறார்கள். அங்கு அனுமனைச் சந்திக்கிறார் இராமர். அனுமன் சுக்கிரீவன் என்பவரை இராமருக்கு அறிமுகம் செய்கிறார். சுக்கிரீவனின் மனைவியை சுக்கிரீவனுடைய அண்ணன் வாலியே கவர்ந்து சென்று விடுகிறார். அதனால் இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவனின் மனைவியை மீட்கிறார். இராமனும் தன்னைப் போல மனைவியை இழந்து தவிக்கிறான் என்பதை அறிந்த சுக்கிரீவனும், அவனுடைய குடிமக்களான வானரங்களும் இராமனுக்கு உதவ முன்வருகிறார்கள். அங்கதன் என்பவர் தலைமையில் அனைவரும் செல்கின்றனர். வழியில் சம்பாதி எனும் சடாயுவின் அண்ணனைச் சந்திக்கின்றனர். சம்பாதி இலங்கையில் சீதை சிறைப்பட்டு இருப்பதைத் தெரிவிக்கின்றார். இலங்கைக்குச் செல்…
-
- 0 replies
- 833 views
-
-
மணிமேகலையின் காதலும் துறவும் மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். இப்பெயரைக் கொண்டு இவரது ஊர் சீத்தலை என்றும் இவர் மதுரையில் கூல வாணிகம் செய்து வந்தவர் என்றும் அறிகிறோம். பௌத்த மதப் பரப்பலுக்காக ஒரு தனிக் காவியமே படைத்த இச்சாத்தனார் ஒரு பௌத்த நெறியாளர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழின் முதல் காப்பியம் என்ற பெருமைக்குரிய சிலப்பதிகாரமும் சாத்தனாரின் மணிமேகலையும் கதைத் தொடர்ச்சியால் இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப் படுகின்றன. சிலப்பதிகாரத்தின் முப்பெரும் கதை மாந்தர்களாம் கண்ணகி, கோவலன், மாதவி மூவரில் கோவலன் மாதவி இருவருக்கும் பிறந்த ஒரே மகளே மணிமேகலை.…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் மொழிக் கல்வியில் பண்பாடும் மதிப்புகளும் (தகவுகளும்): அறிதல், புரிதல், நலம் பாராட்டுதல் by nmuthumohan Culture and Values in Tamil Language Instruction: Knowing, Understanding, Appreciating தமிழ் மொழிக் கல்வியில் பண்பாடும் மதிப்புகளும் (தகவுகளும்): அறிதல், புரிதல், நலம் பாராட்டுதல் பல்லினக் கலாச்சாரச் சூழலில் பண்பாட்டுக் கல்வியின் முக்கியத்துவம் இன்றைய உலகின் மிக அடிப்படையான உண்மையாக பல்லினக் கலாச்சாரச் சூழல் அமைந்திருக்கிறது. இந்த உண்மை உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தக் கூடிய எதார்த்தமாக உள்ளது. ஆசிய நாடுகள், குறிப்பாகத் தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகள் அடர்ந்த காடுகள…
-
- 0 replies
- 4k views
-
-
MultiTier cropping reference in சீவக சிந்தாமணி தற்போதைய விவசாய தொழில் நுட்பத்தில் பயிர்களின் திண்மத்தை (Crop Intensity) அதிகரிக்க Multi-Tier Cropping என்னும் தொழிற்நுட்பத்தை கடைபிடிக்க பரிந்துரைக்கிறார்கள். Multi-Tier Cropping என்பது வெவ்வேறு உயரமுடைய மற்றும் மாறுபடும் தன்மை வாய்ந்த பயிர்களை அடுக்காக வளர்ப்பது ஆகும் முக்கியமாக மலை பகுதிகளில் அரிதாக கிடைக்கும் சூரிய ஒளியை முறையாக அறுவடை செய்து குறைந்த இடத்தில் அதிக செடிகளை வளர்க்க உதவும். சூரிய ஒளி மட்டுமில்லாமல், மண் வளம் காக்கவும், களை கட்டுப்பாட்டுக்கும் உதவுகிறது. நவீன அறிவியலில் வேரில் வளரும் மைக்கோரைசா பூஞ்சானம் போன்றவை மாறுபட்ட பயிர்களிடையே உணவுப்பொருள் பரிமாற்றத்திற்கும் உதவுவதாக நிருபிக்க பட்டுள்ளது. …
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஆய்வு முறைமைகளின் பல்வகைமைகளும் காலனித்துவ நீக்கமும் – கலாநிதி சி.ஜெயசங்கர். ஆய்வும் எழுத்தும் ஆய்வு என்பது எழுத்து வடிவத்திற்குரிய விடயமாகவே நவீன ஈழத்து தமிழ்ச் சூழலில் புழங்கப்பட்டு வருகிறது. காரண காரிய ரீதியானஇ அறிவுபூர்வமான விடயங்களின் மொழியாகஇ வடிவமாகஇ ஊடமாக எழுத்து வடிவம் கொள்ளப்பட்டு வருகிறது. காலனியத்திற்கு முந்திய காலத்தில் வாய்மொழி மரபுகள் அறிவின் மொழியாக அமைந்த நீண்ட உறுதியான பாரம்பரியம் இருந்தும்இ ஆய்வின் மொழியாக எழுத்து வடிவத்தைத் தாண்டிச் சிந்திப்பது அல்லது கற்பனை செய்வது கூட சாத்தியமற்றதாக இருந்து வருகிறது. நவீன மயமாக்கம் என்னும் கலனியமயமாக்கம் திணித்துவிட்ட எழுத்தின் ஆதிக்கம், அதிகாரம் வாய்மொழி மரபுகளின் அறிவுருவாக்கல் பண்புகளை நிராகரித்துவி…
-
- 0 replies
- 1.6k views
-
-
அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளி இவை தானே இவள் இனி இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி…. எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ ..... ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே உதிரட்டுமே உடலின் திரை… எல்லா மொட்டிதழல்களும் மலர்வதற்குதான் குவிந்து காத்திருக்கிறது... எந்தக் காற்று அலாவுமோ என்ற ஏக்கத்தில்!. காற்றுகளுக்கு அலாவுதலின் அளவைச் சொல்லிக் கொடுப்பார் யாருமில்லை. இருந்தாலும் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும்போது ஏதேனும் ஒரு மொட்டு மலர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இசைக்காகவும், இன்குரலுக்காகவும் இந்தப் பாடலின் இனிமையில் இளைப்பாறிச் செல்பவர்கள் அநேகம்....! ஆனால்…
-
- 0 replies
- 2.2k views
-
-
"பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் "கவிதை', வடமொழிச் சொல்லா இல்லை தமிழ்ச் சொல்தானா? 'பா - கலப்படமில்லாத தமிழ்ச் சொல்; "கவி'-சுத்தமான வடமொழிச் சொல்; "கவிதை'- வடமொழி கலந்த தமிழ்ச் சொல். வடமொழியின் நிகண்டான ""அமரகோஷம்', "கவி' என்ற சொல்லுக்கு, "சுக்கிரன் (வெள்ளி), வியாழன் (குரு), புலவர், பரசுராமர், கலை வல்லோன்' - என்று விளக்கம் அளிக்கிறது. ஆகவே, "கவி' என்ற சொல் வடமொழி என்பது தெளிவாகிறது. நாகரிகம் வளர வளர, தமிழ்மொழி வார்த்தைகளின் நீளம், அதைக் கையாளும் விதம், அதன் உச்சரிப்பு போன்றவைகளும் மாறத் தொடங்கி எளிமைப்படுத்தப்பட்டன. விளைவு, "பா' (பாட்டு), கவிதையானது. "தை' என்ற உயிர்மெய்யெழுத்து, வடமொழியான "கவி'யுடன் கலக்க, அது "கவிதை' என்று உருமாறியது. அதுபோல், "பா'வண்ணம்- …
-
- 0 replies
- 785 views
-
-
இருக்க வேண்டிய - கூடாத ஆமைகள் 'ஆமை புகுந்த வீடு உருப்படாது' என்பார்கள் முன்னோர். சீனர்களோ ஆமையை அதிர்ஷடத்திற்குரியது என்றுவளர்க்கிறார்கள். எந்த ஆமை கூடாதது? ஆமைகளில் இருவகை. அதில் எந்த ஆமை இருக்க வேண்டியது? 'கல்லாமை, இல்லாமை' கூடாது! அழுக்காறாமை, பொய்யாமை பிறனில் விழையாமை போன்ற ஆமைகள்இருக்க வேண்டியது! வள்ளுவர் மிக எரிச்சல் படும்போது 'பாவி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார். 'வறுமை என்ற ஒரு பாவி'. 'அழுக்காறு என ஒரு பாவி' என்றார். அந்த பாவி நம் செல்வத்தை அழிக்கும்; நரகத்தில் நம்மைச் சேர்க்கும்! இந்த (ஆமை) பொறாமை எப்படியோ நம் மனதில் வந்து புகுந்து விடுகிறது. நம் வீட்டு மின்சாரம் தடைப்பட்டுஎதிர்வீட்டில் விளக்கு எரிந்தால் பொறாமை. நம் பிள்ளை தேர்வில் தோற்று எதிர் வீட்டுப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழில் பிறரை எவ்வாறு sir/ madam ஆகிய சொற்களை விட்டொழித்து விளிப்பது? பிறர் ஒருவரை அழைக்க தமிழில் பல சொற்கள் உள்ளன. ஆனால் தற்சமயம் 'ஐயா' என்னும் சொல்லினைத்தவிர ஏனைய அனைது சொற்களும் வழக்கிழந்து போய்விட்டன... அதற்குப் பதிலாத இந்தப் பொல்லாத இங்லிஸ் சொற்களான ஆணைக் குறிக்கப் பயன்படும் சேர் / சார் ( sir ) மற்றும் பெண்ணைக் குறிக்கப்பயன்படும் மேடம் / மாடம் ( madam ) ஆகிய சொற்கள் புழக்கத்திற்கு வந்து எம்மொழிச் சொற்களின் வழக்கழித்து விட்டன. இதனால் எம்மொழிச் சொற்கள் மெல்ல மெல்லப் புழக்கத்தில் இருந்து அருகிவருகின்றன. இந்தப் பொல்லாத இங்லிஸ் சொற்களை பயன்படுத்தும் அனைவரும் அது ஏதோ இனிமையாகவும் பார்பதற்கு புதுமையாகவும் இருப்பதாக எண்ணிக்கொண்டே பயன்படுத்துகின்றனர்... எழுதும் பொழு…
-
- 0 replies
- 873 views
- 1 follower
-
-
வாலியிடம் பேச்சிழந்த இராமன் கம்ப இராமாயணத்தில் இராமன் பேச்சிழந்து நின்ற இடம் ஒன்று தான். அது வாலியை வீழ்த்திய பின் அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற இடம். விற்போரில் வீழ்ந்த வாலி சொற்போர் தொடுத்த போது இராமன் நிராயுதபாணியாக மௌனமாகவே நின்றான். வாலி இராமன் மீது பெரும் நம்பிக்கை வைத்தவன். சுக்ரீவன் இராமன் துணையுடன் போருக்கு அழைத்த போது தாரை வாலிக்கு எச்சரிக்கை விடுக்கிறாள். இராமன் துணையுடன் அவன் வந்திருக்கக்கூடும் என்கிறாள். ஆனால் வாலி அவளைக் கடிந்து கொள்கிறான். தம்பியர் அல்லது தமக்கு வேறு உயிர் இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன் எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரிடை அம்பிடைத் தொடுக்குமோ அருளின் ஆழியான் …
-
- 0 replies
- 2.4k views
-
-
செம்மொழி உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர். இவற்றில் இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மொழியிலாளர்கள் கூறுகின்றனர். மொழிகள் எண்ணிக்கை உலக அளவிலும் நம் நாட்டளவிலும் கூடுதலாக இருக்க ஒரே காரணம் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் கொண்டது இந்த உலகம் என்பதே. மேற்காணும் ஆராயிரத்து எழுநூற்று அறுபது மொழிகளுக்கும் மொழிக் குடும்பம் உண்டு. அந்த மொழிக் குடும்பத்தில் தாய்மொழி எனும் மூலமொழியும் உண்டு. அம்மூலமொழிக்கு அடிப்படையான பிறிதொரு மொழிக் குடும்பத்துடன் உறவும் உண்டு. ஆக உலகம் பல மொழி பேசும் பல இனக் குழுக்களின், பல நிறத்தவர்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
தெறுவேயம் - Cannon- தெறு+வேய்+அம் = சுடும் குழாய் தெறு - சுடுகை வேய் - உட்டுளை கொண்டது (குழாய்) அம் - சொல்லாக்க ஈறு தீயிட்டி-firelance - தீயினைக் கொண்ட இட்டி(ஈட்டி) குறுதெறாடி - Musketoon எந்திரவில்- Crossbow- சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள சொல் மடக்கு - மடக்குதல்
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
பலா பழத்தை வெட்டாமலேயே, அதிலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்ள, பழம்பெரும் கணித நூலான, "கணக்கதிகாரம்' ஒரு வழி சொல்லியிருக்கிறது. அதெப்படி பலாப்பழத்தை வெட்டாமலேயே அதில் உள்ள சுளைகளை அறியமுடியும்? விந்தையாக இருக்கிறதல்லவா? ஆனால், நம் பழந்தமிழ் கணக்கியல் இதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது விந்தைதான்! பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி வருவதை ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே வேறெண்ண வேண்டாஞ் சுளை ஒரு பலாப்பழத்தை அறுப்பதற்கு முன்பு அதிலுள்ள சுளைகள் இவ்வளவென்று கண்டு பிடிக்கலாமா என்ற கேள்விக்கு, பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை - எண்ணிக்கையை 6-ஆல் பெருக்கி வரும் விடையை 5-ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவானது…
-
- 0 replies
- 713 views
-