இலக்கியமும் இசையும்
இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை
இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
206 topics in this forum
-
எனது இலக்கியம் அரசியல் சார்ந்ததுதான் March 2, 2025 ஷோபாசக்தி உயிர்மை பிப்ரவரி 2025 இதழில் வெளியாகிய எனது நேர்காணல். சந்திப்பு: சோ.விஜயகுமார் ஒரு நீண்ட புலம்பெயர் வாழ்வில் இருக்கிறீர்கள். இதில் ஈழத்தோடும் தமிழகத்தோடும் உங்களுக்கு இருக்கக்கூடிய இன்றைய உணர்வுகளை எப்படிக் காண்கிறீர்கள்? இலங்கையில் யுத்தம் முனைப்பாக ஆரம்பிப்பதற்கு முன்பே இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர ஆரம்பித்துவிட்டால் கூட, 1983-ஆம் ஆண்டு யுத்தம் உக்கிரமான பொழுதில்தான் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக, குடும்பங்களாக இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் அகதிகளாகச் சென்றனர். அந்தச் சூழலில்கூட எக்காரணம் கொண்டும் தாய்நாட்டை விட்டு வெளியேறுவது இல்லை என்ற தீர்க்கமான முடிவோடு இருந்தவன் நான். நமது தாய்நாட்டில…
-
- 0 replies
- 285 views
-
-
மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன் [கோ சாரங்கபாணி] [ஈரோட்டில் 10,11-8-2019ல் நிகழ்ந்த சிறுகதை அரங்கில் பேசப்பட்ட கதைகள் பற்றிய கட்டுரை] தமிழக வரலாற்றில் புலம்பெயர்வு தொல்நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது. வணிகத்தின் பொருட்டு தென்கிழக்கு ஆசியத் தீவுகளுக்கு பயணித்ததாக இருக்கலாம். அல்லது தேசாந்திரியாக நிலமெங்கும் அலைந்து திரிந்ததாகவும் இருக்கலாம் அல்லது போருக்காக மண் நீங்கியதாகவும் இருக்கலாம். செல்லும் இடங்களில் தங்கள் பூர்வீக வாழ்வின் எச்சங்களை எப்போதும் விட்டு வந்தார்கள். பண்டிகைகளாக, சிற்பங்களாக, ஏதோ ஒரு சடங்காக பண்பாட்டு நினைவு பேணப்பட்டு வந்தது. மிகப்பெரிய அளவிலான புலம் பெயர்வு என்பது காலனிய காலகட்டத்தில் நிகழ…
-
- 0 replies
- 813 views
-
-
மலேசியா சிங்கப்பூரில் தமிழ்நூல்களை விற்பனைசெய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழாசியா என்னும் தளத்தின் தொடக்கவிழாவுக்காக ஆற்றிய வாழ்த்துரை. https://tamilasiabooks.com/ https://www.jeyamohan.in/145363/
-
- 0 replies
- 819 views
-
-
எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகளை அமைத்துப் பாட்டை இயற்றியுள்ளார் ஒரு பாடலாசிரியர்.
-
- 0 replies
- 645 views
-
-
புதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா பதாகைOctober 6, 2020 (புதிய குரல்கள் பகுதியில் பொதுவாக எழுத்தாளரின் விரிவான நேர்காணல் மற்றும் அவருடைய ஆக்கத்தை பற்றிய விமர்சன கட்டுரை இடம் பெறும். இம்முறை அவைத்தநித்தநியாக இல்லாமல் எழுத்தாளருடன் உரையாடிப் பெற்ற அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் முதல் பகுதியிலும், கட்டுரை இரண்டாம் பகுதியிலும் இடம்பெறும் வகையில் ஒரே பதிவாக வெளிவருகிறது. கேள்விகளுக்கு பதில் அனுப்பிய எழுத்தாளர் சாதனாவிற்கு நன்றி) எழுத்தாளர் சாதனா – ஒரு அறிமுகக் குறிப்பு கே: உங்களைப் பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுதீவில் ஒரு குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அப்பா ஒரு வாகனச் சாரத…
-
- 0 replies
- 875 views
-
-
-
- 0 replies
- 582 views
-
-
இரு வகையான வழக்குகள் written by ஆர்.அபிலாஷ்January 30, 2022 தமிழில் சமூக வலைதளங்கள் வேர்கொண்டு கிளைவிட்டு தழைத்தபோது தோன்றிய ஒரு இயல்பு பேச்சுவழக்கில் நிலைத்தகவல்களை எழுதுவது. பேஸ்புக்கில் குறிப்பாக, ஆங்கிலம், கொச்சையான சொற்கள் கலந்து நேரடியாக ஒரு விசயத்தைச் சொல்லத் தலைப்படும் எழுத்துக்கு இங்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது. அதே நேரம் வட்டார வழக்குக்குப் பெரிய மதிப்பு இருந்ததில்லை. நீங்கள் எந்தப் பதிவர்களைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இது மாறும் என்றாலும் பேச்சுவழக்கு என்னதான் எதார்த்தமாகவும் பாசாங்கற்றதாகவும் இருந்தாலும், பொதுவழக்கே பொதுவாகக் கோலோச்சுகிறது. இந்தப் பொதுவழக்கைப் பயன்படுத்துகிறவர்கள் இடையிலும் இலக்கிய வழக்கு மீது ஒரு கிண்டல், மறுப்பு, அது போ…
-
- 0 replies
- 479 views
-
-
எளிமையான படைப்புகள் ஜெயமோகன் அன்புள்ள ஜெ நான் தொடர்ச்சியாக இலக்கியங்களை வாசித்துவருபவன் என் வாசிப்புக்கு எளிமையான நடையும்,நேரான அமைப்பும் கொண்ட படைப்புக்களையே விரும்ப முடிகிறது. பெரியநாவல்கள், சிக்கலான நாவல்களை வாசிப்பது சலிப்பை அளிக்கிறது. அவை அறிவார்ந்தவை என்றும் எளிமையான சின்ன படைப்புக்களே கலைப்படைப்புக்களுக்கு உரிய ஓர்மை உள்ளவை என்றும் ஓர் எண்ணம் உருவாகியது. இதை நண்பர்களிடம் சொல்லியபோது நீங்கள் இதை மறுப்பீர்கள் என்று சொன்னார்கள். ஆகவே நீங்கள் என்ன சொல்வீர்கள் என அறியும் ஆர்வம் ஏற்பட்டது.ஆகவே இதை எழுதுகிறேன். உங்கள் பதிலை எதிர்பர்க்கிறேன் ஆர்.மகாதேவன் அன்புள்ள மகாதேவன் இலக்கியவாசகர்கள் கூட சில தற்பாவனைகளுக்குள் சிக்கிக் கொள்வார்கள். அ…
-
- 0 replies
- 485 views
-
-
எந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன் இதழ்கள், இளைஞர் முழக்கம் September 15, 2018 இளைஞர் முழக்கம் தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமான கவனத்தைப் பெற்ற ‘உப்பு நீர் முதலை’, ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’, ‘லாகிரி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், ‘உரோமம்’ நாவல் மற்றும் பாராட்டத்தக்க பல்வேறு சிறுகதைகளையும் எழுதிய நரன் அவர்களுடன் உரையாடியதிலிருந்து… நீங்கள் பிறந்து வளர்ந்த சூழல், இலக்கியத்துடன் எப்படி அறிமுகம், நவீன கவிதைக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்? நான் பிறந்தது விருதுநகரில். என் அம்மா வீட்டு வழியினர் அறுபது ஆண்டுகளாக விருதுநகரில் பருப்பு மற்றும் எண்ணெய் மில்கள் அமைத்துக் கொடுப்பதும், அது சார்ந்த வணிகத்திலும் இருந்தார்கள். …
-
- 0 replies
- 666 views
-
-
ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன் ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள் தனிப்பட்ட வாழ்கையில் அலைக்கழிப்பும் துயரம் நிறைந்த அனுபவமும் இருந்தால் நல்ல இலக்கியம் பிறக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. டால்ஸ்டாய், ஜெயமோகன்,ஷோபாசக்தி, மிலன் குந்தேரா, ஹனீப் குரேஷி வரை அதற்கான முன்னோடிகள் இருக்கிறார்கள்தான். ஆனால் வெறுமே துயரும் அலைக்கழிப்பும் மட்டுமே நல்ல இலக்கியத்தைப்படைப்பதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. நல்ல உதாரணம் ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்கள். ஈழம் என்றாலே போர், கண்ணீர், இனப்படுகொலை என்ற எண்ணமே மனதில் வரும். அதெல்லாம் சரிதான், ஆனால் அவற்றை முன்னிறுத்தி எழுதப்படும் படைப்பில் இலக்கியத்தரம் இருக்கிறதா என்பதே இலக்கியத்திற்கான அடிப்படை. இலக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் – ஆர். அபிலாஷ் June 3, 2020 - ஆர்.அபிலாஷ் · இலக்கியம் அண்மையில் வாசிப்பு குறித்து நான் எழுதிய கட்டுரைக்கு போகன் சங்கர் செய்த ஒரு எதிர்வினையில் தொல்படிமங்களுக்கு இலக்கியத்தில் உள்ள முக்கியமான இடத்தைப் பற்றி கீழ்வருமாறு பேசுகிறார். நான் அவருடன் ஓரளவுக்கு உடன்படுகிறேன், ஆனால் நிறையவே முரண்படுகிறேன் என்பதால் அவரது மேற்கோளையே இந்த கட்டுரையின் துவக்கமாகக் கொள்கிறேன்: “நல்ல வாசிப்பு என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.அன்னோஜனின் கதைக்கு சர்வோத்தமன் சடகோபன் அன்னோஜன் தனது கதையை ஒரு தொன்மத்துடன் இணைத்து முடிக்கவில்லை என்று கவனித்திருந்தார்.ஜெயமோகனை ஆதர்சமாகக் கொண்டவர் அன்னோஜன் எனும்போது இது முக்கியமான …
-
- 0 replies
- 490 views
-
-
இலக்கிய வாசகனின் பயிற்சி ஜெயமோகன் August 20, 2020 அன்புள்ள ஜெ, முதலில் ஓநாய் குலச்சின்னம் வாசித்தேன் அதையடுத்தது உங்களின் இலக்கிய வாசிப்பு பரிந்துரைகளை எடுத்துவைத்து கிண்டிலில் கிடைப்பதை ஒவ்வொன்றாக வாசித்து வருகிறேன். “ஓநாய் குலச்சின்னம்” சீனாவின் மங்கோலிய பகுதியில் மேய்ச்சல் நிலச் சமூகம் பரிணாம வளர்ச்சியின் இயற்கை சமக்குலைவுகளும் , மனிதனே பிரதானம் என்ற மாவோவின் சிந்தனையால் ஏற்படும் உள்விளைவுகளும் சொல்லப்பட்டுள்ளது. பொய்த்தேவு கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாக மேட்டுத்தெருவில் பிறந்த சோமு, சோமசுந்தர முதலியார் மளிகை மெர்ச்செண்டு என்று வளர்ந்து, பின் சோமுப் பண்டாரமாக, யாருமில்லாத அனாதையாக இறப்பது வரையான கதை. அடுத்தாதாக ஒரு மாற…
-
- 0 replies
- 579 views
-
-
புலி எதிர்ப்பு இலக்கியம் என்பது ஒரு நோய்: மலையவன் சில ஈழத் தமிழ் எழுத்தாளர்களுக்கு, புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளாக இருப்பதுதான் இலக்கிய உலகில் கௌரவமாகவும் இலக்கியச் சந்தையில் இலாபம் தருவதாகவும் இருக்கிறது. மிகவும் வன்மமும் கண்மூடித்தனமும் கொண்ட இந்தப் புலியெதிர்ப்பு வாதம், இன்று முள்ளிவாய்க்காலுக்குப் பிறகும் தொடர்கின்றது என்பது இன்னும் அதிர்ச்சிகரமானது. அண்மையில் முகநூலில் புலி எதிர்ப்பு எழுத்தாளர் ஒருவர், புலிப் பாணி இலக்கியம் தற்போது வளர்ச்சியடைவதாக வருத்தத்துடன் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். அதற்கு இன்னொரு முகநூல் பதிவாளர், நல்லதொரு பதிலை வழங்கியிருந்தார். புலி எதிர்ப்பு இலக்கியம் உங்களுக்கு இனிக்கிறது. ஆனால் புலிப்பாணி இலக்கியம்தான் கசக்கிறதா? என்று. …
-
- 0 replies
- 1.3k views
-
-
தஸ்தயெவ்ஸ்கி - மனங்களின் வித்தகர் | கனலி ’’உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவல் டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’என்றுகூறப்பட்டாலும் கூட உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவலாசிரியர் யார் என்றுகேட்டால் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கிதான் என்று விமர்சகர்கள் சந்தேகத்துக்கிடமின்றிசொல்லி விடுவார்கள்’’ என்கிறார் எம்.ஏ.அப்பாஸ் [என்றென்றும் வாழும்படைப்புகளும்,படைப்பாளர்களும்]. ரஷ்ய சமூகத்தில் 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய சமூக பொருளாதார ஆன்மீகப்பின்புலச் சூழலை மனதில் கொண்டு மனித மன அமைப்பை, அதன் வினோதங்களைக்கண்டறிய முயன்ற ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி உலக இலக்கியத் தளத்தில் மிகச்சிறந்த ஒரு மனோதத்துவ அறிஞராக விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்டவர். தானும்கூடக் கற்றுக் கொள்வதற்கான உளவியல் …
-
- 0 replies
- 600 views
-
-
காலம் இல்லாமல் ஒரு கதையை எழுத முடியுமா? ஆர். அபிலாஷ் இதென்ன கேள்வி என உங்களுக்குத் தோன்றலாம். ஆனால்கதையின் ஆன்மா காலத்தினுள் புதைந்திருக்கிறது என்றுஅரிஸ்டாட்டில் துவங்கி இன்றைய விமர்சகர்கள் பலர்கருதுகிறார்கள். தமிழ் நாவல்கள், சிறுகதைகளின் வடிவத்தைபுரிந்து கொள்ளவும் இந்த கேள்வி மிகவும் உதவும். நாம்காலத்தைப் பற்றி பேசும் முன்பு காரண-விளைவு தர்க்கம் நம்வாழ்வில் எப்படி செயல்படுகிறது எனப் பார்ப்போம். பேருந்தில் நின்று கொண்டு வரும் போது பக்கத்தில் நிற்பவர்என் காலை மிதித்து விடுகிறார். நான் கோபமாக திரும்பிப்பார்க்கும் முன்பே அவர் “சாரி சார், தெரியாம மிதிச்சிட்டேன்” என்கிறார். “பரவயில்லை”, நான் அமைதியாக…
-
- 0 replies
- 409 views
-
-
இலத்திரனியல் சாதனங்கள்,இணையம்,தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களின் வருகையாலும் ஆக்கிரமிப்பாலும் வாசிப்பு இன்று எம்மை விட்டு தொலைவாகிக்கொண்டு இருக்கிறது…. இயந்திரமாய் ஓடும் வாழ்க்கையில் கிடைக்கும் சிறிது நேரத்தையும் தொலைக்காட்சிக்கும் தொலைபேசிக்கும் கொடுத்துவிடுகிறோம்… எழுத்தாளர்கள் அதிக நூல்களை வாசிப்பவர்கள்.. அவர்களின் உரையை கேட்கும்போது அவர்கள் வாசித்த பலநூல்களின் அனுபவங்கள் எமக்கு கிடைக்கும்… புத்தகங்களை வாசிக்க நேரமில்லாதவர்கள் ஆர்வத்தையும் சிந்தனையையும் தூண்டும் எழுத்தாளர்களின் உரையை கேட்கும்போது நம்மை அறியாமலே பல்வேறு புத்தகங்களை நாம் படித்துவிடுகிறோம் அவர்களின் உரைகளினூடு… எஸ் ராவின் அருமையான இந்த பேச்சை நேரம் ஒதுக்கி கேட்பவர்கள் நிச்சயமாக இனி நான் தொடர்ந்து இங…
-
- 0 replies
- 346 views
-
-
இவ்வருடம் என் வாசிப்பு - ஆர். அபிலாஷ் என் வாசிப்பு நாய் வாயை வைத்ததைப் போன்றது. தினமும் ஏதாவது ஒரு புதுப்புத்தகத்தில் சில பக்கங்கள் மேய்ந்து விட்டு அதை மறந்து வேறொரு விசயத்துக்குள் போய் விடுவேன். இவ்வருடமும் அப்படித்தான். Storytel ஆப் ஒரு பெரிய கொடுப்பினை - இரவு சில மணிநேரங்களில் அதில் ஒலிப்புத்தகங்களைக் கேட்டு விட்டு தூங்கி விடுவேன். அந்த புத்தகங்களிலும் நான்கைந்து மட்டுமே முழுதாய் முடித்திருப்பேன். நேற்று மைக் பிரெயர்லியின் Art of Captaincy நூலில் சில அத்தியாயங்களைக் கேட்டேன். அதற்கு முந்தின நாள் சக் பலானுயிக்கின் Snuff. அதற்கு முந்தின தினம் வி.எஸ் நைப்பாலில் Enigma of Arrival. அதற்கு முந்தின நாட்கள் “ஜெ.ஜெ சில குறிப்புகள்” நாவலை 80% கேட்டு மு…
-
- 0 replies
- 418 views
-
-
சயந்தன் – நேர்காணல் May 4, 2020 நேர்கண்டவர் : அகர முதல்வன் சமகால ஈழ எழுத்தாளர்களுள் சயந்தன் குறிப்பிடத்தகுந்தவர்.”ஆறாவடு” நாவலின் மூலம் வெகுவாக அறியப்பட்ட இவரின் இரண்டாவது நாவலான “ஆதிரை“(தமிழினி பதிப்பகம்) ஈழப்படைப்புக்களில் முக்கியமான வருகை. நாவல்களை மட்டுமல்லாது சிறுகதைகளையும் எழுதும் சயந்தனின் மிக அண்மைய சிறுகதையான “பூரணம்” விவாதத்திற்கு உள்ளானது. ஆதிரைஎன்கிற பெயரில் பதிப்பகம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இப்போது தன்னுடைய மூன்றாவது நாவல் எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். புலம்பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியே கிடையாது நாம் மீண்டும் மீண்டும் தமிழ் (தமிழக) அறிவுலகச் சூழலை மட்டுமே சுழன்று வருவதாக எனக்குத் தோன்றுகிறது. புலம்பெயர்ந்து நீங்கள் வச…
-
- 0 replies
- 696 views
-
-
மாற்றம் என்பது தனிமனித மாற்றம் மட்டுமே தான் – வா.மணிகண்டன் (நேர்காணல்) June 5, 2020 நேர் கண்டவர் : ஜீவ கரிகாலன் ‘கண்ணாடியில் நகரும் வெயில், என்னை கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ என்கிற கவிதைத் தொகுப்புகளும், ‘சைபர் சாத்தான்கள், ரோபோ ஜாலம்’ என்கிற தொழில்நுட்ப நூல்கள், லிண்ட்சே லோஹன் S/o மாரியப்பன் எனும் சிறுகதைத் தொகுப்பு, மசால் தோசை 38 ரூபாய் என்கிற அனுபவக் கதைகள் தொகுப்பு மற்றும் மூன்றாம் நதி ஆகிய நாவல் வெளிவந்துள்ளன. இவரது வலைப்பூ நிசப்தம்.காம் தமிழில் அதிகம் வாசிக்கப்படும் வலைப்பூக்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அவரது அறக்கட்டளைப் பணிகள் அவரது வெளிப்படைத்தன்மையால் (தணிக்கைசெய்யப்பட்ட அறப்பணிகளை பொதுவில் வைப்பது) அதிகம் கவனிக்கப்பட்டவை. கல்வி மற்றும் மருத்துவத்…
-
- 0 replies
- 656 views
-
-
ஐரோப்பிய கலாச்சாரத்தில், இசை, செழிப்பு மிகுந்த, மற்றும் பாரம்பரிய ரீதியிலான சிறப்புகள் அடங்கியதான ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இது பாரம்பரியமான சாஸ்திரிய இசை ( classical music ), மற்றும் மக்கள் இசை ( modern pop music ) என வகைப்படுத்தப்படுகின்றது. ஐக்கிய இராச்சியம் முழுவதிலுமே, இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வசதியாக ஏராளமான இசை அரங்குகள் அமைந்திருப்பதுடன், அவற்றில் வருடம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாகவே, பாரம்பரியமான சாஸ்திரிய இசை, ஐக்கிய இராச்சியத்தில் பிரபலம் மிக்கதாக விளங்குகின்றது. ஹென்றி புர்செல் (1659 - 95 ) ( Henry Purcell ) வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் ( Westminster Abbey ) ஆர்கன் இசைக்கருவியை ( organ ) வாசிப்பவர…
-
- 0 replies
- 689 views
-
-
உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா நெஞ்ச உதச்சி உதச்சி பறந்து போனா அழகா? யாரோ அவளோ? தாலாட்டும் தாயின் குரலோ ராஜா ஆரம்பமே ராஜாவோட ஸ்டைலிஷ் ஆரம்பமா இருக்கு. சித் ஸ்ரீராமோட குரல் இந்தக் காலகட்டத்துக்கான காற்றா வருடுது. கபிலன் கூச்சலற்ற வார்த்தைகளால இசை பேச வேண்டிய இடத்துல சொற்களை மௌனிச்சு அதனூடா சொற்களைப் பேசவைக்கிற லாவகத்தோட எழுதிருக்கார். அதுவும் ராஜாவோட தனித்துவம் எப்பவுமே ஒரு பாட்டை ஆரம்பிக்கும் போது ஆர்ப்பாட்டம் இருக்கவே இருக்காது. ஒவ்வொரு கதவாத் திறந்துகிட்டே போய் ஒரு பழக்கமான மூலையில் லைட் ஸ்விட்ச்சை ஆன் செய்ததும் அது வரைக்குமா…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 494 views
-
-
போரும் வாழ்வும் – அகரமுதல்வன் கதைகளை முன்வைத்து: ஆர். காளிப்பிரஸாத் அகரமுதல்வனின் காதல் விவரிப்புகள் சுவாரசியமானவை. ஒரு காலத்திற்குப் பிறகு தமிழில் காதல் கதைகள் எழுதுவது நின்றே விட்டது. காதல் அனுபவங்களை கவிஞர்கள் தங்கள் மிகைக் கூற்றுகளுக்கென எடுத்துக்கொள்ள இயல்பான காதல் வர்ணனைகள் உரைநடையில் குறைந்து போயின. காதலும் வீரமும் தமிழரின் பண்பு என்று பள்ளிக்கூடத்தில் படித்திருந்தாலும் இலக்கியத்தில் அவை பாரதிதாசன் காலத்தோடு நின்றுவிட்டன. காதல் வீரம் தியாகம் துரோகம் ஏதும் சமகால இலக்கியங்களில் பெரிதும் இடம்பெறுவதில்லை. வணிக இலக்கியம் அதற்கான ஊடகமாக ஆகியது. அடுத்து திரைப்படங்களிலும் அவை மேலும் நுண்மையாக்கப்பட்டன. தீர அலசப்பட்டன. அவ்வாறே ஒருகட்டத்தில் கேலியாகவும் ஆயின. விடுதலைப் ப…
-
- 0 replies
- 491 views
-
-
எழுத்தாளர் இளங்கோவின் மெக்சிகோ நாவல் வாசிப்பு அனுபவம். காதலும் நம்பிக்கையும் நிறைய வாழ்வை நேசித்த அவனின் அவளின் கதை. வாசித்து முடித்த பிறகும் மனசுக்குள் துயர் நிறைய மெக்சிகோ அலைகிறது.
-
- 0 replies
- 576 views
-
-
கண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை சுயாந்தன் June 10, 2018 தமிழில் நவீன கவிதையின் தற்கால முகத்தை எழுத்து என்ற சிற்றிதழ் மூலம் அழுத்தமாக உருவாக்கியவர்கள் கா.நா.சு மற்றும் சி.சு.செல்லப்பா ஆகிய இருவரும்தான். பிரமிள், நகுலன், பசுவையா (சுரா), கா.நா.சு முதலியவர்கள் எழுதிய கவிதைகளே இன்றைய நவீன கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் முன்னோடியாகவும் இருந்துள்ளது. இருந்து வருகிறது. 'புத்தியால் எழுதப்படுபவைதான் புதுக்கவிதை' என்று ஜெயகாந்தனும் 'புத்தியாலும் எழுதப்படுபவையே புதுக்கவிதை' என ஜெயமோகனும் ஒரு இடத்தில் கூறியிருந்தனர். ஜெயகாந்தன் அறிவார்ந்த தன்மையே நவீன கவிதைக்குப் போதும் என முன்வைக்க ஜெயமோகன் அதுவும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். கவிதை பற்றிய ஜெயமோகனின் இந்தக் கருத்த…
-
- 0 replies
- 2.6k views
-