வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
சுமார் 5 லட்சத்து முப்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது, நீண்ட காலமாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் நிலவிய நிலையில் அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரிகளை சீனா விதித்து வந்தது. இந்த நிலையில் வர்த்தகப்போர் முடிவுக்கு வந்து கடந்த மாதம் அது தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. அதன் முதல் கட்டமாக கடந்த செப்டம்பரில் முடிவு செய்யப்பட்ட ஆயிரத்து 700 க்கும் அதிகமான அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பை சீனா திரும்பப் பெற்றுள்ளது. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் இந்த வரிக் குறைப்பு அமல்படுத்தப்படும் எனவும் சீனா தெரிவித்…
-
- 0 replies
- 427 views
-
-
20 ஆண்டுகளில் முதன்முறையாக, யூரோ (EUU) மற்றும் அமெரிக்க டாலருக்கு இடையிலான மாற்று விகிதம் சமநிலையை எட்டியுள்ளது -- அதாவது இரண்டு நாணயங்களும் ஒரே மதிப்புடையவை. செவ்வாயன்று யூரோ $1 ஐ எட்டியது, ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுமார் 12% குறைந்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட உயர் பணவீக்கம் மற்றும் எரிசக்தி வழங்கல் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் தூண்டப்பட்ட கண்டத்தில் மந்தநிலை பற்றிய அச்சங்கள் ஏராளமாக உள்ளன. போருக்கு முன்னர் ரஷ்ய குழாய்கள் மூலம் அதன் எரிவாயுவில் சுமார் 40% பெற்ற ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்திருப்பதை குறைக்க முயற்சிக்கிறது. அதே நேரத்தில், ரஷ்யா சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தைத் தடுத்து நிறுத்தியது ம…
-
- 1 reply
- 502 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஒரு பிட்காயின் மத்திப்பு 80,000 டாலருக்கு (சுமார் 67 லட்சம் ரூபாய்) மேல் உயர்ந்தது. 21 அக்டோபர் 2025 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரிப்டோகரன்சி உலகத்தைத் தழுவிட முடிவு செய்துள்ளார். அதற்காக கிரிப்டோகரன்சியை பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாக மாற்றும் புதிய சட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். டிரம்ப் குடும்ப உறுப்பினர்கள் கிரிப்டோகரன்சி அடிப்படையிலான வணிகங்களைத் தொடங்கி, கணிசமான லாபத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், அமெரிக்காவை கிரிப்டோ உலகில் முன்னிலைப்படுத்துவதற்கும், டாலரின் செல்வாக்கை அதிகரிப்பதற்கும் எடுக்கப்படும் இந்த காரியங்களில் ஆபத்துகளும் குறைவாக இல்…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
பங்குகளை விற்ற பெரும் முதலீட்டாளர் வாரன் பஃபெட் அமெரிக்காவின் மிகப்பெரிய செல்வந்தரும், முதலீட்டாளருமான வாரன் பஃபெட்டுக்கு சொந்தமான பெர்சைர் ஹாத்வே நிறுவனம், அமெரிக்காவின் நான்காவது பெரிய விமான நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அனைத்து பங்குகளையும் விற்றுவிட்டது. கொரோனாவின் காரணமாக அமெரிக்க விமான போக்குவரத்து தள்ளாட்டத்தில் இருக்கும் போது இந்த முடிவினை வாரன் பஃபெட் எடுத்துள்ளார். விமான துறையில் முதலீடு செய்ததன் மூலம் தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக பஃபெட் முன்பு தெரிவித்து இருந்தார். காணொளி மூலம் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், "நமக்கு பெரிய நஷ்டம்தான். இருந்தபோதிலும் விமான துறையில் முதலீடு செய்திருந்த அனைத்து பங்குகளையும் விற்றுவிட்டேன். எதிர்காலத்தில்…
-
- 1 reply
- 972 views
-
-
அமெரிக்க வரலாற்றிலே மிகப்பெரிய காப்புறுதி மோசடி – 24 பேரிடம் தீவிர விசாரணை அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் மருத்துவ காப்புறுதித் துறையில் மோசடி நடந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் நூற்றுக்கணக்கான நோயாளிகளை ஏமாற்றி 100 கோடி டொலர் மோசடி செய்த சதி அம்பலத்திற்கு வந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட 24 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க நீதித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “’மருத்துவ பொதுக் காப்பீடு காப்புறுதித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முதியவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு மணிக்கட்டு, முழங்கால் மூட்டு மற்றும் பாதிக…
-
- 0 replies
- 420 views
-
-
அமெரிக்கா – கனடாவிற்கு இடையில் புதிய ஒப்பந்தம்! நஃப்டா எனப்படும் வடக்கு அமெரிக்க சுதந்திர உடன்படிக்கைக்கு பதிலாக, அதனை விட மேம்படுத்தப்பட்ட புதிய ஒப்பந்தமொன்றை அமெரிக்காவும் கனடாவும் எட்டியுள்ளன. ‘ஐக்கிய அமெரிக்க – மெக்சிக்கோ – கனடா ஒப்பந்தம்’ என குறித்த ஒப்பந்தம் பெயரிடப்பட்டுள்ளது. நஃப்டாவில் கனடா நீடிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் யாவும் தோல்வியடைந்த நிலையில், அதிலிருந்து வெளியேறும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக பெரிதும் நம்பப்பட்டது. நஃப்டா தொடர்பில் அமெரிக்காவுடன் மெக்சிகோ ஏற்கனவே உடன்பாட்டை எட்டியுள்ளது. இந்நிலையில், குறித்த ஒப்பந்தம் தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் புதிய ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளன. இந்த உடன்பாட…
-
- 0 replies
- 442 views
-
-
அமெரிக்கா – சீனாவுக்கிடையலான வர்த்தகப் போர் மிகவும் முட்டாள்தனமானது November 6, 2018 அமெரிக்கா – சீனாவுக்கு இடையில் நடந்துவரும் வர்த்தகப் போரானது மிகவும் முட்டாள்தனமானது என அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மா தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் சீனாவும் இரு நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு அளவுக்கு அதிகமான வரியை விதித்து வருகின்றதனால் இருதரப்பு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவுக்கு 500 பில்லியன் டொலருக்கும் கூடுதலான பெறுமதியான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இரு நாடுகளுக்கும் இடையில் நடந்துவரும் இந்த வர்த்தகப் போரானது மிகவும் முட்டாள்தனமானது என ; ஜேக் மா கூறியுள்ளார். சீனாவின் ஷாங்காயில் ஆரம்பமாகியுள…
-
- 0 replies
- 234 views
-
-
அமெரிக்கா – சீனாவுக்கு இடையிலான வணிக யுத்தம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வணிக யுத்தம் உலகை, வறிய மற்றும் ஆபத்தான இடமாக மாற்றக்கூடுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டுக்கான உலக வளர்ச்சிக்குரிய முன்னறிவிப்பைக் குறைத்துள்ளது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான ஒரு முழுமையான வணிகப்போர் உலகப் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பை உண்டாக்குமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளிடையேயான வர்த்தக தடைகள் காரணமாக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பரந்த பொருளாதாரம் பாதிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்தில் அமெரிக்கப் பொருட்கள…
-
- 0 replies
- 458 views
-
-
அமெரிக்கா டர்ர்ர்....தங்கம் விலை விர்ர்ர் - ஏன்? (எளிய விளக்கம்) உங்ககிட்ட 1991ம் வருசம் ஆயிரம் ரூபாய் இருந்ததாக வைத்துக்கொள்வோம்..அதை ஒரு பீரோவில் பத்திரமாகப் பூட்டி வைக்கின்றீர்கள். இருபது வருடம் கழித்து இப்போது பீரோவைத் திறந்து பார்த்தால், உள்ளே எவ்வளவு இருக்கும்? http://2.bp.blogspot.com/-rq-VsIrvPsw/TlP0F3qZB1I/AAAAAAAAAvI/lKqS6xuaxWs/s320/money-house.jpg ‘என்னய்யா இது கூமுட்டைத்தனமான கேள்வி..ஆயிரம் ரூபாய் தான் இருக்கும்’ன்னு நீங்கள் டென்சன் ஆவது தெரிகின்றது.ஆனால் ஆயிரம் ரூபாய் அப்போது இருந்த அதே மதிப்புடன் தான் இப்போது இருக்கிறதா? அப்போது எங்கள் ஊர் தியேட்டரில் டிக்கெட் விலை 3 ரூபாய். 333 ஷோ இந்த ஆயிரம் ரூபாய…
-
- 0 replies
- 540 views
- 1 follower
-
-
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் மூளும் அபாயம் May 10, 2019 epaselect epa04947798 Demonstrators with Chinese and United States national flags gather at sunset in Washington, DC, USA, 24 September 2015. Chinese President Xi Jinping begins an official state visit at the White House with US President Barack Obama on 25 September. EPA/ERIK S. LESSER அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டோம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 518 views
-
-
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர்; தங்கத்தின் விலை புதிய சாதனை! அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் தாக்கம் குறித்து முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளதால், தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, புதன்கிழமை அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,357.40 (£2,540) அமெரிக்க டொலர்கள் என்ற விலையை எட்டியது. பின்னர் அதன் விலை உச்சத்திலிருந்து சரிந்து. வியாழக்கிழமை (17) 3,322 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலையானது மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைகள் மெதுவான வளர்ச்சி, அதிக விலைகள் மற்றும் வேலையின்மை அபாயங்களைக் குறிக்கும் என்று அமெரிக்க மத்…
-
- 0 replies
- 197 views
-
-
அமெரிக்காவால் ரஷ்யா-வை ஒன்றும் செய்ய முடியாது.. மாஸ்டர் பிளான் போட்ட புதின்..! 2014ஆம் ஆண்டு ரஷ்யா கிரிமேயா-வை கைப்பற்றிய போது அமெரிக்க அரசு ரஷ்ய வங்கிகள், எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் உடன் அமெரிக்க மக்களும் நிறுவனங்களும் எவ்விதமான வர்த்தகம், முதலீடு செய்யக் கூடாது எனத் தடை விதித்தது. இதன் மூலம் வருடத்திற்குச் சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உலக நாடுகள் ரஷ்யா மீது தடை உத்தரவை வெளியிட்டது. ரஷ்யா கற்ற பாடம் இதன் மூலம் ரஷ்யா மிகப்பெரிய பாடத்தைக் கற்ற நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் கட்டாயம் பொருளாதாரம், வர்த்தகத் தடை உத்தரவுகளை வெள…
-
- 1 reply
- 467 views
-
-
அமெரிக்காவின் அடுத்த குறி சீன மாணவர்களா.. கவலையில் கல்வியாளர்கள்.. பங்கு சந்தைகள் என்னவாகுமோ.? வாஷிங்டன்: சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் அடுத்த ஆயுதம் சீன மாணவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.இதுவரை வர்த்தகத்தினை கையில் எடுத்து வந்த அமெரிக்கா, அடுத்து சீன மாணவர்களை ஆயுதமாக பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் விசாக்களை நீட்டிப்பதில் சிக்கலை கொண்டு வரலாம் என்றும் சில ஊடகங்கள் கூறுகின்றன.இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா சீனா இடையிலான பிரச்சனையினால், அமெரிக்கா பல்கலைக் கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்களை வெளியேற்றலாம் என்றும் கூறப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை இது குறித்து வெளியான லைவ் மிண்ட் செய்தியில், சீனா மாணவர்களின் வ…
-
- 0 replies
- 499 views
-
-
வர்த்தகப் போரொன்றை சீனா விரும்பவில்லை. ஆனால் தேவையேற்படுமானால் அத்தகையதொரு போருக்கு சீனா அஞ்சவுமில்லை. அதை நடத்தத் தயாராக இருக்கிறது என்று கொழும்பிலுள்ள சீனாத்தூதுவர் செங் சூவேயுவான் எச்சரிக்கை செய்திருக்கிறார். கொழும்பு சீனத்தூதரகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் சீனத்தூதுவர் அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளால் முன்னெடுக்கட்டுள்ள வர்த்தகப் போரில் சீனா அதன் சட்டபூர்வமானதும், நியாயபூர்வமானதுமான உரிமைகளையும், நலன்களையும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். 'ஜனாதிபதி சி ஜின்பிங் உறுதியாகக் கூறியிருப்பதைப் போன்று சீனாவும், அமெரிக்காவும் வர்த்தகத்தையும், பொருளாதாரப் பிரச்சினைகளையும் சமத்துவமானதொரு அடிப்படையிலேயே கையாள வேண்டும் என…
-
- 0 replies
- 538 views
-
-
அமெரிக்காவில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – ட்ரம்ப் சீனாவினால் அமெரிக்காவில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுசபைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு வளமான எதிர்காலம் அமைய தமது அரசாங்கம் பாடுபடுவதாகவும் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி அந்த முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை துடைத்தெறியும் வரை கூட்டுப் படைகளுடன் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார். அத்துடன், ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் நீடிக்கும் வரை பொருளாதாரத் தடைகள்…
-
- 0 replies
- 352 views
-
-
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி சலுகை: சீனா புதிய அறிவிப்பு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி சலுகை குறித்த புதிய அறிவிப்பை, சீனா வெளியிட்டுள்ளது. சீன அரசாங்கத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட குறித்த பட்டியலில் அமெரிக்காவினால் தயார் செய்யப்படும் 70 உற்பத்தி பொருட்கள் பெயரிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக சீன நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குறித்த வரிச் சலுகையானது இம்மாதம் 9ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதுடன், 2021ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்’ என தெரிவித்துள்ளது. இதேவேளை சீனாவில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தங்கம், வெள்ளி மற்றும் ஏனைய அரிதான உலோக கலவைக…
-
- 0 replies
- 362 views
-
-
அமெரிக்காவில் டிரோன்களை பயன்படுத்தி, மருந்து பார்சல்கள் வீட்டுக்கே சென்று டெலிவரி செய்யப்படுகின்றன. கடிதம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைந்தும், பாதுகாப்பாகவும் அனுப்பி வைக்க கொரியர் உள்ளிட்ட பார்சல் சேவைகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில், நோயாளிகளுக்கான மருந்து மாத்திரைகளை மருந்தகத்திலிருந்து வாங்கி டெலிவரி செய்ய டிரோன்கள் எனப்படும் குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. United Parcel Service என்ற நிறுவனம் இந்த சேவையை தொடங்கி நடத்தி வருகிறது. மருந்து சீட்டுகளில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை வாங்கி வரும்படி நிறுவனத்துக்கு தகவல் கொடுத்ததும், நிறுவனம் டிரோன்களை அனுப்பி சிறிய அளவிலான அட்டைப்பெட்டிகளில் மருந்துகளை வாங…
-
- 0 replies
- 220 views
-
-
அமெரிக்காவின் மன்ஹட்டானில் இருந்து ஜான் எஃப் கென்னடி விமான நிலையம் வரையான வாடகை ஹெலிகாப்டர் சேவையை பிரபல வாடகை கார் நிறுவனமான Uber நிறுவனம் தொடங்கியுள்ளது. மன்ஹட்டான் நகரில் இருந்து ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்துக்கு இயக்கப்படும் இந்த ஹெலிகாப்டர் 8 நிமிடங்களில் சென்றடையும். ஒரு முறை பயணத்துக்கு 200 முதல் 250 டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஸ்டாப்பிலிருந்து அருகிலிருக்கும் இன்னொரு ஸ்டாப்பிற்கு செல்ல இந்திய மதிப்பில் 14 ஆயிரம் ரூபாய் ஆகும். தற்போது காரில் அந்தத் தொலைவைக் கடக்க குறைந்தது ஒரு மணி நேரம் ஆகிறது. சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் 2 மணி நேரம் கூட ஆகிறது. ஆனால் ஹெலிகாப்டரில் சில நிமிடங்களில் பறந்துவிடலாம். நியூயார்க்கில் வாட…
-
- 0 replies
- 341 views
-
-
கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சீரமைக்க 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்க நாடாளுமன்றமும், அதிபர் டிரம்பும் ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பரவலைத் தடுக்கத் தனியார் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி எரிக் ஊலேண்ட் தெரிவித்துள்ளார். இந்த மாபெரும் நிதியுதவித் திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் உடனடியாக ஒப்புதலைப் பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி வேலையின்மையால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கச் சிறு வணிக நிறுவனங்களுக்கு 36 ஆயிரத்து 700 கோடி டாலர் …
-
- 5 replies
- 895 views
-
-
அதிபர் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையிலும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 2019ம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2019ல் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 165.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 231.7 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு இறக்குமதியும், அதைவிட அதிகமாக 384.4 யூரோக்கள் அளவுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. 2018ம் ஆண்டைக் காட்டிலும் இது 11 சதவீதம் அதிகமாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் தங்களை மிகவும் மோசமாக நடத்தி வருவதாகவும், அந்நாட்டுடனான வர்த்தக பேச்சுவார்த்தை குறித்து இவ்வாரத்தில் மீண்டும் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 572 views
-
-
பெய்ஜிங்: அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதனிடையில் சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா அமெரிக்காவிற்கு எதிரான வர்த்தகப் போரினை சமாளிக்க நாங்கள் தயார் என்று தெரிவித்துள்ளது. இந்த வர்த்தகப் போரினை எங்களால் திறம்பட எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்றும் அலிபாபா நிறுவனம் தெரிவித்துள்ளது. வருவாய் அலிபாபா நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிடும் முன்பு தங்களது ஆண்டு மற்றும் தின வருவாய் குறித்த அறிவிப்பினையும் வெளியிட்டு இருந்தது. அமெரிக்கப் பொருட்கள் வரி உயர்வு போன்ற காரணங்களால் அமெரிக்கப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. எனவே சீன வாடிக்கையாளர்கள் உள்நாட்டுப் பொருட்கள் அல்லது பிற நாடுகளில் இருந்து இறக்குமத…
-
- 0 replies
- 464 views
-
-
அமெரிக்காவை பின்தள்ளி முன்னேறிய சிங்கப்பூர் ஒரு நாடு பொருளாதார ரீதியில் முன்னேற அதன் ' போட்டித்திறன் ' ஒரு கணிப்பாக பார்க்கப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் அமெரிக்க இந்த விடயத்தில் முன்னேறி இருந்தது. தனது தேசிய மொத்த உற்பத்தி திறனில் (GDP) அதிக வீதத்தை தேசிய ஆராய்ச்சியில் செலவிடுகின்றது. ஆனால், இன்னொரு காரணியான போட்டித்திறனில் சிங்கையூர் அமெரிக்காவை பின்தள்ளி முன்னேறி உள்ளது.
-
- 1 reply
- 409 views
-
-
அமேசான் தள்ளுபடி விற்பனை அமேசான் தனது வருடாந்தர தள்ளுபடி விற்பனையை தொடங்கி உள்ள இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான அமேசான் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஜெர்மனியில் 2000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் ஆறு மணி நேர போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமேசான் தொழிற்சங்கம் கூறுகிறது. அதிக பணி சுமைதான் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணமென்று கூறப்படுகிறது. https://www.bbc.com/tamil/global-48999296
-
- 0 replies
- 217 views
-
-
அமேசான் - விசா கொழுவுப் பாடு இணைய வாணிப உலகின் கில்லாடி அமேசான் என்றால் அதன் முதுகெலும்பு கடன் மட்டைகள் தான். ஆனால், இந்த கடன் மட்டைகள் பணம் பார்ப்பதே, மக்கள் செலுத்தும் பொருளுக்கான விலையில் சிறு கொமிசன் பார்ப்பதால் தான். அமெரிக்கன் எக்ஸ்பிரெஸ் அதீத கட்டனம் காரணமாக, சில்லறை யாவாரிகள் அதனை புறக்கணிப்பார்கள். ஆகவே, இந்த வியாபாரிகளின் முக்கிய பொருளுக்கான விலை செலுத்தும் முறையாக விசா, மாஸ்டர் கடன் மட்டைகள் தான் உள்ளன. இதில் விசாவுக்கும், அமேசானுக்கும் இடையே, இந்த கொமிசன் விசயத்தில் நடந்த உள்ளே தெரியாமல், முறுக்கிக் கொண்டிருந்த உள்ளக பேச்சு சரிவராமல், ஜனவரி மாதம் முதல், விசா கடன் மட்டைகளை தமது தளத்தில் பயன்படுத்த முடியாது என்று அமேசான் அறிவித்துள்ளது. …
-
- 1 reply
- 336 views
-
-
அமேசான் நிறுவனத்தை தொடங்கிய போது, அதன் நிறுவனர்களுக்கே அந்த நிறுவனம் குறித்து நம்பிக்கை இல்லை. ஜெஃப் 1999ம் ஆண்டு, "அமேசான். காம் நிறுவனம் வெற்றிகரமான நிறுவனமாக இருக்குமென எந்த உத்தரவாதமும் இல்லை. நாங்கள் செய்ய முயல்வது சிக்கலான ஒரு விஷயம்." என்று கூறி இருக்கிறார். அதுவும் நிறுவனம் தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு. அமேசான் நிறுவனம் தொடங்கி இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. உலகத்தின் மதிப்புமிக்க நிறுவனங்களில் இப்போது அதுவும் ஒன்று. உலக பணக்காரர்களின் ஜெஃபும் ஒருவர். ஒரு ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாக தொடங்கப்பட்ட நிறுவனம் இந்தளவுக்கு சாதித்தது எப்படி? அமேசான் நிறுவனத்தின் வணிகம், அதன் பொருளாதாரம் நம்மை வியக்க வைக்கிறது. கடந்தாண்டு அந்த நிறுவனத்தின் …
-
- 0 replies
- 394 views
-