வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட் 19 எனப்படுத் நோயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா போராடி வரும் நிலையில் 6.6 மில்லியன் அமெரிக்கர்கள் கடந்த வாரம் தொழில் இழப்புக்கான கோரிக்கைகளை தாக்கல் செய்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. முன்னைய வாரத்தில் 3.3 மில்லியன் அமெரிக்கர்கள் தொழில்வாய்ப்பினை இழந்துள்ளதாக பதிவாகியிருந்த்து ஆனால் அந்த தொகையானது கடந்த வாரத்தில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் முடக்கல் நடவடிக்கையை கடுமையாக அமுல்படுத்தியுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், பொருளாதாரமும் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தற்போது முன்…
-
- 0 replies
- 300 views
-
-
கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக பிரிட்டிஷ் எயார்வேஸ் தனது 45,000 ஊழியர்களில் 36,000 பேரை இடைநீக்கம் செய்யவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் தொழிற்சங்கங்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது. அதனடிப்படையில் 80 சதவீதமான விமானப் பணியாளர்கள், ஊழியர்கள், பொறியியாலாளர் மற்றும் தலைமை அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் எயார்வேஸ் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் எயார்வேஸ், கொவிட் 19 நெருக்கடி காரணமாக செவ்வாயன்று பிரிட்டன…
-
- 0 replies
- 267 views
-
-
கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்று காரணமாக ஆசியாவில் 11 மில்லியன் மக்கள் வறுமைமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது. உலக வங்கி தனது அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது. ஆசியா மிக நீண்ட கால பொருளாதார மந்த நிலைக்குள் தள்ளப்படும்,இரண்டு தசாப்காலத்தில் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கா சந்திக்கலாம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. பிராந்தியத்தின் பொருளாதார வீழ்ச்சி 2.1 வீதமாக வீழ்ச்சியடையும்,ஆசியாவின் பொருளாதாரம் 0.5 வீதமாக வீழ்ச்சியடையலாம் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2.3 வீதமாக வீழ்ச்சியடையலாம் எனவும் தெரிவித்துள்ள உலக வங்கி சீனாவின் பொருளாதார வளர்ச்சி 0.1 ஆக குறைவடையலாம் எனவும் தெரிவித்துள்ளது. உ…
-
- 0 replies
- 422 views
-
-
கொரோனாவின் ஊற்றுக்கண்ணான சீனாவின் ஊகான் நகரில் 2 மாத இடைவேளைக்குப் பிறகு ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டதாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷாப்பிங் மால்களுக்கு வருபவர்களின் உடல்நிலையை நுழைவாயில்களிலேயே ஸ்கேன் செய்து திருப்திகரமானது என உறுதி செய்தபின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் சீனாவில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்களில் சுமார் 97 சதவிகிதம் மீண்டும் இயங்கத் துவங்கி விட்டதாகவும், 90 சதவிகித பணியாளர்கள் பணிக்குத் திரும்பி விட்டதாகவும் சீனாவின் தொழில்துறை துணை அமைச்சர் ஜின் கவுபின் (Xin Goubin) தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் அமெரிக்கா ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில், சீனா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவத…
-
- 0 replies
- 319 views
-
-
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால், நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதாரம் 2009ஆம் ஆண்டு அடைந்த வீழ்ச்சியை விட மோசமாக வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார். “கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக உலகம் தற்போது எதிர்பாராத தடையை சந்தித்து வருகிறது. இதனால் 2020-21ஆம் நிதி ஆண்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். ஆனால், அது 2021இல் மீண்டும் சரியாக வாய்ப்புள்ளது; அது மிகப் பெரிய எழுச்சியாகவும் இருக்கும். பணப்புழக்க பிரச்சனைகள் கடன் பிரச்சனைகளாக மாறாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்” என்று நேற்று நடந்த சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் குழு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரி…
-
- 1 reply
- 427 views
-
-
பீஜிங்: அட்லாண்டிஸ் வெளியிட்ட அறிக்கை: சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் 500 நிறுவனங்கள் பட்டியலை பார்ச்சூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவை சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் இடம்பெறவில்லை. இதில் ஒரு நாடு முந்தி சென்றுவிட்டது. அது எந்த நாடு என நீங்கள் யூகிக்கலாம். அது சீனா தான். உலகின் சிறந்த 500 நிறுவனங்கள் பட்டியலில் 129 நிறுவனங்கள் சீனாவை சேர்ந்தவை. அமெரிக்காவை சேர்ந்த 121 நிறுவனங்கள் தான் அதில் இடம்பெற்றுள்ளன. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு, 1999ல் பார்ச்சூன் இதழ் வெளியிட்ட பட்டியலில் சீனாவை சேர்ந்த 8 நிறுவனங்கள் தான் இடம்பெற்றன. தற்போது எவ்வளவு பெரிய முன்னேற்றம்.அமெரிக்க அதிபரும், அரசியல்வ…
-
- 0 replies
- 401 views
-
-
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, இந்தியா உள்ளிட்ட 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா 100 மில்லியன் டாலர்கள் கொரோனா நிதியுதவியை அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்டுள்ள 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் 2.9 மில்லியன் டாலர் தொகை இந்தியாவுக்கு வழங்கப்படுகிறது. ஆய்வக வசதிகளை ஏற்படுத்தவும், கொரோனா பாதிப்புள்ளவர்களை கண்டறியவும், தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்டவற்றிற்காகவும் இந்த தொகை வழங்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா இந்தியாவுக்கு 2.8 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளதாகவும், அதில் சு…
-
- 0 replies
- 322 views
-
-
கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சீரமைக்க 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்க நாடாளுமன்றமும், அதிபர் டிரம்பும் ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பரவலைத் தடுக்கத் தனியார் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி எரிக் ஊலேண்ட் தெரிவித்துள்ளார். இந்த மாபெரும் நிதியுதவித் திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் உடனடியாக ஒப்புதலைப் பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி வேலையின்மையால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கச் சிறு வணிக நிறுவனங்களுக்கு 36 ஆயிரத்து 700 கோடி டாலர் …
-
- 5 replies
- 895 views
-
-
பிரிட்டனை சேர்ந்த பிரபல கண்டுபிடிப்பாளர் (inventor) ஜேம்ஸ் டைசன் (James Dyson) பத்தே நாளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதுவகையான வென்டிலேட்டரை உருவாக்கியுள்ளார். அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய வென்டிலேட்டர் இல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளும் திண்டாடி வருகின்றன. இதற்காக உலக வல்லரசான அமெரிக்கா போர்டு (Ford) நிறுவனத்தையும், இந்தியா மாருதி சுசுகி (maruti suzuki) நிறுவனத்தையும் அணுகியுள்ளன. கொரோனா பாதித்த நோயாளிகள் மூச்சு விட திணறும்போது, அவர்களின் சுவாசத்துக்கு வென்டிலேட்டர் அவசியமாகும். இருப்பினும் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையில் வென்டிலேட்டரை தயாரிக்க இயலாது என பல்வேறு நிறுவனங்களும் தெரிவித்து வருகின்ற…
-
- 1 reply
- 637 views
-
-
உலகலாவிய கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு உதவும் விதமாகக் கூடுதல் எண்ணிக்கையில் காற்றோட்ட சாதனங்களையும் (Ventilators), முகக்கவசங்களையும் தயாரிக்குமாறு அரசாங்கங்களினால் விடுக்கப்படும் அழைப்பை உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுச்செயற்பட ஆரம்பித்திருக்கின்றன. பியட் கம்பனி, சீனாவிலுள்ள அதன் கார் தொழிற்சாலைகளில் ஒன்றை முகக்கவசங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்றும் செயற்பாடுகளைக் கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்திருக்கின்றது. மாதமொன்றுக்கு சுமார் 10 இலட்சம் முகக்கவசங்கள் தயாரிப்பதை இந்த நிறுவனம் இலக்காகக் கொண்டிருக்கிறது. இக்கம்பனி எதிர்வரும் வாரங்களில் அதன் புதிய தயாரிப்புப் பணிகளை ஆரம்பிக்கவிருப்பதாக அந்நிறுவனத்தின் பிர…
-
- 0 replies
- 270 views
-
-
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை குரூப் 20 எனப்படும் ஜி - 20 நாடுகள் ஒதுக்கியுள்ளன. ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடியாகும். இதன்படி 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்பது 5 லட்சம் கோடி அமெரிக்கா டாலராக மதிப்பிடப்படுகிறது. இந்த 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை ரூபாய் மதிப்பில் ரூ. 3.82 கோடி கோடி என கணக்கிட்டுக் கொள்ளலாம். இவ்வளவு பெரிய தொகை கொரோனா பாதிப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜி. 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடினர். இந்த கூட்டமைப்பில் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது. கூட்டத்திற்கு பின்னர் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது- க…
-
- 0 replies
- 339 views
-
-
ஜெனிவா: சுவிட்சர்லாந்தை சேர்ந்த சொகுசு ஓட்டல் கொரோனாவை மையப்படுத்தி, தானியங்கி வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாமல் இருக்க தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதே தீர்வாக கருதப்படுகிறது. இதனை சரியாக வாய்ப்பாக கருதிய ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள லே பிஜோ என்னும் சொகுசு ஓட்டல் , தனது முழுவதும் தானியங்கி மயமாக்கப்பட்ட ஓட்டலில், கொரோனா பரிசோதனை, டாக்டர்கள் மற்றும் 24 மணி நேர நர்ஸ் கண்காணிப்புடன் கூடிய புதிய பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. தனி சமையலறை, உடற்பயிற்சி கூடம், மசாஜ் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மனிதர்களின் உதவியின்றி சொகுசு ஓட்டலின் பிர…
-
- 2 replies
- 351 views
-
-
-
- 5 replies
- 1k views
-
-
நெருக்கடி கால கொள்வனவு, நாடளாவிய முடக்கங்கள் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள சர்வதேச எச்சரிக்கை! அதிகரித்துவரும் ,நெருக்கடி கால கொள்வனவு மற்றும் நாடளாவிய முடக்கங்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டினை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்திடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின், உணவு மற்றும் விவசாய அமையத்தால், குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதான தானியங்கள் மற்றும் என்னை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் தற்போது விநியோகத்துக்கு தவையான சேமிப்புகள் இருந்தாலும், எதிர்காலத்தில் இந்நிலையினை தடுக்க முடியாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. இதனடிப்படைய…
-
- 0 replies
- 212 views
-
-
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா பீதியால் மிகப்பெரிய வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மது விடுதிகள், கேளிக்கை அரங்கங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில நாடுகளில் சராசரியான பண நடமாட்டமும் அரசின் வருமானமும் சுருங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழந்து, இதன் எதிரொலியாக 3 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமானத்தை இழக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/10422…
-
- 5 replies
- 598 views
-
-
நாட்டை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக,கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 5.33 % வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையால் இவ்வாறு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 2.61% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ச்சியாக இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/78269
-
- 0 replies
- 289 views
-
-
கொரோனா வைரஸ் : கார் உற்பத்திகள் நிறுத்தப்படுகின்றன பி.எம்.டபிள்யூ மற்றும் ரொயோற்ரா கார் உற்பத்தி நிறுவனங்கள் இங்கிலாந்து தொழிற்சாலைகளில் கார் தயாரிப்பதை நிறுத்தவுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பினால் நிசான் மற்றும் வொக்ஸ்சோல் ஆகியவற்றின் விற்பனை வீழ்ச்சியடைந்து வருவதால் அவற்றின் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இங்கிலாந்தில் செயல்படும் ஒரே பெரிய கார் நிறுவனங்களான ஜாகுவார், லான்ட் ரோவர் மற்றும் ஹொண்டா ஆகிய நிறுவனங்கள் மூடப்படுகின்றன. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் இங்கிலாந்து தொழிற்சாலையில் சுமார் 8,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். ரொயோற்ரா நிறுவனத்தின் இங்கிலாந்து தொழிற்சாலைகளில் சுமார் 3,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். http://athavannews.com/கொரோனா-வைரஸ்-கார…
-
- 1 reply
- 495 views
-
-
கடந்த 18 ஆண்டுகளுக்கு இல்லாத வகையில் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. உலகம் முழுவதும் பலநாடுகளில் மக்கள் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கும் சூழலில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அமெரிக்கச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைக் கண்டு வருகிறது. வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருப்பதால் பொருளாதார அஸ்திவாரமே ஆட்டம் காணத் தொடங்கி விட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கச்சா விலை பேரலுக்கு 20 புள்ளி 37 டாலருக்கு விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்கள் 56 சதவீத இழப்பை சந்தித்துள்ளன. https://www.polimernews.com/dnews/104…
-
- 0 replies
- 382 views
-
-
கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தில் இருந்து பொருளாதாரத்தை மீட்கும் வகையில், அமெரிக்க மத்திய வங்கி, கடன் வட்டி விகிதத்தை கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலைக்கு குறைத்துள்ளது. அமெரிக்காவில் 3 ஆயிரத்து 782 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் தாக்கம் பொருளாதாரத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், அமெரிக்க மத்திய வங்கியின் அவசரக் கூட்டத்தில், கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பூஜ்யம் முதல் கால் சதவீதம் என்ற வரம்புக்குள் இருக்குமாறு கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்க மத்திய வங்கி அவச…
-
- 0 replies
- 250 views
-
-
மீண்டும் அங்கு அரிசி ஆலையொன்றை அமைத்தால் ஆயிரக் கணக்கானோருக்கு தொழில் வாய்ப்பு அடையாளமே தெரியாமல் அழிந்து போய்க் கிடக்கும் சவளக்கடை அரிசி ஆலை அதிகமான வளங்களைக் கொண்ட பிரதேசம் கிழக்கு மாகாணமாகும். ஒரு காலத்தில் பல தொழிற்சாலைகள் கிழக்கில் இயங்கின. வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை, மண்டூர் ஓட்டுத் தொழிற்சாலை, மிகப் பெரிய அரிசி ஆலைகள், மீன் பதனிடும் நிலையங்கள் என்பவை இவற்றுள் சிலவாகும். இவையெல்லாம் கடந்த கால போர்ச் சூழலின்போது கைவிடப்பட்டன. பல அழிக்கப்பட்டன. இன்று அவை பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றன. வளமோடு வாழ்ந்த இம்மக்கள் இன்னும் மீண்டெழவில்லை. கிழக்கில் அழி…
-
- 0 replies
- 759 views
-
-
Huawei Sri Lanka மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் (UOM) ஆகியன இணைந்து இலங்கையில் உள்ள படித்த மற்றும் திறமையான இளைஞர்களைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ஐ.சி.டி) களத்தில் தங்கள் திறமைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், எப்போதும் வளர்ந்து வரும் ஐ.சி.டி துறையில் போட்டித்தன்மையுடன் இருப்பதனை இன்னும் இயலுமைப்படுத்தும் பொருட்டும், புரிந்துணர்வு ஒப்பந்தந்தமொன்றில் கைச்சாத்திட்டன. இது இலங்கை தனது “ஸ்மார்ட் நேஷன்” தொலைநோக்கு பார்வையை அடையும் பொருட்டு, அதனை ஆதரிப்பதற்கான Huawei நிறுவனத்தின் நீண்டகால டிஜிட்டல் உள்வாங்கல் முயற்சியான TECH4ALLஇன் ஓர் அங்கமாகும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் கைச்சாத்திடும் நிகழ்வில், தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் உயர்கல்வி, தொழில்நு…
-
- 0 replies
- 541 views
-
-
சீனாவை உலுக்கி எடுத்த கொரோனா அந்நாட்டின் பல முன்னணி நிறுவனங்களின் வர்த்தகத்தை அடியோடு மாற்றி உள்ளது. மின்சார வாகனங்கள் தயாரிப்பில் பிரபலமாக விளங்கிய BYD Co., என்ற ஆட்டோ மொபைல் நிறுவனம், தற்போது உலகின் மிகப்பெரிய முகக்கவச தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஃபேஸ் மாஸ்க்குகளை தயாரிக்க துவங்கியது BYD Co நிறுவனம். தற்போது நாளொன்றுக்கு 5 மில்லியன் மாஸ்க்குகளை தயாரித்து வருவதாகவும், இந்த உற்பத்தி திறனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தீவிர வைரஸ் பரவல் காரணமாக மாஸ்க்குகள் மற்றும் சானிட்டைசர்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்தது. இவற்றுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை சீன தொழில்துறை நிறுவனங்கள…
-
- 0 replies
- 457 views
-
-
கொரோனா வைரஸ் பரவில் காரணமாக ஒரு மாத காலத்திற்கும் மேலாக சீனாவில் மூடப்பட்ட தனது 42 பிரபல வர்த்தக நிலையங்களையும் ஆப்பிள் நிறுவனம் இன்று மீண்டும் திறக்கவுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீனாவில் உள தனது 42 பிரபல வர்த்தக நிலையங்களை பெப்ரவரி மாத தொடக்கத்தில் மூடுவதாக அறிவித்தது. இதனால் பெப்ரவரி மாதத்தில் இந் நிறுவனம் சீனாவில் அரை மில்லியனுக்கும் குறைவான கைத் தொலைபேசிகளை மாத்திரம் விற்பனை செய்ததாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியது. இந் நிலையில் தற்போது கடந்த சில நாட்க்களாக புதிய கொரோனா நோயாளர்கள் குறைந்த அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளமையினாலும், சீனாவை விட்டு கொரோனாவின் பாதிப்பு தணிந்துள்ளமையினையும் கருத்திற் கொண்டே ஆப்பிள் நிறுவன…
-
- 0 replies
- 265 views
-
-
மும்பை : உலகளவில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், பங்குச்சந்தைகளை நிலை குலைய செய்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால், வர்த்தகம் நிறுத்திவைக்கப்பட்டது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுக்க பல நாடுகளில் பரவி வருகிறது. பல உயிர்களை பழிவாங்கிய கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகவும், ரூபாயின் மதிப்பு சரிவு, பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்வது, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இன்றைய (மார்ச் 13) வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தைய…
-
- 0 replies
- 197 views
-
-
ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அடுத்த 30 நாட்கள் வரை 26 ஐரோப்பிய நாடுகளின் பயணத்தை அமெரிக்க நிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை இரவு அறிவித்தார். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்தே ஐரோப்பிய பங்குச் சந்தையானது இன்று பாரியளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எசுத்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், கிறீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாத்வியா, லீக்கின்ஸ்டைன், லித்துவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நோர்வோ, போலாந்து, போர்த்துக்கள், சிலோவாக்கியா, சுலோவீனியா, ஸ்பெய்ன், சுவிடம் மற்றும் சுவிட்…
-
- 0 replies
- 294 views
-