சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
509 topics in this forum
-
காற்று மாசு புற்றுநோயை உண்டாக்குமா? - அறிவியல் விதிகளை மாற்றும் ஆய்வு முடிவு ஜேம்ஸ் கல்லாகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் நிருபர் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் தலைச்சிறந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் சார்லஸ் ஸ்வாண்டன், இந்த ஆய்வு நிச்சயம் ஒரு புதிய அத்தியாயத்துக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார். காற்று மாசு, புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, புற்றுநோய் கட்டிகள் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றன என இந்த ஆய்வின் மூல…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளில் விவசாயிகளால் பெருமளவில் எடுக்கப்பட்ட போராட்டத்தின் ஒரு விளக்கமாக இந்த காணொளியைப் பார்க்கலாம்.
-
- 0 replies
- 596 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை M Niyas Ahmed மனித குலத்தை விவசாயம் அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால், நேரடியாக அல்ல. இயற்கையின் கண்ணியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதுதானே? அந்த தொடர்புதான் மனித இருப்பை கேள்விக்குள்ளாக்கப் போகிறது. அழியும் பூச்சி இனம் உலகெங்கும் பூச்சி இனம் மெல்ல அழிந்து கொண்டிருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. குறிப்பாக சொல்லவேண்டுமானால் உலகில் உள்ள பூச்சி இனங்களில் …
-
- 0 replies
- 841 views
-
-
ஆணுறை முதல் டயர் வரை: ரப்பர் உற்பத்தி - குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு 21 ஜூலை 2020, 10:09 GMT Getty Images கடன்கள் மற்றும் தொடர் தோல்விகளின் மேகம் சூழ்ந்த அமெரிக்காவின் கண்ணோட்டத்திலேயே ரப்பரின் வரலாறு பார்க்கப்படுகிறது. காரணம், ரப்பரை கடினப்படுத்தும் செயல்முறையை அந்நாடுதான் கண்டுபிடித்தது. சார்ல்ஸ் குட் இயர் என்ற ஓர் அறிவியலாளரின் இந்தக் கண்டுபிடிப்பால்தான் பின்னர், வாகனங்கள், விமானம் மற்றும் பிற இயந்திரங்களுக்கும் டயர் பயன்பாடு புழக்கத்துக்கு வந்தது. சார்ல்ஸின் குடும்பப் பெயரான குட் இயர் உலகப் புகழ் அடையக் காரணம், பன்னாட்டு நிறுவனமான 'த குட் இயர் டயர் அண்ட் ரப்பர் கம்பெ…
-
- 0 replies
- 531 views
-
-
வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு வங்க கடலில் 29ஆம் திகதி புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் 25ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அது இரு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. பின்னர் 29ஆம் திகதி புயலாக மாறுகிறது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக பின்நாட்களில் நகர்வை ஆய்வு செய்கையில் தெரியவரும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் தமிழகத்தை கடந்தால் சென்னையிலிருந்து நாகைக்கு இடைப்பட்ட பகுதியில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரங்களில் …
-
- 0 replies
- 362 views
-
-
மோசமான பருவநிலை மாற்றம் – 62 மில்லியன் பேர் பாதிப்பு! மோசமான பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு 62 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் வானிலை ஆய்வகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்தரப் பருவநிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மில்லியன் பேர் பருவநிலை மாற்றம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப யுகம் தொடங்கியதிலிருந்து இதுவரை பூமியின் வெப்பநிலை சுமார் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருங்கடல்களின் வெப்பநிலை கடந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வெப்பவாயுக்களால் ஏற்…
-
- 0 replies
- 446 views
-
-
அமேசான் நில சீர்திருத்த சட்டமூலம் குறித்து இங்கிலாந்து பிரேஸிலுக்கு எச்சரிக்கை முன்மொழியப்பட்டுள்ள நில சீர்திருத்த சட்டமூலம் தொடர்பில் 40 இங்கிலாந்து உணவு வணிகங்கள் பிரேஸிலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. குழுவின் ஒரு திறந்த கடிதம், பொது நிலத்தின் தனியார் ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக்கக்கூடிய ஒரு சட்டமூலத்தை நிராகரிக்க பிரேஸிலின் சட்டமன்றத்தை அழைப்பு விடுத்துள்ளது. இந்த சட்டமூலம் அமேசானில் காடழிப்பை துரிதப்படுத்தக்கூடும் என்று கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டவிரோத காடழிப்புகளை முடிவுக்கு கொண்டுவருவதாக பிரேஸில் உறுதியளித்த சில மாதங்களிலேயே இந்த சட்டமூலம் அங்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு செனட்டில் புதன் …
-
- 0 replies
- 414 views
-
-
மனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும்? - ஒரு டைம் ட்ராவல் டுன்கன் க்ரே பிபிசி சயின்ஸ் ஃபோகஸ் மேகசின் Getty Images இந்த புவியின் மானுட வரலாறு ஒரு புதிய விடியலை எதிர்நோக்கி இருக்கிறது. மனிதர்கள் எப்போதும் தங்களுக்கு ஏற்றவாறு இந்த புவியை தகவமைத்து இருக்கிறார்கள். அது நெருப்பின் கண்டுபிடிப்பாகட்டும் அல்லது விவசாயம் ஆகட்டும். ஆனால், ஹோமோ சேபியன்ஸின் தாக்கம் இப்போது ஒரு முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. வளிமண்டலத்தில் நிறைந்துள்ள காற்று மாசாகட்டும் அல்லது பெருங்கடலில் குவிந்துள்ள குப்பைகள் ஆகட்டும் எங்கும் எதிலும் மனித இனத்தின் தடயங்கள் பதிந்திருக்கிறது. ஆனால், இப்போது இந்த திசையில் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த பூ…
-
- 0 replies
- 458 views
-
-
உலக கடல் மட்டத்தை உயர்த்துவதற்கு ஏதுவான மிகப் பெரிய பனிப்பாறை உருகியது! கிறீன்லாந்தின் பெரும்பாலான பனி படலங்கள் இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க அளவு உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவற்றில் மிகப் பெரிய பனிப்பாறையும் உருகியிருக்கலாம் என்று அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மாத்திரம், சராசரி உலக கடல் மட்டத்தை ஒரு மில்லிமீட்டருக்கு மேல் உயர்த்துவதற்கு ஏதுவான பனி உருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள கடற்கரைகளை அண்டிய நகரங்களின் எதிர்காலம் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டிருப்பதாகவும், பலர் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தெற்கு கிறீன்லாந்தில் ஒரு பனிப்பாறை இறுதியாக 2004…
-
- 0 replies
- 285 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சங்கர், ஜிம்பாப்வேயிலிருந்து இராஜதந்திரப் பரிசாக 1998-ல் இந்தியாவிற்கு வந்த இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் ஒன்று. கட்டுரை தகவல் அபிஷேக் டே பிபிசி நியூஸ், டெல்லி 21 செப்டெம்பர் 2025 இந்தியாவில் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள், நீண்ட நாட்களாக மறுவாழ்வு அளிக்க முயன்ற ஒரு அதிகம் நேசிக்கப்பட்ட யானையின் மரணத்திற்காகத் துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருக்கின்றனர். டெல்லியின் மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரே ஆப்பிரிக்க யானையான சங்கர், தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தனிமையில் கழித்தது. புதன்கிழமை அன்று உணவு உண்ண மறுத்து, மாலைக்குள் அது சரிந்து விழுந்தது. கால்நடை மருத்துவர்கள் முயற்சி செய்தாலும் 29 வயதான அந்த ஆண் யானை, 40 நிமிடங்களுக்குள் இறந்துவிட்டத…
-
- 0 replies
- 99 views
- 1 follower
-
-
கடலுக்குள் புதையுண்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றி வரைபடத்தை வெளியிட்ட குழு.! பூமியில் தற்போது வரை ஏழு கண்டங்கள் ஒட்டுமொத்த கிரகத்தின் குறுக்கே பரவியுள்ளது என்று கூறிவந்தனர். ஆனால் பூமியில் ஏழு கண்டங்கள் இருக்கிறது என்பது முற்றிலுமான ஒரு பெரிய பொய் என்று GNS விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இவர்களின் கணக்குப்படி பூமியில் ஒட்டுமொத்தமாக 8 கண்டங்கள் இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளாக கடலுக்குள் புதைக்கப்பட்டிருந்த பூமியின் 8 ஆம் கண்டதை இவர்கள் இப்பொழுது கண்டுபிடித்துள்ளனர். பூமியின் 8 ஆம் கண்டம் இதற்கு முன்பு வரை பூமி 7 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டது, இப்போது நாம் அறிந்திடாத புதிய நிலப்பரப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு பசிபிக் கடலின் கீழ் ச…
-
- 0 replies
- 398 views
-
-
காலநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து உறுப்பு நாடுகளிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் நாங்கள் எங்கள் எதிர்காலத்தை எரித்துக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமை பேரவையின் அமர்வில் தொடக்கவுரை ஆற்றுகையி;ல் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். காலநிலை மாற்றத்தினால் உலகின் அனைத்து நாடுகளும் பாதிப்பை எதிர்கொள்ளப்போகின்றன என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலநிலை மாற்றம் என்பது தற்போது உலகின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும் யதார்த்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது எதிர்வு கூறப்படும் வெப்பநிலை அதிகரித்தல் காரணமாக மனிதர்கள் பேரழிவை எதிர்கொள்…
-
- 0 replies
- 426 views
-
-
அழிந்து வரும் தேனீக்களை பாதுகாப்பதற்காக, அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த நபர் ஒருவர் அவற்றை இயற்கை முறையில் வளர்த்து வருகிறார். அழிந்து வரும் வனப்பரப்புகள், பருவநிலை மாற்றம், அதிகளவிலான பூச்சி மருந்துகள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனை தடுத்து தேனீக்களை பாதுகாக்கும் பொருட்டு கலிபோர்னியாவில் வசித்து வரும் தீயல் ((Thiele)) என்பவர், தனது வீட்டிலேயே கூடுகள் அமைத்து தேனீக்களை வளர்த்து வருகிறார். வர்த்தகப் பயன்பாட்டுக்காக தேனீக்கள் வளர்க்கப்படுவதை போல் அல்லாமல், வனப்பகுதியில் அவை வாழும் முறையிலேயே மரங்களில் கூடுகள் அமைத்து, தேனீக்களை பராமரித்து வருகிறார். https://www.polimernews.com/dnews/86341/மரங்களில்-…
-
- 0 replies
- 416 views
-
-
எவரெஸ்ட் சிகரத்தை வீட்டில் இருந்தே கண்ட காத்மாண்டு. ஊரடங்கால்,காற்று மாசு கணிசமாக குறைந்ததை தொடர்ந்து,200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை வீட்டில் இருந்தே காணும் அற்புத வாய்ப்பை காத்மாண்டு மக்கள் பெற்றுள்ளனர். உலகின் மிகப்பெரிய மலைச்சிகரமான எவரெஸ்ட் நேபாளம் வழியாக செல்லும் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டுவில் இருந்து இருநூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சிகரம் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஊர் மக்களுக்கு பளிச் என்று தெரியும் வகையில் காட்சியளிக்க துவங்கி உள்ளது. இந்த காட்சியை வெளியிட்டுள்ள நேபாளி டைம்ஸ் பத்திரிகை, ஊரடங்கால் நேபாளம் மற்றும் வட இந்தியாவின் காற்று மாசு பல மடங்கு குறைந்துள்ளதே இந்த காட்ச…
-
- 0 replies
- 636 views
-
-
மிக வெப்பமான காலப்பகுதியாக ஜூலை மாதம் பதிவாகியுள்ளது! சர்வதேச ரீதியாக மிகவும் வெப்பம் நிலவிய மாதமாக இந்த வருடம் ஜூலை மாதம் பதிவாகியுள்ளதாக செய்மதித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்றச் சேவையின் ஆராய்ச்சியாளர்களால் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது பூமி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெப்பமயமாதலை அனுபவிக்கிறது என்பதற்கான சமீபத்திய அறிகுறி இதுவென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் ஆர்க்டிக் வட்டத்திற்குள் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையுடன், வெப்பமான காற்றலைகள் கடந்து சென்றன. அதேவேளை கடந்த மாதம் ஐரோப்பா முழுவதும் உயர்வான வெப்பநிலை அளவுகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. உலகளவில், 2019 ஜூலை மாதம் ஓரளவு வெப்பமா…
-
- 0 replies
- 535 views
-
-
காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை, எல்லோரும் அனுபவிக்கிறோம். இடைவிடாத மழை, வெள்ளம், வரட்சி, நீர்ப்பற்றாக்குறை என, எதிர்மறையான அனைத்தையும் ஒருசேர நாம் அனுபவிக்கிறோம். இவற்றை வெறுமனே, வானம் பொய்த்ததென்றோ, எதிர்பாராத மழை என்றோ புறந்தள்ளவியலாதபடி, இவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், சூழலை மாசாக்குதல், புவி வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் செயற்பாடுகள் என, எமது பூமிப்பந்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல்களை, நாம் விடாது செய்து வருகிறோம். எமது எதிர்காலத் தலைமுறைக்கு, நாம் எவ்வாறான உலகத்தை விட்டுச் செல்லப் போகிறோம்; நாம், எமது பிள்ளைகளுக்கான எதிர்காலத்தை மட்டுமல்ல, அவர்களது பேரப்பிள்ளைகளது எதிர்காலத்தையும் சேர்த்து, கேள்விக்குறியாக்கிக் கொண்டிரு…
-
- 0 replies
- 528 views
-
-
உலக காட்டுயிர் தினம்: இருவாச்சி பறவை தன் துணை இறந்துவிட்டால் செத்துவிடுமா? உண்மை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் மலை இருவாச்சி பறவைகள், சோலைக்காடுகளின் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது. அவை இறுதிவரை ஒரே துணையுடன் பேரன்போடு வாழும் முறை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்தியாவின் உயிர்நாடியான முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலமான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர், குஜராத் மாநிலத்தில் தொடங்கி தமிழகத்தில் முடிவடைகிறது. 1.6 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள மேற்குத்…
-
- 0 replies
- 568 views
- 1 follower
-
-
அதிகரிக்கும் கார்பன் உமிழ்வு காலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்.! ஒக்ஸ்பாம் மற்றும் ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், பணக்கார நாடுகளால் அதிகரித்த கார்பன் உமிழ்வு உலகத்தை காலநிலை பேரழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் உலகின் பணக்கார நாடுகளால் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட கார்பன் உமிழ்வு 60% அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் தீர்க்க முடியாத சிக்கலாக உருமாறி வருகிறது. நாளுக்குநாள் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் அதிகப்படியான கார்பன் வாயுவின் அளவு பூதாகரமாக உயர்ந்துள்ளது. உலகில் கடந்த 1990 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வளிமண்டலத்தில் கார்பன் வாயுவின…
-
- 0 replies
- 435 views
-
-
கடல் நீரை குடி நீராக்குவது மிகக் கேடானது! -சாவித்திரி கண்ணன் தமிழ்நாடு நன்கு மழை பொழியும் இடமாகும்! இது செளதி இல்லை.ஆனால், பெய்யும் மழை நீரை எல்லாம் கடலுக்கு அனுப்பி மீண்டும், மீண்டும் கடல் நீரைக் குடிநீராக்க பல ஆயிரம் கோடிகளை விரயமக்குகிறார்கள்! கடல் நீரைக் குடிப்பது உடலுக்கு கேடு! சூழலுக்கும் கேடு.ஒரு விரிவான அலசல்; ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிநீர் திட்டமாக நெம்மேலியில் ரூ.4,276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். 2026 ல் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர். 40 கோடி லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் இந்த கடல் குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்தின் மூலம் தாம்பரம் மாநகர மக்க…
-
- 0 replies
- 409 views
-
-
இறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு.! நாகா குகைகள், புவெங் கான் மாகாணத்தின் புவெங் காங் லாங் மாவட்டத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குகை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இணைய பயனர்கள் இந்த மர்மமான குகையின் படங்களை பிரம்மாண்டமான பாம்பு தலை வடிவை ஒத்த மற்றொரு மேற்பரப்புடன் இணைத்து பதிவிட்டுள்ளது பலரை வியக்க வைத்துள்ளது. இந்த குகை “நாகா குகை” என்று கண்டுபிடிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது. ஆர்ட் தனவானிஜ் என்ற பேஸ்புக் பயனர் இந்த குகையின் படத்தை வெளியிட்டார். இது பாறை மேற்பரப்பைக் கொண்டுள்ள இது ஒரு பாம்பின் சுருண்ட உடல் ஒரு பெரிய பாம்பின் செதில்களாக தோற்றமளிக்கிறது. குறித்த புகைப்படத்தில் பாம்பு செதில்களைப் போலவோ அல்லது கல்லாக மாறிய மாபெரு…
-
- 0 replies
- 429 views
-
-
மனித குலத்துக்கு பனிமலைகள் உருகுவதால் ஏற்படப்போகும் ஆபத்துகள் என்னென்ன? வில்லியம் பார்க் 22 அக்டோபர் 2021, 01:54 GMT பட மூலாதாரம், DENIS BALIBOUSE/AFP/GETTY IMAGES பனிப் பாறைகளில் உறைந்துள்ள நீரைப் பல லட்சம் மக்கள் வாழ்வாதாரத்துக்கும், மின்சாரத்துக்கும் உணவுக்கும் நம்பியுள்ளனர். ஆனால் பருவநிலை மாற்றத்தால் அவை உருகி ஓடிக் கொண்டிருக்கின்றன? அவை மாயமானால் நமக்கு ஏற்படும் இழப்பு என்ன? பனிக்கட்டிகள் ஆறுகளாகி மலையடிவாரங்களை நோக்கிச் செல்லும் போது, கீழே உள்ள பாறைகளைக் கழுவிப் பண்படுத்திக்கொண்டு செல்வது, மனம் கவரும் காட்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை நம் அனைவரின் வாழ்விலும் முக்கியப் பங்கு வகிக்…
-
- 0 replies
- 290 views
-
-
சூரியனுக்கு மிக அண்மையில் பூமி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை சூரியனுக்கு மிக அண்மையில் பூமி சுழலுவதால், வெப்பத்துடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாடளாவிய ரீதியில் நிலவும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்படக்கூடிய உபாதைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த காலப்பகுதியில் குழந்தைகள், நான்கு வயதுக்குற்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடற்பருமன் கூடியவர்கள், நோயாளர்கள் ஆகியோர் தொடர்பாக அதிகூடிய கவனம் தேவை எனவும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. …
-
- 0 replies
- 376 views
-
-
உலகிலேயே அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் நாடு எது தெரியுமா? November 1, 2020 உலகிலேயே அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னணியில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சயின்ஸ் அட்வான்ஸஸ் (science advance) இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக மக்கள்தொகையில் 4 % பேர் உள்ள அமெரிக்காவில் 17 % பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 217 நாடுகளில் வெளியான பிளாஸ்டிக் கழிவு குறித்த தரவுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் தனிநபர் ஆண்டு ஒன்றுக்கு 105 கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/85122
-
- 0 replies
- 350 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption பூமியின் நுரையீரல் என்றும் சிலரால் அமேசான் காடுகள் அழைக்கப்படுகின்றன உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக் காடான அமேசான் காடுகளில் இந்த தசாப்தத்தில் காடுகள் அழிக்கப்பட்ட விகிதம்தான், இதுவரை அங்கு நடந்த காடுகள் அழிப்பிலேயே வேகமானது என பிரேசில் அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள அமேசான் காடுகளின் பெரும் பரப்பு பிரேசில் எல்லைக்குள்தான் உள்ளன. ஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரையிலான ஓராண்டு காலகட்டத்தில் மட்டும், பிரேசிலில் உள்ள சுமார் 7,900 சதுர …
-
- 0 replies
- 337 views
-
-
2024 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் எச்சரிக்கை! 2024 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் எனவும், குறித்த நிலைமை வரலாற்றில் மிக அதிக வெப்பமான ஆண்டாகப் பதிவிடப்பட்ட 2023 ஆம் ஆண்டைவிட இன்னும் அதிகமாக இருக்கும் என்று அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதேவேளை புதைப்படிவ எரிபொருளை எரிப்பதால் வெளியாகும் வாயுக்கள் காற்றில் கலப்பதால், அது உலகளாவிய சராசரி வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அது இந்த ஆண்டில் 1.3 டிகிரி செல்சியசிலிருந்து 1.6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1365451
-
- 0 replies
- 184 views
-