சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
509 topics in this forum
-
அவுஸ்திரேலியாவில் உண்டான காட்டுத் தீ காரணமாக சிட்னியில் காற்றின் தரமானது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப் பகுதி புகை மண்டலமாகவும் மாறியுள்ளது. இதனால் சிட்டினியின் பிரபல அடையாளங்களும் மறைக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் மூச்சுத் திணறலை எதிர்கொண்டுள்ளனர். மேலும் சிறுவர்களும், வயோதிபர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்த சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட சிட்னி நகரில் காற்றின் தரம் இன்றைய தினம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் பகல் பொழுதுகளில் வானம் செம்மஞ்சள் நிறமாக மாறியுள்ளதுடன், அப் பகு…
-
- 0 replies
- 362 views
-
-
-
- 0 replies
- 384 views
-
-
தமிழகத்தில் விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட இருந்த 120 வயது ஆலமரம், தனியார் அமைப்பின் முயற்சியால் வேருடன் இடமாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டுசாலை அருகே, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வீதி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விரிவாக்க பணிகளுக்காக அங்கிருந்த 120 ஆண்டு பழமையான ஆலமரத்தை வெட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த ஆலமரத்தை வேருடன் பெயர்த்து, வேறு இடத்தில் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு, கோவையைச் சேர்ந்த 'ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், ஆலமரத்தின் …
-
- 1 reply
- 423 views
-
-
நமக்கு ஏராளமான மழை கிடைத்த போதும் நமக்கு ஏன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது? அவற்றை நாம் முறையாக சேமிக்காததே இதற்கு காரணம்! ஆயுதங்கள் மற்றும் ரேடார் தொழில்நுட்பத்தில் வல்லமைமிக்க இஸ்ரேல், நீர்ப்பாசன தொழில்நுட்பங்களிலும் சர்வதேச அளவில் பிரபலமானது. பாலைவனத்தில் பசுமையை கொண்டுவரமுடியும் என்ற அற்புதத்தை உலகிற்கு நிகழ்த்திக் காட்டிய நாடு இஸ்ரேல். தண்ணீரின் ஒரு துளியைக் கூட வீணடிக்காமல் இருக்கும் பண்பை இஸ்ரேலிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் இஸ்ரேல், கழிவுநீரை மறுசுழற்சி செய்து மறுபயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது. இஸ்ரேலில் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் தண்ணீரில் பாதியளவு மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீர் என்பது கு…
-
- 59 replies
- 12.1k views
-
-
லண்டன் காற்றைச் சுவாசிப்பது, 150 சிகரெட்டுகளைப் புகைப்பதற்கு சமமானது : நிபுணர்கள் எச்சரிக்கை பிரித்தானியாவின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் வாழ்வது ஒரு வருடத்திற்கு 150 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமான வகையில் ஆரம்ப மரண அபாயத்தை அதிகரிக்கிறது எனவும் பிரித்தானியாவில் காணப்படும் காற்று மாசுபாடு பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட வேண்டுமெனவும் பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் வலியுறுத்தியுள்ளது. லண்டனின் நியூஹாம் (Newham), வெஸ்ட்மின்ஸ்ரர் (Westminster), கென்சிங்ரன் (kensington) மற்றும் செல்சீ(Chelsea), இஸ்லிங்ரன் (Islington) பகுதிகளில் வசிக்கும் மக்கள் காற்று மாசுபாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த தொண்டு நிறுவனத்தின் பகுப்பாய்வு சுட்டிக்காட்டியுள்ளது. …
-
- 0 replies
- 338 views
-
-
நூற்றாண்டின் முதல் காலாண்டில்தான் புவியின் வெப்ப அளவு அதிகரித்திருக்கும் – ஐ.நா எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுடன் நிறைவடையும் இந்த நூற்றாண்டின் முதல் காலாண்டில்தான் புவியின் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஐ.நாவின் வானியல் பிரிவான உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கைத்தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததை விட உலகின் வெப்பநிலை இந்த ஆண்டில் இதுவரை 1.1 பாகை செல்ஸியஸ் அதிகரித்துள்ளது. இதன்மூலம், இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே அதிக புவி வெப்பம் கொண்ட 3 ஆண்டுகளில் ஒன்றாக 2019 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. பெற்றோலியப் பொருள்களை எரியூட்டுதல், கட்டமைப்பு…
-
- 0 replies
- 261 views
-
-
வீட்டுத் தோட்டம் பராமரிப்பும் இயற்கை உரம் தயாரிப்பும் பற்றி பார்ப்போம்....!! வெயில் காலங்களில் தினமும், குளிர் காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் விட வேண்டும். வீட்டினுள் வளர்க்கும் செடிகளுக்கு தேவை அறிந்து தண்ணீர் விட்டால் போதுமானது. தண்ணிர் என்பது தாவரம் உயிர் வாழ போதுமானது. ஆனால் அதிக மகசூல் வேண்டுமெனில் அதற்கு தேவையான உயிர் சத்து மிக்க இயற்கை உரங்களை பயன் படுத்த வேண்டும். சாண எரு, ஆட்டு கழிவு, முட்டை ஓடு, மீன் தொட்டி நீர், வெங்காயம், பூண்டு இவற்றின் தோல்கள் என அனைத்தையும் உங்கள் தோட்டங்களில் பயன் படுத்தலாம். இலைகளில் தோன்றும் பூச்சி, புழுக்கலுக்கு மஞ்சள் கலந்த நீரை தெளிக்கலாம். வேர்பகுதிகளில் வேப்பம் புண்ணாக்கு, வேப்பிலைகளை பய…
-
- 0 replies
- 407 views
-
-
துருவ காற்று தாக்கும் என எதிர்வு கூறல்! பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை குளிர்ந்த துருவ காற்று தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய வானிலை மையத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இவ்வாறு குளிர்ந்த துருவ காற்று தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வார இறுதியில் அட்லாண்டிக்கிலிருந்து பயணிக்கும் புயல் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ‘சிசிலியா’ என குறித்த புயலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புயல் கன்டாப்ரியன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் அல…
-
- 0 replies
- 349 views
-
-
மாசுபட்ட காற்றை சுவாசிப்பது மனிதர்களின் நுரையீரலையும், இதயத்தையும் பாதிக்கும் என்பது பொதுவான பிரச்சனை. காற்றில் உள்ள சிறிய தூசி துகள்களை நீண்ட காலமாக உள்ளிழுப்பதால் சுவாச பிரச்சினைகள், காற்றுப்பாதைகளின் எரிச்சல், ஆஸ்துமா, சிறுநீரக பிரச்சினைகள் போன்ற சுகாதார பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும். சில நேரங்களில் அது புற்றுநோயையும் கூட ஏற்படுத்தும். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, மாசுபட்ட காற்றை சுவாசிப்பது எடை அதிகரிப்பிற்கு கூட வழிவகுக்கும் என்று கூறுகிறது. உயிரியல் பரிசோதனைக்கான அமெரிக்க சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, காற்று மாசுபாடு நமது எடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. இதற்காக ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து ஆய்வை…
-
- 0 replies
- 295 views
-
-
பிரேசிலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அதிசய வீடு பிரேசிலில் பெண் ஒருவர் ஆயிரக்கணக்கான அப்புறப்படுத்தப்பட்ட கண்ணாடி போத்தல்களைக் கொண்டு அழகான வீட்டை கட்டி முடித்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரேசிலின் சா பாலோ மாகாணம், இடாவ்காவ் நகரை சேர்ந்த ஐவோன் மார்டின்ஸ் என்ற பெண், கணவரிடம் இருந்து பிரிந்து, கைக்குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், அண்மையில் அவரது குழந்தை உடல் நலக்குறைவால் இறந்தது. இதனால் ஐவோன் மார்டின்ஸ் கடும் மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளானார். இதில் இருந்து விடுபட அவர் சுற்றுப்புறத்தில் ஏராளமான கண்ணாடி போத்தல்கள் குவிந்து கிடப்பதை கண்டார். அவற்றை பயன்படுத்தி வீடு ஒன்றை கட்ட முடிவு செய்தார். 6 ஆயிரம் கண்ணாடி போத்தல்கள…
-
- 0 replies
- 383 views
-
-
கடல் கொந்தளிப்பு காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் புதிய மணல் தீடை உருவாகியுள்ளது. இதை, சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கும், இலங்கைக்கும் இடையேயுள்ள கடல் பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. இதில் 5ஆவது தீடையுடன் இந்திய கடல் எல்லை முடிவடைகிறது. இந்த மணல் தீடைகள், பகல் முழுவதும் கடல்நீர் வற்றிய நிலையிலும், இரவு நேரங்களில் கடல்நீர் சூழ்ந்தும் காணப்படுவது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட வட கிழக்கு பருவக் காற்றால் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, இராட்சத அலைகள் எழுந்தன. இதனால் வெளியேறிய க…
-
- 1 reply
- 513 views
-
-
உலக கழிவறை தினம் இன்று... கழிவறையைப் பயன்படுத்தும் சரியான முறையை தெரிந்துகொள்வோமா? ஐ.நா அறிவிப்புக்கிணங்க, ஒவ்வொரு வருடமும் நவம்பர் 19-ம் தேதி, உலக கழிவறை தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது வரை கழிப்பிட வசதி இல்லாததால் சுமார் 60 கோடி பேர் திறந்தவெளியைப் பயன் படுத்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகளவில் 250 கோடி மக்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதிகள் இல்லை. இவர்களில் 110 கோடி மக்கள் திறந்தவெளியை கழிவறைகளாக பயன்படுத்துகின்றனர். தகுந்த கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் ஆண்டுதோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை காப்பாற்ற முடியும். இந்நிலையில் கழிவறை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக இன்றைய தினம் உலக கழ…
-
- 0 replies
- 466 views
-
-
2019-11-18@ 00:03:49 சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 4930 மெட்ரிக் டன் அளவிலான குப்பை பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. பின்னர் இவை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது.சென்னை மாநகராட்சியில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள் மற்றும் 175 சிறு தொட்டிகள், 1711 உறை கிணறு மையங்கள், 21 புதை குழி மையங்கள், மற்றும் 2 வெர்மி உர மையங்கள் ஆகியவற்றின் மூலம் மக்கும் குப்பைகளிலிருந்து தரமான இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் வரை சென்னை மாநகராட்சியிடம் சுமார் 190 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை …
-
- 0 replies
- 315 views
-
-
15 நிமிடங்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க 299 ரூபாய் கட்டணம் ! அடப்பாவிகளா காத்தும் விற்பனைக்கு வந்திருச்சா !! டெல்லியில் கட்டணம் செலுத்தி தூய்மையான காற்றை சுவாசிக்கும் ஆக்சிஜன் பார் திறக்கப்பட்டு உள்ளது. 15 நிமிடங்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க 299 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, தண்ணீர் என அனைத்தும் விற்பனைக்கு வந்து விட்டது. இனி காற்று மட்டும் தான் பாக்கி, விட்டால் அதுவும் விற்பனைக்கு வந்துவிடும் என்று கேலியாக பேசப்படுவதுண்டு. ஆனால் அது பேலி அல்ல அல்ல. உண்மைதான். ஆம் தலைநகர் டெல்லியில் தற்போது காற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லி தற்போது மோசமான காற்றின் தரக் குறியீட்டு புள்ளி…
-
- 2 replies
- 828 views
-
-
கரூரில் அண்மையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவிகள் இருவர் மூங்கில் பாட்டில் தயாரிப்பதன் மூலம் பிளாஸ்டிக் பாட்டிலை முற்றிலுமாக நிறுத்த வழிவகுக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளான ரதின்யா மற்றும் ஹேமஸ்ரீ என்ற இரண்டு மாணவிகளின் இந்த கண்டுபிடிப்பு மாவட்ட அளவில் சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வானதுடன், மாநில அளவிலான கண்காட்சிக்கும் அனுப்பபடவுள்ளது தான் மாணவிகளுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். ஏற்கெனவே அஸ்ஸாம் மாநிலத்தில் இந்த மூங்கில் குடுவைகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/…
-
- 3 replies
- 681 views
-
-
ஃபின்லாந்து கடற்கரையை அலங்கரித்த “பனி முட்டைகள்” அரிய வானிலை நிகழ்வு! ஃபின்லாந்தின் கடற்கரைப் பகுதியில் நிலவிய அரிய வானிலையால் அங்கு, ஆயிரக்கணக்கான முட்டை வடிவ பனிக்கட்டிகள் தோன்றியுள்ளன. பின்லாந்துக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான போத்னியா வளைகுடாவில் உள்ள ஹைலூட்டோ தீவில் காணப்பட்ட “பனி முட்டைகளை” அவதானித்தவர்களில் ஔிப்படக் கலைஞர் ரிஸ்டோ மட்டிலாவும் ஒருவராவார். காற்றாலும், நீராலும் சிறிய பனிக்கட்டி துண்டுகள் உருண்டு செல்லும் அரியதொரு வழிமுறையின் போது பனிக்கட்டிகள் வட்டவடிவில் உருவாவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற இயற்கை வடிவமைப்பை அதற்கு முன்னர் பார்த்ததே இல்லை என்று ஒலு நகரை சோந்த மாட்டிலா என்பவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் “நான்…
-
- 0 replies
- 418 views
-
-
சான் பிரான்சிஸ்கோவின் பிரமண்டா சுவரோவியத்தில் கிரெட்டா அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் பிரதான சாலை ஒன்றில் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்கின் பிரம்மாண்ட ஓவியமொன்று வரையப்பட்டு வருகிறது. பதினைந்து வயதே ஆன கிரெட்டா துன்பெர்க் என்ற அந்தச் சிறுமி, மனிதர்களுடைய வாழ்க்கை முறையால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு தனியாளாகப் போராடத் தொடங்கியவர். ஸ்வீடனைச் சேர்ந்த இந்த இளம் மாணவிக்கு நோபல் பரிசு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சுவரோவியக் கலைஞர் ஆந்த்ரேஸ் இக்லெசியாஸ். இவர் கோப்ரே என்ற புனைபெயரில் தனது ஓவியக் கலைப் பணியைத் தொடர்ந்து வருகிறார். இவர் தற்போது …
-
- 0 replies
- 334 views
-
-
டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 800 பேருக்கு வழக்கு டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த சுமார் 800 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுள்ளது. கடந்த வாரம் முழுவதும் நாடளாவிய ரீதியில் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பகுதிகள் பரிசோதிக்கப்பட்டதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். இவற்றில் 30 வீதமான பகுதிகள், நுளம்புகள் பெரும் வகையில் இருந்தமை கண்டறியப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பகுதிகளில் 7 வீதமான பகுதிகளிலிருந்து டெங்கு நுள…
-
- 0 replies
- 287 views
-
-
டெல்லியின் வாயு மாசுபாட்டால் கொழும்பிலும் பாதிப்பு Editorial / 2019 நவம்பர் 06 , பி.ப. 01:15 - 0 - 18 கொழும்பு நகரின் வாயு மாசுபாடு சாதாரண நிலையை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் டெல்லி நகரத்தில் வாயு மாசுபாடு அதிகரித்ததன் காரணமாக கொழும்பில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறையின் மூத்த ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். இந்தியாவின் டெல்லி நகரத்தில் வாயு மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில் அந்த நகரை அண்மித்த பகுதிகளில் பொதுமக்களின் சுகாதாரம் தொடர்பான அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, தற்போதைய சூழ்நிலையை…
-
- 5 replies
- 1.3k views
-
-
பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிக்கையை ஐ.நா.சபையிடம் அமெரிக்கா தாக்கல் செய்தது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது என்றும், ஓராண்டில் இந்த நடவடிக்கை நிறைவேறும் என்றும் தெரிவித்துள்ளார். புவியின் வெப்பத்தை அதிகரிக்கும் புகை மாசு போன்றவற்றை குறைப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கடந்த 2015ம் ஆண்டு இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டன.இந்த ஒப்பந்தம் உருவாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா முக்கியப் பங்காற்றினார். ஆனால் புவியின் வெப்பம் …
-
- 2 replies
- 407 views
-
-
சுற்றுசூழல் பாதுகாப்புக்காக குரல் எழுப்பி வரும் சிறுமி கிரெட்டா தன்பர்க், நார்டிக் கவுன்சில் அறிவித்துள்ள ‘சுற்றுசூழல் விருதினை’ நிராகரித்துள்ளார். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி, வெள்ளிக்கிழமைகளில் தனது வகுப்புகளை புறக்கணித்து விட்டு கடந்த 2018ம் ஆண்டு முதல் அந்நாட்டு நாடாளுமன்றம் முன் சுற்றுசூழல் பாதுகாப்புக்காக போராட்டம் நடத்தி வருகிறார். இதன்மூலம் உலக முழுவதும் பிரபலமடைந்த சிறுமிக்கு, ‘சுற்றுசூழல் விருது’ வழங்க 87 நாடுகளை கொண்ட நார்வே கவுன்சில் முன்வந்தது. ஆனால் கவுன்சிலின் முடிவுக்கு நன்றி தெரிவித்துள்ள தன்பர்க், விருது மற்றும் பரிசு தொகை சுமார் 36 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்துள்ளார். மேலும் சுற்றுசூழல் இயக்கத்துக்காக விருதுகளை வழங்க…
-
- 0 replies
- 277 views
-
-
அழிந்து வரும் தேனீக்களை பாதுகாப்பதற்காக, அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த நபர் ஒருவர் அவற்றை இயற்கை முறையில் வளர்த்து வருகிறார். அழிந்து வரும் வனப்பரப்புகள், பருவநிலை மாற்றம், அதிகளவிலான பூச்சி மருந்துகள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனை தடுத்து தேனீக்களை பாதுகாக்கும் பொருட்டு கலிபோர்னியாவில் வசித்து வரும் தீயல் ((Thiele)) என்பவர், தனது வீட்டிலேயே கூடுகள் அமைத்து தேனீக்களை வளர்த்து வருகிறார். வர்த்தகப் பயன்பாட்டுக்காக தேனீக்கள் வளர்க்கப்படுவதை போல் அல்லாமல், வனப்பகுதியில் அவை வாழும் முறையிலேயே மரங்களில் கூடுகள் அமைத்து, தேனீக்களை பராமரித்து வருகிறார். https://www.polimernews.com/dnews/86341/மரங்களில்-…
-
- 0 replies
- 415 views
-
-
ஜப்பானை நெருங்கி வரும் மேலும் இரண்டு புயல்கள் – மக்களுக்கு எச்சரிக்கை! ஜப்பானில் ஹகிபிஸ் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், மேலும் இரண்டு புயல்கள் ஜப்பானை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி ‘நியோகுரி’ என பெயரிடப்பட்டுள்ள புயல் இவ்வாண்டின் 20ஆவது புயலாகும். இந்த புயல் ரோக்கியோ நகரின் தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்கரை பகுதிகளில் நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21ஆவது புயலாக ‘புலாய்’ எனும் புயல் வரும் 26ஆம் திகதி இரவு ஜப்பானின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கரையை கடக்க…
-
- 0 replies
- 719 views
-
-
உலகம் எதிர்காலத்தில் போர் ஒன்றைச் சந்திக்குமாகவிருந்தால் அது நீருக்கான போராகத்தான் இருக்கும். சூழலை துவம்சம் செய்யும் மனிதர்களால் இந்தப் போரை வெல்வது சுலபமானதுமல்ல. உலகம் வெகுவிரைவில் தனது இயல்பு நிலையில் இருந்து மாறிவிடப் போகின்றது. மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்ற பாதிப்புகள் இந்தப் பூமியை விரைவாக அழித்து விடும் என்பதில் ஐயமில்லை. என்னதான் விழிப்புணர்வு நிகழ்வுகள் உலகளவில் ஏற்படுத்தப்பட்டாலும் மனிதர்கள் அதனை கிஞ்சித்தும் கண்டு கொள்வதில்லை.இது குறித்து பூமியையும், இயற்கையினையும் நேசிக்கும் அநேகமான உள்ளங்கள் கவலைப்படுகின்றன. பசுமை நிறைந்த சூழல்கள் வரண்ட தேசங்களாக மாறிப் போயிருக்கின்றன. பச்சை வீட்டுத் தாக்கம் என்னும் விடயத்தை அழுத்திச் சொல்லும் அள…
-
- 1 reply
- 671 views
-
-
மறு அளவீடு செய்யப்படுகின்றது இமயமலையின் உயரம்! உலகின் மிக உயரமான மலையான இமயமலையின் உயரத்தை மறு அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தீர்மானத்தை சீனாவும், நேபாளமும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ளன. நேபாளத்தில் அமைந்துள்ள சகர்மதா சிகரமும், சீனாவில் அமைந்துள்ள ஸூமுலங்மா சிகரமும் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை பறைசாற்றுகின்றன. இந்தநிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் இமயமலையை பாதுகாக்கும் விதமாக நேபாளம் மற்றும் சீனா ஆகியன இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இதற்கமைய சகர்மதா மற்றும் ஸூமுலங்மா ஆகிய சிகரங்களில் அறிவியல் ரீதியிலான தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 558 views
-