வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
622 topics in this forum
-
தங்கத்தின் விலையில் புதிய எழுச்சி; ஒரு பவுண் 320,000 ரூபா! புதன்கிழமை (08) 4,000 அமெரிக்க டொலர்களைத் தாண்டி சாதனை அளவை எட்டியது. அதிகரித்து வரும் பொருளாதார, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் மேலும் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்புகளே இதற்கு காரணம். GMT 0300 நிலவரப்படி ஸ்பாட் தங்கம் 0.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,011.18 ஆக இருந்தது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,033.40 ஆக இருந்தது. பாரம்பரியமாக, நிலையற்ற காலங்களில் தங்கம் ஒரு மதிப்புக் களஞ்சியமாகக் கருதப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் 27 சதவீதம் விலை உயர்ந்த பின்னர், ஸ்பாட் தங்கம் இன்று வரை 53 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வர்த்தகத்தில் …
-
- 1 reply
- 123 views
-
-
லண்டன்: உலகளவில் தங்கம் கையிருப்பு வைத்திருப்பதில் இந்தியா 9வது இடத்திற்கு முன்னேறி இருப்பது உலக தங்க கவுன்சிலின் சமீபத்திய புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தங்கம் கையிருப்பு இதுவரை இல்லாத உயர்வு கண்டுள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை தங்கம் நிர்ணயிப்பதால் அதனை வாங்கி குவிப்பதில் பல நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை அடுத்து சர்வதேச அளவில் அமெரிக்கா தான் அதிகளவு தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை அமெரிக்கா 8,133.5 மெட்ரிக் டன் அளவிற்கு தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கிறது. இரண்டாவதாக ஜெர்மனி 3,366.8 மெட்ரிக் டன் அளவிற்கும், மூன்றாவதாக இத்தாலி 2,451.8 மெட்ரிக் டன் அளவிற்கும் தங்கத்தை கையிருப்பாக வைத்திருக்கிறது.அந்த நாடுகளை தொடர…
-
- 0 replies
- 328 views
-
-
மூன்றாம் நீர் பற்றிய உலக யுத்தமும் யுத்தமும் மறை நீர் அறிவியலும் நம்மை ஏமாற்றும் உலகமும் ?
-
- 0 replies
- 599 views
-
-
தனி ஒருவன் நான்... நிலவை கடந்து தொலைவில் இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது என்பது சாத்தியமா? அசாத்தியமா? என மனிதன் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் செவ்வாய் கிரகத்திற்கு செல்வதையே தன் வாழ்நாள் கனவாய் கொண்டு வாழ்பவர் இவர். தரைப் போக்குவரத்தாக இருக்கட்டும் விண்வெளிப்பயணமாக இருக்கட்டும் அனைத்துமே இவருக்கு அத்துப்படி தான். சாதிக்க துடிக்கும் அனைவரும் தமக்குள் கனவுகோட்டை கட்டுவதுண்டு. ஆனால் இவரின் கனவோ ஆகாச கோட்டையையும் தாண்டி அண்டவெளியில் உலா வருவது. டெஸ்லா (Tesla),ஸ்பேஸ் எக்ஸ் (Space X), பே பால் (Pay Pal) இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது நீங்கள் கேள்விப்பட்டிருப்பதுண்டு. ஆனால் நினைத்து பார்க்க முடியாத இவற்றையெல்லாம் உருவாக்கி தொழினுட்பத்தின் மற்ற…
-
- 2 replies
- 627 views
-
-
பொதுவாக பாடசாலைகளில் கற்றுத்தராத ஒன்றாகவும் வாழ்க்கையில் மனா உளைச்சலை தரும் ஒன்றாகவும் உள்ளது வரவு - செலவை திட்டமிடல். இன்றை சர்வதேச உலக வலைப்பின்னல், சமூக வலைத்தளங்கள் என்பன உலகில் எனக்கும் ஒரு செல்வந்தரை போல வாழ்ந்து காட்ட வேண்டும் என எதிர்பார்ப்பும் உறவினர்களால் மற்றும் நண்பர்களால் தரப்படும் அழுத்தமும் எம்மில் பலரையும் எமது எல்லைக்கு அப்பால் சென்று கடனாளிகளாக மாற்றி நிம்மதியற்ற பிரச்சனையான வாழ்க்கைக்கு வழி சமைத்து விடுகின்றது. எளிமையான சூத்திரம் 50-25-25 50% உழைப்பதில் ஐம்பது வீதத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழிப்பது ( உணவு, உடை, உறையுள், மருத்துவ காப்புறுதி, கல்வி .... ) 25% உழைப்பதில் இருபத்தி ஐந்து வீதத்தை விரும்பும் தேவைகளுக்கு செலவழிப்பது …
-
- 6 replies
- 1.1k views
-
-
அமேரிக்கா 2020 For married individuals filing jointly: ஒன்றாக வாழும் இருவர்களின் வருமான வரி பிரிவுகள் 10%: Up to $19,750 12%: Income between $19,750 to $80,250 22%: Income between $80,250 to $171,050 24%: Income between $171,050 to $326,600 32%: Income between $326,600 to $414,700 35%: Income between $414,700 to $622,050 37%: Income over $622,050 For unmarried individuals: தனியாக வாழும் நபர் 10%: Up to $9,875 12%: Income between $9,875 to $40,125 22%: Income between $40,125 to $85,525 24%: Income between $85,525 to $163,300 32% Income between $163,300 to…
-
- 5 replies
- 885 views
-
-
பொருளியல் நிபுணர் கூறுவது இந்தியா சார்ந்து இருந்தாலும், அடிப்படை பொருளியல் தத்துவங்கள் தங்கள் தங்கள் நாடுகளிலும் பொருந்துவனவாக இருக்கும். குறிப்பு : பொதுவாக கிழமைக்கு சராசரியாக 40 மணித்தியாலங்கள் வேலை செய்யும் நாங்கள் முதலீடுகள் பற்றி 4 நிமிடங்கள் கூட சிந்திப்பதில்லை 😞 உழைக்காத வருமானம்; வாகன காப்புறுதி;
-
- 2 replies
- 844 views
-
-
பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும். ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29வதாக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம். புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது. வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய 5 இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தனித்துவம் வாய்ந்த பஞ்சாமிர்தத்தம் முருகனுக்கு அபிசேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை. பராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல் செயற்கைப் பொரு…
-
- 0 replies
- 411 views
-
-
தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளதால் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பொருளாதார மந்தநிலை காரணமாக, ஆட்டோ மொபைல் துறை கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாதிப்பை சந்திக்க தொடங்கியது. அந்த பாதிப்பின் தாக்கம் தற்போது எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதற்கு, பணப்புழக்கம் குறைந்தது, ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆட்டோ மொபைல் துறையில் வாகன விற்பனை சரிந்தது. இதனால், வாகன விற்பனையில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட டீலர்கள் தங்களது கம்பெனியை மூடி விட்டனர்.இந்நிலையில், விற்பனை ச…
-
- 3 replies
- 464 views
-
-
தமிழகத்தில் 256 இடங்கள் உட்பட, நாடு முழுவதும் 62 நகரங்களில் 2,636 பேட்டரி வாகன சார்ஜ் மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியால், மத்திய அரசுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டால், சுற்றுச்சூழலும் மாசடைகிறது. இந்த பிரச்னையை களைய, மாசு ஏற்படுத்தாத, 'பேட்டரி'யால் இயங்கும், கார், பைக் உள்ளிட்ட, எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும்படி, மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். பேட்டரி வாகன பயன்பாடை ஊக்குவிக்க மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் 62 நகரங்களில் 2,636 இடங்களில் பேட்டரி வாகன சார்ஜ் மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. https://www.dinamalar.com/n…
-
- 2 replies
- 434 views
-
-
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், டெல்லியில் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைப் போக்குவரத்திற்காக, இந்தியாவும் ஜெர்மனியும் கூட்டாக இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டார். இதற்காக 1 பில்லியன் டாலர்கள் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க 200 மில்லியன் யூரோக்கள் அதாவது ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித…
-
- 0 replies
- 634 views
-
-
வாஷிங்டன் : அமெரிக்காவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெஸ்லா கார் நிறுவனத்தை பார்வையிட்டார். உலக அளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம் மின்சார வாகன தயாரிப்பிலும் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டெஸ்லா கார் நிறுவனத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயக்குமார் மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாத மின்சார வாகன உற்பத்திக்கு தமிழக அரசு வழங்கி வரும் ஒத்துழைப்பு குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் டெஸ்லா அதிகாரிகளுக்கு எடுத்து…
-
- 3 replies
- 769 views
-
-
காற்று மாசு உலகின் மிகப்பெரிய பிரச்னையாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மறுபக்கம், பெட்ரோல், டீசல் விலையும் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் ஹையர் எஃபிசியன்ஸி என்ற இன்ஜினைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையையும் வாங்கியிருக்கிறார் செளந்திரராஜன்!
-
- 1 reply
- 539 views
-
-
Mango ஒரு தமிழ் சொல்... போர்த்துக்கேய மொழியில், தூய தமிழ் சொல்லான manka(i) ஆகி, ஆங்கிலத்தில் mango என்று புகுந்து கொண்டது. தமிழனின் முக்கனிகள் அனைத்தையுமே போர்த்துக்கேயன் தென் அமெரிக்காவில், குறிப்பாக பிரேசில் நாட்டுக்கு கொண்டு போய் சேர்த்து விட்டான். ஆனாலும் அங்கிருந்து 130க்கு மேலான மரக்கறி, பழ, மற்றும் தாவர வகைகளை கொண்டு வந்து சேர்த்ததால், நாம் குறை சொல்ல முடியாது. பலாப்பழத்தினை, மலையாளத்தில் சக்கைப்பழம் என்பார்கள். அது வாயில் புகாததால், jack fruit என்று அழைத்தார்கள். இன்று ஐரோப்பாவில், வாழைப்பழம் எங்கிருந்து வருகிறது என்றால், கண்ணை மூடிக்கொண்டு, தென் அமெரிக்கா என்பார்கள். ஆனால், தென் அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்டதே ஐரோப்பாவின் கொலம்பசினால் தான். அத…
-
- 15 replies
- 1.4k views
-
-
சிறுகைத்தொழில்களும் தமிழர் வாழ்வியலும் : பூநகரியில் உள்ள தேங்காய எண்ணெய் சிறு தொழிலகம். சிறுகைத்தொழில்களும் தமிழர் வாழ்வியலும் : அச்சுவேலியில் உள்ள பதநீர் வடிசாலை
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழ் மருந்தால் கொட்டும் கோடிகள்- பீற்றூட்
-
- 0 replies
- 584 views
-
-
படத்தின் காப்புரிமை C.Umapathi Image caption தேனீர் தயாரிக்கிறார் சுப்ரமணியன். அடுப்பில் கொதிக்கும் பாலில் ஆவி பறக்கிறது. காற்றில் தேனீரின் மனம் கமழ்கிறது. சிறு நகர தேனீர்க் கடைகளுக்கே உரிய முறையில் முந்தைய நாள் தூக்கத்தை முகத்தில் மிச்சம் வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. விழுப்புரம் மந்தக்கரையில் இருக்கிறது அந்த தேனீர்க் கடை. மக்கள் கூடுகிற பழைய நகரின் பிரபலமான திடல் அது. தாள லயத்துக்கு ஆடுகிற நடனக் கலைஞரைப் போல தேனீரை ஆற்றிக்கொண்டிருக்கிறார் பெரியவர் சுப்ரமணியன். ராவணன் தேனீர்க் கடைக்கு இதோ புதிதாக ஒரு வாடிக்கையாளர் வருகிறார். "ஐயா உங்களுக்கு குளம்பியா, தேனீரா," கனீரெனக் கேட்கிறார் சுப்ரமணியன். …
-
- 0 replies
- 260 views
-
-
ஊரடங்கு குறித்த அச்சமும் கவலையும் எல்லோரையும் தொற்றிக்கொண்டிருக்கின்றன. பல லட்சம் மக்கள் தங்கள் வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கின்றனர். எல்லோராலும் இந்த நாட்களை இயல்பாகக் கடத்த முடிகிறதா? அவசியமான பொருட்களெல்லாம் தங்குதடையின்றிக் கிடைக்கின்றனவா? வேலை இல்லாத இந்தச் சூழலில் அதை வாங்குவதற்குக் குறைந்தபட்சக் கையிருப்பு இருக்கிறதா? இப்படியே தொடருமானால் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? இப்படி ஓராயிரம் கேள்விகள் இருக்கின்றன. இப்படியான நெருக்கடியான சூழலுக்கு மத்தியில்தான் ஆச்சரிய மனிதராகத் தெரிகிறார் வேணுகுமார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தையைச் சேர்ந்தவர் வேணுகுமார். நாகர்கோவிலில் உள்ள தெ.தி.இந்த…
-
- 2 replies
- 994 views
-
-
நெல் வயலில் அசோலாவின் பங்களிப்பு..! நெல் வயலில் அசோலாவின் பங்களிப்பு..! சாதாரணமாக இந்த அசோலா பற்றி நம்மில் பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை. இது பெரணி வகை தாவரம். நீரில் மட்டுமே வளரக்கூடியது. ஆசிய நாடுகள் அனைத்திலும் வளரும் தாவரமாகும். அதாவது வேளாண் ஆராய்ச்சி நிலையம் மூலமாக இதன் நன்மைகள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது இவை வளர முதலில் பாஸ்பேட் சத்து அவசியம். அதிக வெப்பம் உடைய காலங்களில் இவற்றின் வளர்ச்சி தடைபடும். இவை பிரிதல் மூலம் வேகமாக வயலில் பத்து நாட்களில் வயல் முழுவதும் பரவிவிடும். வயலில் தண்ணீர் தேங்கினால் மட்டுமே இவை அடர்ந்து வளர முடியும். தொடர்ந்து மூன்று போகம் நெல் பயிரிடும் வயல்களில் ஒரு தடவை தூவி விட்டால் போதும். தொடர்ந்து ஸ்போர்கள் மூலம் வயல் அறுவடை முடிந்த…
-
- 11 replies
- 1.4k views
-
-
நீங்கள் இதுவரை இந்த நிறுவனங்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கவிட்டால், வரும் காலங்களில் அதிகம் அறியும் நிறுவனங்களாக இவை இருக்கலாம். 1. பியோன்ட் மீற் : https://www.beyondmeat.com/products/ 2. இம்பொசிப்பில் பூட் : https://impossiblefoods.com/ உலகில் மனிதர் வாழ்ந்த காலம் வரை அவன் மற்றைய உயிரினங்களை கொன்று அவற்றை உண்டு வாழ்கிறான். ஆனால், நவீன உலகில் ஒவ்வொருவர் கையிலும் ஒரு கைத்தொலைபேசி உள்ளது. அதனால் அவர்கள் எதையும் படம் எடுத்து அதை உலகிற்கு தரவேற்றம் செய்யும் போராளிகள். அந்த வகையில், பலரும் விலங்குகள் வதைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள். உங்களுக்கு ஜல்லி கட்டு பிரச்சனையில் 'பீட்டா' என்ற அமைப்பை அறிந்திருப்பீர்கள். இன்றைய இளைய சமுதாயம் இவ்வாறு 'புதிதாக'…
-
- 0 replies
- 338 views
-
-
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 195.78 ஆக திடீர் உயர்ச்சி பெற்றுள்ளது. அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் நாணய பரிமாற்று விகிதத்தின் பிரகாரம், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 188.51 ரூபாவாக பதிவாகியுள்ளன. கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி வரலாறு காணாத வகையில் 200.47 ரூபாயாக வீழ்ந்திருந்தது. இந்நிலையில் எல்.ஓ.எல்.சி (LOLC) கூட்டு நிறுவனம், கம்போடியாவிலுள்ள பிரபல நிதி நிறுவனமான ப்ராஸக் மைக்ரோபினாஸ் (PRASAC Microfinance) நிறுவனத்திற்கு தனது 70 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த கொடுக்கல் வாங்கல் ஊடாக கிடைக்கப் பெற்ற 422 மில்லியன் டொலர் நிதி இலங்கைக்குள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்…
-
- 1 reply
- 440 views
-
-
திட்டம் போட்டு செயல்படும் சீனா: இந்தியாவில் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு உயர்வு இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களில் சீனாவின் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது என குளோபல் டேட்டா கூறி உள்ளது. பதிவு: ஜூன் 27, 2020 14:53 PM புதுடெல்லி இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களில் சீனாவின் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்களில் சீனாவின் முதலீடு இரண்டாயிரத்து 881 கோடி ரூபாயாக இருந்தது. இதையடுத்து ஆண்டுக்கு ஆண்டு சீன முதலீடு அதிகரித்துக்கொண்டே வந்தது. 2019ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் 34 ஆயிரத்து 788 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குளோபல் ட…
-
- 0 replies
- 328 views
-
-
திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்கு பிறகே அமேசான், நெட்பிளிக்சில் வெளியிட வேண்டும் என கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை தழுவினால், அவர்களே பொறுப்பேற்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திரையரங்குகள் மீது மாநில அரசு விதிக்கும் 8% சதவீத வரியை வரும் பிப்ரவரி மாத்திற்குள் திரும்ப பெற வேண்டும் என்றும், தவறினால் மார்ச் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும் என்ற தீர்மானத்தை…
-
- 1 reply
- 287 views
-
-
தீபாவளி: டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன? தற்போது ஏன் அது பிரபலம்? அஹ்மீன் கவாஜா பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பல இந்தியர்கள் இந்த தங்க நகைகளை வாங்க கடைகளுக்கு சென்றாலும், இன்றைய இளைஞர்கள் 'டிஜிட்டல் தங்கம்' வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இந்துக்கள் கொண்டாடும் இந்த பண்டிகை, இந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில்…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
ஸகாரா டாவுட்போய் கடந்த தசாப்தத்தில் கொழும்பின் உணவு நிலை கணிசமானளவு வேறுபட்டது. இன்று கொழும்புவாசி ஒருவருக்கு தெரிவு செய்வதற்கு பரந்த அளவிலான சமையல் வகைகள் உள்ளன, மற்றும் நடைமுறையில் ஒவ்வொரு தெருவிலும் ஒரு புதிய உணவகம் உள்ளது. விரைவான வளர்ச்சியை அனுபவிக்கும் பிரிவுகளில் துரித உணவும் ஒன்று. ஸ்ரீலங்காவில் 1993ம் ஆண்டு முதன்முதலில் திறக்கப்பட்ட சர்வதேச துரித உணவுச் சங்கிலி ‘பிஸ்ஸா ஹட்’ ஆகும். யூனியன் பிளேசில் அமைந்திருந்த இந்த புதுமையான கடை உடனடியாகவே நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களிடையே மிகவும் பிரபலம் பெற்றது, குறிப்பாக அதன் விரிவான விளையாட்டுப் பகுதி காரணமாக, அது மேலும் அந்த நேரத்தில் கொழும்பில் எளிதாகக் கிடைக்காத உணவு வகைகளையும் வழங்கியது. அப்போது முதல் ஸ்…
-
- 1 reply
- 1.3k views
-