Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியமும் இசையும்

இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை

பதிவாளர் கவனத்திற்கு!

இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ராஜன் குறை என்பவர் யார்? | ஜெயமோகன் July 4, 2020 உங்கள் கடிதத்துக்கு நன்றி.நானே யோசித்த விஷயங்கள்தான் என்றாலும் அதை ஆணித்தரமாக ஒருவர் சொல்லும்போது ஒரு நிறைவு வருகிறது. இன்னொன்றையும் கேட்க விரும்புகிறேன். ராஜன் குறை என்பவர் தொடர்ச்சியாக உங்களைப்பற்றி எழுதிவருகிறார். ஒரு அப்செஷன் கொண்டவர் போல. அவரைப்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? ஏன் நீங்கள் அவரை பொருட்படுத்துவதே இல்லை? எம்.ராஜேந்திரன் *** அன்புள்ள ராஜேந்திரன், எழுதவேகூடாது என நினைத்திருந்தேன், ஆனால் எழுதியாகவேண்டும் என்ற நிலை. 1988 என நினைக்கிறேன், கோணங்கியின் கல்குதிரையில் நான் நக்சலைட் கவிதைகள் என்ற தொகுதியிலிருந்து சில கவிதைகளை மொழியாக்கம் செய்து பிரசுரித்தேன். அப்போதுதான் ராஜன்குற…

  2. புகலிட இலக்கிய யதார்த்தம் Posted by: sudumanal மேற்குலகம் நோக்கி நாம் (தமிழர்கள்) போரினால் புலம்பெயர்ந்து அதிக பட்சம் முப்பத்தியேழு வருடங்களாகிறது. இந்த முதல் சந்ததி இப்போ இரண்டாவது முன்றாவது சந்ததிகளாக விரிடைந்திருக்கிறது. முதலாம் சந்ததி குறித்து பருண்மையாக சொல்வதெனில் ஓர் ஒடுங்கிப்போன சமூகமாக தமக்குள் குறுகியே அது இயங்கிவந்திருக்கிறது. இந்த ஒடுங்கிப் போதலுக்கு கணிசமானவர்கள் தமிழன் என்ற பெருமிதத்தை அல்லது (இந்துப்) பண்பாட்டை தமக்குள் உயர்த்திப்பிடிப்பதானது உளவியல் ரீதியில் சுயதிருப்திகொள்ள வைக்கிறது. செவ்வாய்க் கிரகத்தை றோவர் தரைதொட்டபோது உலகம் குதூகலித்துக் கொண்டிருக்க, நாம் (தமிழிச்சியாக இல்லாதபோதும்) ஸ்வாதி மோகனின் நெற்றியில் பொட்டைக் கண்டு குதூகலி…

  3. ஈழத்தின் ஆசிரிய/ வெளியீட்டாளர்களும் மின்நூல்களைத் தேடும் முகநூல் வாசகர்களும் May 6, 2021 — என்.செல்வராஜா, நூலகவியலாளர் ,லண்டன் — லண்டனிலிருந்து 2015இல் சேனன் அவர்கள் எழுதிய நாவலின் பெயர் ‘லண்டன்காரர்’. இந்நாவல் லண்டனில் வாழும் விளிம்பு மனிதரைப் பற்றிய கதை. இக்கதை 2011 ஓகஸ்ட் 6 முதல் 11 வரை டொட்டன்ஹாமில் தொடங்கிவைக்கப்பட்ட லண்டன் கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்ட முதலாவது தமிழ்க் கதை என்ற சிறப்பினையும் பெறுகின்றது. தனிமனிதர்களால் உருவாக்கப்படும் கலவரங்களின் பின்னால் இருக்கும் அதிகாரத்தின் கட்டமைவைத் தான் நம்பும் ஒரு சித்தாந்தப் பின்னணியுடன் சேனன் அணுகியுள்ளார். இக்கட்டுரை சேனனின் நூல் பற்றியதல்ல. அதில் அவர் விபரிக்கும் ‘லண்டன் கலவரம்’ பற்றிய நினை…

  4. சோழ மன்னனின் பொறாமையும் ஆவேசமும்.. வடக்கில் இருந்த ராஜாவின் நிலை என்ன? https://www.facebook.com/100043983976036/videos/968465944187593?__so__=watchlist&__rv__=video_home_www_playlist_video_list முத்தமிழ்னு பேசுவாங்க.. ஆனால் யாருக்கும் இது தெரியாது! - பாண்டியக்கண்ணன் https://www.facebook.com/FullyNewsy/videos/முத்தமிழ்னு-பேசுவாங்க-ஆனால்-யாருக்கும்-இது-தெரியாது-பாண்டியக்கண்ணன்/721051806580297/

  5. வட்டார மொழிகளின் அரசியலை எதிர்கொள்ளுதல் by vithaiAugust 1, 2021 பன்னிரண்டு வயது வரை யாழ்ப்பாணத் தமிழைப் பேசக்கூடிய கிராமச்சூழலில் வளர்ந்தோம். ‘கெற்றப்போல்கள்’ எனப்படும் கவண்களால் குருவிகளை அடிப்பது விளையாட்டு, பொழுதுபோக்கு. ஊரில் வாய்மொழியாக வந்து சேர்ந்த நம்பிக்கை ஒன்றிருந்தது. ‘தோட்டக்காட்டான் குருவியடிச்சு ரத்தத்தை கெற்றப்போலில் தடவினால் நல்லா அடிக்கும்’. அந்தக் குருவி கத்தும் ஓசை ஒருவகை இரட்டைச் சந்தத்தைக் கொண்டிருக்கும் நாங்கள் அதன் சத்தத்தைப் பின்பற்றி அவ் இரட்டைச் சத்தத்தை ’தோட்டக்காட்டான் – வாடா பாப்பம்’ என்று கூவிக்கொண்டே குருவியைத்தேடி அடிப்போம். இது வட்டாரப் பேச்சு மொழியின் மொழியிலும் மன அமைப்பிலும் பிள்ளைகளுக்கு சமூகம் வழங்கியிருக்க கூடிய மொழி…

  6. தனி தேசமே தமிழருக்கு ஒரே வழி.! மறைந்த குமரிக்கண்டத்தின் எச்சமேஇலங்காபுரி,ஈழவர் தம் பெருமைதனை உலகிற்கு பறைசாற்றும் நெடிய பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்த இராவண வம்சத்தவரின் சிவபூமி.இது வால்மீகி இராமயணத்தில் அறியலாம். இதனை கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற வித்துவான்களே ஆதரித்துள்ளனர். இலங்கையின் வரலாறு கிமு ஆறாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றதாகவும் கலிங்க தேசத்திலிருந்து துரத்திவிடப்பட்ட விஜயனும் அவனது 700 தோழர்களும் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது என்கின்றனர் ஆய்வாளர்கள். எனினும் இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கர், நாகர் ஆட்சி வழித்தோன்றலே என்று மகாவம்சம் கூறுகின்றது. பல்வேறு அரசுகள் ஆட்சி பீடம் ஏறியது, பொலன…

  7. ஈழத்து எழுத்துலக வரலாற்றில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் கடந்து வந்த பாதை.

  8. தமிழ்ச்சூழலில் எழுதுதல்.. இளங்கோ-டிசே இன்று புதிதாக எழுத வரும் பலருக்கு, தமது படைப்புக்கள் பரவலாக வாசிக்கப்படவில்லை என்கின்ற கவலையும் சலிப்பும் இருக்கின்றது. ஒருவகையில் சமூக ஊடகங்கள் வந்ததன் பிறகு, எழுதப்படும் எல்லாமே உடனே கவனிக்கப்படவேண்டும் என்கின்ற பதற்றம் வருவதும் இயல்பானது. ஆனால் எழுத்துக்கு நேரடியான கருத்தைச் சொல்லும் வாசகர்களை விட, வாசித்துவிட்டு அதைப் பகிராமல் இருக்கும் மெளனமான வாசகர்களே அதிகம். சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் கவலையுடன் எவரும் தனது படைப்பைக் கவனிக்கவில்லை எனக் கூறினார். எந்தப் படைப்பிற்கும், அது எழுதப்படுவதற்கு எடுக்கும் காலத்தைப்போல், வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் ஒரு கால அவகாசம் தேவைப்படும். இணையத்தில் தமிழைப் படித்து அ…

  9. தரவுகளையும் கதைகளையும் எப்படி நாவலாக மாற்றுவது? ஈழத்தை சேர்ந்த இளம் எழுத்தாளர் ஒருவர் இக்கேள்வியைஎன்னிடம் எழுப்பியிருந்தார். அவர் ஈழப்போரின் பின்னணியில் ஒருஅடித்தட்டு மனிதரின் நிஜக்கதையை நாவலாக எழுதவுள்ளதாகவும், அதற்காக நிறைய தரவுகளையும், நேர்முகங்களைக் கண்டு பதிவுபண்ணியுள்ளதாகவும், இத்தகவல்களையும் உணர்வுகளையும்எப்படித் தொகுத்து நாவலாக எழுத ஆரம்பிப்பது என்று வினவினார். நான் அவரிடம் சொன்ன சில விசயங்களை உங்களில் இளம்நாவலாசிரியர்களுக்கு பகிர்வது பயனுள்ளதாக இருக்குமெனநம்புகிறேன். ஏதாவது ஒரு பாத்திரத்தை தேர்வு பண்ணி அவரது பார்வையில்கதையைச் சொல்லுங்கள். அப்பாத்திரம் உங்கள் மனதுக்குநெருக்கமாக, வித்தியாசமாக இருக்க வேண…

  10. சிறுகதை ஒரு சமையல்குறிப்பு [அவ்வப்போது ஏதாவது எழுத முயல்பவர்களுக்காகவும் இளம் எழுத்தாளர்களுக்காகவும் இக்குறிப்புகள் அளிக்கபப்டுகின்றன. சிங்கப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பில் ஆகஸ்ட் 2006 -ல் நிகழ்ந்த சிறுகதைப் பயிற்சிப் பட்டறையில் நடத்திய பாடத்தின் வரிவடிவம் இது.] 1. சிறுகதை என்றால் என்ன? ====================== ‘சிறுகதை’ என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை வைத்து சிறுகதை என்ற வடிவததை புரிந்துகொள்ளக் கூடாது. இது சிறுகதை என்ற வடிவம் உருவாகி வந்த ஆரம்ப நாட்களில் போடப்பட்ட ஒரு பொதுப்பெயர் மட்டுமே. அதாவது சிறுகதை என்றால் ‘சிறிய கதை’அல்ல. எல்லா சிறிய கதைகளும் சிறுகதைகள் அல்ல. சிறுகதை என்பது ஒரு தனித்த இலக்கிய வடிவம். அதற்கு தனியான வடிவச்சி…

    • 0 replies
    • 28.8k views
  11. சட்டநாதன் சிறுகதைகள்-ஈழத்து இலக்கிய ஆளுமைகள்-கட்டுரை-ஜிஃப்ரி ஹாஸன் சட்டநாதன் சிறுகதைகள்: பணிய மறுப்பவர்களின் குரல்கள் ஈழத்தில் எழுபதுகளில் உருவான எழுத்தாளர் சட்டநாதன். ஈழ இலக்கியத்தில் முற்போக்கு இலக்கியத்தின் தீவிர அலை ஓரளவு தணிந்து தேசிய இனப்பிரச்சினை சார்ந்த பதட்டங்கள் இலக்கியத்தினுள் ஊடுருவத் தொடங்கிய காலகட்டத்தின் பிரதிநிதி அவர். முற்போக்கு இலக்கியத்தில் முன்னிறுத்தப்பட்ட மார்க்ஸிய சித்தாந்தக் கருத்துகள் அவரது கதைகளில் ஆங்காங்கே போகிற போக்கில் உதிர்க்கப்பட்டிருப்பதைக் காண முடியும். உதாரணமாக உறவுகள் கதையில் ”சதா முக்கோணக் காதல்கதைகளையே எழுதி வந்த அவள் இப்போதெல்லாம் மனிதன் பால் அதீத நேயம் பூண்டு வர்க்கநலன் பேணும் எழுத்தை வடிப்பதென்றால்..” என்ற வரி…

  12. “கலை, இலக்கியம் என்பனவற்றின் இன்றியமையாத பண்புகளிலொன்று மனித நேய உணர்வாகும். இவற்றைப் படைக்கும் கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோர் தம்மளவிலும் இவ்வுணர்வை உடையவர்களாகவே திகழ்வர் எனச்சமுதாயம் எதிர்பார்ப்பது இயற்கையே. ஆயினும் பெரும்பான்மையான கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோரிடம் இவ்வுணர்வை நிறைவாக நாம் கண்டுகொள்ள முடிவதில்லை. ஓரு சிலரிடம் அதனை நாம் முழுமையாக அவதானிக்க முடிகிறது. அத்தகைய மிகச் சிலருள் ஒருவர் நம் மத்தியில் வாழும் இலக்கியவாதி டொமினிக் ஜீவா.” என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கலாநிதி சு.வித்தியானந்தன் புகழ்ந்துரைத்துள்ளார். டொமினிக் ஜீவா, ஒரு படிக்காத மேதை, உன்னத மனிதாபிமானி முற்போக்கு சிந்தனையாளர், தலை சிறந்த பத்திரிக்கையாளர், சிறந்த எழுத்தாளர், …

    • 0 replies
    • 912 views
  13. கவிதையின் கடமைகள்- கல்பற்றா நாராயணன் தமிழில்- அழகிய மணவாளன் கவிதையின் கடமையும் கவிஞனின் கடமையும் ஒன்றல்ல. கவிஞன் சாமானியனாகவோ, அசாதாரணமானவனாகவோ இருக்கலாம். ஆனால் கவிதை அசாதாரணமானதாகத்தான் இருக்கவேண்டும். தன் கவிதைகளைவிட உயிர்ப்பு கொண்ட கவிஞன் நம்மை கவர்வதில்லை. கவிஞனை, அவன் ஆளுமையைவிட உயிர்துடிப்புகொண்ட கவிதைகள்தான் நம்மை பிரமிக்கச்செய்கின்றன. கவிஞனின் உடலில் காய்த்த இன்னொரு உடல்தான் கவிதை என்றாலும் அவனை சாராத தனிஇருப்பு அதற்கு உண்டு. கவிஞன் அல்லாமல் அது தன் வடிவை அடைவதில்லை என்றாலும் அது அவன் அல்லாமலேயே நிலைநிற்கக்கூடியது. அது கவிஞன் உத்தேசித்ததையும் மீறிச்செல்லும். ” வைரம் துளைத்த அருமணிகளின் ஊடே நான் கடந்துசெல்கிறேன், என் அதிர்ஷ்டம், நான் வெறும் நூல்தான்” இது அக்கித…

  14. பழங்கால இசைக்கருவியான கின்னாரம்' கருவியை வாசிக்கும் கடைசி நபராக இருக்கிறார், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்த அருணாசலம். தன் தந்தையிடமிருந்து இக்கலையை கற்றுக்கொண்ட அருணாசலம், கிராமங்களில் கோவலன் கூத்து பாடி வருகிறார். பாணர் மரபில் 'கின்னாரம்' வாசிக்கும் கடைசி நபர் அருணாசலம் தான் என்று நிறுவுகிறார் தமிழ் ஆய்வாளர் பொன்னுச்சாமி.

  15. 2000க்கு பின் தமிழ் இலக்கிய உலகம் கே.ஜே.அசோக்குமார் ஆகஸ்ட் 13, 2023 1 எழுபதுகளின் தமிழ் சினிமா உலகம் பல புதிய மாற்றங்களைக் கண்டது. புதிய கதைகள், புதிய கூறல் முறைகள், இசையில் இருந்த புதிய பாய்ச்சல் என்று அன்று வந்த திரைப்படங்கள் புதியனவாக இருந்தன. அவற்றுள் ஒரேவகைக்குள் அடக்க முடியாத காட்சி ஊடகத்தை காணமுடியும். கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணம் என்று வண்ண மாற்றங்கள் நிகழ்ந்தன. பலவகை இசை கோலங்கள் கொண்ட இசையமைப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது இந்த காலகட்டத்தில்தான். இதே மாதிரியான மாற்றத்தை 2000க்குபின் தமிழில் இலக்கிய உலகில் நிகழ்ந்திருக்கிறது. 2000க்கு பின்னான தமிழ் இலக்கிய விரிவிற்கு இணையத்தின் பெருக்கமும், அச்சு ஊடகத்தின் எளிமையாக்கமும…

  16. எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நேர்காணல் தமிழ் இலக்கியத்தின் மறுக்கமுடியாத எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஜெயமோகன் அவர்கள். தமிழ் மொழியின் உச்சத்தை தொட்டவர் என்று சொல்லப் பொருத்தமானவர். தமிழிலும் மலையாளத்திலும் மிகப்பெரிய வாசகப்பரப்பு இவருக்கு உண்டு. புனைவின் எல்லா தளங்களிலும் அவரது எழுத்துக்கள் காத்திரமாக பேசப்படுகின்றன. zoom செயலி ஊடாக நடாத்தப்பட்ட இந்த நேர்காணல் பின்பு எழுத்துருவாக்கப்பட்டது . கேள்வி: மிக நீண்ட காலமாக ஈழத்து இலக்கிய சூழலையும் அதன் போக்குகளையும் அவதானிப்பவர் என்றவகையில்; அவை நகர்ந்து சென்றிருக்கின்ற செயற்பாட்டு இயங்கியலை எப்படிப்பார்க்கிறீர்கள்? பதில் : ‘ஈழ இலக்கியம்;ஒரு விமர்சனப் பார்வை’ எனும் தலைப்பில் பத்துவருடங்களுக்கு முன்பே ஒரு…

  17. கனடாவில் ஒரு வானொலிப் பேட்டி November 16, 2023 வேண்டிய ஒருவர் வலுவாக சிபாரிசு செய்தமையால் இந்த வானொலிப்பேட்டிக்கு ஒப்புக்கொண்டேன், இந்த வானொலி பற்றி அப்போது எனக்குத் தெரியாது. என்னைப் பற்றி பேட்டியாளருக்கு அனேகமாக ஏதும் தெரியாது. இணையத்திலிருந்தும் பலவகை வம்புகளிலிருந்தும் கேள்விகளை தொடுத்துக்கொண்டு கேட்டார். அனேகமாக எல்லா கேள்விகளுமே எதிர்மறையானவை. ‘மடக்கிவிடும்’ நோக்கம் கொண்டவை. பேட்டியில் அரசியல் கேட்ககூடாது, பேசமுடியாது என்று முன்னரே நிபந்தனை விதித்திருந்தேன். ஆனால் வானொலி நெறியாளர் அதற்கு ஒப்புக்கொண்டாலும் பேட்டியில் அதை கடைப்பிடிக்கவில்லை. ஒரு வெளிநாட்டில், சுற்றுலா விசாவில் வந்த பயணி அரசியல் பேச முடியாது என்பதைக்கூட அவர்கள் பொருட்பட…

  18. புனைவின் பல வாயில்கள் – ஆர். அபிலாஷ் July 19, 2021 - ஆர்.அபிலாஷ் · இலக்கியம் அ. முத்துலிங்கம் ~ ஜெயமோகன் நேர்காணலில் இருந்து ஒரு கேள்வியும் பதிலும் பகுதியை கார்ல் மார்க்ஸ் தன் பேஸ்புக் பக்கத்தில் எடுத்துப் போட்டு சிலாகித்திருந்திருந்தார். அதில் அ.முத்துலிங்கத்தின் எழுத்தில் வரும் நுட்பமான அவதானிப்புகளை பாராட்டி விட்டு, அவரது எழுத்தில் ஏன் படிமங்கள் வருவதில்லை என ஜெயமோகன் வினவுகிறார். அதற்கு முத்துலிங்கம் சொல்லும் பதிலுக்கு செல்லும் முன் அதென்ன ஜெ.மோ சொல்லுகிற “படிமம்” என நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அசோகமித்திரனின் “தண்ணீர்” நாவலில் நீர் ஒரு குறியீடு. நீரின் கழிவு கலந்த தன்மை, எதையும் தன்னில் கலந்து அழுக்காகும் போதும் ஓரிடத்தில் நின்று விடாமல் ஓட…

  19. கவிஞர், எழுத்தாளர், கலை - இலக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் அவர்களுடனான ஓர் இலக்கிய நேர்காணல். ====================== 01) கேள்வி :- இலங்கை மற்றும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் இணைந்து ஆக்க இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கும் விருது இம்முறை அதாவது "இரா.உதயணன் இலக்கிய விருது - 2018" தங்களது 'விளைச்சல்' எனும் குறுங்காவிய நூலுக்கு வழங்கப்பட்டுள்ளதே. இந்த "விளைச்சல்" குறுங்காவியம் பற்றிச் சுருக்கமாகக் கூற முடியுமா ? பதில் :- "விளைச்சல்" குறுங்காவியம் கவிஞர் நீலாவணன் எழுதிய 'வேளாண்மை'க் காவியத்தின் தொடர்ச்சியாகும். கவிஞர் நீலாவணன் மட்டக்களப்பு மண்ணின் வாழ்க்கையை இலக்கியமாக்க எத்தனித்தார். அதன் விளைவே அன்னா…

    • 0 replies
    • 759 views
  20. துயரத்தில் முடிந்த சுந்தரராமசாமியின் காவியம் சு, வேணுகோபால் சுந்தர ராமசாயின் கட்டுரைத் தொகுப்பைப் படித்துக் கொண்டே வந்தபோது உடனடியாகத் தோன்றியது அவரது ‘சவால்’ கவிதைதான். …. இந்தக் கவிதையை அவர் எழுபதுகளின் துவக்கத்தில், எழுதாமல் இருந்துபின் எழுத வந்த காலத்தில் எழுதப்பட்டது என்பது இலக்கிய வாசகர்கள் அறிந்த ஒன்று. இந்தக் கவிதையை எழுதப்படாத துவக்க காலத்திலேயே அவர் மனதில் எழுதிவிட்டார். அவரது கட்டுரைகளின் வழி தன் இருப்பு குறித்து தெரிவிக்க முயன்ற சாரம் அதுதான். இதனை 1963 வாக்கில் பாரதி குறித்து எழுதவந்த கட்டுரையிலேயே காணலாம். எனவே சுந்தர ராமசாமி பெரும் கனவுகளோடுதான் விரும்பி இலக்கியத்துறைக்கு வந்துள்ளார். இந்தக் கனவுகளே க.நா.சு. போல சற்று மூர்க்கமாக தம…

  21. மனிதர்கள் எண்ணிக்கை விட கதைகள் அதிகம்: எஸ்.ராமகிருஷ்ணன் மின்னம்பலம் மழைக்காலங்களின் காலை நேரங்கள் அலாதியானவை. அந்தக் கதகதப்பையும் விநோத மனநிலையையும் தனக்குள் பொதித்து வைத்திருப்பவை எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், 80களில் தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர். இவரது முதல் கதை ‘பழைய தண்டவாளம்’ கணையாழியில் வெளியானது. அதைத் தொடர்ந்து, தீவிரமாக எழுதத் தொடங்கிய இவர், புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், பயணம், உலக சினிமா குறித்த அறிமுகம், திரைக்கதை எனப் பல தளங்களிலும் தனது எழுத்தை விஸ்தரித்துக்கொண்டே இருப்பவர். கரிசல் இலக்கியத்தின் மரபில் வந்தவரான எஸ்.ராம…

  22. தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தல் (நவ.05 – சென்னை தி.நகர்)

  23. கவிப்பேரரசு வைரமுத்துவுடன் ஒரு இலக்கிய சந்திப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.