கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
“செங்காந்தள்” [அந்தாதிக் கவிதை] "செங்காந்தள் முகிழ்விடும் நம் தேசமே தேசம் எமக்கு ஈன்ற மாவீரர்களே மாவீரர்களே எங்கள் நிலத்தின் தெய்வமே தெய்வமே உங்களுக்கு தீபம் ஏற்றுகிறோம் ஏற்றிய சுடரில் உங்களைக் காண்கிறோம்! காண்கிறோம் நேர் உரிமைப் போராட்டத்தை போராட்டம் காட்டிய உங்கள் வீரத்தை வீரத்தில் நீங்கள் உரைத்த நீதியை நீதி நிலைநாட்டிடச் செய்த தியாகத்தை தியாகம் விதைத்த பூமியே செங்காந்தள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 276 views
-
-
“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!” செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே! பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே! விலங்குக்கும் சில பண்பாடு உண்டே விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே விளக்கம் இல்லாத மதபோதனை எனோ களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை! வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ! [கந்தையா தில்லைவி…
-
-
- 2 replies
- 252 views
-
-
“நினைவு வணக்கமோ?" [படக்கவிதை] "கார்த்திகை தீபம் ஏற்றும் காந்தையே காலத்தின் கட்டாயம் இது என்றாயோ? காரணம் கேட்டு நீதிக்குப் போராடிய காணா உயிரின் நினைவு வணக்கமோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] காணா - காணாமல் போன
-
- 0 replies
- 263 views
-
-
“நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! யாழ் நூலகம் அரசகாவலர்களால் எரிந்தது புத்தர் பெருமானும் சேர்ந்து எரிந்தார்! நூலகத்தின் முன்றலில் அவரின் சாம்பல் தொண்ணூறாயிரம் நூல்களின் சாம்பலுடன் கலந்து! அறிவார்ந்த அற்புதங்கள் உறைந்த இடம் ஆயிரமாயிரம் நூல்கள் வாழ்ந்த இடம்! இதயமற்ற அரசு நடத்திய கொடூரத்தில் ஈரமிழந்து வெம்மையில் வாடி வதங்கியது! அந்த நொடியில் நூலகத்தின் சுவர்கள் சாம்பலின் நினைவைக் கூறின! சாம்பலின் நடுவே விதை முளைத்தது தமிழர்களின் உள்ளத்தில் மீண்டும் மலர்ந்தாள்! மூடிய புத்தகங்கள் பிரார்த்தனையாய் திறந்தன மறைந்த எழுத்துக்கள் ஆசீர்வாதமாக மாறின! நூலகத்தின் அமைதி தெய்வீகத் தாலாட்டானது “நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! [கந்தையா தில்லைவிநாய…
-
- 0 replies
- 146 views
-
-
“பூநகரி மாடு கட்டிப் பூவரசங்குளம் ஏரு பூட்டி..” “பூநகரி மாடு கட்டிப் பூவரசங்குளம் ஏரு பூட்டி இளந்தாரி வயலைக் கிளற ஆடிப்பட்டம் தேடி விதைக்க காணி ஏங்கும் பயிர்கள் முளைக்க கூடிக் குலாவி மகிழ்வாக இருக்க பூத்து குலுங்கும் வாழ்வு தந்தானே!" "பத்தாது காணாது இனி இல்லையே மெய்யாச் சொல்லுகிறேன் கேளடா கதிரையில் காய்பவன் நாமல்ல கடுதாசியில் திட்டம்போடும் சோம்பேறி வேண்டாம் பெட்டை பெடியன் வெளிக்கிட்டு வெள்ளாமைசெய்ய கெதியாய் பூக்கும் வன்னி மண்ணே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 733 views
-
-
“முதுமையின் அரவணைப்பு” “முதுமையின் அரவணைப்பு தனிமையைப் போக்கும் பதுமையுடன் விளையாடும் மழலைப் போலவே! பெதுமை பருவத்தில் மகிழ்ச்சி காணும் புதுமை செய்யும் குழந்தை போன்றே!" "பாளையாம் செத்தும் பாலனாம் செத்தும் காளையாம் செத்தும் இளமை செத்தும் மூப்பும் ஆகியும் மூலையில் ஒதுக்கியும் தனித்து விட்ட கொடூரம் எனோ?" "பொன்னேர் மேனி அழகு இழந்து நன்னெடுங் கூந்தல் நரை விழுந்தாலும் மாறாத அன்பு நிலைத்து நிற்க வயதான மக்களைத் தழுவ வேண்டும்!" "இளமை நீங்கி உடலும் மெலிய தளர்ச்சி பெற்று கோலிற் சாய களைப்பு கொண்ட உள்ளம் ஆற பாசம் கொடுக்கும் கைகள் தேவை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 616 views
-
-
“ராஜ பார்வையின் ரகசியங்கள்” "ராஜ பார்வையின் ரகசியங்கள் எதுவோ ராதை கொடுத்த ஊடலின் வலியோ ராத்திரி துயிலாத விழிகளின் கோலமோ ராணியைக் காணாத ராமனின் சீற்றமோ?" "கண்கள் ஏங்கும் பார்வை ஏனோ கண்மணி சுற்றி சிவந்தது எதற்கோ கவலைகள் தந்த கண்மணி யாரோ களங்கம் படுத்திய செயல் என்னவோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 294 views
-
-
சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் அங்கு தொங்கும் 13 ம் உடலை கீழே இறக்கினான் மன்னவனே சற்றும் மனம் தளராமல் என்னை காவிப் போகும் உனக்கும் 13ம் கதையை சொல்லுகிறேன் கேள் என்றது காவிப் போன நாலு பேரும் இறக்கி அருகில் வைத்து விட்டு அமைதியாக இருந்து கேட்டபடி இருந்தனர் இது முற்பத்தி நான்கு வருட 13 ம் கதை இது தமிழர் தீர்வு கதை இது கவனமாய் கேட்டுக் கொள் இத்தனை வருடமாக இந்து சமுத்திர வல்லாதிக்க சக்தியை ஏமாற்ற இலங்கைக்கு மட்டும் தெரியும் இது சிங்கள இராஜதந்திரம் விளங்கிக் கொள் முப்பது வருடத்திற்கு மேல் எந்தத் தீர்வையும் பெற்றுத் தராமல் இனப் படுகொலையையம் மறைத்து ஈழத் தமிழனை ஏமாத்த …
-
- 1 reply
- 345 views
-
-
ப “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” (நன்னூல் நூற்பா 426) பிரிந்து போகும் 2021டே உனக்கு பிரியா விடைதந்து அனுப்பும் இவ்வேளை.. இன்று.. புலரும் புது ஆண்டே இனம்,மொழி, சாதி,மதம், கறுப்பு,வெள்ளை ஏழை,பணம், அகதி,அடிமை என்னும் மனிதப்பிரிவுகள் நீக்கி மனிதநேயத்தை மனங்களில் இருத்தி அனைத்துயிரோடும் அன்பைப் பொழிந்து. அகிலத்தில் அனைத்தும் ஒன்றேயென்ற உறுதி மொழி கொடுத்து உயிர் கொல்லி நோய்கள் நீக்கி எம்மை வாழவைக்க வா! வா! 2022 புத்தாண்டே! உன்னை வாழ்த்துகின்றோம், வணங…
-
- 3 replies
- 1.4k views
-
-
2024/2025 *************** பழமைக்கு பிரியாவிடையும் புதுமைக்கு வரவேற்பும் இன்றிரவு 12 மணிக்கு! இழப்புகள், ஏற்றங்கள் துக்கங்கள், மகிழ்சிகள் வேதனைகள், சாதனைகள் வெறுப்புகள், வெற்றிகள எல்லாமே இரண்டறக் கலந்து எமக்குத் தந்தாய். அத்தோடு.. உலகச் சண்டைகளும் இயற்கையழிவுகளும் பொருளாதார சிக்கல்களும் தந்து.. பொறுமையிழக்க வைத்தாய். இத்துடன் முடிந்தது என்றுதான் இருந்தோம் உனது கோரப் பற்களால்-தென் கொறியா விமானத்தை தீயிட்டுக் கொளுத்தி 179 அப்பாவி உயிகளை தின்றுவிட்டுச் செல்கிறாயே இது நியாயமா? நீயே சொல். அவர்களின் துக்கத்தில் மூழ்கி உன்னை அனுப்பி வைக்…
-
-
- 9 replies
- 737 views
-
-
எனது பிரித்தானிய பயணத்தின் போது கண்டது,கேட்டது,மகிழ்ந்தது.என்ற வரிசையில்.. இது முதலாவது கவிதை. இதைஉங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன். நன்றிகள். Bed ford வெட் வோர்ட் நகரமும் “கிரேட் நதியும்” ******************************** லண்டன் இருந்து நூறு மைல் கற்களுக்கப்பால் அமைந்துள்ள அழகான நகரமிது. அண்ணளவாக.. இருநூற்றி முப்பது கிலோமீற்றர் நீளம் கொண்ட ரிவர் கிரேட் நதி (The River Great Ouse) புல்வெளிகளையும் காடுகளையும் கட்டிடங்களையும் வீடுகளையும் கரையோர மரங்களையும் இருபக்கமும் அணைத்தபடியே! வளைந்து நெழிந்து …
-
- 0 replies
- 816 views
-
-
We say aloud, “we are Americans” Two deadly viruses Killing Americans now! One is COVID 19, the other is RACISM. All the guns are here, only to shot towards heaven. Wings cut off the blackbirds Crushing the human heads... Here, in the legal world! There is nothing to speak in the depths of darkness Here - no one says "welcome" They only say "Go home" Never pronounced the word "justice" …
-
- 1 reply
- 889 views
-
-
கவிஞர் பளநிபாரதியவர்களின் கவிதை ஒன்று படிக்கும் போது இங்கு பதிவிடத் தோன்றியது அதனால் இங்கு இணைக்கிறேன்..எமது நாடு பற்றியது. அங்கே நான் உன்னை அழைத்துச் செல்லமாட்டேன் அது கருணையற்ற நிலம் பிரிவின் யுகாந்த வெள்ளத்தில் அது மூழ்கடிக்கப்பட்டது காதலற்ற சொற்களின் முள்வேலியால் …
-
-
- 3 replies
- 588 views
-
-
நீண்ட கவிதை கொஞ்சம் பொறுமையாய் படியுங்கள் இன்றைய உலகின் யதார்த்தம் இது தான். அடி விழுந்த கொரோனா அடங்குவதாய் தெரியவில்லை-பா.உதயன் —————————————————————————————- அடி விழுந்த கொரோனா அடங்குவதாய் தெரியவில்லை இரண்டாம் கட்ட தாக்குதலுக்கு இறக்குகிறது இறுதி மூச்சோடு ஏதோ புசுதாய் இன்னுமொரு ரிசேவ் படையுடன் முயூடேசன் என்ற பெயரோடு அப்பன் போலவே தப்பாமல் ஒரு பிள்ளை பிறந்திருக்கான் அவனைப் போலவே ஆட்டத்தை தொடங்கப் போறானோ ஆருக்குத் தெரியும் மூன்று தளங்களை முழுமையாய் வீழ்த்தி முதல் அடி இருட்டு அடி போல் இங்கிலாந்தை விழுத்திப் போட்டுது இன்று தொடக்கம் இன்னும் ஒருக்கா இழுத்து மூ…
-
- 4 replies
- 980 views
-
-
கோடி வருசமாய் காத்த அவள் அழகை கோடிகளில் ஒருத்தியாய் கோலமிகு கோளமவளை விண்ணியல் கணக்கில் நேற்று முளைத்த இருகால் நடை மூளை பெருத்த கூட்டம் குத்திக் குடைந்து குதறி கொட்டி வெட்டி கொழுத்தி சீரழிச்சு அவள் சீர்குலைத்து - இன்று சீமான்களாய் சீமாட்டிகளாய் சீமையில் சபை அமைத்து சிந்திக்கிறார்களாம் சீரமைப்போம் மீண்டும் என்று. அவலம் தந்தவனுக்கு அவலத்தை கொடுக்கும் கொடியவள் அல்ல அவர்களாய் தேடிக் கொண்டதுக்கு அவளாய் என் செய்வாள்..?! பெருத்த மூளைக்குள் பொருமிய அறியாமைக்கு அவளாய் என் செய்வாள்..?! சிந்திக்க முடியாத சிறுமைகளை சீமான்களாய் சீமாட்டிகளாய் வரிந்து நிற்கும்…
-
- 2 replies
- 770 views
-
-
அடுத்த வீட்டு அம்பிகா மாமி ஆருக்கும் ஒன்றும் குடா கசவார மாமி இவோ கையை விட்டு காசை எடா வட்டி போட்ட குட்டிகளை பாங்கில போட்டு பிட்டு கடைசி மட்டும் கடைக்கு போக காய் பிஞ்சு வேண்ட மாட்டா கையில ஒட்டின சோத்தை கூட காக்கைக்கும் போட மாட்டா அறம் செய்ய விரும்பு என்று அந்த ஔவையார் போல் நடிப்பு வேற பக்தி என்றும் முக்தி என்றும் பல கதைகள் விடுவா மாமி படிப்பது தேவாரம் இடிப்பது கோவில் கதை மட்டும் அளக்க கந்தசாமியார் கோவிலில் காலையும் மாலையும் காணலாம் மாமியை உறுட்டிப் பிரட்டி கதை விடுவா உண்மையை மட்டும் ஒளித்திடுவா அடுத்தவரை அப்ரிஸியேட் பண்ணுகிற பழக்கமில்லை ஆனா உதவு மட்டும் கேட்டுப் பிட்டு மறந்…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஈழத்துக் காவலனே ஈகத்துக்கே உதாரணமாய் ஆனவரே வீரம் நிறைந்தவரே விவேகத்தின் பேரொளியே உலகே அதிசயித்து பார்த்தவரே உலகையே வென்ற ஒப்பற்ற எம் தேசியத் தலைவனே காலப் பெருவெளியில் என்றும் கரைந்திடாத தமிழினத்தின் அடையாளமே ஞாலத்தின் சுழற்சியிலே எப்போதும் நிலைத்திருக்கும் உம் நாமம்!!!!! 66வது அகவைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா!!!!!
-
- 8 replies
- 1.6k views
-
-
மேலைத்தேச நண்பரே! எதை நீங்கள் இன்று பார்க்கிறீர்களோ, அதை நாங்கள் பார்த்திருக்கிறோம் நண்பரே! உண்மையான உணர்ச்சிகள் கொப்பளிக்கின்ற, சோகத்தின் ஆழத்தை நாம் அனுபவித்திருக்கிறோம். போரின் நடுவே, வளர்ந்த குழந்தைகள் நாம்! ஆதலால் பலமுறை நாம், சொர்க்கத்தை உணர்ந்துள்ளோம் நண்பரே. மரணத்தின் வேதனையை, தனிமையின் கொடுமையை, கொடிய வறுமையை நாம் எதிர்கொண்டோம். பசியின் உக்கிரத்தில் பலநாள் தவித்திருக்கிறோம். போரின் நடுவே நம் இளமையைத் தொலைத்தோம். தினமரணத் துக்கத்துள் தவித்தோம். நாம் விடும் ஒவ்வொரு மூச்சிலும், எம் மண்ணின் ரணம் கலந்துள…
-
- 5 replies
- 681 views
-
-
அந்தாதிக் கவிதை / "உயிரோடு இணைந்தவளே!" "உயிரோடு இணைந்தவளே உடலோடு கலந்தவளே! கலந்த காதலால் இதயத்தில் மலர்ந்தவளே! மலர்ந்து மயக்கி இன்பம் கொட்டியவளே! கொட்டிய தேளிலும் கொடுமை கூடியவளே! கூடி மகிழ்ந்து பரவசம் தருபவளே! தருவதும் எடுப்பதும் உனது உரிமையே! உரிமை கொண்டு நெஞ்சில் உயர்ந்தவளே! உயர்ந்த எண்ணங்களால் சிந்தனையைத் தூண்டியவளே! தூண்டிய உணர்வுகள் எல்லையைத் தாண்டியும் தாண்டாமல் பிரியாமல் இணைந்தாளே உயிரோடு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.4k views
-
-
அந்தாதிக் கவிதை / "சமாதானம்" [இரு கவிதைகள்] "சமாதானம் தொலைத்த புத்தரின் பக்தர்களே பத்தர்கள் என்பது காவி உடுப்பதுவா? உடுத்த காவியின் பொருள் தெரியமா? தெரியாத உண்மைகளை தேடி உணராமல் உணர்ந்த மக்களை போற்றி வாழ்த்தாமல் வாழ்த்து பாடி மக்களை ஏமாற்றாதே? ஏமாற்றி குழப்பி துவேசம் பரப்பி பரப்பிய பொய்யில் மனிதத்தைக் கொல்லாதே! கொல்லாமல் இருப்பதுவே புத்தனின் சமாதானம்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................... "சமாதானம் வேண்டாமென இலங்கையில் போர் போர் தொடுத…
-
- 0 replies
- 631 views
-
-
அந்தாதிக் கவிதை / "சிந்தனை" & "பாமாலை" "சிந்தனை" "சிந்தனை செய்து சீராக வாழ்ந்தால் வாழ்ந்ததின் பெருமை உலகுக்கு புரியும்! புரிந்த வழியில் நேராக சென்றால் சென்றதின் பயன் மகிழ்வைக் கொடுக்கும்! கொடுத்து வாங்கி ஒழுங்காய் இருந்தால் இருந்ததின் அர்த்தமே நல்ல சிந்தனை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................... "பாமாலை" "பாமாலை தொடுத்து பூமாலை போட்டேன் போட்ட மலர்களை முகர்ந்து பார்த்தாள்! பார்த்து என்னை அருகில் அழைத்தாள் அழைத்த எனக்கு பாடினாள் பாமாலை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 995 views
-
-
அந்தாதிக் கவிதை / "நல்லதே நடக்கும்" "நல்லதே நடக்கும் நன்மை செய்வோம் செய்வது எதுவும் பெருமை கூட்டட்டும் கூட்டுவதும் கழிப்பதும் இயற்கையின் விளையாட்டு விளையாடல் இல்லையேல் வாழ்வு இனிக்காது இனிப்பது எதிலும் கவனம் எடுத்திடு!" "எடுத்த அடியை பின்னோக்கி வைக்காதே வைக்காதா தீர்வால் நேரத்தை வீணாக்காதே வீணாக்கும் எதுவுமே திரும்பி வராதே வராததை மறந்து செய்திடு நல்லது நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 629 views
-
-
அந்தாதிக் கவிதை / “தன்மானம்” "தன்மானம் தழைக்க தற்சார்பு ஓங்கும் ஓங்கிய எண்ணம் மனதில் பதியும் பதிந்த பெருமிதம் துணிவு தரும் தருவது எதையும் தெரிந்து எடுப்போம் எடுத்த கொள்கையில் திடமாய் நிற்போம்!" "நிற்கும் ஒன்றில் வளர்ச்சி இருக்கும் இருக்கும் ஒன்றை பேசுதல் சிறக்கும் சிறக்கும் கருத்து எதிலும் உதவும் உதவும் வாய்ப்புக்கள் தூக்கி ஏற்றிடும் ஏற்றிடும் ஏணியாய் நிற்பதே தன்மானம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 785 views
-
-
அனுதாபிகள் --------------------- ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் அனுதாபம் என்றார் இன்னொரு மனிதனும் அதையே சொன்னார் இப்படியே இன்னொன்று இன்னொன்று என அனுதாபங்கள் இலையுதிர் கால பழுத்த இலைகள் போல இடைவெளி இல்லாமல் விழுந்து கொண்டிருந்தன சலித்துப் போன அந்த ஒரு மனிதன் ஒளித்துக் கொள்ள இடம் தேடினான் இன்னும் ஒளித்துக் கொள்ள தேவை வராதவர்கள் இன்னொரு இடம் தேடினர் அவர்களின் அனுதாபங்களை சொல்ல அனுதாபங்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது அதைச் சொல்லும் மனிதர்களை.
-
- 0 replies
- 742 views
-
-
எப்படிச் சொல்வோம் எம் இழப்பை ஏதிலியாகி நாம் ஊரூராய் அலைகையில் எப்படிச் சொல்வோம் எம் இழப்பை பத்து ஆண்டுகள் பறந்தே போனது நடந்தவை அனைத்தும் மறந்தும் போனது நமக்கேன் நாடு என்றும் கேட்கிறார் நாடு காட்டிப் பிழைக்கும் எம்மவர் நன்றாய் இருக்குது நாடும் ஊரும் என்று சொல்லி எங்கும் திரிகிறார் எந்த இழப்பும் அற்ற எம்மவர் நாவாந்துறையில் பிடித்த மீனும் நண்டு கணவாயும் நல்லாய் தின்று நாடு நல்லாய் இருக்கென்று நாம் கூறலாமோ??? கோழைகள் போல் ஓடிவந்தவர் கோடிகளாய்க் கொட்டிக் கொடுத்து கொலிடே போக மட்டும் நாடாம் வெட்கம் கெட்ட தமிழர் நாங்கள் வேருடன் அழித்தவர் ஊர்கள் பார்க்க வெளிநாட்டில் இருந்து விருப்பாய் போகிறோம் வெடிகள் பட்டவர் முடமாய் இரு…
-
- 3 replies
- 929 views
-