வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
20 ஆண்டுகளில் முதன்முறையாக, யூரோ (EUU) மற்றும் அமெரிக்க டாலருக்கு இடையிலான மாற்று விகிதம் சமநிலையை எட்டியுள்ளது -- அதாவது இரண்டு நாணயங்களும் ஒரே மதிப்புடையவை. செவ்வாயன்று யூரோ $1 ஐ எட்டியது, ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுமார் 12% குறைந்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட உயர் பணவீக்கம் மற்றும் எரிசக்தி வழங்கல் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் தூண்டப்பட்ட கண்டத்தில் மந்தநிலை பற்றிய அச்சங்கள் ஏராளமாக உள்ளன. போருக்கு முன்னர் ரஷ்ய குழாய்கள் மூலம் அதன் எரிவாயுவில் சுமார் 40% பெற்ற ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்திருப்பதை குறைக்க முயற்சிக்கிறது. அதே நேரத்தில், ரஷ்யா சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தைத் தடுத்து நிறுத்தியது ம…
-
- 1 reply
- 502 views
- 1 follower
-
-
அதிபர் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையிலும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 2019ம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2019ல் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 165.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 231.7 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு இறக்குமதியும், அதைவிட அதிகமாக 384.4 யூரோக்கள் அளவுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. 2018ம் ஆண்டைக் காட்டிலும் இது 11 சதவீதம் அதிகமாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் தங்களை மிகவும் மோசமாக நடத்தி வருவதாகவும், அந்நாட்டுடனான வர்த்தக பேச்சுவார்த்தை குறித்து இவ்வாரத்தில் மீண்டும் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 573 views
-
-
சிறந்த முகாமைத்துவத்தைப் பின்பற்றாத கால மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தம்மை தீர்க்கதரிசனத்துடன் மாற்றிக் கொள்ளத் தவறும் நிறுவனங்கள் எவ்வாறு அடிச்சுவடே தெரியாமல் காணாமல் போக நேரிடும் என்பதற்கு 178 ஆண்டுகள் பழைமையான தோமஸ் குக் நிறுவனத்தின் வீழ்ச்சி ஒரு முன்னுதாரணமாகவுள்ளது. நீண்ட கால வரலாற்றைக் கொண்ட தனது நிறுவனத்தின் பெயருக்குள்ள கௌரவமும் நன்மதிப்பும் தம்மைக் காப்பாற்றும் என அந்த நிறுவனத்தின் முகாமைத்துவத்தினர் கொண்டிருந்த கணிப்பு கடந்த திங்கட்கிழமை கானல் நீரானது. முடக்கப்படுவதிலிருந்து அந்த நிறுவனத்தைக் காப்பாற்ற எந்தவொரு நிதி நிறுவனமோ அரசாங்கமோ முன்வராத நிலையில் திடீரென அந்த நிறுவனம் திவாலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டமை அதன் பல்லாயிரக்கணக்கான வாடிக…
-
- 1 reply
- 474 views
-
-
மொய் விருந்தின் மூலம் நான்கு கோடி ரூபாய் திரட்டிய விவசாயி புதுக்கோட்டை அருகே, ஒரு டன் ஆட்டுக்கறி அசைவ உணவுடன் விவசாயி நடத்திய மொய்விருந்தில் ரூ.4 கோடி வசூலானது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் நலிந்த நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், கல்யாணம், சடங்குகள் போன்ற விழாக்களுக்கு பணத்தேவை இருப்பவர்களும் இந்த மொய் விருந்தை நடத்துவதுண்டு. இந்த விருந்தில் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மொய் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வடகாட்டில் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி பெரிய அளவில் மொய் விருந்து நடத்தினார். இதற்காக பெரிய பந்தல் அமைக்கப்பட்டு…
-
- 1 reply
- 1.3k views
-
-
உலக புகழ் பெற்ற Rolls-Royce-க்கே இந்த நிலையா? வரலாறு காணாத வீழ்ச்சியில் கம்பெனி.! Rolls-royce இந்த பெயரைக் கேட்டாலே தேகம் எல்லா சில்லிடும். இந்த கம்பெனி தயாரிக்கும் இன்ஜின்களுக்கு உலகமே அடிமை எனலாம். அந்த அளவுக்கு இவர்களின் தரம் பேசும். ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-royce) என்று சொன்ன உடனேயே பலருக்கு இந்த பிராண்டின் பிரம்மாண்ட சொகுசு கார்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வரலாம். ஆனால் இப்போது, ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-royce) கம்பெனியியே ரோல்ஸ் ராய்ஸ் கார்களைத் தயாரிப்பது இல்லை. பல வருடங்களுக்கு முன்பே உலகின் முன்னணி சொகுசு கார் கம்பெனியான பி எம் டபிள்யூ (BMW), ரோல் ராய்ஸ் மோட்டார் கார்களை வாங்கிவிட்டது. இப்போதைய ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) வியாபாரம் இப்போது ரோல்ஸ…
-
- 1 reply
- 654 views
-
-
நவீன உலகின் பர்மா பஜார்.! - உங்களுக்காக.. யீவு… இந்தப் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டீர்கள். ஆனால், இந்த நகரில் இருந்து வரும் ஒரு டஜன் பொருட்களாவது இப்போது உங்கள் வீட்டில் இருக்கும். உங்கள் வாழ்நாளில் சில ஆயிரம் ரூபாயை இந்த ஊர்ப் பொருட்களுக்காகச் செலவழித்திருப்பீர்கள். கொசு பேட்டில் ஆரம்பித்து மொபைல், ரிமோட் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான சீனப் பொருட்களின் தாயகம், சீனாவில் இருக்கும் `யீவு’ என்ற இந்த நகரம்தான். சீனாவின் ஷுஜியாங் மாகாணத்தில் இருக்கிறது யீவு. மற்ற சீன நகரங்களை ஒப்பிட்டால், இது பரப்பளவில் சிறியது. ஆனால், யீவுவின் வர்த்தகச் சந்தை மிகப் பெரியது. 17 முக்கியத் தொழில் துறைகளில் 4,20,000-க்கும் அதிகமான பொருட்கள் இங்கே கிடை…
-
- 1 reply
- 1.3k views
-
-
சர்வதேச அளவில்... "ஜோன்சன்ஸ் பேபி பவுடர்" விற்பனையை, நிறுத்த தீர்மானம்! எதிர்வரும் 2023ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ஜோன்சன்ஸ் பேபி பவுடர் விற்பனையை நிறுத்த இருப்பதாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக தற்போது பயன்படுத்தும் ‘டால்க்’ கனிமத்துக்கு பதிலாக சோள மாவு மூலப்பொருள் கொண்ட புதிய பவுடர் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் பன்னாட்டு நிறுவனமான ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் பவுடருக்கு எதிராக சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான நுகர்வோர் புகார் தெரிவித்து வழக்கும் தொடுத்துள்ளனர். இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் கனடாவில் அந்த பவுடர…
-
- 0 replies
- 213 views
-
-
பெண் குழந்தையாக பிறந்ததால், 'வேண்டாம்' என பெயர் சூட்டப்பட்ட திருத்தணியைச் சேர்ந்த பெண், கல்வியால் உயர்ந்து, ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் ஆண்டிற்கு ரூ.22 லட்சம் சம்பளம் பெறும் வேலைக்கு தேர்வாகியுள்ளார். 'வேண்டாம்' என பெண் குழந்தைக்கு பெயர் வைத்தால், அடுத்து பிறக்கும் குழந்தை ஆணாக பிறக்கும் என்ற நம்பிக்கை திருத்தணி பகுதியில் நாராயணபுரம் கிராமத்தில் பின்பற்றப்படுகிறது. தனக்கு வைக்கப்பட்ட பெயரின் காரணமாக பலரின் வினோதமான பார்வைகளையும், வியப்பான கேள்விகளையும் எதிர்கொண்டிருக்கிறார் மாணவி 'வேண்டாம்'. ''எங்கள் கிராமத்தில் பள்ளிப்படிப்பு முடியும்வரை என் பெயரை யாரும் வித்தியாசமாக பார்க்கவில்லை. என் வகுப்பில் இரண்டு மாணவிகளுக்கு 'வேண்டாம்' என்ற பெயர் இருந்த…
-
- 0 replies
- 480 views
-
-
அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற ஃபிட்பிட் (Fitbit) நிறுவனத்தை சுமார் 14 ஆயிரத்து 840 கோடி ரூபாய்க்கு (2.1 billion dollars) கூகுள் விலைக்கு வாங்கியுள்ளது. ஃபிட்பிட் நிறுவனத்தின் கைகடிகாரம் போன்று காட்சியளிக்கும் உடல்நிலை கண்காணிப்பு சாதனங்கள் மிகவும் புகழ்பெற்றதாகும். ஏற்கெனவே இத்தகைய சாதன விற்பனையில் அதிக கவனம் செலுத்தி வந்த கூகுள், ஃபாசில் (Fossil ) நிறுவனத்திடம் இருந்து ஸ்மார்ட்வாட்ச் தொழில்நுட்பத்தை 282 கோடி ரூபாய்க்கு அண்மையில் விலைக்கு வாங்கியது. இதைத் தொடர்ந்து, இச்சாதனை விற்பனையில் புகழ்பெற்ற ஃபிட்பிட் நிறுவனத்தை கூகுள் விலைக்கு வாங்கியுள்ளது. வலைதளத்தில் இதுகுறித்த அறிவிப்பை கூகுளின் கிளை நிறுவனங்களில் ஒன்றான கூகுள் எஸ்விபி (Google SVP ) வெளியிட…
-
- 0 replies
- 344 views
-
-
டிஸ்னி நிறுவனத்துக்குப் போட்டியாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை, குறைந்துகொண்டே வருகிறது. ஒரு தொழிலில் போட்டியே இல்லையென்றால், அதுவும் அது கலைத் துறையாக இருந்தால், அங்கே படைப்பாற்றல் குறையத்தானே செய்யும்?! Walt Disney Company எந்தவொரு வணிகமும் ஒரு தனி முதலாளியின் கையில் இருந்தால், அந்த வணிகம் சார்ந்த அத்தனை முடிவுகளும் அந்த முதலாளியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அவர் வைப்பதுதான் சட்டம், அவர் நிர்ணயம் செய்வதுதான் விலை, அவர் ஏற்படுத்துவதே அந்தப் பொருள் அல்லது சேவைக்கான தேவை என்றாகிவிடும். இன்றைய சூழலில் வணிகமயமாக்கப்படும் கலைகளுக்கும் இது பொருந்தும். குறிப்பாக, கோடிகள் புரளும் திரைத்துறைக்குப் பொருந்தும். கலைத்துறையில் தனி முதலாளியின் ஆதிக்…
-
- 0 replies
- 412 views
-
-
ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அடுத்த 30 நாட்கள் வரை 26 ஐரோப்பிய நாடுகளின் பயணத்தை அமெரிக்க நிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை இரவு அறிவித்தார். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்தே ஐரோப்பிய பங்குச் சந்தையானது இன்று பாரியளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எசுத்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், கிறீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாத்வியா, லீக்கின்ஸ்டைன், லித்துவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நோர்வோ, போலாந்து, போர்த்துக்கள், சிலோவாக்கியா, சுலோவீனியா, ஸ்பெய்ன், சுவிடம் மற்றும் சுவிட்…
-
- 0 replies
- 295 views
-
-
கொரோனா தாக்கமும் தொடக்கநிலை வணிகங்களும் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 21 இலங்கை போன்றதொரு நாட்டில், தொடக்கநிலை வணிகங்களின் ஆரம்பமானது, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து வரவேற்கத்தக்க வகையிலும் பிரமிப்பைத் தரக்கூடியதாகவும் அமைந்திருக்கிறது. அமெரிக்காவின் சிலிக்கன்வெளியை ஒத்தவகையில், இந்து சமூத்திரத்தில் இலங்கை தொடக்கநிலை வணிகங்களுக்கு ஒரு சாதகமான இடமாக உருப்பெற்று வந்துகொண்டிருக்கிறது. உண்மையில், கொரோனா தாக்கம் பல்வேறு வணிகங்களுக்கும், வணிகர்களுக்கும் பெரும் இடையூறாக மாறியிருக்கின்ற நிலையில், இந்த இடர்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டுகூட நிறைய தொடக்கநிலை வணிகங்கள், இலங்கையில் உருப்பெற்றதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். ஆனால், அவ்வாறு குறுங்காலத்தில் உ…
-
- 0 replies
- 535 views
-
-
வடகிழக்கில் மோசமடையும் வேலையற்றோர் பிரச்சனை - கட்டுரை வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்க வேலைத்திட்டங்கள் அவசியம் 2018 ஆம் ஆண்டின் இரண் டாவது காலாண்டின் புள்ளி விப ரங்களின் பிரகாரம் 381,834 பேர் வேலையற்றவர்களாக இருக்கின்றனர். இதில் இளை ஞர்களே அதிகமாக இருக்கின் றனர். அத்துடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத் துக்கும் குறைவான தகுதியை கொண்ட வர்கள் 137,615 பேர் வேலை யற்றவர்களாக உள் ளனர். கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் அதற்கும் மேல் தகைமையை கொண்டவர்கள் சுமார் 170 ஆயிரம் பேர் வேலை யின்றி இருப்பதாக புள்ளி விபர திணைக்களத்தின் தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன. அதிலும் 30 வயதுக்கு மேற…
-
- 0 replies
- 319 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம் கடனாகக் கொண்டிருந்தது. எனினும் கடந்த நான்கரை வருடங்களில் 500பில்லியனை அந்த அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எமது அரசாங்கம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் என பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கம் மஹாபொல, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி, நிதியமைச்சு, மின்சார சபை என அனைத்துத் துறைகளிலும் கொமிசன் பெற்றுக்கொண்டதை காணமுடிகிறது எனவும் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் விமான கொள்வனவு மோசடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போத…
-
- 0 replies
- 435 views
-
-
இலங்கையின் PUBG மொபைல் போட்டித் தொடருக்கு மொபிடெல் அனுசரணை இலங்கையில் Esportsஐ ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் முன்னணி இணைய இணைப்புச் சேவைகளை வழங்கும் மொபிடெல், Gamer.LK உடன் இணைந்து இலங்கையின் மாபெரும் மொபைல் லீச் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் பிரபல்யம் பெற்ற PUBG மொபைல் விளையாட்டுப் போட்டித் தொடருக்கு இவ்வாறு மொபிடெல் அனுசரணை வழங்குகின்றது. இலங்கைக்கு இந்தப் போட்டியின் விறுவிறுப்பைக் கொண்டு வரும் வகையில், மொபிடெல் Esports பிரீமியர் லீக் போட்டித் தொடரில், நாட்டின் ஒன்பது மாகாணங்…
-
- 0 replies
- 319 views
-
-
கனடா மற்றும் சீனா வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்த திட்டம்! கனடா மற்றும் சீன நாடுகள் தமக்கிடையில் பொருளாதார கூட்டுறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான ஆழமான வர்த்தக யுத்தத்தின் பின்னணியிலும் சீனாவும் கனடாவும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீஜிங்கில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொருளாதார மற்றும் நிதி மூலோபாய கலந்துரையாடலில் பங்கேற்ற கனடா மற்றும் சீன அதிகாரிகள் இந்த கருத்துகளை வௌியிட்டனர். சீனா தன்னிச்சைவாதம் மற்றும் பாதுகாப்புவாதத்தை எதிர்க்கும் நோக்கில் கனடாவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக சீனாவின் மாநில கவுன்சிலர் வாங் யோங் தெரி…
-
- 0 replies
- 337 views
-
-
அதிகார வர்க்கத்தின் வரியின் பிடியில் பெண்கள் -அனுதினன் சுதந்திரநாதன் பட்ஜெட் மீதான விவாதத்தில், பெண் எம்.பிக்கள் மோதிக்கொண்ட சம்பவம், சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது. பெண்கள் மீதான வரிகள் தொடர்பிலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில், Pad Man என்று வர்ணிக்கப்பட்ட தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும், பலரும் விவாதித்தார்கள். எமது நாட்டில் வாழும் பெண்களின் Sanitary Napkin தொடர்பிலான நிலை என்ன? மாதாந்தம் அவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினையைக் கூட, இந்த அரசாங்கமும் வணிகர்களும் வணிக மயமாக்கி, இலாபம் தேட முனைகின்றார்களா? பெண் அடிமைத்தனம் உடைப்போம் என்று பேசுபவர்கள், வணிகத்தில் பெண்களை போகப்பொருளாகப் பயன்படுத்துவ…
-
- 0 replies
- 476 views
-
-
நிதியியல் மோசடி தொடர்பில் அவதானமாக இருங்கள் அனுதினன் சுதந்திரநாதன் இலங்கையில், கொரோனா வைரஸ் பரவலானது, மீண்டும் ஓர் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது. முழுமையான முடக்கத்தினூடாக, நாட்டை சுமூக நிலைக்கு கொண்டுவந்து, நாடு பழைய நிலையில் இயங்கிக்கொண்டிருந்தேபாது, மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமை எதிர்பாராதது. அரசாங்கத்தினதும் பொதுமக்களதும் கவனயீனமே, இதற்கு முதன்மைக் காரணம் எனச்சொல்ல முடியும். இந்த நிலையில், நாடு தழுவிய பொது முடக்கத்தை நோக்கி, இலங்கை செல்வது தவிர்க்க முடியாத ஒன்றா எனும் எண்ணம் எல்லோரிடத்திலும் வர ஆரம்பித்துவிட்டது. இந்த சூழ்நிலை மிக மோசமான ஒன்று. காரணம், கடந்த காலத்தில் சுமார் மூன்று மாதங்களாக, நாம் அனுபவித்த முழுமையான பொது முடக்கம், நமது …
-
- 0 replies
- 485 views
-
-
Huawei யின் வருடாந்த பருவகால சேவை சலுகைகள், மெகா தள்ளுபடிகள், பரிசுகளுடன் ஆரம்பம் உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்க வருகிறது. நாடு முழுவதும் உள்ள Huawei சேவை மையங்கள், அது தனது உயர் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களையே எப்போதும் மையப்படுத்தியுள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாகக் காணப்படுகின்றது. நத்தார் மற்றும் புத்தாண்டு பருவகாலத்தை அது வரவேற்கும் விதமும், அதில் தனது வாடிக்கையாளர்களை கௌரவிப்பதும் அதன் சேவையின் சிறப்பின் மற்றொரு அடையாளமாகும். Huawei யின் பருவ கால கொண்டாட்டம், Huawei யின் வருடாந்த பருவகால சேவை சலுகைகள் யாவும் தற்போது ஆரம்பமாகியுள்ளதோடு, முழு மூச்சுடன் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி வரை…
-
- 0 replies
- 441 views
-
-
பில் கேட்ஸ் ரெஸ்யூம் பார்த்திருக்கீங்களா.. டிரெண்டாகும் போட்டோ.. அசந்துபோன நெட்டிசன்கள்..!! உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது பழைய ரெஸ்யூம் ஒன்றை பகிர்ந்துள்ள நிலையில் அது தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அவர்களது ரெஸ்யூம் என்பது மிகவும் முக்கியமானது. அவர்களது தகுதிகள், அனுபவம் மற்றும் திறமைகளை குறிக்கும் ஒரு பிரதிபலிப்பாகவே ரெஸ்யூம் கருதப்படுகிறது. ரெஸ்யூம் இன்றைய நெருக்கடியான வேலைவாய்ப்பு துறையில் ரெஸ்யூம் என்பது ஒரு திறமையானவரை கண்டறிவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ரெஸ்யூம் என்பது வெறும் ஆவணம் அல்ல, அது வாழ்க்கையை மாற்றும் ஒரு அங்கமாககூட இருக…
-
- 0 replies
- 459 views
-
-
இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி! அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாயின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.17 ரூபாயாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.17 ரூபாய், கொள்வனவு பெறுமதி 179.2039 ரூபாயாகும். ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 234.0748 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 226.6411 ரூபாயாகும். யூரோ ஒன்றின் விற்பனை விலை 210.4330 ரூபாயாகவும், கொள்வனவு பெற…
-
- 0 replies
- 504 views
-
-
ஜேர்மன் வங்கி ஒன்று 18,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளநிலையில், அதிகம் பாதிக்கப்பட இருப்பவர்கள் பிரித்தானியர்கள் என செய்திவெளியாகியுள்ளது. ஜேர்மனியின் ஃப்ராங்க்பர்ட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கியானDeutsche Bank, தனது ஊழியர்களில் 18,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. 2022க்குள் 18,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள Deutsche Bank, தனது வணிக பிரிவான முதலீட்டு வங்கிப்பிரிவை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன் மூலம் நிலையான வருவாயை பெறமுடியும் என்றும் அறிவித்துள்ளது. ஒரு புறம் நிலையான வருமானம் பெறுவதற்காக நல்ல கார்பரேட் முதலீட்டாளர்களை பெறத்திட்டமிட்டுள்ள அதே நேரத்தில், அனாவசிய செலவுகளை குறைக்கவும் த…
-
- 0 replies
- 497 views
-
-
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தூய தங்கத்தின் விலை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலையை பொருத்து இலங்கையில் தங்கத்தின் விலை மாற்றத்துக்கு உள்ளாகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முழுவதும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துள்ள நிலையில், பெப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை கனிசமான அளவு அதிகரிப்பதும் அடுத்த நாள் சிறியளவில் விழ்ச்சியை காட்டுவதுமாக நீடித்தது வந்துள்ளது. இந்நிலையில் இன்று(22.02.2020) தங்கத்தின் விலை ஆயிரத்து 100 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதனையடுத்து நேற்றைய தினம்(21.02.2020) 72 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கம் (22 கரட்) இன்று பவுன…
-
- 0 replies
- 218 views
-
-
உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பு இருக்க வேண்டும்.அப்போதுதான் அவ்வுற்பத்திகள் வருமானத்தைத் தரும். கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களம் மாதர்களின்அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தின் கிருமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 45இடங்களில் மாதர் அபிவிருத்திக்கான தொழிற் பயிற்சி நிலையங்களை நடத்தி வருகின்றது. இவற்றில் 1620பயிற்சியாளர்கள் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களது பயிற்சிக் காலம் ஆறு மாதங்களாகும். இவர்களுக்கு நிபுணத்துவத் திறன் படைத்த பயிற்றுவிப்பாளர்கள் பயிற்சியை வழங்கி வருகிறார்கள். இந்த மூன்று நாட்கள் கொண்ட பொருட்காட்சி மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் விசாலமான வளாகத்தில் அண்மையில் தொடர்ந்து மூன்று நாட்க…
-
- 0 replies
- 266 views
-
-
தொழில் வாய்ப்புகளுக்கு சவால்கள் நிறைந்த ஆண்டாக 2021 அமையும் ச. சேகர் கொவிட்-19 தொற்றுப் பரவலின் தாக்கம் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டில் தொழில் வாய்ப்புகளுக்கு சவால்கள் நிறைந்து காணப்படும். உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளில் தொழில் வாய்ப்புகள் குறைவடைந்து வரும் நிலையில், பெருமளவானோர் விவசாயத் துறைசார் தொழில் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். . நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை மாத்திரம் இந்தத் துறை வழங்கும் நிலையில், ஏற்கனவே மொத்த பணியாளர்களில் 27 சதவீதத்தை இந்தத் துறை தன்வசம் கொண்டுள்ளது. இதனால், இந்தத் துறையின் உற்பத்தித்திறன் தொடர்பில் சிக்கல்கள் தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. …
-
- 0 replies
- 581 views
-