Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டமைப்பு

 

 maxresdefault.jpg1520334172-sunrise-train-on-the-bridge.j

  1. கவனிக்க: பழைய திரியான சென்னை மெட்ரோ ரயில் அதிக படங்களையும், செய்திகளையும் தாங்கியிருப்பதால் கணனியில் உடனடியாக தெரிவதில் தாமதம் ஏற்படுகிறது.. ஆகையால் அதன் தொடர்ச்சி சென்னை மெட்ரோ ரயில் - பாகம் 2 என்ற பெயரில் இங்கே.. ************************************************ சென்னை உயர் நீதிமன்ற மெட்ரோ நிலையம்...

  2. சிங்காரச் சென்னைக்கும் உலகத் தரத்தில்(?) மாநகர தொடருந்து (Metro Rail) வசதி கூடிய விரைவில் - அதாவது அடுத்தாண்டு இறுதியில் மக்கள் பாவனைக்கு வரவிருக்கிறது. தொடருந்தின் உட்புறம் எப்படி இருக்குமென காட்சிப் படம் உங்கள் குழாயில் துழாவியபோது அம்புட்டது... நீங்களும் பாருங்கோவன்... http://youtu.be/Tcn05fP5tSg மேலதிக விவரங்களுக்கு அத்திட்ட அலுவலகத்தின் இணையத்தில் பாருங்கள்... http://chennaimetrorail.gov.in/

  3. முடங்கியதா.. சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்? சென்னையின் நெடுநாளைய கனவான சென்னை - மதுரவாய்ல் இடையே ஏறத்தாழ 19 கி.மீ தூரத்திற்கு கூவம் ஆற்றின் கரையோரமாகவே ரூபாய் 1850 கோடி செலவில் திட்டமிடப்பட்ட விரைவு மேம்பால்ச் சாலை மத்திய மாநில அரசுகளின் ஈகோ போட்டியால், திட்டம் 30 சதவீதம் நிறைவேற்றப்பட்டு (ரூபாய் 500 கோடிகள்) செலவழித்த பின் பாதியில் முடங்கி நிற்கிறது. இத்திட்டத்தால் சென்னைக்கு உள்ளேவரும் & வெளியேரும் துறைமுக சரக்கு வாகனங்கள் பூந்தமல்லி சாலை, கடற்கரை சாலை, மவுண்ட் ரோடு வழியே செல்லாமல் நேரடியாக சென்னை நுழைவாயிலான மதுரவாயல் மூலம் விரைவாக் சென்னை துறைமுகத்தை அடைய இயலும். இதன்மூலம் வழக்கம…

  4. துபாய் நகரின் புறநகர் பகுதியான 'துபாய் மெரீனா' என்பது பெரும்பாலும் கோடிகளில் புரளும் ஐரோப்பிய செல்வந்தர்கள் வாழும் பகுதியாகும். மற்றொருபுறம் அலுவலகங்கள் நிறைந்த ஜெ.எல்.டி(Jumeirah lake towers) எனப்படும் உயரடுக்கு மாடிகள் கொண்ட பகுதிகள். இந்த பகுதிகளுக்குள் சென்றால் நமக்கு கழுத்தில் சுளுக்கு வந்துவிடும், ஏனெனில் பெரும்பாலும் அனைத்து கட்டிடங்களும் குறைந்தது 25 மாடிகளுக்கு மேல்..சில கட்டிடங்கள் 60, 80 எனவும் உண்டு. இப்பகுதிகளைக் கடந்தால் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், துறைமுகங்கள் நிறைந்த 'ஜெபல் அலி' பகுதிகள் வரும். எனக்கு பெரும்பாலும் இப்பகுதிகளுக்குள் அலுவலக வேலை சம்பந்தமாக அடிக்கடி சென்று வரக்கூடிய வாய்ப்புக்கள் வரும்.. முதலில் மிக பிரமிப்பாக இருந்தது.. இப்…

  5. மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 ! உலகிலேயே மிகப் பெரிய விமானம் என்ற பெருமையுடன் உள்ள "ஏர்பஸ் ஏ-380" தனது கடைசி மூச்சை விடவுள்ளது. அதாவது இந்த விமானத்தின் உற்பத்தியை ஏர்பஸ் நிறுவனம் நிறுத்தவுள்ளதாம். மிகப் பெரிய ராட்சத விமானம் என்பதாலும், விலை மிக மிக அதிகம் என்பதாலும் இதை வாங்க யாரும் வருவதில்லை. இதனால்தான் உற்பத்தியை நிறுத்தப் போகிறதாம் ஏர்பஸ். 10 வருடங்களுக்கு முன்புதான் இந்த சூப்பர்ஜம்போ விமானத்தை அறிமுகப்படுத்தியது ஏர்பஸ். 500 பேருக்கும் மேல் இந்த விமானத்தில் பயணிக்க முடியும். இந்த விமானத்தை அதிகம் பயன்படுத்துவது எமிரேட்ஸ் நிறுவனம்தான். அந்த நிறுவனம் தான் கொடுத்திருந்த ஆர்டரை ரத்து செய்து விட்டதால் ஏர்பஸ் நி…

  6. பாம்பன் தூக்கு பாலத்தின் அருகே புதிய தூண்கள் அமைக்கும் பணி மும்முரம். பாம்பன் கடலில் இரட்டை வழி தளத்துடன் அமையும் புதிய ரயில் பாலத்தில், கப்பல் செல்லும் கால்வாய் பகுதியில் இருபுறமும் தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைப்பதில் பாம்பன் பாலம் முக்கிய பங்காற்றுகிறது. பாம்பன் கடலில் உள்ள ரயில்பாதை அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்து விட்டது. இதையடுத்து ரூபாய் 250 கோடியில் செலவில் மின்சார ரயில்களை இயக்கும் வகையிலான இரட்டை வழித்தடத்துடன் கூடிய புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. தற்போதுள்ள ரயில் பாலத்திற்கு அருகிலேயே கட்டப்பட்டுவரும் பாலத்தின் பணிகள் கொரோனா காரணங்களால் சில மாதங்கள் …

  7. மூன்று வருடங்களுக்கு முந்தைய நினைவு.. பல வருட கனவான சென்னையில் சொந்தமாக நிலம் வாங்கி தனிவீடு கட்ட வேண்டுமென விருப்பம்.. கடும் வெயிலில் உழைத்து சேகரித்த செல்வத்தைக் கொண்டு சிறிய மனை ஒன்று வாங்கிப்போட்டு, பின்னர் ஓய்வு பெற்ற பின் அங்கே வீடு கட்டிகொள்ளலாமென முடிவெடுத்தேன். மனையை தேடினேன்..தேடினேன்..! சென்னை நகரத்திற்குள் குறிப்பிட்ட பணத்திற்குள், காலி மனை வாங்குவது கடினம்தான்.. பெருகி வரும் புறநகர் பகுதிகளில் தேடும்போது பம்பல், திருநீர்மலை பகுதிகளுக்கும் சென்று வந்தேன்.. டீசன்டான ஒரு பகுதியில் தேடும்போது ஒரு மனை பிடித்துப்போனது.. விலையும் கொஞ்சம் மலிவாக இருந்தது. கூட்டிச்சென்ற நிறுவன ஆட்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்..! திடீரென தலைக்கு ம…

  8. இரண்டாவது விமான ஓடுதளம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் இரண்டாவது விமான ஓடுதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது...! ஆலந்தூர் முதல் போரூர் வரை நீள்வாக்கில்(2.925 Km) இந்த விமான ஓடுதளம் அமைந்துள்ளது. (Runway 30) Nice video:

  9. தற்செயலாக இந்தக் காணொளியை இன்று பார்க்க நேர்ந்தது. இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளே அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகளையும் சுருக்கமாக விபரிக்கிறது இந்தக் காணொளி. நல்லெண்ணத்துடன்(?) அமைக்கப்பட்டுள்ளதா..? என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்..! 🤔

  10. 'கூகுள்' வரைபடத்தில் இணைகிறது, நீலகிரி மலை ரயில்! நீலகிரி மலை ரயிலை, 'கூகுள்' வரைபடத்தில் இணைப்பதற்கான ஆய்வுப் பணிகளை அந்நிறுவனத்தார் புதன்கிழமை தொடங்கியுள்ளனர். நீலகிரி மலைகளின் இடுக்குகளிலும், எழில் கொஞ்சும் அடர்ந்த வனப் பகுதிகளிலும் நாள்தோறும் பயணிகளைச் சுமந்தவாறு தவழ்ந்து செல்கிறது மலை ரயில். ஆசியக் கண்டத்தில் மிக நீளமான மீட்டர் கேஜ் மலை ரயில் பாதை இதுவாகும். குன்னூரில் உள்ள என்ஜின் மையம், தெற்கு ரயில்வேயில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஒரே நீராவி இன்ஜின் பணிமனையாகும். இந்தப் பணிமனை கடந்த 1899ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். மேட்டுப்பாளையம்-குன்னூர் பிரிவில் பயன்படுத்துவதற்காக நீராவி என்ஜின்கள் சுவிட்சர்லாந்திலிருந்து தருவிக்கப்பட்டு இந்த மையத்…

  11. மதுரையில் பிறந்து, சென்னையில் புகுந்து, புலத்தில் வாழும்போது சில நகரங்களை, தமிழ்நாட்டின் பகுதிகளை ஆகாயத்திலிருந்து பார்க்கும் வாய்ப்புகள் கிட்டின. மனித தலைகளும், இயந்திரங்களின் ஓட்டமுமாய் மதுரை, சென்னை, துபை போன்ற நகரங்கள் கடந்த சில வாரங்களாக கொரானா என்ற அரக்கனின் பிடியில் விழுந்து வெறிச்சோடிகிடந்தன. அவற்றில் சென்னை நகரத்தில் வெறிச்சோடிய பகுதிகளை இங்கே காணொளியில் பார்க்கும்போது இனியொரு நிகழ்வு இப்பிறவியில் பார்க்க வேண்டாமென தோன்றுகிறது..! 🙄 (அருமையான காணொளி தொகுப்பு)

  12. மெட்ரோவுடன் மேம்பால ரயில்(MRTS) ஒருங்கிணைப்பு பேச்சு துவக்கம்! ஆவணங்களை அளிக்க சி.எம்.டி.ஏ.,வுக்கு உத்தரவு.. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துடன், மேம்பால ரயில் போக்குவரத்தை (Madras Rapid Transit System - MRTS) ஒருங்கிணைப்பதற்காக, அதிகாரிகள் நிலையிலான, அதிகாரபூர்வ பேச்சு துவங்கியுள்ளது. இதற்காக மேம்பால ரயில் திட்ட ஆவணங்களை ஒப்படைக்க, பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில், முதல்கட்டமாக, 42 கி.மீ., தொலைவுக்கு, மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது. இதில் விமான நிலையம் முதல், சின்னமலை வரையும், பரங்கிமலை முதல் நேரு பூங்கா வரையிலான வழித்தடங்களில், போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டம்…

  13. துபாயின் புதிய கவர்ச்சி அம்சமான "துபாய் ஃப்ரேம்" (Dubai Frame)கட்டிடம் வரும் சனவரி (2018) மாதம் முதல் மக்களின் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. துபாய். துபாய் 'சபீல் பார்க்'( Zaabeel Park ) அருகில் இந்த புகைப்பட ஃப்ரேம் போன்ற கட்டிடம் சுமார் 150 மீட்டர் உயரமும், 93 மீட்டர் அகலத்திலும் அமைந்துள்ளது. இந்த கட்டிடமானது பழைய துபாய் மற்றும் புதிய துபாயின் அழகினை தனித்தனியே ஒரு புகைப்பட ஃப்ரேமிற்குள் காண்பதுபோன்ற காட்சியைத் தரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இதன் வாயிலாக ஒட்டு மொத்த துபாய் நகரின் ரம்யமான அழகையும் நம்மால் ரசிக்க முடியும் என்றும், இந்த முயற்சி சுற்றுல‌ப்பயணிகளால் மிகவும் வரவேற்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டிட…

  14. 10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலை..! 10 ஆயிரம் அடி உயரத்தில் 9.02 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலையான அடல் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி 3-ம் தேதி திறந்து வைக்கிறார். உலகில் மிக நீளமான சுரங்க நெடுஞ்சாலையாக இது இருக்கிறது. 9.02 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்க நெடுஞ்சாலை, மணாலியையும் லாஹாவ் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியையும் இணைப்பதாக, ஆண்டு முழுக்க போக்குவரத்து நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டதாக இருக்கிறது. முன்னர் கடும் பனிப்பொழிவு இருக்கும் போது ஆண்டுதோறும் சுமார் 6 மாத காலத்துக்கு இந்த பள்ளத்தாக்குப் பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு வந்தது. …

  15. ஹாங் காங் கடல் பாலம் இவ்வருட மத்தியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவிருக்கும் உலகின் மிக நீளமான கடல் பாலம் (55 கி.மீ) ஹாங் காங்(Hong Kong) நகரத்திற்கும், சுகாய்-மக்காவ் நகரங்களுக்கும் இடையே ஏறக்குறைய 15.9 பில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான, வடிவமைப்பு காணொளிகளை காணும்போது பொறியாளர்களின் அசாத்திய திறமையும், உழைப்பும் பிரமிக்க வைக்கிறது.

  16. பசுமையை அழித்து... பசுமை விமான நிலையமா..? இருக்கும் விமான நிலையத்தின் அருகில் உள்ள இடங்களை வாங்கி விரிவாக்கம் செய்யலாம்.. இத்தனை நாள் அரசு தூங்கிவிட்டு இப்பொழுது 75 கி.மீட்டருக்கு அப்பால் 2 வது விமான நிலையம் தேவையா..?

  17. சென்னையில் ஈரடுக்குச் சாலை.. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயிலின் ஒரு பகுதி, அடுக்குச் சாலையின் மீது தரமணியிலிருந்து சிறுசேரி வரை 17.2 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படவிருக்கிறது. பழைய மகாபலிபுரம் சாலை, ‘ஐடி எக்ஸ்பிரஸ்வே’யாக, 2000-களின் தொடக்கத்தில் மாறிய பிறகு, சென்னை நகரம் தன்னை மெட்ரோ நகரமாகப் புதுப்பித்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே நெரிசலாக இருக்கும் ஆறு-வழி ‘ஐடி எக்ஸ்பிரஸ்வே’ இப்போது எதிர்காலத்துக்கான சாலையாக மாறவிருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேறினால், நான்கு வழி அடுக்குச் சாலையின் மேல் மெட்ரோ ரயிலின் உயர்தடம் அமைக்கப்படும். தரமணியிலிருந்து சிறுசேரிவரையிலான 17 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தத் தடம் ‘எக்ஸ்பிரஸ்வே’-யில் அமைக்க…

  18. சென்னை விமான நிலைய விரிவாக்கம்! சென்னை விமான நிலைய விரிவாக்கம் பணிக்கு சுமார் 151 ஏக்கர் நிலத்தை விமான போக்குவரத்து ஆணையம் கையகப்படுத்த உள்ளது. கொளப்பாக்கம், மணப்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட், கவுல் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து ஆணைய அதிகாரி கூறியுள்ளார். கையகப்படுத்தும் பகுதிகளில் விமான நிறுத்துமிடங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், தரை இறங்கும் இடத்தை உணர்த்தும் ஒளி விமிகள், வாகன நிறுத்தும் பாதைகள், வடிகால் வசதிகள் உள்ளிட்டவை உருவாக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதற்கான நிலத்தை ஒதுக்கும் பணி மாநில அரசிடம் கேட்டுள்ளதாகவும், இன்னும் ஒருசில மாதங்களில் நிலம் கிடைத்தவுடன் கட்டுமான பணி தொடங…

  19. அமெரிக்காவின் கீழே, அட்லாண்டிக் கடல்-பசிபிக் கடல் இரண்டுக்குமிடையே அமைந்துள்ள பனாமா நாட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பனாமா கால்வாய் பொறியாளர்களின் சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சுற்றுவழி கடல்பாதையை தவிர்க்க, நாட்டின் குறுக்கே கடல்மட்டத்திலிருந்து 85 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையின் ஏரியின் இருபுறமும் மிகுந்த உயிர்பலி, சிரமங்களுக்கிடையே கால்வாய்கள் வெட்டி மூன்று தொட்டி போன்ற நிலைகளில் தண்ணீர் நிரப்பி, கப்பல்களை உயர்த்தி ஓடவிட்டு மறுபுறம் கடத்தும் தொழிற்நுட்பம் வியக்கத்தக்கது.. காணொளியை பார்த்தால் எளிதாக புரியும்..!

  20. சென்னை விமான நிலையத்தில் 5 திரையரங்குகளுடன் கூடிய 6 அடுக்கு மால்..! சென்னை விமான நிலையத்தில் "5 சினிமா தியேட்டர்"...! பிளைட் வர நேரத்திற்குள் படம் பார்க்கலாம்..! 5 கோடி செல்வதில் தியேட்டர் அமைக்க பட உள்ளது என்றும் கூடுதலாக புட் கோர்ட்(Food Court) அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக 80 சதவீத மக்கள் வெளியிலிருந்தும், 20 சதவீத மக்கள் விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்து உள்ளார். விமான நிலையத்தில் பயணிகள் நேரத்தை ஜாலியாக கழிக்க, 5 திரைகளை கொண்ட தியேட்டர் அமைக்கும் பணியில் இறங்கி உள்ளது பிரபல தனியார் நிறுவனமான பி.வி.ஆர்(PVR Cinemas) நிறுவனம். அப்போது இந்த நிறுவனத்திற்கு மட்டும் 50 நகரங…

  21. ஹைப்பர் லூப் துபாய் ஆர்.டி.ஏ(RTA) நிறுவனத்தால் துபாயிலிருந்து அபுதாபி வரை செல்ல அதிவேக "ஹைப்பர் லூப்" (Hyper Loop) போக்குவரத்து வடிவமைப்பு திட்ட வடிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி மணிக்கு 1200 கி.மீ வேகத்தில் செல்லும் வாகனங்கள், துபாயிலிருந்து அபு தாபிக்கு 12 நிமிடத்தில்(140கி.மீ தூரம்) சென்றுவிட முடியுமென்கிறார்கள். சாதாரணமாக இந்த தூரத்தை அடைய பேருந்து மூலம் பயணித்தால் 1 மணி 30 நிமிடங்கள் நேரம் செலவாகும். இத்திட்டம் மிக கூடிய விரைவில் செயல் வடிவம் பெறும் என எதிர்பார்க்கபடுகிறது. Check this video.. மேலதிக செய்திகளுக்கு, இணைப்பை சொடுக்கவும்! கலீஜ் டைம்ஸ்

  22. சென்னை மீனம்பாக்கத்தில், சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு நகரங்கள், நாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சென்னை மாநகரில் தொழில்துறையின் வளர்ச்சி மிக வேகமாக நடந்து வருகிறது. இதனால் சென்னையை நோக்கி இடம்பெயறும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அதிகப்படியான விமான சேவையை சமாளிக்க முடியாமல் திணறும் நிலைக்கு மீனம்பாக்கம் ஆளாகியுள்ளது. எனவே நிர்வாக காரணங்களுக்காக சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு வந்தது. இதற்கான இடத்தை பரிந்துரை செய்யுமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, போதிய இடவசதி கொண்ட பன…

  23. "ரயிலோடுது, யாழ் ரயிலோடுது.." எப்படி "மயிலோடுது.. வான் மயிலோடுது.." என மருவியது என மலைக்கிறீர்களா..? எல்லாம் 'உல்டா' தான்..! பால்ய வயதில் கிராமத்து தெருக்களில் கோலி, கிட்டிப்புல் விளையாட்டுகளை விளையாடும்பொழுது ஆகாயத்தில் சத்தத்துடன் பறக்கும் விமானத்தை பார்த்து அதிசயிப்பது வழக்கம். பெரியாளானதும் 'ஒரு நாளாவது விமானத்தில் பறந்துவிட வேண்டும்' என்பது கனவாகவே இருந்தது. காலசுற்றலில் அக்கனவு பலமுறை நிறைவேறிவிட்டது.. ஏர்பஸ் 380 யில் சிலறை பறந்தாச்சு, கெலிகாப்டரில் சிலமுறை.. ஆனால் கன்கார்டில் பறக்க முடியவில்லை.. இந்த விமான ஈர்ப்பு சிறுவயதிலேயே ஆழமாக பதிந்துவிட்டதால், விமான தொழிற் நுட்பங்களை ஆர்வத்துடன் யுடுயூபிலும், இணைய குறிப்புகளிலும் சிரத்தையாக பார்த்து ரசி…

  24. ட்ராவலேட்டர் (Travelator) சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு (காமராஜர் முனையம்) முனையத்திற்கும், வெளிநாட்டு (அண்ணா முனையம்) முனையத்திற்கும் இடையேயான தூரத்தை பயணிகள் சிரமமின்றி அடைய 'ட்ராவலேட்டர்' அமைக்கும் பணி பல வருடங்களுக்குப் பின், வடிவமைப்பு அங்கீகரிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. இவ்வசதி மக்கள் பாவனைக்கு வந்தபின் பயணப்பொதிகளுடன் இறங்கும் பயணிகள், அதிக சிரமமின்றி இரு முனையங்களுக்கும் சென்று வரலாம்.. வெளிநாடுகளில் சர்வதேச விமான நிலையங்கள், பெரும்பாலும் நிலத்தடி தொடருந்துகளை முனையங்களுக்கிடையே இயக்கிவரும் வேளை, ஏழைக்கேற்ற எள்ளுருண்டையான இந்த 'ட்ராவலேட்டர்'களை மத்திய அரசிடமிருந்து சென்னை விமான நிலையம் பெற, பல வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.. …

  25. விமானப் பயணம் இனிமையானதென்றாலும் பயணிகளின் உயிர், விமான ஓட்டிகளின் கைகளில்தான் உள்ளது. ஆனால் அவ்வப்போது இயற்கையும் விமானிகளின் ஆற்றலை சோதிப்பதும் உண்டு. விமான விபத்துகள், பெரும்பாலும் தரையிறக்கம், ஏற்றத்தில்தான் ஏற்படுகிறது என புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. இக்கணொளியில் மிகப்பெரிய பயணிகள் விமானமான 'எமிரேட்ஸ்' ஏர்பஸ் 380, ஜெர்மனியின் 'துசல்டொர்ப்' சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை கடும் குறுக்கு காற்று வீச்சு(Cross Wind) சவாலை சமாளித்து, அதிக வேகத்தில் இறங்கும் விமானத்தை கட்டுக்குள் கொண்டுவந்து கடும் சிரமத்துடன் தரையை தொட்டு, ஓடுதளத்தின் வழிகாட்டுக்கோடுகளின் மேல் பத்திரமாக இறக்கிய விமான ஓட்டிகளின் திறமையை மெச்சாமல் இருக்க முடியாது.. காணொளியை முழுவதும் பார்த்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.